Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம் தலைவர் சாகவில்லை. நாங்கள் மீண்டும் பொங்கி எழுவோம் - வவுனியாவில் சுவரொட்டிகள்.

Featured Replies

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்போம் இம்மாதம் 18ஆம் திகதியுடன் மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில், அத்தினத்தன்று மறைந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துமாறு வவுனியா நகரின் பல்வேறு இடங்களிலும் தமிஈழ விடுதலைப் புலிகள் இயக்கதினால் உரிமைகோரப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்போம்’ தலைப்பிடப்பட்டுள்ள மேற்படி சுவரொட்டிகளில், ’18.05.2012 அன்று அனைத்து தமிழீழ மக்களும் உணர்வுபூர்வமாக பொது இடங்கள், கோயில்கள், வீடுகள் போன்றவற்றில் எங்கள் உறவுகளுக்காகவும் மாவீரர்களுக்காகவும் அஞ்சலி செலுத்துவோம்’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ‘எம் தலைவர் சாகவில்லை. நாங்கள் மீண்டும் பொங்கி எழுவோம். புலிகளின் தாகம்… தமிழீழ தாயகம்’ என்று கையெழுத்தால் எழுதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் உரிமை கோரப்பட்ட நிலையில் இச்சுவரொட்டிகள் பல்வேறு இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

poster_jaffna_001.jpg

http://thaaitamil.com/?p=18388

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்கா சிங்கள புலனாய்வு பயங்கரவாதிகளின் திட்டமிட்ட வேலையாகத்தான் இருக்கும் இப்படி சுவரொட்டிகளை ஒட்டி தமிழ் இளைஞர்களை கொல்லுவதற்கும் அவர்களை சிறைகளில் அடைக்கவும் வெளிநாடுகளுக்கு ஸ்ரீலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை புலிகளே செய்கின்றார்கள் என்று காட்டவும் இப்படியான வேளைகளில் இப்போது இறங்கி உள்ளனர் சிங்கள புலனாய்வு பயங்கரவாதிகள்.

தமிழ் மக்களே விழிப்பாக இருங்கள் சிங்களவனின் சதிவலையில் விழுந்துவிடாதீர்கள்.

யாழில் மே தின கூட்டத்தில் புலிக்கொடி சிங்கள புலனாய்வு பயங்கரவாதிகளின் காட்டியதன் தொடர்ச்சியே இதுவும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இன்னும் இருக்கிறார்கள் என மேற்குலகுக்கு காட்டி வடக்கு, கிழக்கில் சிங்கள் இராணுவத்தை தொடர்ந்து நிலை நிறுத்துவதும் தமது கொலை,கொள்ளை,கைதுகள் என தமது பயங்கரவாத நடவடிக்கைகளை இலகுவாக்க சிங்கள அரசு திட்டமிட்டு செயற்படுகிறது. ஒட்டுக்குழுக்கள் பின்னால் இருந்து செயற்படுகிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

எங்கள் பெருந்தேசிய தலைவர் சம்பந்தர் உயிரோடு இருக்கிறார்

இராணுவப்பிடிக்குள் இருக்கும் ஒரு பிரதேசத்துக்குள் மேதினக் கூட்டததில் தமிழீழத் தேசியக் கொடியுடன் சிலர் ஓடினார்கள். அதுபோல்தான் இதுவும். இராணுவத்தைத் தொடர்ந்து வைத்திருப்பதறந்கான காட்சி அமைப்பு..

1."ளு" வை பார்க்க "லு" மாதிரி இருக்கு.

"எம் தலைவர் சாகவில்லை, நாங்கள் மீண்டும் பொங்கி எழுவோம்" என்பது வசனநடை சிக்கலைத்தோற்றுவிக்கிறது.

2.இயக்கத்தில் இருந்து எழுதுபவர்கள், தலைவரின் கதையைச் சொன்ன அதே வசனத்திலேயே,திடுதிடுப்பென தம்மை பெரிதாக காட்டி " நாங்கள் பொங்கி எழுவோம்" என்று முடித்திருக்க மாட்டார்கள். உயிரோடு இருக்கும் தலைவர் வெளிவருவதும், வெளிவந்து அவர் போராடத்தை மீள எடுப்பதும் பற்றித்தான் கூற முயன்றிருப்பார்கள்.

3.தலைவர் தலைவர்தான் என்பதால் "எம் தலைவர்" வழமையில் இல்லாத பாவனை. இது கவிதைகளில் வந்தாலும், பாதகைகளிலும்,துண்டுப் பிரசுரங்களிலும் வரச் சந்தர்ப்பம் இல்லை.

4. எல்லாவற்றிக்கும் மகுடம் வைப்பது "தலைவர் சாகவில்லை" என்பதாகும். "ஆயுதங்கள் மௌனித்து விட்டன" என்று தமிழ் எழுதுவோர், "தலைவர் செத்துப்போனர்" என்ற ஒரு வகை பாவனைக்கு கிட்டவும் வரச்சந்தர்ப்பம் இல்லை. ஒருவேளை காத்தன்குடித் தமிழில் "சாவு" கொடுந்தமிழ் இல்லாமல் இருக்கலாம்.

ஆனாலும் இதில் காணப்படும் தலைவர் பறறிய குறிப்பு தலைவரைபற்றிய நிலைப்பாடுகளை புதிய பரிமாணத்திற்கும் இட்டுச்செல்லத்தான் போகிறது.

இந்த துண்டு பிரசுரத்தை, அசாங்கம் எல்லோரும் நம்புவார்கள் என்றும், அதில் காணப்படுபவை இலகுவில் நிரூபிக்கப்படத்தக்கவை என்றும்தான் அரசாங்கம் கொள்ளவதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஏற்காவிட்டால், அரசாங்கம், திரும்பத்திரும்ப ஏமாற்று அறிக்கைகளை தெரிந்துகொண்டே வெளிவிட்டு தன் பெயரை கெடுத்துக் கொள்ள வென்று கெடுத்து கொள்ளவதாகத்தான் நினைக்க வேணடிவரும். அது சரி இல்லை என்பதால் அரசாங்கம் இந்த துண்டு பிரசுரத்தை எல்லோரும் நம்புவார்கள் என்றுதான் நினைக்கிறதென்பதில் ஐயம் கொள்ள இயலாது. அரசாங்கமேதான் தலைவர் இப்போது இல்லை என்றும், அதற்கு அத்தாட்சிகள் வைக்க முயன்றதும். அதாவது விவாதத்தை ஆரம்பித்து வைத்தது அரசாஙகமேதான். ஒருசாரர் இந்த வாதாட்டம் அவசியமில்லாததாக கருதுகிறார்கள். மற்றவர்கள் அரசாங்கத்தின் நடத்தை சந்தேகத்திற்கிடமானதென்கிறாரகள். தலைவர் இல்லாததை அரசாங்கம் உண்மையில் தெரிந்து வைத்திருந்தால் என்ன விடையம், அரசாங்கத்தை, தலைவர் (சாகவில்லை) உயிருடன்தான் இருக்கிறார், என்பதை எழுதத் தூண்டியது என்பது கேள்வி.

எதிர்க்கட்சியின் மே தின கூட்டத்தில் அரசு புலிக்கொடியைப்பிடித்து குழப்பம் விளைவித்தது. இதை புலம் பெயர் நிகழ்சிகளில் புலிக்கொடி பிடிக்கப்படுவதை பிரதிபலித்துக்காட்ட முயன்றதாக கொள்ளலாம். புலம் பெயர் கூட்டங்களில் எப்போதுமே புலிக்கொடியுடன் தலைவரின் படமும் காணப்படுவதும் சகஜம்தான். ஆனாலும் தலைவரின் நிலை சம்பந்தமாக எந்த வகையான கருத்துகளையும் வெளிவிடும் பாதுகைகளோ அல்லது துண்டு பிரசுரங்களோ இருப்பதில்லை. தலைவரின் படத்தை காட்டுவதை எப்போதுமே விடுதலைச் சின்னம் ஒன்றாக பார்க்கப்பட்டு வந்ததேயன்றி, எதாவது நிலைபாட்டை வலியுறுத்த அல்ல என்பது எல்லோருடையதும் உள்ளூணர்வு. அப்படியிருக்க இப்போது அரசாங்கம் தனது துண்டுபிரசுரத்தில் "தலைவர் சாகவில்லை" என்று எழுத முயல்வது, தான் கொடுத்த தலைவர் சம்பந்தமான அறிக்கைகளை ஒருவரும் நம்பவில்லை என்றும், இனி அந்த திசை முயற்சிகளை கைவிட்டு விட்டு எல்லோரும் நம்பத்தக்க துண்டு பிரசுரமாக தாயாரிப்போம் என்று இப்படி எழுதியிருப்பதாக அல்லவா கொள்ள வேண்டியிருக்கிறது.

