Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழனை எவரும் அடிக்கலாம்!

Featured Replies

தமிழனை எவரும் அடிக்கலாம்!

தமிழனை சிங்கள இனவெறியர்கள் தான் என்றில்லை தமிழர்களும் அடிக்கிறார்கள்.இது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயமில்லை.சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாட்டில் ஒரு மனிதனுக்கு இன்னொருவன் அடித்தல் என்பது அதிகார திமிர் சம்பந்தப்பட்டது. 'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக அவர்களுக்கு அடிக்கிறார்கள்' இது உலகெங்கும் நடக்கும் விடயம் தான்.

ஆனால் பசிக்கு உணவுக்காக கையேந்தி நிற்கும் ஒருவனை அடித்து உதைத்து வீதியில் எறிவது நான் அறிந்த வரை தமிழ் சமூகத்திலும் குறிப்பாக இந்தியச் சமூகத்தில் தான் நடந்திருக்கிறது.

எமது தாயகத்தில் தீண்டாமைப் பேய் தாண்டவமாடிய 1970 க்கு முற்பட்ட காலகட்கட்டத்தில் இவ்வான சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.1964ம் ஆண்டு துன்னாலை பகுதியைச் சேர்ந்த சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட ஒரு கர்ப்பிணிப் பெண் அடை மழைக்காக வல்லிபுரப்பகுதியில் இருந்த ஓரு பிள்ளையார் கோவில் வாசலில் ஒதுங்கிய போது அவளுடன் வந்த 4 அல்லது 5 வயது மதிக்கத்தக்க அவளது மகன் கோவிலுக்குள் சென்று ஒரு வாழைப்பழத்தை எடுத்துவிட்டான்.அதிகார மமதை கொண்டவர்களின் பார்வையில் சொல்வதானால் திருடி விட்டான்.இன்னும் கொஞ்சம் வெறித்தனமான பார்வையில் சொல்வதானோல் சாதி குறைந்த சிறுவன் கோவிலுக்குள் வந்து வாழைப்பழத்தை திருவிட்டான்.ஒரு வாழைப்பழம் தானே அதை எடுத்தது ஒரு சிறுவன் தானே என்ற மனதாபிமான பார்வையை அதிகார திமிர் அழித்துவிட்டது.அந்த அதிகார வெறியர்கள் அந்த சிறுவனை அடித்து உதைத்து வெளியில் இழுத்தெறிய அவர்களிடம் இருந்து தனது மகனை காப்பாற்ற முயன்ற அந்த கர்ப்பணித் தாயையும் அவர்கள் வெறிபிடித்து தள்ளிவிட்டனர். கற்பூரம் எரிக்கும் கல்லுக்கு மேல் பலமாக விழுந்ததில் அவளது கர்ப்;பம் கலைந்தது.

வலியால் கதறி துடித்த அவளுக்கு உதவி செய்வதற்கு பதிலாக அவளை கோவிலுக்கு 50 மீட்டர் தொலைவில் இருந்த மரத்தடியில் கொட்டும் மழைக்கு மத்தியில் கதறக் கதற இழுத்துச் சென்று போட்டனர்.இத்தச் சம்பவத்தை நேரில் பார்த்த நானும் எனது நண்பர்களும் ஊருக்குள் ஓடிச் சென்று பெரியவர்களை கூட்டிக் கொண்டு வந்த போது அந்தப் பெண் வறிற்றில் இருந்து வெளியே வந்த குழந்தையுடன் உயிரிழந்து கிடந்தாள்.அவளது மகன் தாய் இறந்து தெரியாமல் அவளருகில் மழையில் நனைந்தவாறு அழுதுகொண்டிருந்தான்.

இந்தச் சம்பவத்துக்கு காரணமான நபர்கள் அந்தப் பெண்னும் அவள் குழந்தையும் இறந்துவிட்டது தெரியாமல் அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமல் அதற்கு காரணமானவர்கள் தாங்கள் தான் என்ற குற்ற உணர்வே இல்லாமல் பிள்ளையாருக்கு தீட்டாகி விட்டது என்று பரிகார பூசை செய்து கொண்டிருந்தனர்.

பின்னர் காவல்துறையினர் வந்து விசாரித்த போது அந்தப் பெண் மழை வெள்ளத்தில் வழுக்கி விழுந்ததால் குறைப்பிரசவமாகி இறந்துவிட்டள் என்று அவளது அத்தியாயம் முடித்து வைக்கப்பட்டது.அதை தீர விசாரிக்கவும் நடந்த உண்மைக்கு சாட்சியான எங்களிடம் வாக்கு மூலம் பெறவும் யாரும் முயலவில்லை.இன்றைக்கும் அந்தக் கோவிலுக்குஅருகாக செல்லும் போது அந்தப் பெண் அன்றைக்கு எழுப்பிய அவலக்குரலும் தாய் இறந்தது கூடத் தெரியாமல் அழுது கொண்டிருந்த அவளது மகனின் நிலையும் என் நினைவுக்கு வரும்.

