Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் தமிழர் ஆவணம் – தேசிய அறிக்கையன்று; பாசிச அறிக்கை! – பகுதி 1

Featured Replies

வளர்மதி செவ்வாய், 12 ஜூன் 2012 10:08

emailButton.pngprintButton.pngpdf_button.png

பயனாளர் தரப்படுத்தல்:rating_star.pngrating_star.pngrating_star.pngrating_star.pngrating_star_blank.png / 4

குறைந்தஅதி சிறந்த

வரலாறு எழுதுதல் என்றுமே பொருள்கோடல் (interpretation) முயற்சிகளாகவே இருந்திருக்கின்றன. அரச பரம்பரைகளைப் பட்டியலிடுவது, பேரரசுப் பெருமைகளை விவரிப்பது என்று தொடங்கிய நவீன வரலாறு எழுதும் போக்கு, மார்க்சியத்தின் செல்வாக்கிலும் அதன் கூர்மைப்படுத்தப்பட்ட வரலாற்றெழுதியல் வடிவங்களில் சமூகப் பொருளாதார அமைவுகளையும், ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவினரின் போராட்டங்களையும், விவரித்துச் செல்வதாக வளர்ச்சியுற்றது.

எத்தனை வடிவங்களில் வரலாறுகள் எழுதப்பட்டாலும், அவை பொருள்கோடல் முயற்சிகள் என்ற வரையறையை மீற முடியாதவையாகவே இருப்பதை உணர முடியும். அதே நேரம், பொருள்கோடல் முயற்சிகளான வரலாறுகள் அனைத்தும், நிகழ்கால அரசியல் நோக்கில் இருந்தே எழுதப்படுகின்றன என்ற நிதர்சனமான உண்மையும் உண்டு.

எந்த ஒரு தேசத்தின் வரலாறும், இவ்வாறு நிகழ்கால அரசியல் நோக்கில் இருந்து எழுதப்படுவதே. ஒடுக்கபட்டிருக்கும் ஒரு தேசிய இனம், தான் ஒடுக்கப்பட்டிருந்த வரலாற்றை எழுதுவது அதன் நிகழ்கால அரசியலான, விடுதலை வேட்கையிலிருந்தே இருக்கும். கல்விப் புலங்களில் இதற்கு தேசியவாத வரலாற்றெழுதியல் (nationalist historiography) என்று பெயர்.

roger_griffin_400.jpgஇத்தகைய தேசியவாத வரலாற்றெழுதியல், அக்குறிப்பிட்ட தேசத்தின் பழம்பெரும் பொற்காலம், இருண்ட காலங்கள், புதிய எழுச்சி என்ற வரிசையில் ஒரு “கதை”யை (his – story) விவரித்துச் செல்வதாக இருக்கும். இவ்வாறு, ஒரு “கதை”யை விவரித்துச் செல்லும்போது, அதில் எந்த எந்த சம்பவங்களை எப்படி கோர்வையாக விளக்குகிறது, எந்த வகையான சம்வங்களை சொல்லாமல் தவிர்க்கிறது (ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை) என்பதில் அதன் நிகழ்கால அரசியல் நோக்கம் தெரிந்துவிடும்.

தேசியவாத வரலாற்றெழுதியல், அதன் நிகழ்கால அரசியல் நோக்கங்களில் இருந்தே எழுதப்படுவதாக இருந்தாலும் அது பருண்மையான தகவல்களை – கல்வெட்டு ஆதாரங்கள், இலக்கியச் சான்றுகள், இன்னபிற – ஆதாரமாகக் கொண்டே எழுதப்படுபவை. அத்தகைய சான்றுகளை அவை எவ்வாறு பொருள்கோடல் செய்கின்றன என்பதில் அதன் அரசியல் வெளிப்படும். அந்த அரசியலின் மிக முக்கியமான ஒரு அம்சமாக, அன்னிய ஆக்கிரமிப்பினால் விளைந்த கேடுகளின் விவரிப்பு இருக்கும்.

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட, மிகவும் சிறிய தொகையிலான ஒரு வரலாற்றெழுதியலும் உண்டு – அது பாசிஸ்டுகளின் வரலாற்றெழுதியல். தேசிய வரலாற்றெழுதியலைப் போன்றே பாசிச வரலாற்றெழுதியலும் அன்னிய ஆக்கிரமிப்பை விவரித்துச் செல்லும். ஆனால், தேசிய வரலாற்றெழுதியலில் இல்லாத ஒரு அம்சத்தை இணைத்துக் கொள்ளும்.

தேசத்திற்குள்ளாக, மிகப்பெரும் சுரண்டல் சக்தியாக, தேசத்திற்குள்ளாகவே இருந்து அதை அரிக்கும் ஒரு சக்தியாக, வெல்லமுடியாத அளவிற்கு பலம் பொருந்திய சக்தியாக, தேசத்திற்கு வெளியேயும் எங்கும் பரவி இருக்கும் சக்தியாக, ஒரு பிரிவு அல்லது கருத்தியலை அடையாளம் காட்டி, அதை ஒழிப்பதுவே தேசம் நலம் பெறுவதற்கான ஒரே வழி என்பதாக விவரிக்கும். எடுத்துக்காட்டாக, நாஜிக்கள் ஜெர்மன் தேசத்தை உள்ளிருந்தே அழிக்கும் நச்சுச் சக்தியாக, உலகெங்கும் பரவியிருக்கும் பெரும் பலம் பொருந்திய சக்தியாக யூதர்களை விவரித்து தமது அரசியலைக் கட்டியெழுப்பியதைக் குறிப்பிடலாம்.

இந்த விவரிப்பிற்காக, வரலாற்றைத் திரிக்கும். அடிப்படை ஆதாரங்களைக் கொண்டு எழுதப்படும் வரலாற்று முறைமையில் இருந்து விலகி, கற்பனையான தொன்மக்கதை (mythology) ஒன்றை வலிந்து கட்டி எழுப்பும். அதையே வரலாற்றுச் சம்பவங்களாக விவரித்துச் செல்லும்.

”நாம் தமிழர்” கட்சியினர் முன்வைத்திருக்கும் ஆவணம், இத்தகைய ஒரு பாசிச வரலாற்றெழுதியலின் அடிப்படையில் அமைந்த அரசியலை முன்மொழிந்திருக்கிறது. சரியாகச் சொல்வதென்றால், தனது பாசிச நோக்கிலான அரசியலுக்கு உகந்த வகையில் வரலாற்றைத் திரித்து, தேசத்திற்கு உள்ளே இருந்தே அரித்துக் கொல்கிற, இந்தியத் துணைக்கண்டம் எங்கும் பரவியிருக்கிற ஒரு நச்சு சக்தியாக, ஒரு எதிரியை – கருத்தியலை, வலிந்து கட்டமைத்து, அதை ஒழிப்பதன் மூலமே தமிழ்த் தேசம் வளம்பெற முடியும் என்ற கோட்பாட்டைக் கட்டமைத்திருக்கிறது.

நாம் தமிழரின் அரசியல் தேசிய அரசியல் அன்று; பாசிச அரசியல்.

அது எங்ஙனம் என்பதை விரிவாகக் காண்போம்.

"நாம் தமிழர்" ஆவணம் சில அரசியல் முடிவுகளைத் தேர்வு செய்திருக்கிறது. அந்த அரசியல் முடிவுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாது, தொன்ம அடிப்படையில் மீள எழுதியிருக்கிறது. அத்தொன்ம வரலாற்றில் இருந்து, தமிழியம் என்ற ஒரு கருத்தியலைக் கட்டமைக்கிறது. அக்கருத்தியலின் வழி தனது அரசியல் முடிவுகளுக்கு வலுவான நியாயங்களைக் கற்பிக்கிறது. ஆவணம் இயங்கும் முறை இது.

ஆனால், ஆவணத்தை வாசிப்பவர்களுக்கு இது புலப்படாமல் இருக்க, தொன்ம வரலாற்று விளக்கத்தில் இருந்து தொடங்கி, அரசியல் முடிவுகளுக்கு வந்து, அதற்கான விளக்கங்களையும் தரும் வகையில் ஆவணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்படையாகத் தெரியும் வடிவத்தைத் தவிர்த்து, மேலே விளக்கிய அதன் இயங்கு – கட்டமைவில் இருந்து ஆவணத்தை அணுகிப் பார்க்கலாம். "நாம் தமிழர்" கட்சி ஆவணம், தனது இலக்குகளாக பின்வருவனவற்றைக் கூறுகிறது:

இந்தியாவில், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநிலத்தவரே ஆளும் நிலையில், தமிழ்நாட்டில் தமிழர் ஆளமுடியாத நிலை தொடர்ந்து நிலவுவதை மாற்றி, தமிழரை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவதே உடனடி இலக்காகும்.

