Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி இன்று இப்படி உள்ளது – வலி தரும் படத்தொகுப்பு

Featured Replies

இந்த திரியில் உள்ள அனைத்துப் படங்களும் http://rste.org/ இல் இருந்து எடுக்கப்பட்டவை. நன்றி rste (revolutionary Students of Tamil Eelam)

205229_504654559548599_1800383548_n-950x712.jpg

208921_504651836215538_321334220_n-950x712.jpg

283695_504647119549343_1124541498_n-950x712.jpg

292333_504636706217051_856334483_n-950x712.jpg

http://rste.org/2012...வன்னி-நிலம்-எப/

295425_504638199550235_1911650448_n-950x712.jpg

309320_504650676215654_21957951_n-950x712.jpg

309361_504635852883803_991012149_n-950x712.jpg

314096_504637422883646_178582280_n-950x712.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வன்னித் தேவதையின் வளம் கொழித்த வயல்கள்,

வானம் பார்த்த வறண்டு போன தரவைகளாக!

வெறுமை கீறிய வாய்க்கால்களில்,

வேதனையின் கண்ணீர் வடிந்தோடுகின்றது!

இணைப்புக்கு நன்றிகள், நிழலி!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நிழலி. வாகன உதிரிப்பாகங்களை ராணுவம் தெற்கில் விற்றுக் காசாக்கியதை அனைவரும் அறிந்ததே.

  • கருத்துக்கள உறவுகள்

அன்று நான் வன்னிக்கு சென்றபோது நம்பிக்கையை ஊட்டி நின்ற வன்னி மண்ணில் ....... இன்று வெறும் போரின் எச்சங்கள் மட்டும் மிஞ்சியுள்ளது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி, உங்கள் இணைப்பிற்கு நன்றி.

2009 ம் ஆண்டுக்கு முந்திய அந்தப் பசுமை நிறைந்த வன்னிப் படங்கள் யாரிடமாவது இருந்தால், அதனையும் இணைத்து விடவும்.

போரின் கொடுமையையும், அதன் வலியையும் உணராதவர்களுக்கும், தமிழர் அல்லாதவர்களுக்கும் எடுத்துரைப்பதற்கு உதவியாக

இருக்கும்.

சுபா சுந்தரலிங்கம்

சிறுவயதில், பாடசாலை விடுமுறை காலங்களை கழிப்பதே அந்த அழகான வன்னியில்! மறக்க முடியாத நாட்கள்! ... இப்படங்களை பார்க்க வேதனையாக இருக்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

பல லட்சம் உயிர்களுக்கு உணவளித்த வன்னி

இன்று ஒரு பாலைவனமாகக் காட்சியளிக்கின்றது.

[size=5]இந்தப்படங்கள் தமிழர்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கும் நிழற்படங்கள். [/size]

மனிதன் உருவாக்கிய இயந்திரங்கள் அல்லது றோபோட்டுக்கள் மனிதனை அடிமைப்படுத்துவது என்பது பல்வேறு கோணங்களில் மேற்கத்தேய சிந்தனையில் இருக்கின்றது. இதை நேரடியாக இயந்திரங்கள் தாமாக இயங்கத்தொடங்குவது போன்றதான நாவல்கள் திரைப்படங்கள் நகைச்சுவைகள் போன்றோ அல்லது பல்வேறு பட்ட மட்டங்களில் ஆழமான உருவகங்களாகவோ மேற்கின் பல்வேறு சிந்தனைகளில் பார்க்கமுடிகிறது.

ஈழத்தமிழர் எங்களிற்கு எங்கள் உறவுகளின் சிதறிய துண்டங்கள் பழகிப்போன படங்களாகிப்போன ஒரு அவல சரித்திரம் வாய்த்துள்ளது. அவலம் முடிவின்றி விரிய, உலக கனவான்களின் கவனத்தைப் பெற்று அதன்வழியாயேனும் ஒரு விடிவு வராதா என்ற ஏக்கத்தில் எமது ஆயுத போராட்ட வரலாற்றின் கடைசித் தசாப்த்தத்தை எமக்குத்தெரிந்த வகையில் கவன ஈர்பே குறியாய் அணுகினோம். அதனால், தாயையும் தந்தையையும் குருதியில் ஊறப்போட்டுவிட்டு அவர்கள் குழந்தையினை வத்தலிற்காகக் காயப்போட்டதைப் போல் அவள் கழுத்தில் சுருக்கு மாட்டி எதிரி தொங்கவிட்டுச் சென்றிருந்த புகைப்படம் வந்தபோது கூட, ஒரு கணம் அழுதுவிட்டு, உடலின் உதறலை உதறிவிட்டு, போஸ்ரர் அடிக்கவே முனைந்தோம். மானுடத்தின் இத்தகைய ஒரு கையறு நிலை கண்டேனும் கனவான்கள் இரங்காரா என்ற அங்கலாய்பு உள்ளுர எம்மை இயக்கியது.

