Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரி(று)க்கத் தொடங்கி ஆண்டு ஒன்பது ஆகின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

front-1.jpg

எட்டு வருசத்துக்கு முந்தி ஒரு பெடியன், வேலைய முடிச்சிட்டு, பஸ்சில ஏறுவதுக்கு விழுந்தடிச்சு ஓடிப் போய் பஸ்சைத் தவறு விட்டு, பிறகு மற்ற பஸ்சுக்காகக் காத்துக் கிடந்த போது அவனுக்கு தோன்றினதுதான் இந்த ஒரு பேப்பர் அடிக்கிற ஐடியா. இப்ப அந்தப்பெடியன் வளர்ந்து மனுசனானது போல் ஒரு பேப்பரும் வளர்நதிருக்கிறது. வளர்ந்துட்டுது என்று சொன்ன உடனை ஏதோ ரூபர்ட் மேர்டக் இன் மீடியா சாம்ராச்சியம் என்று தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம். ஏதோ மாவரிக்கப் பயன்பட்டுதோ, மீன்பொரியலிலையிருந்து எண்ணை உறிஞ்சப் பாவிக்கப்பட்டதோ, அப்பம் சுட்டுப் போட பாவிக்கப்பட்டதோ (மெய்யாகவே இப்பிடி ஒரு அக்கா சொன்னவ). லண்டனிலை எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பேப்பராக இருக்குது. இதாலை சில வேளை அஙகிள் சாம் போன்ற பெரிய பெரிய இடங்களிலையிருந்தும் போன் கோல்கள் வருது.

சரி எட்டுவருசமாய் பேப்பர் அடிக்கிறது என்ன பெரிய விசயம், மற்றாக்கள் பத்துப் பதினைஞ்சு வருசமாய் மணியாய், பஞ்சாங்கம் போலை பேப்பர் நடத்தேல்லையோ எண்டு கேட்கப்படாது. ஏனெண்டால் அவையள் எல்லாம் என்னாம் பெரிய ஆட்கள். ஊடகத்துறையை கரைச்சு குடிச்சாக்கள். நாங்கள் அப்பிடியே?

விசயம் தெரிஞ்ச ஆட்கள், இவனுகள் தமிழை கொலை செய்யிறாங்கள், இலக்கண சுத்தமாய் எழுதிறாங்கள் இல்லை எண்டு நெடுக குறைபடக் கூடாது, நாங்கள் ஒரு பக்கமாய் இருந்து பேப்பர் அடிச்சிட்டு போறம்.நீங்கள் இலக்கணச் சுத்தமான பேப்பருகளை வாசியுங்கோ.

தொடங்கேக்க 32 பக்கத்தில தொடங்கி பிறகு 42 பக்கத்துக்குப் போய் பிறகு 52 பக்கமாகி பரந்து நின்றவேளையிலைதான் உலகத் தமிழரையெல்லாம் உச்சந்தலையில் அடித்து உறைய வைத்த முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்தது அதிலை நாங்களும் தான் கலங்கிப்போய் வழிதெரியாமல் சிலகாலம் முடங்கிப் போயிட்டம். ஆனால் முடக்கமே முடிவாகிப் போயிடக் கூடாது எண்டதற்காகவும் ஏதோ பம்பலுக்காக தொடங்கிய ஒரு பேப்பர் சனங்களிட்டை ஏற்படுத்தின தாக்கத்தையும் அதனாலை எங்களிட்டையும் சில பொறுப்புக்கள் இருக்கெண்டும் புரிஞ்சு கொண்டம் அதாலை மீண்டும் 20 பக்கத்திலை தொடங்கி இப்ப 32 பக்கத்திலை வந்து நிக்கிறம். ஆரம்பத்திலை லண்டனுக்கு எண்டு மட்டும் தான் தொடங்கினம். பிறகு எங்கட விலாசத்தை எட்டிக் கனடா பிரான்ஸ் சுவிஸ் எண்டும் காட்ட வேணும் எண்ட ஆசைவந்து போய் விலாசமும் காட்டினம். இப்ப திரும்பவும் இலண்டனுக்குள்ளையே வந்திட்டம்.அது முன்னையதை போல 50 அல்லது அதுக்கும் கூடுதலான பக்கங்களோடு பரந்து நிற்பது வாசகர்களின் கைகளிலும் முக்கியமா விளம்பரதார்களின் கைகளிலுமே உள்ளது.

