Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Malta ஒரு புதிய அனுபவம் - 08

Featured Replies

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் பகலவன்.

பார்த்தால் அனுபவஸ்தர் போல் இருக்கு. ஆனால் உங்கள்செய்கை ("வழக்கமான குடிகாரர் போலவே அங்கே இங்கே கதைச்சு கடைசியாக அவளது குடும்ப விசயத்துக்கு வந்தேன்.") அப்படித் தெரியவில்லையே. இந்த விஷயங்களை அந்த நேரங்களில் கதைக்கலாமோ? . :lol:

  • Replies 93
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பகலவன்.. மசாலா கலந்து சுவையாகக் கொண்டு செல்கிறீர்கள்.. :D தொடருங்கள்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

ரதி

மோல்டா என்ன மோல்டா அங்கு எல்லாம் மனிதர்கள் போவார்களா :rolleyes: ...அடுத்த தடவை மனைவியோடு விடுமுறை போகும் போது இஸ்தான்புல்[istanbul] போங்கள் மகிழ்ச்சியோடு பொழுதைக் கழிக்க நல்லதொரு இடம் :D :lol:

[size=5]நீங்களும் இஸ்தான்புல் குறித்த ஒரு திரியினைத் தொடங்கலாமே?[/size]

[size=5]போகவிரும்புபவர்களுக்கு உதவும். [/size]

[size=5]நேரம் கிடைத்தால், ஆப்ரிக்கா பக்கத்தில் உள்ள ஸ்பெயின் காலனி ஆகிய Tenerife பயணம் குறித்து எழுதுவேன்... பார்ப்போம்.[/size]

  • தொடங்கியவர்

வித்தியாசமான பயணக்கதை

வாழ்த்துகள் பகலவன்

தொடருங்கள் :D

நன்றி வாத்தியார்.

தனியச் சோத்தோட கறி எண்டு மட்டுமில்லாம, ஊறுகாய், மோர் மிளகாயோட சாப்பிடுற மாதிரி இருக்கு!

எனக்கு வாழ்க்கையில ஒரே ஒரு கவலை தான்!

விடுதியில் இருந்த காலத்தில், வியாழக்கிழமை இரவு நேரத்தில், புட்டும் சம்பலும், கோழிக்கூடு வாழைப்பழமும் தருவார்கள்!

இன்னும் தேடுகிறேன்! அந்தக் கொம்பினேசன் வந்து அமையுதில்லை!

பயணத்தொடர் நன்றாகப் போகின்றது! தொடருங்கள், பகலவன்!

எல்லாத்தையும் சேர்த்து சாப்பிடும்போது வரும் ருசி என்றைக்கும் நாவில் ஒட்டி இருக்கும் புங்கையூரான். நன்றிகள் உங்கள் கருத்துக்கு.

அதெப்படியப்பா

அண்ணன் தம்பிகளலெல்லாம் இந்த விசயத்தில் மட்டும்

அப்படீடீடீடீடீடீடீடீடீயே இருக்கின்றோம்.

ரத்தம்

ரத்த உறவு... :wub:

உணர்வுகளால் ஒற்றுமையாக இருப்பதால் தான் அண்ணன் - தம்பி. நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு.

தெளிவு படுத்தியமைக்கு நன்றி பகலவன்!

உங்கள் தொடரின் மூன்றாம் பகுதியில் இணைத்த முதலாவது, மூன்றாவது படங்கள் மிக நன்றாக உள்ளது, தொடருங்கள்... :)

நன்றிகள் குட்டி உங்கள் பதிவுக்கு.

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் பகலவன்.

பார்த்தால் அனுபவஸ்தர் போல் இருக்கு. ஆனால் உங்கள்செய்கை ("வழக்கமான குடிகாரர் போலவே அங்கே இங்கே கதைச்சு கடைசியாக அவளது குடும்ப விசயத்துக்கு வந்தேன்.") அப்படித் தெரியவில்லையே. இந்த விஷயங்களை அந்த நேரங்களில் கதைக்கலாமோ? . :lol:

கதைக்க கூடாது என்று தான் மூளை சொல்லும், மனசு சில நேரம் கேட்க மறுக்கும். மூளைக்கும் மனசுக்குமான போராட்டம் தானே போதை.

நன்றி ஈஸ்.

பகலவன்.. மசாலா கலந்து சுவையாகக் கொண்டு செல்கிறீர்கள்.. :D தொடருங்கள்..! :)

நன்றி இசை. மாசலா சுவைக்கு மட்டும் இல்லை மணத்துக்கும் தான். அது மட்டுமல்ல இசை இப்பத்தைய பெண்கள் சமையலில் குறை நீக்கியாகவும் மசாலாவை அள்ளி தூவுகிறார்கள் என்பது நான் சொல்லி தான் நீங்கள் தெரிய வேண்டும் என்பதில்லையே. :lol:

நன்றி இசை உங்கள் கருத்துக்கு.

நன்றி நாதமுனி பதிவிட்டமைக்கு. உங்கள் பதிவுகள் விறுவிறுப்பானவை. அந்த எழுத்துநடையில் உங்கள் பயண அனுபவத்தை சுவைக்க காத்திருக்கிறேன்.

.

பயணக்கட்டுரை நன்றாகப் போகிறது பகலவன். :)

இடத்தப் பார்க்க கொழும்பு... பாண்டிச்சேரி.. மாதிரி இருக்கிறது.

ஐரோப்பாவில் இருப்பவர்கள் குடுத்து வைத்தவர்கள். பல நாடுகள் பக்கத்தில் இருக்கின்றன. நம்முடைய அவுஸ் எல்லைத்தாண்டவே 3.30 - 4.30 மணித்தியாளம் எடுக்கும். கிட்ட உள்ள Bali 6.30 மணித்தியாளம்.

  • தொடங்கியவர்

பயணம் 04

அது ஒரு Double Size Queen bed கொண்ட படுக்கை அறை.

இரவு வெக்கையை தாங்கவும், குளிர்மை உணர்வுகளை தூண்ட கூடியதும் என்பதால் சாப்பிட போகும்முன்னே A / C இனை 15 செல்சியஸ் இல் விட்டிவிட்டு சென்றிருந்தேன்.

img1068b.jpg

அறைக்குள் வந்ததும், மனைவி படார் என்று கதவை சாத்திய போதே உணர்ந்தேன், இன்றைக்கு சரிபட்டு வராது என்று.

மகனோ ஓடி சென்று, தொலைகாடிசியில் ஓடிய நடாலின் ஓபன் டென்னிஸ் பார்க்க உட்கார்ந்து விட்டான். டிவி சத்தத்தை கொஞ்சம் கூட்டி விட்டே பார்த்தான்.

அது கொஞ்சம் எனக்கு வசதியாக போய்விட்டது. (என்ன அடி விழுந்தாலும் வெளியிலே கேட்காது :lol:)

மனைவியை சாமாளிக்க, "இஞ்சே பாரும் நான் அப்படி mean பண்ணி சொல்லவில்லை "

கையை விடுங்க என்னோட பேச வேண்டாம். (எல்லா பெண்களும் பயன்படுத்தும் மௌன ஆயுதம் )

வேணுமென்றால் நீர் இரண்டு வார்த்தை திட்டும் பேசாமல் மட்டும் இருக்க வேண்டாம் இது நான். (ஆண்களின் வீரம் எல்லாம் பகலில் தான்)

இல்லை உங்களை பேச நான் யார். உங்களை என்னால் பேசவும் முடியாது. அந்த அளவுக்கு உங்கள் மேல் நான் அன்பு வைச்சிருக்கிறேன், அதில் பாதி கூட நீங்கள் என் மேல் வைத்திருப்பதில்லை. (பெண்களின் இரண்டாவது ஆயுதம் பாச ஆயுதம்)

இல்லையம்மா உங்களைபோல போல எனக்கு அன்பை காட்ட தெரியாதே ஒழிய, உங்களைவிட எனக்கு தான் உங்கள் மேல அன்பு அதிகம். (இது உண்மையிலே நான் பேசினேனா அல்லது உள்ளே போன வைன் பேசினதோ தெரியவில்லை)

என்னது உங்களை போலவா. எத்தனை பேரிடம் இப்படி அன்பு வைத்திருக்கிறீங்கள் .(இது கோப ஆயுதம்)

இல்லையடி, ஒரு மரியாதைக்கு நீங்கள் என்றால் அது பன்மை என்று அர்த்தமா.

அது தானே பார்த்தேன் எனக்கும் உங்களுக்கும் நடுவிலே வேற யாரவது வர நான் விட்டுவிடுவேனா

என்று சொல்லி முடிக்கவும் சினிமா படம் போலவே என் மகன் வந்து குதித்தான் எங்கள் இருவருக்கும் நடுவில். அம்மா அப்பா என்ன குசுகுசுக்கிறீங்கள் என்றவாறே.

பிறகென்ன அன்றைய இரவு அர்த்தனாதீஸ்வராக (சிவன் பாதி உமை பாதி ) கழிய வேண்டியது சோமாஸ்கந்தனாக (சிவன் -பால முருகன் -பார்வதியாக) கழிந்தது.

அடுத்த நாள் காலை, Malta வின் தலைநகரான வலேட்டா (Valletta ) நகரத்துக்கு போவதாக திட்டமிட்டிருந்தோம். அதிகாலையிலேயே மனைவியின் அன்புத்தொல்லையால் ஹோட்டல் GYM இற்கு போக வேண்டியதாகிவிட்டது. அவளும் கூட வந்தாள் முப்பது நிமிடத்தில் மகன் எழும்பி தேடுவான் என்று அறைக்கு சென்றுவிட்டாள். அப்புறம் ஒரு sauna , ஒருஇன்ப குளியல் புத்துணர்ச்சியாக தான் இருந்தது.

காலை உணவை ஹோட்டலில் ஒரு பிடிபிடித்தோம். ரோஸ்ட் பண்ணிய பாணும், முட்டை, சீஸ், பழங்கள் ஒரு அருமையான தேநீர் நன்றாக தான் இருந்தது. காலை ஒன்பது முப்பது வரை திறந்திருக்க கூடிய அந்த breakfast buffet இல் எட்டரைக்கு உள்நுழைந்து ஆறுதலாக அந்த நாளை திட்டமிட்டவாறே சாப்பாடை முடித்தோம்.

வலாட்டா ஒரு அழகான துறைமுகம், Malta இன் இன்னொரு வடிவத்தை அங்கே பார்க்கலாம். நெருக்கமான வீதிகள், இந்தியா போலவே தொப்பையுடன் காவல் துறை.

img0558uc.jpg

img1118ut.jpg

போகும் வழியில் ஒரு அருமையான குடா (bay ). ஆழமற்ற கடற்பரப்பு, முதலில் மனைவியின் பயத்தை போக்க ஒரு pedal boat வாடகைக்கு எடுத்து, Life ஜாக்கெட் போட்டு ஒருமணி நேரம் ஓடினோம்.

நானும் என் மனைவியும் மிதிக்க மகன் பின்னால் இருந்து வந்தான், நான்கு பேர் மட்டுமே பயணிக்க ஓடிய அந்த படகு லைப் ஜாக்கெட்டுடன் சேர்த்து ஒரு மணி நேரத்துக்கு 8 euro . ஆக குறைந்தது ஒருவருக்காவது நீந்த தெரிந்திருக்க வேண்டும்.

அவர்கள் வரையறுத்த ஒரு கடற்பகுதிக்கு உள்ளேயே ஓட வேண்டும். இருவரும் சேர்ந்து சமாந்திரமாக மிதிக்க ஒருவர் சுக்கான் (வழி காட்டியை ) திருப்ப வேண்டும். அது எங்கள் அழகான வாழ்கையை படகின் வடிவமாகவே எங்களுக்கு ஒரே நேரத்தில் தோணியது. கட்டி பிடித்து அன்பை பரிமாறி கொண்டோம். மகனும் வந்து ஒட்டி கொண்டான்.

img0557aj.jpg

பின்னர் ஒரு மணி நேரம் Self Driving Boat எடுத்து கடல்நடுவே சென்று காதல் மொழி பேசி மகிழ்ந்தோம். அங்கே சில பேர் deep diving போய் கடல் உள்ளழகை பார்த்து ரசித்தார்கள். எனக்கும் போக ஆசையாக இருந்தது மனைவி தடுத்துவிட்டாள்.

img0561tc.jpg

Malta Experience என்ற வழியே போனால், நெருக்கமான குறுக்கு சந்துகள், தரிப்பிடத்துக்கு அலைய வேண்டி இருந்தது. அதையும் மீறி போன போது, இரண்டாம் உலகமகா யுத்தத்தில் பயன்படுத்திய கோட்டையை சென்றடைந்தோம். கடலுடன் ஒட்டிய கோட்டை, நிறைய சுற்றுலா பயணிகள் பட்ட பிடித்து கொண்டிருந்தார்கள்.

img0564mn.jpg

img0567lr.jpg

குதிரை வண்டிக்காரன், பார்க்க பாவமாக இருந்தது (ஒரு வெள்ளை காரான் எங்களிடம் கெஞ்சினால் உங்களுக்கும் அப்படி தோண வாய்ப்பிருக்கும்), வண்டி சவாரிக்கு கெஞ்சி கொண்டிருந்தான், மகனுக்காக அதில் ஒரு சவாரி வந்தோம்.

img0574u.jpg

அழகான கடற்கரையை ஒட்டிய சாலையில் பயணம், ஒவ்வொன்றையும் விலாவரியாக விபரித்தான், துறைமுகமும், அதை ஒட்டிய Malta கப்பற்படையின் கப்பலையும் பார்க்க கூடியதாக இருந்தது.

img0584b.jpg

இந்த சின்ன இடமே ஒரு நாடு, அவங்களுக்கு ஒரு கப்பற்படை. நாங்கள் இந்தநாட்டைபோல பத்து மடங்காவது பெருசாக இருப்பம், ஒரு நாடு இல்லையே என்று தான் மனசுக்கு தோணியது. (எல்லாம் வெள்ளைகார அரசியல் )

img0589d.jpg

முடிவில் Malta அரண்மனைக்கு அருகில் கொண்டு வந்து விட்டான். நன்றி சொல்லி இறங்கி கொண்டோம். 30 euro வாங்கி கொண்டான் கூலியாக.

img0585w.jpg

ஒரு வெள்ளைக்காரன் எங்களை வண்டியில் வைத்து அவன் குதிரை ஒட்டி வந்து அரண்மனையில் இறக்கிவிட்டது, ஏதோ என்னை அரசனாகவும் மனைவியை மகாராணியாகவும் மகனை இளவரசனாகவுமே எனக்கு எண்ண தோணியது.

img0579py.jpg

அரண்மனை காவலர்கள் ஒரு இடத்தில் நிற்காமல், சூழ நின்று படம் எடுக்கும் சுற்றுலா பயணிகளை கூட பொருட்படுத்தாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார்கள் ஒரு நிமிட நேரம் கூட சளைக்காமல்.

