Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனக்குப்பிடித்த கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள்.........!

Featured Replies

[size=5][size=4]
இனம் தின்னும் ராஜபக்சே.................
[/size][/size]

[size=4]சொந்த நாய்களுக்குச்

சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!

ஓர் இனமே

நிலமிழந்து நிற்கிறதே

நிலம் மீட்டுத் தாருங்கள்

பூனையொன்று காய்ச்சல் கண்டால்

மெர்சிடீஸ் கார் ஏற்றி

மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்

மரணத்தை தொட்டு

மனித குலம் நிற்கிறதே!

மனம் இரங்கி வாருங்கள்!

வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்

வாளை மீனைப்போல்

உமிழ்நீர் வற்றிய வாயில்

ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு

ரொட்டி ரொட்டியென்று

கைநீட்டிடும் சிறுவர்க்குக்

கைகொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்

துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்

சிங்கள வெறிக் கூத்துக்களை

நிரந்தரமாய் நிறுத்துங்கள்!

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்

காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு

கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்

கண்ணீரை மாற்றுங்கள்!

அடுக்கி வைத்த உடல்களில்

எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி

அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு

அழுது தொலைக்கும் பிள்ளைகளின்

அவலக்குரல் போக்குங்கள்!

எனக்குள்ள கவலையெல்லாம்

இனம் தின்னும்

ராஜபக்சே மீதல்ல..

ஈழப்போர் முடிவதற்குள்

தலைவர்கள் ஆகத்துடிக்கும்

தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல

எம்மைக் குறையாண்மை செய்துவைத்த

இறையாண்மைமீதுதான்!

குரங்குகள் கூடிக்

கட்டமுடிந்த பாலத்தை

மனிதர்கள் கூடிக்

கட்ட முடியாதா?போரின் முடிவென்பது

இனத்தின் முடிவல்ல

எந்த இரவுக்குள்ளும்

பகல் புதைக்கப்படுவதில்லை

எந்த தோல்விக்குள்ளும்

இனம் புதைக்கப்படுவதில்லை

அழிந்தது போலிருக்கும் அருகம்புல்

ஆனால்

கண்ணுக்குத் தெரியாத வேர்கள்[/size]

[size=4]அங்கே

சிந்திய துளிகள்

சிவப்பு விதைகள்

ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்

பீரங்கி ஓசையில்

தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்[/size]

[size=2] [/size]

[size=2]
- x- x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
[/size][size=2]
x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
[/size]

[size=4]

[/size]

[size=4]போரின் முடிவென்பது

இனத்தின் முடிவல்ல

எந்த இரவுக்குள்ளும்

பகல் புதைக்கப்படுவதில்லை

எந்த தோல்விக்குள்ளும்

இனம் புதைக்கப்படுவதில்லை

[/size]

[size=4]அருமையான வரிகள்.[/size]

[size=4]இணைப்பிற்கு நன்றிகள்.[/size]

[size=6]போரின் முடிவென்பது

இனத்தின் முடிவல்ல

எந்த இரவுக்குள்ளும்

பகல் புதைக்கப்படுவதில்லை

எந்த தோல்விக்குள்ளும்

இனம் புதைக்கப்படுவதில்லை[/size]

வாழ்த்துகள் தமிழினி அக்கா, நல்ல கவிதையுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். தொடருங்கள்.

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதைப் பகிர்விற்கு, நன்றி தமிழினி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர‌ம்பமே அச‌த்தலாய் உள்ளது தமிழினி ...தொட‌ர்ந்தும் கவிதைகளை[காதல் கவிதைகளையும் :lol: ] இணையுங்கோ

இணைப்பிற்கு நன்றிகள் தமிழினி . ஒரு குறை ஆக்கம் சுயமாக இருந்தால் இன்னும் சந்தோசமாக இருக்கும் . உங்களால் முடியும் . கவிதை சிறியதானாலும் உவப்புடன் ஏற்றுகொள்வேன் .

  • தொடங்கியவர்

கருத்துக்களை பகிர்ந்தவர்களுக்கும் விருப்புவாக்கை இட்டவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டு இதோ இன்னுமொரு கவிதை உங்களுக்காக............

அம்மா.............

ஆயிரம்தான் கவி சொன்னேன்

அழகழகாய்ப் பொய் சொன்னேன்

பெத்தவளே ஓம்பெருமை

ஒத்தைவரி சொல்லலையே!

எழுதவோ படிக்கவோ

ஏலாத தாய்பத்தி

எழுதியென்ன லாபமென்று

எழுதாமல் போனேனோ ?

