Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேர்முகத் தேர்வுக்கு தயாராக...........

Featured Replies

ஒரு திரியில் அகூதா குறிப்பிட்டு இருப்பது போல் 100 டொலர் வருமானத்திற்கு 140 டொலர் செலவழிக்க வேண்டிய தேவைகள் காணப்படும் கனடா நாட்டில் இப்ப நான் செய்யும் வேலையில் இருந்து கிடைக்கும் வருமானம் கையைக் கடிக்க தொடங்கி விட்டதால். 3 மாதத் திட்டம் ஒன்று போட்டு மும்முரமாக புது வேலை தேடுகின்றேன். ஒரு சில வேலைகளுக்கு முயன்று இரண்டு நேர்முகப் பரீட்சைக்கு முகம் கொடுத்து அதன் பெறுபேறுகளுக்காக காத்திருக்கின்றேன்.

மேற்கு நாடுகளில் நேர்முகத் தேர்வு எமது நாடுகளில் நடப்பதை விட மிகவும் வேறுபாடாக இருக்கும் என்பதை உங்கள் அனுபவங்களில் இருந்தே அறிந்து இருப்பீர்கள். வழக்கமாக எனக்கு என் தொழில் சம்பந்தமான கேள்விகள் எப்பவும் கடினமாக இருப்பதில்லை. ஆனால் Behavioral questions எனப்படும் எம் குணவியல்புகளை அறியும் கேள்விகளும் hypothetical questions எனப்படும் கேள்விகளும் (இதற்கு என்ன தமிழ் என்று சரியாகத் தெரியவில்ல) காலை வாரத் தவறுவதில்லை. இந்த முறை இவற்றை எப்படி எதிர்கொள்வது என்று சில இணையத்தளங்களுக்கு சென்று பார்த்து என்னை தயார்படுத்தி ஓரளவுக்கேனும் சரியாக பதில் சொல்லி உள்ளேன். நான் இவற்றை அறிவதற்காக சென்ற இணையத்தளங்களையும் சில கேள்விகளையும் உங்களுடன் பகிர்கின்றேன். இவற்றில் அநேகமானவை ஆங்கிலத்தில் எழுதுவதும், பெறுவதும் இலகு என்பதால் கூடிய அளவுக்கு ஆங்கிலத்தை பயன்படுத்தி உள்ளேன்

Common Behavioral questions (பொதுவான குணவியல்பு கேள்விகள்): இந்த கேள்விகளுக்கு 'இது தான் சரியான பதில்' என்று எதுவும் இருப்பதில்லை. ஆனால் சிறந்த பதில் என்ற ஒன்று இருக்கு. இந்தக் கேள்விகளுக்கு பின்வரும் சில அடிப்படையான விடையங்கள் இருக்கு., அதனைத்தான் பார்ப்பார்கள்

சில கேள்விகள்

1. What is your greatest weakness?

எங்கள் weakness பற்றிய கேள்வி இது. நாம் சொல்லும் பதில் உண்மையில் வீக்னெஸ் போன்று காட்டி ஆனால் அதை இப்போது சரி செய்து விட்டோம் என்று காட்டல் வேண்டும். அந்த சரி செய்தல் முறை அது நாம் விண்ணப்பித்து இருக்கும் வேலையினை சரியாகச் செய்வதற்கு உதவுவதாகக் காட்டல் முக்கியம்

உதாரணத்துக்கு இரு பதில்கள் .. (ஆங்கிலத்தில்)

  • I like to make sure that my work is perfect, so I tend to perhaps spend a little too much time checking it. However, I've come to a good balance by setting up a system to ensure everything is done correctly the first time.

  • .I would say that I can be too much of a perfectionist in my work. Sometimes, I spend more time than necessary on a task, or take on tasks personally that could easily be delegated to someone else. Although I've never missed a deadline, it is still an effort for me to know when to move on to the next task, and to be confident when assigning others work.

2. What is your greatest strength? உங்களின் பலம் என்ன?

இந்தக் கேள்விக்கு இல்லாத பலத்தை எல்லாம் காட்ட போய் நாம் பொய் சொல்கின்றோம் என்று காட்டக் கூடாது (பொய்யை பொய்யாக காட்டக் கூடாது என்பது தான் trick). எம் பதில் நாம் விண்ணப்பித்து இருக்கும் வேலைக்கு பொருந்துவதாகவும் அதை திறமையாக செய்ய கூடிய விடயமாகவும் இருக்க வேண்டும்

உதாரணத்துக்கு இரு பதில்கள் .. (ஆங்கிலத்தில்)

  • I have exceeded my sales goals every quarter and I've earned a bonus each year since I started with my current employer.
  • My time management skills are excellent and I'm organized, efficient, and take pride in excelling at my work.

3. When was the last time you were angry? What happened?

என்னை பொருத்தவரைக்கும் மிகவும் கடினமான கேள்வி இதுதான் என்று சொல்வேன். வேலையில் அடிக்கடி கோபப்பட்டு மேலதிகாரிகளுடன் முரண்பட்டு இருப்பதால் பல தடவை சொதப்பி இருக்கின்றேன்.

