Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சோத்து ஆன்ரிங்க சுயசரிதை..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1989....

ஈழத்தில்

இந்திய ஆக்கிரமிப்பு நேரம்

புலியும் சிங்கமும்

கைகுலுக்கிய காலம்....

பலாலியில் இருந்து

சிங்கள விமானப்படை

இருக்கை கழற்றிய

வெற்று.. விமானங்கள்

சில பல ஆயிரங்கள் கறந்து..

மந்தைகளாய்

அடுக்கிப் பறந்தன

தமிழ் இளைஞர்கள் கூட்டம்..!

மேற்கு நாட்டில்

அகதி அந்தஸ்துக்காய்

அலையும் தமிழன்

அணியணியாய் புறப்பட்டான்..

காணி விற்றும்

தாலி விற்றும்

பணம் திரட்டியே

சொகுசாய்

ஒரு வாழ்க்கை தேடி..

தாயக விடியலைப் பின்போட்டு

தன் குடும்ப விடியலை

முன் வைத்து...!

1990......

காலம் மாறிப் போனது

குலுக்கிய கரங்கள்

சண்டை இட்டன..!

அதே இருக்கை கழற்றிய விமானங்கள்

தமிழன் தலையில்

பீப்பாய்

குண்டுகளாய் கொட்ட...

ஓடினவன் அதிஸ்டமென்று

அகதி அந்தஸ்து வாங்க..

ஊரில் எம்பிட்டவன்

உயிர் வாழ்தலில்

அர்த்தம் காண

நிலம் மீட்கப் போனான்..!!

இன்னும் சிலரோ

வீட்டோடு பதுங்கியே

கிடந்தனர்...

அடுத்த தவணைக்கு

எப்ப பாதை திறக்கும் என்றே..!

1995....

சிங்களச் சூரியக் கதிர்கள்

தேசம் சுற்றி வளைக்க..

தமிழர் நிலம் விழுங்கிச்

சிங்களம்

புலி விரட்டி

தேசம் தனை ஆக்கிரமிக்க..

"மிரண்டா"ப் போத்தலுக்கு

மிரண்டு போன தமிழினம்

பூமாலை போட்டே

வரவேற்றது சிங்களப் படைதனை..!

கடைசியில்

செம்மணியில்

ரவை மாலை போட்டு

நூறு நூறாய்

கிண்டித் புதைத்தது

தமிழர் பிணந்தனை

சிங்களப் படை..!

2000...

ஆனையிறவில்

வீழ்ந்த அடியோடு

அம்மையார் சந்திரிக்கா

அடக்கி வாசிக்க

போரும் சமாதானமும்

குழப்பம் ஆரம்பமானது..!

புலி நடுவே

வைத்து

ஆடிய சதுரங்கத்தில்...

சர்வதேசம்

வலையது பின்ன

மாட்டிக் கொண்ட

புலியும்..

2009 இல்

முள்ளிவாய்க்காலில்

மாண்டு போனது..!

இது தேச வரலாறு...

இப்ப பார்ப்பம்

கூடவே வளர்ந்த..

சோத்து ஆன்ரிகள் வரலாறு..!!

1989 இல்

அவள் ஒரு பருவக் குமரி..

பருவம் கண்ட போதும்

இந்திய ஆமிக்குப் பயந்து

வீட்டுக்குள்

ஒரு மூலைக்குள்

பட்டுச் சேலை கட்டி

நாலு பேரோடு

நடந்து முடிந்தது

சாமத்திய வீடு..!

1990 இல்...

ஓடிப் போன ஒருத்தருக்கு

அகதி அந்தஸ்துக் கிடைச்சு

பீ ஆரும் கிடைச்சிட்டாம்.

வெளிநாட்டுப் பாஸ்போட்டோடு

உள்ளூர் மாப்பிள்ளை

வெளிநாட்டு மாப்பிள்ளையாகி

கழுத்தும் கையும்

மின்ன வந்திறங்க..

கன்னி காத்த மங்கைக்கோ

பருவ மோகமும்

வெளிநாட்டு மோகமும்

ஒன்று சேர..

நடந்தது

அதிரடிக் கலியாணம்..!!

அண்ணர் கூப்பிட்டு

அண்ணி வெளிநாடு போக

6 மாதம் ஆச்சுது...

ஏக்கத்தில்

அண்ணியும்

ஒரு சுற்று இளைச்சே போனா..!!

1995 இல்....

வழமை போல..

அண்ணர் சேவையில்

அண்ணி வயிறு தள்ளி

குட்டி போட..

ஒல்லியாய்

உள்ளூர் அழகு ராணியாய்

அலைந்த அண்ணி

உருப்பெருக்க ஆரம்பிச்சா..

தமிழ் கடை

பஸ்மதி அரசிப் பைக்கற் போல..!

2000 இல்..

ஊருக்கு

ஒரு சுற்றுலா

அண்ணரும் அண்ணியும்

கால் டசினாய்

போட்ட குட்டிகளோடு

அரையும் குறையுமாய்

வந்து நின்றிச்சினம்..

இதுதான்

மேற்குல நாகரிகம் என்று..!

அன்னைத் தமிழ் கூட

நாவில்

தவழ மறுக்கும்

வாரிசுகள் காட்டி

பெருமை பேசிச்சினம்..!

வாரம் நாலு கழிய

விடுப்புக் காட்டிட்டு

விடுமுறை முடியுதாம்

என்று

ரெஸ்கோவில்

கழுவித் துடைக்கிறதை

மறைச்சுப் போட்டு...

