Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற பிரதமர் உத்தரவு; 'வேறு இடத்தில் காணி வழங்கப்படும்'

Featured Replies

தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்;கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளமையினால் இப்பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறும் பிரதமர் உத்திரவிட்டுள்ளார்.

அகற்றப்படும் பள்ளிவாசலுக்கு பதிலாக வேறு பொருத்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பளையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றையடுத்து பிரதமர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

இஸ்லாமிய சமய தலைவர்கள், சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, மேல் மாகாண ஆளுநர் ர் அலவி மௌலானா, பிரதியமைச்சர்கள், அப்துல் காதர், ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் டி.எம்.ஜயரட்ண

"உலகின் அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கையுடன் நட்புடன் உள்ள நிலையில் இத்தகைய சிறிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, இனங்கள், மதங்களிடையே அநாவசிய மோதல்களை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது" எனவும் பிரதமர் கூறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எம்.ஏல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் குறித்த பள்ளிவாசலுக்கு நேரடி விஜயம் மேற்கொண்டு விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்கோண் மற்றும் தம்புள்ள பிரதேச செயலாளர் ஆகியோரை அமைச்சர் ஹக்கீம் சந்தித்து இது தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார்.

http://www.tamilmirr...medium=facebook

Posted 20 April 2012 - 07:40 PM

இது இரண்டுகரையும் சேர்ந்து விடுகிற நடிப்பு.

இதற்காக மகிந்தாவின் ஒரு மந்திரி இரண்டொருநாளில் வந்து கெட்ட அரசியல்வாதிகள் பள்ளிவாசல் உடைப்பை தங்கள் பிரசாரத்திற்கு பாவிக்கிறார்கள் என்பார். மற்றவர் இரண்டு பள்ளிவாசல்கள் கட்டப்போவதாக வாக்குறுதி கொடுப்பார். முன்றாமவர் கடைசியில் வந்து தான் முஸ்லீம் மக்களுக்குக்காக எப்படி கஸ்டப்பட்டு மகிந்தாவிடம் பள்ளி உடைப்பு நடந்ததை தெரிவித்ததாயும் மகிந்தா அதை கேள்விப் பட்டவுடனே கமிசன் வைத்து விசாரிக்க கட்டளையிட்ட பெருந்தன்மையையும் பற்றிக்கூறுவார்.

Edited by மல்லையூரான், 20 April 2012 - 07:56 PM.

பெரும்பான்மை சமூகம் மீண்டும் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்துள்ளது <_<

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்;கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளமையினால் இப்பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறும் பிரதமர் உத்திரவிட்டுள்ளார்.

தமிழர் தாயகத்தில் ஆங்காங்கே முளைகள் விடும் புத்த விகாரைகளும் கூட நாளை இவ்வாறே கூறப்படும்.

பெரும்பான்மை சமூகம் மீண்டும் மிகவும் பெருந்தன்மையுடன் நடந்துள்ளது <_<

தமிழர் தாயகத்தில் ஆங்காங்கே முளைகள் விடும் புத்த விகாரைகளும் கூட நாளை இவ்வாறே கூறப்படும்.

ஆம் அது ஒரு நாள் நடக்கும் அகூதா அதுவும் மிக விரைவில்

அதுசரி புனித பூமியில் இருந்து பள்ளிவாசலை அகற்றுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.முஸ்லிம் சகோதரர் இதற்கு ஒரு போதும் உடன்படக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

[எண்ணையை ஊற்றுகிறேன் என்று நினைக்கவேண்டாம்................பாதிக்கப்பட்டவருக்கு குரல் கொடுக்கிறேன்...........]

ஆம் அது ஒரு நாள் நடக்கும் அகூதா அதுவும் மிக விரைவில்

அதுசரி புனித பூமியில் இருந்து பள்ளிவாசலை அகற்றுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.முஸ்லிம் சகோதரர் இதற்கு ஒரு போதும் உடன்படக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

[எண்ணையை ஊற்றுகிறேன் என்று நினைக்கவேண்டாம்................பாதிக்கப்பட்டவருக்கு குரல் கொடுக்கிறேன்...........]

அது பவுத்த புணித பூமியாம். அப்படியானால் கதிகாமமும் புணித பூமி அங்கேயும் ஒரு பள்ளி வாசல் உள்ளது.......அதையும் அகற்றி விடுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அது பவுத்த புணித பூமியாம். அப்படியானால் கதிகாமமும் புணித பூமி அங்கேயும் ஒரு பள்ளி வாசல் உள்ளது.......அதையும் அகற்றி விடுவார்களா?