கடந்த வாரம் இலண்டனில் உள்ள ஒரு பிரபலமான சைவக் கோவிலில் உணவு கேட்டுச் சென்ற தமிழ் இளைஞன் ஒருவன் கோவிலில் இருந்தவர்களால் அடித்து உதைத்து வீதியில் தூக்கி எறிப்பட்டுள்ளார்.இரத்தம் ஒழுக வீதியல் மயங்கிக் கிடந்த அவரை பிரித்தானிய பெண் ஒருவர் கொடுத்த தகவலால் காவல்துறையினர் வந்து மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்கு அவர் கோமா நிலையில் இருப்பதை ஊடகங்கள் வாயிலாகவும் நண்பர்கள் மூலமும் தெரிந்து கொண்ட போது இந்தச் சம்பவமே எனக்கு நினைவுக்கு வந்தது.

பசிக்கு உணவுகேட்ட ஒரு மனிதனை அடித்து உதைப்பது என்பது எவ்வளவு அயோக்கியத் தனமானது?.அவன் குடிகாரனாக இருக்கலாம்,தகாத வார்த்தையில் பேசி இருக்கலாம்.அதற்காக அவனை அடித்து உதைப்பதும் வீதியில் தூக்கி வீசுவதும் அதிகாரத் திமிர் அன்றி வேறு எதுவும் இல்லை.கோவிலில் ஒருவர் தகராறு செய்கிறார் என்றால் காவல்துறையினரை உதவிக்கு அழைத்திருப்பதுதானே முறை? காயம்பட்டு இரத்தம் ஒழுக மயங்கிக் கிடந்த ஒருவனை மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என்ற மனிதாபிமானம் இல்லாமல் போனதற்கு அதிகாரத் திமிர் இல்லாமல் வேறென்ன காரணம் இருக்க முடியும்.அகங்காரத்தை ஒழிக்கும் இடம் தான் கோவில் என்று போதனை செய்யும் நபர்களே அகங்காரத்தை மொத்த குத்தகைககு எடுத்தவர்களாக இருப்பது தானே காலகாலமாக தொடர்கிறது.

இந்த ஆலயம் கடந்த காலத்தில் தாயகத்தில் ஏதிலிகளாக இருக்கும் மக்களுக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறது என்பது உண்மைதான்;.அதற்கெல்லாம் கரும்புள்ளி வைப்பது போல் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியது ஏன்?

இந்த ஆலயம் மக்களால் தெரிவு செய்ப்பட்ட நிர்வாகத்தினாலே நிர்வகிக்கப்படுகிறது.கடந்த முறை இந்த நிர்வாகத் தேர்தல் நடந்த போது தமிழக தேர்தல் தோற்றுப் போகும் அளவுக்கு உள்ளக அரசியல் சித்துவிளையாட்டக்கள் அரங்கேறியதாக ஒரு சாரார் அப்போதே குற்றம் சாட்டியிருந்தனர்.

இன்று இந்த சம்பவத்தை அந்தக் குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் போது அது உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி.

பசித்த ஒருவனுக்கு உணவளிக்க மறுத்த (அவனில் ஆயிரம் பிழைகள் இருந்தாலும் )அவனை அடித்து உதைத்து வீதியில் தூக்கி எறிந்த நபர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள்.இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று தற்போதைய ஆலய நிர்வாகிகளை உடனடியாக பதவி விலகுமாறு லண்டன் தமிழ் மக்கள் கோரவேண்டும்.

ஆலயங்கள் அகங்காரமும் அதிகாரத் திமிர் பிடித்தவர்களின் கூடாரங்களாக மாறுவதை எத்தனை நாளைக்குத்தான் நாம் அனுமதிக்கப் போகிறோம்?

நெஞ்சு பொறுக்குதில்லையே- இந்த

நிலைகெட்ட மனிதரை நினைக்கையிலே!

http://sivasinnapodi...ும்-அடிக்கலாம்/

Edited by navam

  • Replies 77
  • Views 6.1k
  • Created
  • Last Reply

ஒருவரைத் தாக்கியவரை லண்டனிலும் கைது செய்ய மாட்டார்களோ?

சம்பவம் உண்மையாக இருந்தால் - ஆலய நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்திருக்க வேண்டும்!

  • தொடங்கியவர்

சம்பவம் உண்மையாக இருந்தால் - ஆலய நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்திருக்க வேண்டும்!

[/quote[size=5]கோயில் நிர்வாகிகள் உட்பட சுமார் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர். கோயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். கோயில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்துக்கு, கோயில் நிர்வாகம் இதுவரை எதுவித மன்னிப்பையும் கோரவிலை. மாறாக எதுவும் நடக்காததுபோல கோயிலை மீண்டும் திறந்து பூசைகளை நடத்திவருகின்றனர்.[/size]

Edited by navam

புலத்தில் யாழ்ப்பாணியம் புதிய முகங்களுடன் ஆளமாகவே வேரூன்றியள்ளது என்பதற்கு சிறப்பான உரைகல் வேறு தேடினாலும் கிடைக்காது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இனத்திற்கு, விடுதலை வேண்டிப் போராடியவர்களுக்காக, மவுனமாகக் கண்ணீர் வடிப்பதைத் தவிர, வேறொன்றும் சொல்ல முடியவில்லை, நவத்தார்!

