Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடுப்படிக்கும் புலிக்கொடி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

article-1180829-04E4BCE1000005DC-482_468x501.jpg

சோழப் பெருமன்னர்

சிந்தனையில் உதித்த கொடி

குமரி முதல்

இமயம் வரை பறந்த கொடி

தமிழன் இராய்ச்சியம்

இந்து முதல் பசுபிக் வரை

நின்ற கதை சொன்ன கொடி..

எங்கள் பெருந்தலைவன்

பிரபாகரன் தானை

தாங்கி நின்ற கொடி...

நம் தமிழர் உயிர் மூச்சில்

அசையும் கொடி..

தமிழீழத் தேசியக் கொடி..!

முள்ளிவாய்க்கால்தனில்

சாட்சியங்கள் இன்றி...

மண்ணோடு புதைந்திட்ட

மண்ணின் புதல்வர்கள்

மானம் காத்த கொடி...

புலம்பெயர் மண்ணில்

ஈழத்தமிழன் அடையாளம்

காட்டும் கொடி...!

நாம் தமிழராய்

ஓரணியில்..

தமிழகம் தாங்கி நிற்கும் கொடி

எங்கள் புலிக்கொடி..!

இத்தனை பெருமையும்

இருந்து என்ன பயன்...

1948 முதல் 2009 வரை

சிங்களம் எமை வெறியாட

தூண்டிய கொடியாம்...

இன்று எம் மக்கள்

சிங்களப் படையிருப்பால்

சூழப்பட..சீண்டப்பட..

உதவும் கொடியாம்..!

புலம்பெயர் தேசமெங்கும்

பயங்கரவாதம் சொல்லும் கொடியாம்..!

சொல்கிறார்

கசாப்புக் கடைக்கு

கற்பூரம் காட்டும்

காட்டிக்கொடுப்பாளர் கூட்டம்..!

நந்திக் கொடியை

பறித்து எறிந்தும்...

தமிழாராச்சி மாநாட்டில்

தமிழரை தமிழை

சுட்டி வீழ்த்தியும்

1948 முதல்

ஆண்டுக்கு அடுக்கடுக்கா

இனக்கலவரங்கள் காட்டி

தமிழர் தமை

வதைத்தும் வரும் சிங்களத்தான்.....

நதிகள் ஆறுகள் கொண்டு

சிங்களக் குடியேற்றம்

செய்தது முதல்

சிங்களப் படை இருப்பை

குவிப்பை

தமிழர் தாய் நிலமெங்கும்

நிறுவி நிற்கிறான்..!

அது ஒரு ஆக்கிரமிப்பு

ஈழத்தீவில்

தமிழர் இன அழிப்பு...!!!

இதைச் சொல்ல

துப்பற்ற

முதுகெலும்பற்ற

சிலதுகள்..

சொல்லுதுகள்

எல்லாம்

நேற்றுப் பறந்த

புலிக்கொடியால் தானாம்...!!!!

சுருட்டிக் கட்டியதை

பாடையில் ஏற்றி

சிதையில் வைத்து

பற்ற வைக்கட்டாம்...!

சிங்களம்

மனம் மகிழ்ந்து

படை விலக்கி

நிலம் தந்து

விடுதலை தருமாம்..!

கேக்கிறவன் கேணயன் என்றால்

எருமை மாடு ஏரோபிளேன்

மட்டும் தான் ஓட்டும்...

மாற்றுக் கருத்து

மாணிக்கங்களோ..

காட்டிக் கொடுத்தே

தமிழீழத்தை

சிங்களப் படைவிலக்கி

சூரியனில் அமைப்பர்..!

நம்புங்கள் மக்களே

நாளை தமிழீழம்

சூரியனில் பிறக்கும்..!

Edited by nedukkalapoovan

சோழப் பெருமன்னர்

சிந்தனையில் உதித்த கொடி

குமரி முதல்

இமயம் வரை பறந்த கொடி

தமிழன் இராய்ச்சியம்

இந்து முதல் பசுபிக் வரை

நின்ற கதை சொன்ன கொடி..

எங்கள் பெருந்தலைவன்

பிரபாகரன் தானை

தாங்கி நின்ற கொடி...

நம் தமிழர் உயிர் மூச்சில்

அசையும் கொடி..

தமிழீழத் தேசியக் கொடி..!

