Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈலிங் அம்மன் ஆலயத்தில் பிரச்சனை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலுக்குள்ளே வேறின மக்களும் பூசைகளில் கலந்து அன்னதானத்திலும் கலந்து கொள்வதுதான் வழமை.

ஒரு மில்லியன் பவுன்சுக்கு மேல் நாட்டுக்கு அனுப்பிவைத்த ஒரே ஒரு கோவிலும் ஈலிங் அம்மன் கோவில்தான்.

சும்மா அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதை விட உண்மைகளை விசாரித்து அறிந்து எழுதுங்கள்.

கடந்த ஞாயிறு அன்று நடந்த தேர் திருவிழாவில் அண்ணளவாக 35,000௦௦௦ மக்கள் கலந்துள்ளனர்.

சிறு சிறு தவறுகள் எங்கும் நடந்து கொண்டே இருக்கும். அதை ஊதி பெரிதாக்குவதால் நடப்பது ஒன்றும் இல்லை.

கோவில் வழமையாக இயங்குகின்றது.

நன்றி.

http://ammanealing.com/

ஓ அப்பிடியா கஜன் ஒரு சின்னப் பிரச்சனைக்கா கோயிலைப் பூட்டி சீல் வைத்து அங்கு வேலை செய்த அத்தனை ஜயர்மாரையும்,நிர்வாக உறுப்பினர்களையும்,அவர்களது மனைவிமாரையும் கூட்டிச் சென்று காவல் நிலையத்தில் ஒரு நாளுக்கு மேலாக வைத்திருந்து விசாரித்துப் போட்டு விட்டவங்கள்? இப்படி நடக்கவில்லை என சொல்ல வேண்டாம் உள்ளே போயிட்டு வந்த நிர்வாகத்து ஆள் தான் அரைவாசியை மறைத்துப் போட்டு மிச்சத்தை சொன்னவர்.

புலம் பெயர் நாட்டில் ஒருத்தரும் சாப்பாட்டு வழியில்லாமல் கோயிலுக்கு போகிறதில்லை அப்படியே சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போனாலும் சாப்பாடு கொடுத்தால் என்ன?...நிர்வாகம் அடிக்கிற காசில கொஞ்சத்தை அந்த மக்களுக்கு சாப்பாடாய் போட்டால் என்ன குறைந்தா போய் விடும்?...இந்த விடயத்தில் ஜெயதேவன் நட‌த்திற கோயில் பர‌வாயில்லை எந்த நேர‌ம் போனாலும் கோயிலில் சாப்பாடு இருக்குமாம் அப்படி இல்லா விட்டாலும் அங்கிருக்கும் அரிசி,மர‌க்கறியைக் கொண்டு சமைத்து சாப்பிட‌லாமாம்...தனிய இருக்கிற,பொறுப்புகள் கூடிய பெடியங்கள் அந்தக் கோயில் தான் போய் சாப்பிடுகிறவர்களாம்.

இங்கு சில பேர் கதை என்டால் ஒன்றும் இல்லாமல் இங்கு இருந்து கஸ்ட‌ப்படுபவர்களுக்கு உதவக் கூடாது என்ட‌ மாதிரி இருக்குது ஆனால் அவர்கள் தான் ஊருக்கு சேவை செய்பவர்களாம்...நாங்கள் கொடுக்கிற காசில் தான் கோயிலை நட‌த்தினம் அதில் கொஞ்ச‌த்தை அந்த மக்களுக்கு திருப்பிக் கொடுத்தால் என்ன?...வந்தவர் குடிகார‌ன்,தூச‌னம் கதைத்தவர் என்டால் அதை விட‌ வன்முறையைத் தானே கோயிலில் உள்ளவர்களும் செய்திருக்கிறார்கள்...குடிகார‌ருக்கும்,நிர்வாகத்திற்கும் என்ன வித்தியாச‌ம்?...வெட்கப்பட‌ வேண்டிய கேவலமான விச‌யம் இது...இங்கத்தைய கோயில்களீல் ஈலிங் அம்மன் கோயிலைப் பற்றி கேள்விபடும் விச‌யம் எல்லாம் கூடாமல் தான் இருக்குது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கஜன்;

யாரிட்ட கேட்டால் மிச்ச அரைவாசியத்தன்னும் அறியலாம் என்றால் உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும். - நீங்கள் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை.

