Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூர் சந்தை போல யாழ். சந்தை களைகட்டியது

Featured Replies

[size=5]வடக்கு, கிழக்கில் தாய், தகப்பன் இருக்கினம் என்று போறவை வேறு, அவை குடும்பத்தைப் பார்க்கப் போகத் தானே வேண்டும், ஆனால் ஊர்காட்டப் போறோம் என்றும் போகினம்...................................[/size] [size=5]அங்கை ஒரு பிரச்சனையும் இல்லை, கோயிலில் பொங்கி சென்றிக்கு நிண்ட ஆமிக்காரனுக்கும் கொடுத்தோம் (தீத்தி விடாக் குறை)[/size],[size=5] புலிகளைப் பற்றிக் கதைப்பாரே இல்லை[/size].................

[size=5]ஆண்டவா கொடுமையிலும் கொடுமை[/size]...................

  • Replies 68
  • Views 4.5k
  • Created
  • Last Reply

வெளிநாட்டில் இருந்து சிறிலங்காவிற்கு வருபவர் என்ன வேண்டிவருவது எண்டு கேட்க்க சிறிலங்காவில் உள்ளவர் ஸ்டீம் மொப்பர் வாங்கிவர சொன்னாராம்

இதைத்தான் சொல்லுறதோ சந்தனம் மிஞ்சினால் எங்கேயோ தடவுற மாதிரி எண்டு இதுகள் திருந்தாதுகள்

[size=5]எங்கட பிள்ளையள் இங்கிலீசு தான் கதைக்கும், தமிழ் தெரியாது - பெருமைப்படும் கூட்டம்! ஆரோ ஒருத்தி கைகீல்சோடை வயல் வரம்பில விழுந்து, விழுந்து நடந்தாவாம்![/size]

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் திருச்சியிலும், கொழும்பில் வெள்ளவத்தையிலும் பேரம் பேசுவதை புலம்பெயர் நாடுகளில் உறவினர்களைக் கொண்டவர்கள் கெளவரக் குறைச்சலாகக் கருதுவது உண்மைதான்.

கிருபன், நான் தமிழ்நாடு என்று பொதுவாகச் சொன்னது... திருச்சியை மையப்படுத்திதியே...

அதன் நேரடி, அனுபவத்தை... திரிச்சியில் நின்று, அனுபவப்பட்டேன் :) .

கனடாவில் சொந்த கடைத்தொகுதி வைத்திருந்து வியாபாரம் செய்த ஜெயசாயி நகை மாளிகை யாழ் நாவலர் வீதியில் பிரமாண்ட நகை ,புடவை கடைத்தொகுதி ஒன்று திறந்திருக்கின்றார்கள் .

அதற்கு கனடா புலிசார் டீவியில் விளம்பரம் போகுது .

இவ்வளவு செல்வாக்குள்ள அர்ஜூனே...

ஸ்ரீலங்காவுக்கு போகவில்லை, மற்றவர்கள் அங்கு போக... ஏன் அவதிப்படுகிறார்கள் :icon_mrgreen::lol: .

இவ்வளவு நாளும் "அர்ஜுன்" எழுதினது இப்படியானவர்களை பற்றி தான்.. ஆனால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து அர்ஜுன்க்கு சுண்ணாம்பு தடவினது தான் மிச்சம் :)

அர்ஜூனுக்கு, தயிர் தடவச் சொல்றீங்களா..... நந்தன் :rolleyes:

போன ஆட்கள் திரும்பி வரும் போது.... அவ்வளவும், ஒட்டுக்குழு, சிங்களவனின் கண்காணிப்பில் இருக்கும்.

அவை.. திரும்பி வெளிநாட்டிற்கு வரும் போது...

இவை கொடுத்த, அன்பளிப்புக்களை பறிக்க... இராணுவம் இரவில் வீட்டிற்கு வரும்.

அப்ப, குய்யோ... முறையோ... எண்டு கத்தக் கூடாது.

கத்தினால்... வீட்டு வாசலில் நாயின் தலையையோ, இரத்ததையோ, தாரையோ... ஊத்துவாங்கள்.

பரவாயில்லையா....

