Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா ஏவுகணை நிலைநிறுத்தம்

Featured Replies

August 22, 2012 :: NewsIndia, it was reported stationed long range Agni type Missile system targeting Sri Lanka’s strategic institutions. Among these strategic institutions are, Colombo and Hambanthota Ports, Katunayaka, Ratmalana and Mattala Air Ports, Military Headquarters, Putlam Coal plant and Kerawalapitiya-Kelanithissa oil fired Power Plants etc.

Indian Defense Authorities launched an Integrated Guided Missile Program (IGMOP) for the Research and Development of comprehensive range of missiles, which is managed by the Defense Research and Development Organization (DRDO). They have now developed Nuke capable Agni I – VI (capable of carrying 1000-2000kg war heads within a range of 1000 – 8000km) which can target any military or any other installation in South Asia including Sri Lanka.

India and the US joined in secret to cut off China’s supply route from Iran-Pakistan-Sri Lanka –Bangladesh and Myanmar. It is reported that India is also in the process of developing a Ballistic Missile Defense (BMD) system as an initiative to develop and deploy a multi layers system to protect India from possible ballistic missile attacks from Pakistan and China. Recently, India charged Sri Lanka for secretly soliciting technical support from Pakistan to develop Nuclear Energy and possible enrichment of Uranium so that Sri Lanka could develop medium range missiles with Nuke war heads.

This sensitive defense related information was revealed when the Indian Intelligence Agency’s Research and Analysing Wing (RAW) sacked its high ranking officer, Amreet Ahluwalia from his posting (Beijing Chief) in China. Ahluwalia was charged for compromising sensitive defense information relating to India-China-Pakistan and perhaps Sri Lanka. Ahluwalia, a joint secretary level officer, was suspected for ‘Operational Impropriety’ and has been summarily dismissed. Earlier, in 2004, the same charges were brought against Rabinder Singh who had defected to the US with stock files of information regarding India’s missiles and nuclear capabilities.

In 2008, the then RAW head, Ashok Chaturvedi charged JS level officer Ravi Nair posted in Sri Lanka for cultivating intimate connections with a Thai-Chinese girl who was said to be a Chinese Spy. This connection had begun when Ravi Nair was posted in Hong Kong and was uncovered when his legal wife complained to the RAW about his liaison with this Thai-Chinese woman.

A few weeks ago, the Indian HC in Sri Lanka was rocked by the sexual scandal involving its 1st secretary, Anurag Srirvastara and the Editor of the Daily Mirror, Champika Liyanaarachchi. The Editor of the DM published a few news articles against India as a smoke screen after their clandestine relationship was exposed,. She still continues her secret liaison with various agencies which are anti Sri Lanka.

India, this time used the Tamil Card to get more economic benefits from Sri Lanka while opposing every move of the Chinese Investors. The most recent being the Exclusive Free Trade Zone in Trinco for the Indians and the Catic deal in Colombo. (Article)

» More stories on: India

Home :: News Archive

http://missilethreat.com/archives/id.7667/detail.asp

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவிங்களா இலங்கையும் அணு ஆயுதம் தயாரிக்க போதா?

அப்ப வெகு விரைவில் இலங்கை இந்தியா மீது தாக்குதல் நடத்தி இந்தியாவை இலங்கையின் ஒரு மாகாணம் ஆக்க போது

இந்தியாக்கு எதிரா என்னாமோ நடக்குது

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]இலங்கையின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா ஏவுகணை நிலைநிறுத்தம்