Anger to me means loss of control. I do not lose control. When I get stressed, I step back, take a deep breath, thoughtfully think through the situation and then begin to formulate a plan of action.

மேலதிக இதே போன்ற கேள்விகளுக்கும் பதில்களுக்கும் இங்கே பாருங்கள்:

http://jobsearch.abo...erviewquest.htm

மிகுதி பிறகு.............

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் எல்லாருக்கும் பிரியோசனப்படக் கூடிய விடையம் தொடருங்கள்..

hypothetical questions.....கற்பனையான கேள்விகளுக்கு,அநுமானிக்கப்பட்ட,என்று பொருள்படும்.என் அறிவுக்கு இப்படித் தான் புரிந்து கொள்கிறேன்.

  • தொடங்கியவர்

பல நிறுவனங்கள் தமது candidates இன் quick thinking பற்றி அறிய aptitude exams வைப்பர். மிகவும் சிக்கலான அதே நேரம் மிகக் குறைந்த நிமிடங்களில் செய்து முடிக்க வேண்டிய பரீட்சை. கடந்த வாரம் ஒரு நிறுவனத்தில் 2 பரீட்சைகள் செய்து முக்கித் தக்கி பாஸ் பண்ணி விட்டேன் (ஆனால் இன்னும் வேலை கிடைக்கவில்லை என்பது வேறு விடயம்). அந்த பரீட்சைக்கு தயார் படுத்த மிகவும் உதவிய ஒரு இந்தியத் தளம் இது. கண்டிப்பாக பாருங்கள்

http://www.indiabix.com/online-test/aptitude-test/

----------------------------

பாராட்டிய யாயினிக்கும், லைக்கிய தும்பளையானுக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள ஒரு திரி. கை நிறைய காசுடன் புது வேலை விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள். நானும் வேலை மாறும் யோசனையில் இருக்கிறேன், அதற்காக விண்ணப்பித்து இரண்டு நேர்முகத் தேர்வுகளுக்கும் போய் வந்தேன். நான் வேலை தேடும் பொது, வேலை செய்யும் கம்பனிக்கு வேலை தேடுவது பற்றி மூச்சும் விடுவதில்லை. எனது கருத்து, நான் வேலை மாறப் போகிறேன் என்று தெரிந்தால் சில விடயங்கள் நடக்கலாம்.

1) என்னில் அவர்களுக்கு உள்ள அபிப்பிராயம் குறையலாம்.

2) விட்டிட்டு போகப் போறான் தானே எண்டு புது ஆள் பாக்கத் தொடங்கி, எனக்கு நான் விண்ணப்பித்த வேலை கிடைக்காது விட்டால் எனது வேலைக்கு நானே ஆப்படித்தது போலிருக்கும்.

3) நான் பெறுமதியானவன் என்று கருதினால், புது வேலையில் வரும் சம்பளத்தை தாங்கள் match பண்ணினால் எங்களுடன் நிப்பியா என்ற ரேஞ்சிலே கேள்விகள் வரலாம் (இந்த வேலைக்கு வரும் போது முதல் வேலையில் இருந்த முதலாளி அம்மா இந்தக் கேள்வியைக் கேட்டா)

வேலை தர முதல் refree களுக்கு தொலை பேசி என்னைப் பற்றி விசாரிப்பார்கள். அது தான் எனக்குப் பயம் ஏனென்றால் எனது refree களில் எனது தற்போதைய மேலாளரும் இருப்பார். பிறகு அவர், "இவனா, புது வேலைக்கு விண்ணப்பித்தானா? சொல்லவே இல்லை" ரேஞ்சில் பதில் சொன்னால் புது வேலை தருபவனிடம் எனது பெயர் நாறி விடும். இப்படியான சூழ்நிலைகளை எப்படி அணுகுவது என்பது தான் எனக்குத் தெரியாது, அத்துடன் இந்த Selection Criteria எழுதுவதும் எனக்கு நசல் பிடிச்ச வேலை. நேற்றும் ஒண்டு எழுதினேன். தற்போதைக்கு எனது CEO வை கூல் பண்ண வைன் பிரியரான அவருக்கு விலையுயர்ந்த ஒரு வைன் போத்தலை வாங்கி வைத்திருக்கிறேன்.

நான் கணக்கியல்/பொருளியல் துறையில் வேலை செய்தாலும் பொருளியல் மேலாண்மை (Financial Management) சார்ந்த வேலைகளுக்கும் விண்ணப்பிக்கிறேன். கடைசியாக நேர்முகத் தேர்வுக்கு போனது ஒரு அரசாங்க வேலைக்கு. கிடைத்தா அந்த மாதிரி காசு. எனது கேள்விகளை கீழே எனது மொபைலிலே படமெடுத்து இணைத்திருக்கிறேன். Scan பண்ணப் போனால், அதில இருக்கிற பெட்டை பாப்பாள். பாத்திட்டு அலுவலகம் முழுக்க நியூசை ரிலீஸ் பண்ணி விடுவாள். இப்படியான கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்லலாம் என்றும் உறவுகள் அறிவுறுத்தினால் நல்லது. நேர்முகத் தேர்விலே ஆம்பிளை, பொம்பிளை எண்டு ஏழு பேர் சுத்தி வர இருந்திச்சினம். அறம் புறமா ஏழு கேள்விகளையும் ஆளுக்கொரு கேள்வியாக் கேட்டிச்சினம். எதோ தெரிஞ்ச லெவலில பதில் சொன்னேன். எனக்கு நேர்முகத் தேர்வுகளுக்கு போக விருப்பம் ஏனென்டால் எப்பிடியான கேள்விகளை கேட்பார்கள், எப்பிடியான நடைமுறைகள் இருக்கு எனப் பார்க்க விருப்பம்.