அர்ஜூன் புத்திசாலி. :D

  • கருத்துக்கள உறவுகள்

எரிமலை,

சிங்கப்பூரில்... சுவிங்கம், பலூன்? விற்க தடை என்று நினைக்கின்றேன். :D

சிறி அண்ணா ரெயின்கோட் போட்டுக்கொண்டுதான் குளிக்கிறியல்போல :o

  • கருத்துக்கள உறவுகள்

சிறி அண்ணா ரெயின்கோட் போட்டுக்கொண்டுதான் குளிக்கிறியல்போல :o

தண்ணீரே விசமாகிவிட்ட உலகில், ரெயின் கோட் பாதுகாப்பானது தானே..... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பின்ன அலையக்கா வயலுக்க புல்லு புடிங்கினதுகள் எல்லாம் வெளி நாடுன்னு வெளிகிட்டு வந்திடு திரும்ப அந்த பழக்க தோசத்தில அங்க தானை போவினம் என்னத்த சொன்னாலும் வெல்ஸ் வெல்ஸ் தான் .....

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், நான் தமிழ்நாடு என்று பொதுவாகச் சொன்னது... திருச்சியை மையப்படுத்திதியே...

அதன் நேரடி, அனுபவத்தை... திரிச்சியில் நின்று, அனுபவப்பட்டேன் :) .

இவ்வளவு செல்வாக்குள்ள அர்ஜூனே...

ஸ்ரீலங்காவுக்கு போகவில்லை, மற்றவர்கள் அங்கு போக... ஏன் அவதிப்படுகிறார்கள் :icon_mrgreen::lol: .

அர்ஜூனுக்கு, தயிர் தடவச் சொல்றீங்களா..... நந்தன் :rolleyes:

போன ஆட்கள் திரும்பி வரும் போது.... அவ்வளவும், ஒட்டுக்குழு, சிங்களவனின் கண்காணிப்பில் இருக்கும்.

அவை.. திரும்பி வெளிநாட்டிற்கு வரும் போது...

இவை கொடுத்த, அன்பளிப்புக்களை பறிக்க... இராணுவம் இரவில் வீட்டிற்கு வரும்.

அப்ப, குய்யோ... முறையோ... எண்டு கத்தக் கூடாது.

கத்தினால்... வீட்டு வாசலில் நாயின் தலையையோ, இரத்ததையோ, தாரையோ... ஊத்துவாங்கள்.

பரவாயில்லையா....

அர்ஜூன் புத்திசாலி. :D

இது நாந்தான் நந்தன் :wub: பாவம்

அண்ண நந்தன் வேற நாந்தான் வேற ஞாபகம் இருக்கட்டும் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒருவர் சண்டைக்கு முன் 70களில் வெளிநாடு வந்தவர். தான் வசிக்கும் பிரதேசத்தில் அனைவருக்கும் அறிமுகமாய் மரியாதைக்கிடமாகவும் நாணயத்துடனும் சொல்லும் செயலும் ஒன்றுபட வாழும் ஒரு தங்கமான மனிதர். தாய் நாட்டைப் போர்மூட்டம் சூழ்ந்த காலங்களில் கணிசமான தனது ஊதியத்தை மட்டுமின்றி நேரத்தையும் செலவழித்து பாடுபட்டார். நல்ல படிப்பறிவுடன் மிகவும் பொறுப்புள்ள மனிதராயிருந்ததால் புலம்பெயர்ந்த சமுதாயத்தில் அவரைத்தேடிவந்த சந்தர்ப்பங்களையும் பதவிகளையும் ஒதுக்கிவிட்டு பின்புலத்தில் நின்றபடியே அட்டகாசம் செய்யாமல் யாரென்றும் தெரியாமல் தனது சேவையைச் செய்து மற்றவர்களிலும் பார்க்க அதிகமாகவே இரவு பகலென்று அயராது உழைப்பார். ஏழ்மையான பெரிய குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தனது மனைவியைத்தவிர வேறு உறவினரையோ உடன்பிறப்புகளையோ வெளிநாட்டுக்கு அழைப்பதில் அவருக்கு உடன்பாடு இருக்கவில்லை. அவருடன் போராட்டத்திற்காக இங்கிருந்து உழைத்தவர்கள் அனைவரும் அவ்வப்போது போலி பாஸ்போட் மூலமாக உறவினர்களைக் கடத்திவருவதிலும் ஏஜன்சிக்கு பணம் கொடுத்து அழைப்பதையும் நாட்டமாக சமகாலத்திலேயே செய்துகொண்டிருந்தார்கள். உறவினர்கள் அல்லாதவர்களாயின் அவர்களை அழைப்பதற்காக ஊரில் உள்ள அவர்களின் காணிகளைப் பிடிங்கிக்கொண்ட சில சந்தர்ப்பங்களும் உண்டு. இன்று அவரின் நண்பர்கள் அனைவரும் ஏகபோகமாக இரண்டு மூன்று வீடுகளுடனும் கணவன் மனைவி இருவருக்கும் தனித்தனி கார்கள் அதுமட்டுமா விடுமுறையைகழிக்க கடற்கரைவீடு என்று ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலரிடம் சொந்தமாக சொகுசுபடகுகூட இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.இத்தனைக்கும் அந்தமனிதர் எழிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உறவினர் எவரும் தனக்கு அருகில் இல்லாமல் இன்றும் தன்னாலான உதவிகளை ஊரில் உள்ள போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு செய்தவண்ணம் இருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