இந்த எட்டு வருசத்தைத் திரும்பிப் பாக்கிறபோது எத்தனபேர் வந்தவையள். எத்தனை பேர் போனவையள். எத்தனை பேர் இண்டை வரைக்கும் நிண்டு பிடிக்கினம். இப்பிடி ஒரு ஆயிரம் கதையள் சொல்லாம். ஒரு பேப்பர் தப்பாமல் இரண்டு கிழமைக்கு ஒருக்கால் உங்கடை கைக்கு வருகிறது எண்டால் அந்தக் கைங்கரியத்தை செய்து முடிக்கிற ஆக்களைப்பற்றி கொஞ்சம் சொல்லவேணும்

முந்தி எழுதிய ஆட்;களிலை சிலர் இப்ப எழுதிறதை நிறுத்தியிட்டாலும், வேல் தர்மா, ச.ச.முத்து, மௌலி, சுபேஸ் எண்டு புது ஆட்கள் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்….

மட்டைக்கிளப்பான், உமா மகாலிங்கம், மாசிலாமணி, பா.வை. ஜெயபாலன் ஆகியோர் தொடர்நதும் சளைக்கமால் எழுதி வருகிறார்கள்….

சாத்திரியின் எழுத்துக்கு உங்கிளிடத்திலை தனியான ஆர்வம் இருக்கிறது. (கூடவே வேண்டாத வில்லங்கங்களையும் இணைப்பாக எங்களுக்கு தந்திருக்கிறார்)….

ஒரு பேப்பரின் வளர்த்தெடுக்கிறதுக்கு இரவியண்ணை செய்த பணிகள் பல. அவர் எங்களிடமிருந்து சற்று விலகியிருந்தாலும் நாங்கள் அவரை விடுறதாய் இல்லை…..

இத்தோடு நின்று விடவில்லை பணியகத்தில் குவிந்துகிடக்கும் வேலைகளையும், விளம்பரதாரங்களுடனான தொடர்பாடல்களை கச்சிதமாக செய்து முடிக்கிற சோபனா, அஜந்தா… எதைச் சொன்னாலும் அசாத்திய வேகத்தில் செய்து முடிக்கிற மயூரன், மதி, சாரங்கன்…

பேப்பர் விநியோகத்தில் உதவுகிற பிரகாஸ், உதயகுமார், சிவகுமார்…கணக்கு வழக்கிலை நாங்கள் கவனக்குறைவாயிருந்தாலும் அதை சீர்திருத்தி கொம்பனி கவுஸ் ஐ திருப்திப்படுத்திற மீரா அக்கா …

எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாவிதமான உதவிகளையும் செய்கிற பாலா அண்ணா, குருநாதன் அண்ணா ..

ஐயோ, வேறை யாரையும் விட்டுட்டமோ தெரியாது .. ஆனால், இவர்கள் இல்லாமல் ஒரு பேப்பர் இல்லை.அடிச்சம். அடிச்சுக் கொண்டும் இருக்கிறம். இது நாங்க எங்கெங்க ஒரு பேப்பர் அடிக்கிறம் எண்ட விபரம். யார் எங்களோட வேலை செய்யினம் எங்களுக்காக வேலை செய்யினம் எண்டெல்லாம் விபரம் இருக்கு.

ஆனால் இப்பிடி ஒவ்வொண்டுக்கும் ஒவ்வொரு கதையா சொல்ல வெளிக்கிட்டா விடியும். சும்மா பாருங்கோ முகப்புப் பக்கத்துப் படத்தில இருந்து முடிவுப் பக்கம் வரைக்கும் ஒவ்வொருத்தரின்ர பங்களிப்பையும் சொல்ல வெளிக்கிட்டா இந்தப் பேப்பர் காணுமே?