யாரு என்ன சொன்னாலும் இதாங்க உண்மை :) !! பொய்யி ஜெயக்கிற மாதிரி பாவ்லா காட்டுங்க . ஆனா ஃபைனலா தோத்திடுங்க . நம்புங்க நாளை தமிழருக்கு விடிவு ஒன்னு இருக்குன்னு :) .உங்க கவிதயை ரெம்பவே லைக்பண்றேங்க நெடுக்காலபோவான் அண்ணன் :) :) .

ஏங்க நெடுகாலபோவான் அண்ணன் , உங்க கவிதைக்கு என்னோட ரைம வேஸ்ட்டு செஞ்சு ஒரு காமன்ட் போட்டேங்க . ஒரு தாங்ஸ்சு கூட இல்லியா ^_^ ^_^ ? என்னங்க நீங்க சுத்த மானேர்ஸ்சு தெரியாம இருக்கீங்களே :lol: :lol: ? ஆமா....... ஏங்க உங்க கவிதைக்கு யாருமே காமென்ட்ஸ் போடல :( :( ? ரெம்ப ஃபீலிங்கா இருக்குதுங்க அண்ணன் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏங்க சொப்னா.. உங்க அம்மா உணவு ஊட்டிச்சின்னா.. எப்பாச்சும் தாங்க்ஸ் சொல்லிக்கிட்டே இருப்பீங்களா.. இல்லை தானே..! அதையே ஹாட்டல்ல சாப்பிட்டா சர்வருக்கு எத்தனை தாங்க்ஸ் சொல்லுவீங்க.. அடிக்கடி சொல்லுவீங்கல்ல..!

தேசியக் கொடி அம்மான்னா.. அது சார்ந்த கவிதை.. அவங்க ஊட்டிற உணவு.. போல..!

அது மட்டுமில்ல.... நீங்க நம்மில ஒருத்தியா.. தமிழிச்சியா.. அதுவும் தமிழங்க உயிரா உள்ள தேசியக் கொடியான புலிக்கொடி பற்றி சொல்லி இருக்கீங்களா.. அது நீங்க உங்க தேசியக் கொடிக்கு செய்யுற கடமை.. அதைத்தான் செய்திருக்கீங்கன்னு நினைச்சு விட்டிட்டம்..! மற்றும்படி.. உங்க காமண்ட கண்டுக்கல்ல என்றில்ல சொப்னா..! மற்றவங்க அதையே லைங்க்ஸா சொல்லி இருக்காங்க..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

இதைச் சொல்ல

துப்பற்ற

முதுகெலும்பற்ற

சிலதுகள்..

சொல்லுதுகள்

எல்லாம்

நேற்றுப் பறந்த

புலிக்கொடியால் தானாம்...!!!!

[size=4]ஒருவரால் முடியாது என்பதை இன்னொருவர் முயன்று கொண்டுதான் உள்ளார். [/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஒருவரால் முடியாது என்பதை இன்னொருவர் முயன்று கொண்டுதான் உள்ளார். [/size]

தமிழீழ தேசியக் கொடியின் பறப்புக்காக முயன்று கொண்டிருப்பவர்கள் பற்றிய நன்றி உணர்வோடு.. வரவேற்றுக் கொள்கின்ற அதேவேளை.. அதன் பறப்பை மறுதலிக்க முனைபவர்களின் நம்பிக்கையீனத்தையும் சரியான விளக்கங்களோடு தெளிய வைத்து.. கலைக்க வேண்டிய பொறுப்பு உண்டு. அதை விட்டு வைச்சா அதுவே படர்ந்து விசமாகி விடவும் வாய்ப்புள்ளதே..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

[size=5]கடந்தவாரம் கனடாவில் இளையோர் ஏற்றிய தேசிய கொடிகள் [/size]

[size=5]Canada_Kiliththaddu_2012_04.jpg[/size]

[size=5]ஒருவரால் முடியாது என்பதை இன்னொருவர் முயன்று கொண்டுதான் உள்ளார். [/size]

Edited by akootha

article-1180829-04E4BCE1000005DC-482_468x501.jpg

சோழப் பெருமன்னர்

சிந்தனையில் உதித்த கொடி

குமரி முதல்

இமயம் வரை பறந்த கொடி

தமிழன் இராய்ச்சியம்

இந்து முதல் பசுபிக் வரை

நின்ற கதை சொன்ன கொடி..