எரிமலை,

சிங்கப்பூரில்... சுவிங்கம், பலூன்? விற்க தடை என்று நினைக்கின்றேன். :D

இந்தக் காணொளியின் தலைப்பே தப்பு. "Five Minutes in Littel Tamil Nadu, Singapore" என்றிருக்க வேண்டும்.

ஆனந்த பவன், கோமள விலாஸ்., ஆட்கள் கடைக்கு வெளியேயிருந்து மாலைகளை தொடுக்கும் பூக்கடைகள், பலசரக்கு மளிகைகள், சிற்றுண்டிச் சாலைகள், அங்கே வரும் வாடிக்கையாளர்கள் எல்லாம் dito "சென்னை கொத்தவால் சாவடி" தான்.

bully-animated-animate-bully-smiley.gif இதில் இந்தியா எங்கே வந்தது...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள், நினைப்பது சரி... தமிழரசு.

நாட்டின் போர் நிலையைக்காட்டி, வெளிநாட்டில் விண்ணப்பம் பெறுவது,

பின்... அந்த நாட்டு, பிரஜாஉரிமையைப் பெற்று... சொந்தநாட்டுக்குப் போய் விலாசம் காட்டுவது.

இவர்களை... எந்தச் சந்தர்ப்பத்திலும், மன்னிக்க முடியாது.

இதுக்கு தாண்ணே நான் சிறீலங்லா பெட்டைய கல்யாணமே பண்ணலை.. :D :D :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு தாண்ணே நான் சிறீலங்லா பெட்டைய கல்யாணமே பண்ணலை.. :D :D :lol::icon_mrgreen:

ஜீவா, இதென்ன புதுக்குழப்பம். :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா, இதென்ன புதுக்குழப்பம். :rolleyes:

என்ன பாஸ்? என்ன குழப்பம்? :unsure:

இப்படியான சம்பவங்களை பார்த்து கேட்டு கவலைப்படுவதுண்டு. வேலை விசாவில் வந்தவர்கள், திருமணம் செய்ய வந்தவர்கள் தவிர ஏனையவர்கள் ஊர் செல்வதை தவிர்க்க வேண்டும். (மிக அவசரம் என்றால் ஒன்றும் செய்ய முடியாது)

இவர்கள் ஊர் சென்று நாட்டு நிலைமை நல்லபடி உள்ளது போன்று வெளிநாட்டவர்களுக்கு காட்டுகிறார்கள். பணத்தை வாரி இறைக்கிறார்கள்.

கொஞ்ச நாளின் முன் வெளிநாட்டிலிருந்து(எந்த நாடு என்று தெரியவில்லை) ஒரு குடும்பம் தனது பிள்ளையின் பூப்புனித நீராட்டுவிழாவை ஊருக்கு சென்று ஊரில் வைத்து (யாழ்ப்பாணத்தில் தான், ஒத்துக்கொள்ளுறன்) வெகு விமரிசையாக கொண்டாடினார்களாம். அதுவும் பல லட்சங்களை செலவழித்து. (3,4 லட்சம் முடிந்திருக்குமாம்). இவர்கள் எல்லாம் நெடுக்ஸ் அண்ணா சொல்வது போல் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வந்தவர்களாக தான் இருப்பார்கள்.

