Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவணங்களை கையளித்தார் சம்பந்தன் – எல்லாவற்றையும் நாம் அறிவோம் என்றார் மேனன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan_2.jpg

[size=4]வடக்கில் சிறிலங்கா படைகளால் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பான ஆவணங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்தியாவிடம் கையளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லியில் சிகிச்சை முடித்து திரும்பியிருந்த இரா.சம்பந்தன், சிவ்சங்கர் மேனனை தனியாகவே சந்தித்திருந்தார்.

இந்தச் சந்திப்பின் போது, வடக்கில் மேற்கொள்ளப்படும் நிலஅபகரிப்புத் தொடர்பாக அவர் மேனனிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

அத்துடன் நிலஅபகரிப்புத் தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் வடக்கில் சிறிலங்கா படையினர் புதிதாக அமைக்கத் திட்டமிட்டுள்ள படைத்தளங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் சிவ்சங்கர் மேனனிடம் இரா.சம்பந்தன் கையளித்துள்ளார்.

இரா.சம்பந்தனின் கருத்துகளைக் கேட்டறிந்த சிவ்சங்கர் மேனன் நிலஅபகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எல்லா விபரங்களையும் இந்தியா அறிந்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள மக்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றும் அரசியல்தீர்வு ஒன்றைக் காண்பதில் இந்தியா ஆர்வம் கொண்டுள்ளதாகவும், வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்றும் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை, தமிழ்பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு, வடக்கிலும் கிழக்கிலும் தொடரும் நில அபகரிப்புகள், இராணுவமயமாக்கல் ஆகியன குறித்து சிவ்சங்கர் மேனனிடம் தாம் எடுத்துரைத்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

“இந்தமுறை சிவ்சங்கர் மேனனின் பயணம் ஒரு தெளிவான செய்தியை சிறிலங்கா அரசுக்கு சொல்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் உணர்கிறேன்.

சிறிலங்கா அரசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நடத்தி வந்த இரு தரப்புப் பேச்சுக்கள் நின்று போயிருப்பது, நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இனப்பிரச்சினையைக் கொண்டு செல்ல சிறிலங்கா அரசு எத்தனிப்பது ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பிற மாகாணசபைகளுக்குத் தேர்தல்களை நடத்தும் சூழல் இருக்கும் போது, வட மாகாணசபைக்கு மட்டும் இன்னும் தேர்தல் நடத்த சிறிலங்கா அரசு முன்வராதது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஐநா மனிதஉரிமைகள் பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்ததால், சிறிலங்கா விவகாரத்தில் இந்தியா செல்வாக்கற்றுப் போய்விடும் என்ற கருத்தை தான் நம்பவில்லை.

இந்தியா இந்த வாக்கெடுப்புத் தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்க முன்னர், அதன் விளைவுகளைக் கவனத்தில் கொண்டே அந்த முடிவை எடுத்திருக்கும்.

இந்தியா ஒரு செல்வாக்குமிக்க பிராந்திய வல்லரசு என்ற நிலையில், சிறிலங்கா பிரச்சினையில் அதன் நிலைப்பாட்டை, அனைத்துலக சமூகம் அக்கறையுடன் கவனிக்கும்.“ என்றும் கூறியுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120630106498[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்து வைத்திருந்து என்ன பயன்? தலையைச் சொறிந்துகொண்டு நிற்க வேண்டியதுதான்.. :D

செய்தவையும் செய்யிறவையும் அவைதானே பிறகு தெரியாமல்....??

இலங்கை அமெரிக்காவுக்கு நசியுமாப்போல் நடிக்கத்தொடங்கியிருக்கிறது. எனவே இந்தியாவுக்கு நசியாது. அமெரிக்காவின் துணையை பெற்று இந்தியாவை முழுவதாக அடித்து கலைத்துவிட்டுத்தான் திரும்பி வந்து அமெரிக்காவை கையாளும். இந்த முறை இனி இந்தியாவால் எதுவும் செய்ய முடியாது. இந்தியாவை கலைத்து விட்டு திருகோணமலையை சீனாவிடம் கொடுத்துவிட்டால் அமெரிக்காவை கன காலம் தாக்கு பிடிக்கலாம். ஆனால் ரூபா-டொலர் பிரச்சனைக்கு என்ன முடிவென்பது தெரியாது.