அரசாங்கம் இனியும் அது மறைக்க முடியாத உண்மை என்றும், தனது பழைய அறிக்கைகளை கட்டுக்கதையாகத்தான் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள் என்றுமா கருத்துகிறது? அதாவது தனது பிரச்சரம் தோற்றுவிட்டத்தாகவா அரசாங்கம் எடுத்துக் கொள்கிறதா?

Edited by மல்லையூரான்

தமிழினப் படுகொலைகளை செய்துவரும் சிங்கள பௌத்த அரச பயங்கரவாதிகளினதும், அதுகள் வீசும் எலும்புத் துண்டுகளை நக்கிப் பிழைப்பு நடத்தும் ஒட்டுண்ணிக் கும்பல்களினதும் சதி முயற்சிகளின் வரிசையில் இதுவும் அடங்கும்!

இவ்வளவு பேருக்கும் இது விளங்குகிறது. இந்தத் தாய்த் தமிழ் ஏன் செய்தியை உண்மைபோல் பிரசுரிக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனை.. இந்தச் சுவரொட்டி.. உண்மையா.. பொய்யா என்ற ஆராய்ச்சி அல்ல..! அதில் சொல்லப்பட்டுள்ள ஒரு விடயம்.. அது துரோகி சொல்லலாம்.. எதிரி சொல்லலாம்.. உண்மையில் புலிகளே சொல்லலாம்.. முள்ளிவாய்க்காலில் மரணித்தோருக்கு உணர்வு பூர்வ அஞ்சலி செய்யுங்கள் என்பது. அதில் தவறில்லைத் தானே..!

புலம்பெயர் மண்ணில் நினைவு கூறப்படும் அளவிற்கு தாயகத்தில்... கடந்த கால போராட்ட பேரழிவுகள் நினைவுகூறப்படும் சூழல் இன்றில்லை. அந்த வகையில்.. இந்தச் சுவரொட்டிகளே.. அவற்றை நினைவு கூறச் செய்கின்றன... என்ற அடிப்படையில்...இதனை எதிரி செய்திருந்தாலும்.. அதனை வரவேற்கலாம்..!

இன்றைய சூழலில்.. எதிரி நினைத்தால்.. எத்தனையோ வழிகளில் தன் இருப்புக்கான நிலையை பேணிக்கொள்ளலாம். அவனுக்கு இன்று எந்த வழியிலும் செயற்பட தடை இல்லை. அந்த வகையில்.. இது எதிரியின் செயலாகக் கூட இருந்தாலும்.. அதற்குள் இருக்கும் எமக்கு அவசியமானதை எடுத்துக் கொண்டு.. நாம் மெளனமாக காரியம் சாதிப்பதே அவசியம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

ஓ.... ஓ ...... அருமையான கண்டுபிடிப்பு. என்ன புலநாய்வு.......

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... ஓ ...... அருமையான கண்டுபிடிப்பு. என்ன புலநாய்வு.......

அதெல்லாமிருக்கட்டும், உங்கட கே.பீ நாய்ப்பீ தாந்தோன்றித் தலைவர் என்னவாம் சொல்லுறார்?? மகிந்தவின்ர சரத்துக்குள்ள இருந்து உங்களுக்கு சுதந்திரம் தோண்டி எடுத்திட்டாராமோ??? வடிவாத் தோண்டச் சொல்லுங்கோ...சுதந்திரம் மட்டுமில்லை, வேறும் ஏதாச்சும் கிடைக்கலாம்.

ஓ.... ஓ ...... அருமையான கண்டுபிடிப்பு. என்ன புலநாய்வு.......

ஏன் இந்த நக்கல் விடிவெள்ளி. சொல்வதை முட்டைக்கு வெளியே வந்து தெளிவான வசனங்களில் சொல்லலாம்தானே? கருத்து களத்தில் தானே எழுதுகிறோம். ஏற்கனவே புனை பெயரில் ஒழித்துக்கொண்டுதானே எழுதுகிறோம். இப்படி புரியாத புதிர் போட்டு கருத்துக்குள்ளும் ஒழித்துகொள்ள வேண்டிய தேவை இருக்கா?

