Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளியான மாணவியைக் கொன்றது யாழ்.பல்கலைக்கழகம்?! – வெளியில் தெரியாதவை!

Featured Replies

வெறும் தற்கொலை என்று மட்டுமே அனைத்து ஊடகங்களும், உயிரிழப்புடன் சம்பந்தப்பட்டவர்களும் முடித்து விட்ட யாழ் பல்கலைக்கழக மாணவியின் கொலை தொடர்பாகப் பல திடுக்கிடும் விடயங்கள் கிடைத்துள்ளது. முள்ளிவாய்க்காலில் தப்பி வந்த போதும் யாழ் பல்கலைக்கழகத்தின் இரக்கமற்ற மனங்களில் இருந்து தப்பிவிட முடியவில்லை என்ற நிலைதான் அனேக வன்னி மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இரக்கத்தனமற்ற பகிடிவதை, அதற்கும் அப்பால் மாணவர்களை தற்கொலை வரை தூண்டும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ்த்தரமான நடவடிக்கைகள் என கொடுமைகள் நீண்டு செல்கின்றன. கடந்த வாரத்திலும் இதற்கு உதாரணமான சம்பவங்கள் உண்டு.பெளஜிகா என்ற யாழ்.பல்கலைக் கழகத்தின் 3ம் வருட பொருளியல் துறை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் நேற்று வெளிவந்தன.

இது குறித்து ஆழ விசாரித்ததில் அந்த மாணவியை தற்கொலை செய்ய தூண்டியது பல்கலைக்கழக நிர்வாகமும் அவரின் உறவினருமே என்ற தகவல் வெளிவந்திருக்கின்றது. குறித்த மாணவி 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்ததின் போது தனது தாய் தந்தை உள்ளிட்ட அனைத்து குடும்ப அங்கத்தவர்களையும் இழந்திருக்கிறார்.

முன்னாள் போராளியான குறித்த மாணவி போர்ச்சூழலில் படுகாயப்பட்ட நிலையில் நலன்புரி நிலையம் வந்துள்ளார். அதிலிருந்து ஏற்கனவே கிடைத்திருந்த பல்கலைக்கழக அனுமதியினால் (உயர்தரம் – 2007) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்ந்தார். அரச சார்பற்ற நிறுவனங்களும் பல்கலைக்கழகமும் வெளிநாட்டிலிருக்கும் ஒன்றுவிட்ட சகோதரனும் செய்த உதவிகளால் தான் கல்வியைத் தொடர்ந்திருக்கின்றார். ஆயினும் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் பல தடவைகள் நண்பிகளிடம் அழுதரற்றியிருக்கிறார். காலம் செல்ல செல்ல உற்றாரை இழந்ததன் துயரத்தை அனுபவித்து இரவிரவாக அழுதிருக்கிறார். அவ்வேளைகளில் பல்கலைக்கழக விடுதி நண்பிகள் ஆதரவாயிருந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டில் யாழ் பல்கலைக்கழகத்துக்கு அதிகரித்த சிங்கள மாணவர்களின் வருகையினால் இடப்பற்றாக்குறையை காரணம் காட்டி விடுதி நிர்வாகம் முதலாம் மற்றும் இறுதி வருட மாணவர்களை மட்டும் விடுதியில் தங்க அனுமதியளித்துள்ளது. ஏனைய வருட மாணவர்கள் குறித்த திகதிக்குள் வெளியேறும்படி பணிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இந்த மாணவி தனது நிலையை பல்கலைக்கழக மாணவர் நலன்புரி பதிவாளரிடம் பல தடவைகள் எடுத்துகூறியும் கடிதம் எழுதியும் வந்துள்ளார். ஆயினும் வெளியில் வாடகை அறை எடுத்து தங்கும் படியும் அதற்கான வாடகையை தாம் பொறுப்போற்பதாகவும் கூறி பல்கலைக்கழக நிர்வாகம் அவரின் தயை கூர்ந்த கோரிக்கையை நிராகரித்து விட்டது. ஏற்கனவே தனக்கு யாரும் இல்லை என அடிக்கடி சொல்ல வேதைனைப்படும் மாணவி வேறு வழியின்றி வாடகை அறைக்கு போய் சிலகாலம் தனிமையில் இருந்திருக்கின்றார்.