துண்டு துண்டா கதை கேட்டு ஒரே டேன்சன்னாய் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நடந்தது இதுதான்! நன்றிகள் இணைப்பிற்கு, ... இங்கு சிலர் ஏதோ தமக்கு தெரிந்தது போல் பலவற்றை எழுதுகிறார்கள் ... உண்மைகளை தயவுசெய்து அறிந்து எழுதுங்கள்!! மொட்டந்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சு போடாதீர்கள்!

சில மாதங்களுக்கு முன் இக்குடிகாரன் என்னிடமே ..! ...

.. உண்மை என்னவென்றால் ... கேபி சார்பான கும்பல் ஒன்று ஆலய நிர்வாகத்தை கைப்பற்ற பெரும்பாடு படுகிறது! இக்கும்பல் இவ்வாலயத்தால் நிர்வகிக்கப்படும் பல செயற்பாடுகளை கேபியை கொண்டு தாயகத்தில் கேபியின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறது/சிலவற்றை கொண்டு வந்து விட்டது! ... ஆ.ஆ.ஆ.....GTVயிடம் கேட்டால் சொல்வார்கள் :icon_mrgreen:

வேல்தர்மா சொல்வது சரி என்று வைத்துக் கொண்டு நோக்கினால் கூட பிரித்தானிய சட்ட ஒழுங்கின் படி.. குடித்துவிட்டு வாறவரையோ எவரையுமோ அடிக்கவோ தள்ளிவிடவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. அவரை பாதுகாப்பு ஊழியர்களைக் கொண்டு பத்திரமாக வெளியேற்ற அல்லது காவல்துறைக்கு அறிவிக்கவே இடமுண்டு. தனிநபர்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்க முடியாது. காவல்துறையே ஒருவரை அடிக்க முடியாத போது.. எப்படி ஒரு கோவில் நிர்வாகம் அடிக்க முடியும். ஒரு பொது தொண்டு ஸ்தாபனமான கோவில்கள் அவற்றிற்குரிய சட்ட ஒழுங்கை சரியாக கைக்கொள்ளவில்லை என்றால் அவற்றின் மீது சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம் தானே.

இப்ப எல்லாம் செய்யும் தவறுகளை மறைக்க.. கேபி வந்திட்டான்.. கைப்பற்றப் போறான் என்ற கூக்குரல்களும்.. அச்சுறுத்தல்களும் தான் மிச்சம். ரூற்றிங் அம்மன் கோவில் தேர் எரிஞ்சதும் கோவில் மூடப்பட்டதும் கூட கேபியின் வேலையா இருக்குமோ..???! அந்தளவுக்கு கேபி செல்வாக்குள்ள ஒருவராக எல்லோ இருக்கிறார். அப்படிப்பட்ட கேபி இவற்றைக் கைப்பற்றி.. சட்ட ஒழுங்குக்குள் நின்று செயற்பட்டால் கூட அதுபறுவாயில்லை. அதற்காக காட்டுமிராண்டித்தனங்களை அனுமதிப்பது ஒட்டுமொத்த பிரித்தானிய சமூகத்திற்கும் இழுக்கு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

ஓ அப்பிடியா கஜன் ஒரு சின்னப் பிரச்சனைக்கா கோயிலைப் பூட்டி சீல் வைத்து அங்கு வேலை செய்த அத்தனை ஜயர்மாரையும்,நிர்வாக உறுப்பினர்களையும்,அவர்களது மனைவிமாரையும் கூட்டிச் சென்று காவல் நிலையத்தில் ஒரு நாளுக்கு மேலாக வைத்திருந்து விசாரித்துப் போட்டு விட்டவங்கள்? இப்படி நடக்கவில்லை என சொல்ல வேண்டாம் உள்ளே போயிட்டு வந்த நிர்வாகத்து ஆள் தான் அரைவாசியை மறைத்துப் போட்டு மிச்சத்தை சொன்னவர்.

