இன்றைய மாவீரர் நினைவுகள் ..
-
Tell a friend
-
Posts
-
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: VISHNU 14 DEC, 2024 | 01:20 AM அரச அதிகாரிகளின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் செயற்பட்டமையால் , அரச அதிகாரிகள் தமது கண்டனங்களை யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பதிவு செய்தனர். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது , அரச அதிகாரிகளால் திட்டங்கள் முன் மொழியப்பட்டு , அது தொடர்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதன் போது இடையில் குறுக்கிட்டு , கேள்விகளை கேட்டதுடன், அவர்களின் கல்வி தகமைகளையும் கேள்விக்கு உட்படுத்தினார். அதானல் சில அதிகாரிகள் அவரின் கேள்விகளை செவிமடுக்காது தமது விளக்கங்களை கூறி சென்றனர். அதேவேளை யாழ் . போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது , அரச அதிகாரிகளை கேலி செய்வது போன்றும் , அவர்களின் கல்வி தகைமைகளை கேள்விக்கு உட்படுத்துவதும் அவர்களை அவமதிக்கும் செயலாகும் அவர்கள் தொடர்ந்து மக்கள் சேவையில் இருக்கும் அதிகாரிகள். இவ்வாறு செய்யும் சிலரினால் அவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகுவதால் மக்கள் சேவைகள் பாதிக்கப்படும். அது மட்டுமின்றி கூட்டங்களில் அரச அதிகாரிகள் அவமதிக்கப்பட்டால் கூட்டங்களை விட்டு அதிகாரிகள் வெளியேறுவார்கள் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் போது , அவர்களை நாங்கள் வரவேற்க தயாராகவே இருக்கிறோம். ஆனால் நடைமுறைகளை குழப்பி , அத்துமீறி நுழைய முற்பட்டால் கடவுளாக இருந்தாலும் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201226 -
By ஏராளன் · பதியப்பட்டது
Published By: VISHNU 13 DEC, 2024 | 09:54 PM இலங்கை தனது சர்வதேச பத்திரங்களின் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முடித்துள்ளதாக நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிசெம்பர் 12 ஆம் திகதி முடிவடையவிருந்த இலங்கையின் சர்வதேச இறையாண்மை பத்திர பரிவர்த்தனையின் ஆரம்ப தரவுகளின்படி, சந்தை பங்கேற்பாளர்களின் மிக அதிக பெரும்பான்மையான பங்கேற்பு இருந்தது. இது மிகவும் சிக்கலான மற்றும் சவாலான இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு என்று அவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான நடவடிக்கைகள் 16ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதற்கான உடன்படிக்கைகள் 20ஆம் திகதிக்குள் நிறைவடையும். https://www.virakesari.lk/article/201223 -
By ஏராளன் · பதியப்பட்டது
14 DEC, 2024 | 09:28 AM (எம்.மனோசித்ரா) சபாநாயகர் அசோக சப்புமல் ரன்வல மாத்திரமின்றி பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி, நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக, மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடி, ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர உள்ளிட்டோரது கல்வி தகைமைகள் பட்டங்கள் உண்மையானவையாய என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாம் சி தொலவத்த தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், முந்தைய பாராளுமன்றத்தில் சாதாரண தரத்தில் கூட சித்தி பெறாதவர்கள் இருந்த போதிலும், அவர்கள் அதனை மறைக்கவில்லை. தமது கல்வி தகைமைகள் தொடர்பில் மக்களிடம் பொய் கூறவில்லை. பாராளுமன்றத்தின் இறையான்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் சபாநாயகர் இல்லாத கலாநிதி பட்டத்தை இருப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றியிருக்கின்றார். சபாநாயகர் மாத்திரமின்றி இவ்வாறு மக்களை மேலும் பலர் ஏமாற்றியிருக்கின்றனர். பிரதி சபாநாயகர் ரிஷ்வி சாலி தன்னை விசேட வைத்திய நிபுணர் எனக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால் அவர் சாதாரண வைத்தியரொருவர் மாத்திரமே. அதேபோன்று நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலகவுக்கும் கலாநிதி பட்டம் இல்லை எனக் கூறப்படுகிறது. மின்சக்தி அமைச்சர் புண்ணியஸ்ரீ குமார ஜயக்கொடிக்கும் உயர் கல்வி தகைமை பட்டம் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வாறு பொய் கூறிய ஒவ்வொருவரதும் பட்டங்கள் பாராளுமன்ற இணைய தளத்திலிருந்து நீக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஹர்ஷண சூரியப்பெரும, அனில் கயந்த, பிமல் ரத்நாயக்க மற்றும் எரங்க குணசேகர போன்றோரும் இந்த நிலைமையிலா இருக்கின்றனர் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ளது தனிப்பட்ட நபர்கள் குறித்த பிரச்சினையல்ல. ஆனால் இவர்கள் ஏன் மக்களுக்கு பொய் கூறினார்கள். அமைச்சரவை பேச்சாளரிடம் இது தொடர்பில் கூறிய போது நாம் இதனை பெரிதாக எண்ணவில்லை என்று கூறுகின்றார். மக்கள் நேரடியாக கேள்வியெழுப்பும் இவ்வாறான விடயங்களை அரசாங்கத்தால் உதாசீனப்படுத்த முடியாது. அரசியலில் கல்வி தகைமையை ஒரு பிரச்சினையாகக் காண்பித்த தேசிய மக்கள் சக்தி இதற்கு நிச்சயம் பதிலளித்தே ஆக வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/201179 -
