Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்ரேலியரின் தீரமிகு விமானக் கடத்தல் பணய அதிரடி மீட்பு நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]வருடம்: 1976, [/size]

[size=5]மாதம்: ஜூன்[/size]

[size=5]நாள்: 27 [/size]

குவைத் நாட்டில் இருந்து பகரைன் வழியாக வந்த, SQ763 இலக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் கிரேக்க நாட்டின் ஏதன்ஸ் விமான நிலையத்தில் தரை இறங்கிய நேரம் காலை 6 மணி 45 நிமிடங்கள்.

விமானத்தில் இருந்து வெளியேறிய ஐந்து பயணிகளில் நால்வர் நேராக transit பகுதிக்கு சென்று சென்று பாரிஸ் நோக்கிச் செல்லும் Air France AF139 விமானதிற்க்கான check in முடித்து, அங்கிருந்த இருக்கைகளில், ஒருவருக்கொருவர் தெரியாதவர் போல் வெவ்வேறு இடங்களில், அமர்ந்தார்கள்.

அதே காலை 8:59 மணியளவில் Air France 139 விமானத்தின் பைலட், கப்டன் Michel Bacos, இஸ்ரேலிய நாட்டின் Ben Gurion விமான நிலையத்தில் இருந்து ஏதன்ஸ் வழியாக பாரிஸ் நோக்கிச் செல்லும் விமானதினை ஓடு பாதையில் இருந்து வானம் ஏற்றினார்.

அன்று வழமை போன்று சாதாரணமான பறப்பு ஆக இருக்கபோவதில்லை என அவர் கற்பனை கூட செய்து இருக்க முடியாது.

விமானம் ஏதன்ஸ் விமான நிலைய ஓடு பாதை நோக்கி இறங்கிய அதேநேரம், விமானத்தில் ஏற இருந்த 58 பயணிகள் 'அசட்டைத்தனமான' சோதனைகள் எல்லாவற்றினையும் முடித்து இருந்தனர்.

பயணிகளிலே, Ecuadorian கடவுச்சீட்டுடன் Ortega எனும் 25 வயதுப் பெண்ணும், சற்று பின் Peruvian கடவுச்சீட்டுடன் Garcia என்னுமொருவரும், இன்னும் சற்று பின்னால் Bahraini மற்றும் Kuwaiti கடவுச்சீட்டுகளுடன் மேலும் இரு கறுத்த நிறமான இருவர்களும் சிறிது படபடப்புடன் விமான நிலைய பஸ் இல் ஏற தயாரானார்கள்.

அவர்களும் கூட தாம் செய்யப் போகும் செயல்களின் இறுதி முடிவு குறித்து கற்பனை கூட செய்து இருக்க முடியாது.

38 பயணிகள் இறங்க, புதிய 58 பயணிகளுடன் மொத்தமாக 246 பேருடன், பெரும்பாலும் யூதர்கள், விமானம் பாரிஸ் நோக்கி 12:20 மணியளவில் கிளம்பியது.

சரியாக எட்டு நிமிடங்களின் பின்னர், Ortega, Garcia மற்றும் இரு அராபியர்களும் தமது திட்டத்தினை செயல் படுத்த எழுந்தார்கள்.

Garcia, கதவினை உடைத்துக் கொண்டு விமானிகள் பகுதிக்குள் நுழைந்தான். பன்னிரண்டாவது நிமிடத்தில், விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப் பட்டதனை, ஏதன்ஸ் விமான நிலைய கட்டுப் பாட்டு அதிகாரிகள் அறிந்து கொண்டார்கள்.

ஞாயிறு மந்திரிகள் சபைக் கூட்டத்தில் இருந்த இஸ்ரேலிய பிரதமருக்கு தகவல் கிடைத்த போது, அவருடன் பாதுகாப்பு அமைச்சர், போக்குவரத்து அமைச்சர் ஆகியோரும் இருந்தார்கள்.

இஸ்ரேலிய நாட்டுக்கு உரித்தான, கம்பீரமான, seriousness, அவர்கள் வசம் உண்டாயிற்று.....

பறப்போம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நாதமுனி.

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி தொடருங்கள் நானும் வாசிக்க ஆவலாய் உள்ளேன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் புராணக் கதைகள் சொல்வார்கள்!

ஆனாலும், வாரியார் வாயால் கேட்கும்போது, கதைக்கு ஒரு உயிர் வரும்!

அது போலத்தான், உங்கள் எழுத்து நடையும், நாதமுனி!

தொடருங்கள்!

Raid on Entebbe - 1977

இந்த கதையை தான் சொல்வீர்களாக இருந்தால் மிகவும் எதிர்பார்க்கின்றேன்..

தொடருங்கள் நாதமுனி, வாசிக்கக் காத்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் டிஸ்கவரியிலும் வந்திருந்தது.. தொடருங்கள் நாதமுனி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விமானம் எங்கே வீழ்ந்திருக்கும் என தெரியாத நிலையில், பயணிகளின் உறவினர்களை சமாளிக்க விமான நிலையத்தில் ஒரு வேகமான பொறிமுறை அமைக்கப்பட தேவையான ஒழுங்குகள் நடந்த அதேவேளை, சரியாக இரண்டு மணிக்கு உயிர் பெற்ற விமானத்தின் தொடர்பு வானொலி, லிபியாவின், பெங்காசி விமான நிலையத்தில் எண்ணெய் நிரப்ப அனுமதி கோரிய போது தான், விமானம் கடத்தப் பட்டது உலகத்துக்கு தெரிய வந்தது.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் (IDF) உசார் படுத்தப் பட்டனர். விமானம் எங்கே போகப் போகின்றது என தெரியாததால், தமது நாட்டுக்கு வரக்கூடும் என Ben Gurion விமான நிலையத்தினை IDF பொறுப்பு எடுத்தது.

