Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிக்கொடிகளுடன் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ள தமிழர்கள் (படங்கள்)

Featured Replies

விதம் விதமான பாதுகைகளால் தாக்கம் கூடவாக இருந்திருக்கலாம். ஆனால் ஐடியா உள்ளவர்கள் விரும்பியவற்றை எடுத்துகொண்டு முன்னுக்கு போயிருந்தால் போராட்டம் இன்னும் வலுவாக இருந்திருக்கும். சனம் அளவுக்கதிகமாக கூடி லண்டன் பொலிஸ் ஆக்களை வெளியேற்றவேண்டிய நிலைமைக்கு சென்றிருந்திருக்கலாம். அப்போது அதை பி.பி.சி எல்லோரும் ஒளிபரப்புவார்கள்.

  • Replies 224
  • Views 17.7k
  • Created
  • Last Reply

நிச்சயம் இம்முறை நேரமின்மை மத்தியிலும் போராட்டத்திற்கு சென்ற மக்கள் அனைவருக்கும் என் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

:) :) :) :) :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

They have announced on ILC radio that face masks are available for those do not like to show their faces at the protest. If anyone thinking of visiting to SriLaanka, they can wear face mask at the protests. (Can someone write this in Tamil please)

அடையாளம் இல்லாது போராட்டம் நடத்தினால் அந்த போராட்டத்தை எதிரி தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொள்ள சாத்தியமுள்ளது உதாரணத்துக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகிந்தரை வரவேற்க வந்தவராக கூட காட்ட கூடும்.

உங்களுக்கான பதில் ஏற்கனவே இத்திரியில் உள்ளது.

போரின் போது கொல்லப்பட்ட சிறுவர்களின் படஙகள் அங்கவ\ினமடைந்து இரத்தம் தோய்ந்த நிலையில் இருக்கும் மக்களின் படங்கள் என்பவற்றிற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுது தான் வருபவர் ஒரு இனப்படுகொலையாளி என்பது பார்ப்பவர்களுக்குப் புரிந்திருக்கும்.

இதனை அனைவரும் கருத்தில் கொண்டால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மகிந்தவை எதிர்க்க வந்தார்கள் என்பது தெளிவுபடுத்தப்படும். :rolleyes:

தற்போதைக்கு இது தான் எமக்கான அடையாளம்.

Edited by காதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் பங்கெடுக்கும் அனைத்து உறவுகளே தொடருங்கள்...

ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுவோர் உங்கள் முகத்தை வெளிக்காட்டாமல் இருப்பதற்காக முகமூடி அணிய / முகத்தை மறைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என ILC radio இன் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கப்பட்டிருக்கிறது.

எனவே இலங்கைக்கு சென்று வருவோர் அதனை கவனத்தில் கொண்டு உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

- Queen அக்காவின் கருத்திலிருந்து -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிக்கொடி பிடிக்கிறவன் பிடிச்சிட்டு போகட்டும். அது ஒரு பெரிய விசயமே இல்லை. ஆனா மகிந்தவின் குரூரமான இனவழிப்புப் படங்களை கொஞ்சப் பேராவது கொண்டு போயிருக்கக் கூடாதா என்பது தான் ஆதங்கமாய் இருக்குது. இணையம் முழுக்க முள்ளிவாய்க்காலின் குரூர படங்கள் கொட்டிக் கிடக்குது. ஆக தேவையானது ஒரு களர் பிரிண்டர் மட்டுமே. சனம் இதை சிந்திக்குதில்லை எண்டது தான் இங்கு பிரச்சனை.

எழுந்தமானமாக மக்கள் கொலைகாரன் வருகின்றான் என்றவுடன் புலிக்கொடியுடன் விழுந்தடித்து ஓடினார்களாம்.இதுவும் முள்ளிவாய்காலில் உள்ளுக்க விட்டு அடிக்கின்ற கதைபோலத்தான் இருக்கு.

நாங்களும் ஊர்வலங்களுக்கு போனாங்கள் .நடாத்துகின்ற ஆட்கள் ,அமைப்புகள் ,செயற்பாடுகள் எல்லாம் நன்றாக திட்டமிட்டு நடாத்தப்படுவன.பெட்டி பெட்டியாக கொடிகள் கொண்டுவந்து உடைத்து விநியோகித்தார்கள் .

முள்ளிவாய்காலில் நாப்பதினாயிரம் ,இனி அடுத்து எவ்வளவொ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் .தமிழிழத்தில் புலி கொடி ஏறவேண்டும் அல்லது முழு தமிழனும் அழியவேண்டும் இதுதான் புலிகளின் தாரக மந்திரம் .

கொடியை போட்டுவிட்டு போய் கொல்லத்தில் படகில் ஏற இருந்தவர்களுக்கு ஏதாவது உதவிசெய்ய நினையுங்கள்.இனியாவது மிருகமாக தொடர்ந்து இருப்பதைவிட்டு மனிதர்களாக முயற்சியுங்கள் .