புலம் பெயர் நாட்டில் ஒருத்தரும் சாப்பாட்டு வழியில்லாமல் கோயிலுக்கு போகிறதில்லை அப்படியே சாப்பாட்டுக்கு வழியில்லாமல் போனாலும் சாப்பாடு கொடுத்தால் என்ன?...நிர்வாகம் அடிக்கிற காசில கொஞ்சத்தை அந்த மக்களுக்கு சாப்பாடாய் போட்டால் என்ன குறைந்தா போய் விடும்?...இந்த விடயத்தில் ஜெயதேவன் நட‌த்திற கோயில் பர‌வாயில்லை எந்த நேர‌ம் போனாலும் கோயிலில் சாப்பாடு இருக்குமாம் அப்படி இல்லா விட்டாலும் அங்கிருக்கும் அரிசி,மர‌க்கறியைக் கொண்டு சமைத்து சாப்பிட‌லாமாம்...தனிய இருக்கிற,பொறுப்புகள் கூடிய பெடியங்கள் அந்தக் கோயில் தான் போய் சாப்பிடுகிறவர்களாம்.

இங்கு சில பேர் கதை என்டால் ஒன்றும் இல்லாமல் இங்கு இருந்து கஸ்ட‌ப்படுபவர்களுக்கு உதவக் கூடாது என்ட‌ மாதிரி இருக்குது ஆனால் அவர்கள் தான் ஊருக்கு சேவை செய்பவர்களாம்...நாங்கள் கொடுக்கிற காசில் தான் கோயிலை நட‌த்தினம் அதில் கொஞ்ச‌த்தை அந்த மக்களுக்கு திருப்பிக் கொடுத்தால் என்ன?...வந்தவர் குடிகார‌ன்,தூச‌னம் கதைத்தவர் என்டால் அதை விட‌ வன்முறையைத் தானே கோயிலில் உள்ளவர்களும் செய்திருக்கிறார்கள்...குடிகார‌ருக்கும்,நிர்வாகத்திற்கும் என்ன வித்தியாச‌ம்?...வெட்கப்பட‌ வேண்டிய கேவலமான விச‌யம் இது...இங்கத்தைய கோயில்களீல் ஈலிங் அம்மன் கோயிலைப் பற்றி கேள்விபடும் விச‌யம் எல்லாம் கூடாமல் தான் இருக்குது

ஓஒ அப்படியா ரதி. ''அவர்களது பிள்ளைகளையும்'' என்று சேர்த்து விடுங்கள். அப்பத்தான் கதை கிளுகிளுப்பாக இருக்கும்.

ஜெதேவன் நடத்திற கோவிலா?? எதோ ஜெதேவன் நடத்திற பிசினஸ் மாதிரி இருக்கு. கோவிலின் பெயரைக் குறிப்பிட்டால் ஏன் குறைந்து போய்விடுவீர்களா?

புலம் பெயர் நாடுகளில் எல்லா கோவில்களுமே வியாபாரம் தான் .அதனால் தான் புலிகள் அனைத்தையும் தம் வசம் கொண்டுவர பெரிய கஷ்டப்பட்டார்கள் .

இப்படியான நிகழ்வுகளை என்ன நடந்ததேன்றே தெரியாமல் நியாய படுத்த முயல்பவர்கள் பலர் ஏனெனில் அவர்கள் வண்டிலும் மக்கள் பணத்தில் தான் ஓடுது .

  • கருத்துக்கள உறவுகள்

வர, வர... புலத்தில் உள்ள கோவில்.. சாமிகளும்,

புளட், புலி என கோஸ்டிச் சண்டையில் இறங்கிவிட்டார்கள்.

இதிலும்... பார்க்க, நாம் கடவுளை மறுக்கும்... பெரியார் திராவிடர் கொள்கையைப் பின் பற்றினால்... நல்லது போலுள்ளது.smiley-laughing024.gif

இதில் பெரும் சிக்கல்கள் உள்ளன சிறி.

இந்தக்கோயில்கள் மீது அன்றிலிருந்து பலருக்கு கண் உள்ளது.

தலைவருக்கு கீழ் அவை கொண்டுவரப்பட்டபோது எதுவும் செய்யமுடியாதிருந்த பலர் இன்று நேரத்தையும் எமக்கிடையிலான பிளவுகளையும் பயன்படுத்தி அபகரிக்கவும் அதை சிறிலங்காவிடம் ஒப்படைக்கவும் முயல்கின்றனர்.