அப்போது நண்பிகளைக் காணும் போதெல்லாம்தான் தனித்து விடப்பட்டிருப்பதை பற்றி அதிக வேதனைப்பட்டு அழுதிருக்கின்றார். தான் அம்மாவிடம் போகப் போவதாக சொல்லியிருக்கிறார் (தாயாரும் உயிருடன் இல்லை). இந் நிலையில் வவுனியாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். குறித்த உறவினர்களுக்கு மாணவி தொடர்பில் ஈடுபாடு இல்லை எனவும் இவருக்கு பணம் அனுப்புவது அந்த வீட்டுச் சகோதரன் என்பதால் உறவினருக்கு இவர் மீது வெறுப்பிருந்தது எனவும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில் மிகவும் உளத்தாக்கத்துக்கு உள்ளான மாணவி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருக்கின்றார். தற்கொலை என்பதில் கூட சந்தேகம் உண்டு. இதற்கு முதலும் இறுதிக் கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்டு உளத்தாக்கத்துக்குள்ளான மாணவனொருவனை யாழ்.பல்கலைக்கழகம் இழந்திருந்தது. இது இரண்டாவது. முள்ளிவாய்க்காலே பாதுகாத்து அனுப்பிய இன்னும் எத்தனை மாணவர்களை யாழ்.பல்கலைக்கழகம் பலியெடுக்கப்போகிறதோ? என்ற ஏக்கம் சக மாணவர்களைத் தாக்கியிருக்கின்றது.

சமூகத்தின் உயர் நிலைக் கல்வியை வழங்கிவருகின்ற யாழ்.பல்கலைக்கழகம் மாணவர்களின் நலனிலும் அவர்களது உள நிலையிலும் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இன்னும் பல உயிர்ப் பறிப்புக்களைத் தடுப்பதற்கு தம்மாலான ஒத்துழைப்புக்களையாவது வழங்கினாலே ஏதிலிகளுக்கு போதுமானதாக அமையும் என்று ஆசிரியர் பீடம் எதிர்பார்த்து நிற்கிறது.

நன்றி : சரிதம் ஆசிரியர் பீடம்

http://thaaitamil.com/?p=16136

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளவாய்க்கால்வரை சென்று எத்தனையோ அழிவுகளைப்பார்த்தவர்

படித்தவர்

இவ்வாறான முடிவுக்கு வருவது...??? :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாணவியின் தற்கொலைக்கு எப்படி பல்கலைகழகம் பொறுப்பாக முடியும்?... இவரைப் போன்றவர்களுக்கு தேவை மன ரீதியான ஆலோசனை

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளியான மாணவியைக் கொன்றது யாழ்.பல்கலைக்கழகம்?! – வெளியில் தெரியாதவை!