23 ஆகஸ்ட் 2012[/size]

akni_CI.png

[size=3]இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை இலக்கு வைத்து இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தென் ஆசியாவின் சகல முக்கிய நிலைகளையும்தாக்கக் கூடிய வகையில் இந்தியா ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அக்னி ரக ஏவுகணையே இவ்வாறு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, ஹம்பாந்தோட்டை துறைமுகங்கள், கட்டுநாயக்க,மத்தள, ரத்மலானை விமான நிலையங்கள், இராணுவத் தலைமையகம், புத்தளம் அனல்மின்நிலையம், களனிதிஸ்ஸ, கெரவல பிட்டிய மின்நிலையங்கள் போன்றவற்றை இலக்குவைத்து இவ்வாறு ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்களை வழங்கிய இந்திய உளவுப்பிரிவின் உயர் அதிகாரி அம்ரீட் அவுவாலியா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மிஸைல்டொட் கொம் என்ற இணைய தளத்தை பராமரித்து வரும் கலிபோர்னியாவை மையமாகக் கொண்ட அமெரிக்கநிறுவனமொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழர் பிரச்சினைகளைப் பயன்படுத்தி இந்தியா, இலங்கையிடமிருந்து பொருளாதார நலன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும்அதேவேளை, சீனா முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதனையும் தடுக்க முயற்சிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இலங்கையூடான சீனாவின் விநியோக வழிகளைதடுப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் இரகசிய திட்டம் தீட்டி வருவதாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கான இந்தியஉயர்ஸ்தானிகராலய முதலாம் நிலை செயலாளர் அனுராக் சிறிவட்சரா பாலியல் துஸ்பிரயோகசம்பவங்களுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.[/size]

http://www.globaltam...IN/article.aspx

Edited by கறுப்பி

இந்தியாவின் கேந்திர நிலைகளைக் குறிவைத்தும், சிறிலங்கா ஏவுகணைகளை நிறுத்தும். சபாஷ் சரியான போட்டிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இனித்தான்... ஸ்ரீலங்கா,இந்திய அரசியல் சூடு பிடிக்கப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ புல்லரிக்குதடா, தலைமுடிகூட நெட்டுக்குத்தா நிக்குதெடா, மகிந்து ஸ்பெசல்ப் பிளேனின இந்தியா போய் சோணியா காலில மண்டியிடப்ப்போறாராமெடா, இதுதாண்டா வடகிழக்கு வறட்சிக்குக் காரணமெடா. மாகாளி திரிசூலி.................... வெட்டடா கிடாய. தூ..... நாய்களா.

நியூஸ் ஏதும் கிடைக்காவிட்டால் இப்படி எதையாவது எடுத்துவிடுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா அவங்களிட்ட குண்டுக்கே பஞ்சம் எண்டு அவங்கட இராணுவத்தளபதி சொல்லியிட்டார்!!!!!!!!

http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/463451_2975615395761_1341140095_o.jpg

கவனம் அப்பு ஏவுகணை வெளிக்கிட இடத்திலேயே விழுந்து வெடிச்சிட போகுது. அப்பிடியே இன்னும் ஆறு குறுந்துர ஏவுகணை தளங்களை கேரளாவிலும் கர்நாடகாவிலும் நிறுவி வைகோ அண்ணா, நெடுமாறன் ஐயா, திருமுருகன் அண்ணா,சீமான்அண்ணா, கொளத்தூர் மணி அண்ணா, தமிழருவி மணியண்ணா போன்றவர்களது வீடுகளை நோக்கி குறி பார்த்து வைக்கலாம். அப்ப மகிந்த ராசாவும் கொஞ்சம் சந்தோசப் படுவார் கரிநாய்நிதி ஐயாவும் சிரிப்பார் . இலவு காத்த கிளி போல நாம் இருக்க வேண்டியதுதான் இந்த செய்திகளை பார்த்து இந்திய இலங்கைய அடிக்கும் என்று கற்பனை வேறை

  • கருத்துக்கள உறவுகள்

கவனம் அப்பு ஏவுகணை வெளிக்கிட இடத்திலேயே விழுந்து வெடிச்சிட போகுது. அப்பிடியே இன்னும் ஆறு குறுந்துர ஏவுகணை தளங்களை கேரளாவிலும் கர்நாடகாவிலும் நிறுவி வைகோ அண்ணா, நெடுமாறன் ஐயா, திருமுருகன் அண்ணா,சீமான்அண்ணா, கொளத்தூர் மணி அண்ணா, தமிழருவி மணியண்ணா போன்றவர்களது வீடுகளை நோக்கி குறி பார்த்து வைக்கலாம். அப்ப மகிந்த ராசாவும் கொஞ்சம் சந்தோசப் படுவார் கரிநாய்நிதி ஐயாவும் சிரிப்பார் . இலவு காத்த கிளி போல நாம் இருக்க வேண்டியதுதான் இந்த செய்திகளை பார்த்து இந்திய இலங்கைய அடிக்கும் என்று கற்பனை வேறை