கதிர்காமம் சிங்களவரின் புனிதபூமிதானே.. :D சொன்னால் அகற்றிவிடுவார்கள்.. :wub:

கதிர்காமம் சிங்களவரின் புனிதபூமிதானே

.. :D சொன்னால் அகற்றிவிடுவார்கள்.. :wub:

யார் சொன்னது அது கதிர்காமம் என்று? அது கத்தரகம என்று தெரியாதா? :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தனக்கொரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் சொல்வான்.

திருக்கேதீஸ்வரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் விகாரையையும், திருக்கோணேஸ்வரத்தில் கட்டிய விகாரைகளையும் முதலில் அப்புறப் படுத்திவிட்டு.... தம்புள்ள பள்ளிவாசலை இடித்திருக்கலாம். இதை... ரவூப் ஹக்கீமும், மற்றைய முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசை தட்டிக் கேட்டால்.... தமிழர்களும் உங்களுக்காக குரல் கொடுப்பார்கள்.

இல்லாவிட்டால்... பள்ளிவாசல் இடித்ததற்கு, கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டிருப்போம். :unsure:

சிங்களவன் தனக்கொரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயம் சொல்வான்.

திருக்கேதீஸ்வரத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் விகாரையையும், திருக்கோணேஸ்வரத்தில் கட்டிய விகாரைகளையும் முதலில் அப்புறப் படுத்திவிட்டு.... தம்புள்ள பள்ளிவாசலை இடித்திருக்கலாம். இதை... ரவூப் ஹக்கீமும், மற்றைய முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசை தட்டிக் கேட்டால்.... தமிழர்களும் உங்களுக்காக குரல் கொடுப்பார்கள்.

இல்லாவிட்டால்... பள்ளிவாசல் இடித்ததற்கு, கொடுப்புக்குள் சிரித்துக் கொண்டிருப்போம். :unsure:

முஸ்லீம் சகோதரங்கள் எதுவாகிலிலும் செய்யட்டும். அடுத்த ம.உ.பேரவை வாக்கெடுப்புக்கு முதல் இந்த படங்களை சவுதிக்கும் மற்றைய நாடுகளுக்கும் அனுப்பி வைப்போம். நமக்கு தான் தனி நாடு வேண்டும். பௌசியும் ககீமும் அதை ஆதரிக்க வில்லை. அவர்கள் ஒட்டிகொள்ளட்டும்.

Edited by மல்லையூரான்

நைனாதீவு நாகபூசணி அம்மன் அலேட்டாக இருக்கனும்............

பள்ளிவாசல் மீதான தாக்குதல் - இனப்பிரச்சினைக்கு விடுத்த பாரிய அடி: ஜனாதிபதி மஹிந்தவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் அவசர கடிதம்.

தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் நாட்டில் இனப்பிரச்சினைக்கு விடுத்த பாரிய அடியென்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர அனுமதிக்கக் கூடாது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

581592_284657274953906_100002289079056_633533_981200671_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசல் மீதான தாக்குதல் - இனப்பிரச்சினைக்கு விடுத்த பாரிய அடி: ஜனாதிபதி மஹிந்தவுக்கு முஸ்லிம் காங்கிரஸ் அவசர கடிதம்.

தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் நாட்டில் இனப்பிரச்சினைக்கு விடுத்த பாரிய அடியென்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர அனுமதிக்கக் கூடாது என்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

581592_284657274953906_100002289079056_633533_981200671_n.jpg

ஏன் அனுமதிக்கக் கூடாது?? இலங்கை அரசியல் சாசனத்திலேயே உள்ளதே.. புத்தமதத்துக்கு முன்னுரிமை என்று?? :D

இஸ்லாமிய சகோதரர்கள் சைவ, கிறிஸ்துவ சகோதரர்களைப் போல தங்கள் வழிபாட்டுத் தலங்கள் உடைக்கப்படும் போதெல்லாம் அமைதியைக் கடைப்பிடித்து சிறீலங்கனாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

புத்தசாசனத்தில் புத்தர் அல்லாதோர் ஜனாதிபதியாக வர முடியாதது போல்(ஜே.ஆர் மதம் மாறிய பின்னர் தான் ஜனாதிபதியாக முடிந்தது) புத்த கோவில்கள் தவிர பள்ளிவாசல்களோ,கோவில்களோ , தேவாலயங்களோ இருக்க கூடாது என மாற்றி விட்டால் பிரச்சனை முடிந்து விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த சிந்தனை :

நாம் எல்லாம் ஒரு தாய் பெற்றெடுத்த் பிள்ளைகள்.