இந்திய ஒன்றிய இறையாண்மைக்கு உட்பட்ட முழுத் தன்னாட்சி உரிமைகொண்ட மாநிலங்களின் உண்மையான கூட்டாட்சி ஒன்றியத்தை நிறுவுதலே நாம் தமிழர் கட்சியின் அடுத்த திட்டமாகும். (பக்கம்: 30)

ஒரு தேர்தல் கட்சிக்கு உரிய, மிகவும் எளிமையான, நல்ல கோரிக்கைகள்தாம். வரவேற்கப்பட வேண்டியவைதாம். இவ்வளவு எளிமையான இலக்குகளை வைத்திருக்கும் ஓர் ஆவணத்தை பாசிசம் என்று குற்றம் சாட்டுவது தகுமா? இப்படி எளிமையான கோரிக்கையோடு நின்றிருந்தால் பிரச்சினையே இல்லை!

ஆனால், ஆவணம், முகப்பிலேயே வைத்திருக்கும் முழக்கங்கள் இவை: "இது மற்றுமோர் அரசியல் கட்சி அன்று! மாற்று அரசியல் புரட்சி!", "நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர்! புரட்சிவாதிகள்!"

இந்த இருமுழக்கங்களுக்கும் இவ்வளவு எளிமையான இலக்குகளுக்கும் பாசிசத்திற்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும் என்ற கேள்வி எழலாம். “புரட்சி” என்பதன் பொருள் அறியாமல் பேசுகிறார்களோ என்று சந்தேகமும் இயல்பாக எழலாம்.

ஆனால், பிற்சேர்க்கையில் "ஆவணத்தை விளக்கிடும் உரைவீச்சுத் தெறிப்புகள்" பகுதியில் உள்ள தெளிவான விளக்கத்தில் இருந்து தொடங்கினால் விடயம் புரிய வரும்.

அது பின்வருமாறு:

புரட்சி என்பது,

தலைகீழ் மாற்றம்!

அடிப்படை மாற்றம்!

அமைப்பு மாற்றம்!

அரசியல் மாற்றம்! (பக்கம்: 51)

மிகத் தெளிவான புரிதல் இருப்பது தெளிவாகிறது.

மாநில ஆட்சியைப் பிடிக்கும் இலக்கு, உண்மையான இந்தியக் கூட்டாட்சியை உருவாக்கும் இலக்கு புரட்சிகர மாற்றம் இல்லை என்ற தெளிவுடனேயே ஆவணம் இயற்றப்பட்டிருக்கிறது. "தமிழர் குமுகம் (சமூகம்) பற்றிய மதிப்பீடு” என்ற பகுதியில், பக்கம் 23–ல் "அதிகாரமற்ற தமிழ்நாட்டு ஆட்சியைக்கூட ஆளும் உரிமையையும் இழந்ததாக” தமிழர் குமுகம் வீழ்ந்துபட்டிருப்பதாக ஆவணம் வெளிப்படுத்தும் ஆதங்கம் அத்தகைய தெளிவை வெளிக்காட்டி விடுகிறது.

அப்புறம் என்ன "தலைகீழ் மாற்றம்" செய்யத் துடிக்கிறது “நாம் தமிழர்” கட்சி!

அதையும் தெளிவாகவே கூறியிருக்கிறது ஆவணம்.

"ஆய்தப் புரட்சி அல்ல!

அறிவுப் புரட்சி!

கருவி ஏந்திய புரட்சி அல்ல!

கருத்துப் புரட்சி!”

"நாம் தமிழர்” கட்சி நிகழ்த்தப் போவதாகக் கூறும் புரட்சி கருத்துப் புரட்சி மட்டுமே! அத்தகையதொரு புரட்சியைச் செய்யப் போவதாலேயே அவர்கள் தம்மை ”அரசியல்வாதிகள் அல்லர் புரட்சிவாதிகள்” என்று முழு சுய உணர்வோடு முகப்பிலேயே அறிவிக்கிறது ஆவணம்.

அத்தகைய ”கருத்துப் புரட்சி” என்ன என்பதையும் ஆவணம் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறது.

கடந்த 80 வருடங்களாக, தமிழ் நாட்டில் ஆதிக்கத்தில் இருக்கும் திராவிடக் கருத்தியலை – அது சமூகத்தில் முற்போக்கான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது, பார்ப்பனியத்திற்கு அணைபோட்டிருக்கிறது என்று நிலவும் ஒருமுகமான கருத்தொருமிப்பை வீழ்த்தி, தலைகீழாகப் புரட்டிப் போட்டு, பார்ப்பனியத்தைக் காட்டிலும் மோசமான சமூகச் சீரழிவை உருவாக்கியது திராவிடக் கருத்தியலே;

பார்ப்பனியமும் திராவிடக் கருத்தியலும் எதிரெதிரானவை என்ற கருத்தியலைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, 'இரண்டும் எதிரெதிரானவை அன்று, உடனொட்டிப் பிறந்தவையே' என்று ஒரு தலைகீழ் கருத்துப் புரட்சியைச் செய்வதே “நாம் தமிழர்” கட்சி ஆற்றவிருக்கும் கருத்துப் புரட்சி என்று ஆவணம் மிகத் தெளிவாகவே விளக்கியிருக்கிறது.

”நாம் தமிழர்” ஆற்றவிருப்பதாக அவர்களது கட்சி ஆவணம் பறைசாற்றும் இந்தப் புரட்சியையே பாசிசம் என்று விளக்க விழைகிறேன்.

புரட்சி எப்படி பாசிசமாகும் என்ற கேள்வி உடனடியாக வாசிப்பவர் மனதில் எழக்கூடும்.

பாசிசம் குறித்த மரபான மார்க்சிய விளக்கங்கள், அதை ஒரு மிகப் பிற்போக்கான, மிக மோசமான, ஆபத்தான போக்காகவே வரையறுத்திருக்கின்றன. பாசிசம் மிகவும் பிற்போக்கான, ஆபத்தான போக்கு என்பது சரியே என்றாலும், அது நிலவும் சமூக அமைவில் ஒரு தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்தவே முனைகிறது என்ற பொருளில், நிலவும் அனைத்தையும் புரட்டிப் போட முனைகிறது என்ற பொருளில் ஒரு “புரட்சிகரமான” அரசியல் போக்கே!

பாசிஸ்டுகளின் அகவயமான புரிதலும் தாம் புரட்சியாளர்கள் என்பதுவே!

"நாம் தமிழர்" கட்சியின் ஆவணம் அறிவித்திருப்பதைப் போன்று அக்கட்சி நிகழ்த்த முயற்சிப்பது ஒரு "பாசிசப் புரட்சி" யையே. இதை விளங்கிக் கொள்ள "பாசிசம்" என்பதை வரையறுத்துப் புரிந்து கொள்வது முதலில் அவசியம்..

ஒருபுறம், “தேசியம் என்றாலே பாசிசம்” “தேசியம் பாசிசக் கூறுகளை தன்னளவிலேயே உட்கொண்டிருக்கிறது” என்ற அறிவுப்புல ஆதாரம் அற்ற அபத்தமானக் குற்றச்சாட்டு;

இன்னொருபுறம், தேசியக் கோரிக்கைகளை வெளிப்படையாக முன்வைத்துக் கொண்டு மிக ஆபத்தான பாசிசத்தை முன்வைக்கும் ஆபத்தான போக்கு.