எங்கள் பெருந்தலைவன்

பிரபாகரன் தானை

தாங்கி நின்ற கொடி...

நம் தமிழர் உயிர் மூச்சில்

அசையும் கொடி..

தமிழீழத் தேசியக் கொடி..!

முள்ளிவாய்க்கால்தனில்

சாட்சியங்கள் இன்றி...

மண்ணோடு புதைந்திட்ட

மண்ணின் புதல்வர்கள்

மானம் காத்த கொடி...

புலம்பெயர் மண்ணில்

ஈழத்தமிழன் அடையாளம்

காட்டும் கொடி...!

நாம் தமிழராய்

ஓரணியில்..

தமிழகம் தாங்கி நிற்கும் கொடி

எங்கள் புலிக்கொடி..!

இத்தனை பெருமையும்

இருந்து என்ன பயன்...

1948 முதல் 2009 வரை

சிங்களம் எமை வெறியாட

தூண்டிய கொடியாம்...

இன்று எம் மக்கள்

சிங்களப் படையிருப்பால்

சூழப்பட..சீண்டப்பட..

உதவும் கொடியாம்..!

புலம்பெயர் தேசமெங்கும்

பயங்கரவாதம் சொல்லும் கொடியாம்..!

சொல்கிறார்

கசாப்புக் கடைக்கு

கற்பூரம் காட்டும்

காட்டிக்கொடுப்பாளர் கூட்டம்..!

நந்திக் கொடியை

பறித்து எறிந்தும்...

தமிழாராச்சி மாநாட்டில்

தமிழரை தமிழை

சுட்டி வீழ்த்தியும்

1948 முதல்

ஆண்டுக்கு அடுக்கடுக்கா

இனக்கலவரங்கள் காட்டி

தமிழர் தமை

வதைத்தும் வரும் சிங்களத்தான்.....

நதிகள் ஆறுகள் கொண்டு

சிங்களக் குடியேற்றம்

செய்தது முதல்

சிங்களப் படை இருப்பை

குவிப்பை

தமிழர் தாய் நிலமெங்கும்

நிறுவி நிற்கிறான்..!

அது ஒரு ஆக்கிரமிப்பு

ஈழத்தீவில்

தமிழர் இன அழிப்பு...!!!

இதைச் சொல்ல

துப்பற்ற

முதுகெலும்பற்ற

சிலதுகள்..

சொல்லுதுகள்

எல்லாம்

நேற்றுப் பறந்த

புலிக்கொடியால் தானாம்...!!!!

சுருட்டிக் கட்டியதை

பாடையில் ஏற்றி

சிதையில் வைத்து

பற்ற வைக்கட்டாம்...!

சிங்களம்

மனம் மகிழ்ந்து

படை விலக்கி

நிலம் தந்து

விடுதலை தருமாம்..!

கேக்கிறவன் கேணயன் என்றால்

எருமை மாடு ஏரோபிளேன்

மட்டும் தான் ஓட்டும்...

மாற்றுக் கருத்து

மாணிக்கங்களோ..

காட்டிக் கொடுத்தே

தமிழீழத்தை

சிங்களப் படைவிலக்கி

சூரியனில் அமைப்பர்..!

நம்புங்கள் மக்களே

நாளை தமிழீழம்

சூரியனில் பிறக்கும்..!

தேசியக்கொடியின் ஆரம்பகதையில் இருந்து ,தமிழீழ போராட்டத்தின் சுருக்கமான மகத்துவத்துடன் ,உன்னதமான போராளிகளின் உணர்வுகளை திசை மாற்றாமல் பிரதிபலித்த அத்துடன் போராட்டத்தின் வீழ்ச்சிக்கு உடந்தையாய் இருந்த,இருந்து வருகின்ற கொடாரிக்காம்புகளை தெளிவாக இனம் காட்டி ..காலத்தின் தேவைக்கும்.கட்டாயத்திற்கும் உண்மை சாய்ந்து எழுதப்பட்ட கவிதை .............

கவிதை தெரிகின்றது !!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை இல்லை என்பதற்காக ரொம்ப கவலைப்படுகின்றேன்.

நன்றி என்று அம்மாவுக்கு நான் சொல்வதில்லை.

ஆனால் உன் பெற்றோருக்கு நன்றி சொல்கின்றேன்.