:D

உங்களிடம் பிரமோஸ் இருக்கிறது

உங்களிடம் ப்ரித்வி இருக்கிறது

உங்களிடம் நிற்பாய் இருக்கிறது

உங்களிடம் அக்னி இருக்கிறது

என்று சொல்கிறீர்களே ...??

...

இதெல்லாம் இருக்கும் உங்களிடம்

சூடு சொரணை

என்று எதாவது இருக்கிறதா ???

உன் நாட்டு மீனவனை காக்க தெரியாத உங்களுக்கு

இத்தனை ஆயுதங்கள் எதற்கு ??"

  • கருத்துக்கள உறவுகள்

aah எங்களிட்ட கஜோல் இருக்குது

ப்ரீத்தி ஜிந்தா இருக்குது

ஐஸ்வர்யா இருக்குது

என் கண்டம் விட்டு கண்டம் பாயும் தீபிகா கூட இருக்குது

வாயா மகிந்த அப்பிடின்னு சிங்க் கெஞ்சிட்டு இருக்காராம்

நியூஸ் ஏதும் கிடைக்காவிட்டால் இப்படி எதையாவது எடுத்துவிடுங்க.

இதுதான் இப்போ பலரின் வாழ்க்கை ஆகிவிட்டது .முதியோர் இல்லத்தில் முச்சக்கரவண்டியில் இருந்து கொண்டும் உதைத்தான் சொல்ல போகின்றார்கள்.

இதுதான் இப்போ பலரின் வாழ்க்கை ஆகிவிட்டது .முதியோர் இல்லத்தில் முச்சக்கரவண்டியில் இருந்து கொண்டும் உதைத்தான் சொல்ல போகின்றார்கள்.

அக்னி ரகத்தைச் சேர்ந்த நீண்டதூர ஏவுகணைகளை சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா நிறுத்தியுள்ளதாக சிங்கள செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.- tamilwin லில் வெளியான செய்தி.

http://missilethreat.com/ - இது ஒரு அமெரிக்க பல்கலைகழகம்

நீங்க போடுகிற குத்து புலம் பெயர் தமிழருக்கு எப்படி நோகும்?

[size=4]இலங்கையின் கேந்திர நிலைகளை [size=5]இலக்கு வைத்து [/size]இந்தியா ஏவுகணை நிலைநிறுத்தம்[/size]

[size=4]வைக்கட்டும் !!!!!!!!![/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அணு குண்டால் மகிந்தவின் வேட்டிகூட எரியாது

  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறவன் கேனையன் என்றால் ... எருமைமாடு ஏரோப்பிளேன் ஓடினது என்று சொல்லுவங்கலாம். :)

அதுபோல இருக்கு இந்தக்கதையும். :icon_mrgreen:

[size=3]edit எழுத்து பிழை திருத்தப்பட்டு உள்ளது [/size]

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா ஏதாவது நடந்ததால் நல்லம்

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட கால தூரநோக்கோடு செயற்படுத்த படும் திட்டம் இது ஒரு வேளை எதிர்கால யுத்தத்தில் இலங்கையை ஒரு தளமாக சீனா பாவித்தால் அதற்க்கு எதிரான தாக்குதலுக்காக இருக்கலாம் அதில் சொல்லப்பட்ட இடங்கள் அநேகானவை சீனாவால் கட்டி கொடுக்கப்பட்டவை

இந்த ஒரு விஷயத்தில் கூட Arjun அண்ணாக்கு அரசியல் அறிவு இல்லை ஏன்டா எப்பிடி இவையள் தமிழருக்கு விடிவு வாங்கி கொடுக்க போயினம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் அக்னி ஏவுகணைகள் இலங்கையின் 7 முக்கிய நிலைகளை இலக்கு வைத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் க்ளேமன்ட் இன்சிடியூட் நிறுவனத்தின் மிசையில் திரேட் என்ற இணையத்தளம் வெளியிட்ட தகவல் குறித்து இலங்கை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஞாயிறு திவயின தெரிவித்துள்ளது.