“தம்பிமார் பேப்பர் அடிக்கிறயள் ஆனால் எங்கை வைக்கிறியள் ஒரு இடமும் காணேல்லை” எண்ட குற்றச்சாட்டுகள் இன்றைக்கு வரைக்கு வந்து கொண்டிருக்கும். எல்லாருக்கும் கிடைக்கிறமாதிரி எப்பிடி விநியோகிக்கிறது எண்ட ரெக்னிக் எங்களுக்கு பிடிபடுதில்லை. ஒரு வேளை நாங்கள் இந்த விசயத்திலை வீக்காய் இருக்கிறமோ தெரியாது.உண்மையச் சொல்லப் போனால் எட்டு வருசம் உருண்டு ஓடிப் போட்டுது. ஆனால் நாங்கள் உந்தப் பத்திரிகை விசயம் அதின்ர இலக்கணம் வரைவிலக்கணம் எண்டு ஒரு மண்ணும் தெரியாமத்தான் ஓடிக் கொண்டு இருக்கிறம்.

அதைவிட சத்தியமா அந்த விசயங்களில அக்கறையும் இல்லை எமக்கு! ஒரு பேப்பர் உங்களை மகிழ்வித்துதோ, அறிவூட்டியதோ, அல்லது இரத்த அழுத்தத்தை கூட்டியதோ நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை எண்டது மட்டும் உண்மை.

அறுக்கத் தொடங்கினோம்

ஆண்டு எட்டாயிற்று

பொறுத்துக் கொண்டீர்கள்

போங்கள் மகா பெரிய வாள் நீங்கள்.

ஒரு பேப்பறை மா அரிக்க பயன்படுத்தியதை வன்மையாக கண்டிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துதாகம் என்பது எந்தத்தடைகளாலும் முடங்கிப்போவதில்லை....

கனடாவிலும் சில வருடங்களுக்கு முதல் ஒரு பேப்பர் ஒழுங்காக வந்து கொண்டிருந்தது .அதில் அரசியல் எழுதும் பலரும் என்னால் புண்ணாக்குகள் என்று மனதிற்குள் திட்டு வாங்கியவர்கள் .அப்ப சாத்திரியாரை தெரியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனடாவிலும் சில வருடங்களுக்கு முதல் ஒரு பேப்பர் ஒழுங்காக வந்து கொண்டிருந்தது .அதில் அரசியல் எழுதும் பலரும் என்னால் புண்ணாக்குகள் என்று மனதிற்குள் திட்டு வாங்கியவர்கள் .அப்ப சாத்திரியாரை தெரியாது

என்னையும் ஒரு பேப்ருக்குள்ளை இழுத்து கொண்டு போய்விட்ட பெரும் சாபம் யாழ் மணிவாசகன் மற்றும் சனியனை யே சாரும். அதே நேரம் ஒரு பேப்பரில் என்னுடய ஆரம்ப எழுத்துக்கள் வெறும் நகைச்சுவையனவை என்பதால் கவனித்திருக்க மாட்டீங்கள்

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பேப்பர் சர்வதேச அளவில் வெற்றிநடை(அறுக்க)போட வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் ஒரு பேப்ருக்குள்ளை இழுத்து கொண்டு போய்விட்ட பெரும் சாபம் யாழ் மணிவாசகன் மற்றும் சனியனை யே சாரும். அதே நேரம் ஒரு பேப்பரில் என்னுரடய ஆரம்ப எழுத்துக்கள் வெறும் நகைச்சுவையனவை என்பதால் கவனித்திருக்க மாட்டீங்கள்