IMAG0305.jpg

IMAG0306.jpg

  • தொடங்கியவர்

கடந்த வருடம் வேலை தேட முற்படும் போது சக கள உறவான தமிழச்சி மிகவும் பயனுள்ள சில குறிப்புகளை தந்து இருந்தார். அவாவும் இதில் தன் அனுபவங்களை எழுதினால் நல்லம். நிறைய விடயங்கள் தெரிந்தும் அதிகம் எழுதாத உறவுகளில் தமிழச்சியும் ஒருவர்.

நிறைகுடம் தழம்பாது.

உங்கள் பாராட்டுக்கு நன்றி நிழலி. நான் ஏற்கனவே கூறியதுபோல், நேரமின்மைதான் நான் எழுதாததற்குக் காரணம்.

நேர்முகத்தேர்வில் பதில் சொல்லும்போது, அவர்களைப் பார்த்துப் பதில் சொல்ல வேண்டும். அதற்காகக் கண்களை அடிக்கடியோ அல்லது அதிக நேரமோ பார்த்துப் பேசாதீர்கள். கட்டாயம் நிமிர்ந்திருந்தே பதிலளிக்கவும். நேர்முகத்தேர்வின்போது அதிகமாக அசைவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு சரியான பதில் தெரியாவிட்டாலும் தெரிந்த பதிலை மிகவும் அழுத்தமாகச் சொல்லுங்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அழுத்தமாகப் பதில் கொடுங்கள். அதோடு, நீங்கள் செல்லும் வேலை சம்பந்தமான ரெக்னிக்கல் வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தவும்.

நிழலி, நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள உங்கள் வீக்னெஸ் என்ன என்ற கேள்விக்கு இப்போது உங்களிடம் இருக்கும் வீக்னெஸைக் குறிப்பிட்டு அதனை நிவர்த்தி செய்வதற்கு செய்யும் முயற்சிகளைக் குறிப்பிடுங்கள். குறைந்தது இரண்டு வீக்னெஸையாவது குறிப்பிட்டு அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்தீர்கள் என்றும் முடிந்தால் அல்லது சந்தர்ப்பம் அமைந்தால் எவ்வளவு காலத்தில் நிவர்த்தி செய்தீர்கள் என்றும் குறிப்பிடுங்கள். எல்லா வீக்னெஸையும் நிவர்த்தி செய்துவிட்டதாகக் கூறாதீர்கள்.

அதோடு, கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகள், சிக்கல்கள் போன்றவற்றையும் குறிப்பிட்டு அவற்றை எவ்வாறு கையாண்டீர்கள் என்றும் குறிப்பிடத் தவறாதீர்கள்.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு மட்டும் நின்றுவிடாது அவர்கள் கேட்ட கேள்விகள் சம்பந்தப்பட்டதாக நீங்களும் சில விடயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

தேர்வுக்குப் போவதற்கு முன்னரே, இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களை எழுதிப் படிப்பது மிகவும் உதவும். பலர் தேர்வுக்குச் செல்வதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னர்தான் இதைப் பற்றி யோசிப்பார்கள்.

மிகவும் முக்கியமானது, நீங்கள் போகும் கம்பனி பற்றி அறிந்திருப்பதுதான். வேலைக்கு விண்ணப்பிக்கும்போதே அறிந்து வைத்திருப்பது நல்லது.

நேர்முகத் தேர்விற்கு 15-20 நிமிடங்களுக்கு முன்னரே கம்பனிக்குள் செல்லுங்கள். அதற்கும் அதிக நேரம் முன்னர் சென்றுவிட்டாலும் வேறெங்காவது இருந்துவிட்டு 15-20 நிமிடங்களுக்கு முன்னர் அந்தக் கட்டத்திற்குள் அல்லது கம்பனிக்குள் செல்லுங்கள். நீங்கள் அங்கு சென்று காலடி வைக்கும் நிமிடத்திலிருந்து உங்கள் நேர்முகத் தேர்வு ஆரம்பம். ஏனெனில் உங்களை அவதானிக்கும்படி மற்றவர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கலாம். அதனால், அங்கு காத்திருக்கும் நேரத்தில் நிமிர்ந்து அமர்ந்திருங்கள். பயத்துடன் இருப்பதாகவோ அல்லது மிகவும் சாதாரணமாக இருப்பதாகவோ காட்டிக் கொள்ள வேண்டாம்.

தும்பளையான், உங்கள் கேள்விகளுக்கு நாளை நேரம் இருந்தால் பதில்கள் எழுதுகிறேன். இப்போதைக்கு எழுதாதற்கு மன்னித்துவிடுங்கள். இப்போதைக்கு நான் பொதுவாக எழுதியுள்ளேன். நேரம் இருக்கும்போது, அவற்றிற்கான பதில்களைப் பதிவிடுகிறேன்.

உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி ஈழப்பிரியன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே இடத்தில் இருந்தால் உங்கள் திறமை உங்களுக்கே தெரியாது. அத்துடன் கூடிய சம்பளத்துடன் மாறலாம், தொடருங்கள் நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும், தும்பளையானுக்கும் அதிக சம்பளத்துடன், புது வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

உங்கள் இருவருக்கும் கண்ணுக்கு குளிர்சியாக.... கடலை போடக்கூடிய இடத்தில், வேலை கிடைத்தால்... இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன். :D

3- Why do you want this job?

This question typically follows on from the previous one. Here is where your research will come in handy. You may want to say that you want to work for a company that is x, y, z, (market leader, innovator, provides a vital service, whatever it may be). Put some thought into this beforehand, be specific and link the company’s values and mission statement to your own goals and career plans.

4- Who are our main competitors?

This shows you really understand the industry and the main players. Think about a few and say how you think they compare; similarities, differences. This is a good opportunity to highlight what you think are the company’s key strengths.

5- What would your previous co-workers/ co-students say about you?

This is not the arena for full disclosure. You want to stay positive and add a few specific statements or paraphrase. Something like “Joe Blogs always mentioned how reliable and hard working I was” is enough.

6- How do you handle stressful situations and working under pressure?

There are several ways of addressing this one. You may be the sort of person that works well under pressure; you may even thrive under pressure. Whatever the case may be just make sure you don’t say you panic. You want to give specific examples of stressful situations and how well you dealt with them. You may also want to list a few tools you use to help you, such as to do list etc. It is alright to say that if you feel you are way over your head you will ask for assistance. It is equally acceptable to say that you work best under pressure if this is indeed the case and relevant to the particular role.

7- What is your greatest strength?

This is your time to shine. Just remember the interviewer is looking for work related strengths. Mention a number of them such as being a good motivator, problem solver, performing well under pressure, loyal, positive attitude, eager to learn, taking the initiative, attention to detail. Whichever you go for, be prepared to give examples that illustrate this particular skill.

8- What is your weakness?

A challenging one, as if you so you have no weaknesses you are obviously lying! Be realistic and mention a small work related flaw. Many people will suggest answering this using a positive trait disguised as a flaw such as “I’m a perfectionist” or “I expect others to be as committed as I am”. I would advocate a certain degree of honesty and list a true weakness. Emphasize what you’ve done to overcome it and improve. This question is all about how you perceive and evaluate yourself.

9- Tell me about a suggestion that you have made that has been successfully implemented.

Here the emphasis is on the implemented. You may have had many brilliant ideas, but what the interview is looking for is something that has actually materialized. Be prepared to briefly describe how it went from an idea to implementation stage.

10- Have you ever had to bend the rules in order to achieve a goal?

Beware of this type of question! Under no circumstances is it necessary to break company policy to achieve something. Resist the temptation to answer and give examples, as what the interviewer is looking for is to determine how ethical you are and if you will remain true to company policy.

12-Why should we hire you?

This is an important question that you will need to answer carefully. It is your chance to stand out and draw attention to your skills, especially those that haven’t already been addressed. Saying “because I need a job” or “I’m really good” just won’t cut it. Don’t speculate about other candidates and their possible strengths or flaws. Make sure you focus on you. Explain why you make a good employee, why you are a good fit for the job and the company and what you can offer. Keep it succinct and highlight your achievements.

13- Regarding salary, what are your expectations?

Always a tricky one and a dangerous game to play in an interview. It is a common mistake to discuss salary before you have sold yourself and like in any negotiation knowledge is power. Do your homework and make sure you have an idea of what this job is offering. You can try asking them what the salary range. If you want to avoid the question altogether you could say that at the moment you are looking to advance in your career and money isn’t your main motivator. If you do have a specific figure in mind and you are confident you can get it, then it may be worth going for it.

14- Do you have any questions for us?

This one tends to come up every time. Have some questions prepared- about 15. This will show you have done some research and are eager to know and learn as much as possible. You probably don’t want to ask more than 3 or 4 questions. Try and use questions that focus on you becoming an asset to the company. A generic one might be “how soon can I start if I were to get the job”. Another idea is to ask what you would be working on and how quickly they expect you to be able to be productive. Remember to ask about next steps and when you can expect to hear back.

Bare in mind that the interview starts from the minute you walk into the building until you leave and are out of sight. Don’t think that just because you have left the meeting room, you are “off the hook”. You need to maintain an image of confidence, enthusiasm, competence, reliability and professionalism throughout.

Monster.com

my lecturer gave to me last week in college to attent a job interview.