இன்னொருவரை இங்கு சந்தித்தேன். போன மாதம் நாடு சென்று வந்தார். யாழ்ப்பாணமும் சென்றார். இங்கு வந்து சொன்னது. அங்கு ஊர் நல்லா இருக்குது. எல்லாரும் சந்தோசமா இருக்கினம். தமிழர், முஸ்லிம், சிங்களவர்கள் எல்லாரும் ஒற்றுமையா இருக்கிறார்கள். யாழ்ப்பாணம் போகும் போது முன்பு மாதிரி செக்கிங் இல்லை. சந்தோசமா எல்லா சனமும் இருக்கிறார்கள் என்று.

நான் கேட்டேன் நீங்கள் ஏன் திரும்பி வந்தீர்கள். அங்கேயே தங்கியிருக்கலாம் என்று. தான் தனது மகளை வெளிநாட்டுக்கு கூப்பிட வேணுமாம் என்று சொல்கிறார்?????????????

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

எனது நிலைப்பாடும் தேவை கருதி ஊருக்கு போவதில் தப்பில்லை..ஆனால் இப்போ ஊருக்கு போறவர்கள் அப்படி இல்லை..பிக்னிக் தான் போறார்கள்...அங்கு போய் சோ தானே காட்டுறது...இன்னும் ஒரு விதத்தில் சொல்லப் போனால் வெளி நாட்டுக்கு வந்து சில இளம் பிள்ளைகள் பிரஜாஉரிமை பெற்றுக் கொள்ள முடியாமல் பெயிலியர் ஆவதுற்கு..காரணம் இந்த பிக்னிக் போய்டுவாறவர்களும் தான் ..அவர்கள் வந்ததும் ஊர் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அந்த மாதிரி இருக்கு என்றாறல் அது அப்படியே ஊர் முழுவதும் பரவும் செய்தி தான்..தண்ணி வார்ப்பு செய்தி பற்றி அறிந்து இருக்கிறன்...எல்லாம் சுவிஸ் பிராங்கும்,கனேடிய டொலரும் செய்யும் வேலை தான்..ஊரில் 3.4 லட்சத்தோடு முடிஞ்சுட்டு வெளி நாடுகளில் என்றால் இன்னும் அதிகம் அல்லவா முடியும்...ஊரில் நடந்த தண்ணி வார்ப்பு படங்களைப் பார்த்துட்;டு தங்களின் பிள்ளைகளுக்கு எப்படி வடிவாக செய்ய ஏலுமோ அப்படி வடிவா செய்ய காத்திருப்பவர்களையும் தெரியும்...ஆனால் நம்மவர்களை திருத்த முடியாது..உங்கள் பணத்திலா போறம் செலவளிக்கிறம் என்றும் கேட்பார்கள்..அங்கிருந்து ஒரு பொருள் வாங்கிட்டு வர சொன்னால் தாவார (பேமன்ட்) கடைகளில் வாங்கிட்டு வந்து பரிசளிப்பவர்களும் இருக்கிறார்கள்..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாவார (பேமன்ட்) கடைகளில்

தமிழை பிழையா எழுதினா கொலை செய்து போடுவன்...

pavement என்றால் தாவாரம் அல்ல, நடைபாதை --நடைபாதை வியாபாரிகள் சங்கம் யாழ் களம் :)

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளின் முன் வெளிநாட்டிலிருந்து(எந்த நாடு என்று தெரியவில்லை) ஒரு குடும்பம் தனது பிள்ளையின் பூப்புனித நீராட்டுவிழாவை ஊருக்கு சென்று ஊரில் வைத்து (யாழ்ப்பாணத்தில் தான், ஒத்துக்கொள்ளுறன்) வெகு விமரிசையாக கொண்டாடினார்களாம். அதுவும் பல லட்சங்களை செலவழித்து. (3,4 லட்சம் முடிந்திருக்குமாம்). இவர்கள்