மேலும் பெங்காசியில் இருந்த உள்ளூர் பலஸ்தீனிய பிரமுகர் விமானத்துக்கு அழைக்கப் பட்ட போது, கடத்தியவர்கள் யார் என இஸ்ரேல் புரிந்து கொண்டது.

எண்ணெய் நிரப்பிக் கொண்டு அன்று இரவு 9:50 மணிக்கு கிளம்பிய விமானம், மறுநாள் அதிகாலை, 3:15 மணி அளவில், ஒரு சில நிமிட எரிபொருள் மட்டுமே உள்ள நிலையில், உகாண்டா நாட்டின் என்டெபே விமான நிலையத்தில் தரை இறங்கியது.

அதேவேளை Ben Gurion விமான நிலையத்தில் command centre ஒன்றை உருவாக்கி அங்கே இருந்து விமானத்தின் பயணம் குறித்த தகவல்கள், ஒருங்கமைப்புகளை கவனித்துக் கொண்டிருந்த IDF பிரதம அதிகாரி மோட்டா குர், பாதுகாப்பு அமைச்சர் சைமன் பெராஸ் இடம் இருந்து நேரடி உத்தரவுகளைப் பெற்றுக் கொண்டிருந்தார்.

ஜூன் 28 , திங்கள்கிழமை பல விடை தெரியாத கேள்விகள் முன்னின்றன.

பதில்கள் தெரிந்தால் மட்டுமே, திட்டமிடல் நடக்கும் என்பதால், பதில்களை எதிர்பார்த்து கேள்விகள் காத்து இருந்தன.....

உகாண்டாவில் சர்வாதிகாரி இடி அமின் அட்டகாச ஆட்சி நாட்டை இருப்புப் பிடியில் வைத்து இருந்த காலப் பகுதி அது....

முக்கியமாக இடி அமின், இஸ்ரேல் உடன் நல்ல உறவு கொண்டிருக்கவில்லை.

முதலாவது கேள்வி, உகண்டா, விமானத்தின் இறுதி அடைவிடமா? அல்லது மீண்டும் எண்ணெய் நிரப்ப இறங்கிய இடமா?

உகாண்டா, இந்த கடத்தல் விடயத்தில் பங்காளியா அல்லது விமானம் எரிபொருள் இல்லாததால் அங்கே இறங்கியதா?

அதிகமான யூத பயணிகள் இருந்தாலும், விமானம் பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தம் ஆனதால், இஸ்ரேல், பிரான்ஸ் அரசினை, ராஜதந்திர தொடர்புகளை முன்னேடுக்கு மாறு வேண்டியது.

அதேவேளை விமானத்தில் இருந்த பயணிகளை வெளியேற்றி விமான நிலையத்தின் பழைய terminal கட்டிடத்துக்கு துப்பாக்கி தாங்கிய உகாண்டா வீரர்கள் பாதுகாப்புடன் நகர்த்தப் பட்டனர்.

தீடிரென அங்கே வந்த இடி அமின் 'பலஸ்தீனிய பிரச்சினை' குறித்த பிரசங்கம் ஒன்றினை பணயக் கைதிகளுக்கு நிகழ்த்தினார்.

இது குறித்த புலனாய்வு தகவல்கள் இஸ்ரேலினை அடைந்த போது, நிலைமை தெளிவாக புரியத் தொடங்கியது.

ஒரு நாட்டின் தலைமை கடத்தல் காரருடன் நேரடி தொடர்பு கொள்ளும் நிலைமையில், அபிரிக்க வான் பரப்பு இனி பாதுகாப்பானதாக இருக்க முடியாது என சைமன் பெராஸ், வானொலியில் இஸ்ரேலியர்களுக்கு சொன்னார்.

பயணிகள் விடுதலைக்காக என்ன கோரிக்கை வரப் போகின்றது என்ற கேள்வியே இப்போது அவர்கள் முன் இருந்தது......

வெகு சீக்கிரமே, கடத்தல்காரர் இலக்கு, இஸ்ரேல் அரசு தான் எனத் தெளிவாகியது.

கோரிக்கைகளுடன் பார்ப்போம்....

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 29, செவ்வாய்க்கிழமை.

மாலை 5 மணி.

பிரதமர் ராபின் தலைமையில் முக்கிய கூட்டம்.

அன்று பகல் பிரான்ஸ் வெளிஉறவு அமைச்சிடம் இருந்து கிடைத்த தகவல் படி, பயணிகள் விடுதலைக்கு பதிலாக விடுவிக்கப பட வேண்டிய, இஸ்ரேல, சுவிஸ், பிரான்ஸ், ஜெர்மனி, கென்யா ஆகிய நாடுகளில் சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் பெயர்கள் தரப் பட்டிருந்தன.

விதிக்கப் பட்ட காலக்கெடு: GMT 12 Noon, வியாழக் கிழமை, ஜூலை 1.

எடுத்த எடுப்பிலேயே IDF அதிகாரி குர் இடம் பிரதமர் ராபினின் முதல் கேள்வி பாய்ந்தது.

என்டபே பயணிகள் மீட்புக்கான உங்கள் திட்டம் என்ன?