உருப்பெற்று வரும் தமிழ் தேசியத்தை ஒரு ஜனநாயகப் பூர்வமான நோக்கில் வளர்த்தெடுப்பதற்கு, இந்த இரு எதிர் முனைப் போக்குகளின் ஆபத்துக்களை உணர்ந்து கொள்வதும், பாசிசத்தை தேசியத்தில் இருந்து வித்தியாசப்படுத்தி தெளிவுபடுத்திப் புரிந்துகொள்வதும் இன்று மிக அத்தியாவசியமான ஒன்றாகியிருக்கிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் கல்விப் புலங்களில் நிகழ்ந்திருக்கும் ஆரோக்கியமான ஆய்வுகள், விவாதங்களின் ஊடாக பாசிசம் குறித்து ஒரு தெளிவான வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய பங்களிப்புகளை அளித்திருப்பவர், Roger Griffin என்ற பிரிட்டிஷ் கல்வியாளர். பாசிசம் குறித்து அவர் முன்வைக்கும் விரிவான கருத்துக்களுக்குள் புகுவது இங்கு சாத்தியமில்லை. அவர் முன்வைக்கும் மையமான வரையறுப்புகளை மட்டும் தற்சமயம் எடுத்துக் கொள்வது போதுமானது.

(http://keetru.com/index.php?option=com_content&view=article&id=20068%3A----------1&catid=1%3Aarticles&Itemid=264தொடரும்)

  • Replies 73
  • Views 7.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தங்களுடைய சிந்தனைகளில் இந்தத் திராவிட மார்க்கிச சித்தாந்தந்த வாதிகள் எழவே மாடட்hர்கள் போலுள்ளதே! அமெரிக்க ஏகாபத்திய, பாசிய என்று பின்னிப்பெடல் எடுத்தவர்கள், ஈழப்போரில் சீனா தமிழர் படுகொலைக்கு ஆற்றிய பங்கு குறித்து மூச்சுக்கூடக் காட்டவில்லை. எங்கே தங்களின் சாயம் நரைத்துப் போகுமோ என்று பயம்,

பசியம், பயங்கரவாதம், ஏகாத்தியவாதம் போன்ற சொற்களை வைத்து எத்தனைகாலம் பிழைப்பு ஓட்டப் போகின்றார்கள் எனப் பார்க்கத் தானே போகின்றோம்.

தேசியத்தலைவரும் தமிழ்த் தேசியம் என்று தானே போராட தொடங்கியவர். பகுதி 2 அதைச் சொலல்ப் போகின்றதோ என்னமோ!!

  • தொடங்கியவர்

The Nightmare Called Seeman's Nationalism

By Tamil Podhigai

12 June, 2012

Countercurrents.org

Social media websites have been abuzz with the release of the party document of Seeman's organisation, "Naam Tamilar", and it has come up for challenge from several quarters. The criticism has been wide-ranging, and we take up this space to articulate the reasons why we find this document problematic and worthy of condemnation.

This party document is perhaps one of the most fascist, neo-Nazi, xenophobic documents that has been produced in India. Perhaps the fanatical right-wing chauvinists might come close to rivalling this manifesto, but right now, we are not sure on that count either.

At the outset, while we acknowledge that there is the need for articulating the importance of Tamil nationalism and the right of the Tamil people for self determination within the political arena, we are disappointed that this document does not have any characteristic or quality to parade itself as a party document--it lacks political understanding, it lacks understanding about the functioning of the Indian nation and its state machinery, it lacks understanding about the present state of Tamil Eelam.

Lumping together the caste-based oppression of the Hindu social order codified in the Manusmriti, the colonialist oppression of the imperialist superpowers, and the misdirected and opportunistic politics of the Dravidian parties under a unitary category betrays an absolute and callous disregard for history.

If the ultimate aim of the Tamil nationalism envisioned by the Naam Tamilar is a fully autonomous state under the Indian federation, we believe that the party should have spent a little time articulating how this process would be achieved, instead of leaving this onerous task to the imagination of its readers/cadres by the single remark: “This gradual process will be determined by time”. This itself is clear evidence that the aim of the party is not any lofty ideal that pays heed to Tamil aspirations and autonomy, but it aims to merely capture political power at the earliest possible. Besides, talk of “autonomous” is merely an eyewash, because in the Tamil state envisaged by Seeman, three vital portfolios—Finance, Defence and Foreign Policy—are surrendered to the Centre. One has to remember that decision-making was vested with New Delhi in these three sectors and it was one of the reasons why it was so easy to kill one hundred thousand Eelam Tamils in 2009. To forget that corporate interests and Hindutva forces in India operate on these three points of power, and to surrender these unconditionally to the Centre clear runs antithetical to the idea of a “Tamil state” and instead resonates like a project that is perhaps fashioned by New Delhi itself.

Having gone overboard, the magic realist history of Tamils narrated by the Naam Tamilar party document will put Gabriel Garcia Marquez and Salman Rushdie into collective shame. In this phantasmagoric narration, a glorious and lionized past is constructed for the Tamils through a history that cannot be proved at any time through statements that emphasize that Tamil was the first language in the world and that Tamils were the first inhabitants. Such historical distortion and unrealistic approach will not win Tamils any brownie-points, or any sense of identity.

The immediate goal of the party, “to make a Tamil person rule Tamil Nadu” shows that nothing about the party is ideologically different from any of the Dravidian or Dalit parties in the state. At this juncture, one has to remember that Seeman and Naam Tamilar rode high on the wave of anti-India sentiments and now, in a bid to turn into a political party, they have whole-heartedly embraced the idea of the Indian Union so that they can be recognized as a political party under India’s Constitution. That is why, for a movement that spoke against the idea of India, it now makes the declaration of adhering to Indian integrity and sovereignty and unity—performing a complex somersault from its previous position.

While we respect Velupillai Prabakaran, the national leader of the Tamils and the unparalleled role that he played in waging the war for Tamil liberation and self-determination, we understand that such extensive hero-worship emanating in the political party document of Naam Tamilar arises out of a single strategic reason: the need for the unwavering support of the Diaspora Tamils.

We too have cried over the genocide. We too cannot forget the conspiracy of silence and strategic collaboration extended by the Indian polity in executing the genocide of Tamils in Mullivaaikkaal. But what makes Naam Tamilar shout slogans to say: "We will not forget Sonia, Karuna, Chidambaram, Manmohan and Malayalees?" We understand the angst about those in power. But Malayalees are just another linguistic nationality in the prison-house of nationalities called India. They are as oppressed as Tamils. Do two or three Malayalees who lobbied against Tamils, make the Naam Tamilar blacklist all thirty million of them? We are similarly disturbed by the hatred directed towards others such as the Sikhs. Does this show any concern for the Constitution? Does this sort of hate speech serve any cause except promoting intolerance and violence?

Throughout the document, the word “Hindu” is not used, instead opting for “Manuviyar”, and there lurks the danger of conflating the Tamil identity with the Hindu identity. This is further evident when the idea of Tamil as a “religion” is posited against the religions of “Islam and Christianity” and when the document advises Tamil Muslims and Tamil Christians to choose Tamil as their primary identity and push their religious identity to the background. This reflects Hindutva/ RSS/ BJP agenda and it also goes against the spirit of secularism in the Indian Constitution, a rulebook that the Naam Tamilar has to follow in its aim to function as a political party.

At the same time, without going into the details we want to point out that the attack on the Dravidian politics by Seeman shows an absence of knowledge about the history of the Tamil struggle. Dravidian identity is not a blanket term for the four states of Tamil Nadu, Karnataka, Andhra Pradesh and Kerala—it originates from the Non Brahmin Movement that began in the then Madras Presidency. Likewise, we also wish to point out that the veiled attack on Periyar appears like a childish attempt. Trying to fix the blame of letting down of Eelam Tamils by the DMK during May 2009 on a social revolutionary like Periyar holds no basis in reason. To forget the contribution of Periyar is to invalidate the voice of caste annihilation and women’s liberation in the Tamil national struggle.

In this context, one observes that not a single woman writer/intellectual/artist/leader/fighter/activist has not been mentioned among the list of Tamil icons. We are hurt by this iconography that makes Tamil women absent. With the sole exception of Senkodi who immolated herself and has been listed among the martyrs, there is no mention of the name of any woman from Tamil Nadu. Such a wilful erasure of the Tamil feminists and women leaders once again exhibits how the project of nationalism has been hijacked by patriarchal forces.

Moreover, seeking the support and strength of the Tamil capitalist bourgeois shows the poverty of revolutionary thought. Listing out the capitalists as friendly forces is an affront to Marx and Che Guevara whose names have also been included in the document for decorative purposes. The document is also silent on the exploitation of the corporates on the Tamil Nadu land, nor does it have a general policy on how to counter the attack on the natural resources.