532747_338958006175484_100001838612850_767336_633324271_n.jpg

அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 150 இலங்கை அகதிகள் கைது கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 150 இலங்கை அகதிகள் கொல்லத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளனர். கொல்லம் கடற்கரையில் நேற்றிரவு ஆறு இலங்கை தமிழ் அகதிகள் படகு ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்த போது கேரள பொலிஸார் விசாரணை செய்தனர். அப்போதே அவர்கள்... தாம் அவுஸ்ரேலியா செல்வதற்காக படகிற்கு காத்திருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவுஸ்ரேலியா செல்வதற்காக கொல்லத்தில் காத்திருந்த 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 பெண்களும் 22 சிறுவர்களும் அடங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ளவர்களாவர். சிலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை அவுஸ்ரேலியாவுக்கு கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படவிருந்த படகு ஒன்றை கேரள காவல்துறையினர் மடக்கிப் பிடிக்க முயன்ற போது அதில் இருந்த படகோட்டியும், இருவரும் கடலில் குதித்து தப்பி விட்டனர். பிடிபட்ட அகதிகள் ஒவ்வொருவரும் அவுஸ்ரேலியா செல்வதற்கு 1 இலட்சம் ரூபா தொடக்கம் 5 இலட்சம் ரூபா வரை முகவர்களுக்கு செலுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதான் கடைசியில் தமிழ் மக்களுக்கு புலிகள் விட்டு சென்றது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னே உங்களுடைய மகிழ்ச்சி..உங்கள் பதிவுகளில் மக்களின் அழிவைக்காட்டிலும் புலிகளின் வீழ்ச்சியையிட்டு பெருமிதப்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. உங்களைப் போன்றவர்கள் இப்படி எக்களித்து நாராசம் காய்ச்சுவதைவிட சிங்கள இனவாதிகளுக்குப் பல்லாக்குத் தூக்குவது மேல்,

ஆமா தெரியாமல்தான் கேட்கிறேன் நீங்கள் தமிழரா? அப்படியே தமிழராயின் உங்களை அடையாளப்படுத்த உங்களிடம் இருக்கும் அடையாளம் என்ன? நாகரீகம் கருதி நாங்கள் பேசவில்லையென்பதையே விளங்காமல் இருந்து கொண்டு உச்சாணிக் கொப்பில் நிற்பதாக அதிகமாகவே படுத்துகிறீர்கள். நீங்கள் ஊர்வலத்திற்கு போனீங்கள்தான் ஆனா உங்கள் அவதானம் அழிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுக்கப் போனதாகத் தெரியவில்லை.. இவங்கள் என்ன செய்யிறாங்கள் என்று விடுப்பு பார்ப்பதில்தான் குறியாக இருந்திருக்கிறது. மேலே தயா கூறியதைப் போல் விடுப்பும் வியாக்கியானமும் கதைத்துக் கொண்டு காலத்தைப் போக்காட்டிக் கொண்டிருப்பதைக்காட்டிலும் ... நீங்கள் நடைமுறைப்படுத்தி ஏதாவது செய்யுங்கள்...புலிக்கொடி உங்களை என்ன செய்தது?

ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள் நாங்கள் தமிழினம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுதான் அறப் போராட்டங்கள் நடாத்தப்படவேண்டும். யாருக்கு எதிராக எங்களுடைய போராட்டம் நடாத்தப்படுகிறது என்பதையும், எங்கள் மொழி ,இனம் என்பனவற்றை அடையாளப்படுத்திக் கொண்டுமே போராட்டங்கள் நகரவேண்டும்... வெறுமனே மக்கள் அழிவைப்படம்பிடித்துக் காட்டிக் கொண்டு குரல் கொடுக்கும் இடத்தில் நாம் யார் எந்த நாட்டவர்கள் என்று பல்லின மக்களுக்கு எப்படித் தெரிவிப்பீர்கள் சிங்களத் தேசியக் கொடியைப்பிடித்து நாங்கள் சிங்களத்தை முதன்மையாக ஏற்றுக் கொண்டு வாழும் சிறீலங்கா பிரசைகள் என்றா?

பேச்சுப்பல்லக்கு தம்பி கால்நடை என்பது உங்கள் விடயத்தில் நாம் அறிந்த ஒன்றே.... முடிந்தால் தமிழராய் உங்களை அடையாளப்படுத்திக் கொண்டு உலகமே அசந்து போகுமளவுக்கு இந்த வக்கணையாகப் பேசும் நாக்கிற்குரியவர்கள் சாதித்துக் காட்டுங்கள் அதற்குப் பிறகு உங்கள் கருத்து குப்பைகளில் குண்டு மணி பொறுக்குகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

Protest_20120604_002.jpg

Protest_20120604_001.jpg

Protest_20120604_003.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுந்தமானமாக மக்கள் கொலைகாரன் வருகின்றான் என்றவுடன் புலிக்கொடியுடன் விழுந்தடித்து ஓடினார்களாம்.இதுவும் முள்ளிவாய்காலில் உள்ளுக்க விட்டு அடிக்கின்ற கதைபோலத்தான் இருக்கு.

நாங்களும் ஊர்வலங்களுக்கு போனாங்கள் .நடாத்துகின்ற ஆட்கள் ,அமைப்புகள் ,செயற்பாடுகள் எல்லாம் நன்றாக திட்டமிட்டு நடாத்தப்படுவன.பெட்டி பெட்டியாக கொடிகள் கொண்டுவந்து உடைத்து விநியோகித்தார்கள் .