3, 4 லச்சம் எல்லாம் இப்ப ஒரு காசே இல்லை. 30, 40 லச்சமா இருக்கும். வீடியோக் காரனுக்கே ஒரு மூண்டு நாலு லட்சம் தேவை, நீங்கள் வேற. போன மூண்டு வருசமும், வருசத்துக்கு ஒருக்கா ஊர் போய் வந்திருக்கிறேன். ஊரில் இருப்பவர்களின் மன நிலை யாழ் களத்தில் இருப்பவர்களின் மனநிலையிலிருந்து மிகவும் வேறுபட்டு இருக்கிறது. தொழில், வியாபாரம் செய்யும் பலர் மிகவும் முன்னேறி இருக்கிறார்கள். எனது நண்பனின் அப்பா பருத்தித் துறையில் பிரபல வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளர். இரண்டு வருடங்களுக்கு முன்னர், மிக நவீன வசதிகளுடன் வீட்டுடன் கூடிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை கட்டி இரண்டு வாகனங்களையும் வாங்கி வியாபாரத்தை விஸ்தரித்து இருந்தார். கடைக்கு போயிருந்த போது அவர் சொன்ன ஒரே விடயம் "இவனை (பிரான்சில் இருக்கும் அவருடைய மகனான எனது நண்பன்) ஊரில வந்து எங்களோட இருக்கச் சொல்லு தம்பி. நாங்கள் சொன்னா கேக்கிறான் இல்லை". வேறு ஒரு திரியிலே குறிப்பிட்டிருந்த எனது கனடா நண்பனுடன் நேற்று ஸ்கைப்பிலே கதைத்தேன். இவர் இரண்டு மாதமாக ஊரில் நின்றுவிட்டு அண்மையில் தான் கனடா திரும்பியிருந்தார். தான் திருப்பவும் ஊருக்கு போய் ஒரு வருஷம் இருக்கப் போவதாகவும் ஊரிலே ஏற்கனவே காணி ஒண்டு பாத்துவிட்டு வந்ததாகவும், கடைத் தொகுதியுடன் கூடிய தங்குமிடம் ஒன்றை கட்டப் போவதாகவும் சொன்னான். நாட்டு நிலமையல் அப்படி இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை பிழையா எழுதினா கொலை செய்து போடுவன்...

pavement என்றால் தாவாரம் அல்ல, நடைபாதை --நடைபாதை வியாபாரிகள் சங்கம் யாழ் களம் :)

இனிமேல் நீங்கள் தமிழ் கொலை செய்யும் இடங்களை சிமைலி போட்டுக் காட்டுறன்...ஓகே வா... :lol: ம்ம்ம்..சரி நடைப்பாதைக் கடை சொல்லித் தந்ததுக்கு நன்றி. அறிந்து இருக்கிறன் எழுதும் போது நினைவுக்கு வர இல்லை.

  • தொடங்கியவர்

3, 4 லச்சம் எல்லாம் இப்ப ஒரு காசே இல்லை. 30, 40 லச்சமா இருக்கும். வீடியோக் காரனுக்கே ஒரு மூண்டு நாலு லட்சம் தேவை, நீங்கள் வேற. போன மூண்டு வருசமும், வருசத்துக்கு ஒருக்கா ஊர் போய் வந்திருக்கிறேன். [size=5]ஊரில் இருப்பவர்களின் மன நிலை யாழ் களத்தில் இருப்பவர்களின் மனநிலையிலிருந்து மிகவும் வேறுபட்டு இருக்கிறது. [/size]தொழில், வியாபாரம் செய்யும் பலர் மிகவும் முன்னேறி இருக்கிறார்கள். எனது நண்பனின் அப்பா பருத்தித் துறையில் பிரபல வெதுப்பகம் ஒன்றின் உரிமையாளர். இரண்டு வருடங்களுக்கு முன்னர், மிக நவீன வசதிகளுடன் வீட்டுடன் கூடிய இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை கட்டி இரண்டு வாகனங்களையும் வாங்கி வியாபாரத்தை விஸ்தரித்து இருந்தார். கடைக்கு போயிருந்த போது அவர் சொன்ன ஒரே விடயம் "இவனை (பிரான்சில் இருக்கும் அவருடைய மகனான எனது நண்பன்) ஊரில வந்து எங்களோட இருக்கச் சொல்லு தம்பி. நாங்கள் சொன்னா கேக்கிறான் இல்லை". வேறு ஒரு திரியிலே குறிப்பிட்டிருந்த எனது கனடா நண்பனுடன் நேற்று ஸ்கைப்பிலே கதைத்தேன். இவர் இரண்டு மாதமாக ஊரில் நின்றுவிட்டு அண்மையில் தான் கனடா திரும்பியிருந்தார். தான் திருப்பவும் ஊருக்கு போய் ஒரு வருஷம் இருக்கப் போவதாகவும் ஊரிலே ஏற்கனவே காணி ஒண்டு பாத்துவிட்டு வந்ததாகவும், கடைத் தொகுதியுடன் கூடிய தங்குமிடம் ஒன்றை கட்டப் போவதாகவும் சொன்னான். [size=5]நாட்டு நிலமையல் அப்படி இருக்கு.[/size]