Edited by மல்லையூரான்

நெடுமாறனின் எழுத்து போல கிடக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறனின் எழுத்து போல கிடக்கு ?

:D:icon_mrgreen:

ஏன் இந்த நக்கல் விடிவெள்ளி. சொல்வதை முட்டைக்கு வெளியே வந்து தெளிவான வசனங்களில் சொல்லலாம்தானே? கருத்து களத்தில் தானே எழுதுகிறோம். ஏற்கனவே புனை பெயரில் ஒழித்துக்கொண்டுதானே எழுதுகிறோம். இப்படி புரியாத புதிர் போட்டு கருத்துக்குள்ளும் ஒழித்துகொள்ள வேண்டிய தேவை இருக்கா?

ஆம் மல்லை

காரணம் பயம்........... :icon_mrgreen: :icon_mrgreen: :D

இதை யார் எழுதி இருந்தாலும் சொல்லபட்ட செய்தி தெளிவாகவும் அதேநேரம் யாருக்கும் பிரச்சனைகள் இல்லாமலும் சொல்லப்பட்டுள்ளது.

மற்றும் இந்த காகிததாளையும், மே தினத்தில் புலிக்கொடியுடன் ஓடியதையும் ஒப்பிடமுடியாது.

நெடுக்கண்ணரின் கருத்தே என்னுடையதும்.

நெடுமாறனின் எழுத்து போல கிடக்கு ?

தலைவரைப்பற்றி நெடுமாறன் தனது கருத்துக்களை கூறலாம். அது வேறு. அந்தவார்த்தைகள் தமிழ் நாட்டுக்கு மட்டும் என்பதுதான் கருத்து.

சுஸ்மா இந்தியாவில் கூறிய வார்த்தை, வடக்கில், சிறுவர்களுக்கு நடத்தும் பிறந்த தின நிகழ்வுகளுக்குள் கூட ஆமிகள் வந்து இறங்கிவிடுகிறார்கள் என்பது. இந்த நிலையில் மாவீரர்களுக்கு, முள்ளிவாய்க்கால் நினைவு தினமன்று, பொது இடங்களில் வீரவணக்கம் செலுத்த சொல்லி எழுதவும் ஒருவர் இருக்கிறார் என்றால் அவருக்கு எதை எப்போது செய்வதென்பதும், எப்படி செய்வதென்பதும் (ஒளித்தும் சில அலுவல்கள் செய்ய வேண்டும் என்பதும்) தெரியாது. ஆகையால் இப்படிப்பட்டவர், தேவை கருதி தலைமறைவாக இருக்கும் தலைவரை பற்றி கதைக்க தகுதி இல்லாதவர். மேலும் இவர் தன் சொந்த கை எழுத்தில் துண்டு பிரசுரத்தை தயாரித்திருப்பதால், இவருக்கு இயக்கத்தின் இரகசிய உண்மைகள் தெரிந்திருப்பதும் ஆபத்து. எதற்கும் இவரை உடனே இயக்கம் வெளியே போடவேண்டும்.

பொன்மானைக் கண்டு சீதை ஆசைப்பட்டால், உயிர் ஆபத்து தனக்கும், இராம, லக்சுமணர்க்கு மட்டுமல்ல, அது வாலி, சுக்கீரீவன் வரை போய், அவர்களின் சேனைகளை கூட அக்குரோணிகணக்கில் அழித்து விடுகிறது. இதில் முதல் மாணாக்கருக்கு உதாரணம் காட்டப்படும் அன்னம் போல் தண்ணயைப்பிரித்து பாலைக்குடிக்க முடியாது. ஏன் எனில் இதில் பாலுடன் கலந்திருப்பது தண்ணி அல்ல. இதில் பாலுடன் கலந்திருப்பது நஞ்சு. இதில் பாலைப்பிரிக்க போகும் அன்னத்திற்கும் சாவுதான் முடிவு.

மேலும் நெடுமாறனின் பேச்சுக்கள் தமிழ் நாட்டில் செய்ய வேண்டியதை செய்கிறதா இல்லையா என்பதை கருணாநிதிதான் விளங்க படுத்த வேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.