முள்ளிவாய்காலில் நாப்பதினாயிரம் ,இனி அடுத்து எவ்வளவொ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம் .தமிழிழத்தில் புலி கொடி ஏறவேண்டும் அல்லது முழு தமிழனும் அழியவேண்டும் இதுதான் புலிகளின் தாரக மந்திரம் .

கொடியை போட்டுவிட்டு போய் கொல்லத்தில் படகில் ஏற இருந்தவர்களுக்கு ஏதாவது உதவிசெய்ய நினையுங்கள்.இனியாவது மிருகமாக தொடர்ந்து இருப்பதைவிட்டு மனிதர்களாக முயற்சியுங்கள் .

தன்னை அறியாத அறியாமை, இராசாவுக்கு மந்திரி என்ற நினைப்பாம்!

தன்னைத் தானே அறிஞன் என்று சாதிப்பதுதான் பையித்திய நோயின் முதிர்சியைக் காட்டுகின்ற நிலை!

தமிழிழத்தில் புலி கொடி ஏறவேண்டும் அல்லது முழு தமிழனும் அழியவேண்டும் இதுதான் புலிகளின் தாரக மந்திரம் .

எப்ப மாத்தினவை அண்ணா? எனக்கின்னும் தெரியாது. :lol:

உங்கள் தாரக மந்திரத்தை ஏன் அவர்கள் தாரக மந்திரத்துக்குள் செருகுறீங்கள்? :wub:

முழு தமிழனும் அழிய வேண்டுமென்று நினைத்திருந்தால் எமக்காக போராடவும் வந்திருக்க மாட்டார்கள். முள்ளிவாய்க்காலில் தாம் அழிந்தும் இருக்கமாட்டார்கள். :(

கொடியை போட்டுவிட்டு போய் கொல்லத்தில் படகில் ஏற இருந்தவர்களுக்கு ஏதாவது உதவிசெய்ய நினையுங்கள்.இனியாவது மிருகமாக தொடர்ந்து இருப்பதைவிட்டு மனிதர்களாக முயற்சியுங்கள் .

எங்களை மிருகம் என்று சொல்லுறதுக்கு நீங்கள் எப்ப மனிதரானனியள்? :o:lol:

அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 150 இலங்கை அகதிகள் கைது கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 150 இலங்கை அகதிகள் கொல்லத்தில் வைத்து செய்யப்பட்டுள்ளனர். கொல்லம் கடற்கரையில் நேற்றிரவு ஆறு இலங்கை தமிழ் அகதிகள் படகு ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்த போது கேரள பொலிஸார் விசாரணை செய்தனர். அப்போதே அவர்கள்... தாம் அவுஸ்ரேலியா செல்வதற்காக படகிற்கு காத்திருப்பதாக கூறியுள்ளனர். இதையடுத்து அவுஸ்ரேலியா செல்வதற்காக கொல்லத்தில் காத்திருந்த 150 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 16 பெண்களும் 22 சிறுவர்களும் அடங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ளவர்களாவர். சிலர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை அவுஸ்ரேலியாவுக்கு கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படவிருந்த படகு ஒன்றை கேரள காவல்துறையினர் மடக்கிப் பிடிக்க முயன்ற போது அதில் இருந்த படகோட்டியும், இருவரும் கடலில் குதித்து தப்பி விட்டனர். பிடிபட்ட அகதிகள் ஒவ்வொருவரும் அவுஸ்ரேலியா செல்வதற்கு 1 இலட்சம் ரூபா தொடக்கம் 5 இலட்சம் ரூபா வரை முகவர்களுக்கு செலுத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதான் கடைசியில் தமிழ் மக்களுக்கு புலிகள் விட்டு சென்றது.

இதனை புலிகள் விட்டு செல்லவில்லை. உங்களை போன்ற காட்டிக்கொடுப்பவர்கள் விட்டு சென்றது.

புலிகளை / புலி ஆதரவாளர்களை காட்டிக்கொடுப்பவர்கள் அதிகரித்த பின்னர் தான் மகிந்த ராஜபக்சா புலிகளுக்கெதிரான போரை ஆரம்பித்தார். அவர்கள் இல்லாவிட்டால் இப்படி புலிகளுடன் போரை ஆரம்பிக்கும் துணிவு அவருக்கு வந்திருக்காது. :lol: புலிகளும் அழிந்திருக்க மாட்டார்கள். மக்களுக்கும் இந்த நிலை வந்திருக்காது. :(

புலம்பெயர் தமிழர்கள் இன்னும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருப்பதால் தான் காட்டிக்கொடுப்பவர்கள் எல்லாரையும் அரசாங்கம் இன்னும் இலங்கையில் விட்டுவைத்துள்ளது. (தமது தேவை கருதி)

இல்லை எண்டால் முள்ளிவாய்க்காலில் சண்டை முடிந்த பிறகு அவர்களே உங்களை போன்றவர்களை போட்டுத்தள்ளத்தொடங்கியிருப்பார்கள். :lol: (தேவை முடிய போட்டுத்தள்ளுவது அவர்கள் தொழில்)

பிறகு காட்டிக்கொடுத்து சாதனை செய்யும் பலரின் நிலையும் உது தான் அண்ணா.. :lol:

ஏதோ எங்கட புண்ணியத்தாலை தான் காட்டிக்கொடுப்பவர்களை இலங்கையில் இன்னும் விட்டுவைத்திருக்கிறார்கள். :D

Edited by காதல்

ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள் நாங்கள் தமிழினம் என்று அடையாளப்படுத்திக் கொண்டுதான் அறப் போராட்டங்கள் நடாத்தப்படவேண்டும். யாருக்கு எதிராக எங்களுடைய போராட்டம் நடாத்தப்படுகிறது என்பதையும், எங்கள் மொழி ,இனம் என்பனவற்றை அடையாளப்படுத்திக் கொண்டுமே போராட்டங்கள் நகரவேண்டும்... வெறுமனே மக்கள் அழிவைப்படம்பிடித்துக் காட்டிக் கொண்டு குரல் கொடுக்கும் இடத்தில் நாம் யார் எந்த நாட்டவர்கள் என்று பல்லின மக்களுக்கு எப்படித் தெரிவிப்பீர்கள் சிங்களத் தேசியக் கொடியைப்பிடித்து நாங்கள் சிங்களத்தை முதன்மையாக ஏற்றுக் கொண்டு வாழும் சிறீலங்கா பிரசைகள் என்றா?

- தேவை கருதி நீக்கப்பட்டுள்ளது -

Edited by காதல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் இது புலிக்கொடி இல்லை எமது உயிரிலும் மூச்சிலும் கலந்த தேசியக்கொடி, பல்லாயிரக்கணக்கான மக்களும், போராளிகளும் தமது உயிரை வார்த்து காத்த தமிழன் இனக்கொடி, ஈழத்தமிழனின் அடையாளம் எமது தேசியக்கொடி.

Edited by சித்தன்

எல்லாரும் இந்த பிரச்சினையை இப்ப விட்டிட்டு நாளைய அலுவலை பாருங்கள்.

முடிந்தவர்கள் அனைவரும் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் இனப்படுகொலையை சித்தரிக்கும் படங்களை, பதாகைகளை கொண்டு செல்லுங்கள். அது போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும்.

உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த queen அக்கா சொன்ன படி முகத்தை வெளிக்காட்டாதவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கு பற்றுங்கள்.

புலிகளின் அழிவு எனக்கு மட்டுமல்ல எத்தனோயோ தமிழர்களுக்கு மகிழ்சியையே தந்தது . புலிகள் என்ற வட்டத்திற்குள் நின்று பார்த்தால் புலிகள் தான் தமிழர்,புலிகள் தான் உலகமாகவும் தெரியும் .

நாங்கள் தேடுவது எமது இனத்திற்கான இருப்பு .நீங்கள் தேடுவது புலிகளுக்கான அங்கீகாரம் .சர்வதேசம் புலிகளை எப்போ தடை செய்ய தொடங்கியதோ அப்போதே புலிகளின் கதை முடிந்துவிட்டது .

வேறு எங்கும் போகவேண்டாம்.மனித உரிமைகள் அமைப்பு அறிக்கைகள். U.N.அறிக்கைகளை வாசியுங்கள்(விளங்கினால் ) நாங்கள் எங்கே நிற்கின்றோம் என்று விளங்கும் .

புலிகள் வன்னிக்கு இடம் பெயர்ந்த பின் யாழ்பாணம் ஒன்றும் அழிந்து போகவுமில்லை அங்கிருக்கும் மக்கள் அதுபற்றி பெரிதாக கவலைபடவுமில்லை .

புலிகள் என்ற வட்டத்திற்குள் நின்று வெளியில் வராமல் தமிழனுக்கு விடிவு இல்லை என்று தேசிய கூட்டமைப்பிற்கு நன்கு தெரியும் .

புலிகள் போராடினதும் உண்மை ,உயிர் தியாகம் செய்ததும் உண்மை உலக அரசியல் தெரியாததும் உண்மை.

அதையெல்லாம் கடந்து எமக்கான தீர்வு அவசியம் ,அங்கேயே நின்று அதே இடத்தில் தொங்கிக்கொண்டிருக்கமுடியாது .

ஊர்வலம் போனது ,கொடி பிடித்தது 80 களிலேயே நாங்கள் செய்ய தொடங்கிவிட்டோம் .எத்தனை ஊர்வலம் HYDE PARK ,LANGASTER GATE இல் செய்தோம்.தனிய எமது போராட்டத்திற்கு மட்டுமல்ல P.L.O, A.N.C ஊர்வலங்களும் போன ஆட்கள் நாங்கள் .