"வேலை" என்று பெருசாச் சொல்லிட்டு

புறப்பட்டிச்சினம்..!

2010 இல்...

ஆன்ரியிடம் இருந்து

ஒரு போன் கோல்...

நீரிழிவுக்கு

உங்கினை

ஆயுள் வேத மருந்து இருக்குமே

கைதடியில

ஒருக்கா கேட்டுச் சொல்லுறீங்களே...

மூன்று வேளையும்

குந்தி இருந்து

போன் சூடோற குதர்க்கம் பேசி

டன் என்ன.. கலைஞர் என்ன..

வேறுபாடு இன்றி..

மானாட மயிலாட பார்த்து..

உள்ள தள்ளின

தமிழ் கடை

பஸ்மதி அரசியும்

உருளைக்கிழக்கு பிரட்டலும்...

அரசிப் புட்டும்

ஓசிச் சொதியும் இடியப்பமும்

வேலையைக் காட்ட

அழகு குமரியாய்

ஊர் விட்டு வந்தவா

உருப்பெருத்த

சோத்து ஆன்ரியாய்

வாழ்க்கை வெறுத்தே

போனில் கேட்டா

மேற்கு நாட்டில்

அரச பணத்தில்

இருந்து கொண்டே..!

இப்பவும்

இந்த நிலையில் இருக்குது

அந்த வரலாறு..

ஆன்ரியின் ஆவி பிரியும் வரை

அது தொடரும்..!

இதுவே...

ஊர்விட்டு ஊர்வந்த

தமிழ் ஆன்ரிங்க பலரின்

வரலாறும் இன்று...!!!

Edited by nedukkalapoovan

  • Replies 116
  • Views 11.2k
  • Created
  • Last Reply

[size=5]சூப்பர் நெடுக்ஸ் , அழகான ஒரு தகவலை அதிரடியா சொன்னதுக்கு. [/size]

[size=5]எங்கட ஆட்களும் உணவுகளில் கவனம் இல்லை . ஊரில இருக்கும் எமது பாட்டிமார் தமது கடின வேலைகளால இப்போதும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் .[/size]

[size=5] அப்புறம் நெடுக்க்ஸ் நீங்கள் நல்லவரா கெட்டவரா ?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

"படிக்க மட்டும் தான் வெளிநாட்டுக்கு வரலாம், உயிரைக் காத்துக் கொள்ளவோ கொஞ்சம் கூடுதலாக உழைக்கவோ வரக்கூடாது" என்ற நெடுக்கின் வழமையான தொனி பரவிக் கிடப்பதால் இந்தக் கவிதையை ரசிக்க முடியவில்லை. வெளிநாட்டில் வருடக் கணக்கில் வசித்தாலும் "யாரும் தாங்கள் விரும்பிய இடத்தில் தாம் நம்பும் காரணங்களுக்காக வசிப்பது ஒரு அடிப்படை உரிமை" என்பதை ஏனோ நெடுக்கு இன்னும் உள்வாங்கிக் கொள்ளவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

சோத்து அப்புகளின் சுயசரிதை

என இருந்திருந்தால் அப்படி நெடுக்கர் எழுதியிருந்தால் எல்லோர் பார்வையும் வேறு மாதிரி இருந்திருக்கும்.

அவரே போட்டுடுக்கொண்ட வேலி இது.

அவர் தான் மாத்தணும்

மாத்துவார் என அண்ணனாக எதிர்பார்க்கின்றேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"படிக்க மட்டும் தான் வெளிநாட்டுக்கு வரலாம், உயிரைக் காத்துக் கொள்ளவோ கொஞ்சம் கூடுதலாக உழைக்கவோ வரக்கூடாது" என்ற நெடுக்கின் வழமையான தொனி பரவிக் கிடப்பதால் இந்தக் கவிதையை ரசிக்க முடியவில்லை. வெளிநாட்டில் வருடக் கணக்கில் வசித்தாலும் "யாரும் தாங்கள் விரும்பிய இடத்தில் தாம் நம்பும் காரணங்களுக்காக வசிப்பது ஒரு அடிப்படை உரிமை" என்பதை ஏனோ நெடுக்கு இன்னும் உள்வாங்கிக் கொள்ளவில்லை!

நான் வெளிநாட்டு வருவதையோ.. அகதி அந்தஸ்து வாங்குவதைப் பற்றியோ தவறு.. நியாயம் சொல்லவில்லை. அந்த அகதி அந்தஸ்துக்குப் பின்னால்.. குறித்த விருப்பம்.. என்பது.. சும்மா வரேல்ல... தாயக விடுதலை என்ற ஒரு உணர்வேந்தலுக்குள் இருந்தே அது முளைத்தது.. அதுவே இன்று குடும்பச் செழிப்புகளின் மூலதனமாகக் காட்டப்படும் கதையையே சொல்லி இருக்கிறேன். அத்தோடு.. எப்படி சோத்து ஆன்ரிகளின் பெருக்கம் நிகழ்ந்தது என்பதையுமே கண்ட நிஜங்களில் இருந்து சொல்லி இருக்கிறேன்.

ஈழத்தவர் பொருளாதார அகதிகளாக உலகில் எங்கும் அங்கீகரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. அரசியல் அகதிகளாக அங்கீகரிப்பட்டதே நிகழ்ந்துள்ளது.

