Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடியத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசனுக்கு இந்தியாவில் விருது!

Featured Replies

[size=4]கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இந்தியாவின் வி.கே.கிருஸ்ண மேனன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.[/size]

[size=4]இலங்கையில் தனது சக தமிழர்கள் உட்பட சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்குமே ராதிகா சிற்சபேசனுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.[/size]

[size=4]வி.கே.கிருஸ்ண மேனன் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் டொக்டர் Cyriac Maprayil தெரிவிக்கையில், மனித உரிமைக்காக தைரியமான போராடிய இளம்பெண் என்ற வகையில் அதனைப் பாராட்டுவதற்கே இவருக்கு இந்த ஆண்டுக்கான விருதை வி.கே.கிருஸ்ண மேனன் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.[/size]

[size=4]இலங்கையில் பிறந்த ராதிகா சிற்சபேசன், தனது குடும்ப்தினருடன் 5ஆவது வயதில் கனடாவில் குடியேறினார். தற்போது கனேடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.[/size]

[size=4]கடந்த 2006ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விருது அரசியல், பொருளாதாரம், இலக்கியம், அறிவியல், மனிதஉரிமை போன்ற துறைகளில் சிறப்பாக சேவையாற்றுபவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.rathika1-471x600.jpg[/size]

http://dbsjeyaraj.co...j/archives/9732

in tamil http://www.puthinappalakai.com/view.php?20120820106834

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விருதுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை. இந்த விருது வழங்கலுடன் ராதிகா வாயை மூடிப்போடுவா!

இந்திய விருது சொறிசிரங்குக்கு ஒப்பானது

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விருதுகள் அனைத்தும் அரசியல் நோக்கம் கொண்டவை. இந்த விருது வழங்கலுடன் ராதிகா வாயை மூடிப்போடுவா!

இந்திய விருது சொறிசிரங்குக்கு ஒப்பானது

:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விருதை இந்தப் பெண்மணி இந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயற்பாட்டை சுட்டிக்காட்டி நிராகரிக்க வேண்டும். அப்படி செய்வது தான் உண்மையில் மக்களை வருத்திய இந்திய தேசம் தலைகுனிந்து நிற்க... திருந்த உதவும்..!

விருதுக்கு ஆசைப்படுவதை விட விருதை மக்களுக்காகப் பயன்படுத்துவதே சிறப்பு..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

Rathika-Sitsabaiesan_150KL.jpg

[size=4]கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனுக்கு இந்தியாவின் வி.கே.கிருஸ்ண மேனன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தனது சக தமிழர்கள் உட்பட சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் மனித உரிமைகள் மேம்பாட்டுக்கு ஆற்றிய பெரும் பங்களிப்பிற்குமே ராதிகா சிற்சபேசனுக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது.[/size]

[size=4]வி.கே.கிருஸ்ண மேனன் இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் டொக்டர் Cyriac Maprayil தெரிவிக்கையில், மனித உரிமைக்காக தைரியமான போராடிய இளம்பெண் என்ற வகையில் அதனைப் பாராட்டுவதற்கே இவருக்கு இந்த ஆண்டுக்கான விருதை வி.கே.கிருஸ்ண மேனன் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.[/size]

[size=4]இலங்கையில் பிறந்த ராதிகா சிற்சபேசன், தனது குடும்ப்தினருடன் 5ஆவது வயதில் கனடாவில் குடியேறினார். தற்போது கனேடிய நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.[/size]

[size=4]கடந்த 2006ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த விருது அரசியல், பொருளாதாரம், இலக்கியம், அறிவியல், மனிதஉரிமை போன்ற துறைகளில் சிறப்பாக சேவையாற்றுபவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.[/size]

[size=4]http://www.seithy.co...&language=tamil[/size]

சிங்கள அரச பயங்கரவாதிகள் விருதுகள் (ராம்), பல ரக வெகுமதிகள் (ரொமேஷ் பண்டாரி முதல் அசோக் காந்தா வரை) வழங்கி தமிழின படுகொலைக்கு இந்திய காங்கிரஸ் அரச காட்டுமிராண்டிகளின் பூரண ஒத்துழைப்பைப் பெற்றனர்.