We are pained to see the absence of the word “Dalit” anywhere in the document, clearly betraying that the party has no idea of radical identity politics or the oppression suffered by the marginalized ex-untouchables. We also want to take this opportunity to remind the Naam Tamilar party that caste is not merely a “contradictory force” that operates in the Indian subcontinent, and that it is rather a brutal oppression that is played out through exclusion, conflict, brutal atrocities, bloodshed, endless exploitation and everyday violence.

Problems of caste and gender have been dismissed as problems of the superstructures. In recent years the organized Left in India, whether it is the traditional Marxists or the radical Maoists, have been fighting caste oppression, and themselves do not dismiss the caste question in such a careless manner. Instead of confronting this reality, Seeman and his party, the Naam Tamilar seek to easily sidestep it in order to appeal to their casteist, patriarchal bourgeois following. It is disturbing to see that a party that lays claim and seeks to imitate the identity and iconography of the Tamil Tigers could cast itself in such a condemnable manner. Moreover, we believe that Tamil society has to rise up to the challenge of the times and address the questions of oppression and violence against women.

The Tamil society must also work towards rectifying the cultural injustices against women by fighting patriarchy. We are of the firm opinion that any national struggle that does not address and include the message of caste annihilation and women’s liberation cannot be revolutionary or inclusive.

For a document that disallows the use of caste names three names stand out: Padaiyachi, Thevar and Kone with an eye on the consolidated caste votebanks of the Vanniyars, Mukkulathors and Yadavas in Tamil Nadu. Likewise, the document’s glossary gives away the party’s unabashed worship of Brahmins.

One has to stay wary of mixing local political doctrines or ideology within the Indian state with the Eelam liberation struggle, because of the logical reason that it could turn counterproductive to the cause of Tamil Eelam liberation. Here again, the Naam Tamil party doctrines falter.

Finally, although the back-cover of the manifesto declares that Naam Tamilar "is not constituted of politicians but is made of revolutionaries," reading the document makes it evident that this is nothing but the handiwork of reactionaries who feed on linguistic jingoism to alienate others. We believe it risky to associate with such a brand of hate-espousing nationalism. Even as we distance ourselves from its delusional politics that borders on linguistic imperialism, we have written this criticism because we earnestly believe that maintaining silence on this document is self-defeating to Tamils.

Tamil Podhigai is a social activist based in Chennai

http://www.countercurrents.org/podhigai120612.htm

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவருக்கு உபதேசம் செய்கிறோம் என்ற போர்வையில்.. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு இட்டுச் சென்ற அதே திராவிட பாசிசவாதிகளே.. இப்போ.. நாம் தமிழர் கட்சிக்கு.. தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளனர்..!

இவர்களின் நோக்கம்.. எதிரியால் இனம் அழிந்தாலும் பறுவாயில்லை.. மாயைத் திராவிடமும்.. மாயாவி பெரியாரும் வாழ வேண்டும். இப்படிப்பட்ட இந்த பகுத்த"ரி"வு வாதிகளின் நோக்கம்... இன்னும் இன்னும் பல முள்ளிவாய்க்கால்களை திராவிடக் கூப்பாட்டின் மூலம் ஏற்படுத்துவது மட்டுமே ஆகும்..! அதை வைச்சு பயங்காட்டியே தமிழனை அடிமைப்படுத்தி.. திராவிட வெறியூட்டலை செய்து.. தமிழர்களை இன அடையாளமற்று அழித்தொழிப்பது மட்டுமே.

நிச்சயம் இந்த திராவிடக் கூலிகளை சிங்களம் வரவேற்கும். காரணம் சிங்களத்தின் இன அழிப்புக்கு.. சர்வதேசத்திடம் இருந்து அங்கீகாரம் தேட... இவர்களின் உதவி மிக அவசியம்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சந்தேகம்..திராவிடவாதிகள் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் திராவிடம் ஒரு இனமென்று....யுனெஸ்கோவின் வரையறைகளில் எங்காவது திராவிடம் ஒரு இனம் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறதா..?தமிழர்கள் ஒரு இனம் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது...திராவிடர்கள்..? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேசிய தலைவருக்கு உபதேசம் செய்கிறோம் என்ற போர்வையில்.. முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு இட்டுச் சென்ற அதே திராவிட பாசிசவாதிகளே.. இப்போ.. நாம் தமிழர் கட்சிக்கு.. தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்பாடுகளையும் ஆரம்பித்துள்ளனர்..!

திராவிடக் கருத்தியலுக்கு எதிரான சீமானின் கருத்துக்கள் மற்றும் இப்போது கொடுக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி ஆவணம் என்பவற்றை விமர்சிப்பவர்கள் நாம் தமிழர் கட்சியின் உருவாக்கத்திற்கு உறுதுணை நின்றவர்கள். பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் மதிமுக.

கொளத்தூர் மணி மற்றும் வைகோ போன்றவர்கள் உங்களிற்கு எப்படி திராவிட பாசிசவாதிகளாகத் தெரிகிறார்கள் என்று விளங்கவில்லை.

இவர்கள் இருவரும் தலைவருக்கு உபதேசம் செய்யவில்லை. உதவிகள் மாத்திரம் நீண்ட நெடுங்காலமாகச் நிறையச் செய்திருக்கிறார்கள்.

உங்களிற்கு திராவிட கருத்தியலோடு உடன்பாடு இல்லையென்றால் அதனை விமர்சியுங்கள். சீமானின் கருத்துக்களுடன் உடன்படுகிறீர்கள் என்றால் அதற்கு ஆதரவு கொடுங்கள்.

திராவிடக் கருத்தியலுக்கு எதிரான உங்கள் கருத்தை நிறுவ ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக எப்போதும் உதவிக் கொண்டிருப்பவர்களை அந்த அழிவுக்குக் காரணமென அசிங்கப்படுத்தாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு சந்தேகம்..திராவிடவாதிகள் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள் திராவிடம் ஒரு இனமென்று....யுனெஸ்கோவின் வரையறைகளில் எங்காவது திராவிடம் ஒரு இனம் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறதா..?தமிழர்கள் ஒரு இனம் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது...திராவிடர்கள்..? :(

உலக மொழிகள் குடும்பங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அதில் திராவிட மொழிக் குடும்பமும் இருக்கிறது. திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் திராவிடர்கள் என்று அழைக்கப்படுகிறார். திராவிடரர்கள் 85 வரையான மொழிகளைப் பேசுகின்றனர்.

உலகின் முக்கிய மொழிக் குடும்பங்கள்

  1. Indo-European languages 46% (Europe, Southwest to South Asia, North Asia, North America, South America, Oceania, South Africa)
  2. Sino-Tibetan languages 21% (East Asia)
  3. Niger–Congo languages 6.4% (Sub-Saharan Africa)
  4. Afroasiatic languages 6.0% (North Africa to Horn of Africa, Southwest Asia)
  5. Austronesian languages 5.9% (Oceania, Madagascar, maritime Southeast Asia)
  6. Dravidian languages 3.7% (South Asia)
  7. Altaic languages (controversial combination of Turkic, Mongolic, and Tungusic families) 2.3% (Central Asia, Northern Asia, Anatolia, Siberia)[1]
  8. Japonic languages (sometimes included in an expanded Altaic proposal) 2.1% (Japan)
  9. Austro-Asiatic languages 1.7% (mainland Southeast Asia)
  10. Tai–Kadai languages 1.3% (Southeast Asia)

திராவிட இனங்களில் தமிழரைத்தவிர வேறு எந்த இனமாவது திராவிடகட்சிகளுக்கு ஓட்டு போடுகின்றதா? தமிழரை வதைக்கும் அண்டை மாநிலங்களில் வசிப்பவர்கள் திராவிட இனங்கள். இத்தகைய திராவிட இனங்களிடம் இருந்து தமிழரை பாதுகாக்கும் தமிழ்க்கட்சிகள் பெயரில் திராவிடத்தை வைத்துக்கொண்டு எப்படி தமிழர்களை பாதுகாக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடக் கருத்தியலுக்கு எதிரான சீமானின் கருத்துக்கள் மற்றும் இப்போது கொடுக்கப்பட்ட நாம் தமிழர் கட்சி ஆவணம் என்பவற்றை விமர்சிப்பவர்கள் நாம் தமிழர் கட்சியின் உருவாக்கத்திற்கு உறுதுணை நின்றவர்கள். பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் மதிமுக.