அண்ணன் தம்பிகள். எல்லோரும் ஒரே குடையின் கீழ்

ஒன்றாக வாழ்வோம்.

எங்கல் எள்ளோருக்கும் ஒடெ மடம் ஒடே மொலி

மடத்தாலும் மொலியாலும் எங்கல யாடாளும் பிடிக்க முடியாடு :D

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்பகுதியில் கோவில்கள் அழிக்கப்பட்டபோது முஸ்லிம்களோ முஸ்லிம் அமைப்புக்களோ தடுப்பதற்காக குரல்கொடுத்தவர்களா? இல்லையே ! பின்பு எதற்க்காக நாம் இதுபற்றி கவலை கொள்ள வேண்டும்.

சிக்கல் எது என்று அறிவது முதல் சிக்கல். அதை அறிந்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும்.

562780_391897210841237_100000628851572_1290996_528987072_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தம்புள்ளை பள்ளிவாசலை அகற்ற பிரதமர் உத்தரவு; 'வேறு இடத்தில் சாணி வழங்கப்படும்'

தவறாக புரிந்து கொண்டேன் மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

தவறாக புரிந்து கொண்டேன் மன்னிக்கவும்

நீங்கள் வாசித்ததுதான் சரியானது............

பத்திரிகை நாகரீகம் கருதி காணி என்று போட்டிருக்கிறார்களே தவிர. உண்மையில் வழங்கப்பட இருப்பது சாணிதான்.

யாரவது அதற்குமேல் கேட்டால்..........

அவர்களுக்கு அண்ணன் கோத்தாவால் தலையில் ஆணி வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

தம்புள்ளை பள்ளிவாசல் அதே இடத்திலேயே அமைய வேண்டும்: அரசியல் கட்சிகள்

தம்புள்ளை மஸ்ஜிதுல் ஹைரிய ஜும்ஆ பள்ளிவாசல் உரிய இடத்திலேயே அமைய வேண்டும் என அரசியற் கட்சிகள் இன்று ஞாயிறுக்கிழமை கோரிக்கவிடுத்தன. குறித்த பள்ளிவாசல் பழைய இடத்திலேயே அமைவதற்கு அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் உழைக்க வேண்டும் என அரசியற் கட்சிகள் தெரிவித்தன.

தம்புள்ளை பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டமை எதிர்ப்பு தெரிவித்து பல அரசியற் கட்சிகள் ஒன்றினைந்து இன்று ஞாயிறுக்கிழமை கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆஸாத் சாலி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட், ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசிங்க மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்

இங்கு கருத்து தெரிவித்த மாநகர சபை உறுப்பினர் ஆஸாத் சாலி,

"அநுராதபுரத்திலுள்ள புனித பூமியில் அமைச்சரொருவருக்கு சொந்தமான மதுபானசாலை உள்ளது. அப்படி அநுராதபுர புனித பூமியில் மதுபானசாலை இருக்க முடியும் என்றால் ஏன் தம்புள்ளை புனித பூமியில் பள்ளிவாசல் இருக்க முடியாது? இந்த தம்புள்ளை புனித பூமியில் பிரபல ஹோட்டேல் மற்றும் கிரிக்கெட் மைதானம் ஆகியன உள்ளன. இவ்வாறான நிலையில் பள்ளிவாசல் இருப்பதனால் தம்புள்ளை விகாரையிலுள்ள பௌத்த பிக்குகளுக்கு என்ன பிரச்சினை?

இந்த பள்ளிவாசல் பிரச்சினையை பெரிதாக்கிய சமூகங்களிடையே பிரச்சினையை உருவாக்கியது ஒரு பிராந்திய வானொலி சேவை. நாட்டில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் தொலைக்காட்சி மற்றும் வானெலி சேவைகளை கண்கானிக்கு தொலைத்தொடர்புபடுத்தல் ஆணைக்குழு இந்த வானொலி சேவையை ஏன் கண்காணிக்கவில்லை?

