Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் குவிந்துள்ள படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் நிமலரூபனின் உடலுக்கு மக்கள் அஞ்சலி!

Featured Replies

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின்இ கடந்த 4ஆம் திகதி மகர சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனின் திருவுடல் நேற்று திங்கட்கிழமை மாலை வவுனியாவுக்கு கொண்ட செல்லப்பட்ட நிலையில் நிமலரூபனின் திருவுடலுக்கு பொது மக்கள் படையினரின் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்.

நேற்றிரவு வவுனியா நெளுக்குளத்திலுள்ள அவரது இல்லத்திற்கு திருவுடல் கொண்டு வரப்பட்டது.இன்றைய தினம் மாலை 4 மணி அளவில் நெளுக்குளம் இந்து மயானத்தில் நிமலரூபனின் திருவுடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக இன்றைய மாலையில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றனஇந்த வணக்க நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அங்சலி செலுத்தினர்.

நிமலரூபனின் இல்லத்தைச் சுற்றி காவல்துறையினர் படையினர் மற்றும் படை புலனாய்வு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில் நிமரூபனின் உடலுக்கு சுதந்திரமாக மக்கள் அங்சலி செலுத்த முடியாத சூழலில் இறுதி நிகழ்வுகள் இடம்பெறுகின்றது என்பது இங்கு குறிப்பிட தக்கது.

நிமலரூபனின் இறுதி நிகழ்வின் போது மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வார்கள் என்ற அச்சத்திலும் அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் என்ன அச்சம் காரணமாகவே பெருமளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

nimalarupan_deadbody_vavunia_011.jpgnimalarupan_deadbody_vavunia_010.jpgnimalarupan_deadbody_vavunia_009.jpgnimalarupan_deadbody_vavunia_007.jpg

http://thaaitamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவரின் உடல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள இடத்தில் கூட... சப்பாத்துடன் நிற்கும் சிங்கள இராணுவம்.

அவரின் உறவுகளை ஆவது, இறந்த நிமலரூபனுக்கு அஞ்சலி செலுத்த விடுங்கள்.

[size=4]நிமலரூபனை பிரிந்து தவிக்கும் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]ஆழ்ந்த அனுதாபங்கள்.[/size]

அந்த ஓட்டை கொட்டிலிலுக்குள் கூட இந்த மிருகங்கள் இவ்வளவு ஆட்டம் போடுகிறார்கள்.

யாழ்ப்பாண சந்தையை களைகட்டவைத்தவர்களுக்கு இப்படியும் ஒரு தமிழ் வீடு இருபது தெரிந்திருக்கவில்லையா?

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Edited by மல்லையூரான்

[size=5]அரசியல் கைதிகள் இறந்தால் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்: மனோ[/size]

[size=4]அரசியல் கைதிகள் நாளை இறப்பார்களேயானால் அதற்கான பொறுப்பை இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல, சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார்.

அரசியல் கைதிகள் தொடர்பாக வவுனியாவில் இன்று நடைபெற்ற அனைத்து கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மனோ கணேசன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"சகோதரர் நிமலரூபன் இயற்கையாக மரணிக்கவில்லை. அவர் திட்டமிட்டு அடித்து கொல்லப்பட்டுள்ளார். இது மாத்திரமல்ல மேலும் ஒரு அரசியல் கைதியான தில்ருக்சன் என்பவர் ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றோ நாளையோ மரணித்தாலும் கூட ஆச்சரியப்பட முடியாது. ஏனெனில் அந்தளவு மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இன்னும் பலர் மோசமாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுகாதார வசதிகள் வழங்கப்படாமல் மருத்துவ உதவிகள் வழங்கப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் சாகவிடப்பட்டுள்ளார்கள்.

ஆகவே தான் சில தமிழ் கட்சிகள் ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளோம். அதாவது, இலங்கையில் இடம்பெற்ற போர் தான் இந்த படுகொலைக்கும் காரணமாக இருக்கின்து. எனவே எமது இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டாலும் கூட அதற்காக தலையிடாவிட்டாலும் கூட இணைத் தலைமை நாடுகள் மற்றும் அமெரிக்காவும், கனடாவும், ஜப்பானும், நோர்வேயும் சாகக் கிடக்கும் எமது அரசியல் கைதிகளையாவது மீட்டுத் தரவேண்டும்.

ஒட்டமொத்தமான முறையில் இதற்கான கோரிக்கையை விடுக்கின்றோம். இந்;த அரசியல் கைதிகள் நாளை இறப்பார்களேயானால் அதற்கான பொறுப்பை இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல சர்வதேச சமூகமும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

ஏனெனில் இங்கு இடம்பெற்ற போருக்கு இந்தியா உட்பட இணைத்தலைமை நாடுகள் அனைத்தும் வெளிப்படையாக தமது பங்களிப்பை செலுத்தியதை நாம் கண்டுகொண்ட உண்மை. இதன் தொடர்ச்சியாக தான் இந்த கொடுமைகள் நடந்துகொண்டிருக்கின்றன" எனத் தெரிவித்தார்.[/size]

[size=4]http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/45336-2012-07-24-15-51-27.html[/size]

[size=4]vu1.jpg[/size]

அசோக்மேத்தா இந்த காடைகளுக்குள் தேர்ந்தெடுக்கபட்ட காட்டுமிராண்டிகளிடம் தான் போய் கூட்டமைப்பை அரசியல் தீர்வு பெறச் சொன்னவர்.