கொளத்தூர் மணி மற்றும் வைகோ போன்றவர்கள் உங்களிற்கு எப்படி திராவிட பாசிசவாதிகளாகத் தெரிகிறார்கள் என்று விளங்கவில்லை.

இவர்கள் இருவரும் தலைவருக்கு உபதேசம் செய்யவில்லை. உதவிகள் மாத்திரம் நீண்ட நெடுங்காலமாகச் நிறையச் செய்திருக்கிறார்கள்.

உங்களிற்கு திராவிட கருத்தியலோடு உடன்பாடு இல்லையென்றால் அதனை விமர்சியுங்கள். சீமானின் கருத்துக்களுடன் உடன்படுகிறீர்கள் என்றால் அதற்கு ஆதரவு கொடுங்கள்.

திராவிடக் கருத்தியலுக்கு எதிரான உங்கள் கருத்தை நிறுவ ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக எப்போதும் உதவிக் கொண்டிருப்பவர்களை அந்த அழிவுக்குக் காரணமென அசிங்கப்படுத்தாதீர்கள்.

திருமாவளவன்..வை.கோ.. ஐயா நெடுமாறன்.. அண்ணன் சீமான்.. ஐயா வீரமணி.. கொளத்துர் மணி.. தியாகு என்று என்னற்ற தமிழக சொந்தங்களும்.. ஈழத்தமிழர் விடுதலைக்காக உழைத்துள்ளனர்..! உழைத்தும் வருகின்றனர்.. இவர்கள் எல்லோருமே அதற்காகப் போற்றப்பட வேண்டியவர்கள்.

தமிழக அரசியல் களத்தில்.. திராவிடம் என்ற மாயை பதம்.. இவர்களில் சிலரையும் சலனப்படுத்தி வருகின்றது. அதற்காக இவர்களில் பலர் தீவிர திராவிடம் பேசுபவர்கள் என்று இல்லை. வை.கோ.. ஒருபோதும்.. திராவிடத்தை முன்னிறுத்துபவர் அல்ல. அவர் தமிழர்.. தமிழையே.. தமிழ்நாட்டையே முன்னிறுத்துபவர். வீரமணி.. கொளத்தூர் மணி போன்றவர்கள் தீவிர தி மு க தலைமை விசுவாசம் கொண்டதனாலோ என்னவோ அறிந்தோ அறியாமலோ... தீவிர திராவிடக் கருத்தியலில் இன்றும் சிக்கி இருக்கிறார்கள். ஆனால் அதற்காக ஈழத்தமிழர் விடுதலையில் அவர்கள் திராவிடவாதத்தைச் செருகுவதில்லை..! பெரியார் வாதத்தை செருகுவதில்லை..!

ஆனால் இவர்கள் எவருமே அல்லாத இணைய மற்றும் ஊடக திராவிட மாயாவிகள் தான்.. ஈழ விவகாரம்.. ஈழப்போராட்டம்.. தமிழ் தேசிய விவகாரம்.. நாம் தமிழர் என்ற தமிழின ஒற்றுமை.. இங்கெல்லாம் திராவிடம்.. பெரியார் போன்ற மாயைகளை சுய இலாபம்.. சுய விளம்பரம்... சுய புகழ் தேடி புகுத்திக் கொண்டு திரிகிறார்கள்..! இவர்கள் தான் இணையத்தில் ஊடகங்களில் தேசிய தலைவருக்கு பாடமும் எடுத்தார்கள். இவர்களையே நாங்கள் மிகவும் கண்டிக்கிறோம். இவர்களின் போக்கும்.. இவர்களின் செயற்பாடும்.. தீவிர சிங்கள பெளத்த பேரினவாத தமிழ் இன அழிப்புக்கு நிகர்த்தனவாக உள்ளன.

மேலும்.. கொளத்தூர் மணி.. வீரமணி ஐயா போன்ற திராவிட விசுவாசிகள்.. அவர்கள் நேசிக்கும் ஈழத்தமிழ் மக்கள் இத்தனை பேரழிவுகளை சந்தித்து நிற்கின்ற இந்த வேளையில்.. சிங்கள ஆக்கிரமிப்பு நிலவிழுங்கிகளால்.. தமிழர்கள் நிலமிழந்து.. உரிமை இழந்து நிற்கும் இந்த வேளையில்.. இந்திய ஆரிய - திராவிட மையவாதிகளும் ஆட்சியாளர்களும் சிங்களத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழின அழிப்புக்கு உதவி நிற்கின்ற இந்த வேளையில்.. தமிழர்கள்.. எனியும் திராவிட விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் தானா.. என்பதை ஒரு முறை பரிசீலிப்பதும் நன்று.

மற்றும்படி.. ஈழத்தமிழர்களுக்காக அவர்களின் விடுதலைக்காக.. உழைத்த.. உழைக்கின்ற..எல்லா மனிதர்களும் அவர்களின் தனிப்பட்ட கொள்கைகளுக்கு அப்பால்.. எம் கெளரவத்துக்குரியவர்களே. அதேவேளை.. அவர்களின் ஈழத்தமிழர் கொள்கைகளுக்கு அப்பால் மற்ற கொள்கைகளில் தவறுகள் இருந்தால்.. அதைச் சுட்டிக்காட்டும் போது.. அதனை அவர்களின் ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்கைக்கான விமர்சனமாக காட்டுவதும்.. தவறு. இதனை திராவிட பாசிசவாதிகள் தங்களின் நிலை இருப்புக்காக செய்ய விளைகின்றனர்...என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் தகும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீரமணி.. கொளத்தூர் மணி போன்றவர்கள் தீவிர தி மு க தலைமை விசுவாசம் கொண்டதனாலோ என்னவோ அறிந்தோ அறியாமலோ... தீவிர திராவிடக் கருத்தியலில் இன்றும் சிக்கி இருக்கிறார்கள். ஆனால் அதற்காக ஈழத்தமிழர் விடுதலையில் அவர்கள் திராவிடவாதத்தைச் செருகுவதில்லை..! பெரியார் வாதத்தை செருகுவதில்லை..!

மேலும்.. கொளத்தூர் மணி.. வீரமணி ஐயா போன்ற திராவிட விசுவாசிகள்.. அவர்கள் நேசிக்கும் ஈழத்தமிழ் மக்கள் இத்தனை பேரழிவுகளை சந்தித்து நிற்கின்ற இந்த வேளையில்.. சிங்கள ஆக்கிரமிப்பு நிலவிழுங்கிகளால்.. தமிழர்கள் நிலமிழந்து.. உரிமை இழந்து நிற்கும் இந்த வேளையில்.. இந்திய ஆரிய - திராவிட மையவாதிகளும் ஆட்சியாளர்களும் சிங்களத்திற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழின அழிப்புக்கு உதவி நிற்கின்ற இந்த வேளையில்.. தமிழர்கள்.. எனியும் திராவிட விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும் தானா.. என்பதை ஒரு முறை பரிசீலிப்பதும் நன்று.

உங்களிற்கு தமிழக இயக்கங்கள் தொடர்பாக தெளிவான விளக்கங்கள் இல்லைப் போலுள்ளது.

கொளத்தூர் மணி அவர்கள் எப்போதோ வீரமணி தலைமையிலான திராவிடர் களத்திலிருந்து வெளியேறிவிட்டார். வெளியேறிய அவர் பெரியார் திராவிடர் கழகம் என்ற இயக்கத்தை நிறுவி தேர்தல் அரசியலுக்கு அப்பால் சமூகத்தளத்தில் போராடி வருகிறார். தமிழகத்தின் நலன்களிற்காகவும், சமூகக் கொடுமை எதிராகவும், ஈழவிடுதலைக்காகவும் அவர் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஈழத்துயருக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் சீமானுக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதைத் தாண்டிய பங்கு கொளத்தூர் மணி அவர்களிற்கு இருக்கிறது. சீமானுடன் சேர்ந்தே பெரும்பாலான போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார். இவர் கருணாநிதிக்கோ அல்லது திமுகவிற்கு ஜால்ரா அடிக்கும் வீரமணியல்ல. திமுக அதிமுக என்ற அரசியற் கட்சிகளிடத்தில் இருந்து தூரமாக கொளத்தூர் மணி இருக்கிறார்.

வை.கோ.. ஒருபோதும்.. திராவிடத்தை முன்னிறுத்துபவர் அல்ல. அவர் தமிழர்.. தமிழையே.. தமிழ்நாட்டையே முன்னிறுத்துபவர்.