... எமக்கொரு விடிவு என்றால் ... அது இன்று மட்டும் எமக்கு அழிவையே தந்து கொண்டிருக்கும் இந்தியாவினாலேயே முடியும்! அது இந்தியாவின் கொள்கை மாற்றதிலேயே தங்கியுள்ளது! சீனாவின் இலங்கையில் நகர்வுகள் அதனை நோக்கி செல்லுமா? இல்லை, தொடர்ந்து ஈழத்தமிழர்களை பழி தீர்க்க இத்தாலிய சோனியா, கொள்கை மாற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவாரா?

  • கருத்துக்கள உறவுகள்

... எமக்கொரு விடிவு என்றால் ... அது இன்று மட்டும் எமக்கு அழிவையே தந்து கொண்டிருக்கும் இந்தியாவினாலேயே முடியும்!

இந்த காணொளிதான் ஞாபகத்துக்கு வந்தது! :o

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol: :lol:

... வடிவேலுவின் இன்னொரு ... ஏத்தி விட ஏத்தி விட, வாங்கி வாங்கி உடம்பு ரணகளமாகி விட்டது ... போதும்! :icon_idea:

... வடிவேலுவின் இன்னொரு ... ஏத்தி விட ஏத்தி விட, வாங்கி வாங்கி உடம்பு ரணகளமாகி விட்டது ... போதும்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும்

மீண்டும்

சிங்களவனின் தந்திரம் வெற்றியளிக்கிறது

வெளியில் விடாமல் குற்றப்பத்திரிகையை வாங்கி சிங்களவனிடம் கொடுத்துவிடடுப்போயிருப்பார் மேனன். :( :( :(

போதும், போதும், போதும், நாம் என்ன அறிவிலிகளா ??????. எல்லாவற்றையும் ,கேட்டோம்,பார்த்தோம், இந்தியா யார் என்று பார்த்தோம், அமேரிக்கா யார் என்று பார்த்தோம், நோர்வே யார் என்று பார்த்தோம், ஐரோப்பா யார் என்று பார்த்தோம். இன்னும் பார்ப்பதற்கு என்ன சார் இருக்கு. எம் தேசியத்தலைமை எம்மை சிந்திக்க வைத்து ,செயல்பட வைத்து ,எம்மால் என்ன செய்ய முடியும் என்பதை உணர்த்திவிட்டு ,ஓரமாய் ஒதுங்கி பார்துக்கொண்டிருகிறது...........ஏனனில் அதை ஒதுங்க வைத்தது கூட நீங்கள் தான் ஏனனில் இது உங்கள் காலம் . கால மாற்றத்தையும், மாற்றத்தையும், பார்த்து பொறுமையாய் இருக்கும் நாங்கள் முட்டாள்கள் என்று நீங்கள் நினைத்தால். முட்டாள்களாகபோவது நீங்கள் ...................

மீண்டும் எம் தேசியத்தையும்,எம்மையும் நீங்களெல்லாம் தேடி வரும் காலம் வெகு விரைவிலில்லை...................ஆனால் அப்போது சம்பந்தரும்,சுமேந்திரனும், மாவையும்,அவர்கள் சார்ந்தோரும் உங்களுடன் பேச மாட்டார்கள்....... பேசுபவர்கள் பேசுவார்கள் .......அப்போது நீங்கள் பேசமாட்டீர்கள் ............................................

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் மேனனிடம் காட்ட மேனன் அதனை சிங்கள அரசிடம் காட்டுவார்.மேனனுக்கு தேவை சிங்கள அரசிடம் இருந்து வியாபாரம்(business deal) நடைபெற வேண்டும். தமிழர் எக்கேடாவது கெட்டு தொலையட்டும் என்று விட்டு விடுவார்கள்.

...

தமிழகத்தினாலேயே இந்தியாவின் மௌனத்தை கலைக்க முடியும்

அனலை நிதிஸ் ச. குமாரன்

தமிழகத்தின் அனைத்து அமைப்புக்களும் தமது அட்டவணைகளுக்கு ஏற்றவாறே காய்களை நகர்த்துகிறார்கள். தமிழின முன்னேற்றத்திற்காக இவ் அமைப்புக்கள் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லை. சில அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க சினிமாத்துறையினர் உட்பட பல்வேறு பொது அமைப்புக்கள் போராட்டங்களில் இறங்குவார்கள்.பின்னர் அனைத்தும் மறைக்கப்படும் நிகழ்வுகளே அதிகமாக இருக்கிறது.

