Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்தில் நடனமாடிய பெண்களுக்கு மரணதண்டனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

pak-290512-150.jpg

பாகிஸ்தானில் திருமணத்தின் போது நடனமாடிய, நான்கு பெண்கள் உட்பட ஆறு பேருக்கு, கிராம பஞ்சாயத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர் - பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு அரசை விட கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்குத் தான் செல்வாக்கு அதிகம்.

இங்குள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில் பண்டோ பைதார் கிராமத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி நடந்தது. கிராமிய பாடல்கள் இசைக்க, திருமணத்துக்கு வந்த சில பெண்களும், ஆண்களும் நடனமாடினர். இவர்கள் நடனமாடிய காட்சிகள் எல்லாம் வீடியோவில் பதிவாகியிருந்தன.

இந்த திருமண வீடியோவை, சீர்தய் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் சமீபத்தில் பார்த்தனர். தங்கள் கிராம பெண்கள் பக்கத்து கிராமத்தில் நடந்த விழாவில் நடனமாடிய காட்சிகளை கண்டு கொதித்தனர். நமது வழக்கப்படி ஆணும் பெண்ணும் சேர்ந்து நடனமாடுவது பெரிய குற்றம் எனக் கூறி பஞ்சாயத்தை கூட்டினர்.

நடனமாடிய நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை கொல்லும் படி உத்தரவிட்டுள்ளனர். இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு, 40 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

இதன் படி நான்கு பெண்களும் வீட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு, ஒரு இடத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை கேள்விப்பட்ட இரண்டு ஆண்களும் தப்பி விட்டனர். நடனமாடியவர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தண்டனை நிறைவேற்றப்படலாம் என்பதால், அவர்களின் உறவினர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

இதையடுத்து கோகிஸ்தான் மாவட்ட போலீஸ் அதிகாரி அப்துல் மஜித், சீர்தய் கிராமத்துக்கு சென்று, அங்குள்ள கிராம பெரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நான்கு பெண்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

pak-290512-150.jpg

இந்த திருமண வீடியோவை, சீர்தய் கிராம பஞ்சாயத்து தலைவர்கள் சமீபத்தில் பார்த்தனர். தங்கள் கிராம பெண்கள் பக்கத்து கிராமத்தில் நடந்த விழாவில் நடனமாடிய காட்சிகளை கண்டு கொதித்தனர். நமது வழக்கப்படி ஆணும் பெண்ணும் சேர்ந்து நடனமாடுவது பெரிய குற்றம் எனக் கூறி பஞ்சாயத்தை கூட்டினர்.

நடனமாடிய நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை கொல்லும் படி உத்தரவிட்டுள்ளனர். இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு, 40 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளனர்.

இந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு, அந்தப் பெண்கள் தங்களுடன் நடனமாடவில்லை என்ற, வயித்தெரிச்சலால்.... மரண தண்டனை விதித்துள்ளார்கள்.

நாட்டாண்மை... தீர்ப்பை மாத்து.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த பஞ்சாயத்து தலைவர்களுக்கு, அந்தப் பெண்கள் தங்களுடன் நடனமாடவில்லை என்ற, வயித்தெரிச்சலால்.... மரண தண்டனை விதித்துள்ளார்கள்.

நாட்டாண்மை... தீர்ப்பை மாத்து.

அவர்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்குடன் ஆடி இருந்தால் மனைவிகளாக்கி இருப்பார் :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் பஞ்சாயத்து தலைவர்களுக்குடன் ஆடி இருந்தால் மனைவிகளாக்கி இருப்பார் :D

தன்ரை ஊரிலை, ஆடாமல்... வெளியூர் போய் ஆடினது தான்... நாட்டாண்மைக்கு கோவம் போலை.....

ஆரோ... குறுக்காலை போவார், 2 மாதத்துக்குப் பிறகு.. அந்த வீடியோவை நாட்டாண்மைக்கு காட்டிப் போட்டாங்கள். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்ரை ஊரிலை, ஆடாமல்... வெளியூர் போய் ஆடினது தான்... நாட்டாண்மைக்கு கோவம் போலை.....