  • தொடங்கியவர்

இந்த இனத்திற்கு, விடுதலை வேண்டிப் போராடியவர்களுக்காக, மவுனமாகக் கண்ணீர் வடிப்பதைத் தவிர, வேறொன்றும் சொல்ல முடியவில்லை, நவத்தார்!

[size=3][size=1][size=4]'அழுவதும் தொழுவதும் அடங்கிக் கிடப்பதும் எமது தலைவிதியல்ல-[/size][/size][/size]

[size=3][size=1][size=4]எழுவதும் எதிர்த்துநிற்பதும் தடைகளை தகர்த்து முன்னேறுவதும் [/size][/size][/size]

[size=3][size=1][size=4]காலம் எமக்கிட்ட கட்டளை'[/size][/size][/size]

சம்பவம் உண்மையாக இருந்தால் - ஆலய நிர்வாகி மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்திருக்க வேண்டும்!

[/quote[size=5]கோயில் நிர்வாகிகள் உட்பட சுமார் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர். கோயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். கோயில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்துக்கு, கோயில் நிர்வாகம் இதுவரை எதுவித மன்னிப்பையும் கோரவிலை. மாறாக எதுவும் நடக்காததுபோல கோயிலை மீண்டும் திறந்து பூசைகளை நடத்திவருகின்றனர்.[/size]

[size=4]எனவே இங்கிலாந்து நாட்டு சட்டப்படி கோயில் நிர்வாகத்தில் பிழை இல்லை என்றே தோன்றுகின்றது. ஆக பிழை மற்றையவர் மேல் இருக்கலாம் இல்லை 'நடந்தது [/size][size=4]என்ன[/size] [size=4]என்பது முழுமையாக' இந்தக்கட்டுரையில் எழுதப்படவில்லை என்றே எண்ணுகிறேன். [/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எனவே இங்கிலாந்து நாட்டு சட்டப்படி கோயில் நிர்வாகத்தில் பிழை இல்லை என்றே தோன்றுகின்றது. ஆக பிழை மற்றையவர் மேல் இருக்கலாம் இல்லை 'நடந்தது என என்பது முழுமையாக; இந்தக்கட்டுரையில் எழுதப்படவில்லை என்றே எண்ணுகிறேன். [/size]

சாதியை எழுதாமல் நவத்தாரால் எழுதமுடியாது.

லா சப்பலில் இப்படி ஒரு பதினைந்து பேராவது திரிகிறார்கள். இவர்களுக்கு ஆலயங்களும் சில நல்ல குணம் படைத்த உணவு விடுதிகளுமே சோறு போடுகின்றன.

பல வருடங்களாக சோறு போடும் இவர்கள் ஒரு நாள் தப்பை சுட்டிக்காட்டினால் அதை தொடர்ந்து ஒருத்தர் மீறினால் அதனால் தண்டிக்கப்பட்டால் இங்கு குத்திமுறியும் இவர்களில் எவராவது அவர்களுக்கு ஒரு நாள் சோறு போட்டிருப்பார்களா? போட தயாரா? விலாசம் தருவீர்களா அனுப்பி வைக்கின்றேன்.

உடனே சாதியம் யாழ்ப்பணியம் இந்து என சாட்டை எடுத்து உதவி செய்வோரை வைய்து என்ன காணப்போகின்றோம்?????????

இப்படித்தான் பிரபாகரன் என்பவர் மீது பல சாட்டைகளை வீசி வீழ்த்தினோம்.

தற்போது எதுவுமில்லாமல் கண்டவனிடம் வாங்குகின்றோம். பல்லிளித்து நிற்கின்றோம். :( :( :(

எனவே இங்கிலாந்து நாட்டு சட்டப்படி கோயில் நிர்வாகத்தில் பிழை இல்லை என்றே தோன்றுகின்றது. ஆக பிழை மற்றையவர் மேல் இருக்கலாம் இல்லை 'நடந்தது என என்பது முழுமையாக; இந்தக்கட்டுரையில் எழுதப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக அவர்களுக்கு அடிக்கிறார்கள்'

செய்திகளின் சாரம்சம் இதுதான் . இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில் , வல்லிபுரத்துக்கருகில் உள்ள பிள்ளையார்கோயலடி சம்பவம் , இப்போது புலத்தில் நடந்த சம்பவம் என்பன கட்டுரைக்கு ஆதாரமாக வலுசேர்க்கப்படுள்ளன. இந்தக்கால இடைவெளியில் இவ்வளவு இளப்புகளைக் கொடுத்தும் இந்த சமூகம் பன்முகப்படுத்தப்பட்டதா ??????? ( சிவிலைஸ் ) என்பதே இங்குள்ள கேள்வி . ஆம் என்றால் இப்படிப்பட்ட சீழ்களும் துர்நாற்றங்களும் ஆம் என்பதை கேலிக்கூத்தாக்கி தங்கள் கோரமுகங்களை மீண்டும் மீண்டும் ஆளப்பதிக்கின்றன என்றே சொல்வேன் .

'அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் அதிகாரமற்றவர்களின் குரலை ஒடுக்குவதற்காக அவர்களுக்கு அடிக்கிறார்கள்'

செய்திகளின் சாரம்சம் இதுதான் . இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரையில் , வல்லிபுரத்துக்கருகில் உள்ள பிள்ளையார்கோயலடி சம்பவம் , இப்போது புலத்தில் நடந்த சம்பவம் என்பன கட்டுரைக்கு ஆதாரமாக வலுசேர்க்கப்படுள்ளன. இந்தக்கால இடைவெளியில் இவ்வளவு இளப்புகளைக் கொடுத்தும் இந்த சமூகம் பன்முகப்படுத்தப்பட்டதா ??????? ( சிவிலைஸ் ) என்பதே இங்குள்ள கேள்வி . ஆம் என்றால் இப்படிப்பட்ட சீழ்களும் துர்நாற்றங்களும் ஆம் என்பதை கேலிக்கூத்தாக்கி தங்கள் கோரமுகங்களை மீண்டும் மீண்டும் ஆளப்பதிக்கின்றன என்றே சொல்வேன் .

[size=1][size=4]இங்கே [/size][/size][size=4]முழுமையாக[/size] செய்தி இல்லை.

[size=1][size=4]ஒரு சம்வத்தை வைத்து ஒருவர் தனது விளக்கத்தையும் சில வலுச்சேர்ப்புக்களையும் செய்துள்ளார்.[/size][/size]

[size=4]இது இணைக்கப்படவேண்டிய இடமும் இது இல்லை, அநேகமாக சமூக சாராளம் பகுதியில் இணைத்து விவாதிக்கப்பட வேண்டிய விடயம். [/size]

[size=1][size=4]இங்கே [/size][/size][size=4]முழுமையாக[/size] செய்தி இல்லை.

[size=1][size=4]ஒரு சம்வத்தை வைத்து ஒருவர் தனது விளக்கத்தையும் சில வலுச்சேர்ப்புக்களையும் செய்துள்ளார்.[/size][/size]

இது இணைக்கப்படவேண்டிய இடமும் இது இல்லை, அநேகமாக சமூக சாராளம் பகுதியில் இணைத்து விவாதிக்கப்பட வேண்டிய விடயம்.

இதுதானே கூடாது .......... ஆக சொல்லவந்த செய்தி உங்களுக்கு இஞ்சி சாப்பிட்டமாதிரி இருக்கின்றது . நவம் போட்ட இடம் பிழை . நல்லாயிருக்கு அகூதா .

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி முருகன் கோயில்லயும் இந்த விளையாட்டு இருக்கு சாப்பாடு போய் நிக்குற ஆக்கள ஒருமையில பேசுறது.... மதிக்கிறது இல்லை.... நிர்வாகத்துக்குள் அரசியல் உள்குத்துகள் etc etc

இதுதானே கூடாது .......... ஆக சொல்லவந்த செய்தி உங்களுக்கு இஞ்சி சாப்பிட்டமாதிரி இருக்கின்றது . நவம் போட்ட இடம் பிழை . நல்லாயிருக்கு அகூதா .

[size=4]சொல்லவந்தது செய்தி அல்ல என மேலே சொல்லியுள்ளேன். இது ஒருவரின் அரைகுறை விளக்கமும் அவரின் கருத்தும் - அது உங்களுக்கு செய்தியாக இருந்தால் நான் என்ன செய்வது ?[/size]

[size=4]இன்னொரு திரியை சமூக சாரளத்தில் ஆரம்பியுங்கள், அதில் விவாதிப்போம். [/size]

சாதியை எழுதாமல் நவத்தாரால் எழுதமுடியாது.

லா சப்பலில் இப்படி ஒரு பதினைந்து பேராவது திரிகிறார்கள். இவர்களுக்கு ஆலயங்களும் சில நல்ல குணம் படைத்த உணவு விடுதிகளுமே சோறு போடுகின்றன.

பல வருடங்களாக சோறு போடும் இவர்கள் ஒரு நாள் தப்பை சுட்டிக்காட்டினால் அதை தொடர்ந்து ஒருத்தர் மீறினால் அதனால் தண்டிக்கப்பட்டால் இங்கு குத்திமுறியும் இவர்களில் எவராவது அவர்களுக்கு ஒரு நாள் சோறு போட்டிருப்பார்களா? போட தயாரா? விலாசம் தருவீர்களா அனுப்பி வைக்கின்றேன்.

உடனே சாதியம் யாழ்ப்பணியம் இந்து என சாட்டை எடுத்து உதவி செய்வோரை வைய்து என்ன காணப்போகின்றோம்?????????

இப்படித்தான் பிரபாகரன் என்பவர் மீது பல சாட்டைகளை வீசி வீழ்த்தினோம்.

தற்போது எதுவுமில்லாமல் கண்டவனிடம் வாங்குகின்றோம். பல்லிளித்து நிற்கின்றோம். :( :( :(

எங்களுக்கு இணையங்களில் அதைசெய்தோம் இதைசெய்தோம் என்று இலவச விளம்பரம் தேடி தமுக்கடிச்சு பழக்கம் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் அண்ணா இதுக்குள்ள ஏன் யாழ்ப்பாணியம் வந்ததெண்டு அறியலாமோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் அண்ணா இதுக்குள்ள ஏன் யாழ்ப்பாணியம் வந்ததெண்டு அறியலாமோ? :D

இலவசமாக பெற்ற வைத்த ஆயுதங்களை ஏன் இங்கு பாவிக்கக்கூடாது. வந்தால் மலை போனால் ......??? :lol::D :D

எங்களுக்கு இணையங்களில் அதைசெய்தோம் இதைசெய்தோம் என்று இலவச விளம்பரம் தேடி தமுக்கடிச்சு பழக்கம் இல்லை .