படிப்புக்காக உலகம் பூராவுமே தான் மக்கள் போகினம் வருகினம். அதுவும் அரசியல் அகதிகள் என்ற போர்வையிலான ஆட்கடத்தல் பொறிமுறையும் ஒன்றல்ல..! :):icon_idea:

சோத்து அப்புகளின் சுயசரிதை

என இருந்திருந்தால் அப்படி நெடுக்கர் எழுதியிருந்தால் எல்லோர் பார்வையும் வேறு மாதிரி இருந்திருக்கும்.

அவரே போட்டுடுக்கொண்ட வேலி இது.

அவர் தான் மாத்தணும்

மாத்துவார் என அண்ணனாக எதிர்பார்க்கின்றேன்.

நீங்கள் நிஜத்தை தரிசிக்க பயப்பிடுகிறீர்கள். நான் அப்படியானவன் அல்ல. நான் நிஜத்தை நிஜமாகவே காட்ட விரும்புகிறேன். நிஜத்தை மறைப்பது எமக்குத்தான் ஆபத்து..!

இதில் எது நிஜமில்லை என்று சுட்டிக்காட்டுங்கள்.. நீங்கள் சொல்வதில்.. நான் மாற்ற காரணம் இருந்தால்.. என்னை அவற்றில் இருந்தும்.. மாற்றிக் கொள்கிறேன்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வரிகளில் எனக்கு உடன்பாடுண்டு

ஆனால் நெடுக்கு மீது கவிழ்ந்துள்ள பெண்கள் மீதான அவப்பார்வையை வளர்க்க விரும்பாததால் மட்டுமே பச்சை போடமுடியவில்லை.

இதை நீங்கள் நியம் இல்லை என சொல்ல மாட்டீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

அண்ணனாக அதைத்தான் சுட்டிக்காட்டினேன்.

மற்றும்படி கருத்தில் எந்த மறுப்பும் இல்லை. அவை நியமே.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

ஈழவர் மட்டுமல்ல, உலகில் பெரும்பாலும் குடிபெயரும் எந்த நாட்டினருமே பொருளாதார அகதிகளாக மேற்கு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அது ஈழ விடுதலையோ தேசிய உணர்வோ, உயிர்ப் பாதுகாப்புத் தான் தஞ்சத்தின் அடிப்படை. உயிர்ப் பாதுகாப்புத் தேடித் தஞ்சம் புகும் இடத்தில் ஒருவன் பணம் உழைப்பதும் அதை விரும்பிய வழியில் செலவு செய்வதும் தனிமனிதனின் விருப்பம். இப்ப, சிறிலங்காவில் செலவு செய்யாதீர்கள் எண்டு நாம் காரணங்களைச் சொல்லிக் கேட்க மட்டுமே முடியும்- சட்டம் போடவோ, மீறிச் செலவு செய்பவனைத் தரக்குறைவாக விமர்சிக்கவோ முடியாது. அது போலத் தான் நீங்கள் சொல்லும் அன்ரிமாரின் கதையும். அவர்கள் ஆரோக்கியம் மேல் அக்கறை இருந்தால் ஒரு கட்டுரை நேரடியாகவே வரையலாம்-இதய, குருதிககலன் நோய்கள் பற்றி, உணவுப் பழக்கம் பற்றி. இப்படி நக்கல் நையாண்டி செய்வது அவர்கள் மேலான அக்கறையல்லவே!

படிப்புக்கு உங்கள் நாட்டுக்கு வாற படிப்பாளிகள் பிறகு அசைலம் அடிச்சால் அது ஒரு சுயமான ஆட்கடத்தல் பொறிமுறை தான்? எப்படி இல்லை எண்டு ஒருக்கா விளக்குங்கோ!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்ரின் அண்ணா.. எங்க ஆன்ரிகளுக்கு கட்டுரை எழுதி அதை வாசிச்சு அதன் படி செயற்பட நேரமில்ல. இப்படி கடிச்சாலாவது திருந்தினமோ.. என்று பார்க்கத்தான்..! திருந்தினால்.. அவைக்குத் தானே நல்லது.

குருதிக் கலன் என்றால்.. அது எந்த தமிழ் கடையில விற்குது என்ற நிலைல நிக்கிற ஆக்களோட.. கட்டுரைகள் வேலைக்கு ஆகும் என்றா நினைக்கிறீங்க..! :):lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்,

ஈழவர் மட்டுமல்ல, உலகில் பெரும்பாலும் குடிபெயரும் எந்த நாட்டினருமே பொருளாதார அகதிகளாக மேற்கு நாடுகளில் ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. அது ஈழ விடுதலையோ தேசிய உணர்வோ, உயிர்ப் பாதுகாப்புத் தான் தஞ்சத்தின் அடிப்படை. உயிர்ப் பாதுகாப்புத் தேடித் தஞ்சம் புகும் இடத்தில் ஒருவன் பணம் உழைப்பதும் அதை விரும்பிய வழியில் செலவு செய்வதும் தனிமனிதனின் விருப்பம். இப்ப, சிறிலங்காவில் செலவு செய்யாதீர்கள் எண்டு நாம் காரணங்களைச் சொல்லிக் கேட்க மட்டுமே முடியும்- சட்டம் போடவோ, மீறிச் செலவு செய்பவனைத் தரக்குறைவாக விமர்சிக்கவோ முடியாது.

படிப்புக்கு உங்கள் நாட்டுக்கு வாற படிப்பாளிகள் பிறகு அசைலம் அடிச்சால் அது ஒரு சுயமான ஆட்கடத்தல் பொறிமுறை தான்? எப்படி இல்லை எண்டு ஒருக்கா விளக்குங்கோ!