ஆரோ... குறுக்காலை போவார், 2 மாதத்துக்குப் பிறகு.. அந்த வீடியோவை நாட்டாண்மைக்கு காட்டிப் போட்டாங்கள். :icon_idea:

அதுதான் முகத்தை துணியினால் மூடி உள்ளார்களே எப்படி அடையாளம் கண்டார்கள் ? :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் முகத்தை துணியினால் மூடி உள்ளார்களே எப்படி அடையாளம் கண்டார்கள் ? :rolleyes::D

சிந்திக்க வேண்டிய, மில்லியன் டொலர் கேள்வி தமிழரசு :rolleyes: .

ஆரோ... அப்பாவிக்கு, மரணதண்டனை கிடைக்கப் போகுதோ... :icon_mrgreen:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நடனமாடிய பெண்களின் கொலை குறித்து விசாரிக்க பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

Supreme-Court-of-Pakistan-8612-150.jpg

திருமணத்தின் போது நடனமாடிய, நான்கு பெண்கள் கொல்லப்பட்டது உண்மையா என்பது குறித்து, விசாரிக்கும்படி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா மாகாணத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கின்றனர். இங்கு அரசை விட, கிராம ஊராட்சி தலைவர்களுக்குத் தான் செல்வாக்கு அதிகம்.

இங்குள்ள கோகிஸ்தான் மாவட்டத்தில் பண்டோ பைதார் கிராமத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் திருமண நிகழ்ச்சி நடந்தது. கிராமிய பாடல்கள் இசைக்க, திருமணத்துக்கு வந்த சில பெண்களும், ஆண்களும் நடனமாடினர். இவர்கள் நடனமாடிய காட்சிகள் எல்லாம் வீடியோவில் பதிவாகியிருந்தன.

இந்த திருமண வீடியோவை, சீர்தய் கிராம ஊராட்சி தலைவர்கள் சமீபத்தில் பார்த்தனர். தங்கள் கிராம பெண்கள் பக்கத்து கிராமத்தில் நடந்த விழாவில் நடனமாடிய காட்சிகளை கொண்டு கோபமடைந்தனர். நமது வழக்கப்படி, ஆணும், பெண்ணும் சேர்ந்து நடனமாடுவது பெரிய குற்றம் எனக் கூறி, பஞ்சாயத்தை கூட்டினர். நடனமாடிய நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்களை கொல்லும்படி உத்தரவிட்டுள்ளனர். இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு, 40 பேர் கொண்ட குழுவை அமைத்தனர்.

இதன்படி, நான்கு பெண்களும் வீட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு, ஒரு இடத்தில் கட்டி வைக்கப்பட்டனர். இந்த செய்தியை கேள்விப்பட்ட இரண்டு ஆண்களும் தப்பி விட்டனர். இதற்கிடையே நான்கு பெண்களும், ஜிசார் அலிட்ரே என்ற கிராமத்தில் கொல்லப்பட்டு விட்டதாக செய்தி வெளியாயின. இந்த சம்பவம் நடந்தது உண்மை தானா என்பது குறித்து, உடனடியாக விசாரணை நடத்தும்படி, போலீசாருக்கும், அரசுக்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் சம்பவ இடத்துக்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் வேறொரு இடத்தில் தரையிறங்கியதால், பெண்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கிராமத்துக்கு உடனடியாக செல்ல முடியவில்லை என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=61434&category=WorldNews&language=tamil

வரலாறுகளில் கி.மு 2000 ஆண்டுகளுக்கு முன் கூட இப்படியான சம்பவங்கள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை ...................

என்ன கோதாரி இது ................... :icon_mrgreen::icon_idea:

பெண்கள் மீதான, இந்தச் சமூகத்தினது அடக்கு முறை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான்.