கனவான்கள் நாம் நினைத்தபடி நடக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, எமது இந்தப் பத்துவருட முயற்சியில் எமக்குள் நாமறியாத பிறிதொரு இழப்பும் அறிந்த இழப்புகளிற்குள் அதிகம் உணரப்படாத ஒரு இழப்பாக மறைந்து குந்திக்கொண்டது. அதாவது, புகைப்படங்களை நாம் பார்க்கும் எமது பார்வை மழுங்கிப்போனது. உதறவைக்கும் படங்களைப் பார்த்துப்பார்த்துப் பரப்புரை செய்வதானால் பரப்புரைக்காய் நாம் பார்க்கும் படங்கள் எம்மைப் பாடையில் கிடத்தாவண்ணம் ஒரு தற்காப்புத்திரை விரிந்தே தீரவேண்டும். அது நாம் அறிந்தோ அறியாதோ எமக்குள் விரிந்தது. உடலும் உளமும் தம்மைப் பாதுகாப்பதற்காய் முயற்சிப்பது இயற்கை.

இந்நிலையில், எமது தோற்றுப்போன முயற்சிகள் பற்றிய நக்கல் நையாண்டிகள் ஒருபுறம், தோற்றவை தொடர்ந்து தோற்கவே செய்யும் என்ற நழுவல்கள் ஒருபுறம், நம்பிக்கையீனங்கள் சோர்வுகள் உழைச்சல்கள் குழப்பங்கள் பயங்கள் கோபங்கள் ஒருபுறம் என, எமக்கு உண்மையில் எத்தனை புறம் என்று எமக்கே தெரியாதவகை நாம் சடமாகிக்கொண்கிறோமோ என்று சமயத்தில் தோன்றும்வகை எமது பார்கைகள் கிடக்கின்றன. இந்நிலையில், இந்தத்திரியில், மனிதர்களே இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் அற்புதமான பங்காற்றுகின்றன.

இப்படங்களில் மனிதர்கள் இல்லை. ஆனால் அத்தனை படங்களும் மனிதர்களைப் பற்றியவையே என்பதற்கப்பால் மனிதர்க்கானவையே. பரப்புரைக்காக மட்டும் கனவான்களைக் கவர்வதற்காக மட்டும் படம்பார்ப்பது இயல்பாகிப் போய்விட்ட எமக்குள், கனவான்கள் கிடக்கட்டும், மறுபடி எங்களில் இருந்து தொடங்குவோம் என்ற தொனியில் காத்திரமாக வெளிப்பட்டிருக்கின்றன இப்படங்கள். அரசியலிற்கு அப்பால் இலக்கியம் பொதிந்து கிடக்கும் படங்கள்.

படங்களைப் படைத்தவர்களிற்கும் இணைத்த நிழலிக்கும் மனமார்ந்த நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

422334_367388466665097_439126352_n.jpg487692_367387949998482_1440483694_n.jpg283684_367388156665128_1124103649_n.jpg

376353_367388256665118_1231815020_n.jpg

555667_367388339998443_1289733100_n.jpg

561026_367388393331771_953447835_n.jpg

551159_367388433331767_1155545574_n.jpg

422334_367388466665097_439126352_n.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னியெனும் சுடலையிலிருந்து சுடுமண் ஆறஆற எச்சங்கள் வெளிவருகின்றன.தாங்கமுடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வாகனங்கள், துவிச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்கள் இன்று உயிருடனோ அல்லது ஏதாவது ஒரு சிறைச்சாலைகளிலோ, அகதிமுகாமிலோ..... அடுத்த நேர உணவிற்கும், உயிருக்கும் உத்தரவாதமில்லாது தவித்துக் கொண்டிருக்கலாம். படங்களைப் பார்த்து... பெருமூச்சு விடுவதைத்தவிர வேறு வழி தெரியவில்லை.

படங்களைப் பகிர்ந்து கொண்ட நிழலி, வல்வை சகாராவிற்கு நன்றி.

:( :( :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.