ஈழத்தில் எல்லோருக்கும் உயிர் ஆபத்து என்பது எத்தனை சதவீதத்திற்கு உண்மை..???! அசைலம் அடித்த பெரும்பாலானோர்.. பலாலி தாண்டி.. கட்டுநாயக்கா தாண்டி வந்தவர்கள்.ஏன் அசைலம் அடித்து முடிய திரும்பியும் போகிறார்கள் தானே..???! இவர்களின் உயிரை பறிக்க நினைத்திருந்தால் பல இடங்களில் பறித்திருக்கலாம். உண்மையில்.. உயிராபத்துள்ள பலர் தேசத்தை விட்டு வராமல் இருந்ததே அதிகம்.... இன்று அவர்களில் பலர் புதைகுழிகளில் சமாதியும் ஆகிவிட்டனர்..!

ஒருவருக்குள்ள.. அகதி அந்தஸ்துக்கான நியாயம் என்ற அடிப்படையில் நோக்கின்.. பலர் அந்த நியாயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதை நிச்சயமாக இனங்காட்டலாம். அது எனி தேவையற்ற விடயம். அவர்கள் அதற்கு அப்பால் நின்றிருந்து இன்று அகதி அந்தஸ்தும் பெற்றுவிட்டிருக்கிறார்கள். அதில் அவர்களின் சொந்த திறமையும் உள்ளது. நாம் அதை விமர்சிக்கவில்லை. ஆனால்.. எமது தாயகச் சூழலை மக்கள் பயன்படுத்திய விதங்கள் வெவ்வேறானவை என்பதை காலம் உணர்ந்திருந்தது. அதை பலர் மறந்திருந்தனர்.. அல்லது மறைத்திருந்தனர். நாங்கள் அவற்றில் பெரும்பாலானவற்றை மீண்டும் கொண்டு வந்திருக்கிறோம். காரணம் மக்கள் மனச்சாட்சியை அது தட்டிக் கேட்கும் என்பதால்.!!

மேலும்.. படிக்க வாறவை... படிக்கல்லை என்றால் அது அவர்கள் சட்டத்தை மீறியவர்கள் என்பதை சொல்லப் போதுமானது..! அந்த வகையில்.. அதற்கும் ஆட்கடத்தலுக்கும் இடையில் வேறுபாடிருக்க முடியாது. சட்டரீதியான வேறுபாட்டைத் தவிர..சட்ட மீறல்களில் எல்லாம் ஒன்று தான். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த குற்ற உணர்வு என்றுமே உண்டு எனக்கு.

அந்த வகையில் முள்ளிவாய்க்காலுக்குப்பின் அது மேலும் மேலும் என்னை வருத்திவருகிறது.

(முடிந்தளவுக்கு மேலாக இங்கும் அதற்காக உழைத்திருந்தாலும்)

ஆனால் இன்று வெளிவரும் ஆயுதங்களையும் பார்க்கும்போது ஆள் பற்றாக்குறையாலேயே நாம் தோற்றுள்ளோம்.

நாம் நின்றிருந்தால் வென்றிருக்கலாம் என்பது மேலும் மேலும் குத்துகிறது.

இதற்கு மேல் பனையால் விழுந்தவனை மாடேறீ மிதித்தது போல் ஏனப்பா எங்களை வதைக்கிறாய்??

  • கருத்துக்கள உறவுகள்

இது கவிதையும் இல்லை கதையும் இல்லை, வெறும் நான் என்ற அகங்காரம் மட்டுமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1995 இல்....

வழமை போல..

அண்ணர் சேவையில்

அண்ணி வயிறு தள்ளி

குட்டி போட..

ஒல்லியாய்

உள்ளூர் அழகு ராணியாய்

அலைந்த அண்ணி

உருப்பெருக்க ஆரம்பிச்சா..

தமிழ் கடை

பஸ்மதி அரசிப் பைக்கற் போல..!

இப்படி எழுத மனம் வருவது ஒரு அரைகுறைதமிழனுக்கு மட்டுமே.யாழில் நாகரீகம்,விதி,வகுதி,சட்டம் என மூலைக்குமூலை அலறிவிட்டு தங்கள் எழுத்துக்களில் வர்ணஜாலங்கள்.

பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்!

நீங்கள் எழுதிய தேச வரலாறை மறுக்க முடியாது..

இருப்பினும், சாதாரணமாக மனித வாழ்கையில் திருமணம், குழந்தை பிறப்பு, குடும்பம், உறவினரின் பிரிவு, விவாகரத்து, இறப்பு என்று நிலைமைகள் மாறும்போது மன அழுத்தங்களுக்கு உள்ளாவது மனித இயல்பு, இதனால் உடல் எடை கூடிக் குறைவது (சிலர் சந்தோசத்தில் எடை கூடுவார்கள், இன்னும் சிலர் கவலையில் எடை கூடுவார்கள்) எல்லா இன ஆண், பெண்ணிடையே நடைபெறும் ஒரு உளவியல் மாற்றமாக இருக்குமென நினைக்கிறேன்.. இதனைத் தவிர்த்து, இன்னும் சிலர் தமது எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களும் உள்ளார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை..