By ஏராளன் · பதியப்பட்டது
13 DEC, 2024 | 09:11 PM பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இலங்கையில் முன்னெடுக்கும் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி, போஷாக்குத் திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு பகல் உணவு வழங்கும் வேலைத்திட்டம், விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் கால்நடை அபிவிருத்தி வேலைத்திட்டம் என்பவற்றை இலங்கைக்குள் முன்னெடுக்க நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கவும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது. தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவின் தலைமையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் முதன்மைத் தேவைகளை அறிந்துகொண்டு அதற்கு தேவையான உதவிகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெற்றுக்கொடுக்க பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றம் விருப்பம் தெரிவித்துள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ரொஷான் கமகே, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் மன்றத்தின் தென்கிழக்காசிய கொள்கைகள் மற்றும் அரசாங்க உறவுகளுக்கான வலயப் பிரதிநிதி கலாநிதி ஜமால் கான், (Dr Jamal Khan), டிஜிட்டல் பொதுமக்கள் உட்கட்டமைப்பு வசதிகள் பணிப்பாளர் சஞ்சய் ஜெயின் (Sanjay Jain) உள்ளிட்டவர்கள் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201222 -
By ஏராளன் · பதியப்பட்டது
இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து புகையிரத பொது முகாமையாளர் .S. S. முதலிகே விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். குறித்த அறிக்கை பின்வருமாறு... இந்தியாவிடமிருந்து நன்கொடையாக பெறப்பட்ட புகையிரத இன்ஜின்கள் குறித்து. குறித்த விடயம் தொடர்பாக. இந்திய அரசு நன்கொடையாக வழங்கிய புகையிரத இன்ஜின்கள் குறித்து பல்வேறு ஊடகங்களில் பல்வேறு தவறான கருத்துகள் வெளியாகி வருவதாகவும், இதனை சரி செய்ய போக்குவரத்து அமைச்சரின் அறிவுறுத்தலின்படி கீழ்கண்ட செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன். எனவே, இது குறித்து ஊடகங்கள் சரியான செய்தியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 1. இந்திய அரசின் நன்கொடையாக 22 புகையிரத இன்ஜின்களை இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டதையடுத்து, அறிக்கை சமர்ப்பிபதற்காக இலங்கை புகையிரத திணைக்களத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழு ஒன்று இந்தியா சென்று இது குறித்து ஆய்வு செய்துள்ளது, தற்போது அந்த இன்ஜின்கள் ஏற்கனவே 2012/13 இல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட M-10 வகை இன்ஜின்களை ஒத்த அல்லது அதற்கு பிந்தைய இன்ஜின்களாகும். அதிகளவான புகையிரத பெட்டிகளை கொண்டு நீண்ட தூரம் ஓட்டும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2. தற்போது, புகையிரத திணைக்களத்திடம் இதே வகையான புகையிரத என்ஜின்கள் ஒன்பது பயன்பாட்டில் உள்ளதுடன் இவற்றை இயக்க மற்றும் பராமரிக்க எமது ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். 3. அதிக பயணிகள் திறன் கொண்ட நீண்ட தூர ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களுக்கு இந்தப் புதிய புகையிரத என்ஜின்களைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நன்கொடையானது புகையிரத திணைக்களத்திற்கு பத்து கனரக மற்றும் நீண்ட தூர என்ஜின்கள் பற்றாக்குறையாக உள்ள நேரத்தில் மிகவும் பயனுள்ளதாகும், மேலும் இந்த என்ஜின்கள் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்படுகிறது. 4. அதற்கிணங்க, ஊடகங்கள் இதைப் பற்றி பரவிவரும் தவறான கருத்துகளை சரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். S. S. முதலிகே புகையிரத பொது முகாமையாளர் https://tamil.adaderana.lk/news.php?nid=197260
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts