Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தொடருந்தில் பயணம் செய்த பிரான்ஸ் பெண்ணும் காமுகரின் வெறித்தனத்திற்கு தப்பவில்லை:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]இலங்கையில் தொடருந்தில் பயணம் செய்த பிரான்ஸ் பெண்ணும் காமுகரின் வெறித்தனத்திற்கு தப்பவில்லை:-

22 ஆகஸ்ட் 2012

உலகில் பெண்கள் சிறுவர்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இலங்கை தெரிவு செய்யப்படலாம்????

[size=3]கொழும்புக்கும், பதுளைக்கும் இடையில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் பெடிமெனிகே தொடருந்தில் பயணித்த பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.[/size]

[size=3]தொடருந்தின் உணவகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதுடன் அவரை தொடருந்து திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.[/size]

[size=3]குறித்த பிரான்ஸ் நாட்;டு பெண் ஹப்புத்தளை தொடருந்து நிலையத்தில் இருந்து பதுளை செல்லும் நோக்கில:. வேறு சிலருடன் பொடி மெனிகே தொடருந்தில் ஏறியுள்ளார்.[/size]

[size=3]உணவகத்தில் பணிப்புரியும் ஊழியர், மென்பானங்களை விற்பனை எடுத்து செல்லும் போது, பிரான்ஸ் பெண்ணுடன் பழகியுள்ளதுடன் அவரை பாலியல் வல்லுறவுறக்கு உட்படுத்தியுள்ளார். சந்தேக நபர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.[/size]

[size=3]இதற்கு முன்னரும் தொடருந்தில் பயணித்த வெளிநாட்டு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி இருந்தன.[/size]

[size=3]இந்த நிலையில் பிரித்தானிய பெண்களுக்கு இலங்கையில் பாதுகாப்பு இல்லை என்பதால், அங்கு விஜயம் செய்வது குறித்து பிரித்தானிய அவதான அறிப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது.[/size][/size]

http://www.globaltam...IN/article.aspx

Edited by கறுப்பி

" [size=4]இதெல்லாம் பொய். புலம்பெயர் புலிகளின் பிரச்சாரம். எனது அண்ணா மகளுடன் 'வக்கேசன்' அங்கு சென்று வந்தார். எல்லாம் அந்த மாதிரி[/size] :wub: '

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

சிறுசிறு அசம்பாவிதங்கள் கூட இல்லை.

அத்துடன்

மகிந்த காற்றோட்டமா தனியே நடந்து திரிவதைப்பார்த்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

சிறுசிறு அசம்பாவிதங்கள் கூட இல்லை.

அத்துடன்

மகிந்த காற்றோட்டமா தனியே நடந்து திரிவதைப்பார்த்தேன்.

யாரையோ விருந்துக்கு அழைக்கிற மாதிரி இருக்கு :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
:D :D
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இப்போது அந்த மாதிரி இருக்கின்றது.

எங்கும் அமைதி எதிலும் அழகு

புலம்பெயர்ந்த தமிழர்களின் சொர்க்கபுரியாக மாறிவிட்டது.

வதந்திகளைப் பரப்பி அவர்களின் சந்தோசத்தைக் கெடுக்காதீர்கள் :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அங்கை ஒரு பிரச்சனையுமில்லையெண்டு இஞ்சையிருந்து போட்டு வந்தவை சொல்லீனம்....றோட்டுகள் எல்லாம் அந்தமாதிரியாம்.......இஞ்சத்தையான் றோட்டுகள் எல்லாம் தோத்துப்போகுமாம்......அங்கை இப்ப என்ன சாமான்கள் இல்லை?இஞ்சைத்தையை மாதிரி அங்கையும் எல்லாம் இருக்காம்......அவங்களாலைதான் அந்தநாடு உப்பிடி மோசமாய்ப்போனதாம்....அங்கை போய் கும்மாளமடிச்சுட்டு......இஞ்சைவந்து ஆறுதலாய் பொழிப்புரை சொல்லீனம்.பன்னாடையள் அங்கை ஒரு பிரச்சனையுமில்லையெண்டால் என்ன கோதாரிக்கு திரும்பி வந்தனியள்? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