அவர்களுக்கு அலுப்பு தட்டாதோ. எனது மகன் அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

பயணம் தொடரும்...

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன் நன்றாக பயணக்கட்டுரையை எழுதுகிறீர்கள்..

வாசிப்பவர்கள்தான் பாவம், :D

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கட்டுரை என்று நினைத்து விட்டு இதுவரை நாளும் இந்தப் பக்கம் வர இல்லை.....இன்று தான் இதற்குள் வந்தேன் படங்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது பகலவன்..ஏற்கனவே அரன்மனைப் படம் பார்த்திருக்கிறேன்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன், உங்கள் பயணக் கட்டுரையை வாசித்த பிறகு, முதன் முதலாகப் பறவைகள் மீது பொறாமைப் படுகின்றேன்!

தொடருங்கள்!

[size=4]படங்களுடன் நகைச்சுவையும் கலந்து எழுதும் கட்டுரையின் எழுத்து நடையும் நன்றாக உள்ளது பகலவன், தொடருங்கள்... பகுதி நான்கில் இணைத்த முதல் படம், ஊரில் உள்ள நந்தியாவட்டைப் பூமரம் மாதிரி உள்ளது...[/size]

தொடர்ந்து எழுதுங்கள் ,வாசிக்க நன்றாக இருக்கு .எந்த புது இடமென்றாலும் எனக்கு சுத்தி பார்க்க ஆசை.

  • தொடங்கியவர்

.

பயணக்கட்டுரை நன்றாகப் போகிறது பகலவன். :)

இடத்தப் பார்க்க கொழும்பு... பாண்டிச்சேரி.. மாதிரி இருக்கிறது.

ஐரோப்பாவில் இருப்பவர்கள் குடுத்து வைத்தவர்கள். பல நாடுகள் பக்கத்தில் இருக்கின்றன. நம்முடைய அவுஸ் எல்லைத்தாண்டவே 3.30 - 4.30 மணித்தியாளம் எடுக்கும். கிட்ட உள்ள Bali 6.30 மணித்தியாளம்.

நன்றி ஈசன். இந்த இடங்கள் கொச்சிக்கடை, புதுக்கடை பிரதேசங்களை ஞாபகபடுத்தியது. உண்மைதான் ஐரோப்பாவில் வாழ்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான், பல்வேறு இனங்கள், கலாச்சாரங்கள், வித்தியாசமான இடங்களை குறுகிய தூரத்திற்குள் கொண்டுள்ள ஒரு கண்டம். வெய்யில் குளிர் இரண்டும் ஒரே நேரத்தில் கிடைக்கும்.

பகலவன் நன்றாக பயணக்கட்டுரையை எழுதுகிறீர்கள்..

வாசிப்பவர்கள்தான் பாவம், :D

நன்றி சகாரா அக்கா, நன்றாக தான் அனுபவப்பட்டிருக்கிறீங்கள்.

அரசியல் கட்டுரை என்று நினைத்து விட்டு இதுவரை நாளும் இந்தப் பக்கம் வர இல்லை.....இன்று தான் இதற்குள் வந்தேன் படங்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது பகலவன்..ஏற்கனவே அரன்மனைப் படம் பார்த்திருக்கிறேன்.

நல்லது யாயினி. நன்றி உங்கள் வரவிற்கு.

நல்லா இருக்கு.. :D

இப்படி சொல்லுவது தான் புது ரெண்டோ. இதுவும் நல்லா தான் இருக்கு :D

பகலவன், உங்கள் பயணக் கட்டுரையை வாசித்த பிறகு, முதன் முதலாகப் பறவைகள் மீது பொறாமைப் படுகின்றேன்!

தொடருங்கள்!

நன்றி உங்கள் கருத்துக்கு புங்கையூரான். உங்கள் இன்னொரு பதிவில் உங்கள் இளமைகால, இன்னொரு முக அனுபவத்தையும் நிறைவையும் சொல்லி இருந்தீர்கள். நாங்களும் புலம்பெயர் வாழ்கையை கொஞ்சமாவது மகிழ்வாக கழிக்க எண்ணுகிறோம்.

எதுவாக இருந்தாலும் சொந்த ஊரைப்போல வராது. எனக்கும் எங்கள் ஊர் நோக்கி பறக்கும் பறவைகளில் பொறாமை உண்டு.

[size=4]படங்களுடன் நகைச்சுவையும் கலந்து எழுதும் கட்டுரையின் எழுத்து நடையும் நன்றாக உள்ளது பகலவன், தொடருங்கள்... பகுதி நான்கில் இணைத்த முதல் படம், ஊரில் உள்ள நந்தியாவட்டைப் பூமரம் மாதிரி உள்ளது...[/size]

உண்மைதான். ஆனால் இந்த பூ நந்தியாவட்டை அல்ல. ஒரு வகை அலரி பூ என்று நினைக்கிறன். நன்றி உங்கள் கருத்துக்கு.