பெரியாரின் திராவிடக் கருத்தியலில் நின்றுதான் அவர் தமிழர்,தமிழ், தமிழ்நாட்டு நலன்களிற்காகப் போராடுகிறார்.

ஆனால் இவர்கள் எவருமே அல்லாத இணைய மற்றும் ஊடக திராவிட மாயாவிகள் தான்.. ஈழ விவகாரம்.. ஈழப்போராட்டம்.. தமிழ் தேசிய விவகாரம்.. நாம் தமிழர் என்ற தமிழின ஒற்றுமை.. இங்கெல்லாம் திராவிடம்.. பெரியார் போன்ற மாயைகளை சுய இலாபம்.. சுய விளம்பரம்... சுய புகழ் தேடி புகுத்திக் கொண்டு திரிகிறார்கள்..!

இது தவறான தகவல்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் தொடர்பாக பெரும்பாலான விமர்சனங்களை வைத்தது கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம். இதைத் தாண்டி சில தனிநபர்கள் மற்றும் தமிழர் ஒற்றுமையை விரும்பாத பார்ப்பன அடிவருடிகள்.

தயவு செய்து சரியான விபரங்களை அறிந்து எழுதுங்கள், இதுதான் என அனுமானித்து எதையும் எழுதாதீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றும்படி.. ஈழத்தமிழர்களுக்காக அவர்களின் விடுதலைக்காக.. உழைத்த.. உழைக்கின்ற..எல்லா மனிதர்களும் அவர்களின் தனிப்பட்ட கொள்கைகளுக்கு அப்பால்.. எம் கெளரவத்துக்குரியவர்களே. அதேவேளை.. அவர்களின் ஈழத்தமிழர் கொள்கைகளுக்கு அப்பால் மற்ற கொள்கைகளில் தவறுகள் இருந்தால்.. அதைச் சுட்டிக்காட்டும் போது.. அதனை அவர்களின் ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்கைக்கான விமர்சனமாக காட்டுவதும்.. தவறு. இதனை திராவிட பாசிசவாதிகள் தங்களின் நிலை இருப்புக்காக செய்ய விளைகின்றனர்...என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் தகும்..! :icon_idea:

திராவிடக் கருத்தியலில் நிற்பவர்கள் தீவிர ஈழ ஆதரவாளர்கள். அதற்காக தீவிரமாக உழைத்தவர்கள், உழைத்து வருபவர்கள். ஆனால் அவர்களையே ஈழத்தின் அழிவிற்கு காரணமெனச் சொன்னது நீங்கள். அதனையே சுட்டிக்காட்டியிருந்தோம்.

உங்களிற்கு தமிழக இயக்கங்கள் தொடர்பாக தெளிவான விளக்கங்கள் இல்லைப் போலுள்ளது.

நீதிஎன்று பெயர் வைத்ததற்காக இப்படியெல்லாம் கேள்வி கேட்க கூடாது.நாங்கள் சொல்லுவம் நீங்கள் கேட்கவேண்டும் அப்படித்தான் எங்களுக்கு பழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

Tamil and Australian aboriginal languages

I sat and watched Ten Canoes the other day. The language in it sounded like Tamil. Which was a surprise. Just like years ago I realised that Japanese and Tamil words were interchangeable in a sentence. So I went looking for research where others may have found this too. I came across this:

Perhaps most similar to Australian languages are the Dravidian languages of southern India. Tamil, for example, has five places of articulation in a single series of stops, paralleled by a series of nasals, and no fricatives (thus approaching the Australian proportion of sonorants to obstruents of 70% to 30%). Approaching the question from the opposite direction: according to the latest WHO data on the prevalence of chronic otitis media (Acuin 2004:14ff), Aboriginal Australians have the highest prevalence in the world – 10-54%, according to Coates & al (2002), up to 36% with perforations of the eardrum. They are followed – at some distance – by the Tamil of southern India (7.8%, down from previous estimates of 16-34%), … (from http://www.flinders.edu.au/speechpath/Manly%20final.pdf)

Then I started to look at other linking the tamil and the Aboriginal. And here I encountered a lot of material. I big proportio of this has to be discounted as it is typically in the vein of the Indian or Tamil suprematist. Quickly – that vein is one that claims that Tamil is the original language – and the class of languages called Dravidian ( an unfortunate appellation?) is huge and spread all over the world. Some claim the flaw in this na,ing has given rise to the feeling that Tamil ( as dravidian) is the original language. Still now we can start to read about DNA evidence. See this:

Dr Rao and his colleagues sequenced the mitochondrial genomes of 966 people from traditional tribes in India. They reported several of the Indian people studied had two regions of their mitochondrial DNA that were identical to those found in modern day Australian Aboriginal people. (http://s1.zetaboards.com/anthroscape/topic/2011921/1/)

Also – http://www.biomedcentral.com/1471-2148/9/173/abstract/

Then there is the Human Genome Project and here is what that has to say:

During his own journey in pursuit of the Y chromosome story in the late 1990s, Wells took blood samples from males of Dravidian ancestry in southern India. The Dravidians were among India’s earliest colonists; they now live among the descendants of a later wave of Sanskrit speakers — like Latin and ancient Greek, Sanskrit is an a branch of the Indo-European ‘mother tongue’, more closely related to modern English and French than to Dravidian.

Wells was looking for a genetic marker called M130, the most ancient, non-African, Y-chromosome marker. It is rare in Dravidians, but quite common in Australian Aboriginal males — and, intriguingly, in the Na Dene peoples of the Pacific north-west of North America.

The Na Dene peoples are descended from a second, later wave of immigrants into North America, who were ultimately of Sino-Tibetan stock — M130 is both the oldest non-African Y-chromosome marker, and the most travelled.

Wells’ suspicion that M130 might have survived, at very low frequency, in southern coastal regions of India, was proven correct

The first African emigres left a durable calling card on the coastal migratory route between Africa and Australia.

(http://www.lifescientist.com.au/article/131860/dr_wells_genetic_crusade)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி இன்னும் 2 பக்கம் கூட தாண்டல ...

:( :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி இன்னும் 2 பக்கம் கூட தாண்டல ...

:( :(

அடப்பாவி

இப்படியான(வத்தி வைப்பது) வேலைகளும் செய்யத்தெரியுமா?

சொல்லவே இல்லை............ :lol::D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களிற்கு தமிழக இயக்கங்கள் தொடர்பாக தெளிவான விளக்கங்கள் இல்லைப் போலுள்ளது.

நீதிஎன்று பெயர் வைத்ததற்காக இப்படியெல்லாம் கேள்வி கேட்க கூடாது.நாங்கள் சொல்லுவம் நீங்கள் கேட்கவேண்டும் அப்படித்தான் எங்களுக்கு பழக்கம்.

பெரும்பான்மை கூட்டம் கண்ணால் பார்த்து குருவி என்று சொல்வதை தன் இரு கண்களின் பார்வையால் மட்டும் அது குழவியே என்று அடித்துச் சொல்லுகின்ற தைரியத்தை அறிவுடமை என்று தானே பாராட்டுவதும், தன்னை மறுதலிக்கும் கருத்தினை பைத்தியத்தனம் என்றும் சொல்லுகின்ற வகையை ஜனனாயகம் என்று நம்பிக்கொண்டிருக்கும் அன்னாரை என்ன சொல்லுவது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீதியிடம் இருந்து நான் அறியவிரும்பும் வினாக்கள்.

நீங்கள் இந்தக் களத்திற்கு புதியவனாய் இருக்கின்றீர்கள். ஒன்று உண்மையில் புதியவராய் இருக்கலாம், இல்லை

புதிய பேரில் பழைய நபரும் ஆகலாம்.

பழைய பேரில் புதிய நபர் ஆகி இருந்தால், இந்தப் புதுஅவதாரத்திற்கான காரணம் எங்களுக்கு பழக்கமாகி இருக்கும் உங்கள் கருத்துநடை நீங்கள் புதிதாய் சொல்ல முயலும் கருத்துக்கு உங்களுக்கு ஆகும் தகுதியை கேள்விகேட்கும் என்ற பயம்!