உங்கள் ஆதங்கம் நியாயமானது அதே நேரம், அவர்களின் மனநிலையையும் ஓரளவேனும் சிந்தித்துப் பார்க்க வேணும் என்பது எனது தாழ்மையான கருத்து... :)

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

வாரம் நாலு கழிய

விடுப்புக் காட்டிட்டு

விடுமுறை முடியுதாம்

என்று

ரெஸ்கோவில்

கழுவித் துடைக்கிறதை

மறைச்சுப் போட்டு...

"வேலை" என்று பெருசாச் சொல்லிட்டு

புறப்பட்டிச்சினம்..!

எஞ்சினியர், டாக்குத்தர் வேலைகள் மட்டும் தான் வேலை. டெஸ்கோவில கழுவித் துடைக்கிறது வேலை இல்லை எண்டுறீங்களோ? அவனவனுக்கு அவனவனிண்ட வேலை பெரிசு. இப்படி இளக்காரமாகக் கூறுவதை ஏற்க முடியவில்லை அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எஞ்சினியர், டாக்குத்தர் வேலைகள் மட்டும் தான் வேலை. டெஸ்கோவில கழுவித் துடைக்கிறது வேலை இல்லை எண்டுறீங்களோ? அவனவனுக்கு அவனவனிண்ட வேலை பெரிசு. இப்படி இளக்காரமாகக் கூறுவதை ஏற்க முடியவில்லை அண்ணா.

டாக்டர்.. இஞ்சினிய கழுவித் துடைக்கிறதில்லை என்று யார் சொன்னா. அவர்கள் அதை அப்படியே தொழிலோடு..சொல்லி வைக்கிறார்களே. ரெஸ்கோவில்.. சுப்பர் மார்க்கெட்டில்.. ஒரே தும்படி அதுதான் அங்க வேலை.. என்று சொல்லிட்டு கிளம்பினால்.. நிஜத்தை நிஜமாக நிலத்தில் காட்டிய ஒரு மனத்திருப்தியாவது கிடைக்கும். நிலமும் இவர்களின் கஸ்டம் விளங்கிக் கொள்ள முனையும். அதைவிட்டிட்டு.. சும்மா வெட்டி பந்தா எதற்கு..???! என்பதுதான் தொனிக்கப்பட்ட பொருள்..!

நாங்களே.. நமக்கு ஒரு காமடி றோல் கொடுக்கனுமா.... என்பது தான் கேள்வியே... :):icon_idea:

[media=]

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கடை

பஸ்மதி அரசிப் பைக்கற் போல..!

என்னதான் இருந்தாலும் ஆன்ரிமாரை இப்படி சொல்லக்கூடாது....அதிலயும் ஒரு அழகு இருக்கு நெடுக்ஸ்...கா..கா.....

விசுகண்ணை,குமாரசாமி,பிரபா மற்றும்பலர் இங்கு சொன்னமாதிரி என்ன இது கவிதை எண்டு சொல்லிக்கொண்டு மனரீதியாக பாதிக்கப்பட்ட உளவியல் சிகிச்சை தேவைப்படும் ஒருவர் எழுதியது போல் இருக்கு இது? :blink: இப்பெல்லாம் அவனவன் தன்ர மனவியாதியை எங்களுக்கும் தொத்தவைக்கிற இடமாப் போச்சப்பா யாழ். :(

(இந்தவிதமான மனவியாதி உள்ளவர்கள் கலியாணம் கட்டக்கூடது.மீறிக்கட்டினால் கட்டினவளை உளவியல் ரீதியாகப் போட்டு சித்திர வதை செய்வார்கள்.இது சின்னவயதிலிருந்தே பெண்கள் யாராவதால் பாதிக்கப்பட்டதால் அந்த வன்மம் வளர்ந்து ஒட்டுமொத்த பெண்களையும் கேவலமாகப் பார்க்கும் ஒருவித சைக்கோ மனநிலையை உருவாக்குகிறது.இப்படிப்பட்டவர்கள் நல்ல ஒரு உளவியல் நிபுணரிடம் வைத்திய சிகிச்சை பெற்றபின்னரே திருமணம் செய்வது நல்லது அல்லது திருமணம் செய்யாமல் தனிய இருப்பது நல்லது.மீறிதிருமணம் செய்தால் கட்டினவளை சித்திரவதை செய்து அவளின் தற்கொலை அல்லது கொலை வரைகூடபோய் முடியலாம்.யாராயினும் இந்தவிதமான வியாதி உள்ளவர்கள் மட்டும் இதைப்பற்றி கவனத்தில் எடுக்கவும்.மற்றவர்கள் கவலைப் படத்தேவையில்லை.)

Edited by நீலமேகம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணை,குமாரசாமி,பிரபா மற்றும்பலர் இங்கு சொன்னமாதிரி என்ன இது கவிதை எண்டு சொல்லிக்கொண்டு மனரீதியாக பாதிக்கப்பட்ட உளவியல் சிகிச்சை தேவைப்படும் ஒருவர் எழுதியது போல் இருக்கு இது? :blink: இப்பெல்லாம் அவனவன் தன்ர மனவியாதியை எங்களுக்கும் தொத்தவைக்கிற இடமாப் போச்சப்பா யாழ். :(