Edited by arjun

அன்று வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த எட்டப்பன் பரம்பரைக்கும், மகாத்மாவை சுட்டிகொன்ற கோட்சேயின் பரம்பரைக்கும், வெள்ளை அரசில் பணிபிரிந்தவர்களின் பரம்பரைக்கும் இந்தியாவில் இன்று தேசியக்கொடி மூவர்ணக்கொடிதான். அதுபோல ஈழ விடுதலை போராட்டத்தில் துரோகம் செய்தவர்களின் வழிவந்தவர்களுக்கும் புலிக்கொடிதான் தேசியக்கொடி, அந்த நாள் விரைவில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் உங்களுக்கு புலிகளை பற்றி பேசாவிட்டால் நித்திரை வராது போல ...... :D

சிங்களவனே புலிகளைப்பற்றி கதைப்பதை விட்டுவிட்டார்கள் ஆனால் அர்ஜுன் மறக்கவே மாட்டாராம் அப்படி என்னதான் புலிகள் இவருக்கு செய்தார்கள் ? இவர் புலிகள் என்று விமர்சனம் செய்வது எமது உடன் பிறப்புகளையும் சொந்தங்களையும் இதை ஒருபோதும் ஏற்க்க முடியாது தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் அவர்களை நாம் போராட்டத்திற்காக அற்பனித்திருக்கின்றோம் அதன் வலி உங்களுக்கு புரியாது உங்களின் சகோதரனை நீங்கள் போராட்டத்தில் இழந்திருந்தாலும் இப்படித்தான் எழுதுவீர்களா ? தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் .

முள்ளி வாய்க்காலுடன் புலிகளின் ஆட்டம் முடிந்து விட்டது என்று கொண்டாட்டம் போட்டவர்களுக்கு சாதாரண மக்கள் தேசிய கொடியை ஏந்துவது சகிக்கமுடியாமல் இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் தடை செய்தாலும் இது எமது தேசியக்கொடி.

ஐரோப்பாவில் தடை செய்தாலும், இதுகள் மாலைதீவில் புரட்சிக்கு போன கூலிப்பட்டாளங்கள் இல்லை என்பது அவனுக்கு தெரியும்.

அர்ஜுன் அண்ணா உங்களை நக்கலடிக்காமல் இந்தமுறை கருத்து எழுதுகிறேன். :D

உங்களை ஒத்த கருத்துள்ள தமிழர்களுக்கு பெருமளவு புலிகளின் அழிவு மகிழ்ச்சியை தந்தாலும் எம்மை ஒத்த கருத்துள்ள மக்களுக்கு கவலையை தான் தந்தது. :( இங்கு பார்க்கப்போனால் மகிழ்ச்சிப்பட்டவர்களை பார்க்கிலும் கவலைப்பட்டவர்கள் தான் பலமடங்கு அதிகம்.

நீங்கள் தேடுவது எமது மக்களுக்கான இருப்பு என்றால் அவர்களுக்காக இப்பொழுது என்ன செய்கிறீர்கள்? எனக்கு சொல்லவேண்டியதில்லை. உங்கள் மனதை கேளுங்கள். இறுதிப்போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை பற்றி தன்னும் கவலைப்பட்டு ஒரு வார்த்தை எழுதவில்லையே. இது தான் எம்மக்களுக்கு நீங்கள் செய்வதா?

புலிகள் தற்கொலைப்படையை வைத்திருந்தமை தான் சர்வதேசம் புலிகளை தடை செய்ததன் முக்கிய காரணம். வெளிநாடுகளில் தற்கொலை குண்டு தாக்குதல்களை பொதுமக்கள் மீது தான் நடத்துவார்கள். எனவே புலிகளும் அவ்வாறு பொதுமக்கள் மீது தான் நடத்துகிறார்கள் என்று நினைத்தார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. புலிகள் இராணுவத்தினருக்கு அல்லது அரசியல்வாதிகளுக்கு தான் நடத்தினார்கள். முடிந்தவரை பொதுமக்களுக்கு பாதிப்பு வராமல் நடத்தினார்கள். அதனை இறுதிவரை ஏன் இன்று கூட உலக நாடுகள் புரிந்துகொள்ளவில்லை. :wub:

அதற்காக தற்கொலை தாக்குதல் சரி என்று நான் கூறவில்லை. சமாதான காலத்தில் பலதையும் செய்து காட்டிய விடுதலைப்புலிகள் நிச்சயம் தற்கொலை தாக்குதலை பின்னொரு நாளில் நிறுத்தியிருப்பார்கள். அதற்குரிய காலம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. வழங்கப்பட்டிருக்குமானால் இதே சர்வதேசம் அவர்கள் மீதான தடையையும் நீக்கியிருக்கும்.

U.N அறிக்கையை மட்டும் வைத்து கருத்து எழுதுவதென்றால் இறுதிப்போரில் 40,000 மக்கள் தான் இறந்தார்கள் என்று தான் கூற முடியும். ஆனால் உங்களுக்கு தெரியும் இழப்பு அதை விட மிக அதிகம் என்று. எனவே எல்லா நேரங்களிலும் U.N அறிக்கை சரியாக இருக்கும் என்று நினைக்க முடியாது. எனவே அவர்களுக்கு எம் பிரச்சனைகளை தொடர்ந்து புரியவைத்துக்கொண்டிருக்க வேண்டியது எம் கடமை.

உண்மையை சொன்னால் புலிகள் வன்னிக்கு இடம்பெயர்ந்த பின்னர் தான் யாழ்ப்பாணம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து செல்கிறது. களவு கொள்ளை அதிகரித்துள்ளது, இராணுவத்தினரின் அட்டகாசம் அதிகரித்துள்ளது, எம்மக்கள் பாதுகாப்பில்லாமல் அல்லல் படுகிறார்கள் என்று என் பெற்றோர் கூறுவர்.