எதிலும் எப்போதும் தாயகத்தை நிமிர்த்துவதற்காக..................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி. இந்த தலைப்புக்கு மீள உயிர் கொடுத்த சகோதரி சொப்னாவிற்கு விசேட நன்றி..! :icon_idea:

சோழப் பெருமன்னர்

சிந்தனையில் உதித்த கொடி

குமரி முதல்

இமயம் வரை பறந்த கொடி

தமிழன் இராய்ச்சியம்

இந்து முதல் பசுபிக் வரை

நின்ற கதை சொன்ன கொடி..

எங்கள் பெருந்தலைவன்

பிரபாகரன் தானை

தாங்கி நின்ற கொடி...

நம் தமிழர் உயிர் மூச்சில்

அசையும் கொடி..

தமிழீழத் தேசியக் கொடி..!

யாரு என்ன சொன்னாலும் இதாங்க உண்மை :) !! பொய்யி ஜெயக்கிற மாதிரி பாவ்லா காட்டுங்க . ஆனா ஃபைனலா தோத்திடுங்க . நம்புங்க நாளை தமிழருக்கு விடிவு ஒன்னு இருக்குன்னு :) .உங்க கவிதயை ரெம்பவே லைக்பண்றேங்க நெடுக்காலபோவான் அண்ணன் :) :) .

[size=4]உங்கள் கருத்துக்கள் உண்மையாகட்டும்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நரிகள் வாழும் உலகில் புலிக்கொடி எதற்கு

சிலவேளைகளில் நரிக்கொடியைத் தேசியக் கொடியாக

அறிவித்தால் அவர்களும் அதை ஏற்றுக்கொள்ளக்கூடும் :)

வாழ்த்துகள் நெடுக்ஸ் அண்ணா, உங்களை போன்ற சிலர் தான் இன்னும் எமது போராட்டத்தை மக்களிடையே பரப்புரை செய்துகொண்டிருப்பவர்கள், தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள். தொடரட்டும் உங்கள் கவிதைகள்.

தமிழீழ தேசியக் கொடியின் பறப்புக்காக முயன்று கொண்டிருப்பவர்கள் பற்றிய நன்றி உணர்வோடு.. வரவேற்றுக் கொள்கின்ற அதேவேளை.. அதன் பறப்பை மறுதலிக்க முனைபவர்களின் நம்பிக்கையீனத்தையும் சரியான விளக்கங்களோடு தெளிய வைத்து.. கலைக்க வேண்டிய பொறுப்பு உண்டு. அதை விட்டு வைச்சா அதுவே படர்ந்து விசமாகி விடவும் வாய்ப்புள்ளதே..! :):icon_idea:

இது மிகவும் உண்மையான கருத்து. முன்பு புலிக்கொடி பிடிப்பதால் சர்வதேச சமூகம் எமது போராட்டத்தை கவனத்தில் கொள்ளாதோ என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால் பின்னர் உங்கள் கருத்துகள் தான் என்னை சரியான முறையில் சிந்திக்க வைத்தது. அதற்காக உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள். :)

இப்பொழுது புலிக்கொடி பற்றிய சரியான தெளிவையும் எவர் எது சொன்னாலும் என் கொள்கையிலிருந்து நான் மாறாத நிலையையும் கொண்டுள்ளேன்.

Edited by துளசி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் நெடுக்ஸ் அண்ணா, உங்களை போன்ற சிலர் தான் இன்னும் எமது போராட்டத்தை மக்களிடையே பரப்புரை செய்துகொண்டிருப்பவர்கள், தக்கவைத்துக்கொண்டிருப்பவர்கள். தொடரட்டும் உங்கள் கவிதைகள்.

இது மிகவும் உண்மையான கருத்து. முன்பு புலிக்கொடி பிடிப்பதால் சர்வதேச சமூகம் எமது போராட்டத்தை கவனத்தில் கொள்ளாதோ என்ற எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால் பின்னர் உங்கள் கருத்துகள் தான் என்னை சரியான முறையில் சிந்திக்க வைத்தது. அதற்காக உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள். :)

இப்பொழுது புலிக்கொடி பற்றிய சரியான தெளிவையும் எவர் எது சொன்னாலும் என் கொள்கையிலிருந்து நான் மாறாத நிலையையும் கொண்டுள்ளேன்.

நன்றி தங்கள் கருத்துக்கும் புரிந்துணர்விற்கும்..!