'உத்தரவு வராததால், இன்னும் ஒரு திட்டமும் இல்லை'.

அவரை தீர்க்கமாகப் பார்த்தார், பிரதமர் ராபின்.

'என் முன்னால் இரு தெரிவுகள் இருக்க வேண்டும். ஒன்று ராஜதந்திரம் அடுத்து அதிரடி. எதனைத் தெரிவு செய்வது என்பது மட்டுமே எனது வேலை. தெரிவுகளை தயார் நிலையில் வைத்திருப்பது பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை வேலை'.

இவ்வாறு சொல்லிய பிரதமர் ராபின் கூட்டத்தினை மறு நாள் காலை 11 மணி வரை ஒத்தி வைத்தார்.

இரவு மணி 9.

பாதுகாப்பு அமைச்சர் சைமன் பெராஸ் தலைமையில் முக்கிய இராணுவ அதிகாரிகள் கூட்டம். மோட்டா குர் கூட அங்கே இருந்தார்.

பல விடயங்கள் தர்கிகப் பட்டன. பல விவாதிக்கப் பட்டன.

எல்லோரும் ஒருவரின் அபிப்பிராயத்துக்கு காத்திருந்தனர். அவர் தான் விமானப் படைகளின் தலைமைத் தளபதி பென்னி பெலேட்.

கடந்த 36 மணி நேரமாக தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசிததனை சொல்லும் நேரம் வந்த போது, கம்பீரமாக கனைத்தபடி ஆரம்பித்தார்.

மிகவும் தெளிவாகவும், உறுதியாகவும், சந்தேகத்துக்கு இடமே இல்லாத வகையில் சொன்னார்:

'yes sir, we, the IDF can do it'.

'நாம் என்டபே யில் அதிரடி மூலம் பயணிகளை மீட்க முடியும்'

தொடர்ந்த அந்த இரவில், தரைப் படை, விமானப் படை அதிகாரிகள் மிக முக்கிய வேலைகளில் மூழ்கினார்கள்.

உகண்டாவில் கடமை ஆற்றிய முன்னால் ராஜதிந்திரிகள், ஓய்வு பெற்ற, இடி அமினுக்கு ஆலோசனை வழங்கிய அதிகாரிகள், என்டேபே விமான நிலையத்தில் கடமையில் இருந்த இராணுவத்தினர், இராணுவ அதிகாரிகள் பலர் இரவு ஒரு மணி, இரண்டு மணி என குறுகிய அவகாசத்தில் அழைக்கப் பட்டனர்.

(இஸ்ரேலியர், இடி அமின் உறவு, யுத்த விமானகள் தர முடியாது எனும் முடிவினால் அறுந்தது).

மிகச் சிறந்த வீரர்கள் தெரிவு, ஆயுதங்கள் தயார் நிலை, விமான, கவச, வாகன தயார் நிலை என மிகவும் வேகமாக திட்டம் முன்னேறிக் கொண்டு இருந்தது.

முதல் குழு, எதிர் பாராப் பிரச்சனைக்கு உள்ளானால், அதிரடியினை என்டேபே விமான நிலையத்துக்கு வெளியேயும் கொண்டு செல்ல இரண்டாவது, மூண்டாவது திட்டங்களும் தயாரானது.

அடுத்த நிலைத் திட்டங்களுக்கு தேவையான ஆளனி, அவர்கள் போக்குவரத்து என திட்டம் இடுகையில், முதலாவது திட்டம் எவ்வளவு கவனமாக செயல் படுத்த வேண்டும் என்பதன் முக்கியத்துவம் தெரிந்தது.

அதே வேளை, இவர்களுக்குத் தெரியாத ஒரு நிகழ்வாக பயணக் கைதிகள் இரு பிரிவினராக பிரிக்கப் பட்டனர்.

ஒரு இடத்தில் நெருக்கமாக இராது, பக்கத்தில் உள்ள இன்னும் ஒரு அறையில் தங்குவதன் மூலம் இட நெருக்கடியினைக் குறைகின்றோம் என கடத்தல் காரர் ஒருவரால் சொல்லப் பட்டாலும், உண்மையிலே பிரிக்கப் பட்டு அடுத்த அறைக்கு அனுப்ப பட்டோர் யூதர்கள் என்பதனையும், காலக் கெடு முடிந்த பின் ஒன்றன் பின் ஒன்றாக கொலை செய்ய படவே அவ்வாறு பிரிக்கப் பட்டர்கள் என்பதுவும் பின்னர் தெரிய வந்த போது, ஹிட்லர் கால கொடுமைகள் மீண்டும் அனைவர் நினைவில் வந்தன.

பார்ப்போம் அதிரடி ....

Edited by Nathamuni

என்ரபே 1977 தோடர்பான கதை ஒன்று 1990 களில் என்று நினைக்கின்றேன் தினமுரசு பத்திரிகையில் அற்புதன் ஒரு பெருந்தொடராக எழுதிக் கொண்டிருந்தார் . அந்தக் கதை பற்றி அவர் கையாண்ட சொல்லாடல்கள் , கதையை நகர்த்தும் பாணி உண்மையிலேயே புல்லரிக்க வைத்தது . குறிப்பாக உகண்டாவில் கடத்தல் விமானத்தை இறக்கியபோது , அப்போதைய சர்வாதிகாரி எடிஅமீன் நேரடியாக வரவேற்புக்கு சென்ற காட்சியும் , அதற்கு முதல் வெள்ளை அழகிகளுடன் உல்லாசம் , பிளஸ் மலைப்பாம்பு சூப் குடித்த வர்ணனைகள் மறக்க முடியாதவை . அந்தக் கதையை ஒரே மூச்சில் ஒவ்வோரு வரமும் மாலாகடையில் தினமுரசு வாங்கிப் படித்து முடிப்பேன் . உங்கள் பாணியும் வித்தியாசமாக இருக்கின்றது . வாழ்த்துக்கள் .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோமகன்,

wepons of mass destruction (WMD) குறித்து வந்த செய்திகளை மறந்திருக்க மாட்டோம்.