தொடர்ந்து எழுதுங்கள் ,வாசிக்க நன்றாக இருக்கு .எந்த புது இடமென்றாலும் எனக்கு சுத்தி பார்க்க ஆசை.

நன்றி அர்ஜுன் அண்ணா. புது இடங்கள் புதுமையான அனுபவங்கள் எங்கள் மன அழுத்தங்களை பெரிதும் குறைக்க உதவும். உங்கள் ஐரோப்பிய விஜயத்தின் போது நோர்வேபக்கமும் வாருங்கள். ச்டவான்கர், பேர்கன் போன்ற அழகிய இடங்கள் பார்பதற்கு மன மகிழ்வை தரும். கோ படத்தில் வரும் பாடல்கள் நோர்வே அழகை காட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சில பேர் deep diving போய் கடல் உள்ளழகை பார்த்து ரசித்தார்கள். எனக்கும் போக ஆசையாக இருந்தது மனைவி தடுத்துவிட்டாள்.

அருமையான சந்தர்ப்பத்தை விட்டுவிட்டீர்கள் உங்களுக்கு நீரடிநீச்சல் தெரியுமா ? அதில் ஒருவித சுகமும் புதுமையான அனுபவங்களும் கிடைக்கும் . :rolleyes:

இந்த சின்ன இடமே ஒரு நாடு, அவங்களுக்கு ஒரு கப்பற்படை. நாங்கள் இந்தநாட்டைபோல பத்து மடங்காவது பெருசாக இருப்பம், ஒரு நாடு இல்லையே என்று தான் மனசுக்கு தோணியது. (எல்லாம் வெள்ளைகார அரசியல் )

இதுகளை பார்க்கும்போதுதான் எங்களுக்கு ஒருநாடு இல்லையே என்ற ஏக்கம் வரும் அதில் உங்கள் தேசியப்பற்றை காண்கின்றேன் . :)

ஒரு வெள்ளைக்காரன் எங்களை வண்டியில் வைத்து அவன் குதிரை ஒட்டி வந்து அரண்மனையில் இறக்கிவிட்டது, ஏதோ என்னை அரசனாகவும் மனைவியை மகாராணியாகவும் மகனை இளவரசனாகவுமே எனக்கு எண்ண தோணியது.

நீங்களும் அரசர்தான் . :D

படத்தில் உள்ள பூ மரம் என்ன தேமா பூமரமா ? உரில் இந்தமாதிரி பூமரத்தை தேமா என்று சிலர் கூறுவார்கள் சிலர் பாதிரிமுல்லை எனக்கூறுவார்கள் .

நன்றாக இருக்கிறது உங்கள் பயண கட்டுரை. மிகுதியை படிக்க ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்

அழகான படங்களுடன் ஆரவாரமான விவரணை

தொடருங்கள் பகலவன்

  • தொடங்கியவர்

அருமையான சந்தர்ப்பத்தை விட்டுவிட்டீர்கள் உங்களுக்கு நீரடிநீச்சல் தெரியுமா ? அதில் ஒருவித சுகமும் புதுமையான அனுபவங்களும் கிடைக்கும் . :rolleyes:

இதுகளை பார்க்கும்போதுதான் எங்களுக்கு ஒருநாடு இல்லையே என்ற ஏக்கம் வரும் அதில் உங்கள் தேசியப்பற்றை காண்கின்றேன் . :)

நீங்களும் அரசர்தான் . :D

படத்தில் உள்ள பூ மரம் என்ன தேமா பூமரமா ? உரில் இந்தமாதிரி பூமரத்தை தேமா என்று சிலர் கூறுவார்கள் சிலர் பாதிரிமுல்லை எனக்கூறுவார்கள் .

எனக்கு ஓரளவு நீராடி நீச்சல் தெரியும். மனைவி நீங்கள் தனியாக வரும்போது பண்ணுங்கள். எங்களை வைத்து கொண்டு வேண்டாம். நீங்கள் வரும்வரை கரையில் பயத்துடன் தான் காத்திருக்க வேண்டும் என்று தடுத்து விட்டாள். பார்ப்போம் இன்னொரு சந்தர்ப்பம் வராமலா போகும்.

நன்றாக இருக்கிறது உங்கள் பயண கட்டுரை. மிகுதியை படிக்க ஆவல்.

நன்றி குளகாட்டான் உங்கள் வருகைக்கும் பதிவிற்கும்.

அழகான படங்களுடன் ஆரவாரமான விவரணை

தொடருங்கள் பகலவன்

நன்றி வாத்தியார் உங்களின் ஊக்கத்திற்கு.

  • தொடங்கியவர்

பயணம் 05

Malta நாட்டின் தலைநகரான வலாட்டவின் வீதிகளில் நடப்பதே தனி சுகம்.