நான் யாழ்ப்பாணம் தான். ஆனால் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்திலில்லை என்று நான் கவலைப்பட்டதுண்டு. இத்தனைக்கும் எனக்கு நினைவு தெரிந்த வயதிலிருந்து அவர்கள் கட்டுப்பாட்டில் நான் வசித்திருக்கவில்லை. என் வயதிலுள்ளவர்களே அப்படி கவலைப்படும் போது உங்கள் வயதினர் எத்தனை பேர் கவலைப்பட்டிருப்பார்கள். அவர்களுடன் ஒப்பிடும் பொழுது உங்களைபோன்றோர் விதிவிலக்கு. ஏனென்றால் விடுதலைப்புலிகளுடனான பகையை இன்னும் நீங்கள் மறக்கவில்லை. அதனால் தான் அப்படி உங்களை எழுத தூண்டுகிறது.

எமக்கான தீர்வு அவசியம் என்று நீங்கள் கருதினால் இனியாவது புலிகளுக்கெதிராக கருத்துகளை எழுதாமல் (அதற்காக ஆதரித்து எழுதும்படி நான் கேட்கவில்லை) எம்மக்களுக்காக நீங்களும் பணியாற்றுங்கள்.

சேர்ந்து நின்று காட்டிக்கொடுக்கும் பழக்கத்தை கைவிட்டு தமிழர்கள் முதலில் ஒன்றுசேர வேண்டும். அது நடக்கிற காரியமா?

Edited by காதல்

புலிகளின் அழிவு எனக்கு மட்டுமல்ல எத்தனோயோ தமிழர்களுக்கு மகிழ்சியையே தந்தது . புலிகள் என்ற வட்டத்திற்குள் நின்று பார்த்தால் புலிகள் தான் தமிழர்,புலிகள் தான் உலகமாகவும் தெரியும் .

நாங்கள் தேடுவது எமது இனத்திற்கான இருப்பு .நீங்கள் தேடுவது புலிகளுக்கான அங்கீகாரம் .சர்வதேசம் புலிகளை எப்போ தடை செய்ய தொடங்கியதோ அப்போதே புலிகளின் கதை முடிந்துவிட்டது .

வேறு எங்கும் போகவேண்டாம்.மனித உரிமைகள் அமைப்பு அறிக்கைகள். U.N.அறிக்கைகளை வாசியுங்கள்(விளங்கினால் ) நாங்கள் எங்கே நிற்கின்றோம் என்று விளங்கும் .

புலிகள் வன்னிக்கு இடம் பெயர்ந்த பின் யாழ்பாணம் ஒன்றும் அழிந்து போகவுமில்லை அங்கிருக்கும் மக்கள் அதுபற்றி பெரிதாக கவலைபடவுமில்லை .

புலிகள் என்ற வட்டத்திற்குள் நின்று வெளியில் வராமல் தமிழனுக்கு விடிவு இல்லை என்று தேசிய கூட்டமைப்பிற்கு நன்கு தெரியும் .

புலிகள் போராடினதும் உண்மை ,உயிர் தியாகம் செய்ததும் உண்மை உலக அரசியல் தெரியாததும் உண்மை.

அதையெல்லாம் கடந்து எமக்கான தீர்வு அவசியம் ,அங்கேயே நின்று அதே இடத்தில் தொங்கிக்கொண்டிருக்கமுடியாது .

ஊர்வலம் போனது ,கொடி பிடித்தது 80 களிலேயே நாங்கள் செய்ய தொடங்கிவிட்டோம் .எத்தனை ஊர்வலம் HYDE PARK ,LANGASTER GATE இல் செய்தோம்.தனிய எமது போராட்டத்திற்கு மட்டுமல்ல P.L.O, A.N.C ஊர்வலங்களும் போன ஆட்கள் நாங்கள் .

இங்கு எவருமே புலிகளை ஆதரிக்கவில்லை எல்லோறும் கேட்பது இரண்டு விடயம் தான்1. ஈழத்தமிழன் ஏற்கக்கூடிய தீர்வு2. கொல்லபட்ட 150,000 மக்களுக்கு நீதிஆனால் நீங்களோ, எதுக்கு எடுத்தாலும் புலி,புலி என்று கத்துவதை விட வேறு எதுவும் செய்யவில்லை.எனக்குப் பார்த்தால் நீங்கள் தமிழ் ஈழ விடுதலைக்கு எதிரானவர் என்பதை தான் நிரூபிக்கிறது, அப்படியாயின் நீங்கள் ஒரு தமிழராய் இருக்க முடியாது, நீங்கள் என்ன சிங்களவனா முஸ்லீமா

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் அழிவு எனக்கு மட்டுமல்ல எத்தனோயோ தமிழர்களுக்கு மகிழ்சியையே தந்தது . புலிகள் என்ற வட்டத்திற்குள் நின்று பார்த்தால் புலிகள் தான் தமிழர்,புலிகள் தான் உலகமாகவும் தெரியும் .

நாங்கள் தேடுவது எமது இனத்திற்கான இருப்பு .நீங்கள் தேடுவது புலிகளுக்கான அங்கீகாரம் .சர்வதேசம் புலிகளை எப்போ தடை செய்ய தொடங்கியதோ அப்போதே புலிகளின் கதை முடிந்துவிட்டது .