மேற்குலகு வழிக்கு வராத ஒருவரை பதவியில் இருந்து அகற்ற செய்யும் முதல் வேலை அவரது பெயரை நாறச் செய்வது தான்.

சதாமுக்கு அண்மையில் நடந்த இந்த விளையாட்டு, இடி அமினுக்கும் நடந்தது. அதுவே கடாபிக்கும் நடந்தது.

மலைப் பாம்பு சூப் மட்டும் அல்ல, மனித மாமிசம் உண்பவராகவே சித்தரிக்கப் பட்டார். இவ்வாறு பெயரை நாறப் பண்ணி பின்னர் ராணுவ நடவடிக்கை எடுக்கும் போது, 'வரி செலுத்தும்' பொது மக்கள், எதிர்க்க மாட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜூன் 30, புதன் கிழமை.

மொசாட் புலனாய்வுத் துறை முடுக்கி விடப்பட்டு பல வழிகள் மூலம் வந்த புலனாய்வுத் தகவல்கள் ஆராயப் பட்டு திட்டமிடலில் சேர்க்கப் பட்டன.

உகாண்டவுடன் நல்லுறவு இருந்த சமயத்தில் இடி அமினுக்கு மிக நெருக்கமாக இருந்த ராணுவ மேயர் Burka Bar-Lev, சைமன் பெராஸ் அலுவலகத்துக்கு அழைக்கப் பட்டு, இடி அமினுடன் சிநேக பூர்வமாக கதைக்க வைக்கப் பட்டார்.

ஆகா, ஓகோ என்று இடி அமினை புகழ்ந்து தள்ளி (மொசாட் திட்டப்படி), ஆப்பிரிக்காவில் உன்னை போல் தைரியமான தலைவனே கிடையாது. ஒரு இராணுவ வீரனாய் இருந்து உகாண்டா நாட்டின், ஏன், ஆபிரிக்காவின் ஈடு இணை இல்லாத

தலைவனாய் உயர்ந்த உன்னை பாராட்டவே, இன்னுமோர் இராணுவ வீரனாய் அழைத்தேன் என தலையில் ஐஸ் மழை பொழிய, பெரு மகிழ்வுடன் இடி அமின் கொட்டிய வார்த்தைகளில் தமக்கு தேவையான தகவல்களை மறுபுறத்தில் மொசாட் பதிவு செய்து கொண்டிருந்தது.

அதேவேளை கைதிகள் எவரையும் விடுவிக்கப் போவதில்லை என ஜெர்மனி, பிரான்ஸ் அறிவித்து விட்டன. மேலும் பிரான்ஸ், இஸ்ரேலிய அரசு தமது நாட்டோரினைப் மீட்கும் எந்த நடவடிக்கைக்கும் தமது ஆதரவு இருக்கும் என ரகசியத் தகவலை அனுப்பி வைத்தது.

விமானப் படை தலைமை அலுவலகத்தில் திட்டமிடல் இறுதி வடிவம் அடைந்து கொண்டிருந்தது. என்டபே போய் சேர்வது அல்ல பிரச்னை. வருவது இஸ்ரேலியர்கள் என அவர்கள் அறியாமல் இருக்க வைக்க வேண்டியது தான் அவர்கள் முன் நின்ற தலையாய பிரச்சனை.

முன்னமே தெரிந்தால், உகாண்டா விமான எதிர்ப்பு பீரங்கிகள், தம்மை இறங்க முடியாது செய்துவிடும் என்பது தான் அவர்களது கவலை.

அதேவேளை, என்டபே விமான நிலையத்தில் இருந்த பிரான்ஸ் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பி பயணிகள் 47 பேரை திருப்பி அனுப்ப உகண்டா வீரர்கள் நடவடிக்கை எடுத்தனர்.

விமானத்தின் கப்டன் தான் இறுதிவரை கடைசி பயணியுடன் நிற்பேன் என கூற, மற்றைய பல விமான சிப்பந்திகள் வலுக் கட்டாயமாக விமானத்தில், உகாண்டா இராணுவத்தினரால் அனுப்பபட்டனர்.

அனுப்பப்பட்டோரில் எவருமே யூதர்கள் இல்லை.

அதேவேளை,

IDF உயர் அதிகாரிகள் சிலர் மட்டுமே ரகசியமாக திட்டமிடலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இரண்டு அதிகாரிகளுக்கு உடனடியாக தமது தலைமை அதிகாரிகளிடம் report செய்யுமாறு அவசர உத்தரவு சென்றது.

ஒருவர் பிரிகேடியர் ஜெனரல் Dan Shomron. பிற்பகல் 3.30 மணிக்கு மேயர் ஜெனரல் (குட்டி) Kuti Adam ஐ சந்திக்குமாறு உத்தரவு வந்திருந்தது.