கிளிஞ்சுது போ........

இப்படி எத்தனை பேரைப்பார்த்திட்டம்.

வாய்ச்சொல்லில் வீரரடி................கிளியே :D :D

இலவசமாக பெற்ற வைத்த ஆயுதங்களை ஏன் இங்கு பாவிக்கக்கூடாது. வந்தால் மலை போனால் ......??? :lol::D :D

கிளிஞ்சுது போ........

இப்படி எத்தனை பேரைப்பார்த்திட்டம்.

வாய்ச்சொல்லில் வீரரடி................கிளியே :D :D

நாங்களும் யாழ் இணையத்திலை பாத்துக்கொண்டுதான் இருக்கிறம் இந்த வாய்சொல்வீரர்களின்ரை கூத்துகளை :lol: :lol: :D:icon_idea: :icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஏன் France உறவுகள் 2 பேரும் சண்டை பிடிகிறிங்க? அதுவும் ஒண்டா எல்லாம் மீட் பண்ணி கபே எல்லாம் குடிச்சிட்டு

Come on guys lets be friends :D

மிகவும் பிற்போக்கான சிந்தனைகளில் தான் எம்மில் இன்றும் பலர் ,இவர்களெல்லாம் வெளிநாடுவந்தும் மாறவில்லை ,அவர்கள் உலகமே ஒரு சிறிய வட்டம் தான் .

நேற்று பி.பி.சி யில் இந்த செய்தியை கேட்கும் போது ஒரு வெட்கி தலை குனியவேண்டிய இனமாக இருந்தது எம் இனம் .ஒரு செல்டரில் வசிக்கும் ஒருவரை,ஒரு சுகமில்லாதவரை உணவு கேட்டதற்கு இப்படி அடித்து வெளியில் தூக்கி போட்டிருக்கின்றார்கள் என்றால் மீண்டும் எங்களை ஒரு காட்டுமிராண்டிகளாக காட்டும் ஒரு நிகழ்வே இது .

அவர் குடித்திருக்கலாம்,தகாத வார்த்தைகள் பேசி இருக்கலாம் ஆனால் அதற்கு சட்டத்தை தமது கைகளில் எடுப்பது என்பது அவர்களின் அறிவின் அளவை காட்டுகின்றது .

இதற்குள் பல சமூக விசகிருமிகள் தேசியதற்கு ஆதரவான் கோவில் ,அன்னதானம் செய்யும் கோவில் என்று அவர்களா செய்ததை நியாயபடுத்த நினைப்பது அதைவிட கேவலம் .

  • தொடங்கியவர்

இது அதிர்வு இணையத்தில் வந்த செய்தி.

[size=4]லண்டனில் உள்ள ஒரு பெயர்போன கோவிலில், சாப்பாடு கேட்டுச் சென்ற தமிழன் ஒருவனைத் தாக்கி வெளியே கொண்டு வந்துபோட்டுள்ளனர் நிர்வாகத்தில் இருக்கும் சிலர். இதற்கு அக்கோயிலில் உள்ள குருக்களும் துணைபோன சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை(17) இடம்பெற்றுள்ளது. அட பேர்போன கோயில் என்று ஏன் எழுதவேனும் ? அது ஈலிங் அம்மன் கோவில் தான் ! அடிவாங்கிய இளைஞன் கோமா நிலையில் உள்ளார், கோவில் சீல் வைக்கப்பட்டது ! சுமார் 11 பேர்கைதாகி பின்னர் விடுதலையானார்கள் ! அப்ப என்ன தான் அங்கே நடந்தது ? வாருங்கள் விடையத்துக்குப் போகலாம் !

லண்டனில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு, பேர்போன பழைய கோவில்களில் ஒன்று ஈலிங் அம்மன் கோவில் ஆகும். இக்கோயில் நிர்வாகிகள், ஊரில் உள்ள தமிழ் மக்களுக்கு பல உதவிகளைச் செய்துள்ளனர். பல ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிப்பு, விதவைகள் மறுவாழ்வு என்று பல நல்ல காரியங்களைச் செய்துள்ளனர். அதில் எந்தத் தப்பும் இல்லை. ஆனால் இவ்வளவு ஆண்டுகளாக இவர்கள் செய்து வந்த நற்பணிகள் எல்லாம் ஒரே நிமிடத்தில் கலைந்துபோய்விட்டது. கடந்த வெள்ளிக்கிழமை ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் ஈலிங் அம்மன் கோவிலுக்குச் சென்று, உணவு உள்ளதா என்று கேட்டுள்ளார். குறிப்பிட்ட இந்த இளைஞர் வல்வெட்டித்துறைச் சேர்ந்தவர் என்றும், அவர் வீடற்ற நிலையில் ஒரு அகதியாக, வாழ்ந்து வருகிறார் என்றும் அதிர்வு இணையம் அறிகிறது.