(இந்தவிதமான மனவியாதி உள்ளவர்கள் கலியாணம் கட்டக்கூடது.மீறிக்கட்டினால் கட்டினவளை உளவியல் ரீதியாகப் போட்டு சித்திர வதை செய்வார்கள்.இது சின்னவயதிலிருந்தே பெண்கள் யாராவதால் பாதிக்கப்பட்டதால் அந்த வன்மம் வளர்ந்து ஒட்டுமொத்த பெண்களையும் கேவலமாகப் பார்க்கும் ஒருவித சைக்கோ மனநிலையை உருவாக்குகிறது.இப்படிப்பட்டவர்கள் நல்ல ஒரு உளவியல் நிபுணரிடம் வைத்திய சிகிச்சை பெற்றபின்னரே திருமணம் செய்வது நல்லது அல்லது திருமணம் செய்யாமல் தனிய இருப்பது நல்லது.மீறிதிருமணம் செய்தால் கட்டினவளை சித்திரவதை செய்து அவளின் தற்கொலை அல்லது கொலை வரைகூடபோய் முடியலாம்.யாராயினும் இந்தவிதமான வியாதி உள்ளவர்கள் மட்டும் இதைப்பற்றி கவனத்தில் எடுக்கவும்.மற்றவர்கள் கவலைப் படத்தேவையில்லை.)

பிரச்சனை மருத்துவ உலகில் இருக்கும் உண்மையல்ல. நிஜத்தை தரிசிக்க மறுக்கும் மூளைப் பிசகுகளுக்கே.

புலம்பெயர் நாடுகளிலும் சரி.. தாயகத்திலும்.. சரி.. உடற்பருமன் அதிகரிப்பும் நீரிழிவும் உணவு வழக்கமும் பெருந்தொடர்பைக் கொண்டிருப்பது ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்பட்டு வரும் நிலையில் சிலர் அடிப்படை உடல் நல பட்டறிவு கூட இன்றி புலம்பெயர் மண்ணில் வாழ்வது என்பது வெட்கக் கேடானது மட்டுமன்றி அவர்களில் பலருக்கு யதார்த்த உலகை தரிசிக்கும் மன தைரியமும் இன்றி ஒருவித பித்து நிலையில் வாழ்வதையே இங்கு வரிகள் சமர்ப்பித்து நிற்கின்றன..!

இதனை நியாயப்படுத்துவது போல் உள்ளது இங்கு சிலரின் கருத்துக்கள்..!

மருத்துவ உலகின் அருச்சுவடி அறிந்து.... உளவியல் கதைக்கும் நிலையையாவது இவர்கள் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்..! மாறி வரும் நவீன மருத்துவ உலகில் மாறாமல் கிடக்கும் தமிழ் ஆன்ரிகளுக்கு.. அங்கிள்களுக்கு வக்காளத்து வாங்கும் கூட்டம்.. அந்தச் சமூகத்தில் நிலவும் உடற் பிரச்சனைகளின் போக்கு வளர்ச்சி அடையவும் காரணமாக இருக்கின்ற சமூக விரோதிகளாவர் என்பதையும் மறந்து கருத்தெழுதித் தொலைக்கின்றனர்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எழுத மனம் வருவது ஒரு அரைகுறைதமிழனுக்கு மட்டுமே.யாழில் நாகரீகம்,விதி,வகுதி,சட்டம் என மூலைக்குமூலை அலறிவிட்டு தங்கள் எழுத்துக்களில் வர்ணஜாலங்கள்.

இது ஒன்றும் வர்ண ஜாலம் அல்ல. நிஜத்தில் எல்லாரும் செய்யுறீங்களே அதைத்தான் சொல்லி இருக்குது. இன்னும் புரியனுன்னா.. புலம்பெயர் நாடுகளில் பள்ளிக்குப் போகும் 10 வயசுப் பிள்ளை மறிச்சு வைச்சுக் கேளுங்க.. அது பாடம் எடுக்கும். ஏன்னா அதுக்கு பள்ளியிலையே சொல்லிக் கொடுக்கிறாங்க..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு.. உங்கள் கவிதை முழுவதையும் படிக்கவில்லை.. ஆனால் ஓரளவு சாராம்சத்தை கருத்துகளின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது..

தாயகத்தில் இருந்து வந்தவர்களுக்கு தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய தேவைகள் முன் நிற்பதால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்த முடிவதில்லை.. :blink: இதனால் பலருக்கு உடல் பருமனாகி விடுகிறது.. ஒருமுறை பருமனாகிவிட்டால் கிறைப்பது கடினம்.

மாறாக, இங்கு வளரும் இளைய தலைமுறையினர் பெரும்பாலும் திடகாத்திரமாகவே வளர்கிறார்கள். அவர்களது வளரும் சூழல், தேவைகள் வேறாக இருப்பதே காரணம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு.. உங்கள் கவிதை முழுவதையும் படிக்கவில்லை.. ஆனால் ஓரளவு சாராம்சத்தை கருத்துகளின் மூலம் புரிந்துகொள்ள முடிந்தது..

தாயகத்தில் இருந்து வந்தவர்களுக்கு தங்களை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய தேவைகள் முன் நிற்பதால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்த முடிவதில்லை.. :blink: இதனால் பலருக்கு உடல் பருமனாகி விடுகிறது.. ஒருமுறை பருமனாகிவிட்டால் கிறைப்பது கடினம்.

மாறாக, இங்கு வளரும் இளைய தலைமுறையினர் பெரும்பாலும் திடகாத்திரமாகவே வளர்கிறார்கள். அவர்களது வளரும் சூழல், தேவைகள் வேறாக இருப்பதே காரணம்..

நியாயம்.. தான். அதனால் தான் அங்கிள்கள் மீது நான் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. ஆனால் வீட்டில் இருந்து பிள்ளைபராமரிப்போடு காலந்தள்ளும் ஆன்ரிங்களுக்குமா... தங்கள் சொந்த.. குடும்ப உடல் நலனில் அக்கறை செய்ய முடிவதில்லை..???!