இதற்காகவே பல அராஐக முயற்சிகளும் நடைபெறுகின்றன. எமக்காக உழைத்த பலர் தற்போது இதற்கு ஈடு கொடுக்கமுடியாமலும் எம்மவரின் கேள்விகளுக்கு பதிலளித்து களைத்தும் ஒதுங்கிவிட்டனர்.

இன்னும் மீதியிருப்போர் ஒதுங்கியபின் எல்லாம் அவர்கள் நினைத்தபடி சுபமாக முடியும்.

நான் இது போன்ற திரிகளுக்கு சார்பாக எழுதுவதற்கு காரணம்

ஒன்றை செய்தல் நிர்வகித்தல் அல்லது ஒழுங்கமைத்தல் என்பதன் சுமை அதை செய்தவனுக்கே தெரியும். வெளியிலிருந்து முட்டையில் மயிர் புடுங்குவது என்பது எவரும் செய்யக்கூடியதே.

எனது பயமெல்லாம் எமக்காக உழைத்த உழைக்க தயாரான எல்லோரையும் ஒதுக்கிக்கொண்டு வருகின்றோம். இது எங்கு போய் முடியும் என்பதே.

புலம் பெயர் நாடுகளில் எல்லா கோவில்களுமே வியாபாரம் தான் .அதனால் தான் புலிகள் அனைத்தையும் தம் வசம் கொண்டுவர பெரிய கஷ்டப்பட்டார்கள் .

இப்படியான நிகழ்வுகளை என்ன நடந்ததேன்றே தெரியாமல் நியாய படுத்த முயல்பவர்கள் பலர் ஏனெனில் அவர்கள் வண்டிலும் மக்கள் பணத்தில் தான் ஓடுது .

[size=4]உலகிலேயே மிகப்பெரிய வர்த்த நிறுவனம் - வத்திக்கானில் தலைமையகத்தை கொண்ட மத அமைப்பு.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பெரும் சிக்கல்கள் உள்ளன சிறி.

இந்தக்கோயில்கள் மீது அன்றிலிருந்து பலருக்கு கண் உள்ளது.

தலைவருக்கு கீழ் அவை கொண்டுவரப்பட்டபோது எதுவும் செய்யமுடியாதிருந்த பலர் இன்று நேரத்தையும் எமக்கிடையிலான பிளவுகளையும் பயன்படுத்தி அபகரிக்கவும் அதை சிறிலங்காவிடம் ஒப்படைக்கவும் முயல்கின்றனர்.

இதற்காகவே பல அராஐக முயற்சிகளும் நடைபெறுகின்றன. எமக்காக உழைத்த பலர் தற்போது இதற்கு ஈடு கொடுக்கமுடியாமலும் எம்மவரின் கேள்விகளுக்கு பதிலளித்து களைத்தும் ஒதுங்கிவிட்டனர்.

இன்னும் மீதியிருப்போர் ஒதுங்கியபின் எல்லாம் அவர்கள் நினைத்தபடி சுபமாக முடியும்.

நான் இது போன்ற திரிகளுக்கு சார்பாக எழுதுவதற்கு காரணம்

ஒன்றை செய்தல் நிர்வகித்தல் அல்லது ஒழுங்கமைத்தல் என்பதன் சுமை அதை செய்தவனுக்கே தெரியும். வெளியிலிருந்து முட்டையில் மயிர் புடுங்குவது என்பது எவரும் செய்யக்கூடியதே.

எனது பயமெல்லாம் எமக்காக உழைத்த உழைக்க தயாரான எல்லோரையும் ஒதுக்கிக்கொண்டு வருகின்றோம். இது எங்கு போய் முடியும் என்பதே.

ஓம்... விசுகு, தெரியுது.

முன்பு, பலர் கோவில்களை கட்டப் பாடுபட்டவர்கள், இங்கும் ஒதுங்கி விட்டார்கள்.

இப்போது... கோவில்க‌ளில், தெருச்ச‌ண்டித்த‌ன‌மே... ஓங்கி நிற்கின்ற‌து.

இது, வ‌ருங்கால‌ச் ச‌ந்த‌தியை... சைவ‌ ச‌ம‌ய‌த்திலிருந்து வில‌க‌ச் செய்யும்... என்ப‌தில், ஐய‌மில்லை.