லண்டனைச் சுற்றியுள்ள புறநகர்களில் வாழும், இந்தப் சமூகப் பெண்களினது சுதந்திரத்தை மத்திய லண்டனில் வந்து பார்த்தால் தெரியும். :D

அடிப்படைவாதிகள் சுயமாகவே தூக்குப் போட்டுக் கொள்வார்கள்.

சுபிறிம் கோட் டூப் விடாமல் வழக்கை விசாரிக்க வேண்டும். இதில் பொலிஸ் தேவை இல்லை. பஞ்சாயத்து தலைவர் கோட்டில் வந்து பதில் சொல்லவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் மீதான, இந்தச் சமூகத்தினது அடக்கு முறை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான்.

லண்டனைச் சுற்றியுள்ள புறநகர்களில் வாழும், இந்தப் சமூகப் பெண்களினது சுதந்திரத்தை மத்திய லண்டனில் வந்து பார்த்தால் தெரியும். :D

அடிப்படைவாதிகள் சுயமாகவே தூக்குப் போட்டுக் கொள்வார்கள்.

மிகவும் உண்மை, தப்பிலி!

பிறிக் லேனில, கொஞ்சக் காலம் வேலை செய்திருக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கட பெண்கள் மீதான அடக்குமுறை பற்றி யாருமே அதிகம் அக்கறை செய்யுறதில்ல. எல்லாம் அல்காவின் பெயரால்.. நடந்துகிட்டு இருக்குது..! ஈழத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வரும் முஸ்லீம் பெண்களும் இப்ப எல்லாம் உடலை முற்றாக மூடினம். ஊரில வெறும் மொக்காடு போட்டவை இங்க ஈரானிய ஸ்ரைலில்..???! வரவர ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிட்டிருக்குது... இந்த வர்க்கம்..! :lol::D

பெண்கள் மீதான, இந்தச் சமூகத்தினது அடக்கு முறை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான்.

லண்டனைச் சுற்றியுள்ள புறநகர்களில் வாழும், இந்தப் சமூகப் பெண்களினது சுதந்திரத்தை மத்திய லண்டனில் வந்து பார்த்தால் தெரியும். :D

அடிப்படைவாதிகள் சுயமாகவே தூக்குப் போட்டுக் கொள்வார்கள்.

அதில் தான் எத்தனை அழகு. அதையேன் மறைப்பான் என்று அவை நினைக்கிறதில.. என்ன தப்பு தப்பிலி அண்ணா..! அழகை வெளிக்காட்டுவது அவங்கட சுதந்திரம்..! அதை எல்லை மீறாமல்.. ரசிப்பது மனிதர்களின் சுதந்திரம்..! அதையேன் அல்லாகு.. வந்து எல்லாம் தனக்கு மட்டும் தான்.. என்று தட்டிப்பறிக்கனும்..! :lol::D

பிறிக் லேனில, கொஞ்சக் காலம் வேலை செய்திருக்கிறேன்!

உங்கட கற்பைக் காப்பாற்றக் கூடியதாக இருந்ததா புங்கையூரான்? :rolleyes::D

இந்து சமயத்தில் கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறுவதில் இருந்து, மொட்டை அடித்து, வெள்ளைச் சேலை கட்டுவது வரை போன நூற்றாண்டு வரை இருந்த பழக்கம். இன்றும் பின் தங்கிய இந்திய வட மாநில கிராமங்களில் நடந்து வரும் ஒன்று. எல்லா சமயங்களுக்கும் முன் தோன்றிய இந்து சமயத்தில் இருந்த பழக்க வழக்கங்களை (காலத்தால் மூத்த) முற்றாக அகற்றவே பல ஆயிரம் ஆண்டுகள் தேவையென்றால் வயதில் இளைய இஸ்லாம் சமயத்தில் இருக்கும் இப்படியான விடயங்கள் அகலவும் பல்லாயிரம் ஆண்டு வாழ்வு வேண்டும். இன்று கனடாவில் முஸ்லிம் பெண்களின் கல்வியறிவும், கலாச்சார விடுதலையும் பெரும் அளவில் இருக்கு. அதே போல், பின் தங்கிய முஸ்லிம் இடங்களிலும் இந்த மாற்றம் வரும். அரபு நாடுகளிம் முன்னேறிய டுபாய், பஹ்றைன், குவைத் போன்ற நாடுகளே பல வழிகளில் கலாச்சார முன்னேற்றம் அடையும் போது மற்றவர்களும் மாறுவர்; ஒரு சில ஆயிரம் வருடங்களின் பின்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கற்பைக் காப்பாற்றக் கூடியதாக இருந்ததா புங்கையூரான்? :rolleyes::D