அடுத்தவர் (ஜொனி) லியுடிநேன்ட் கேர்னல் Jonathan Netanyahu. அவரது பிரிவு அதிகாரி முக்கியை (Muki) உடனடியாக சந்திக்குமாறு உத்தரவு வந்திருந்தது.

IDF திட்டங்கள் பற்றிய எந்தவிதமான விடயங்களும் தெரியாத நிலைமையில், சாதாரண இஸ்ரேலிய மக்கள் போன்று பயணிகள் குறித்த பெரும் ஆவலுடன் இருந்த இவர்களே களத்தில், அதிரடியில் முக்கிய பங்கு கொள்ளப் போகின்றனர்.

அதேவேளை திருப்பி அனுப்பப்பட்ட 47 பயணிகள் பிரான்சின் orly விமான நிலையத்தினை வந்து அடைந்தனர்.

உகாண்டாவினை பொறுத்த வகையில் இந்த செயல் ஒருமுழு முட்டாள் தனம் என அறிந்திருக்கவில்லை.

வீடு திரும்பிய அந்த 47 பயணிகள் வீட்டுக் கதவுகள் அன்று இரவு தட்டப்பட்டன. வந்தர்வர்கள் பிரான்ஸ் மற்றும் மொசாட் புலனாய்வுத் துறையினர்.

அவர்களிடம் இருந்த தங்கச் சுரங்கம் போன்ற பெரும் தகவல்கள் பெறப் பட்டன. உகண்டா வீர்கள் எண்ணிக்கை, அவர்களது ஆயதங்கள், பயணிகள் வைக்கப் பட்டிருக்கும் இடம், தீவிரவாதிகள் எண்ணிக்கை. என தேவையான தகவல்கள் உடனுக்குடன் இஸ்ரேலுக்கு, திட்டம் இடுவோர் கைக்கு சென்றன.

பெரும் வரப் பிரசாதமாக கிடைத்த இந்த தகவல்கள் திட்டமிடலில் மிக முக்கிய பங்கு ஆற்றின.

அதேவேளை இவர்கள் திருப்பி அனுப்பப்பட்ட தற்கான ராணுவ ரீதியில் முட்டாள்தனமான காரணம் என்ன என இன்னும் புரிந்து கொள்ள முடிய வில்லை என இந்த அதிரடியில் பங்கு பற்றிய முன்னாள் ராணுவ அதிகாரிகள் இன்றும் கூட சொல்கின்றார்கள்.

அன்று இரவு பாதுகாப்பு அமைச்சர் சைமன் பெராஸ் தலைமையில் அதி உயர் அதிகாரிகள் தலைமையில் மிக முக்கிய கூட்டம் நடந்தது. மூன்று திட்டங்கள் அவர்கள் முன் இருந்தன.

1. Victoria ஏரியில் பாரசூட் மூலம் இறங்கி, அங்கிருந்து ரப்பர் படகுகள் மூலம் என்டபே அருகே சென்று தரை வழி சென்று அதிரடி தாக்குதல்.

2. கென்யா நாட்டுடன் பேசி, அங்கே பெரும் எண்ணிகையில், ரகசியமாக இறங்கி, அங்கிருந்து, Victoria ஏரியில் படகுகள் மூலம் உகண்டா சென்று, என்டபே அருகில் சென்று தரை வழி சென்று அதிரடி தாக்குதல்.

3. நேரடியாக என்டபே விமானத் தளத்தில் இறங்கி அதிரடி தாக்குதல்.

routeofrescueaircraft325.jpg?w=325&h=632

என்டபே விமான நிலையத்திற்கு பக்கத்தில் விக்டோரியா எரி இருப்பதனை கவனியுங்கள்.

எதனை தெரிவு செய்வார்கள் எனப் பார்ப்போம்....

Edited by Nathamuni

கோமகன்,

wepons of mass destruction (WMD) குறித்து வந்த செய்திகளை மறந்திருக்க மாட்டோம்.

மேற்குலகு வழிக்கு வராத ஒருவரை பதவியில் இருந்து அகற்ற செய்யும் முதல் வேலை அவரது பெயரை நாறச் செய்வது தான்.

சதாமுக்கு அண்மையில் நடந்த இந்த விளையாட்டு, இடி அமினுக்கும் நடந்தது. அதுவே கடாபிக்கும் நடந்தது.

மலைப் பாம்பு சூப் மட்டும் அல்ல, மனித மாமிசம் உண்பவராகவே சித்தரிக்கப் பட்டார். இவ்வாறு பெயரை நாறப் பண்ணி பின்னர் ராணுவ நடவடிக்கை எடுக்கும் போது, 'வரி செலுத்தும்' பொது மக்கள், எதிர்க்க மாட்டார்கள்.

நான் சொல்லியது தினமுரசில் வந்த அற்புதனின் தொடரைப்பற்றி மட்டுமே . அதில் உள்ள அழகியல் வர்ணனைகளைச் சொல்லியிருந்தேன் . நீங்கள் உலக அரசியலை எனக்கு சொல்கின்றீர்கள் . பொதுவாக ஒருவருடைய உடல்மொழி , குண இயல்புகள் அழகியல் கற்பனையுடன் சேர்ந்து வருவதுதான் சிறுகதை அல்லது நாவல் என்ற அடைமொழியில் வாசகர்கள் மனதில் இடம்பிடிக்கின்றது . நான் சொன்ன அழகியல் கற்பனைகள் இல்லாதவிடத்து அவை வாசகர்களுக்கு வெறும் செய்திகளே . மேலும் , ஒரு படைப்பாளியின் படைப்புக்கு ஒருவர் கருத்து எழுதினால் படைப்பிற்குச் சொந்தமானவர் கருத்துக்களத்தில் நன்றி சொல்வது கருத்துக் கள நாகரீகம் என்பதையும் உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் , ஒரு படைப்பாளியின் படைப்புக்கு ஒருவர் கருத்து எழுதினால் படைப்பிற்குச் சொந்தமானவர் கருத்துக்களத்தில் நன்றி சொல்வது கருத்துக் கள நாகரீகம் என்பதையும் உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன் .