கோவில்களில்... நடக்கும், தெருச்சண்டியரை... இனங்கண்டு வெளியேற்ற வேண்டும்.

"மேன்மை கொள் சைவ நீதி, விளங்குக உலகமெல்லாம்."

  • கருத்துக்கள உறவுகள்

வன்முறைகளை புலம்பெயர் தேசம்வரை காவிவரச்செய்தது,அவற்றுக்கு இங்கும் இடம்கொடுப்பது எங்களின் பிற்போக்குதனமான சமூகக்கட்டமைப்புக்கள் என்பதற்க்கு இதுவும் இங்கு எழுதப்பட சில கருத்துக்களும் சாட்சி..

இவளவு பெரிய உலகை படைத்த கடவுளுக்கு

தனக்கு கோவில் படைக்க தெரியாதா?

இவர்கள் மறைமுகமாக கடவுள் ஒரு முடம் என்றுதான் சொல்லவருகிறார்கள்.

இவர்களது சொந்த உறவுகள் பட்டினியால் வாடுகிறார்கள்.

உலகில் ஆப்ரிக்க நாடுகளில் சக மனித இனம் உணவின்றி சாகிறது. கோவில்களில் என்ன நடக்கிறது?

கோவில்களை உடைத்து எறிந்தால்தான் உண்மையான கடவுளை பூமியில் காணலாம்.

கள்வருக்கும் கயவருக்கும் கருணை இல்லாதவருக்கும் நல்வாழ்வு கொடுப்பதற்கே இந்த கோவில் இருக்கிறது.

அகூதா அவர்கள் எழுதியதுபோல் மாபியாவின் தலமைபீடம்தான் வத்திகான். அங்கே பணத்தை கொண்டு சென்றுவிட்டால் யாருக்கும் கணக்கு கேட்கும் அதிகாரம் இல்லை. பல சிறுமிகளையும் சிறுவர்களையும் பாலியல் வக்கிரம் செய்த பாதிரிமாரை காப்பற்றிவருவதே இந்த வத்திகானதான்.

கோவில்களுக்குள் முடங்கி கிடப்பவர்களை முதலில் வெளியில் கொண்டுவரவேண்டும்.

கோவில் என்றாலே மூட நம்பிக்கையும்..... அடாவடித்தனமும்..... ஆடம்பரமும்.... சுயவிளம்பரமும்தான்.

இவற்றை விட்டால் கோவிலையும் முழுதாக விட வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் வண்டிலும் மக்கள் பணத்தில் தான் ஓடுது .

இது ஒரு மனவியாதி

நல்ல வைத்தியரைப்பார்க்கவும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] //[/size]ஜெயதேவன் நட‌த்திற கோயில்// வெம்பிளியில் உள்ள சிவன் கோயில் . இங்குதான் சிவலிங்கத்துக்கு ஜயர் துடைப்பக்கட்டையால் பூசை செய்தவர் .

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் நாடுகளில் எல்லா கோவில்களுமே வியாபாரம் தான் .அதனால் தான் புலிகள் அனைத்தையும் தம் வசம் கொண்டுவர பெரிய கஷ்டப்பட்டார்கள் .

இப்படியான நிகழ்வுகளை என்ன நடந்ததேன்றே தெரியாமல் நியாய படுத்த முயல்பவர்கள் பலர் ஏனெனில் அவர்கள் வண்டிலும் மக்கள் பணத்தில் தான் ஓடுது .

டென்மார்க் அம்மாவை

தமது வலைக்குள் கொண்டுவந்து அதட்குவரும் பணத்தில் ஒருபகுதியை போராட்டத்திற்கு பயன்படுத்தலாம் எனும் முயற்சி எனக்கு தெரிந்தவர்கள் மத்தியிலேயே நடந்தது.

ஒரு விபச்சாரி சாமி வேடம் போட்டால் அவளை தொலுரிக்கவேண்டுமே தவிர துணைபோவது போராட்டம் இல்லை என்று எனக்கும் அவர்குளுக்கும் வாக்குவாதம் வந்தது.

இவர்களும் வெறும் அருவருடி தனமாகவே இருந்தார்கள். இவர்களை புலிகள் என்று சொன்னால் அது இழுக்கு.

அம்மா கெட்டிகாரி...