இந்தியா திநகர் , கொழும்பு புறக்கோட்டையில் நடப்பது போல இருந்தது. தெரு வழியே கடைகள். கூப்பிட்டு கூப்பிட்டு விற்கும் வியாபாரிகள், வர்ணமயமான கோடைகால உடைகளுடன் வெள்ளைகார பெண்கள், அங்கும் இங்கும் ஓடித்திரியும் சிறார்கள் என்று ஒரு களியாட்டத்துக்கு வந்தது போல இருந்தது.

img0584wb.jpg

அரண்மனைக்கு முன்னால் குழாய்களில் இருந்து பாயும் நீரில் வெள்ளைகார சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தார்கள். எனது மகனும் அவர்களுடன் விளையாட அனுமதி கேட்டு எங்கள் முன்னால் காத்திருந்தான். எனக்கும் மனைவிக்கும் இந்த சூழலில் கொஞ்சம் தனிமை தேவைபட்டது. அனுமதியை வாரி வழங்கினோம். கண் முன்னால் தான் விளையாட வேண்டும் முப்பது நிமிடங்கள் தான் நேர எல்லை இது என் மகனுக்கான நிபந்தனைகள்.

ஓடி சென்ற மகனை பார்த்தவாறே என் கைகளை பிடித்த வண்ணம் என் தோளிலே சாய்ந்தால் என் காதல் மனைவி.

"மன்னிச்சு கொள்ளுங்கோ நான் நேற்று இரவு உங்களுடன் அப்படி நடந்திருக்க கூடாது " என் குடும்பத்தை பற்றி கதைச்சதால் உடனே கோபம் வந்துவிட்டது . இனிமேலே அப்படி வராமல் பார்த்து கொள்ளுகிறேன்"

எனக்கு புரிந்தது இது காதல் பண்ணும் நேரம்.

"ச்சே நான் அதை அப்பவே மறந்துவிட்டேன் (உண்மையா மறக்கவில்லை - ஒரு காதல் பொய்), நானும் அப்படி சொல்லி இருக்க கூடாது நீர் பகிடியாக எடுப்பீர் என்று நினைத்தது என் தப்பு தான் " ( ஆண்களின் அதே விட்டு கொடுக்காத நியாயம் )

"உங்கள் தோளில் சாய்ந்து´காதல் மொழி பேச வேண்டும் என்று எவ்வளவு நாள் காத்திருந்தேன் தெரியுமா.?" (அவளும் விடாமல் பொய் சொல்லுகிறாள் - போன வாரம் தான் ஒஸ்லோ கடற்கரையில் இதே வசனம் பேசினாள்)

"ம்ம் என்று அவளை என்னுடன் அணைத்து கொண்டேன்"

எல்லா காதல் மனைவிகளும் சொல்லும் அதே வசனத்தை எதிர் பார்த்தேன்.

"உங்களை கட்ட நான் கொடுத்து வைச்சிருக்க வேணும்" - (சொல்லியே விட்டாள்)

அவளது உச்சியிலே முத்தமிட ஆரம்பித்து ... (மிச்சம் எல்லாம் தணிக்கை )

சரி உனக்கு ஏதாவது வாங்கி தரவேண்டும் வா கடைக்கு போகலாம் என்று கையை பிடித்து எழுப்பினேன்.

img0586ng.jpg

மகனையும் அழைத்து கொண்டு நாங்கள் சென்றது ஒரு Bata கடை.நான் இலங்கைக்கு பிறகு புலம்பெயர் நாடொன்றில் காணும் முதலாவது Bata கடை.

பெரிய கொட்டை எழுத்தில் Bata என்ற பெயரை காணும் போது யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதி தான் ஞாபகத்துக்கு வந்தது.

ஈ கே பேரம்பலம் அண்ட் சான்ஸ் கடையிலே அப்பா ஒரு முக்கால் சைக்கிள் ஈஸ்டேர்ன் என்று நினைக்கிறன் வாங்கி தந்துவிட்டு பக்கத்தில் இருந்த bata கடையில் அன்றைய காலத்தில் யாழ்பாணத்தில் பிரபலமான சோலாபூரி செருப்பு வாங்கி தந்தார்.

img0590u.jpg

கடையுள் நுழைந்த போது இரு பெண் சிற்பங்கள் வரவேற்றன. மனைவியை தேர்வு செய்ய சொல்லிவிட்டு ஒரு பெண் சிற்பத்துடன் பேச்சு கொடுத்தேன். (விரைவாக மனைவியை தேர்வு செய்ய வைக்கும் ஒரு குறுக்கு வழி). ஐந்தே நிமிடத்தில் இரண்டு சோடிகளுடன் வந்தாள்.

"இதிலை ஒன்றை எடுங்கோ"

மனைவிக்கு எடுப்பமான ஒன்றை தெரிவு செய்தேன்.

"இதை தான் தனப்பா நானும் அதிகமாக விரும்பினேன். எனக்கு தெரியும் நீங்களும் அதை தான் எடுப்பீங்கள் என்று. " (வாங்கி தரும் என்னை மகிழ்ச்சி படுத்தும் பொய்கள்)

99 Euro செருப்பின் விலை. bata இன்னும் 99 இனை விடவில்லை என்று மனசுக்குள்ளே நினைத்து கொண்டேன்.

மதியம் இரண்டை தாண்டி விட்டிருந்தது. மனைவியிடமே கேட்டேன் என்ன சாபிடுவம் என்று.

chinese சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று சொன்னாள். அந்த சிற்பங்களிடமே கேட்டேன். அவர்கள் ஆசிய உணவகங்கள் இருக்கும் தெருவை காட்டினாள். இந்திய உணவகம் கூட இருப்பதாக சொன்னாள்.

img0630fy.jpg

ஒரு சீன உணவகத்தினுள் நுழைந்தோம்.