அவங்களோட எப்ப பார்த்தாலும், ஒரு மசாலா மணமும் கூட இருக்கும்!

அண்டைக்கு, அதால தான், நம்ம கற்புத் தப்பியது! :D

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களோட எப்ப பார்த்தாலும், ஒரு மசாலா மணமும் கூட இருக்கும்!

அண்டைக்கு, அதால தான், நம்ம கற்புத் தப்பியது! :D

யாழ் புலனாய்வுத்துறை அறிக்கை: :rolleyes:

  • ஊரில் கள உறுப்பினர் காதலுக்கு இவர் சைவசமயப் பாடம் எடுத்தவர். :D
  • லண்டனில் பிறிக் லேனில் வேலை செய்தவர்.. இப்போது அவுஸில் இருக்கிறார். :lol:
  • புங்கையூரான் என்பதால் புங்குடுதீவு.. :icon_mrgreen:

புலனாய்வுத்துறையின் மேலதிக அறிக்கை.

யாழ் இந்துக் கல்லூரியின் விடுதியில்... தங்கிப் படிக்கும் போது, லைஃபோய் சவர்காரம் போட்டு குளித்தவர். :D:lol::icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வுத்துறையின் மேலதிக அறிக்கை.

யாழ் இந்துக் கல்லூரியின் விடுதியில்... தங்கிப் படிக்கும் போது, லைஃபோய் சவர்காரம் போட்டு குளித்தவர். :D:lol::icon_idea:

ஓ.. இந்த அநியாயம் வேறை நடந்திருக்கா??!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. இந்த அநியாயம் வேறை நடந்திருக்கா??!! :lol:

ஏம்பா... இசை,

குளிக்கும் போது, சவர்க்காரம் போடுவது.. அநியாயமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏம்பா... இசை,

குளிக்கும் போது, சவர்க்காரம் போடுவது.. அநியாயமா? :D

அந்த சவர்க்காரம் கல்லுமாதிரி இருக்கும்.. :rolleyes: எங்கள் வீட்டு வளர்ப்புப் பிராணிக்குப் போட்ட ஞாபகம்.. :lol: அதுதான் ஒரு அதிர்ச்சி.. :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சவர்க்காரம் கல்லுமாதிரி இருக்கும்.. :rolleyes: எங்கள் வீட்டு வளர்ப்புப் பிராணிக்குப் போட்ட ஞாபகம்.. :lol: அதுதான் ஒரு அதிர்ச்சி.. :icon_mrgreen:

அடப்பாவி,

புங்கை வந்து, நம்மளுக்கு மொங்கப் போறார். :rolleyes::D

அண்ணன் கற்பித்தது சைவம் - மனமோ

மசாலா தடவிய அசைவம்

உடம்புக்கு 'சன்லைட்'