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என புரியவில்லை.

நன்றி என்ற சொல்லை பாவிக்காமல் பதில் மட்டும் தந்தால்?

நான் சொல்ல வந்தது இடி அமின் பற்றிய மேற்குலகு பரப்பிய 'போலியான' கருத்தின் மீதான எனது பார்வை மட்டுமே. நீங்கள் சொன்ன பத்திரிகையாளருக்கு தனது பத்திரிகை விற்க வேண்டிய தேவை இருந்த காரணத்தால் 'விலா வாரியாக' அவ்வாறு எழுதினார்.

இதனை நீங்கள் தனிப்பட்ட ரீதியில் எடுப்பதன் காரணம் புரியவில்லை.

'தெளிவு படக் கூடிய' அளவுக்கு நான் புத்திசாலி அல்ல. அதே வேளை விதண்டாவாதத்திலும் எனக்கு நம்பிக்கையோ, நேரமோ இல்லை.

நன்றி

Edited by Nathamuni

ஆம் நாத முனி நீங்க சொன்ன மாதிரி இடி அமீனை கொடூரமானவனாக சித்தரித்து தான் அற்புதனின் அந்த தொடர் அமைந்து இருந்தது...

தொடருங்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அபராஜிதன்,

இடி அமின் குறித்த கிளைக் கதை ஒன்றினைப் பகர விரும்புகின்றேன்.

பிரிட்டிஷ் காலனியாக இருந்த உகண்டாவில், இந்தியர்கள் பெருமளவில் இருந்தார்கள். ஒரு இந்திய பெண்ணை இடி அமின் விரும்பி இருந்தார்.

அவரோ அவரைப் புறக்கணித்தார். தொல்லை தாங்க முடியாத நிலையில், ஒரு நாள், நான் குரங்குகளை எல்லாம் மணம் முடிப்பதாக இல்லை என அந்த பெண் சொல்லி விட்டார்.

அன்றுடன் தொல்லை நின்றது.

பின்னால் நாட்டின் உயர் பதவியினை பிடித்த போது, பலி வாங்காது, இந்தியர்கள் குறித்த திகதிக்குள் கவரவமாக வெளியேற உத்தரவு போட்டார். செய்தது பிழை தான் எனினும், எந்த வித உயிர் இழப்பு இன்றி வெளியேற விட்டதற்கு இன்றும் பல இந்தியர்கள், அதுவே பெரிய விடயம் என்கின்றார்கள்.

மேலும் இன்னுமோர் சுவாரசியமான சம்பவம்:

இவ்வாறு வெளியேறிய இந்தியர்களை, உதவி செய்வது போன்று விமானங்களை அனுப்பி, இந்தியாவுக்கு கொண்டு சென்று இறக்கியது பிரிட்டிஷ் அரசு.

அப்போது இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி. தமது அதிகாரிகளை விமானத்தினுள் அனுப்பி, வந்தவர்கள் இந்தியாவினுள் வர விரும்புகின்றர்களா அல்லது பிரித்தானியா போக விரும்புகின்றார்கள என கேட்டார்.

எல்லோரும், பிரித்தானியா போகவே விரும்புவதாக சொன்னதும், பிரித்தானியா தூதரை அழைத்து, இவர்களது முன்னோரை நீங்கள் உகண்டா கொண்டு சென்ற போது, இந்தியாவும், உகண்டாவும் உங்கள் காலனிகள்.

இப்போது இந்தியா சுதந்திர நாடு. அவர்கள் உங்கள் பொறுப்பே அன்றி எமது பொறுப்பு அல்ல என திட்ட வட்டமாக கூற, வேறு வழி இன்றி உகண்டா இந்தியர்கள் பிரித்தானியாவில் குடியேற அனுமதிக்கப் பட்டனர்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தொட‌ருங்கள் நாதமுனி உங்கள் கதை மூலம் பல விச‌யங்களை தெரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நாகமுதனி, தெரிந்த கதை தான் எண்டாலும் மீண்டும் படிப்பது ஆர்வமாக இருக்கிறது. இடி அமீனை நானும் கொடூரமான ஒரு சர்வாதிகாரியாகவே கற்பனை செய்து வைத்திருக்கிறேன். அற்புதனின் தொடரின் தாக்கம் அப்படி. தினமுரசு ஒரு மசாலாப் பத்திரிகை எண்டு நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை. அவர்களின் அநேகமான தொடர்களை வாசிக்கும் பொது ஒரு மலையாள பிட்டுப் படம் பார்ப்பது மாதிரி இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Thumpalayan

இடி அமீனை நானும் கொடூரமான ஒரு சர்வாதிகாரியாகவே கற்பனை செய்து வைத்திருக்கிறேன்.

இடி அமின் ஒரு சர்வதிகாரி தான். சந்தேகமில்லை. ஆபிரிக்காவில் மேற்குலகுக்கு, சிம்ம சொப்பனமாக இருந்தார்.