என்னை பொறுத்தளவில் அது உங்களைத்தான் சாரும்...ஆனால் எனக்கு அது சாபம் அல்ல...மனதுக்கு பிடித்ததை செய்ய கிடைத்த ஒருவரம்...என்றைக்கும் என் நன்றிகள் உங்களுக்கு அண்ணா...எழுது என்று அடிக்கடி தட்டிக்கொடுக்கும் கோபி அண்ணாவையும் இந்த நேரத்தில் மறக்கமுடியாது..அப்புறம் ஒரு மாஸ்றர்போல பிளான்போட்டு நீ இதெழுது,அதெழுது என்று ஒருபேப்பரில் எழுதும் எல்லோருக்கும் கிழமைக்கு கிழமை ஜடியாக் கொடுக்கும் சனியன் அண்ணா...ஒருபேப்பருடன் முழுநேரமாக நிறைய எழுத ஆசை இருக்கு....விரைவில் நேரம் கிடைக்கும்...

ஒரு பேப்பரில் எழுதும் சாத்திரி அண்ணா, சுபேஸ் அண்ணா, சனியன் அண்ணா மற்றும் ஏனையவர்களுக்கு என் வாழ்த்துகள். :)

சாத்திரியின் எழுத்துக்கு உங்கிளிடத்திலை தனியான ஆர்வம் இருக்கிறது. (கூடவே வேண்டாத வில்லங்கங்களையும் இணைப்பாக எங்களுக்கு தந்திருக்கிறார்)….

:lol: :lol:

“தம்பிமார் பேப்பர் அடிக்கிறயள் ஆனால் எங்கை வைக்கிறியள் ஒரு இடமும் காணேல்லை” எண்ட குற்றச்சாட்டுகள் இன்றைக்கு வரைக்கு வந்து கொண்டிருக்கும். எல்லாருக்கும் கிடைக்கிறமாதிரி எப்பிடி விநியோகிக்கிறது எண்ட ரெக்னிக் எங்களுக்கு பிடிபடுதில்லை. ஒரு வேளை நாங்கள் இந்த விசயத்திலை வீக்காய் இருக்கிறமோ தெரியாது.

548282_155451341257753_1035069498_n.jpg

உண்மையாக் கன இடங்களில கிடைக்கிறேல்லத் தான்... அதற்கான காரணமும் இப்ப விளங்கீட்டுது.....

வளர்ந்துட்டுது என்று சொன்ன உடனை ஏதோ ரூபர்ட் மேர்டக் இன் மீடியா சாம்ராச்சியம் என்று தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம். ஏதோ மாவரிக்கப் பயன்பட்டுதோ, மீன்பொரியலிலையிருந்து எண்ணை உறிஞ்சப் பாவிக்கப்பட்டதோ, அப்பம் சுட்டுப் போட பாவிக்கப்பட்டதோ (மெய்யாகவே இப்பிடி ஒரு அக்கா சொன்னவ).

அண்ணா எப்படி பாவிக்கப்பட்டாலும் வாசித்த பின்னர் தான் பாவிச்சிருப்பினம். கவலையை விடுங்கோ. இது உங்கள் ஒரு பேப்பருக்கு மட்டுமல்ல எல்லா பேப்பருக்கும் நடக்கிற ஒரு விஷயம்.

ஆனால் தேவையான விடயங்களை சேகரித்து வைப்போர் அப்பிடியும் பாவிக்க மாட்டினம்.

ஒரு பேப்பருடன் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல்இணைந்திருந்தவன் என்ற வகையில் அதனை வெளிக்கொணர்வதில் எதிர்நோக்கப்படும் சிரமங்களையும் பலரின் கடின உழைப்பையும் நானறிவேன்.

லண்டனில் இருக்கும் வரை அதன் அருமை புரியவில்லை. ஆனாலும் கனடா வந்தபின்னர் இங்கு பத்திரிகை என்ற பெயரில் வெளிவரும் பிரசுரங்களைப் பார்த்தபின்னர் தான் அதன் அருமை புரிகிறது.