செய்திகளிற்குத் தலையங்கம் இடுவதில் பலர் வல்லவர்களாக இருக்கின்றார்கள்

இதற்கு பல்கலைகழகமே முழு பொறுப்பு என்று கூறுவது மிக தவறானது. இவர் தனது பிரச்சினையை கூறும் பொழுது பல்கலை இவரது அறை வாடகையை பொறுப்பு ஏற்கும் என்பதில் இருந்து அவர்களது தரப்பு பிரச்சினை விளங்க குடியதாக உள்ளது. இவரோ அல்லது இவரது நண்பகளோ இவரது உள பிரச்சினையை எடுத்து சொல்லி மருத்துவ ஆலோசனை பெற்று இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அதே வேலை பல்கலை நிர்வாகம் இப்பிரச்சினையை உணர்ந்து போரால் பதிக்க பட்ட மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் உதவிகள் வழங்கினால் நாம் எமது இன்னொரு சகோதரனையோ அல்லது சகோதரியையோ இழக்க வேண்டி வராது. பல்கலை மாணவர் அமைப்பும் இதனை கருத்தில் எடுத்து அவர்களை கவனிப்பது நன்று.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் தீபச் செல்வன் எழுதியிருந்த ஒரு அஞ்சலி ஆக்கத்தில் யாழ் பல்கலை எப்படியெல்லாம் பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு ஆர்ப்பாட்டமில்லாமல் உதவுகிறது என்று ஆவணப் படுத்தியிருந்தார். அவர்களது முயற்சிகளைப் பார்க்கும் போது இலங்கையில் மாணவர்களின் நலனில் மேலதிக அக்கறை எடுத்துச் செயற்படும் ஒரேயொரு பல்கலையாக யாழ் பல்கலை இருக்கிறது என்று நம்புகிறேன். மாணவர்களை (அவர்கள் சிங்களவர்களோ தமிழர்களோ) பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுக்கும் தென் பகுதிப் பல்கலைகளை விடவும் யாழ் பலகலைச் சமூகம் மிக உயர்ந்தது. இறந்த மாணவியின் துயரம் அளவிட இயலாதது. அம்மாணவிக்கு எப்படி நான் ஆறுதல் சொல்லியிருப்பேன் என எனக்குத் தெரியாது. ஆனால் உளவளச் சேவைகளை நாட வேண்டியது பாதிக்கப் பட்டவர்களின் கடமை எனக் கருதுகிறேன். கல்வியறிவில் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு மாணவிக்கு இது இயலவில்லையானால் உளவளத் துணையென்றால் என்னவென்றே தெரியாமல் இருக்கும் வறிய மக்களின் நிலை இன்னும் பரிதாபமானது என விளங்குகிறது. பாதிக்கப் பட்ட மக்களைத் தேடிப் போய் உதவக் கூடிய வசதிகளை எப்படி ஏற்படுத்துவது என்பது தான் நாங்கள் விவாதிக்க வேண்டியது. பலகலையைக் குற்றம் சாட்டி ஒரு பயனும் இல்லை. அவர்களது நற்செயல்களுக்கான ஊக்கத்தை வேண்டுமானால் இக்குற்றச் சாட்டுகள் குறைக்கக் கூடும்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மையில் யாழ் சென்றிருந்தேன், அங்கு மனிதம் மரணித்து ஒரு பதிண்வருடங்கள் கடந்துவிட்டன. இப்போது அங்குள்ளோருக்கு இராணுவம்தான் நட்புவட்டம். கைத்தொலைபேசியே பொழுதுபோக்கு. மற்றும் சனி ஞாயிறு ஆகிவிட்டால் தண்ணிப்போத்தலுடன் கடற்கரைவாசம். தொன்ணூற்றுநாலிலிருந்தே இராணுவத்துடன் சீவியம் போராடம்பற்றியோ விடுதலைபற்றியோ எதுவித முனைப்பும் கிடையாது. இப்படியாணோரில் முக்கால்வாசிப்பேரை மாணவர்களாக உள்ளடிக்கியதே யாழ் பல்கலைக்கழகம். இதுக்குப் பிறகு விளங்கினமாதிரித்தான். இங்க கனபேருக்கு நான் எழுதின விடையம் பிடிக்காதுதான் அனால் உண்மையை ஏற்றுகொள்ளத்தான்வேண்டும். எனது வீட்டுக்கு முன்னால் ஒரு சிறிய வீடு கனகாலமாக யாரும் குடியேறாது இருந்தது இப்போது லிவிங் ரு கெதர் என்பதுபோல் பதினெட்டு வயதும் நிரம்பாத ஒரு ஜோடி வாழ்கின்றது அயல்சனத்திட்ட கேட்டன் எதுக்கு இதுகளை விட்டுவைத்திருக்கிறியள் என அவர்கள் கூறினார்கள் எல்லா இடமும் இதுதானே நடக்குது இதுக்குபோய் பெரிசா அலட்டாதையுங்கோ என.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அண்மையில் யாழ் சென்றிருந்தேன், அங்கு மனிதம் மரணித்து ஒரு பதிண்வருடங்கள் கடந்துவிட்டன. இப்போது அங்குள்ளோருக்கு இராணுவம்தான் நட்புவட்டம். கைத்தொலைபேசியே பொழுதுபோக்கு. மற்றும் சனி ஞாயிறு ஆகிவிட்டால் தண்ணிப்போத்தலுடன் கடற்கரைவாசம். தொன்ணூற்றுநாலிலிருந்தே இராணுவத்துடன் சீவியம் போராடம்பற்றியோ விடுதலைபற்றியோ எதுவித முனைப்பும் கிடையாது. இப்படியாணோரில் முக்கால்வாசிப்பேரை மாணவர்களாக உள்ளடிக்கியதே யாழ் பல்கலைக்கழகம். இதுக்குப் பிறகு விளங்கினமாதிரித்தான். இங்க கனபேருக்கு நான் எழுதின விடையம் பிடிக்காதுதான் அனால் உண்மையை ஏற்றுகொள்ளத்தான்வேண்டும். எனது வீட்டுக்கு முன்னால் ஒரு சிறிய வீடு கனகாலமாக யாரும் குடியேறாது இருந்தது இப்போது லிவிங் ரு கெதர் என்பதுபோல் பதினெட்டு வயதும் நிரம்பாத ஒரு ஜோடி வாழ்கின்றது அயல்சனத்திட்ட கேட்டன் எதுக்கு இதுகளை விட்டுவைத்திருக்கிறியள் என அவர்கள் கூறினார்கள் எல்லா இடமும் இதுதானே நடக்குது இதுக்குபோய் பெரிசா அலட்டாதையுங்கோ என.