.பன்னாடையள் அங்கை ஒரு பிரச்சனையுமில்லையெண்டால் என்ன கோதாரிக்கு திரும்பி வந்தனியள்? :lol:

இப்படியெல்லாம் கேட்கக்கூடாது

அழுதிடுவன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை ஒரு பிரச்சனையுமில்லையெண்டு இஞ்சையிருந்து போட்டு வந்தவை சொல்லீனம்....றோட்டுகள் எல்லாம் அந்தமாதிரியாம்.......இஞ்சத்தையான் றோட்டுகள் எல்லாம் தோத்துப்போகுமாம்......அங்கை இப்ப என்ன சாமான்கள் இல்லை?இஞ்சைத்தையை மாதிரி அங்கையும் எல்லாம் இருக்காம்......அவங்களாலைதான் அந்தநாடு உப்பிடி மோசமாய்ப்போனதாம்....அங்கை போய் கும்மாளமடிச்சுட்டு......இஞ்சைவந்து ஆறுதலாய் பொழிப்புரை சொல்லீனம்.பன்னாடையள் அங்கை ஒரு பிரச்சனையுமில்லையெண்டால் என்ன கோதாரிக்கு திரும்பி வந்தனியள்? :lol:

அகதிக் காசின் அருமை அவன் அவனுக்குத் தான் தெரியும் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அகதிக் காசின் அருமை அவன் அவனுக்குத் தான் தெரியும் :lol:

பொறுத்த நேரம் பார்த்து லைக் முடிஞ்சுது.. :D

[size=4]இங்கிலாந்தை தொடர்ந்து பிரான்சும் சிங்களம் செல்பவர்களுக்கு 'எச்சரிக்கை' விடுக்கலாம். [/size]

இப்படியான நல்லவைகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் ... ஊக்கப்படுத்த வேண்டும் ...

  • கருத்துக்கள உறவுகள்

அங்கை ஒரு பிரச்சனையுமில்லையெண்டு இஞ்சையிருந்து போட்டு வந்தவை சொல்லீனம்....றோட்டுகள் எல்லாம் அந்தமாதிரியாம்.......இஞ்சத்தையான் றோட்டுகள் எல்லாம் தோத்துப்போகுமாம்......அங்கை இப்ப என்ன சாமான்கள் இல்லை?இஞ்சைத்தையை மாதிரி அங்கையும் எல்லாம் இருக்காம்......அவங்களாலைதான் அந்தநாடு உப்பிடி மோசமாய்ப்போனதாம்....அங்கை போய் கும்மாளமடிச்சுட்டு......இஞ்சைவந்து ஆறுதலாய் பொழிப்புரை சொல்லீனம்.பன்னாடையள் அங்கை ஒரு பிரச்சனையுமில்லையெண்டால் என்ன கோதாரிக்கு திரும்பி வந்தனியள்? :lol:

அப்பிடி சொன்னா கேளுங்க அப்ப எப்ப இலங்கைல போய் செட்டில் ஆக போறிங்கன்னு உடன பிள்ளையள சாடுவினம் :D

பிரெஞ்சு பொண்ண ஏனப்பா பாலாத்காரம் பண்ணனும் கேட்டாலே வந்திருப்பாவே

:D

பிரெஞ்சு பொண்ண ஏனப்பா பாலாத்காரம் பண்ணனும் கேட்டாலே வந்திருப்பாவே :D

என்னங்க கேட்டு வாங்கவேண்டிய அளவில் வைத்து சிங்களத்தின் மதிப்பை குறைத்துப்பேசலாமா? எப்போதுமே உரிமையோடு எடுத்துக்கொள்வதுதான் சிங்களத்தின் சிறப்பு. ^_^

  • கருத்துக்கள உறவுகள்

அதுலையும் ஒரு கிக் இருக்கும் :D

அதுலையும் ஒரு கிக் இருக்கும் :D

:D :D :D :D :D

அதிலையும் சிங்களவனுக்கு ஒரு கிக் (வர) இருக்கும்.