இந்த தகவல் வெளியாகியதை அடுத்து, இந்தியாவின் றோ புலனாய்வு முகவர்கள் சிக்கியுள்ளனர். இந்த ரகசிய தகவல் வெளியானத்தை அடுத்து இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய போர் தளப்பாடம் மற்றும் வேறு உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைமையகத்தை கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.

சீனாவின் இந்த பாரிய நிறுவனம் கொள்வனவு செய்ய இணங்கியுள்ள கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் காணி தொடர்பாக, இந்திய அரசாங்கம், இந்தியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்தை அழைத்து தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக உயர் மட்டத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னியில் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற போரின் போது, குறித்த சீன நிறுவனமே இலங்கை இராணுவத்திற்கான ஆயுதங்களை வழங்கியிருந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான், இலங்கை, மியன்மார் ஊடான சீனாவின் விநியோக பாதையை சீர்குலைக்க இந்திய - அமெரிக்க ரகசிய திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி ரகசிய தகவலை வெளியிட்டிருந்த அமெரிக்க நிறுவனம் கூறியுள்ளது.

சீனா அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை அமைக்க உதவியதை அடுத்து, இந்திய அங்கு தூதரக பிரதிநிதியின் அலுவலகம் ஒன்றை திறந்தமை குறிப்பிடதக்கது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82046/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

Agni.jpg

[size=4]சிறிலங்காவின் கேந்திர நிலைகளை குறிவைத்து இந்தியா ‘அக்னி‘ ஏவுகணைகளை நிறுத்தியுள்ளதாக வெளியான செய்தி குறித்து இந்திய அரசாங்கம் மௌனம் காத்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

“போர் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்களால் இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் சுமுகமான உறவை விடவும் குறைவான உறவே நீடிக்கிறது என்பது இரகசியமான ஒன்றல்ல.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது இதில் முக்கியமானதொரு சம்பவமாகும்.

இந்தநிலையில் கடந்தவாரம் தமது நாட்டுக்கு வரவிருந்த சிறிலங்காவின் உயர்மட்டக் குழுவுக்கான பயண அழைப்பையும் திடீரென இந்தியா விலக்கிக் கொண்டது.

இரு அயல்நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் உள்ள சில இணையதளங்கள் சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இலக்கு வைத்து இந்தியா, அக்னி ஏவுகணைகளை நிறுத்தியுள்ளதாக செய்தி வெளியிட்டன.

இந்தச் செய்தி வெளியானதும், சிறிலங்காவுக்கு எந்த ஏவுகணை ஆபத்தும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு செய்தி வெளியிட்டது.

எனினும், இந்திய அரசாங்கம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்தச் செய்திக்கு இந்தியா விளக்கம் கொடுக்கவும் இல்லை. அதை மறுக்கவும் இல்லை.

இதுகுறித்து கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் தொடர்பு கொண்டு வினவியபோது, இணையதளங்களில் வெளியான இந்தச் செய்தி குறித்து தாம் கரிசனை கொள்ளவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

அத்துடன் சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இலக்கு வைக்க வேண்டிய தேவை இந்தியாவுக்கு இல்லை என்றும் இந்தியத் தூதரகம் தெரிவித்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.[/size]

[size=4]http://www.puthinapp...?20120828106881[/size]

[size=4]அத்துடன், இச்செய்தி வெளியானதும் இலங்கைக்கு ஏவுகணையால் எவ்வித ஆபத்தும் இல்லை என சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு அறிவித்த போதிலும், [/size][size=1][size=4]இது தொடர்பில் இந்திய அரசாங்கம் எவ்வித அறிவித்தலையோ அல்லது மறுப்பையோ இதுவரை வெளியிடவில்லை என இவ்வூடகம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது[/size]:[/size]
-பொங்குதமிழ்