இம்மி அளவும் அசையவில்லை. தான் சாமி புருஷன் பரிபாலனை பிரதமர் இதுபோதும் என்ருவிட்டாள்.

அவள் முப்பது நாளும் அருள் கொடுக்கிறாள். மாதவிலக்கு வந்தால் துண்டைகட்டிபோட்டு அருள் கொடுக்கிறாள். பக்தைகளுக்கு மாதவிலக்கு வந்தால் அங்கு போகமுடியாது. டென்மார்கவரைபோய் திரும்பி வந்த கூட்டமும் இங்கு இருக்கு.

இனி அம்மாவை நொந்து என்ன செய்ய முடியும்?

காசு சுருட்டல் விடயம் உலகறிந்த உண்மை ,இன்னமும் அந்த கள்வர் கூட்டம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தலைவர் வந்தால் தான் காசு கணக்கு என்பதும் தெரியும் ,

ஆனால் இங்கு ஒருவர் பணம் ,சுருட்டல் என்றவுடன் எங்கிருந்தாலும் ஓடி வந்து அப்படிஒன்றே இல்லை என்று வக்காலத்து வாங்குவதுதான் ஏனென்று புரியவில்லை .

கனடாவில் காசு சுருட்டியவர்கள் பட்டியல் வேணுமென்றால் தரலாம் .அவர்களில் பலர் இன்னமும் புலி வேஷத்துடன் தான் திரிகின்றார்கள் .அது ஒன்றுதான் இப்போதைக்கு அவர்களுக்கு பாதுகாப்பு .

அருஜ்ன் அண்ணா வந்தாலே களம் களை கட்டும். இங்கும் அதுவே நடக்கிறது.

தற்போதுதான் வேலைமுடித்து வீடு வந்தேன்.

தலைப்பு சம்பந்தமாக..

ஈலின் கனக துர்க்கை அம்மன் நிர்வாகத்துடன் எனக்கு எதுவித நேரடித்தொடர்பும் இல்லை. எனது ஊரில் உள்ள கோவில் என்பதாலும் மனைவியின் வற்புறுத்தலால் அடிக்கடி விசிட் செய்வதாலும் (கடந்த 10-11 வருடங்களாக) ஒரு சில உறுப்பினர்களை அறிவேன். இக்கோவிலுக்கு வரும் வருமானமும் அதன் வளர்ச்சியும் மக்களின் ஆதரவும் அதன் தாயகம் நோக்கிய சேவைகளும் வெளிப்படையானவை.

இந்த சம்பவம் நடந்த மறுநாள் கோவிலில் திருமணம் ஒன்றும் இனிதே நடந்து முடிந்துள்ளது. எல்லாமே வழமையாக உள்ளது.

மற்றும்படி எனது கருத்துகளால் யாரினதும் மனது புண்பட்டால் மன்னியுங்கள்.

நன்றி.

கோவிலில் தேவையற்ற வன்முறைகளை நான் வன்மையாக எதிர்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

காசு சுருட்டல் விடயம் உலகறிந்த உண்மை ,இன்னமும் அந்த கள்வர் கூட்டம் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு தலைவர் வந்தால் தான் காசு கணக்கு என்பதும் தெரியும் ,

ஆனால் இங்கு ஒருவர் பணம் ,சுருட்டல் என்றவுடன் எங்கிருந்தாலும் ஓடி வந்து அப்படிஒன்றே இல்லை என்று வக்காலத்து வாங்குவதுதான் ஏனென்று புரியவில்லை .

கனடாவில் காசு சுருட்டியவர்கள் பட்டியல் வேணுமென்றால் தரலாம் .அவர்களில் பலர் இன்னமும் புலி வேஷத்துடன் தான் திரிகின்றார்கள் .அது ஒன்றுதான் இப்போதைக்கு அவர்களுக்கு பாதுகாப்பு .

கனடாவில் காசு சுருட்டியவர்கள் பட்டியல் வேணுமென்றால் தரலாம்

அதைச்செய்யுங்கள்.

அதைத்தான் தொடர்ந்து தங்களிடம் கேட்கின்றேன்.

அதை விட்டுவிட்டு புலத்து புலிகள் எல்லோரும் கள்ளர் என்பதையே எதிர்க்கின்றேன். எதிர்ப்பேன்.