அக்சன் பாம் கொலை நேரம் நிச்சயமாக ஒரு கிக் இருக்கு.

ஆனால் இந்த வேணாப்போன பிரெஞ்சுக்கரன் எப்பாபாபா.......த்தான் சிங்களத்தை திரும்பச் சொல்லிப்போடு காலை நீட்டி பின்னுக்கு வடிவாக கொடுக்க போறான் என்டதுதான் தெரியல்ல. :rolleyes:

அநியாயமாக அவனைக் கைது செய்திருக்கிறார்கள். அவளும் இதற்கு உடந்தையாகத்தானிருப்பாள். இப்படித்தான் செய்தி இன்னும் சில நாளில் வெளிவரும். நமக்கேன் வம்பு.

கொழும்புக்கும், பதுளைக்கும் இடையே சேவையில் ஈடுபடும் ”பெடிமெனிகே” புகையிரதத்தில் பயணம் செய்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரான்ஸ் நாட்டுப் பெண், பதுளை செல்லும் நோக்கில் வேறு சிலருடன் ஹப்புத்தளை ரயில் நிலையத்தில் இருந்து ‘பொடி மெனிகே’ ரயிலில் ஏறியுள்ளார்.

இந்நிலையில், புகையிரதத்தில் உள்ள உணவகத்தில் பணி புரியும் ஊழியர், மென்பானங்களை விற்பனை செய்ய எடுத்து செல்லும் போது, பிரான்ஸ் பெண்ணுடன் பழகியுள்ளதுடன் அவரை வல்லுறவுறக்கு உட்படுத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அந்த ஊழியரை புகையிரதத் திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாகவும் தெரியவருகிறது. சந்தேக நபர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=29672

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா இவ்வளவு விளக்கமாய் வெற்றிலை வைத்து அழைத்தும் வரவேண்டிய ஆளைக் காணவில்லை.சிலவேளை ஆள் அங்கதான் நிற்கிறார் போல.

  • கருத்துக்கள உறவுகள்

என்னையா இவ்வளவு விளக்கமாய் வெற்றிலை வைத்து அழைத்தும் வரவேண்டிய ஆளைக் காணவில்லை. சிலவேளை ஆள் அங்கதான் நிற்கிறார் போல.

:D :D :D

:D :D :D

இல்லை இது புலி ஆதரவாளர்கள் பிரான்சு நாட்டுப்பெண்ணுக்கு பணம்கொடுத்து வசந்தம் வீசும் அந்த நாட்டிற்கு அவப்பெயரை உருவாக்கும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட ஓர் சதிநடவடிக்கயாகும்........... :D :D :D

[size=4]' [/size][size=1][size=4]லங்கா புவத்' தின் தாக்கம் எம்மில் உள்ளது[/size] :D[/size]

அவனவன் நாட்டிற்கு போட்டு திரும்பி வருவது நீங்களெல்லாம் ஏன் முதலில அள்ளுப்பட்டு ஓடி வந்தீங்களோ அதே காரணத்திற்காகத்தான் .

ஏதோ நாட்டில பிரச்சனை முடிந்தால் திரும்பிவிடுவம் என்ற மாதிரி சீன் காட்ட கூடாது.வன்னியில் புலிகள் கட்டுப்பாட்டில் பாலும் தேனும் ஓடேக்க எத்தனை பேர் திரும்பி போனீர்கள் .

எமது வாழ்வே எம்மை நாமே ஏமாற்றுவதுதான் .

எதோ நாட்டில போராட்டம் செய்து ஆமிக்காரனால் தேடப்பட்ட மாதிரி கதை அளப்பது ,பிறகு யாழ்பாணம் புலிக்கட்டுப்பாட்டில் வந்த பிறகு புலியால பிரச்சனை என்பது ,பின் சிட்டிசன் கிடைக்க விடுமுறைக்கு போவது எல்லாம் எல்லாருக்கும் தெரியும், நேர சொல்ல வேண்டியதுதானே அகதிக்காசுக்கு ஓடி வந்த கதையை .