இப்பள்ளிவாசல் கட்டிடம் சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள உடைக்கப்பட்டால் அதற்கு நான் எதிர்ப்பில்லை. ஆனால் குறித்த கட்டிட உடைப்புக்கான சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை" என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்,

"குறித்த பள்ளிவாசல் உடைக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்டதும் நான் மிக்க கவலைப்பட்டேன். தேங்காய் பறிப்பதற்க்காகவா முஸ்லிம் மக்கள் தங்களின் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்தனர். நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் பள்ளிவாசல் விவகாரம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கண்டியில் பிறந்து கொழும்பில் வளர்ந்தவன் என்ற வகையில் சிங்கள மக்கள் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அத்துடன் அவர்களின் கலாசாரங்களை சிறுபான்மையினரான நாங்கள் மதிக்கின்றோம்.

அவ்வாறான நிலையில் இப்பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை எந்தவொரு பௌத்த மகனும் ஏற்றுக்கொள்ளமாட்டார். இந்த பள்ளிவாசல் விவகாரத்தினை அரசாங்கம் தலையீட்டு உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.

அத்துடன் பௌத்த தேரர்கள் இவ்வாறான செயல்களில் ஒருபோதும் ஈடுபட கூடாது. மதம், இனம் மற்றும் சிறுபான்மையினர் இல்லை என்று தெரிவிக்கும் இந்நாட்டில் இந்த சம்பவத்தினால் பாரிய அவமானம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன,

"புன்னிய பூமியில் பள்ளிவாசல் அமைக்க முடியாது என்றால் கதிர்காமம் மற்றும் கண்டி ஆகிய புனித பூமிகளில் பள்ளிவாசல் அமைய பெற்றுள்ளது. புனித பூமி என்றால் விகாரைகள், கோயில்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ஆகியன இணைந்து காணப்படுவதே ஆகும்.

இதன் மூலம் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். குறித்த பள்ளிவாசல் உடைப்பு தொடர்பில் நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தெஹிவளை – கல்கிஸை மேயர் தனசிறி அமரேசகவிடம் தெரிவித்தேன்.

அதற்கு அவர், "எமது மாநகரத்தில் இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்தியவர்களை விரட்டியத்துள்ளேன். இவ்வாறு யாரும் எதிர்காலத்தில் செயற்பட்டால் விரடியடிக்கப்படுவார்கள்" என்றார்.

இவ்வாறே முஸ்லிம் அமைச்சர்களும் இதற்கு எதிராக செயற்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வெள்ளை தொப்பியுடன் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு பரிசாகவே அரசாங்கத்தினால் இந்த பள்ளிவாசல் உடைக்கப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தொடருமானல் மற்றுமொரு யுத்தம் வெடிக்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை" என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பொது செயலாளர் வை.எல்.எஸ்.ஹமீட்,

"இந்த பள்ளிவாசல் உடைப்பு விவகாரம் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அமைதியாக இருக்கவில்லை. இப்பிரச்சினை தீர்ப்பதற்காக இணக்கப்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவது போன்று அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள் இந்த விடயத்தில் அமைதியை கடைப்பிடிக்கவில்லை. இந்த பிரச்சினையை சமாதானமாகவே தீர்க்க முற்படுகின்றோம்.

சமாதனமாக தீர்க்கு முயற்சி தோல்வியடையுமானால் அதற்கு மாற்றீடான நடவடிக்கையினை முஸ்லிம் கட்சிகள் மேற்கொள்ளும்" என்றார்.

ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசிங்க மற்றும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இப்பள்ளிவாசல் உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதேவேளை, இப்பள்ளிவாசலை அகற்றுமாறி வேறிடத்தில் பள்ளிவாசலொன்றை அமைக்க உதவுமாறும் புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

azz2.jpg

http://www.tamilmirr...2-15-54-46.html

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசலை இருந்த இடத்திலேயே... அமைக்க முஸ்லீம் அமைச்சர்கள் சாகும்வரை போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.

அதற்கு அரசு இணங்காவிட்டால்.... தம்புள்ளையில் உள்ள விகாரையை அடித்து நொருக்க வேண்டும்.

என்னதான் அடி வாங்கினாலும் அவமதிக்கப்பட்டாலும் முஸ்லிம்கள் தமிழர்களுடன் சேர்ந்து செயற்படுவதற்கு இஸ்லாமிய அரசியல்வாதிகள் அனுமதிக்கமாட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.