... ஒரு நாய் குடித்துப் போட்டு கோயிலுக்குள் புகுந்து கெட்ட பாசைகளும் பேசி நாறுப்பட பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!!!???? ... வன்முறை கூடாது!!!!????? ... நன்றிகள்! ...

...

... சம்பவம் ஏதோ நடைபெற்று விட்டது ... அதனை எண்ணை ஊற்றி பெருப்பிக்க முன்னாள் நிர்வாகத்தினர்! ... யார் இந்த முன்னால் நிர்வாகத்தினர் >>>>>>>> http://www.yarl.com/forum3/index.php?showtopic=92789

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியே நாங்க அடிபட்டு கொண்டிருக்க புலத்து கோயில்கள்ல நிர்வாகதில கொஞ்சம் கொஞ்சமா ஹிந்திகாரங்க நுழைஞ்சு கோயில் நிர்வாகத்தையே முழுசா கைபற்றாங்க

ஆக கோயில கட்டுறது நாங்க நடத்திறது அவங்களா வருது....

நாங்க ஒவொரு நவராத்திரிக்கும் கோயிலுக்கு போய் குஜராத் குமரிங்க கூட தாந்தியா ஆடிட்டு வருவம் என்னா.....:D

  • கருத்துக்கள உறவுகள்

... ஒரு நாய் குடித்துப் போட்டு கோயிலுக்குள் புகுந்து கெட்ட பாசைகளும் பேசி நாறுப்பட பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்!!!???? ... வன்முறை கூடாது!!!!????? ... நன்றிகள்! ...

...

... சம்பவம் ஏதோ நடைபெற்று விட்டது ... அதனை எண்ணை ஊற்றி பெருப்பிக்க முன்னாள் நிர்வாகத்தினர்! ... யார் இந்த முன்னால் நிர்வாகத்தினர் >>>>>>>> http://www.yarl.com/...showtopic=92789

நெல்லையனின் முதல் குற்றச்சாட்டு கேபி மேல் இருந்தது இப்ப முன்னால் நிர்வாகத்திற்கு மேல் இருக்குது இனி மேல் யார் மீது பழியைப் போடப் போகிறாரோ ஈலிங் அம்மனுக்குத் தான் வெளிச்சம் :unsure: ...ஆனால் இதிலிருந்து ஒன்று மட்டும் வெளிச்சம் தேசிய ஆதரவாளர்கள் அல்லது அப்படி தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் எந்தப் பெரிய பிழை செய்தாலும் அவர்களைப் பற்றி ஒன்றுமே கதைக்க கூடாது.அவர்கள் பிழை செய்தாலும் சரி என்று தான் சொல்ல வேண்டும் அதே வேளை மாற்றுக் கருத்துக்கார‌ர் ஒரு சின்ன பிழை விட்டாலும் அதை ஊதிப் பெரிதாக்குவோம் ^_^:(

  • கருத்துக்கள உறவுகள்

மொத்ததில அரோகரா :D

3 நாளாச்சு இன்னும் கனடா பட்டியல காணல.

[size=4]குடித்து விட்டு எந்த மத வழிபாடுத்தலங்களுக்கும் (சைவ, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம்...) செல்வது அவமரியாதை. இப்படி வருவருக்கு எதிராக என்ன சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்?, என்பதை மதவழிபாட்டு நிர்வாகிகள் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக சட்டத்தை கையில் எடுப்பது அதைவிட பெரியபிழை என்பதை எல்லோரும் ஏற்கிறோம். இப்படியான சந்தர்ப்பங்களில் பொதுவாக மேற்குலக சட்ட நடவடிக்கையில் பெரும்பாலான மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.[/size]

[size=4]'என்னிடம் பட்டியல் உள்ளது', '.... என நான் கேள்விப்பட்டேன்' என ஊகங்களில் விவாதிப்பது ஆரோக்கியமானது அல்ல. [/size][size=4]தனிப்பட்ட ஒருவரின் வலைப்பின்னலில் உள்ளதும் உத்தியோகபூர்வ செய்தி அல்ல.[/size]

[size=4]காவல்துறையின் தளங்கள் இல்லை அந்த நாட்டு ஊடகங்களில் வந்துள்ள செய்திகளே உத்தியோகபூர்வ செய்திகள். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.