வேறு எங்கும் போகவேண்டாம்.மனித உரிமைகள் அமைப்பு அறிக்கைகள். U.N.அறிக்கைகளை வாசியுங்கள்(விளங்கினால் ) நாங்கள் எங்கே நிற்கின்றோம் என்று விளங்கும் .

புலிகள் வன்னிக்கு இடம் பெயர்ந்த பின் யாழ்பாணம் ஒன்றும் அழிந்து போகவுமில்லை அங்கிருக்கும் மக்கள் அதுபற்றி பெரிதாக கவலைபடவுமில்லை .

புலிகள் என்ற வட்டத்திற்குள் நின்று வெளியில் வராமல் தமிழனுக்கு விடிவு இல்லை என்று தேசிய கூட்டமைப்பிற்கு நன்கு தெரியும் .

புலிகள் போராடினதும் உண்மை ,உயிர் தியாகம் செய்ததும் உண்மை உலக அரசியல் தெரியாததும் உண்மை.

அதையெல்லாம் கடந்து எமக்கான தீர்வு அவசியம் ,அங்கேயே நின்று அதே இடத்தில் தொங்கிக்கொண்டிருக்கமுடியாது .

ஊர்வலம் போனது ,கொடி பிடித்தது 80 களிலேயே நாங்கள் செய்ய தொடங்கிவிட்டோம் .எத்தனை ஊர்வலம் HYDE PARK ,LANGASTER GATE இல் செய்தோம்.தனிய எமது போராட்டத்திற்கு மட்டுமல்ல P.L.O, A.N.C ஊர்வலங்களும் போன ஆட்கள் நாங்கள் .

முன்பு யாழ்களத்தில் அஜீவன் என்று ஒருவர் இருந்தார். அவர் தன்னைப் புளோட் என்று அறிமுகம் செய்தபோதும், அவரது கருத்துக்கள் இயக்கத்தைச் சாடாமல் பார்த்துக் கொண்டார். தன்னுடைய மறுபக்கத்தினை யாழில் காட்டாமல் தவிர்த்துக் கொண்டார். அவ்வாறே, வசம்பு என்பவரும், கடுமையான பாணியிலான புலிகள் விமர்சனத்தைத் தவிர்த்துக் கொண்டார். ஆயினும் தங்காள் சாராத ஒரு பெயராக எனனுமொரு பெயரில் புலிகளை விமர்சிக்க உபயோகித்தனர். அதைக் கண்டு பிடித்ததும், அப்பெயரை உபயோகிப்பது நின்று விட்டது. ( அந்தப் பெயர் மறந்து விட்டது. பதிவுகளைத் தேடின் கிடைக்கக்கூடும்) ஆனால் இந்த நபர் தன்னை அஜீவனின் நண்பனாக அறிமுகம் செய்திருந்தார் முன்பொரு தடவை. யாழ்கள உறவுகளைச் சந்தித்தபோது தானும் போனதாக எழுதிய கருத்துக்கள் படித்த ஞாபகம். அப்படங்களைத் தேடிக்க கொண்டிருக்கின்றேன். நிற்க, இவ்வாறு எங்களிடம் நல்ல முகத்தினைக் காட்டிய அஜீவன் முள்ளிவாய்கால் அவலம் நடந்து கொண்டிருந்தபோது, தன்னுடைய குணத்தினைக் காட்டினார். வானொலியூடாக அங்கே மக்களின் அழிவுகளை நியாயம் செய்து கொண்டிருந்தார். மக்கள் கொல்லப்படுவது தவறில்லை என்று அவர் இலகுவாகவும், எவ்வித இரக்க சிந்தனையின்றியும் தன்னுடைய வானொலியில் கதைத்துக் கொண்டிருந்தார். வேறு நாசகர வேலைகளும் அவர் செய்திருக்கக்கூடும். அவன் பிற்பாடு அவர் சிறிலஙகா சென்று வந்திருந்ததை அவரது பேஸ்புக் படங்கள் காட்டின. என்னிடம் கூட சில உதவிகள் கேட்டார். செய்யாது விட்டதற்கு இப்போது நினைத்து சந்தோசப்படுகின்றேன்.இது ஏன் எனில் யாழ்களத்தில் நல்லவர்கள் போல நடித்து, மக்களைக் குழப்புகின்ற, கோபப்பபடுத்தி வேற திசைக்குள் செல்ல வைக்கின்ற இப்படியான நாச சக்திகள் பற்றி நாங்கள் அவதானமாகவே இருக்க வேண்டும். தங்களின் புத்தியினைச் சந்தர்ப்பம் வரும்போது இவர்கள் காட்டத்தான் செய்வார்கள்.தமிழீழம் இலக்கு என்றால் புலிகளை மட்டுமே ஏன் விமர்சனம் செய்ய வேண்டும். புலிகள் தவிர்ந்த தமிழழீழத்துக்கான பாதையை இவரகள் செய்ய முடியாதா என்ன? இவர்கள் ஒரு வித மனநோயாளர்கள். நாங்கள் அவர்களோடு புரிந்துணர்வு கொள்ளலாம் எனச் சிந்திக்கின்ற ஒவ்வொரு தருணங்களிலும் தங்களின் முகத்தினைக் காட்டுhர்கள். எனவே இப்படியான நபர்கள் மீது அவதானமாக இருப்போம். நாங்கள் காட்டுகின்ற நட்பு என்பது இவர்கள் எங்களின் மீதான குரோதத்தை இவர்கள் வெளிப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களை ஏற்படு;துகின்ற நிகழ்வாகும்.