புலம் பெயர் தமிழரை விலைக்கு வாங்கும் முயற்சிகள் பல வெற்றியளிக்காத நிலையில் இந்திய அரசின் பயங்கரவாதச் செயல்களை முன்னின்று நடாத்தும் ரோ குழுவின் முன்னணி அமைப்புகள் ஊடாக புலம் பெயர் தமிழர்களுக்கு வலை வீசப்படலாம். இதற்கு சிங்கள அரச பயங்கரவாதிகளிடம் கற்ற உத்திகளை இந்தியக் காட்டுமிராண்டிகள் பயன்படுத்த முயலலாம்.

[size=4]முதலில் வாழ்த்துக்கள். [/size]

[size=1]

[size=4]அடுத்து கீழே கூறியது போன்று முதல் புலம்பெயர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் இதை நிராகரித்து, இந்தியாவில் எமது மக்களின் நிலை பற்றிய பரப்புரைக்கு உதவவேண்டும். இவ்வாறு பலவேறு உலக தலைவர்கள் நிராகரித்தது உண்டு. [/size][/size]

இந்த விருதை இந்தப் பெண்மணி இந்தியாவின் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயற்பாட்டை சுட்டிக்காட்டி நிராகரிக்க வேண்டும். அப்படி செய்வது தான் உண்மையில் மக்களை வருத்திய இந்திய தேசம் தலைகுனிந்து நிற்க... திருந்த உதவும்..!

விருதுக்கு ஆசைப்படுவதை விட விருதை மக்களுக்காகப் பயன்படுத்துவதே சிறப்பு..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மையினருக்கு ஆதரவாகப் போராடினேன் என்று நீங்கள் சொல்வது உங்கள் அரசின் வெளியுறவுக் கொள்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி நிராகரிக்கலாம்.

விருது என்ற எலும்புத் துண்டை போட்டு ஒரு கனடிய தமிழ் எம்பிய பிடிக்கிற பிளான் இந்திய நயவஞ்சக வலையில் சகோதரி விழக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

வஞ்சக வலை என்பதால் பாராட்டமுடியவில்லை.

ஆனால் இந்தளவுக்கு கண்ணுக்கு உறுத்துமளவுக்கு நீங்கள் வளர்ந்ததற்கு வாழ்த்துக்கள்.

இனி ஏற்பதும் ஏற்காததும் தங்கள் அரசியல் சார்ந்தது.

ஆனால் ஏற்காது அதற்கு ஈழத்தமிழனுக்கு நன்மை கிடைக்கும்படியாக காரணம் சொன்னால் மகிழ்ச்சியடைவேன்.

[size=4]அங்கு வரச்சொல்லி விருதை தருவார்கள் என்றால், மேடையில் வைத்து பரிசை பெற்றபின் எமது மக்களின் நிலை பற்றி பேசலாம். இல்லை மேடையில் வைத்து பேசிவிட்டு விருதை நிராகரிக்கலாம்.[/size]

[size=4]மொத்தத்தில் இந்த சந்தர்ப்பத்தை ஒரு இந்திய மக்கள் / ஊடகங்கள் / மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும் சந்தர்ப்பமாக பாவிக்கவேண்டும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ.... பரிசுகளும், பாராட்டுக்களும்....

அந்தந்த நாட்டில், வசிப்பவர்களாலேயே... நிராகரிக்கப்பட்டுள்ளது.

ராதிகா சிற்சபேசன் தொடர்ந்தும்... எம் பாவப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கவே கனடியப் பாராளுமன்றத்துக்கு, கனேடியத் தமிழ் மக்களால்... தெரிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டவர். அவர், நம்நாட்டு அரசியல்வாதிகள் மாதிரி, நடக்க முயல.. எந்த அழுத்தமும் இல்லை.