beg-for-life.jpgகுறிப்பிட்ட இளைஞர் விரக்தியில், மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், சம்பவ தினத்தன்று அவர் மதுபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. உணவு கேட்ட இளைஞருக்கு, கோவில் நிர்வாகிகள் கூறிய பதில் ஆத்திரமூட்டியுள்ளது. ஒரு கொஞ்ச சாப்பாடு கூட இல்லையா என்று அவர் கேட்டுள்ளார். ஆனால் உணவு முடிந்துவிட்டதாக கோயில் நிர்வாகம் கூறியுள்ளது. இதனை அடுத்து ஏற்பட்ட வாய் தர்கத்தில், கோயிலுக்கு உள்ளேயே வைத்து அவ்விளைஞர் பலமாகாத் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் அவரை அப்படியே தூக்கிவந்து வெளியே போட்டுள்ளனர் சிலர். இவர்கள் கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள் பொலிசார். இதனிடையே பொலிசாருக்கு அடித்துச் சொல்லிவிடலாம் என, ஒருவர் தனது மோபைல்போனைத் தூக்க, அங்கே நின்றிருந்த ஐயர் ஒருவர் பொலிசுக்கு போன் பண்ணவேண்டாம் ! இது பொலிஸ் கேஸ் ஆகிவிடும் என்று பகிரங்கமாக உரக்க கூறியுள்ளார் என்றால் பாருங்களேன் ! குடித்துவிட்டு ரோட்டில் விழுந்துவிட்டதாக பொலிசார் நினைக்கட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.

பசி என்று வந்தால், எதிரி என்றாலும் உணவுகொடுக்கும் மரபில் வந்தவர்கள் தமிழர்கள். அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! கோயில்..... ஒரு திருப்பணி புரியும் புனிதஸ்தலம் ! தெய்வாதீனம் மிக்க இடம் .... அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! ஒரு ஈழத் தமிழன் அதுவும் வீடு இல்லாதான ஒரு எதிலி ! அதனையும் மறந்தார்கள் இவர்கள் ! சரி அடிக்காமல் அவரை அப்படியே பிடித்து வெளியே கொண்டுபோய் விட்டிருக்கலாம் அல்லவா ? படு மோசமாக அடித்து கோமா நிலைக்கு அவரைத் தள்ளி, பின்னர் பொலிசையும் அழைக்காமல் விடுவது எந்தவகையில் ஞாயம் ? இதனைப் பார்த்த வேற்றினப் பெண்(ஆங்கிலப் பெண்மணி) ஒருவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்தபொலிசார், குறிப்பிட்ட 30 வயது இளைஞன் பிழைக்கமாட்டார் எனக் கருதி ஏல்-அம்பூலன்சை(உலங்கு வானூர்தி மருத்துவப் பிரிவை) வரவழைத்துள்ளனர். கோயில் நிர்வாகிகள் உட்பட சுமார் 11 பேரைக் கைதுசெய்துள்ளனர். கோயிலைப் பூட்டி சீல் வைத்துள்ளனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்துள்ளனர். கோயில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நடந்த சம்பவத்துக்கு, கோயில் நிர்வாகம் இதுவரை எதுவித மன்னிப்பையும் கோரவிலை. மாறாக எதுவும் நடக்காததுபோல கோயிலை மீண்டும் திறந்து பூசைகளை நடத்திவருகின்றனர். பாதிக்கப்பாட்ட இளைஞனுக்கு என்ன உதவிகளைச் செய்தார்கள் என்று கோயில் நிர்வாகத்திடம் அதிர்வு இணையம் கேட்டது, இது நீதிமன்றில் உள்ள வளக்கு இதுகுறித்து எதுவித கருத்தையும் நான் கூறமுடியாது என்கிறார்கள். கேள்விக்கு கோயில் நிர்வாகம் எந்தப் பதிலையும் கூறவில்லை. நடந்த இச் சம்பவத்தை தமிழ் ஊடகங்கள் வெளியே கொண்டுவரக்கூடாது என்பதில் மட்டும் இவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களே தவிர, பாதிக்கப்பட்டவர் விடையங்களில் அவர்கள் கவனம் செலுத்தவே இல்லை ! இதுவே ஒரு தமிழ் இளைஞன் லண்டனில் உள்ள புத்த விகாரை ஒன்றுக்குச் சென்று உணவுகேட்டபோது, அவர் தாக்கப்பட்டிருந்தால், தமிழர்கள் அந்த புத்தவிகாரை நிர்வாகிகளை சும்மா விட்டிருப்பார்களா ? இல்லையேல் கிறீஸ்த்தவ மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் வழிபாட்டுஸ்தலங்களில் இவ்வாறு சம்பவங்கள் ஏதாவது நடந்துதான் உள்ளதா ? கோவிலில் என்ன நடந்தாலும் குற்றமில்லையா ? இதனை தமிழர்கள் தட்டிக்கேட்க்கமாட்டார்களா ?