நாங்கள் தேசியவாதிகளோ.. பயங்கரவாதிகளோ கிடையாது. எங்க அப்பன் முப்பாட்டன் காலத்தில் இருந்த எங்க சொந்த நிலத்தை நாங்களே ஆளனும் என்ற தலைவிதியை நாங்களே தீர்மானிக்கனும் என்று விரும்பிற சராசரி பொதுமக்கள்..!

எங்க நிலத்தின் மானமும் அடையாளமும் தான் எங்கள் தமிழீழத் தேசியக் கொடி. அதனை விட்டுக் கொடுப்பது என்பது தாயின் சேலையை அவிழ்த்து எறிவது போன்றது..! அதை செய்ய துணிவற்ற மானமுள்ள அன்னை தேசத்தின் புதல்வர்களாகவே என்றும் இருக்க விரும்புகிறோம்.

பிரிட்டன் கொடியை தூக்கும் போது அந்நியம் உணரப்படுகிறது. சிங்கக் கொடியை தூக்க அருவருப்பாக இருக்கிறது. புலிக்கொடியை தூக்கும் போது உள்ளூர ஒரு உற்சாகமும் சக்தியும் பிறக்கிறது.. எனது தாயின் சேலையில் முகம் புதைத்த உணர்வு தெறிக்கிறது. ஒருவேளை அது இந்தக் கொடியை காற்றில் பறக்க விட என்று ஆகுதியான மாவீரர்களும் மண்ணுக்காக மடிந்த மக்களும் வழங்கிய உயிர் மூச்சின் சக்தியாகக் கூட இருக்கலாம். அதற்கு நாம் என்றும் தலை வணங்க வேண்டியதும் மதிப்பளிக்க வேண்டியதும் நம் கடன்..! அதற்காக நாங்கள் தேசியவாதிகள் கிடையாது. தாய் மண்ணை நேசிக்கும் சராசரி மக்கள்.. மனிதர்கள்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

ஒரு விதத்தில் இப்படி கவிதை எழுத தேவையான ஒரு சூழல் வந்ததே எம் காட்டிக் கொடுப்போர் கூட்டத்தால் தான். தமிழனை விட தமிழன் பெருமையை சிதறடித்த பெருமை எவருக்கும் இல்லை

அதற்காக நாங்கள் தேசியவாதிகள் கிடையாது. தாய் மண்ணை நேசிக்கும் சராசரி மக்கள்.. மனிதர்கள்..!

நானும் எங்களை தேசியவாதியாக நினைத்ததில்லை. ஆனால் இன்னொரு திரியில் கிருபன் அண்ணாவின் கருத்தை ஆமோதித்திருந்தேன். (தமிழீழ மண்ணை நேசிக்கும் ஒருத்தியாக) எனினும் தேசியவாதி என்ற பதத்தை உபயோகிப்பது நல்லதல்ல.

இது உங்கள் கருத்திலிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு விடயம். நன்றி. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நானும் எங்களை தேசியவாதியாக நினைத்ததில்லை. ஆனால் இன்னொரு திரியில் கிருபன் அண்ணாவின் கருத்தை ஆமோதித்திருந்தேன். (தமிழீழ மண்ணை நேசிக்கும் ஒருத்தியாக) எனினும் தேசியவாதி என்ற பதத்தை உபயோகிப்பது நல்லதல்ல.

இது உங்கள் கருத்திலிருந்து நான் கற்றுக்கொண்ட இன்னொரு விடயம். நன்றி. :)

கிருபண்ணா.. பழமைவாதத்திற்கும்.. பின்நவீனத்துவத்திற்கும் (பின் முள்ளிவாய்க்கால் வாதத்திற்கும்) இடையில் கிடந்து தத்தளிக்கும் ஒருவர்..!

அவருடைய எழுத்து நடைகள் அதிகம்.. தன்னிலை உயர்ச்சி கொண்டவை. பிறரை அவர்களின் நியாயமான கொள்கைகள் உணராமலே நேரடியாக.. மறைமுகமாக மட்டம் தட்டக் கூடிய வகையில் அமைவன.! இருந்தாலும்.. நியாயங்களையும் கொண்டு வந்து.. அலசக் கூடியவர்..! அந்த வகையில் தான் அவர் மீது ஒரு மதிப்புள்ளது..!