உங்கள் கனவுகளுக்கு அப்பால் பட்டு இலங்கை மாறிவிட்டது .இன்னமும் இரண்டு மூன்று வருடங்களில் அங்கு போகும் வெளிநாட்டவர்கள் இங்கு என்ன பிரச்சனை என்று கேட்கத்தான் போகின்றார்கள் ,அதற்கான வேலைத்திட்டத்தில்தான் அரசு இயங்குகின்றது .

அரிசுன் நீங்கள் இந்திய ஏவுகணைகள் இலங்கையின் இலக்குகள் மீதுதான் திருப்பிவைக்கப்படிருகின்றது என்ற செய்தியை படியுங்கள். சிறியா. ஈரானிய மக்களின் வாழ்கைகளை போய் பார்த்து அங்கே எதையோ கண்டுவிட்டா இன்று மேற்குநாடுகள் அங்கே போய் நிற்கின்றன. தேவை ஏற்படின் அரசுகள் அதற்கு ஏற்பட நடந்து கொள்ளும். ராசபக்சா எதையும் செய்து "சோ" காட்டலாம். அது மேற்குநாடுகளின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் மகிந்த போய்த்தான் சேருவார். இதில் தமிழர் வாழ் இடங்களின் பொருளாதார முன்னேற்றங்கள் எதையும் தீர்மானிக்கா. மகிந்த சிங்கள மக்களை உலகம் முழுவதும் அவர்களின் எதிரிகள் என்பது போல பயிற்றுவித்துகொண்டு வருகிறார். இனிமேலைய காலங்களில் அங்கே யாரும் போவது கஸ்டமாக இருக்கும்(போரால் அல்ல-தலிபான் பண்பாட்டால்) இது மகிந்த காட்டும் முன்னேற்ற "சோ"கலை நன்கு பாதிக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

SK Rajan wrote on Facebook:

Sk Rajen அன்பிற்கினியவர்களே! நண்பர் ஒருவர் தான் நேரில் கண்டதைப் பதிவாக்கி எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைத்திருந்தார். அதனைப்படித்ததும், அப்படியே அந்த ஆக்கத்தை விட்டுவிட மனது இடம் கொடுக்கவில்லை. இது மற்றவர்களின் கவனத்தையும் பெறவேண்டும் என்ற நோக்கோடு இங்கு பதிவாக்கியுள்ளேன். இந்த ஆக்கத்தினால் ஏதாவது ஒரு நன்மை ஏற்படுமாயின் அந்தப்பெருமையும்,பாராட்டும் அவருக்குரியதே.

[size=4]எமக்காக எல்லாமாக இருந்த இவர்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம்.[/size]

அ[size=4]ன்றும் போராளி இன்றும் போராளி

அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன்.

ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று.

எனது விடுமுறையில் இலங்‌கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர்.

மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், சில நண்பர் மூலமாக கோரப்பட்ட உதவிகளை ஆராய்வதற்காகவும், நகரத்திற்கப்பால் எம்மவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலும் என்னை இங்கு அழைத்துவந்திருந்தது.

ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.

விபச்சாரம் செய்யும் முன்னாள் பெண்போராளிகள்,

ஏழ்மையினால் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கமுடியாது முகாம்களில் தவிக்கும் முதுகெலும்பு பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி,

தொடைக்கு மேற் பகுதியுடனேயே காலை இழந்து மனைவிகுழந்தைகளை காப்பாற்றுவதற்காக வீதியோரத்தில் சுண்டல் விற்கும் முன்னாள் போராளி,

திருமணமாகி பத்தே மாதத்தில் கடல் மோதலொன்றில் காணாதுபோன கேர்ணல் தரத்திலான தனது கணவன் இன்னும் உயிருடன் இருப்பார் என்னும் நம்பிக்கையுடன் தனது 4 வயதுப் பெண்குழந்தையுடன், வாழ்வாதாரம் இன்றி தம்பி தங்கையுடன் முகாமில் தவிக்கும் முன்னாள் பெண் போராளி்,

இரு கைகளையும் தோள்மூட்டு்ன் இழந்த தனது முன்னாள் போராளியான மகனை பராமரிக்கும் வயதான தந்தை,

இருகண்களையும் இழந்த முன்னாள் ‌போராளி,

குழந்தைப்போராளியாய் இயக்கத்தில் இணைக்கப்பட்டு இறுதிப் ‌ ‌போரில் பெற்றோர் சகோதரர்களை இழந்த முன்னாள் போராளி

எனது கடந்த சில நாட்கள் இப்படியான சில மனிதர்களுடன் கடந்து போயிருக்கிறது. அவர்களின் கதைகளைக் கேட்டு கனத்துப்போயிருக்கிறது மனது.