[size=4]ஆழ்ந்த அனுதாபங்கள். [/size]

[size=4]இது மாத்திரமல்ல மேலும் ஒரு அரசியல் கைதியான தில்ருக்சன் என்பவர் ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்றோ நாளையோ மரணித்தாலும் கூட ஆச்சரியப்பட முடியாது. ஏனெனில் அந்தளவு மோசமாக தாக்கப்பட்டுள்ளார். இன்னும் பலர் மோசமாக தாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுகாதார வசதிகள் வழங்கப்படாமல் மருத்துவ உதவிகள் வழங்கப்படாமல் கவனிப்பாரற்ற நிலையில் சாகவிடப்பட்டுள்ளார்கள்.[/size]

:( :(

nimalarajan.jpg

[size=4]நிமலரூபனின் கொலைக்கு நீதி கிடைக்காது. [/size]

[size=4]புலம்பெயர் மக்கள் அந்த அநீதிக்கு, அந்த ஆட்சியை நடாத்தும் கொலைகாரர்களுக்கு எந்த வகையிலும் உதவக்கூடாது. அதுவே எங்களால் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

nimalarajan.jpg

29 வருடங்களுக்கு முன்னர் என் வீட்டிலும் இதே நிலைதான்

சிங்களக் காடையர்களின் அட்டூழியங்கள் இன்றுவரை தொடர்கின்றன.

புத்தரின் வாரிசுகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

நிமலரூபனின் திருவுடலுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்

[size=4]புலம்பெயர் மக்கள் அந்த அநீதிக்கு, அந்த ஆட்சியை நடாத்தும் கொலைகாரர்களுக்கு எந்த வகையிலும் உதவக்கூடாது. அதுவே எங்களால் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனை. [/size]

இது சாத்தியமா? எம்மக்கள் தான் இதை கேட்டு நடக்க மாட்டார்களே....

இலங்கைக்கு செல்வதன் மூலம் சிங்களவர்களுக்கு மேலும் உதவி செய்கிறார்கள்.

நாட்டில் பிரச்சினை இல்லாததுபோல் வெளிநாட்டவர்களுக்கு காண்பிக்க தான் அவர்கள் துணை போகிறார்கள்.

[size=4]

இது சாத்தியமா? எம்மக்கள் தான் இதை கேட்டு நடக்க மாட்டார்களே....

இலங்கைக்கு செல்வதன் மூலம் சிங்களவர்களுக்கு மேலும் உதவி செய்கிறார்கள்.

நாட்டில் பிரச்சினை இல்லாததுபோல் வெளிநாட்டவர்களுக்கு காண்பிக்க தான் அவர்கள் துணை போகிறார்கள்.

[/size]

[size=4]பொதுவாக 'இது அடுத்தவனின் பிரச்சனை. எனக்கோ என் குடும்பத்திற்கோ வராது' என எண்ணி ஏமாறுபவர்கள் எம்மவர்களில் உண்டு. [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

[size=4]புலம்பெயர் மக்கள்[/size][size=4] இலங்கைக்கு செல்வதன் மூலம் சிங்களவர்களுக்கு மேலும் உதவி செய்கிறார்கள்.

நாட்டில் பிரச்சினை இல்லாததுபோல் வெளிநாட்டவர்களுக்கு காண்பிக்க [/size][size=4][/size][size=4]து [/size][size=4][/size][size=4]கை [/size][size=4]செ[/size][size=4]ய்[/size][size=4]யும்.[/size]

[size=4]நிமலரூபனை பிரிந்து தவிக்கும் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஆன்மா சாந்தியடையட்டும்..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறைச்சாலையில் அடித்து கொலை செய்யபட்ட உறவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..அவருடைய ஆத்மா சத்தியடைய வேண்டுகிறோம்.

இந்த நிகழ்வு ஒரு தனியான நிகழ்வு என கருதாமல், அவரை போன்ற மற்றைய கைதிகளையும் விடுவிப்பதர்ற்கும், அவர்களை இயல்பு வாழ்வில் இணைவதர்ற்குரிய சந்தர்பங்களை ஏற்படுத்துவதர்ற்கும் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட வேண்டும்.

இந்த நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உரிய முறையில் உதவிகள் கிடைக்க பல கைகளும் இணைய வேண்டும்.

217978_344018102340226_519391903_n.jpg

Nimalaruban.gif

[size=4]வவுனியாச் சிறைச்சாலைச் சம்பவத்தின் பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 38 பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டதும், அதில் அடிகாயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கூட்டிச் செல்லப்பட்ட திரு. கணேசன் நிமலரூபன் அவர்கள் ராகம வைத்தியசாலையில் மரணமான செய்தி கேட்டு தமிழினமே அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்தது.[/size]

[size=4]மீண்டும் 1983 இல், யூலைக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவுகளும், இனவெறித்தாக்குதல் காட்சிகளும் கண்முன்னே வந்துபோனது.[/size]

[size=4]ஏதோ ஒரு வகையில் சிறையிலாவது தமது மகன் உயிருடன் உள்ளார் என்ற சிறிய நம்பிக்கையில் இருந்த பெற்றோருக்கு ஏற்பட்ட இந்த அதிர்ச்சியில் பிரித்தானியத் தமிழர்கள் சார்பில் பிரித்தானியத் தமிழர் ஒன்றியமும் உணர்வுபூர்வமாக பங்கு கொள்கிறது.[/size]

[size=4]நிமலரூபனின் பிரிவால் துயருற்றிருக்கும் பெற்றோர், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர் மற்றும் சமூக நண்பர்களின் கரங்களை இறுகப் பற்றி எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதே வேளை அவரின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திக்கிறோம்.[/size]

[size=4]“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”[/size]

[size=4]பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

ஐக்கிய இராட்சியம்[/size]

nimalarupan_body_005.jpg

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்...:(

[size=4]கண்ணீர் அஞ்சலி..[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.