ஈழத்தில் தமிழர்களை யாராவது அடித்தால் மட்டும் தானா நாம் குரல்கொடுப்போம் ? வேறு இடங்களில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நாம் தட்டிக்கேட்க்க மாட்டோமா ?[/size]

http://www.athirvu.c...ments=1&id=3375

[size=5]என்னுடைய கேள்வி என்னவென்றால் அந்த இளைஞன் தவறு செய்திருந்தால் காவல்துறையை அழைக்க வேண்டியது தானே? அவனை அடித்து உதைக்கு காயப்படுத்தி தூக்கி வீதிவது எறிவது இங்கே சிலருக்கு நியாமாகப்படுகிறது.கோவிலுக்குள்ள வந்து சத்தம் போட்டால் அடித்து உதைத்து தூக்கி எறிவோம் என்பது தான் உயரிய தமிழ் மரபா? இதைத்தானே அன்றில் இருந்து இன்றவரை செய்து வருகின்றீர்கள்.[/size]

[size=5]ஒருவர் ஆபத்தில் இருந்தால் அவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது ஐரோப்பிய சட்டம்.[/size]

[size=5]பிரித்தானிய வெள்ளை இனப் பெண்ணுக்கு இருந்த மனிதாபிமானம் ஏன் நம்முடைய உயர் திரு கனவான்களுக்கு இல்லாமல் போனது?[/size]

[size=5]இந்த சம்பவத்தை விசாரித்து அறிந்த போது எனக்கு 1964 ல் நடந்த அந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது அடக்க முடியாது கோபம் வந்தது . (நானும் 1990களில் பாரிஸ் நகரத்தில் ஒரு சாதி வெறியனின் திமிரால் சாப்பாட்டுக்கு வழியில்லாதவனாக ஆக்கப்பட்ட நிலையில் பாரிஸ் முத்துமாரி அம்மன் கோவிலில் அன்னதானச் சோறு வாங்கிச் சாப்பிட்டு பசியாறிஇருக்கிறேன்) .ஐயா விசுகு தமிழனுக்கு சிங்களவன் அடித்தால் நீங்கள் 1958ல் இருந்து வரலாற்றை தோண்டி எடுக்கலாம் நாங்கள் எங்களைப் பாதித்த சம்பங்களை சொல்லக் கூடாது.இது தான் உங்களது மேன்மை தங்கிய நியாயமோ?[/size]

[size=5]1964 ல் நடந்த சம்பவத்துக்கும் இப்போது நடந்த சம்பத்துக்கும் தொடர்பில்லாமல் இருக்கலாம்.ஆனால் இரண்டுக்கும் அடிப்படை என்ன?அதிகாரத் திமிர் என்பது தானே![/size]

[size=5]என்னைப் பொறுத்தவரை இனவாதியான சிங்களவனை விட இனவாதமா? இலங்கையில் அது இல்லை.அதெல்லாம் முன்னர் இருந்தது இப்போது தமிழர்களும் நாங்களும் சமாதானமாக வாழ்கிறோம் என்று உலகத்துக்கு சொல்லும் சிங்கள போலி ஜனநாயக வாதிகள் எப்படி ஆபத்தானவர்களோ அப்படி( முள்ளிவாக்காலுக்குப் பின்னும் சாதி வெறியால் போராளிக் குடும்பங்களினதும் பெண் பொராளிகள் பலரினது தற்கொலைகளுக்கும் மன உழைச்சல்களுக்கும் காரணமாக இருந்த) சாதி வெறியர்களை விட சாதி இல்லை அது ஒழிந்துவிட்டது என்று பம்மாத்து விடுபவர்களே ஆபத்தானவர்கள்.[/size]

[size=5]எனது ஊரான வல்லிபுரத்திலே எனது சொந்த மைத்துனனின் மகளுக்கு உப தபாலதிபர் பதவி கிடைத்தது. அந்த உப தபால் நிலையம் ஒரு மேட்டுக்குடி கனவானின் வீட்டில் இருந்தது. தன்னுடைய வீட்டுக்குள் எனது மருமகள் அதாவது உப தபால் அதிபர் வரக்கூடாது என்று அவர் சொல்லிவிட்டார்.உயர் தபால் அதிகாரிகளின் துணையோடு அவள் முதல் நாள் கடமையை பொறுப்பெடுக்கச் சென்றபோது அந்தக் கனவான் அவளை தள்ளி விழுத்தி வீட்டுக்குள் விடாமல் துரத்தியதுடன் அதிகாரிகள் முன்னிலையிலே தபால் நிலைய சாமான்களை தூக்கி வீதியில் வீசிவிட்டார்.[/size]

[size=5]அரசு நிறுவனத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அவரை யாரும் தண்டிக்கவில்லை.[/size]

[size=5]இப்போது அந்த தபால் நிலையம் எனது உறவினர் ஒருவரின் வீட்டில் இயங்கிவருகிறது.[/size]

[size=5]இது நடந்தது 1950 திலே 60 திலோ இல்லை. 2010 ல் நடந்தது.[/size]

[size=5]இறுதியாக அடிப்படையில் கருத்தியல் ரீதியாக நாங்கள் இன்னமும் சாதியச் சமூகமாக இருப்பதினாலேயே அதற்கான முதல் கொடுப்பனவாக மாநிடத்தை தொலைக்கிறோம். மாநிடம் தொலைந்த பிறகு சுயநலம் சந்தர்ப்பவாதம் பிழைப்புவாதம் முதலான ஒட்டு மொத்த பிற்போக்குத் தனங்களின் இருப்பிடமாக நமது சமூகம் இருப்பதில் ஆச்சரிமில்லை.தொலைந்து போன அந்த மாநிடத்தை தேடி கண்டுபிடிக்க முயலும் நாங்கள் பைத்தியக்காரர்களே? என்று பல தடவை நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன் [/size]

Edited by navam

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவையும் சொல்லத் துணிந்த நீங்கள் (கட்டுரையாளர்).. கோவிலை சொல்லாமல் இனங்காட்டாமல் மறைப்பது ஏனோ..???! உங்களுக்கும் அதிகார வர்க்கத்தின் மீது அச்சமோ..????! அல்லது அம்மாளாச்சி சபிச்சிடுவா என்ற பயமோ..???!