அவர் தனது... குரலை ஓங்கி, இன்னும்... ஒலித்தால்.... நோபல் பரிசும், அவரின் கைக்கு எட்டும் தூரம் தான்.

ஒன்றே... ஒன்று, அவர் தனிப்பட்ட பாதுகாப்புக்கு முடிவு எடுத்துச் செய்வாராக இருந்தால்....

பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு, இந்திய முகத்திரையை கிழிக்க... ராதிகா சிற்சபேசன் முன் வந்தால்... எனக்கு ஆட்சேபனையில்லை.

அவர், கனடா பாராளுமன்ற உறுப்பினர் என்னும் படியால்.... அவருக்கு, தகுந்த பாதுகாப்பை இந்திய அரசாங்கம் வழங்க வேண்டிய கடமையும், நிர்ப்பந்தமும் உள்ளது.

எதற்கும் அவர், தனது எதிர்கால அரசியலின் நடவடிக்கையை... கூர்ந்து, அவதானித்து முடிவெடுப்பது வரவேற்கத்தக்கது.

வாழ்த்துக்கள்.

நிச்சயமாக இந்த பரிசு சில காரணங்களுக்காகத்தான் வழங்கப்படுகிறது.

இப்படியான பரிசில்கள் எப்போதுமே அரசியல் சாயத்துடன்தான் இருக்கும். புஸ் எதிர்ப்புக்காகவே ஓபாமா பதவி ஏற்று 17 நட்களுக்குள் சமாதான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டவர் .

இந்தியா தங்கள் ஆதாயத்திற்கு(தமிழருக்கு தீர்வுக்காக அல்ல) இலங்கையை தங்கள் வழி கொண்டுவர சிறிலங்காவை மெல்லமாக சீண்டவாக கூட இருக்கலாம்.

ராதிகா நிச்சயமாக எளிதில் இந்தியாவால் வாங்கப்படமாட்டார். NDP யினர் வழமையில் கொள்கைப்பிடிப்பு உள்ளவர்கள்.

இந்த விருதின் மூலம் இவரின் தமிழீழ விசுவாசத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Rathika Sitsabaiesan@RathikaS

I'm honoured RT: @dbsjeyaraj: on blog: V.K.Krishna Menon Insitute's Personality of Year Award to Canadian MP @RathikaS http://dbsjeyaraj.com/dbsj/archives/9732

Rathika Sitsabaiesan@RathikaS

I'm honoured RT: @dbsjeyaraj: on blog: V.K.Krishna Menon Insitute's Personality of Year Award to Canadian MP @RathikaS http://dbsjeyaraj.co...j/archives/9732

Welcome back :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்து(க்)கள் சகோதரிக்கு

RS81912-600x450.jpg

படத்தை பார்த்துவிட்டு என்ன Brooklyn Caribbean Parade படம் என்று பார்த்தேன். பிறகுதான் அம்மா நிற்கிறது தெரிந்தது.

2011:

2012: (வரும் செப்டெம்பர் 3ம் திகதி) ஒரு நாள் முழுக்க ஆட்டமும் பாட்டமுமாக இருக்கும். பார்க்க விரும்பியவர்கள் வலையில் நிறைய விபரங்களைக்காண முடியும்.

http://www.nyctouris...indian-carnival

Edited by மல்லையூரான்

558668_274072716038544_193832135_n.jpg

தென் மோடி கூ த்து ஆடிய படம் .

mZ9nRlDMlwK.png

[size=4]தென் மோடி கூ த்து ஒன்லைனிலிருக்கோ?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தமிழ் நாட்டு சகோதரர்கள் ஈழத்தமிழருக்காக உயிரை கூட விட்டுள்ளார்கள்.ஏன் போராடினார்கள் என்றோ அல்லது அவர்களின் போராட்டத்துக்கு ஓர் ஆதரவை தானும் வழங்காது ராதிகாவுக்கு விருது வழங்குவது அரசியல் சதி மிக்கது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.