சரி ஒருவேளை நீங்கள் புதிய நபராயே இருந்துவிட்டால்; இதுவரைகாலமாக நடந்த பல உணர்ச்சிமயமான சம்பவங்கள் இதுவரை உங்களையும் பதிவினனாக்க முடியாத போது, இந்தப் பெரியாரிசம் மட்டும் உங்களை இந்த விடயத்தில் பதிவினனாக்க முடிந்த சாத்தியத்தை விளக்க முடியுமா?

உங்களிற்கு தமிழக இயக்கங்கள் தொடர்பாக தெளிவான விளக்கங்கள் இல்லைப் போலுள்ளது.

நீதிஎன்று பெயர் வைத்ததற்காக இப்படியெல்லாம் கேள்வி கேட்க கூடாது.நாங்கள் சொல்லுவம் நீங்கள் கேட்கவேண்டும் அப்படித்தான் எங்களுக்கு பழக்கம்.

ஓசிப்பாசலும், தவிச்ச முயலும் அடிக்காமல் இருக்க ஏலாமல் கிடக்குது என்ன...??

உங்களை எல்லாரும் மதிக்க வேணும் எண்டு கூட்டம் போடுகிற உங்களுக்கு மற்றவர்களின் உணர்வை மதிக்க வேண்டிய தேவையே இல்லை பாருங்கோ... ஐ லை தட் மாற்று கருத்து... !

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிற்கு தமிழக இயக்கங்கள் தொடர்பாக தெளிவான விளக்கங்கள் இல்லைப் போலுள்ளது.

கொளத்தூர் மணி அவர்கள் எப்போதோ வீரமணி தலைமையிலான திராவிடர் களத்திலிருந்து வெளியேறிவிட்டார். வெளியேறிய அவர் பெரியார் திராவிடர் கழகம் என்ற இயக்கத்தை நிறுவி தேர்தல் அரசியலுக்கு அப்பால் சமூகத்தளத்தில் போராடி வருகிறார். தமிழகத்தின் நலன்களிற்காகவும், சமூகக் கொடுமை எதிராகவும், ஈழவிடுதலைக்காகவும் அவர் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். ஈழத்துயருக்கு எதிராக தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் சீமானுக்கு எவ்வளவு பங்கிருக்கிறதோ அதைத் தாண்டிய பங்கு கொளத்தூர் மணி அவர்களிற்கு இருக்கிறது. சீமானுடன் சேர்ந்தே பெரும்பாலான போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறார். இவர் கருணாநிதிக்கோ அல்லது திமுகவிற்கு ஜால்ரா அடிக்கும் வீரமணியல்ல. திமுக அதிமுக என்ற அரசியற் கட்சிகளிடத்தில் இருந்து தூரமாக கொளத்தூர் மணி இருக்கிறார்.

பெரியாரின் திராவிடக் கருத்தியலில் நின்றுதான் அவர் தமிழர்,தமிழ், தமிழ்நாட்டு நலன்களிற்காகப் போராடுகிறார்.

இது தவறான தகவல்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணம் தொடர்பாக பெரும்பாலான விமர்சனங்களை வைத்தது கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம். இதைத் தாண்டி சில தனிநபர்கள் மற்றும் தமிழர் ஒற்றுமையை விரும்பாத பார்ப்பன அடிவருடிகள்.

தயவு செய்து சரியான விபரங்களை அறிந்து எழுதுங்கள், இதுதான் என அனுமானித்து எதையும் எழுதாதீர்கள்.

தமிழக இயக்கங்களின் திராவிட கூப்பாடு பற்றிய பின்னணிகள் நன்றாகவே தெரியும். கொளத்தூர் மணி இடையில் கட்சி விட்டு கட்சி மாறி இருக்கலாம். அடிப்படையில் அவர் வீரமணி ஐயா அவர்கள் போன்று தீவிர திராவிட கருத்தியலை கக்கி வந்தவர். பின்னர் தனக்கான இடம் அங்கு சரியில்லை என்று கண்டதன் பெயரில் அண்ணன் சீமானோடு இணைந்து இயங்கியவர். இப்போ சீமானின் கொள்கைகளில் திராவிடம் தீவிரமாக இல்லை என்றதும்.. தன் இருப்பைக் காத்துக்கொள்ள.. தடம் மாறி அணைத்தவரையே உதைக்கவும் செய்கிறார்.

இவர்கள் எல்லாம் ஈழத்தமிழர்களுக்காகப் போராடி.. முள்ளிவாய்க்கால் வரை.. திராவிடம் பேசி எதைச் சாதித்தார்கள். காங்கிரஸோடு கூட்டணி அமைத்திருந்த திராவிட கட்சிகளுக்கு வால்பிடித்து.. தமிழ் ஈழத்தை அழித்ததை விட வேறு சாதித்தது என்ன..??!

பெரியாரிசும்.. ஈழத்தமிழர்களை எங்கெங்கெல்லாம் பாதுகாத்தது என்ற ஒரு பட்டியலை வெளியிட முடியுமா..??! ஈழத்தமிழர்களின் துயரை வைத்து தமிழகத்தில் செல்வாக்கிழந்து நிற்கும் பெரியாரின் பெயரை தக்க வைக்க முயன்றதை விட.. பெரியார் ஈழத்தமிழர்களுக்கு இருந்தும் இறந்தும் செய்த நன்மை தான் என்ன..???????????! :icon_idea:

இதில் இருந்து மாறுபட்டு நிற்கும்..நாம் தமிழர் என்ற அண்ணன் சீமானின் கட்சி.. தமிழ் தேசிய இன உணர்ச்சியோடு எழுச்சியோடு.. இன்று தமிழர்களின் அழிவுகளுக்கு குறைந்தது உலக அரங்கில் நியாயம் கேட்கும் நிலைக்கு நாம் தமிழர் வந்து நிற்பதோடு.. அதன் பலம்.. தமிழர்களின் அழிவில் அரசியல் குளிர்காய்ந்த திராவிட மாயாவிகளிடம் இருந்து ஆட்சிப் பறிப்பையும் செய்துள்ள அதேவேளை.. ஆரிய காங்கிரஸிற்கு சரியான பாடமும் புகட்டப்பட்டியுள்ளது. அதற்காக அண்ணா தி மு க மன்னிக்கப்பட்டு விட்டது என்ற பொருள் அல்ல. அது தீவிர ஆரிய.. திராவிட தீவிரவாதிகளுக்கான தண்டனைக் கால இடைவெளியில் தப்பிப் பிழைத்து நிற்கிறது என்று தான் கொள்ள வேண்டும்..! இதை சாதித்தது.. அண்ணன் சீமானும்.. நாம் தமிழர் என்ற தமிழ் தேசிய எழுச்சியும் ஒற்றுமையும் பலமுமே அன்றி வேறில்லை.

வேறிருந்தால்.. அதை திராவிடம் செய்திருந்தால்.. ஆதாரங்களோடு.. குறிப்பிடுக்கள் பார்க்கலாம்..??! 3 மணி நேர உண்ணா நோன்பிருந்து நாடகமாடி எம் மக்களை மரணப்படுகுழியில் தள்ளிய பெருமை.. தமிழர் விரோத திராவிட தீவிரவாதிகளை சாரும்..! இதுதான் திராவிடத்தை அப்பா.. தந்தை என்று ஏற்றுக் கொண்ட ஈழத்தமிழர்களுக்கு திராவிடம் அளித்த பரிசு..!

சும்மா நீதி என்று பெயர் வைத்துவிட்டால் போதாது. நிகழ்கால.. இறந்த கால நிகழ்வுகளில் இருந்து இதய சுத்தியோடு நிகழ்வுகளை ஆராயவும் அணுகவும் பழகிக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் பெரியார் விசுவாச வெறி.. திராவிட பாசிச பாசம் இவற்றில் இருந்து உங்களைப் போன்றவர்கள் முதலில் உங்களை நீங்களே விடுவித்துக் கொண்டு வந்தால்.. உங்களுக்கு தமிழக இயக்கங்களின் வரலாற்றை பாடமாகப் புகட்ட நாம் தயாராகவே இருக்கிறோம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக இயக்கங்களின் திராவிட கூப்பாடு பற்றியபின்னணிகள் நன்றாகவே தெரியும்.கெளத்தூர் மணி இடையில் கட்சி விட்டு கட்சி மாறி இருக்கலாம். அடிப்படையில் அவர் வீரமணி ஐயா அவர்கள் போன்று தீவிர திராவிட கருத்தியலை கக்கி வந்தவர். பின்னர் தனக்கான இடம் அங்கு சரியில்லை என்று கண்டதன் பெயரில் அண்ணன் சீமானோடு இணைந்து இயங்கியவர். இப்போ சீமானின் கொள்கைகளில் திராவிடம் தீவிரமாக இல்லை என்றதும்.. தன் இருப்பைக் காத்துக்கொள்ள.. தடம் மாறி அணைத்தவரையே உதைக்கவும் செய்கிறார்.