இந்தத் தலைப்பிலும்.. இந்த தலைப்போடு சம்பந்தப்பட்ட விடயங்கள் பகிரப்பட்டுள்ளன.

ஈலிங் அம்மன் ஆலயத்தில் பிரச்சனை?

http://www.yarl.com/...howtopic=106658

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிற்போக்கான சிந்தனைகளில் தான் எம்மில் இன்றும் பலர் ,இவர்களெல்லாம் வெளிநாடுவந்தும் மாறவில்லை ,அவர்கள் உலகமே ஒரு சிறிய வட்டம் தான் .

நேற்று பி.பி.சி யில் இந்த செய்தியை கேட்கும் போது ஒரு வெட்கி தலை குனியவேண்டிய இனமாக இருந்தது எம் இனம் .ஒரு செல்டரில் வசிக்கும் ஒருவரை,ஒரு சுகமில்லாதவரை உணவு கேட்டதற்கு இப்படி அடித்து வெளியில் தூக்கி போட்டிருக்கின்றார்கள் என்றால் மீண்டும் எங்களை ஒரு காட்டுமிராண்டிகளாக காட்டும் ஒரு நிகழ்வே இது .

அவர் குடித்திருக்கலாம்,தகாத வார்த்தைகள் பேசி இருக்கலாம் ஆனால் அதற்கு சட்டத்தை தமது கைகளில் எடுப்பது என்பது அவர்களின் அறிவின் அளவை காட்டுகின்றது .

இதற்குள் பல சமூக விசகிருமிகள் தேசியதற்கு ஆதரவான் கோவில் ,அன்னதானம் செய்யும் கோவில் என்று அவர்களா செய்ததை நியாயபடுத்த நினைப்பது அதைவிட கேவலம் .

உண்மையான கருத்து....

[size=4]

இறுதியாக அடிப்படையில் கருத்தியல் ரீதியாக நாங்கள் இன்னமும் சாதியச் சமூகமாக இருப்பதினாலேயே அதற்கான முதல் கொடுப்பனவாக மாநிடத்தை தொலைக்கிறோம். மாநிடம் தொலைந்த பிறகு சுயநலம் சந்தர்ப்பவாதம் பிழைப்புவாதம் முதலான ஒட்டு மொத்த பிற்போக்குத் தனங்களின் இருப்பிடமாக நமது சமூகம் இருப்பதில் ஆச்சரிமில்லை.தொலைந்து போன அந்த மாநிடத்தை தேடி கண்டுபிடிக்க முயலும் நாங்கள் பைத்தியக்காரர்களே? என்று பல தடவை நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன்.

[/size]

[size=4]உங்கள் கருத்தும் ஆதங்கமும் ஒரு கேள்வியை கேட்க வைக்கின்றது. நீங்கள் நாங்கள் இருப்பது தேவலோகம் என்றா நீங்கள் எண்ணுகிறீர்கள்? [/size]

பல வருடங்களாக சோறு போடும் இவர்கள் ஒரு நாள் தப்பை சுட்டிக்காட்டினால் அதை தொடர்ந்து ஒருத்தர் மீறினால் அதனால் தண்டிக்கப்பட்டால் இங்கு குத்திமுறியும் இவர்களில் எவராவது அவர்களுக்கு ஒரு நாள் சோறு போட்டிருப்பார்களா? போட தயாரா? விலாசம் தருவீர்களா அனுப்பி வைக்கின்றேன்.

என்னுமொருவன் மேல் கைவைக்கும் அதிகாரத்தை யார் அவர்களுக்கு கொடுத்தது? என்ன பிழைவேண்டுமானாலும் செய்யட்டும் தண்டனை கொடுக்க அந்த நாட்டு அரசாங்கமும் சட்டமும் இருக்கின்றது. தண்டிக்கும் அதிகாரத்தை யார் அல்லது எது கோயில் நிர்வாகத்துக்கு கொடுத்தது? ஏதோ சர்வசாதாரணமாக தண்டிக்கப்பட்டால் என்று எழுதுகின்றீர்கள். திமிர்த்தனமான இவ்வாறான மனோநிலையுடைய அரசியலுடைய ஒவ்வொருவரும் சமூகத்தின் சாபக்கேடு. சாபங்கள் இறுதியில் வெள்ளை பிரட்டிக் கிடக்கும் என்பது நேரில்கண்டது வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட கேள்வி இதுக்குள்ள சாதி வெறி எங்க வந்தது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.