மற்றும்படி.. அவரின் தேசியவாதக் கருத்தியலை நாங்க ஆதரிப்பதில்லை. அது அவரின் சொந்த நக்கல் அளவீடுகளையும் உட்புகுத்திய கருத்தாகவே இங்கு அதிகம் பதியப்பட்டுள்ளன..!

அவரின் பல அளவீடுகள் தவறாகிப் போன பின்னும் அவர் அவற்றை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளும் நிலையிலும் இல்லை. அது அவரின் பண்பாகக் கூட இருக்கலாம். ஆனால் கருத்தியலுக்கு அப்பால்.. தூர வைச்சுப் பழகுவதற்கு நல்ல மனிதராகவே தெரிகிறார்.

நாங்க ஒன்றையும் புதிதாகச் சொல்லவில்லை. தாயகத்தை.. தாயக விடுதலையை தமிழ் தேசியத்துக்குள் சுருக்கிக் கொண்டு.. தாயகத்தை அதன் விடுதலையை நேசிப்பவர்களை தேசியவாதிகளாக இனங்காட்டி திட்டித் தீர்க்கும் பண்பு.. 2009 மே க்குப் பின் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

இதற்குப் பின்னால்.. உப்புச்சப்பற்ற மாற்றுக் கருத்து பறையும் துரோகிகளும்.. மதில் மேல் பூனைகளும்.. எதிரிகளும்.. முக்கிய பங்களித்துக் கொண்டுள்ளனர். இது கூட.. தாயக விடுதலையை மறக்கடிக்கச் செய்யும் எதிரிகளின் தந்திரத்திற்கு செய்யும் சேவகமாகவே நோக்கப்பட வேண்டும்..!

உண்மையில்.. ஈழத் தமிழர்களின் தேசியம்.. தமிழீழத் தேசியமாகும்..! உலகத் தமிழர்களின் தேசியம் தமிழ் தேசியமாகும்..! ஈழத்தமிழர்களும் உலகத் தமிழர்களில் அடக்கம் என்ற வகையில் தமிழ் தேசியம் சார்ந்த எண்ணக்கரு அவர்களுக்கும் உரித்தானதே அன்றி.. தாயக விடுதலை பற்றி கதைப்பது மட்டுமே தமிழ் தேசியம் என்பதாகாது.

ஆனால் துரோகிகளும் எதிரிகளும் மதில் மேல் பூனைகளும் தமிழீழ.. தமிழர் தாயக விடுதலை.. புலி ஆதரவு.. சமூக விடுதலை என்று எல்லாத்தையுமே.. தமிழ் தேசியமாகக் காட்ட விளைகின்றனர். அது தவறான எண்ணக் கருத்தியல் என்பது எனது நிலைப்பாடு. மேலும் மாற்றுக் கருத்து மாணிக்கங்களின் தேசியம் தான் என்ன.. சிங்கள பெளத்த தேசியமா..????! என்ற பெருங்கேள்வி எப்போதுமே தொக்கு நிற்கிறது. என்ன அவர்கள் அதனை எல்லாம் உணரும் பக்குவத்திலும் இல்லை. எதிரியிடம் கூலிக்கு பதவிக்கு மாரடிக்கும் கூட்டத்திற்கு அது தேவையும் இல்லை..!

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் யார் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் தமிழீழ பூர்வீக தாயகத்தை சொந்தமாகக் கொண்ட தமிழ் மொழி கலை பண்பாடு கலாசாரம் விழுமியம்.. தனித்துவம் மிக்க.... தனித்துவ நிலபுல எல்லை.. கொடி.. படை கொண்டு தம்மைத் தாமே ஆட்சி செய்து செழிப்புற வாழ்ந்த பண்டைய தமிழ் தேசிய மூதாதையோரின் வாரிசுகள்..! இன்று தமிழீழ தாயக தேசத்தின் விடுதலையை எதிரிகளிடம் இருந்தும் துரோகிகளிடம் இருந்தும்.. பெறுவதை.. நேசிக்கும் தமிழ் பிள்ளைகள்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

நன்றி உங்கள் விளக்கத்திற்கு. :)

கிருபன் அண்ணா என்னுடன் கதைக்கும் போது என்னை கூட மறைமுகமாக மட்டம் தட்டி கதைத்திருக்கிறார். :D ஆனால் அவர் சாதாரணமாக நன்றாக பழக கூடியவர், நல்லதொரு நகைச்சுவையாளர் மற்றும் விமர்சனங்களை கண்டு கோபப்படாதவர். அதனால் எனக்கும் அவரை பிடிக்கும். :)