Edited by தூயவன்

காதல் நான் திரும்ப திரும்ப பல விடயங்கள் இது பற்றி எழுதிவிட்டேன் .பொதுமக்கள் இறந்தது பற்றி எழுதியிருந்தீர்கள் .அது பற்றி கவலைபடாமலா திரும்ப யாழில் வந்து கொட்டித்தீர்கின்றேன் .

நான் ,எனது குடும்பம் என்று எல்லா தனக்கான அலுவல்களையும் முடித்துவிட்டு நடந்தது ,நடப்பது எதுவும் தெரியாமல் தேசியம் கொட்டுவது ஒன்று .

முழு நேர அரசியலில் உண்மையான ஈடுபாட்டுடன் தமிழர்களுகான விடுதலையில் ஈடுபடுவது ஒன்று .

எம்மவர் பலர் முதலாவது நிலைப்பாடுதான்.இன்று லண்டனில் இருந்து பராபிரபாவுடனா [பேட்டி கனேடிய வானொலியில் கேட்டேன் .அவர் புள்ளிவிபரத்துடன் பல விடயங்கள் சொன்னார் .ஒரு அமைப்பாக ஒன்று சேர்ந்து எதுவும் செய்யமுடியாத ஒரு நிலையில் தான் நாம் இருக்கின்றோம் .வானொலி ,பத்திரிகை ,இணையங்களில் வந்து நாம் கதைப்பது எழுதுவது ஒன்று நடைமுறை வேறொன்று .இதுவே தொடர்கதையாகிவிட்டது .ஒரு வேலைத்திட்டம் கூட எம்மால் உருப்படியாக செய்ய முடியவில்லை .சிறிலங்கா பொருட்கள் புறக்கணிப்பு போன்றவை .

நான் கடந்த ஞாயிறு கூட ஒரு கூட்டத்திற்கு போயிருந்தேன் .பெரும்பாலும் இளையவர்கள் தான் வந்திருந்தார்கள் .சிலர் முன்னாள் புலி ஆதரவாளர்கள் .நடப்பது எதுவுமே எமக்கு அனுகூலமாக இல்லை என்பதுதான் பலரது நிலைப்பாடும் .புலிகள் ஆதிக்கத்தில் இருக்கும் போது ஊடக பலத்தை வைத்து எப்படி பொய்யில் எல்லோரையும் உறைய வைத்திருந்தார்களோ அதையே இன்றும் தொடர்கின்றார்கள் .

"உலக நாடுகள் புரியவில்லை " என்று ஒரு வசனம் எழுதியதில் இருந்து எவ்வளவு தூரம் புலிகளது பிரச்சாரத்தை நீங்களும் நம்புகின்றீர்கள் என்பது விளங்குகின்றது .உலக நாடுகளுக்கு எல்லாமே தெரியும் .

போன சனி C.M.R கனேடிய வானொலியில் 11.30 மணிக்கு நடந்த அரசியல் ஆய்வு கேட்டுப்பாருங்கள் அவர் பல உண்மைகளை சொல்லி இருந்தார் .

தமிழ் நாட்டு அரசியல் போல்(வெறும் உணர்சிகளுடன் விளையாடுவது ) நாமும் அரசியல் செய்ய புறப்பட்டால் எமது இனத்திற்கு விடுதலை என்றுமே இல்லை

யாழில் முதல் முதலாக என் கருத்துக்கு பதிலளித்திருக்கிறீர்கள். எனவே உங்கள் பதிலுக்கு நன்றி.

"உலக நாடுகள் புரியவில்லை " என்று ஒரு வசனம் எழுதியதில் இருந்து எவ்வளவு தூரம் புலிகளது பிரச்சாரத்தை நீங்களும் நம்புகின்றீர்கள் என்பது விளங்குகின்றது .உலக நாடுகளுக்கு எல்லாமே தெரியும் .

உலக நாடுகளுக்கு எல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி நடித்தாலும் புலிகளின் தற்கொலைப்படை பற்றி சரியான தெளிவை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பது என் கருத்து.

ஒசாமா பின்லேடன் போன்ற உலகின் மிகபெரும் பயங்கரவாதிகளை பார்த்த உலகநாடுகள் தற்கொலைப்படை வைத்திருப்பவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக எண்ணத்தொடங்கி விட்டது.

அதனுடன் அதற்கேற்ற அரசாங்கத்தின் பிரச்சாரமும் சேர்ந்து தான் புலிகள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு தடை செய்யப்பட காரணமாக அமைந்தது.

ஆனால் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. எம்மக்களுக்காக போராட வெளிக்கிட்ட ஒரு அமைப்பு. அவர்கள் போராட்ட முறையில் சில குறைகள் இருப்பினும் அவற்றை தவிர்த்து அவர்களை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

இது அவர்கள் பிரச்சாரத்தை வைத்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. அவர்கள் காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை வைத்து எடுக்கப்பட்ட முடிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.