மிக அழகாக வைத்திருந்தார்கள். ஒரு சீன மொழி இசை பின்னணியில் ஓடி கொண்டிருந்தது. சுவரிலே ஜெட் லீ யை ஒத்த ஒரு உருவம் வரைபட்டிருந்தது. (சீன உருவங்களில் எனக்கு தெரிந்த உருவங்களில் ஒன்று ஜெட் லி )

மெனு அட்டையை வைத்த ஒரு சீன மங்கை, ஒரு முப்பது வயதிருக்கலாம், உணளுக்கு குடிக்க என்ன வேணும் என்று கேட்டாள். அந்த நேர தாகத்துக்கு காபனீர் ஒட்சைட்டு கலக்காத இரண்டு குளிர் நீரை கேட்டேன்.

மேசையில் இருந்த குவளைகளுக்குள் மெதுவாக, கண்ணாடி போத்தலில் அடைக்க பட்டிருந்த குளிர் நீரை விட்டு கொண்டிருந்தாள்.

என்னுடைய குவளைக்குள் ஊற்றிவிட்டு, மனைவியின் குவளைக்குள் ஊற்றி கொண்டிருக்கும் போது அவளின் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தேன்.

படார் என்று ஒரு சத்தம்.

அவள் கையில் வைத்திருந்த கண்ணாடி போத்தல் கீழே விழுந்து, என் மனைவியின் உடைகளிலும் சிந்திவிட்டது.

உடனடியாக மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடி சென்று துணி மற்றும் துடைக்கும் காகிதம் எடுத்து வந்து மனைவியிடம் கொடுத்து அவளை அருகில் இருந்த கழிவறைக்கு கூடி சென்றாள்.

மனைவியின் கண்களை பார்த்தேன் காதல் மறைந்து பயம் தெரிந்தது.

மனைவி திரும்பி வந்ததும் வது சொன்னாள். சீன வழக்கப்படி கண்ணாடி உடைந்தால் எதிரில் இருந்தவருக்கு நல்ல சகுனமாம் உடைத்தவருக்கு கேட்ட சகுனமாம் என்று அந்த இரு குளிர் நீர் போத்தலுக்கான விலையை இலவசமாக்கினாள்.

அவர்களின் சாப்பாடு கொஞ்சம் தான், ஆனால் ருசியாக இருந்தது, நான் சிங்கப்பூர் வகையிலான fried சிக்கன் நூடல்ஸ் (அரிசிமா நூடில்ஸ்)ஓர்டர் பண்ணி சாப்பிட்டேன், மனைவியும் மகனும் mixed seafood fried ரைஸ் மற்றும் கறி வாங்கி சாபிட்டார்கள்.

சாப்பிடதிற்கான பில்லை வேண்டி பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.

ஆமாம் ஒரு தனி நபருக்கு 38 Euro இற்குள் சாப்பிடால் சேவை கட்டணமாக இரண்டு euro மேலதிகமாக அறவிட்டு இருந்தார்கள். (என்னமா கொள்ளை அடிக்கிறார்கள் ).

img0631d.jpg

வலாட்டவில் இருந்து ஹோட்டல் திரும்பும் போது மாலை நான்கு மணி. அவ்வளவு வாகன நெரிசல், நிறைய வீதி சமிக்கைகள்.

மாலை ஐந்து மணி போல மீண்டும் புறபட்டு எங்களுக்கு அருகில் இருந்த st pauls bay கடற்கரைக்கு சென்றோம். நான் மால்டா தயாரிப்பு CSK பியர் இனையும் மூன்று கடல் படுக்கைகளையும் வாங்கி கொண்டு கடற்கரையில் சிப்சுடன் பியரை அடித்துவிட்டு, நீச்ச உடைகளில் நான் மனைவி மகன் கடலிலே படுக்கை மேலே மிதந்து கொண்டிருந்தோம்.

img0671cx.jpg

அழகான கடல் தாலாட்ட, ஆசை மனைவி அருகில் இருக்க, அன்பு மகன் சுத்தி வர, உள்ளே சென்ற பியர் கொடுத்த கதகதப்பும் அந்தி சூரியனும் என்னை மகிழ்ச்சியின் எல்லைக்கே கொண்டு சென்றது.

பயணம் தொடரும் ...

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

பொல்லைக் குடுத்து அடிவாங்குறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், இதென்ன புதுசா செருப்பு வாங்கிக் கொடுத்து... (சும்மா பகிடிக்கு :lol::D) தொடருங்கோ பகலவன்...