[size=4]தாயகத்தில் உள்ள பொருளாதாரம் எதை அடிப்படையாக கொண்டது? தொழில்நுட்பம்?, உதிரிப்பாக உற்பத்தி பொருட்கள்? விவசாயம் (ஏற்றுமதி).....? [/size]

[size=1][size=4]அநேகமாக அங்குள்ள அடிப்படை பொருளாதாரம் நுகர்வோர் பொருளாதாரம் என்றால் மிகையாகாது. இந்த பொருளாதாரத்தின் நாடி - புலம்பெயர் மக்களின் பணம். [/size][/size]

[size=1][size=4]இவ்வாறு வரும் பணம் எவ்வாளவு காலத்திற்கு வரும்? அடுத்த தலைமுறை வருமா? பணம் தருமா?? [/size][/size]

[size=1][size=4]இன்று கிடைக்கும் / வரும்பணத்தில் தாயகத்தில் நீண்ட நோக்கோடு ஒரு பொருளாதாரத்தை கட்டி எழுப்பப்படுகின்றதா? அதற்குரிய அரசியல்நிலைமை உள்ளதா? [/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]பெரும்பாலான தாயக மக்களின் பொருளாதார வளத்தை அடிப்படையில் இருந்து கட்டி எழுப்ப அறிவும், ஆற்றலும், பற்றும் உள்ள இளையோர் முன்வரவேண்டும். அவர்களுக்கு ஒரு நியாயமான இலாபகர நோக்கும் நிச்சயம் இருக்கும், இருக்கவேண்டும். அதற்கு தேவையான முதலீடுகளை உதவிகளை புலம்பெயர் மக்கள் உதவலாம். [/size]

[size=1]

[size=4]'ஆலோசனை தேவை' என்ற இந்த திரியில் உதயம் அவர்கள் பல ஆரோக்கியமான தகவல்களை முன்வைத்து உதவிகள் கேட்டுள்ளார் : [/size]http://www.yarl.com/forum3/index.php?showtopic=105005

[/size]

[size=1]

[size=4]எமது மக்களில் வெறும் ஐந்து வீதம் மட்டும் இவ்வாறு முயற்சித்தால் சிங்கள இனவழிப்புக்குள்ளும் எமது பொருளாதார பலத்தை கட்டி எழுப்பலாம். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]தாயகத்தில் உள்ள பொருளாதாரம் எதை அடிப்படையாக கொண்டது? தொழில்நுட்பம்?, உதிரிப்பாக உற்பத்தி பொருட்கள்? விவசாயம் (ஏற்றுமதி).....? [/size]

[size=1][size=4]அநேகமாக அங்குள்ள அடிப்படை பொருளாதாரம் நுகர்வோர் பொருளாதாரம் என்றால் மிகையாகாது. இந்த பொருளாதாரத்தின் நாடி - புலம்பெயர் மக்களின் பணம். [/size][/size]

[size=1][size=4]இவ்வாறு வரும் பணம் எவ்வாளவு காலத்திற்கு வரும்? அடுத்த தலைமுறை வருமா? பணம் தருமா?? [/size][/size]

[size=1][size=4]இன்று கிடைக்கும் / வரும்பணத்தில் தாயகத்தில் நீண்ட நோக்கோடு ஒரு பொருளாதாரத்தை கட்டி எழுப்பப்படுகின்றதா? அதற்குரிய அரசியல்நிலைமை உள்ளதா? [/size][/size]

நீங்கள் சொல்லுவது உண்மைதான் அண்ணா, ஆனால் உற்பத்தித் துறைகளிலும் பலர் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக விவசாயம், கடற்தொழில். கடைசியாகப் போயிருந்த போது பருத்தித்துறைக் கடலிலே ஒரு மீன்பிடிப் படகில் கொஞ்சத் தூரம் போய் வந்தோம். அந்தப் படகை செலுத்தியவர் கடற் தொழில் செய்பவர். தான் இரண்டு வருடம் குவைத்தில் இருந்ததாகவும் போன வருடம் இலங்கை வந்ததாகவும் சொன்னார். அத்துடன் தான் ஒரு இரவு தொழிலுக்குப் போனால் குறைந்தது 50,000 ரூபா வரை உழைக்க முடிவதாகவும் சொன்னார். எனக்கு தெரிந்த பலர், தென்பகுத்திக்கு புகையிலை, வெங்காயம் ஏத்துகிறார்கள். எங்கள் குடும்பத்தில் கூட எனது அம்மாவுக்கு அராலியில ஒரு வயல் இருக்கிறது. பல வருடங்களாக நாட்டு சூழ்நிலையால் தரிசாகிக் கொண்டிருந்தது. போன வருடம் தான் குத்தகைக்கு குடுத்து நல்ல விளைச்சல். எங்கள் வீட்டுக்கு நெல்லு கூட அனுப்பியிருந்தார்கள். எங்கள் வயலில் விளைந்த அரிசியை சமைத்து சாப்பிடும் ருசி வேறு எதிலுமே கிடையாது.