எல்லா இளையோரும் நல்ல திடகாத்திரமா வளரினம் என்றில்லை. கேம்களை வேண்டிக் கொடுத்திட்டு... சோத்தில.. சிப்சில.. சாப்பிடவிட்டு.. வளர்க்கிற பிள்ளைகள் அதிக உடற் பருமனோடு வளர்வதையும்.. உடல் உபாதைகளோடு.. சுகாதார நிலையங்கள்.. மற்றும்.. உடற் பயிற்சி நிலையங்களை நோக்கி வருவதையும் அவதானிக்கிறோம். அவர்களுக்கு பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள்.. நண்பர்கள்.. நண்பிகள்.. ஓரளவுக்கு வழிகாட்டுவதால் அவர்கள் நிலைமையை ஓரளவு சுதாகரித்து..உடல் நலனில்.. உடல் கட்டுக்கோப்பில் கவனம் செலுத்த முடிகிறது.

ஆனால் சோத்து ஆன்ரிகள் தாங்களும் சோத்து மாடுகளாவதோடு.. அங்கிள்களையும் சோத்து மாடுகளாக்கி... கொலஸ்ரோல்.. நீரிழிவு.. உயர் குருதி அழுத்தத்திற்கு குறைந்த வயதிலையே மருந்தெடுக்கச் செய்வதைக் காண்கிறோம்..! இவற்றின் பக்க விளைவுகள் ஆயுளை குறைப்பது பற்றி சோத்து ஆன்ரிங்களுக்கும் தெரியாது.. அவைக்கு வக்காளத்து வாங்குக் கூட்டங்களுக்கும் அது புரிவதில்லை.. இசைக்கலைஞன். மற்றும்படி உங்கள் பல கருத்தோடு எனக்கும் உடன்பாடே..! :)

  • கருத்துக்கள உறவுகள்

மனித வாழ்க்கையில் ஊண்,உடை,உறையுள் இந்த மூன்றும் மிக முக்கியமானவை..இவற்றைத் தாண்டித் தான் மிகுதி எல்லாம்...எத்தனை மட்டுக்கு ஒரு பெண்ணோ,ஆணோ சாப்பிடாமல் கிடக்க முடியும் அதை முதலில் சொல்லுங்கள்...நான் எனது வீடு,எனது மனைவி என்பது உங்கள் குடும்பம் சார்ந்தது..அவற்றை தாரளமாக திருத்துவதற்கு உரிமை இருக்கிறது...ஆனால் ஒரு சமுகத்தையே தவறாக எழுதி,எழுதிக் கேலி பண்ணாதீர்கள்..25 சதத்து நூடில்ஸ் சாப்பிட்டுக் கொண்டு இருக்க சொல்கிறீங்களா..அல்லது எல்லாரும் நித்தமும் பஸ்மதி தான் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களாக,அப்படி என்று நினைத்தால் அது உங்கள் தப்பு.ஒருவரைத் திருத்த முயற்சிக்கலாம்,இருவரைத் திருத்த முயற்சிக்கலாம் ஒட்டு மொத்த பெண் இனத்தையே வரிக்கு,வரி சாடுவது தவறு அண்ணா...அவே,அவேக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் யோசனைகள் இருக்கும் அவர்கள் அதையே யோசிச்சு,யோசிச்சே பல தரப்பட்ட நோய்களையும் சுமக்க வேண்டியவர்களாகி விடுகிறார்கள்..

ஓரளவுக்கு வயது வந்த பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோரை யோசிச்சு பாருங்கோ அந்தப் பெற்றோர் பிள்ளைகள் தவறான வளியில் இறங்கிடக் கூடாது என்பதற்காக எவ்வளவு துன்பப்படுகிறார்கள்...இப்படியான பாதிப்புக்கள் தான் ஒரு பெண்ணை உடல் ரீதியான மாற்றதிற்கு உட்படுத்தி விடுகிறது..