பொன்னையாதேவன் பெற்ற

பொன்னே குலமகளே

என்னைப் புறந்தள்ள

இடுப்புவலி பொறுத்தவளே

வைரமுத்து பிறப்பான்னு

வயிற்றில்நீ சுமந்ததில்லை

வயிற்றில்நீ சுமந்தஒண்ணு

வைரமுத்து ஆயிடுச்சு

கண்ணுகாது மூக்கோட

கருப்பா ஒருபிண்டம்

இடப்பக்கம் கிடக்கையிலை

என்னன்னா நினைச்சுருப்ப ?

கத்தி எடுப்பவனோ ?

களவாடப் பிறந்தவனோ ?

தரணியாள வந்திருக்கும் ?

தாசில்தார் இவன்தானோ ?

இந்த விபரங்கள்

ஏதொண்ணும் தெரியாமை

நெஞ்சூட்டி வளத்த உன்னை

நினச்சா அழுகைவரும்

கதகதண்ணு கழிக்கிண்டி

கழிக்குள்ளே குழிவெட்டி

கருப்பட்டி நல்லெண்ணெய்

கலந்து தருவாயே

தொண்டையில அதுயிறங்கும்

சுகமான இளஞ்சூடு

மண்டையில இன்னும்

மசமசன்னு நிக்குதம்மா

கொத்தமல்லி வறுத்துவச்சிக்

குறுமொளகா ரெண்டுவச்சு

சீரகமும் சிருமிளகும்

சேர்த்துவச்சு நீர்தெளிச்சு

கும்மி அரச்சு நீ

குழகுழன்னு வழிக்கையில

அம்மி மணக்கும்

அடுதத்தெரு மணமணக்கும்

தித்திக்கச் சமைச்சாலும்

திட்டிகிட்டேச் சமைச்சாலும்

கத்திரிக்காய் நெய்வடியும்

கருவாடு தேனொழுகும்

கோழிக் கொழம்ம்புமேல

குட்டிக்குட்டியா மிதக்கும்

தேங்காய்ச் சில்லுக்கு

தேகமெல்லாம் எச்சிஊரும்

வருமையில நாமபட்ட

வலிதாங்க மாட்டாம

பேனா எடுத்தேன்

பிரபஞ்சம் பிச்செரிஞ்சேன் !

பாசமுள்ள வேளையில

காசுபணம் கூடலையே !

காசுவந்த வேளையிலே

பாசம்வந்து சேரலையே !

கல்யாணம் நான்செஞ்சு

கதியத்து நிக்கயிலே

பெத்தஅப்பன் சென்னைவந்து

சொத்தெழுதிப் போனபின்னே

அஞ்சாறு வருசம்உன்

ஆசைமுகம் பாக்காமப்

பிள்ளைமனம் பித்தாச்சே

பெத்தமனம் கல்லாச்சே

படிப்புப் படிச்சுக்கிட்டே

பணம் அனுப்பி வச்சமகன்

கைவிட மாட்டான்னு

கடைசியில நம்பலையே !

பாசம் கண்ணீரு

பழையக்கதை எல்லாமே

வெறிச்சோடி போன

வேதாந்த மாயிருச்சே !

வைகயில ஊர்முழுக

வல்லாரும் சேர்ந்தொழுக

கைப்பிடியாக் கூட்டிவந்து

கரைசேத்து விட்டவளே

எனக்கொன்னு ஆனதுன்னா

உனக்குவேற பிள்ளை உண்டு

உனக்கொண்ணு ஆனதுன்னா

எனக்குவேற தாயிருக்கா ?

  • கருத்துக்கள உறவுகள்

பித்துப்பிடித்து அலையவைக்கும் தமிழ் வைரமுத்துவினுடையது..அவரது கருவாச்சி காவியத்தைதான் நான் இப்பொழுது வாசித்துக்கொண்டிருக்கிறேன்...என்ன ஒரு அற்புதமான தமிழ் அவருடையது...அவர் அரசியல் சகதிக்குள் சிக்காமல் இருந்திருந்தால் இன்னும் இன்னும் எம் மனங்களில் உயர்ந்திருப்பார்..

நன்றி அக்கா பகிர்விற்க்கு..நல்ல தமிழ் ரசனை உள்ளவராக இருக்கவேண்டும் நீங்கள்..