:) கூல் டவுன் எழு ஞாயிறு, பதினெட்டு வயது இருவர் சேர்ந்து வாழ்வது சட்ட விரோதமா இலங்கையில்? ஒழுக்கம் குறைவு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சட்ட விரோதம் இல்லாத ஒன்றை எப்படி ஊரவர் தடுப்பது? என்ன செய்யலாம் என்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

"பதினெட்டு வயதும் நிரம்பாத ஒரு ஜோடி வாழ்கின்றது" கவனிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

"பதினெட்டு வயதும் நிரம்பாத ஒரு ஜோடி வாழ்கின்றது" கவனிக்கவும்

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தை நெற்றியில் ஒட்டிக் கொண்டா திரியுது சோடி? :D (பகிடி தான், கோவிக்க வேணாம்) திரிக்குத் தொடர்பில்லாததால் இனி இதை விடுவம்.

இது வெளிநாட்டில் இருக்கும் ஒன்றை விட்ட அண்ணன் செய்த உதவியை பொறுக்க முடியாத உறவினர்கள் சேர்ந்து செய்த கொலை..........

இந்த ஆசிரியர் பீட எழுத்தில் கீழே குறிப்பிடப்பட்டது பொருந்தாமல் உள்ளது :

முன்னாள் போராளியான குறித்த மாணவி போர்ச்சூழலில் படுகாயப்பட்ட நிலையில் நலன்புரி நிலையம் வந்துள்ளார். அதிலிருந்து ஏற்கனவே கிடைத்திருந்த பல்கலைக்கழக அனுமதியினால் (உயர்தரம் – 2007) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வியை தொடர்ந்தார்.

அரசியல் தீர்வு ,பொருளாதார தேவை இவைகள் ஒருபுறம் இருந்தாலும் , இப்போ எமது மக்களுக்கு முக்கியமானது கவுன்சிலிங்.போர் நடந்த நாடுகளில் இது மிக அவசியம் .புலம் பெயர்ந்தவர்கள் சுழற்சி முறையில் கடைசி ஆறு,ஆறு மாதங்கள் அங்கு போய் அவர்களுக்கு உதவினாலே பெரிய புண்ணியம் .அதுவும் குறிப்பாக இளைஞர்கள்.

அரசியல் தீர்வு ,பொருளாதார தேவை இவைகள் ஒருபுறம் இருந்தாலும் , இப்போ எமது மக்களுக்கு முக்கியமானது கவுன்சிலிங்.போர் நடந்த நாடுகளில் இது மிக அவசியம் .புலம் பெயர்ந்தவர்கள் சுழற்சி முறையில் கடைசி ஆறு,ஆறு மாதங்கள் அங்கு போய் அவர்களுக்கு உதவினாலே பெரிய புண்ணியம் .அதுவும் குறிப்பாக இளைஞர்கள்.

வேண்டாம் 67 வயது கிழவன் போய் செய்தது கானாது என்று இளைஞர்க வேறயை?

  • கருத்துக்கள உறவுகள்

பலர் மன நோயால் பதிப்படைத்துள்ளார்கள் யாழில்,

பல்கலைகழகத்துக்கும் இதற்கும் தொடர்பு என்று, செய்திக்காக எதையும் எழுதலாமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

வெளிநாடுகளில் எங்கள் பிள்ளைகள் செய்யாத எதனையும் யாழ் பல்கலைக் களக மாணவர்கள் செய்யவில்லை.

நாம் இலங்கை செல்லும்போது விசாவுக்கு தூதரகத்திலும் பின்னர் கொழும்பில் இமிகிரேசன் மேசைகளிலும் சோதனை பீடங்களிலும் சிரித்து நட்புடன் பேசித்தான் காரியம் பார்க்கிறோம். இத்தகைய ஒரு தந்திரம் அங்கு வாழும் மக்களுக்கும் அவசியம் இல்லையென்று சொல்ல முடியுமா? எழுஞாயிறு செய்யவேண்டியது மானவர்கலை குறைசொல்லுவதல்ல வடகிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதற்கான போராட்டங்களில் தீவிரமாக உழைப்பதுதான்.