அவருடைய பல கருத்துகளில் நக்கல் தொனிப்பதையும், மாற்று கருத்துகள் இருப்பதையும் அவதானித்துள்ளேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

கிருபண்ணா.. பழமைவாதத்திற்கும்.. பின்நவீனத்துவத்திற்கும் (பின் முள்ளிவாய்க்கால் வாதத்திற்கும்) இடையில் கிடந்து தத்தளிக்கும் ஒருவர்..!

அவருடைய எழுத்து நடைகள் அதிகம்.. தன்னிலை உயர்ச்சி கொண்டவை. பிறரை அவர்களின் நியாயமான கொள்கைகள் உணராமலே நேரடியாக.. மறைமுகமாக மட்டம் தட்டக் கூடிய வகையில் அமைவன.! இருந்தாலும்.. நியாயங்களையும் கொண்டு வந்து.. அலசக் கூடியவர்..! அந்த வகையில் தான் அவர் மீது ஒரு மதிப்புள்ளது..!

மற்றும்படி.. அவரின் தேசியவாதக் கருத்தியலை நாங்க ஆதரிப்பதில்லை. அது அவரின் சொந்த நக்கல் அளவீடுகளையும் உட்புகுத்திய கருத்தாகவே இங்கு அதிகம் பதியப்பட்டுள்ளன..!

அவரின் பல அளவீடுகள் தவறாகிப் போன பின்னும் அவர் அவற்றை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளும் நிலையிலும் இல்லை. அது அவரின் பண்பாகக் கூட இருக்கலாம். ஆனால் கருத்தியலுக்கு அப்பால்.. தூர வைச்சுப் பழகுவதற்கு நல்ல மனிதராகவே தெரிகிறார்.

அடேயப்பா!!!..

தத்தளிக்கும்போது வேடிக்கை பார்க்கக்கூடதல்லவா! :icon_mrgreen:

கிருபன் அண்ணா என்னுடன் கதைக்கும் போது என்னை கூட மறைமுகமாக மட்டம் தட்டி கதைத்திருக்கிறார். :D ஆனால் அவர் சாதாரணமாக நன்றாக பழக கூடியவர், நல்லதொரு நகைச்சுவையாளர் மற்றும் விமர்சனங்களை கண்டு கோபப்படாதவர். அதனால் எனக்கும் அவரை பிடிக்கும். :)

அவருடைய பல கருத்துகளில் நக்கல் தொனிப்பதையும், மாற்று கருத்துகள் இருப்பதையும் அவதானித்துள்ளேன். :rolleyes:

:icon_mrgreen::wub: :wub:

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் யார் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறோம். நாங்கள் தமிழீழ பூர்வீக தாயகத்தை சொந்தமாகக் கொண்ட தமிழ் மொழி கலை பண்பாடு கலாசாரம் விழுமியம்.. தனித்துவம் மிக்க.... தனித்துவ நிலபுல எல்லை.. கொடி.. படை கொண்டு தம்மைத் தாமே ஆட்சி செய்து செழிப்புற வாழ்ந்த பண்டைய தமிழ் தேசிய மூதாதையோரின் வாரிசுகள்..! இன்று தமிழீழ தாயக தேசத்தின் விடுதலையை எதிரிகளிடம் இருந்தும் துரோகிகளிடம் இருந்தும்.. பெறுவதை.. நேசிக்கும் தமிழ் பிள்ளைகள்-- நெடுக்ஸ்

இதே தான் எங்களது கொள்கையும் ,எதிரி கூட ஒன்றுதான் .

ஆனால் துரோகிகள் யாரேன்பதுதான் கேள்வி .காலம் அதற்கான பதிலை சொல்லிக்கொண்டே தான் போகின்றது .

நல்லாய் எழுதி இருக்கீங்க நெடுக்காலபோவான்

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ் கவிதைக்கு.ஒரு சிலருக்கு புலிக்கொடி என்றாலே ஒரு வித அலர்ஜி.இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே எடுக்கத் தேவை இல்லை.

எத்தருணத்திலாவது தனது மக்களை காட்டிக்கொடுக்கிறாரோ அவர்கள் துரோகிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.