மருத்துவதுறையிலே கற்ற உங்களுக்கு இது ஒன்றும் சொல்லித் தர வேண்டியதில்லை..கண்டதையும் கன்னா பின்னா என்று எழுதக் கூடாது அண்ணா....இதனால் எத்தனையோ பேரின்ட மனம் வேதனைப்படும் என்பதை சற்று யோசிச்சு நடவுகள்.ஒரு பெண் இயற்கையாக திருமணம் என்ற ஒன்றுக்குக்குள் புகுந்து விட்டால் அவளுடைய சந்தோசங்களில் ஒன்று குழந்தை..மெலிந்தே இருக்க வேணும் என்பதற்காக அந்தக் குழத்தையையே பெற்றுக் கொள்ளாமல் அவள் காலம் பூரா மலடி என்ற பட்டத் தோடு வாழனும் என்று நினைக்கிறீர்களா...?குழந்தை இல்லாட்டிக்கு அந்தக் குடும்பதை உறவினர்கள்,சுற்றத்தார் என்ன பாடுபடுத்திக் கொள்ளாவர்கள் என்று தெரியுமா,தெரியாதா......குழந்தை பெறுதலைக் குட கொச்சைப்படுத்துவது போல் தான் உங்கள் எழுத்து நடை இருக்கிறது...மனிதர்கள் இளைத்து போவதற்கும் பருமனமாக வருவதற்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கிறது...அண்ணா களவு எடுக்காமல்,பொய் சொல்லாமல்,கள்ள மட்டை அடிக்காமல் ரெஸ்கோவில் உடலை வருத்தி உழைப்பது உங்களுக்கு தப்பாக படுகிறதா..வேலை இல்லாது விட்டால் அடுத்தவர்களிடம் ஐந்துக்குகோ,பத்துக்கோ கை ஏந்தி நிற்பதை விட எம்மால் முடிந்த மட்டுக்கு உடலை வருத்தி உழைக்கும் பணத்தில் கண்ணியமாக சீவிக்கலாம்...எத்தனையோ முறை சொல்லப் பட்ட கருத்து ஒரு,இரு பெண்கள் விடும் பிழைகளுக்காக ஒட்டு மொத்தமானவர்களையும் அப்படித் தான் என்று நினைகாதீர்கள்...சில விசயங்களை அர்த்தமற்று எழுதிக் கொள்வதால் உங்கள் எழுத்துக்களை குறைத்து மதிப்பிடும் அளவுக்கு வைச்சுடாததீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாயினி தங்கச்சி.. அளவுக்கு அதிகமா சோத்தை அள்ளி முழுங்கிற சோத்து ஆன்ரிகள் தான் தலைப்புக்குள்ள வரினம். எல்லாப் பெண்களும் அல்ல. இதனை முதலில் எல்லாரும் விளங்கிக் கொள்ளனும்.

அப்புறம்.. பிள்ளை பெற்றால் உடம்பை பருக்க வைக்கனும் என்ற அவசியம் இல்லை. அதற்கு வேண்டிய உடற் பயிற்சிகளை.. உணவுக்கட்டுப்பாடுகளை மேற்கொண்டால்.. உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பை குறைக்கலாம். இது தொடர்பான ஆலோசனைகள் பிள்ளை பேற்றின் பின் மேற்கு நாடுகளில் பெரும்பாலும் அளிக்கப்படுகின்றன. ஆனால் எங்கட சோத்து ஆன்ரிகள் அவற்றை பெற பிரியப்படுவதில்லை. இதற்கு என்ன சொல்லுறீங்க..????!

மேலும்.. யோசனை.. மன அழுத்தம்.. விரக்தி.. இன்றைய நெருக்கடிகள் நிறைந்த உலக ஓட்டத்தில்.. எல்லாருக்கும் இருக்கிற ஒன்று தான். அதற்கு ஏற்ப நாங்கள் தான் சூழலை சூழ்நிலையை உருவாக்கி மன அமைதியை நிம்மதியை வரவழைக்கனுமே தவிர அதுவா நம்மளத் தேடி வராது.

ரெஸ்கோவில உடலை வருத்தி உழைக்கிறதை தப்பென்று சொல்லேல்ல. அதை கஸ்டங்களை மறைச்சு சும்மா "வேலை" என்று பந்தா காட்டிறதை தான் கண்டிக்கிறோம். நிஜமா நிஜத்தை பிரதிபலித்து வாழ தமிழர்கள் பலர் கற்றுக் கொள்ள வேண்டி இருக்குது. ஊருக்கு ஒரு வாழ்க்கை.. நிஜத்தில ஒரு வாழ்க்கை.. ஏன் இப்படி தமிழர்கள் நாடகமாடி வாழ்க்கையை நிம்மதியை தொலைக்கிறார்கள்..! இந்தக் குணம் பல தமிழர்களிடம் இருப்பதை காண முடிகிறது. ரெஸ்கோவில.. கடின உழைப்புக்கு மத்தியில் வேலை செய்யுறம்.. இன்னதுதான் வேலை என்று ஊரில போய் எத்தினை பேர் சொல்லினம்..??! ஏன் அப்படிச் சொல்லாமல் மறைக்கினம்..??! அதனால் என்னத்தை பிள்டப் பண்ண முனையினம்..???! இவை எப்படி இவர்களின் கஸ்டங்களை ஊரில் உள்ளவை உணரச் செய்யும்..???!

நாங்கள் எதை எழுதிறமோ அதை இட்டு ஒன்றுக்கு நாலு தரம் யோசிச்சிட்டு தான் எழுதுவம் அநேக நேரம். அதனால எங்களுக்கு இந்தக் கருத்தியல்களால் குழப்பமில்லை. நாங்கள் நிஜத்தை எழுத்தில் பிரதிபலிப்பதையே அதிகம் செய்கிறோம். அதனால் எமக்கு யாருக்கும் அஞ்ச வேண்டிய நிலையும் இல்லை..! இதுதான் நிஜம் என்றால் அதை அப்படியே சொல்லும் தைரியம் எமக்கு உண்டு..! நிஜமாக தவறு என்றால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும் உண்டு..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

நெடுக்கரை குறிவைத்து அடிக்கடி சோத்து அன்ரிங்க பார்க்கும் படங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புளூ பேர்ட்.. இவங்க எல்லாம் அவங்க அடிக்க அடி வாங்கிக்கிற நிலைக்கு தப்புப் பண்ணி இருக்கா போல..! அதுதான் அடி வாங்கிறா..! உண்மையாக தப்புப் பண்ணாத ஆண் என்றால்.. இப்படியான வன்முறைகளை.. அணுகிற பாணியே வேற மாதிரி இருக்கும்...! ஒரு "கிக்" கொடுத்திட்டு.. கம் என்று போய்க்கிட்டு இருப்பா..! :lol::D

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.