இதன்படி இலங்கை வெளிவிவகார அமைச்சு "இந்திய ஏவுகணைகளால் இலங்கை பதிக்கப்படமாட்டாது" என்றுமட்டும் தான் சொல்கிறது ஆனால் மூலச்செய்தியை மறுக்கவில்லை. அதாவது, இதற்கு, "இந்திய ஏவுகணைகள் இலங்கையை நோக்கி நிறுத்தப்படிருந்தாலும் அதனால் இலங்கை பதிக்கப்படாது" என்பதும் சாத்தியமான ஒரு விளக்கம். அது சரியாகவும் இருந்தால் இலங்கை இந்த விசையத்தை ஏற்கனவே தெரிந்துதான் வைத்திருக்கிறது. அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாரிக்கப்பட்டுவிட்டன.

இதில் என்ன நாம் மறந்து போவதென்றால் இந்தியாவின் ராடர்கள் புலிகளின் ஆறுதலாக பறக்கும் விமானங்களையே கண்டு பிடிக்காதவை. ஆனால் சீனா இந்தியா மீது தொடர்ந்து வேவுபார்த்து வருகிறது. சீனா இந்தியாவின் எவுகணை நிலைகளை கண்டுபிடிக்க முயலாமல் இதுவரையும் பத்திரிகைகளில் வந்த இந்தியாவின் ஏவுகணை பரீட்சாத்தங்களை பத்திரிகையில் மட்டும் படித்துவிட்டு அவற்றை குப்பையில் போட்டுவிட்டு போவதாக எடுத்துகொள்ள முடியாது. சீனா சரியாக இந்தியாவின் அசைவுகளை தெரிந்து வைத்திருக்கின்றதென்றும், தனது நண்பன் இலங்கையையும் அதை பாவித்து பாதுகாக்கின்றதென்பதும்தான் இந்த இலங்கை வெளிவிவகார அமைச்சின் செய்தியாக எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் இலங்கை சில "இந்தியாவில் காணப்படும் கதிரியக்க நடவடிக்கைகளை அறிய கருவிகளையும்" வாங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதை அணுவுலைகளுக்கு மட்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனெனில் பருவப்பெயற்சி காற்று வீசும் நாடுகளான தென் ஆசியாவில் கதிரியக்கம் தனிய தெற்கேயுள்ள தமிழ்நாட்டை, இலங்கையை மட்டும்தான் தாக்கும் என்று மத்திய அரசு வளாவிருகிறது என்று கூற முடியாது. அணு உலை ஆபத்து வந்தால் காற்றின் பருவகாலத்தை பொறுத்து வட மானிலங்களையும் அது தாக்கும். எனவே இலங்கை அதைப்பற்றி அதிக அக்கறை காட்டுவது நடிப்பு அல்லது வேறு ஒருநோக்கம் என்பதுதான். உண்மையில் இந்த கதிரியக்க அவதானிப்பு இந்தியாவை இலங்கை வேவுபார்க்கும் போது அதை இந்தியா கண்டுபிடித்தால் அதற்கு முற்கூட்டியே சொல்லிவைத்திருக்கும் விளக்கம் மட்டும்தான்.

இந்தியாவின் அணுஆயுத நாடாகிய பின்னர் இந்தியாவுக்கு மற்றைய நாடுகளுக்கு பயம் இல்லை என்று அண்மையில் சிவசங்கர்மேனன் மார் தட்டியிருக்கிறார். இது கூட இந்த புதிய இலங்கையின் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு கேடயங்களை இந்தியா புலனாய்வில் கண்டுபிடித்திருப்பதால் 1998ம் ஆண்டு சாதனையை பற்றி சிவசங்கர் மேனன் இன்று பீத்த வெளிக்கிட்டிருக்கிறார் போல்த்தான் படுகிறது?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.