ஆனால் முட்டாள் தனம் மிக்க சர்வதிகாரி. அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்பது போல் முட்டாள் தனங்க்களை சிறிது அதிகமாகவே, ஆனால் வெளிப்படையாகவே செயதார்.

ஆபிரிக்காவில் சுவாசிலாந்து எனும் நாட்டில் இன்றும் மன்னர் முன் இளம் பெண்கள் அரை நிர்வான நடனம் ஆடி, அவர்களில் இருந்து பிடித்தவர்களை மன்னர் 'தூக்குவார்'.

இது போலவே இடி அமினும் அவருக்கு பிடித்த பெண்களை, பலர் இருக்கும், விழாக்களில் 'தூக்குவார்'. அவரது கவனத்தினை கவர 'சீவி, சிங்காரித்து' வந்து தூக்கப்படும் பெண்களும் இருந்தார்கள். அது பிரிக்க 'சுயம்வர' ஸ்டைல்.

இதுவும் மேற்குலகு பிரசார வேலைகளுக்கு கிடைத்த அவல்.

அதே போல் ஒரு பெண் நிராகரித்த காரணத்தினால், அவர் சார்ந்த சமுகத்தினையே, நாட்டினை விட்டு வெளியேற்றினார்.

பொருளாதார ரீதியில் முட்டாள் தனமான இந்த நடவடிக்கை இன்றும் கூட உகாண்டா தேசத்தினை பாதிக்கின்றது.

அவரது முட்டாள் தன அதிரடிகளை, அவரது பாணியிலேயே எதிர் கொள்ள முயன்ற மேலுலகு அவரது தனிப்பட்ட குண இயல்புகளை சிதைத்தது.

Rise and fall of Idi Amin எனும் திரைப் படத்தில் அவரை 'நர மாமிசம் உண்பவராக' காட்டுவர்.

உண்மையிலேயே அப்படி பழக்கம் உள்ள ஒருவருடன் யாருமே கூட இருந்திருக்க முடியாது. தனி மரம் தோப்பாக முடியாது என்பது போல், அவரது உத்தரவுகளை செயல் படுத்த யாரும் அருகில் இருந்திருக்க முடியாது. துண்டைக் காணோம், துணியை காணோம் என ஓடி இருப்பார்கள்.

இறுதியில் தனது 7 மனைவிகளுடன் 35 பிள்ளைகளுடன், சவூதியில் அடைக்கலம் பெற்று அமைதியாக வாழ்ந்து அண்மையில் 84 வயதில் இறந்து போனார்.

முக்கியமான விடயமாக பதவியில் இருக்கையில் இவர் மீது சேறு வாரி இறைத்த மேற்குலகு, சவூதிக்கு வந்த பின்னர் எந்த வித வழக்கும் போட்டு அவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இடி அமீனைப் பற்றி இன்னுமொரு கதை, நாதமுனி!

பெரும்பாலான இந்தியர்கள், கென்யாவில் புடவைக் கடைகளே வைத்திருந்தனர்!

இவர்கள் சென்ற பின்பு, அநாதரவாகக் கிடந்த கடைகளை, தனது வால் பிடிகளுக்குக் கொடுத்து, வியாபாரம் செய்யச் சொன்னார், இடி அமின்!

பொதுவாக இந்தியர்கள், விலைப் பட்டியல் வைத்து வியாபாரம் செய்வதில்லை. அப்படிப் போடும் விலைகளும், ஏதாவதொரு சங்கேத மொழியில் இருக்கும்!

இறுதியில் விலை தெரியாத, அமீனின் வால்பிடிகள், அந்த உடுப்புக்களில் போடப் பட்டிருந்த அளவு (Size) ஐப் பார்த்து, அளவுக்கே, மலிவாக விற்று முடித்தார்கள்!

உதாரணமாக ஒரு சேட்டின் அளவு பதினான்கு அரை, எழுதியிருந்தால்,அதை பதினான்கு அரைச் சதத்திற்கு விற்றார்கள்!

பெண்களின் உடைகள், இன்னும் மலிவாகப் போயிருக்கும்!

(ஓர் இந்திய நண்பர் சொல்லக் கேட்டது!)

  • கருத்துக்கள உறவுகள்

idi_amin.jpg

வெள்ளையர்கள் தன்னை பல்லக்கில் தூக்கிச் செல்லவும், குடை பிடிக்கவும் வைத்து சந்தோசப்பட்டவன் இடி அமீன். :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அற்ப ஆசை...

முட்டாள்களிடம், பணத்தினைக் வாங்கிக் கொண்டு தூக்க நானும் ரெடி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் மிக விரைவாகக் கடந்து கொண்டிருந்தது.

உகண்டாவில் இருக்கும் மீதமுள்ள பயணிகளின் உயிர் இஸ்ரேலிய அரசின் முடிவில் ஊசல் ஆடிக் கொண்டு இருந்தது.

சைமன் பெராசினைப் பொறுத்த வரையில் தீவிரவாதிகளுக்கு அடி பணிவது, இது போன்ற பல நடவடிக்கைகளை உக்குவிப்பதாக அமையும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.

மேலும் புலனாய்வுத்துறையினர், உகண்டாவின் புதிய, மற்றும் பணயக் கைதிகள் வைக்கப் பட்டிருக்கும் பழைய Terminals' கட்டிடங்கள் இஸ்ரேலில் பிறந்து இன்னுமொரு நாட்டில் வாழும் யூதர் ஒருவராலே கட்டப் பட்டது என கண்டுகொண்டனர்.