உடைக்கு 'மில்க்வைட்' ............ :D

இந்து சமயத்தில் கணவன் இறந்தால் உடன் கட்டை ஏறுவதில் இருந்து, மொட்டை அடித்து, வெள்ளைச் சேலை கட்டுவது வரை போன நூற்றாண்டு வரை இருந்த பழக்கம். இன்றும் பின் தங்கிய இந்திய வட மாநில கிராமங்களில் நடந்து வரும் ஒன்று. எல்லா சமயங்களுக்கும் முன் தோன்றிய இந்து சமயத்தில் இருந்த பழக்க வழக்கங்களை (காலத்தால் மூத்த) முற்றாக அகற்றவே பல ஆயிரம் ஆண்டுகள் தேவையென்றால் வயதில் இளைய இஸ்லாம் சமயத்தில் இருக்கும் இப்படியான விடயங்கள் அகலவும் பல்லாயிரம் ஆண்டு வாழ்வு வேண்டும். இன்று கனடாவில் முஸ்லிம் பெண்களின் கல்வியறிவும், கலாச்சார விடுதலையும் பெரும் அளவில் இருக்கு. அதே போல், பின் தங்கிய முஸ்லிம் இடங்களிலும் இந்த மாற்றம் வரும். அரபு நாடுகளிம் முன்னேறிய டுபாய், பஹ்றைன், குவைத் போன்ற நாடுகளே பல வழிகளில் கலாச்சார முன்னேற்றம் அடையும் போது மற்றவர்களும் மாறுவர்; ஒரு சில ஆயிரம் வருடங்களின் பின்

சாத்தீ, கற்பை இழந்தவளாக கருதப்படவளை கல்லால் எறிந்து கொல்லும் வழக்கத்தின் கிளை. கணவனை இழந்தவளை தீக்குள் போடும் பழக்கம், தீர்ப்பை தெரிந்த மனச்சாட்சியான இந்துப் பெண்களுக்கு, உறவினருக்கு தம்மை தீக்குள் போடும் உபாதையை வைக்காமல் தாமே தீக்குள் புகும் பழக்கத்தை தந்தது. இதற்கும் காதலில் தோற்றால் (ஆணும், பெண்ணும்) தற்கொலை செய்யும் அநாதி பழக்கத்திற்கும் தொடர்பில்லை. ஸ்பாட்டாவில், நாளந்த வாழ்க்கையாக, பெண்களை தனி பள்ளிகளில் வைத்திருந்து, புஸ்டியானவர்களை கொண்டுவந்து உறவுகொள்ள வைத்து முழு சமுதாயத்தையே வெறும் வீரர்களாக்க முயன்றார்கள். அநாதியான, பெண்களை அடிமைகொள்ளும் மேற்கு நாட்டு பழக்கம், முகமதியத்திற்கு மட்டும் புதியது என்றும், காளியும் கொற்றவையும் அரசிகளாக இருந்த திராவிட பண்பாடுகளில் பெண்களை மொட்டை அடித்தார்கள் என்பதும் மேலைநாட்டு புத்தகங்களை படித்துவிட்டு அதை திரும்ப ஒப்புவிப்பதால் வருவது. கண்ணகி காலம் வரைக்கும் சங்கக்கதைகளில் சாத்தீ முட்டும் பழக்கம் இருந்ததாக தெரியவில்லை. கண்ணகி உயிரை தக்க வைத்துக்கொண்டு (யவணர்களிடமிருந்தாயிருக்கலாம்) கள்ளவியாபாரங்களைக்கற்றுகொண்ட மதுரை நகரை திருத்தி அமைத்தாள். கோவலனின் இறப்புக்கு பிறகு அவனை கணவனாக வரித்துக்கொண்ட மாதவி தனக்கு சாதீமூட்டவில்லை. மாறாக தன் மகள் மணிமேகலையை துறவியாகினாள்.