சுய காரணங்களுக்காக தமிழகத்தில் இயங்கும் அமைப்புக்கள் தமிழின அழிவுக்கு வழிவகுத்துக் கொடுத்தால் நிச்சயம் தமிழினத்தை யாரினாலும் காப்பாற்ற முடியாது என்பதனை இனியாவது தமிழகத் தமிழர்கள் உணர்வார்களா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த சில வருடங்களாக கலைஞரின் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்து வரும் தோல்விகளிலிருந்து மீள வேண்டுமாயின் மக்களை சென்றடையக் கூடிய போராட்டங்களை நடத்த வேண்டும் என்பதனை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார் கலைஞர்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வீராப்புப் பேசிய ஜெயலலிதா தற்போது ஆழ்ந்த மௌனம் காக்கிறார். முன் எப்போதும் இல்லாதவாறு ஈழத் தமிழர்கள் இப்போது பல்வேறுபட்ட அடக்குமுறைகளைச் சந்தித்து நிற்கிறார்கள். விடுதலைப்புலிகள் ஆயுதமுனையில் பலம்பெற்று இருந்த வேளையில் தமிழர்களைக் கண்டாலே பயந்து ஒதுங்கிய தமிழினப் பகைவர்கள் தற்போது தமிழர்களை வதைப்படுத்துகிறார்கள். தமிழர் காணிகளில் தங்கியிருந்தே தமிழினத்தை அழிக்கும் செயற்பாடுகளை செய்கிறது சிங்களம். சமீபத்தில் சிறிலங்கா சென்று திரும்பிய இந்தியக் குழுவினர் கூட ஈழத் தமிழர்கள் இராணுவ அடக்குமுறைக்குள்ளையே வாழ்கிறார்கள் என்பதனை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

தொலைநோக்கு சிந்தனை அவசியம்

தமிழினம் அழியும்போது அவர்களைக் காப்பாற்ற எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது இந்திய அரசு. அதற்கான அவசியமும் இந்திய மத்திய அரசுக்கு இல்லை. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒரு காலத்தில் தமிழர்களே அதிகமாக வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு தகுந்த சான்றுகள் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் படிப்படியாக தமிழர்களின் இருப்பை எப்படியேனும் குறைக்க வேண்டுமென்கிற வகையில் பல்வேறுபட்ட காரியங்களை மறைமுகமாக இந்திய அரசுகள் செய்தன.

திராவிடருக்கு பதிலாக ஆரியரை குடியேற்றுவதே இந்தியாவுக்கு சிறந்ததென நன்கே உணர்ந்து செயற்பட்டது இந்திய அரசு. இத்தீவுகள் தமிழ்நாட்டுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. தமிழர்கள் அதிகளவில் இத்தீவுகளில் வாழ்ந்தால் ஒரு காலத்தில் தமிழ் நாட்டுடன் பிரச்சினைகள் ஏதாவது வந்தால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்திய கடற்படையினரின் செல்வாக்கு பாதிக்கும் என்கிற பயம் இந்திய அரசுக்கு இருக்கிறது.இதன் காரணத்தினாலேயே தனக்கு விசுவாசமான வங்காளிகளை அதிகளவில் குடியேற்றி உள்ளது இந்தியா.

மேற்கு பாகிஸ்தானுடன் சண்டையிட்டு கிழக்கு பாகிஸ்தானை1970-களில் பிரித்து பங்களாதேஷ் என்கிற நாட்டை அமைத்துக் கொடுத்தது இந்திய அரசு. பங்களாதேஷ் எப்போதும் இந்தியாவுக்கு ஒத்தாசையாக இருக்கும் என்பது இந்தியாவின் கருத்து. வங்காளிகள் தமது இனத்தை சேர்ந்தவர்கள் ஆகவே அவர்களுடன் தோழமை கொள்வது இந்தியாவின் நலனுக்கே நல்லது என்கிற கருத்தையே இந்திய அரசு வைத்துள்ளது.