  • கருத்துக்கள உறவுகள்

கடையுள் நுழைந்த போது இரு பெண் சிற்பங்கள் வரவேற்றன. மனைவியை தேர்வு செய்ய சொல்லிவிட்டு ஒரு பெண் சிற்பத்துடன் பேச்சு கொடுத்தேன். (விரைவாக மனைவியை தேர்வு செய்ய வைக்கும் ஒரு குறுக்கு வழி). ஐந்தே நிமிடத்தில் இரண்டு சோடிகளுடன் வந்தாள்.

பயங்கரமான ஆளா இருப்பீங்க போல கிடக்கு, பகலவன்!

படங்கள் அருமை!

நீங்கள் இணைத்த படத்திலுள்ள கடலின் நீச்சல் பகுதியில், 'சுறாக்களில் இருந்து பாதுக்காக்கும் வலை" போட்டிருக்கின்றார்கள்!

Great White Shark ஐரோப்பாவிற்கும் வருகின்றதா?

தொடருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]அதுசரி நீங்கள் எழுதும் இந்தபகுதியை மனைவி பார்ப்பதில்லையா ? :rolleyes: [/size]

[size=4]அல்லது என்னைப்போல் கற்பனையில் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு எழுதுகின்றீர்களா ? :D [/size]

[size=4]எதுவாக இருந்தாலும் நன்றாக எழுதுகின்றீர்கள் , :) [/size]

[size=4]A வயசுவந்தவர்களுக்கு மட்டும் என்பதை குறிப்பிட மறந்து விட்டீர்கள் . :o [/size][size=4] :D [/size]

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு அசத்தலான இணைப்பு

அடுத்த தொடர் எப்போது

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிங்கப்பூர் வகையிலான fried சிக்கன் நூடல்ஸ் (அரிசிமா நூடில்ஸ்)ஓர்டர் பண்ணி சாப்பிட்டேன், மனைவியும் மகனும் mixed seafood fried ரைஸ் மற்றும் கறி வாங்கி சாபிட்டார்கள்.

எங்க போனாலும் உந்த கறியை கண்டால் விட மாட்டினம் எங்கன்ட சம்சுகள்........தொடருங்கள் பலவன்

  • தொடங்கியவர்

ம்ம்ம்

உங்கள் பெருமூச்சின் அர்த்தம் எனக்கு புரிகிறது அண்ணா. நன்றி அண்ணா உங்கள் பதிவிற்கு.

பொல்லைக் குடுத்து அடிவாங்குறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன், இதென்ன புதுசா செருப்பு வாங்கிக் கொடுத்து... (சும்மா பகிடிக்கு :lol::D) தொடருங்கோ பகலவன்...

உங்கள் ஆதரவுக்கு நன்றி குட்டி. செருப்பு கொடுத்து அடி அல்ல .............. தான் கிடைத்தது (சுய தணிக்கை)

பயங்கரமான ஆளா இருப்பீங்க போல கிடக்கு, பகலவன்!

படங்கள் அருமை!

நீங்கள் இணைத்த படத்திலுள்ள கடலின் நீச்சல் பகுதியில், 'சுறாக்களில் இருந்து பாதுக்காக்கும் வலை" போட்டிருக்கின்றார்கள்!

Great White Shark ஐரோப்பாவிற்கும் வருகின்றதா?

தொடருங்கள்!

எல்லாம் அனுபவத்திலிருந்து கற்ற பாடம் புங்கையூரான். Great White Shark ஐரோப்பா வருவது பற்றி எனக்கு தெரியாது .

உங்கள் பதிவுக்கும் ஊக்கத்துக்கும் நன்றி.

[size=4]அதுசரி நீங்கள் எழுதும் இந்தபகுதியை மனைவி பார்ப்பதில்லையா ? :rolleyes: [/size]

[size=4]அல்லது என்னைப்போல் கற்பனையில் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு எழுதுகின்றீர்களா ? :D [/size]

[size=4]எதுவாக இருந்தாலும் நன்றாக எழுதுகின்றீர்கள் , :) [/size]

[size=4]A வயசுவந்தவர்களுக்கு மட்டும் என்பதை குறிப்பிட மறந்து விட்டீர்கள் . :o [/size][size=4] :D [/size]

எனது மனைவி யாழ் பார்ப்பதில்லை.வேலை நேரம் போக வீட்டை கவனிக்கவே அவளுக்கு நேரம் போதாது என்ற புறுபுறுப்பு வேறு.

கற்பனையில் நான் ஒரு மனைவி வைத்திருந்தால் என் நிஜ மனைவி கொன்றே விடுவாள்.

ஒரு நாளைக்கு ஆறுதலாக நான் எழுதியதை காட்ட வேண்டும், அது அவளின் mood ஐப் பொறுத்து. :lol:

நன்றி உங்கள் பதிவிற்கு தமிழரசு.

மீண்டும் ஒரு அசத்தலான இணைப்பு

அடுத்த தொடர் எப்போது

நன்றி வாத்தியார். அலுவலகத்தில் கொஞ்சம் வேலை அதிகம் (சம்பள நாட்கள்). இந்த வார விடுமுறையில் எதிர் பாருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.