. ஊரில் இருப்பவர்களின் மன நிலை யாழ் களத்தில் இருப்பவர்களின் மனநிலையிலிருந்து மிகவும் வேறுபட்டு இருக்கிறது. தொழில், வியாபாரம் செய்யும் பலர் மிகவும் முன்னேறி இருக்கிறார்கள்.

இதைச் சொன்னால் உங்களை துரோகி என்பார்கள்.

ஆனாலும் எனக்கு 4 விதமான source களில் இருந்து தகவலகள் கிடைக்கின்றன

1. ஒன்று புலம்பெயர் மக்களின் யதார்த்தத்தை மீறிய உணர்ச்சிகளின் அடிப்படையிலான வெளிப்பாடுகள்

2. அங்கு போய் இங்கு வரும் மக்களின் ஒரு சில நாட்கள் (ஆகக்கூடியது 3 மாதங்கள்) பற்றிய குறிப்புகள்

3. அங்கே இருந்து இன்றும் தெளிவாக இருந்து தமது blogs இலும் பத்திரிகைகளிலும் உள்ளதை உள்ளபடி எழுதுபவர்கள்

4. இங்கு 18 வருடம் வாழ்ந்து (கனடா) பின் வெறுத்து அங்கு போன என் மாமா ஒவ்வொரு வருடமும் தன் பென்சன் காசை எடுக்க வரும் போது சொல்பவை

இந்த 4 தகவல்களும் சொல்லுபவை

1. இன்று அங்கு மக்கள் ஓரளவுக்கேனும் நிம்மதியாக வாழ்க்கையை வாழ்கின்றனர்

2. ஆனால் இந்த நிம்மதி எந்தக் கணத்திலும் பறி போகும் என்பதையும், இது நிரந்தரமில்லை என்பதையும் புரிந்து வைத்துள்ளனர்

3. மிக முன்னேறி வியாபாரத்தில் வெளுத்து வாங்கும் ஒரு தமிழ் நிறுவனம் இலங்கை அரசின் இன ஒதுக்கலால் அடுத்த நாளே தரை மட்ட லெவலுக்கு வரலாம் என

4. எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டு ஒரு சிறு பகுதியினர், தாம் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு அடிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றோம் என உணர்ந்து, எதிர்காலத்துக்கு என்ன செய்ய வேண்டும், எப்படி அரசியல் ரீதியில் போராட வேண்டும் என கணித்துக் கொண்டு அமைதியாக இருக்கின்றனர் என

இந்த 4 ஆவது பிரிவுதான் மிச்ச 3 பிரிவுகளின் எதிர்காலத்தை மட்டுமல்ல இலங்கைத் தீவின் தலை விதியையும் கூட தீர்மானிக்க போகின்றது.

உங்களின் பல விடயங்களுடன் உடன் படுகிறேன் ஆனால் இலங்கைத் தீவினுள் அடுத்த பத்து வருடங்களில் தமிழர்களால் எதுவிதமான காத்திரமான அரசியல் போராட்டங்களும் மேற்கொள்ளப் படப்போவதில்லை. அப்படி மேற்கொள்ளப்பட்டாலும், அது வெற்றியளிக்கப் போவதும் இல்லை. பல மக்களுக்கு இது நன்கு தெரியும். அத்துடன் "வாழ விடு" கொள்கையிலே பலர் உறுதியாக உள்ளார்கள். நான் கதைத்த சந்தித்த எவருமே இன்னொரு போராட்டத்தை விரும்பவில்லை, அத்துடன் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்களையும் அவர்கள் விரும்பவில்லை என்பதே கசப்பான உண்மை. புலம் பெயர் பொருளாதார உதவிகளை நிறுத்தினாலும் எமது மக்களின் வாழ்க்கை நீண்டகாலத்தில் அவளவு மாற்றமடையாது. வேறு விதமான வாழ்க்கை முறைகளுக்கு தங்களை மாற்றி விடுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

3, 4 லச்சம் எல்லாம் இப்ப ஒரு காசே இல்லை.

தும்பளையானின் கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன்...

இது எங்களுடைய பிரச்சனையே தவிர அவர்களுடையது அல்ல, நாங்கள் இன்னும் மாறவில்லை 4 லட்சம் என்பது 4000 டொலர் என்று நினைக்க நாங்கள் இன்னும் தயாராகவில்லை. 4000 டாலரில் இல் என்ன விழா இங்கே நடத்தலாம் என்று யோசித்தால் இந்த 4 இலச்ச குழப்பம் வராது...

மற்றது யாழில், அல்லது இலங்கையில் புழங்குகிற முழுப்பணத்திற்கும் சொந்தக்காரர் நாங்கள்தான் என்று நினைக்கவில்லை. எனது மிக நெருங்கிய உறவினர் அண்மையில் இலங்கை போனவர், சொன்னார் இப்ப தனது வயதில் உள்ள 25 -26 வயதில் (தனக்கு தெரிந்த ) கம்பஸ் இல் படித்த எல்லா பொறியியல் ஆளர்களுக்கும் வேலை கிடைத்துள்ளதாம்,(50000 - 70000 மட்டில்) ஆனால் ஒரு பத்து வருடத்துக்கு முந்திய நிலை அதுவல்ல.

  • தொடங்கியவர்

நீங்கள் சொல்லுவது உண்மைதான் அண்ணா, ஆனால் உற்பத்தித் துறைகளிலும் பலர் ஈடுபடுகிறார்கள். குறிப்பாக விவசாயம், கடற்தொழில். கடைசியாகப் போயிருந்த போது பருத்தித்துறைக் கடலிலே ஒரு மீன்பிடிப் படகில் கொஞ்சத் தூரம் போய் வந்தோம். அந்தப் படகை செலுத்தியவர் கடற் தொழில் செய்பவர். தான் இரண்டு வருடம் குவைத்தில் இருந்ததாகவும் போன வருடம் இலங்கை வந்ததாகவும் சொன்னார். அத்துடன் தான் ஒரு இரவு தொழிலுக்குப் போனால் குறைந்தது 50,000 ரூபா வரை உழைக்க முடிவதாகவும் சொன்னார். எனக்கு தெரிந்த பலர், தென்பகுத்திக்கு புகையிலை, வெங்காயம் ஏத்துகிறார்கள். எங்கள் குடும்பத்தில் கூட எனது அம்மாவுக்கு அராலியில ஒரு வயல் இருக்கிறது. பல வருடங்களாக நாட்டு சூழ்நிலையால் தரிசாகிக் கொண்டிருந்தது. போன வருடம் தான் குத்தகைக்கு குடுத்து நல்ல விளைச்சல். எங்கள் வீட்டுக்கு நெல்லு கூட அனுப்பியிருந்தார்கள். எங்கள் வயலில் விளைந்த அரிசியை சமைத்து சாப்பிடும் ருசி வேறு எதிலுமே கிடையாது.

[size=4]நீங்கள் கூறுவது போன்று மக்கள் உள்ளார்கள். ஆனால் அவர்கள் மொத்த சனத்தொகையில் எத்தனைவீதம்? ஐந்து வீதம்? இல்லை ஐம்பது வீதம்? [/size]

[size=1]

[size=4]ஐம்பது வீதமாக இருக்கவேண்டும் என்பதே எனது ஆசை. [/size][/size]

[size=1]

[size=4]ஐந்து வீதம் அளவில் எந்த பொருளாதார தடைகள், போர் உக்கிரமான சூழல் போன்றகாலங்களில் கூட மகிழ்வாகத்தான் வாழ்ந்தார்கள். ஒரு முப்பது வருடகால யுத்தம் பெயரளவில் முடிந்த நிலையில் ஒரு பொருளாதார வேக வளர்ச்சி இருப்பது எங்கும் உள்ளது. அந்த வளர்ச்சி காத்திரமனதாக இல்லாவிட்டால் அது காற்றடித்த 'பலூனகி' விடும். [/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.