ஒரு நேரம் சாப்பாடு இருந்தால் போதும், சினிமாப் படங்கள் தினமும் வெளிவந்தால் போதும், தூங்க ஒரு குடிசை இருந்தால் போதும், தானும் தன்னைச் சார்ந்தவர்களும் வாழ்ந்தால் மட்டும் போதும் என்கிற நிலைப்பாட்டையே வைத்துள்ளார்கள் பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள்.

இனம் அழியும்போது மௌனம் வேண்டாம்

தமிழகத்தின் குரல் சற்று ஒலிக்கத் தொடங்கியவுடன் சிறிலங்கா அரசுடன் பேசுவதும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சில செயற்பாடுகளை செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளது இந்திய அரசு. தமிழக மக்கள் சற்று கொதித்தெழுந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை ஜெனிவாவில் எடுக்க வேண்டுமென்றவுடன், இந்திய அரசு தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை அன்று எடுத்தது. இந்நிலைப்பாட்டினால் சிறிலங்கா அரசின் பகையை சம்பாதிக்க வேண்டி வந்தது.

சிறிலங்காவை எப்படியேனும் அமைதிப்படுத்த வேண்டுமென்கிற காரணத்தினால் பல காரியங்களை அன்றிலிருந்து இன்றுவரை இந்திய அரசு செய்து வருகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர், முன்னாள் குடியரசுத் தலைவர் உட்பட பல முன்னணி இராஜதந்திரிகளை சிறிலங்காவுக்கு அனுப்பி மகிந்தாவை சமாதானப்படுத்த முயன்றது இந்தியா. இந்தியாவினால் தெரிவிக்கப்பட்ட காரணங்களை ஏற்றுக்கொள்ளாத சிறிலங்கா அரசு சீனாவுடன் அதி நெருங்கிய உறவுகளைப் பேண ஆரம்பித்தது. இவைகளை சரிசெய்யவே சிறிலங்காவுக்கு ஆதரவான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் போன்றவர்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்துகிறது இந்திய அரசு.

இனமொன்று சிறிலங்காவில் அழியும் போது தொப்புள்கொடி உறவான தமிழகம் வெறும் வாய்மூடி மௌனியாக இருப்பது தாய் தமிழகத்துக்கும் நல்லதில்லை.உலகம் பூராகவும் பரந்துவிரிந்து வாழும் தமிழர்களுக்கும் நல்லதில்லை. குறைந்தது ஒரு மாநில அதிகார உரிமையையாவது வைத்துள்ள தமிழகம் இந்திய அரசை வற்புறுத்தி தன் இனம் சார்ந்த நலன்களுக்கு ஏற்றவாறான வேலைகளை செய்வதே சிறந்தது. அதைவிடுத்து மௌனம் காத்தால் நிச்சயம் தமிழரை காப்பாற்ற யாராலும் முடியாமல் போய்விடும்.

அதிகாரத்தில் இல்லாத போது ஏதாவது ஒன்றைக் கூறுவது பின்னர் அதிகாரத்துக்கு வந்தவுடன் மௌனம் காப்பது எந்தவிதத்திலும் நல்லது அல்ல. கலைஞர் அதிகாரத்தில் இருந்தபோது ஈழத் தமிழினம் அழிவதைக்கண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.ஆட்சியில் இல்லாத போது தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்கிற பாணியில் இப்போது பேசிவருகிறார். அதைப்போலவே ஜெயலலிதாவும் ஆட்சியில் இல்லாதபோது ஈழத் தமிழருக்கு இன்னல் நேர்ந்தால் தரணியே தாங்காது என்கிற பாணியில் பேசினார். தற்போது ஆட்சியில் இருக்கும்போது சொல்லொணாத் துயரை அனுபவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு எவ்வகையிலும் உதவியாக இல்லை.

தமிழக சிறைகளில் ஏராளமான ஈழத் தமிழ் இளைஞர் யுவதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளர்கள். பல்லாயிரம் ஈழத் தமிழ் மக்கள் அகதி முகாம்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை விடுதலை செய்ய முடியாத நிலையில் இருக்கும் ஜெயலலிதா போன்றவர்களினால் எவ்வாறு தமிழீழத்தைப் பெற்றுத்தர உதவியாக இருப்பார்கள் என்கிற கேள்வியே மேலோங்கியுள்ளது.