  • கருத்துக்கள உறவுகள்

மிகப்பயனுள்ள திரி..நன்றிகள் நிழலி அண்ணா,தமிழச்சி அக்கா... புதிய வேலை கிடைத்ததிற்க்கு பாராட்டுக்கள் நிழலி அண்ணா.....உங்கள் புதிய வேலை பற்றிய அனுபவங்களையும் எழுதுங்கள் அண்ணா...

  • தொடங்கியவர்

நிழலிக்கும், தும்பளையானுக்கும் அதிக சம்பளத்துடன், புது வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

உங்கள் இருவருக்கும் கண்ணுக்கு குளிர்சியாக.... கடலை போடக்கூடிய இடத்தில், வேலை கிடைத்தால்... இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன். :D

தமிழ் சிறியின் ஒரு வாக்குப் பலித்து விட்டது. மற்ற வாக்கான, கடலை போடக் கூடிய இடமாகவும் இருந்தால் எம்பிக் குதித்து சந்தோசப்படுவேன்.

3 நேர்முகத் தேர்வுகள் நடந்தன. இறுதி தேர்வுக்கு போகும் போது மனிசி அன்பாக கட்டிப் பிடித்து முத்தம் தந்து அனுப்பி வைத்தா. அதுவும் இந்த வேலை கிடைக்க உதவி செய்துள்ளது

இன்று காலை களத்தை திறந்தவுடன், மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நிழலி.

மிகுந்த சந்தோசமாக உள்ளது. உங்கள் புதிய வேலையில், பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

நிழலிக்கும், தும்பளையானுக்கும் அதிக சம்பளத்துடன், புது வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.

உங்கள் இருவருக்கும் கண்ணுக்கு குளிர்சியாக.... கடலை போடக்கூடிய இடத்தில், வேலை கிடைத்தால்... இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவேன். :D

நன்றி சிறி அங்கிள் (உங்களுக்கு பெடியள் பென்சன் குடுத்த தகவல் எங்களுக்கும் வந்திட்டுது :icon_mrgreen: ). தற்போது வேலை செய்யும் இடத்தில் receptionist கண்ணுக்கு குளிர்மை தான் :wub: இருந்தாலும் இரண்டு வருடங்களாக இங்கிருந்தது அலுத்து விட்டது.

தமிழ் சிறியின் ஒரு வாக்குப் பலித்து விட்டது. மற்ற வாக்கான, கடலை போடக் கூடிய இடமாகவும் இருந்தால் எம்பிக் குதித்து சந்தோசப்படுவேன்.

3 நேர்முகத் தேர்வுகள் நடந்தன. இறுதி தேர்வுக்கு போகும் போது மனிசி அன்பாக கட்டிப் பிடித்து முத்தம் தந்து அனுப்பி வைத்தா. அதுவும் இந்த வேலை கிடைக்க உதவி செய்துள்ளது

அதற்குள் புது வேலை கிடைத்து விட்டதா? வாழ்த்துக்கள் நிழலி அண்ணா. புது வேலை கொசிப்களை உங்களிடமிருந்து எதிர்பாக்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி அங்கிள் (உங்களுக்கு பெடியள் பென்சன் குடுத்த தகவல் எங்களுக்கும் வந்திட்டுது :icon_mrgreen: ). தற்போது வேலை செய்யும் இடத்தில் receptionist கண்ணுக்கு குளிர்மை தான் :wub: இருந்தாலும் இரண்டு வருடங்களாக இங்கிருந்தது அலுத்து விட்டது.

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள், நிழலி!

தமிழிச்சியின் அறிவுரைகளுக்கும் நன்றிகள்!

தும்பளையான், நான் எனது மேலாளரின் பெயரை, விண்ணப்ப நிலையில் போடுவதில்லை!

Reference on Request' என்று போட்டுவிட்டு, நேர்முகத் தேர்வின் போது, நான் விலகுவதை மேலாளர் அனேகமாக விரும்ப மாட்டார் எனக் சாடையாகக் கூறுவேன்!

பின்பு, 'Reference" நிலை வரும்போது, புதிய மேலாளர், இதை எதிர் பார்த்திருப்பார்! :icon_idea:

வாழ்த்துக்கள் நிழலி.

வேலைக்கு புதிதாக வருபவர்களின் பயத்தைப் போக்க வாட்டத்தை நீக்க, அதிகமாக ஒரு Bubbly personality யான பெண்ணை சிறிது காலம் உங்களுக்கு உதவி செய்ய விடுவார்கள். அந்த லவ்லியை கைக்குள் போட்டீர்கள் என்றால், எதிர்காலத்திற்கு நல்லது. :D

முன்பு நிரந்தர வேலைக்கு போகும் பொழுது இப்படி நிறையக் கேள்வி கேட்பார்கள்.தற்காலிக வேலை (contract) செய்வதால், வேலையுடன் தொடர்பான கேள்விகள்தான் கேட்பார்கள். நேர்முகத் தேர்வு கிட்டத் தட்ட ஒரு வியாபார பேச்சுவார்த்தையாகவே இருக்கும். வேலை தெரியாவிட்டால் ஒரு கிழமை தவணை தந்து வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள்.