மாணவி கொலை தொடர்பாக யாழ் சிவில் சமூகம் தொண்டு நிறுவனங்கள் பல்கலைக் களக/கல்வி நிலைய நிர்வாகம் என்பவை மாணவர் மத்தியில் ஆரோக்கியமான உளவியல் சூழலை உருவாக்க இயன்றவரை கரிசனையுடன் உழைக்கவேண்டும். அதற்கான வளத்தை உருவாக்குவதில் புலம் பெயர்ந்த சமூகமும் கவனம் செலுத்த வேண்டும்.பாதிக்கப் பட்ட மாணவர்களைத் தத்து/பொறுப்பு எடுக்கவும் நம்மவர் முன்வரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர், தயவுசெய்து தப்பாக நினைக்காதையுங்கோ ஒருக்கால் யாழ்ப்பாணம் போய்ப்பாருங்கோ அப்போதான் நிலமை தெரியும். ஒரு விடையம் யாழ் நகரையும் அதை அண்டியுள்ள பகுதிகளிலும் அதைவிட வலிகாமம் தென்மராச்சி வடமராச்சி ஆகிய பிரதேசங்களின் முக்கிய இடங்கள் எங்கிலும் தனியார் கல்வி நிலையங்கள் நிறைந்திருக்கின்றன. அங்கு நான்காம் வகுப்பு மாணவர்கள் தொடக்கம் மாலைநேர ரியூசன் போவதற்காக நிறுவனப்படுத்தப்பட்ட தனியார் கல்விச்சேவைகள் தாராளப்படுத்தப்பட்டுள்ளது. தவிர புலமைப்பரிசில் தேர்வுக்கான ஆயத்தங்களுக்கே தனியார் கல்விநிலையங்கள் உருவாக்கப்பட்டு அவை வெற்றிகரமாகப் பணம்பண்ணுகின்றன. குடாநாட்டில் வெளிவரும் செய்திப் பத்திரிகைகளது விளம்பர வருமானத்தில் தனியார் கல்விநிலையங்களது பங்கு கணிசமானது. இப்படியிருந்தும் இம்முறை க பொ த சாதாரண தரத்தில் எதுக்காக வடபகுதி குறிப்பாக யாழ்ப்பாணம் பின்தங்கியது! காரணம் எல்லாமே வியாபார நோக்கமானதும் நூறுவீத கடைந்தெடுத்த சுயநலப்போக்குமே மக்கள் மத்தியில் உள்ளதும். நாங்கள் ஒட்டுமொத்தத் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைமை தமிழர் கூட்டமைப்பென கூறுகின்றோமே அவர்கள் எப்படி தெரிவுசெய்யப்பட்டார்கள் தெரியுமா கடந்தகால அ தி மு கவின் இரட்டை இலை வெற்றி இரகசியமே. வலிகாமத்தின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர், என்ன சொல்லவருகிறார் எண்டால் சம்பந்தன் சுமந்திரன் ஆகியோருக்கு ஆங்கிலம் தெரியுமாம் அதால அவர்களால் அரசியல் நடாத்தமுடியுமாம் சிவாஜிலிங்கம் பத்மினி சிதம்பரநாதன் கஜேந்திரன் ஆகியோருக்கு ஆங்கிலம் தெரியாது அதனால் அரசியல் தெரியாது. எப்பிடி இருக்கு கதை ஆக கூத்தமைப்பின் பிரதேசசபை உறுப்புக்கெ இப்படி அறிவென்றால் பிறகென்ன, அவரிடம் கேட்டேன் சுமந்திரன் யார் என அதுக்கு, அவர் ஒரு அப்புக்காத்து, கொழும்பில கனகாலம் இருந்தவர், நல்லா ஆங்கிலம் கதைப்பார் என்கின்றார். இல்லையுங்கோ அவரை யார் கூத்தமைபில் உள்நுழைத்தார்கள் எனக் கேட்டால் அதுக்கு புலம்பெயர் தமிழர்கள்தான் (வெளிநாட்டுகாரர்கள்தான்) எல்லாத்தையும் குழப்புகினம் என்கிறார் அவையள் சும்மா இருந்தாலே போதும் நாங்கள் எல்லாத்தையும் வெட்டிமுறித்துப்போடுவம் என்கிறார்கள். கவிஞர் இப்பிடி எம்மைச்சுத்தி சிறுமைகளே ரீங்காரமிடும்போது பாதிக்கப்பட்ட பல்கலை மாணவியின் மரணத்துக்கு நாம் எல்லோரும் பொறுப்பு எனக் கூறுவது தவறாகத்தானிருக்கும். குடாநாட்டை சிங்களம் எப்போது ஆக்கிரமித்ததோ அன்றே அங்குவாழும் தமிழர்களது போராட்ட முனை மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. அதற்கும்பின் ஓட்டுக்கடவுள் இருக்குமட்டும் எங்களுக்குத் திருவிழா என எப்போதோ கேட்ட தெருக்கூத்து வசனப்பாடல்களுக்கு இணைவாக இப்போதைய யாழ்.

கீழ்த்தர ஊடகவியலாளர் ஒருவரின் வெளிவராத உண்மை இந்தத் தலைப்பின் மூலம் வெளிவந்துள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.