அவரை தொடர்புகொண்டு தேவையான முக்கிய தகவல்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.

மேலதிகமாக இரண்டொரு நாள் தவணை பெறுவது ராணுவ ரீதியில் மிகுந்த பலன் அளிக்கும் என அதிரடித் திட்டத்தினை தயாரிப்போர் கருதினர்.

காலை 9 மணிக்கு மந்திரிகள் சபைக் கூட்டம். அவர்கள் எடுக்கும் முடிவினை தெரிந்து கொள்ள வெளியே உலக மீடியாக்கள் நிறைந்து இருந்தன.

19 மந்திரிகள் அடங்கிய அமைச்சரவையில் பேச்சுவார்த்தை மூலம் பணயக் கைதிகளை விடுவித்துக் கொள்ள, விவாதம் நடாத்த நேரம் இன்மையால், ஆம், இல்லை என்ற வாக்கெடுப்பில் முடிவு எடுக்கப் பட்டது.

எல்லா அமைச்சர்களுமே 'திட்டப்படியே ' ஆம் என வாக்களித்த போது, காலக் கேடு முடிய 90 நிமிடங்களே இருந்தன.

தயாராக இருந்த ராணுவ மேயர் Burka Bar-Lev, இடி அமின் உடன் பேசினார். 'ஐயா, பிரான்ஸ் இஸ்ரேவேலைக் கைவிட்டு விட்டது. இதனை தீர்த்து வைக்க கூடியவர் நீங்கள் ஒருவர் தான்' என சொல்லி, இஸ்ரேலிய அமைச்சரவை தீர்மானத்தினை பத்திரிகை யாளருக்கு தெரிவிப் பதற்கு முன் உங்களுக்கு தெரிவிகின்றேன் என கூறினார்.

அக மிகிழ்ந்து போன இடி அமின், ஞாயிறு மாலை 2 மணி வரை காலக்கெடுவை நீடித்தது மட்டுமல்லாது, இஸ்ரேலிய அமைச்சரவை முடிவினை உகண்டா வானொலியே முதலில் உலகுக்கு அறிவிக்கும் எனவும் அடம் பிடித்தார்.

அட 'இத எல்லாம் கேக்க வேண்டுமா ஐயா' என்பது போல், ஒத்துக் கொண்டார் இடி அமின் நண்பர், மேயர் Burka Bar-லேவ்.

அதே வேளை இந்த 'நல்ல சேதியினை' மீண்டும் விமான நிலையத்திற்கு தானே நேரில் சென்று பணயக் கைதிகளிடம் பூரிப்புடன், சொன்னார் இடி அமின்.

மாலை மூன்று மணிக்கு, சைமன் பெராஸ் தலைமையில் கூட்டம். சரியாக 45 நிமிட உயர் ஆலோசனைக்குப் பின், மேஜர் குட்டி அடம் அவர்களிடம் இருந்து 'பயணிகளை அதிரடி மூலம் மீட்பதற்கான', உத்தியோகபூர்வமான ரகசியக் கட்டளை பிரிகேடியர் ஜெனரல் Dan Shomron இடம் வந்து சேர்ந்தது.

மாலை 5 மணிக்கு விமானப் படையினருடன் இறுதி திட்டமிடலில் இருந்த Dan Shomron, மாலை 6 மணிக்கு பாதுகாப்பு அமைச்சர் சைமன் பெராஸ் அவர்களை சந்தித்தார்.

தமது திட்டத்தினை விபரித்தார்

திருப்தியுடன் 'நேரடியாக என்டபே விமானத் தளத்தில் இறங்கி அதிரடி தாக்குதல் மூலம் மீட்பதற்கான' இறுதி உத்தரவுப் பத்திரத்தில் கை எழுத்திட்டார் அமைச்சர் சைமன் பெராஸ்.

அதரடித் தாக்குதலின் கட்டளைத்தளபதியாக பிரிகேடியர் ஜெனரல் Dan Shomron நியமனம் ஆகினார்.

மறுபுறத்தே மேஜர் குட்டி அடம் அவர்களது உத்தரவில் என்டபே விமான நிலைய மாடல் ஒன்று உருவாகப் பட்டு கேர்னல் Jonathan Netanyahu (Joni) தலைமையிலான இராணுவ வீரர்கள் ஒத்திகையில் இருந்தார்கள்.

அதேவேளை மேலும் 101 பயணிகள் பிரான்ஸ் திரும்பினர். மிகுதியாக இருந்தவர்கள் யூதர்கள் மட்டுமே.

அவர்களிடம் இருந்து கிடைத்த மேலதிக தகவல் படி, கடத்தல்காரர் நோக்கம் தெளிவாகியது. அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை. முழுக் கோரிக்கையும் நிறை வேற வேண்டும் அல்லது பயணிகள் எல்லோருமே கொலையாவர்.

இடி அமினின் பாதுகாப்பு இருப்பதால், கடத்தல் காரர் தமது பாதுகாப்பு குறித்து கவலை படவில்லை.

மேலும் இடி அமினின் வேண்டுதலுக்காகவே, விருப்பமின்றி காலக் கேடு நீடிக்கப்பட்டது.

இத்தகவல்கள், அரசாங்கத்தில் இருந்த சில மேன்போக்காளர்களின் அபிப்பிராயத்தினை மாற்றி அதிரடி தான் முடிந்த முடிவு எனும் நிலைப் பாடு எடுக்க வைத்தது.

தீவிரம் கூடும்......

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.