பொதுவாக நான் வேலை செய்யும் இடத்தில் உள்ள மேலாளரின் பெயரை reference இற்குக் கொடுப்பதில்லை. சில இடங்களில் வேலைத் திட்டம் முடிவுக்கு வரும் நிலையில், மேலாளருடன் கதைத்து விட்டு (மேலாளர் எப்படியானவர் என்பதைப் பொறுத்து). கொடுத்திருக்கிறேன். அவர்களுக்கு நான் நேர்முகத் தேர்விற்கு போகும் பொழுதும் சொல்லி விட்டுத்தான் போவேன். அப்படியானவர்களிடம் மீண்டும் வேலைக்கு போயுமிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி உங்கள் மேல் அதிகாரியுடன் சில வேளைகளில் கோபமடைந்து சொதப்பியதாக குறித்தீர்கள்.

வேலை தேடுவதில் அடுத்த முக்கியமான விடயம் referaance check.

இது குறித்த சட்டம் குறித்து சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். இதனை மனித குணாதிசியங்களுடன் சேர்த்து பார்க்க வேண்டும்.

சட்டம் என்ன சொல்கின்றது. ஒருவர் குறித்த referaance கட்டாயமாக கொடுக்கப் பட வேண்டும். அதேவேளை அவர் குறித்த 'negative' விடயங்கள் குறித்து கொடுக்க மாட்டார்கள் . ஏனேனில் அத்தகைய விடயங்கள் 'நீதிமன்றில்' கொடுத்த நிறுவனத்தினை நிறுத்தக் கூடும்.

நல்ல வேலையாள் ஆயின் மிகச் சிறப்பாக எவர் எமது நிறுவனத்தில் குறித்த பகுதியின் முதுகெலும்பாக இருந்தார். சிறந்த செயல் வீரர் என குறிப்பிடலாம். இவர் மீண்டும் எமது நிறுவனத்திற்கு வர விரும்பின் தயங்காமல் எடுப்போம் என சொல்லுவார்கள்.

இதில் முக்கியமான விடயம் இந்த வகை சிபாரிசுகள் அந்த நிறுவனத்தின் மதிப்பினை வேலை செய்வோர் வசம் ஏற்படுத்தும் என்பதால் உண்மையை நன்றாக எழுதுவார்கள்.

மறுபுறம் ஒரு உதவாத வேலையாள் குறித்து சுருக்கமாக இவர் இந்த திகதியில் இருந்து இந்த திகதி வரை இங்கே வேலையில் இருந்தார் என மட்டும் குறிப்பிடுவார்கள்.

இதன் அர்த்தம் என்ன என்பதனை ஒரு அனுபவம் மிக்க 'வேலைக்கு ஆள் தேடும்' நிறுவன manager புரிந்து கொள்வார். இதனை 'reading between lines' (சொல்லப்படாத விடயத்தினை புரிந்து கொள்ளுதல்) என்பார்கள்.

ஒருவருக்கு மேல் அதிகாரியுடன் உள்ள தனிப் பட்ட பிரச்சனைகள் reference விடயத்தில் HR கவனத்தில் எடுக்காது என்பதனையும் கவனிக்க வேண்டும்.

எனவே உங்கள் referaance குறித்த தெளிவு, திட்டமிடல் அவசியம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

தப்பிலி,

நீங்கள் சொல்வதை தான் நான் வேறு மாதிரி சொன்னேன்.

நானும் contract வேலையில் இருக்கின்றேன்.

Reference கேட்டால், அந்த நிறுவனத்தில் வேலை செய்த போது இருந்த boss இப்ப இங்க இருக்கின்றார். அவரிடம் பேசி referance எடுத்துக்கொள்ளுங்கள் என எமக்கு நல்ல reference கொடுப்பார் என நம்பும் ஒருவரை மட்டும் உபயோகப்படுத்தலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பாராட்டுக்கு நன்றி நிழலி. நான் ஏற்கனவே கூறியதுபோல், நேரமின்மைதான் நான் எழுதாததற்குக் காரணம்.

நேர்முகத்தேர்வில் பதில் சொல்லும்போது, அவர்களைப் பார்த்துப் பதில் சொல்ல வேண்டும். அதற்காகக் கண்களை அடிக்கடியோ அல்லது அதிக நேரமோ பார்த்துப் பேசாதீர்கள். கட்டாயம் நிமிர்ந்திருந்தே பதிலளிக்கவும். நேர்முகத்தேர்வின்போது அதிகமாக அசைவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு சரியான பதில் தெரியாவிட்டாலும் தெரிந்த பதிலை மிகவும் அழுத்தமாகச் சொல்லுங்கள். எல்லாக் கேள்விகளுக்கும் அழுத்தமாகப் பதில் கொடுங்கள். அதோடு, நீங்கள் செல்லும் வேலை சம்பந்தமான ரெக்னிக்கல் வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தவும்.