தமிழகம் கிளந்தெழுந்து தமது தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆதரவான நிலைப்பாடை எப்போது ஒட்டுமொத்தமாக எடுக்க முன்வருகிறார்களோ அதுவரை தமிழனுக்கு விடிவே இல்லை. தமிழகம் கிளந்தெழுந்து போராடினால் அடுத்த கணமே இந்திய அரசினால் தமிழீழத்தைப் பெற்றுத்தர முடியும். கள நிலைமைகள் தமிழ் நாட்டு மக்களின் எழுச்சிக்கு ஆதரவாக இருக்கும் போது அவர்கள் மௌனம் காப்பது தமிழினம் செய்த சாபக்கேடே.

...

... எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள் ... ஆனால் எமக்கோ? ... இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், லிபியா, ... யார் எம்மை விட்டு வைத்தார்கள்???? ...

... எம் தேசத்தின் பூலோக அமைவிடம் .... இந்தியாவை தாண்டி ..???????????

... இந்தியாவின் சிங்களம் தொடர்பான கொள்கைகள் மாற வேண்டும் ... அது காலத்தின் கட்டாயம்!

http://www.thesundayleader.lk/2012/07/01/indian-govt-asks-mr-to-deliver/

http://www.sundaytimes.lk/120701/columns/menon-calls-for-elections-to-the-northern-pc-4926.html

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்..

நாம் நமக்காக போராடத்தொடங்கும் போது தமிழக உறவுகள் அதில் வந்து சேர்ந்து கொள்வார்கள். தாயகத்து முறிகண்டி போராடாத்திற்கு ஆதரவு தெரிவித்து நடந்த புலம் பெயர் மக்களின் போரட்டங்களில் சிலநாடுகளில் பங்குபற்றியோரின் எண்ணிக்கை விரல் விட்டெண்ணத்தக்கதாக இருந்தது. யாரையும் நோகாமல் நம்மை முதலில் நோக இடம் இருக்கு. எதையாவது புதிகாக கிளறிவிடும் ஆசிரியர்கள் எத்தனை பேர் புலத்து போராடங்களுக்கு மக்கள் போக வேண்டும் என்று தலைப்பு தீட்டுகிறார்கள். அப்படி செய்தால் தங்கள் பத்திகைக்கு மானம் போய்விடும் என்று கருதுகிறார்களா என்ன?

ஆவணங்களை கையளித்தார் சம்பந்தன் – எல்லாவற்றையும் நாம் அறிவோம் என்றார் மேனன் (மனசுக்குள் அவர்களை அப்படி செய்ய சொன்னதே நான் தான் மக்கு பயலே ) :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நெல்லையன் அவுங்களுக்குள்ளார நல்ல கருத்துகளை எழுதுகிறார் ..

ஆனால் ஆனால் இங்கிட்டு வரும் போது ஒரே டமாஸ்தான்..

டிஸ்கி:

http://www.youtube.com/watch?v=J64x7QSONRQ

ஏன் இந்த சாக்கடைக்குள் வந்து விழறீங்க..

வேற நல்ல வெளிநாடுகளின்ட ஆதரவை தேடுங்கப்பா.. இங்கிட்டு உள்ளவன் உங்களுக்காக தீக்குளிப்பான் சாலை மறியல் செய்வான் ...ஜெயிலுக்கு போய் களி தின்னுவான் அவ்வளவுதான்..

போகட்டும் பிரகாஸ்ராஜ் ரையலக்கை கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இடத்தில் வைத்து கற்பனை பண்ணுங்க....

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் நெல்லையன் அவுங்களுக்குள்ளார நல்ல கருத்துகளை எழுதுகிறார் ..

ஆனால் ஆனால் இங்கிட்டு வரும் போது ஒரே டமாஸ்தான்..

டிஸ்கி:

ஏன் இந்த சாக்கடைக்குள் வந்து விழறீங்க..?

வேற நல்ல வெளிநாடுகளின்ட ஆதரவை தேடுங்கப்பா..இங்கிட்டு உள்ளவன் உங்களுக்காக தீக்குளிப்பான்.. சாலை மறியல் செய்வான்...ஜெயிலுக்கு போய் களி தின்னுவான்..அவ்வளவுதான்..

free-sign-smileys-966.gif . .தான் ஆடாமல் தசை ஆடாது...!

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.