இந்துசமயத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் படைடெடுப்புக்கள் மூலம் திணிக்கப்பட்டது. புத்தர் காலத்திற்கு முந்தைய நிர்வாண பெண்துறவிகளின் களிமன் சிலைகள் 2000 களில் கிளிநொச்சியில் கண்டு பிடிக்கப்பட்டது. இது இந்துசமயதிற்கு தலைமை தாங்கிய பெண் இனத்தின் அடிச்சுவடுகள் இவை. தனதத்தன், புனிதவதியை கண்டு பயந்து வீட்டை விட்டு சென்று மறைந்து வாழ்ந்ததும், புனித யோனை தீக்குள் போட்டு நாட்டை தூய்மை செய்ததும் இனங்களின் இயற்கையான நடத்தை. இது சமயங்கள் மீது போடப்படும் அநாவசிய பழி. யேசுவை கல்லெறிந்து ஒருபெண்ணை கொல்லும் படி நிர்ப்பந்தித்த போது அந்த மூடர்களிடமிருந்து எப்படி அந்த பெண்ணையும், தன்னையும் காத்து, மேலும் ஒரு படி மேலே சென்று அவர்களின் மனங்களையும் வென்றார் என்பது கிறிஸ்தவர்களுக்கு பள்ளிப்பாடம்.

மிக இளமையான சமையம் மிகச்சிறந்த நாகரீகத்தை உள்ளடக்கியிருக்க வேண்டும். மிக இளைய பகாய் சமயம் மற்றயவர்களின் தவறுகளைத் திருத்தமுயன்றதும் புத்தரும், மகாவீரரும் இந்துசமயத்தில், இடைக்கலத்தில், சிவனை விட ஆளுமை பெற்றிருந்த உருத்திரன், இந்திரன் போன்றோர்களால் திணிக்கபட்ட வேள்விகள், மடைகள்(feast), யாகங்களை எதிர்த்து, இந்துசமயத்தை மீட்டு, சிவனின் பாதைக்கு திரும்ப வைத்தார்கள் என்பதும் தான் உண்மைச்சரித்திரம். இதற்கு சமயம் முதியதாக இருக்க வேண்டும் என்பதல்ல தேவை. எந்தவகை ஆதிக்கம் உள்நுளைகிறது என்பதுதான் பிரதானம். ஆயிரம் வருடங்கள் காத்திராமல் தமிழ்நாடில் பெண்பள்ளி தொடங்கப்பட்டுவிட்டது

முகமதிய நாடுகளில்,பெண்களுக்கு, நாகரிக மேற்கத்திய கல்வி மறுக்கப்படுகிறது. ஆண்களுக்கு முகமதியகல்வி படிப்பிக்கபடுகிறது. சிறுமியாயிருந்த காக்கை பாடினியாள் சிறுவனாயிருந்த தொல்காப்பியனோடு, அருகருகில், ஒரேவகுப்பில் அமர்ந்திருந்து இருந்து கல்வி கற்ற மனநிலைக்கு அடிமைப்படுத்தபட்ட (உலகிலேயே முதல் பெண் பள்ளி வாசலைத்திறந்த) தமிழகமோ (உலகிலேயே முதல் மகளிர் படைகளை வைத்து நடத்திய) தமிழ் ஈழமோ இன்னும் வந்து சேரவில்லை. இந்த மனங்கள் மேலைநாட்டு ஆரியகல்வி மாயையை உண்மை என்று நம்பி மயங்கி போயுள்ளர்கள். போதனைகளில் மயங்குவதால் தன்னை யார் என்று உணரவும், தேறி உண்மை தெளியவும் தயங்குகிறார்கள். உலகத்திற்கு நாகரீகத்தை முதன்முதலில் கொண்டுவந்த இனம் சிந்தனை தெளிவில்லாமல் போலிகளை ஏற்பதை தவிர்க்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் கற்பித்தது சைவம் - மனமோ

மசாலா தடவிய அசைவம்

உடம்புக்கு 'சன்லைட்'

உடைக்கு 'மில்க்வைட்' ............ :D

:D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணன் கற்பித்தது சைவம் - மனமோ

மசாலா தடவிய அசைவம்

உடம்புக்கு 'சன்லைட்'

உடைக்கு 'மில்க்வைட்' ............ :D

எங்கடை பொடியளும் அடுக்குவசனம் எடுத்து விடுறாங்கள்...ராஜேந்தர் ...ம் பண்ணியில் பண்ணிப்பாருமன். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.