நிழலி, நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள உங்கள் வீக்னெஸ் என்ன என்ற கேள்விக்கு இப்போது உங்களிடம் இருக்கும் வீக்னெஸைக் குறிப்பிட்டு அதனை நிவர்த்தி செய்வதற்கு செய்யும் முயற்சிகளைக் குறிப்பிடுங்கள். குறைந்தது இரண்டு வீக்னெஸையாவது குறிப்பிட்டு அவற்றை எவ்வாறு நிவர்த்தி செய்தீர்கள் என்றும் முடிந்தால் அல்லது சந்தர்ப்பம் அமைந்தால் எவ்வளவு காலத்தில் நிவர்த்தி செய்தீர்கள் என்றும் குறிப்பிடுங்கள். எல்லா வீக்னெஸையும் நிவர்த்தி செய்துவிட்டதாகக் கூறாதீர்கள்.

அதோடு, கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்த பிரச்சனைகள், சிக்கல்கள் போன்றவற்றையும் குறிப்பிட்டு அவற்றை எவ்வாறு கையாண்டீர்கள் என்றும் குறிப்பிடத் தவறாதீர்கள்.

அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு மட்டும் நின்றுவிடாது அவர்கள் கேட்ட கேள்விகள் சம்பந்தப்பட்டதாக நீங்களும் சில விடயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

தேர்வுக்குப் போவதற்கு முன்னரே, இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களை எழுதிப் படிப்பது மிகவும் உதவும். பலர் தேர்வுக்குச் செல்வதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னர்தான் இதைப் பற்றி யோசிப்பார்கள்.

மிகவும் முக்கியமானது, நீங்கள் போகும் கம்பனி பற்றி அறிந்திருப்பதுதான். வேலைக்கு விண்ணப்பிக்கும்போதே அறிந்து வைத்திருப்பது நல்லது.

நேர்முகத் தேர்விற்கு 15-20 நிமிடங்களுக்கு முன்னரே கம்பனிக்குள் செல்லுங்கள். அதற்கும் அதிக நேரம் முன்னர் சென்றுவிட்டாலும் வேறெங்காவது இருந்துவிட்டு 15-20 நிமிடங்களுக்கு முன்னர் அந்தக் கட்டத்திற்குள் அல்லது கம்பனிக்குள் செல்லுங்கள். நீங்கள் அங்கு சென்று காலடி வைக்கும் நிமிடத்திலிருந்து உங்கள் நேர்முகத் தேர்வு ஆரம்பம். ஏனெனில் உங்களை அவதானிக்கும்படி மற்றவர்களுக்கும் அறிவுறுத்தியிருக்கலாம். அதனால், அங்கு காத்திருக்கும் நேரத்தில் நிமிர்ந்து அமர்ந்திருங்கள். பயத்துடன் இருப்பதாகவோ அல்லது மிகவும் சாதாரணமாக இருப்பதாகவோ காட்டிக் கொள்ள வேண்டாம்.

தும்பளையான், உங்கள் கேள்விகளுக்கு நாளை நேரம் இருந்தால் பதில்கள் எழுதுகிறேன். இப்போதைக்கு எழுதாதற்கு மன்னித்துவிடுங்கள். இப்போதைக்கு நான் பொதுவாக எழுதியுள்ளேன். நேரம் இருக்கும்போது, அவற்றிற்கான பதில்களைப் பதிவிடுகிறேன்.

உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி ஈழப்பிரியன்.

நன்றி அக்கா. போகும் கம்பனி பற்றி அறிந்திருக்க வேண்டியது முக்கியமானது என்பது நான் அனுபவத்தில் கண்டது. நான் தற்போது வேலை செய்யும் இடத்திற்கு நேர்முகத் தேர்வுக்கு வந்த போது அவர்களின் இணையத்தளத்தை கொஞ்சம் மேய்ந்து விட்டு வந்தேன், அத்துடன் அதிலிருந்த சில தொழில் நுட்ப ரீதியான பிழைகளையும் இனங்கண்டு வைத்திருந்தேன். நேர்முகத்தேர்வின் போது இதை குறிப்பிட, நேர்முகத்தேர்வு செய்தவர்கள் ஆச்சரியப் பட்டார்கள் காரணம் அங்கு வந்த வேறு யாருமே அந்த நிறுவனம் பற்றி பின்புல தகவல்களை தெரிந்து கொண்டு வரவில்லை.

வாழ்த்துக்கள், நிழலி!

தமிழிச்சியின் அறிவுரைகளுக்கும் நன்றிகள்!

தும்பளையான், நான் எனது மேலாளரின் பெயரை, விண்ணப்ப நிலையில் போடுவதில்லை!

Reference on Request' என்று போட்டுவிட்டு, நேர்முகத் தேர்வின் போது, நான் விலகுவதை மேலாளர் அனேகமாக விரும்ப மாட்டார் எனக் சாடையாகக் கூறுவேன்!

பின்பு, 'Reference" நிலை வரும்போது, புதிய மேலாளர், இதை எதிர் பார்த்திருப்பார்! :icon_idea:

நீங்கள் சொல்லுவதும் சரிதான் ஆனால் நான் அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பிப்பதால் ஆரம்பத்திலேயே reference ஐ cover page இலேயே கேட்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்லதொரு திரி.. முதற்கண் அண்மையில் புதுவேலை பெற்ற நிழலிக்கு வாழ்த்துக்கள்.. தும்பளையானுக்கும் இன்னும் நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்..! :D

நானும் கடந்த இரண்டு கிழமையாக புது நிறுவனம் தான். :rolleyes: கொத்தவால்சாவடிக்கு (ரொராண்டோ) வந்துவிட்டேன்.. :lol:

இந்த அனுபவத்தைப் பற்றி இன்னொருநாளில் எழுதுகிறேன்.. :rolleyes:

வாழ்த்துக்கள் நிழலி.