மாதம் ஒரு முறை வெளிவரும் வீடு பத்திரிகையையும் சில காலம் வெளிவந்த ஆயுத எழுத்து பத்திரிகையையும் தவிர்த்துப் பார்த்தால் இங்கு வெளிவரும் ஏனையவற்றை பத்திரிகை என்று அழைக்கவே விருப்பம் இல்லை.

வெறும் விம்பரங்களைப் பிரசுரிப்பதற்காக இடையிடையே இணையத்தில் வெிவருவனவற்றை அப்படியே கொப்பியடித்து வெளியிடும் இவை எப்படிப் பத்திரிகைகள் என்ற வகையில்அடங்கும்.

அந்த வகையில் முன்னரைப் போல தொடர்ந்தும் பக்கம் சாராது தமிழ் விடுதலைகப்கான தமது பணியை ஒருபேப்பர் செய்ய வேண்டும் என்பதே வேணவா!

சாத்திரியின் எழுத்துக்கள் குறித்தும் ஒரு அவா!

நான் முன்னர் பத்திரிகையின் வடிவமைப்பில் பங்களிப்புச் செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் சாத்திரியின் ஆக்கம் மின்னஞ்சலில் வந்ததும் எல்லா வேலைகளையும் நிப்பாட்டி விட்டு அவரது ஆக்கத்தை வாசித்துச் சிரிப்பேன்.

அந்த நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரரான சாத்திரியை இப்போது காண முடியாமை கவலையளிக்கிறது.

இந்தக் கண்டறியாத அரசியலிலிருந்து ஓய்வெடுத்து மீண்டும் அந்த இயல்பான எழுத்துக்களுடன் சாத்திரி திரும்ப மீள்பிறப்பெடுக்க வேண்டும்.

லண்டனில் நான் தங்கியிருந்த வீட்டில் கணவன் மனைவி இருவருமே வைத்தியர்கள். அவர்கள் இருவருமே சாத்திரியின் எழுத்திற்கு அபிமானிகள். அந்த அக்கா சொல்லுவார் சாத்திரி மாதிரி ஆக்கள் இந்தியாவில் இருந்திருந்தால் திரைக் கதை அது இது என்று எங்கோயோ போயிருப்பார் என்று....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]பத்திரிகையையோ/இதழையோ தொடர்ந்து [/size][size=1]

[size=5]நடாத்துவது சவாலானது.அதை தொடர்ந்து [/size][/size][size=1]

[size=5]எட்டு வருடங்கள் நடாத்தியிருப்பது மிக்க [/size][/size][size=1]

[size=5]வாழ்த்துக்குரியது.தொடருங்கள் [/size][/size]

[size=5]http://leo-malar.blogspot.no/[/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் எழுத்துக்கள் குறித்தும் ஒரு அவா!

நான் முன்னர் பத்திரிகையின் வடிவமைப்பில் பங்களிப்புச் செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் சாத்திரியின் ஆக்கம் மின்னஞ்சலில் வந்ததும் எல்லா வேலைகளையும் நிப்பாட்டி விட்டு அவரது ஆக்கத்தை வாசித்துச் சிரிப்பேன்.

அந்த நகைச்சுவை எழுத்துக்குச் சொந்தக்காரரான சாத்திரியை இப்போது காண முடியாமை கவலையளிக்கிறது.

இந்தக் கண்டறியாத அரசியலிலிருந்து ஓய்வெடுத்து மீண்டும் அந்த இயல்பான எழுத்துக்களுடன் சாத்திரி திரும்ப மீள்பிறப்பெடுக்க வேண்டும்.

லண்டனில் நான் தங்கியிருந்த வீட்டில் கணவன் மனைவி இருவருமே வைத்தியர்கள். அவர்கள் இருவருமே சாத்திரியின் எழுத்திற்கு அபிமானிகள். அந்த அக்கா சொல்லுவார் சாத்திரி மாதிரி ஆக்கள் இந்தியாவில் இருந்திருந்தால் திரைக் கதை அது இது என்று எங்கோயோ போயிருப்பார் என்று....