:D:D:D :D :D:D

சூப்பர் அண்ணே சூப்பர் நல்லாத்தான் திராவிட கட்சிகள் பின்னணியை அறிஞ்சு வைச்சிருக்கீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்தை பலவீனப்படுத்தும் இத்தகைய அறிக்கைகளை விடுவதுகூட இன அழிப்புக்கு துணைபோவதாகும் .

திராவிடர்களாகிய தமிழர் கன்னடர் தெலுங்கர் மலையாளி ஆகியவர்களில் என்னும் திராவிட மாஜையில் உள்ளவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள்தான் அதிலும் தமிழ் அரசியல்வாதிகள் இது இவர்களின் தேவையும் கூட இதைவைத்தே என்னும் இரு பெரும் திராவிட கட்சியும் சுயநல அரசியல் நடத்துகின்றார்கள் இந்த அரசியல் ஒருபோது தமிழனின் விடிவுக்கு உதவாது என்பதே எனது கருத்தாகும் .

533917_312744562133324_1890365829_n.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்கள் எல்லாம் ஈழத்தமிழர்களுக்காகப் போராடி.. முள்ளிவாய்க்கால் வரை.. திராவிடம் பேசி எதைச் சாதித்தார்கள்.

சீமான் எதைச் சாதித்தாரோ, வைகோ எதைச் சாதித்தாரே, நெடுமாறன் ஐயா எதைச் சாதித்தாரோ அதைத்தான் அவர்களும் சாதித்தார்கள். இவர்கள் என்னதான் உண்மையாக ஈழத்தமிழருக்கு ஆதரவாகச் செயற்பட்டாலும் சுயநல திமுக-அதிமுக கட்சிகளை மக்கள் தூக்கியெறியும்வரை இந்திய மத்திய அரசு தமிழர் நலன்களைக் கண்டு கொள்ளாது.

இவர்கள் எல்லாம் ஈழத்தமிழர்களுக்காகப் போராடி.. முள்ளிவாய்க்கால் வரை.. திராவிடம் பேசி எதைச் சாதித்தார்கள். காங்கிரஸோடு கூட்டணி அமைத்திருந்த திராவிட கட்சிகளுக்கு வால்பிடித்து.. தமிழ் ஈழத்தை அழித்ததை விட வேறு சாதித்தது என்ன..??!

வால்பிடிப்பது வீரமணி, கொளத்தூர் மணியல்ல. எப்போதும் யாருக்கும் அவர் வால்பிடித்ததில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

:D:D:D :D :D:D

சூப்பர் அண்ணே சூப்பர் நல்லாத்தான் திராவிட கட்சிகள் பின்னணியை அறிஞ்சு வைச்சிருக்கீங்கள்.

இதில் கொளத்தூர் மணி பற்றி தாங்களே கூறிய கருத்திற்கு தாங்களே சிரிப்பதனால்.. என்ன அர்த்தம்..??!

கொளத்தூர் மணி அண்ணன் சீமானோடு சேர்ந்தியங்கியதை ஒத்துக் கொண்டீர்கள். வீரமணி அவர்களோடு ஒட்டி இருந்ததையும் ஒத்துக் கொண்டீர்கள். பெரியார் கழகம் என்ற ஒன்றை வைத்திருக்கிறவர் திராவிடத்தில் திராணியான நம்பிக்கை வைத்திருந்தால்.. அதன் மூலம் தமிழக ஆட்சியைப் பிடித்து ஈழத்தமிழர்களுக்கும் தமிழக மக்களுக்கும் திராவிடத்தின் பெயரால் நல்லதைச் செய்யலாமே..??!

அதைவிட்டிட்டு.. ஏன் ஆள் மாறி ஆள் தொத்திக்கிட்டு.. பின்னர் அவங்களை தூற்றிக்கிட்டு.. இருக்கிறார் இந்தக் கொளத்தூர் மணி. இதனால்.. ஈழத்தமிழர்களுக்கு.. தமிழக மக்களுக்கு என்ன நன்மை..??!

சீமான் நடத்துவது பாசிச நாம் தமிழர் கட்சி என்று காட்டுவதன் வாயிலாக கொளத்தூர் மணி ஈழத்தமிழர்களுக்கு எதனை பெற்றுத்தரப் போகிறார்..??! தமிழக மக்களுக்கு எதனைப் பெற்றுத்தரப் போகிறார்..???!

இவற்றைச் சொல்லுங்கள்..???!

எமது பிரச்சனை கொளத்தூர் மணியை முன்னிலைப்படுத்துவதல்ல. அவர் எவராகவும் இருந்திட்டுப் போகட்டும். திராவிட மாயைக் கருத்தியலின் அழிவில் தான் தமிழினத்தின் வாழ்வு என்பது முடிந்த முடிவு. பெரியாரிசத்தின் போலித் திராவிட முழகத்தின் அழிவில்.. தமிழ் தேசிய இன எழுச்சியில்.. நாம் தமிழர் என்ற உணர்வெழுதலில் தான்.. தமிழக மக்களின் விடிவும்... எழுச்சியும்.. ஒற்றுமையும்..! இதனை எனி எவராலும் அசைக்க முடியாது. எனவே திராவிவ மாயாவிகள் அந்த வேடத்தைக் கலைத்து.. தமிழ் தேசிய நீரோட்டத்தில்.. இணைந்து கொள்வதே.. தமிழினத்திற்கும்.. அவர்களின் எதிர்காலத்திற்கும் நல்லது.

கொளத்தூர் மணி பற்றி தனிப்பட்ட ஆராய்ச்சியை வேண்டும் என்றால் விலாவாரியாக தனித் தலைப்பில் ஆராய்வோம். அப்போது தேவையான ஆதாரங்களை நாங்களும் அளிக்க முடியும்..! மற்றும்படி.. திராவிட வாத முன்னிறுத்தலை தவிர்த்து.. ஈழத்தமிழர் மீதான அவரின் தமிழ் இன உணர்வை எப்போதும் மதிக்கிறோம்..! அது அவரின் திராவிடக் கொள்கை.. பெரியாரிசும்.. சாராத ஒன்றாகவே நோக்குகிறோம்.

நாம் கேட்ட பல கேள்விகளுக்கு சரியான பதில் சொல்லாமல் வெறுமனவே பல்லிளித்துப் பயன் இல்லை..??! தலைப்பு கொளத்தூர் மணியின் அரசியல் பிறழ்வுகள் பற்றியதல்ல. நாம் தமிழர் என்ற தமிழ் தேசிய இன எழுச்சி மீது பாசிச சாயம் பூசும்... கொடிய தமிழின எதிரிகளான.. திராவிட வாதிகளின் செயலை குறித்து நிற்கிறது. அதை இட்டு தொடர்ந்து இங்கு கருத்தாடுதலே சிறப்பு..! கொளத்தூர் மணி பற்றி கருத்தாட இன்னொரு தலைப்பை திறக்கலாம். இதற்குள் அவரை செருகி அவருக்கு இலவச விளம்பரம் தேட வேண்டாம். இந்த திராவிட ஓசி விளம்பரத்திற்கு நாம் தயார் இல்லை..! :lol::):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

திராவிடம் மாயை என்று சொல்லிக் கொண்டு சீமான் முதலமைச்சர் ஆனாலும், சீமானாலும் ` நாம் தமிழராலும்` எதனையும் செய்து விட முடியாது.ஏனெனில் அவர்களின் கட்ச்சி ஆவணமே சொல்கிறது வெளியுறவுக் கொள்கை மத்திய அரசால் நிர்ணயிக்கப்படுவது என.

மத்தியில் இருக்கும் பார்ப்பனிய ஆளும் கும்பலும் இந்திய தேசியக் கட்சிகளும் அழிக்கப்படும் வரை `சீமானலோ` நாம் தமிழராலோ `இந்தியாவில்` எதனையுமே செய்து விட முடியாது.

அடுத்த தேர்தலுடன் எல்லாம் சந்தைக்கு வந்து விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.