வேலைக்கு புதிதாக வருபவர்களின் பயத்தைப் போக்க வாட்டத்தை நீக்க, அதிகமாக ஒரு Bubbly personality யான பெண்ணை சிறிது காலம் உங்களுக்கு உதவி செய்ய விடுவார்கள். அந்த லவ்லியை கைக்குள் போட்டீர்கள் என்றால், எதிர்காலத்திற்கு நல்லது. :D

எனக்கு ஒரு மலையாளப் பெண்குட்டியை நியமித்திருக்கிறார்கள்.. :rolleyes: கடலை போடலாமா?? :icon_mrgreen:

அந்த ஆள் பிள்ளை குட்டிக்காரனப்பா இதுக்க நீங்க வேற "அந்த மாதிரி" அட்வைஸ் குடுக்குறீங்கள் :D .

மிகவும் நல்லதொரு திரி.. முதற்கண் அண்மையில் புதுவேலை பெற்ற நிழலிக்கு வாழ்த்துக்கள்.. தும்பளையானுக்கும் இன்னும் நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்..! :D

நானும் கடந்த இரண்டு கிழமையாக புது நிறுவனம் தான். :rolleyes: கொத்தவால்சாவடிக்கு (ரொராண்டோ) வந்துவிட்டேன்.. :lol:

இந்த அனுபவத்தைப் பற்றி இன்னொருநாளில் எழுதுகிறேன்.. :rolleyes:

எனக்கு ஒரு மலையாளப் பெண்குட்டியை நியமித்திருக்கிறார்கள்.. :rolleyes: கடலை போடலாமா?? :icon_mrgreen:

வாழ்த்துக்கள் இசை அண்ணா, ஓமணக் குட்டியா? :o எனக்கு பாடையில போற ஒரு கிழவியை தந்தாங்கள் பாவிகள் :( (அந்தக் கிழவிக்கு தான் குமரி எண்ட நினைப்பு என்பது வேற கதை). எல்லாருமே புது வேலை போலத்தான். எனக்கு றேட் பேசுவதும் கஷ்டமான விஷயம். சின்னப் பெடியன் தானே எண்டு மட்டம் தட்டப் பாக்கிறாங்கள்.

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருமே புது வேலை போலத்தான். எனக்கு றேட் பேசுவதும் கஷ்டமான விஷயம். சின்னப் பெடியன் தானே எண்டு மட்டம் தட்டப் பாக்கிறாங்கள்.

பொறுமை.. பொறுமை.. :D பொறுமை கடலினும் பெரிது.. :rolleyes:

உங்கள் வருமானம் உங்கள் அனுபவத்தை, அறிவை, படிப்பை ஒட்டியவர்களுடன் ஒப்புநோக்கும்போது குறைவாக இருந்தால், உங்களுக்கு சந்தையில் கிராக்கி இருந்தால் வருமானத்தை உயர்த்திக்கொள்ள வழிவகை காணவேண்டும்.

அதேபோல ஒரே நிறுவனத்தில் பலவருடங்கள் குப்பை கொட்டுவது நீண்டகாலநோக்கில் நன்மையைவிட அதிகம் தீமையையே தரக்கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்லதொரு திரி.. முதற்கண் அண்மையில் புதுவேலை பெற்ற நிழலிக்கு வாழ்த்துக்கள்.. தும்பளையானுக்கும் இன்னும் நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள்..! :D

நானும் கடந்த இரண்டு கிழமையாக புது நிறுவனம் தான். :rolleyes: கொத்தவால்சாவடிக்கு (ரொராண்டோ) வந்துவிட்டேன்.. :lol:

இந்த அனுபவத்தைப் பற்றி இன்னொருநாளில் எழுதுகிறேன்.. :rolleyes:

எனக்கு ஒரு மலையாளப் பெண்குட்டியை நியமித்திருக்கிறார்கள்.. :rolleyes: கடலை போடலாமா?? :icon_mrgreen:

புது வேலைக்கு, வாழ்த்துக்கள் இசை.

இனி உங்களிடமிருந்து அதிக, கொத்தவால் சாவடிச் செய்திகளை எதிர்பார்க்கின்றோம்.

ஓமணக்குட்டியை சுகம் விசாரித்ததாகச் மறக்காமல்... சொல்லிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புது வேலைக்கு, வாழ்த்துக்கள் இசை.

இனி உங்களிடமிருந்து அதிக, கொத்தவால் சாவடிச் செய்திகளை எதிர்பார்க்கின்றோம்.

ஓமணக்குட்டியை சுகம் விசாரித்ததாகச் மறக்காமல்... சொல்லிவிடுங்கள்.

:D :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.