இதைத்தான் பலரும் கேட்கிறார்கள் எனவே அடுத்த பேப்பரிலிருந்து பழைய சாத்திரியாக மாற முயற்சிக்கிறேன். அது மட்டுமல்ல நீங்களும் மீண்டும் பேப்பரிற்குள் வரவேண்டும் என்று கடந்த கூட்டத்தில் கதைத்திருந்தோம் வருவீர்கள் என்று நம்புகிறேன் நன்றி :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து ஒரு பேப்பர் பல நாடுகளிலும் வலம் வர (அமெரிக்கா உட்பட) வாழ்த்துக்கள். வீரகேசரியில் தான் சீனி கட்டி தந்தவர்கள் என்பதற்காக அதனை யாரும் வாசிக்கவில்லை என்பதல்ல அர்த்தம்.சரியாக recycle செய்துள்ளார்கள் என்பது அர்த்தமாகலாம்.

ஒரு பேப்பருடன் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல்இணைந்திருந்தவன் என்ற வகையில் அதனை வெளிக்கொணர்வதில் எதிர்நோக்கப்படும் சிரமங்களையும் பலரின் கடின உழைப்பையும் நானறிவேன்.

லண்டனில் இருக்கும் வரை அதன் அருமை புரியவில்லை. ஆனாலும் கனடா வந்தபின்னர் இங்கு பத்திரிகை என்ற பெயரில் வெளிவரும் பிரசுரங்களைப் பார்த்தபின்னர் தான் அதன் அருமை புரிகிறது.

மாதம் ஒரு முறை வெளிவரும் வீடு பத்திரிகையையும் சில காலம் வெளிவந்த ஆயுத எழுத்து பத்திரிகையையும் தவிர்த்துப் பார்த்தால் இங்கு வெளிவரும் ஏனையவற்றை பத்திரிகை என்று அழைக்கவே விருப்பம் இல்லை.

வெறும் விம்பரங்களைப் பிரசுரிப்பதற்காக இடையிடையே இணையத்தில் வெிவருவனவற்றை அப்படியே கொப்பியடித்து வெளியிடும் இவை எப்படிப் பத்திரிகைகள் என்ற வகையில்அடங்கும்.

அந்த வகையில் முன்னரைப் போல தொடர்ந்தும் பக்கம் சாராது தமிழ் விடுதலைகப்கான தமது பணியை ஒருபேப்பர் செய்ய வேண்டும் என்பதே வேணவா!

மணிவாசகன்,நீங்கள் கனடாவில் இருந்தாலும் தொடர்ந்து எழுதலாம் தானே!!!!

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்த்துக்கள், சாத்திரியார்!

உங்கள் பத்திரிகையை நினைக்கும் போது'டொமினிக் ஜீவா' அவர்கள் தான் நினைவுக்கு வருகின்றார்!

அவர் ஒரு வேள்வியாகவே, மல்லிகையை நடத்தினார்!

நீங்கள் செய்வதும், அது போன்ற ஒரு வேள்வியே!

ஓம குண்டத்தில் எறியப்படும், அனைத்தும் எரிந்து விட, அதன் ஒளி மட்டுமே பிரகாசிக்கும்!

உங்கள் உழைப்பின் வெளிப்பாடான, அந்த ஒளியே, 'ஒரு பேப்பர்'.

கொஞ்சம் புகையும் வருகின்றது! :D

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்களின் நலனையும்

மவீரச்செல்வங்களின் கனவையும் நினைவில் நிறுத்தி

செய்யப்படும் எந்த செயலும்

எந்த எழுத்தும்

எந்த பேச்சும்

மதிப்புக்குரியதே.

அவற்றிற்கு சிரம் தாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் சாத்திரி அண்ணா,மற்றும் ஒருபேப்பர் குழுமத்திற்கு.. :)

[size=5]வாழ்த்துக்கள் ஒரு பேப்பர் குழுமத்துக்கு , காலத்தின் தேவை கருதி மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் .[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.