தன்னெதிரே துள்ளித்திரிந்த குழந்தையை அணைதவாறு அழும் பெண் போராளியிடம் ஆறுதலாக ஒரு வார்த்தையும் பேச முடியாது மௌனமாய் கடந்து போன கணங்கள் மிகவும் கொடுமையானவை.

புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் அவர்களின் வாழ்வில் அமைதியில்லை மகிழ்ச்சி என்பது எள்ளளவும் இல்லை. எப்பொழுதும் கண்காணிக்கப்படுகிறார்கள். எவ்வித கொடுப்பனவுகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. தொழில் வாய்ப்புக்கள் குறைவு. கூலி வேலைகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை. வயல் வேலைகள் அறுவடை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் குறைந்துள்ளது.

இவ்வாறு இருப்பவர்களிடம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துப்போகிறோம் என்று பணம் பிடுங்கும் மனிதர்களுக்கும் குறைவில்லை. அரசியல் பழிவாங்கல்கள், முன்பிருந்த இயக்கமோதல்கள், காட்டிக்கொடுப்புக்கள், பழிவாங்கல்கள் .... அப்பப்பா எப்படி இதையெல்லாம் கடந்து வாழ்கிறார்கள் என்று யோசிக்கத்தோன்றுகிறது.

நான் சந்தித்திருப்பது ஒரு சிலரையே. இப்படியான போராளிகள் வடக்கு கிழக்கு எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

2012 ம் ஆண்டிலும் மலசலகூடம், குடி நீர் வசதி இன்றி பல கிராமங்கள் இருக்கின்றன. வாகரைக்காடுகளில் உள்ள வேடுவர்களை சந்திக்க அழைத்துபோகிறேன் என்றிருக்கிறார் அவர்களுடன் தொடர்புடையவர் ஒருவர்.

கோயில் கொடுப்பனவாகிய 1500,- ரூபாயுடன் 20 குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஒரு ஆசிரியை,

350 ரூபாய் வருமானத்திற்காக ஒரு நாள் முழுவதும் விறகு பொறுக்கி, பல மைல்கள் சைக்கிலில் பயணித்து விறகு விற்பனை செய்யும் 70 வயது கடந்த முதியவர்,

பாவனையில் இல்லாத பழைய வீதிகளில் இருக்கும் கருங்கட்களை கல்லாலும், கைகளாலும் தொண்டி எடுத்து தனது மூன்றாவது மகளுக்கு திருமணம் நடாத்த முற்படும் ஒருவர்,

இவர்களை சந்தித்த போது வெட்கித் தலைகுனிந்திருந்தேன் புலம்பெயர்ந்த தமிழனாய்.

நாம் என்ன செய்திருக்கிறோம் இவர்களுக்கு?

மனம் பொறுக்காது சில நண்பர்களிடம் அவசர உதவி தேவையானவர்கள‌ை அறிமுகப்படுத்தி அவர்களை நேரடியாகவே உதவுங்கள் என்று கேட்டுக்கொண்ட போது உடனேயே உதவிக்கரங்களை நீட்டிய நெஞ்சங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை என்னிடம்.

மக்கா ... ஊருக்கு போனன் அங்க ஒரு பிரச்சனையும் இல்லை என்று அறிக்கைவிடும் அறிவுஜீவிகளே!!

முக்கிய பெரு வீதிகளுக்கும், மாடிவீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்களையும் சென்று அவர்களுடன் பேசி, உறவாடிப்பாருங்கள், அவர்களின் உயிரோசை உங்களுக்குக் கேட்கலாம்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.