  • தொடங்கியவர்

பித்துப்பிடித்து அலையவைக்கும் தமிழ் வைரமுத்துவினுடையது..அவரது கருவாச்சி காவியத்தைதான் நான் இப்பொழுது வாசித்துக்கொண்டிருக்கிறேன்...என்ன ஒரு அற்புதமான தமிழ் அவருடையது...அவர் அரசியல் சகதிக்குள் சிக்காமல் இருந்திருந்தால் இன்னும் இன்னும் எம் மனங்களில் உயர்ந்திருப்பார்..

நன்றி அக்கா பகிர்விற்க்கு..நல்ல தமிழ் ரசனை உள்ளவராக இருக்கவேண்டும் நீங்கள்..

கருத்துக்கு நன்றி சுபேஸ். வைரமுத்துவின் கவிதைகளை எத்தனை தரம் வாசித்தாலும் ஒவ்வொரு முறையும் புதிதாக படிப்பதுபோன்றே இருக்கும். எளிய நடையில் அனைவருக்கும் புரிவது போல் எழுதும் அவரது பாணியே தனி.

தமிழினிக்கு தமிழ் மிகவும் பிடிக்கும் :)

சுபேசின் கருத்துத்தான் எனதும். அற்புதமான தமிழ், இவரின் அரசியலை நினைத்தால் வெறுப்பு வருகிறது.

இன்றும் இவரின் 'வைகறைக்கால மேகங்கள்' போன்ற ஆரம்ப கால கவிதைத் தொகுப்புக்களை மீண்டும் வாசிக்க வேண்டும் போலிருக்கிறது.

என்மனதில் சிகரம் எட்டிய கவிஞன் எப்போதோ சிதைந்து போய்விட்டான் .

ஆனந்தவிகடனில் தொடராக வரும்போது அடித்து பிடித்து வாசித்தது கள்ளி காட்டு இதிகாசமும் ,கருவாச்சி காவியமும் .ஆனால் வைரமுத்துவின் "முன்றாம் உலக போரை" விலத்தியே ஆனந்த விகடனை வாசித்தேன் .

முள்ளிவாய்காலின் போது மூச்சு விடாத கவிதை இனி என்னத்தை கிழிக்க போகின்றது .

எதிரியையும் துரோகியையும் கூட மன்னிக்கலாம் ,ஆனால் அது பிழை என்று தெரிந்தும் அவனுக்கு ஒத்து ஊ துபவனை என்னால் மன்னிக்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் இனத்தின் கருப்பு ஆடுகளில் ஒன்று இந்த வைரமுத்து. எதனை திறமை இருந்தாலும் ரசிக்க மட்டும் முடியவில்லை, மதிக்க்கவும்தான் ............

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி தமிழினி

ஒரு பேனாவினால் உலக சரித்திரத்தையே மாற்றலாம்.

வைரமுத்து அவர்கள் உலகறிந்த கவிஞர்.

கலைஞர் என்னும் கறுப்புக் கண்ணாடிக்குப் பின் ஒளித்திருக்கும் வரை

அவரால் முடியாது

  • தொடங்கியவர்

[size=5]காதலித்துப் பார்[/size]

உன்னைச் சுற்றி

ஒளிவட்டம் தோன்றும்

உலகம் அர்த்தப்படும்

ராத்திரியின் நீளம் விளங்கும்

உனக்கும் கவிதை வரும்

கையெழுத்து அழகாகும்

தபால்காரன் தெய்வமாவான்

உன் பிம்பம் விழுந்தே

கண்ணாடி உடையும்

கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்

காதலித்துப் பார்

தலையணை நனைப்பாய்

மூன்றுமுறை பல்துலக்குவாய்

காத்திருந்தால்

நிமிஷங்கள் வருஷமென்பாய்

வந்துவிட்டால்

வருஷங்கள் நிமிஷமென்பாய்

காக்கைக்கூட உன்னை

கவனிக்காது

ஆனால் - இந்த உலகமே

உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்

வயிற்றுக்கும் தொண்டைக்குமாய்

உருவமில்லா உருண்டையொன்று

உருளக் காண்பாய்

இந்த வானம் இந்த அந்தி

இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம்

காதலை கௌரவிக்கும்

ஏற்பாடுகள் என்பாய்

காதலித்துப்பார்

இருதயம் அடிக்கடி

இடம்மாறித் துடிக்கும்

நிசப்த அலைவரிசைகளில்

உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்

உன் நரம்பே நாணேற்றி

உனக்குள்ளே அம்புவிடும்

காதலின் திரைச்சீலையைக்

காமம் கிழிக்கும்

ஹார்மோன்கள்

நைல்நதியாய்ப் பெருக்கெடுக்கும்

உதடுகள் மட்டும்

சகாராவாகும்

தாகங்கள் சமுத்திரமாகும்

பிறகு

கண்ணீர்த் துளிக்குள்

சமுத்திரம் அடங்கும்

காதலித்துப்பார்

பூக்களில் மோதி மோதியே

உடைந்து போக

உன்னால் முடியுமா?

அகிம்சையின் இம்சையை

அடைந்ததுண்டா

அழுகின்ற சுகம்

அறிந்ததுண்டா?

உன்னையே உனக்குள்ளே

புதைக்கத் தெரியுமா?

சபையில் தனிமையாகவும்

தனிமையை சபையாக்கவும்

உன்னால் ஒண்ணுமா?

அத்வைதம்

அடைய வேண்டுமா?

ஐந்தங்குல இடைவெளியில்

அமிர்தம் இருந்தும்

பட்டினி கிடந்து பழகியதுண்டா?

காதலித்துப்பார்

சின்னச்சின்னப் பரிசுகளில்

சிலிர்க்க முடியுமே

அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்

புதுப்பிக்க முடியுமே

அதற்காகவேனும்

ஆண் என்ற சொல்லுக்கும்

பெண் என்ற சொல்லுக்கும்

அகராதியில் ஏறாத

அர்த்தங்கள் விளங்குமே

அதற்காகவேனும்

வாழ்ந்துகொண்டே

சாகவும் முடியுமே

செத்துக்கொண்டே

வாழவும் முடியுமே

அதற்காகவேனும்

காதலித்துப்பார்

சம்பிரதாயம்

சட்டை பிடித்தாலும்

உறவுகள்

உயிர்பிழிந்தாலும்

விழித்துப் பார்க்கையில்

உன் தெருக்கள்

களவு போயிருந்தாலும்

ஒரே ஆணியில் இருவரும்

சிக்கனச் சிலுவையில்

அறையப்பட்டாலும்

நீ நேசிக்கும்

அவனோ அவளோ

உன்னை நேசிக்க மறந்தாலும்

காதலித்துப்பார்

சொர்க்கம் - நரகம்

இரண்டில் ஒன்று

இங்கேயே நிச்சயம்

காதலித்துப்பார் . . . .

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞருள் பிடித்த கவிஞன்

கண்ணதாசனுக்குப்பின்

கவர்ந்த கவிஞன்

நன்றி பதிவுக்கு

தொடருங்கள் தமிழ் இனி.

  • தொடங்கியவர்

கவிஞருள் பிடித்த கவிஞன்

கண்ணதாசனுக்குப்பின்

கவர்ந்த கவிஞன்

நன்றி பதிவுக்கு

தொடருங்கள் தமிழ் இனி.

நன்றி விசுகு அண்ணா உங்கள் கருத்திற்கு. உங்கள் பத்தாயிரமாவது பதிவு எனது திரியில் வந்தது மிக்க மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்

சொர்க்கம் - நரகம்

இரண்டில் ஒன்று

இங்கேயே நிச்சயம்

காதலித்துப்பார் . . . .

50 க்கு 50 என்று இதைத்தான் சொல்லுவார்கள்

  • தொடங்கியவர்

தோழிமார் கதை . . .

ஆத்தோரம் பூத்த மரம் ஆனைகட்டும் புங்கமரம்

புங்கமரத்தடியில் பூவிழுந்த மணல்வெளியில்

பேன்பார்த்த சிறுவயசு பெண்ணே நெனவிருக்கா?

சிறுக்கிமக பாவாடை சீக்கிரமா அவுறுதுன்னு

இறுக்கிமுடிபோட்டு எங்காத்தா கட்டிவிட

பட்டுச்சிறுகயிறு பட்டஇடம் புண்ணாக

இடுப்புத் தடத்தில் நீ எண்ணைவெச்சே நெனப்பிருக்கா?

கருவாட்டுப்பானையில சிலுவாட்டுக்காசெடுத்து

கோணார்கடைதேடிக் குச்சிஐசு ஒன்னுவாங்கி

நாந்திங்க நீகொடுக்க நீதிங்க நாங்கொடுக்க

கலங்கிய ஐஸ்குச்சி கலர்கலராக் கண்ணீர்விட

பல்லால்கடிச்சுப் பங்குபோட்ட வேளையில

வீதிமண்ணில் ரெண்டுதுண்டு விழுந்திருச்சே நெனப்பிருக்கா?

கண்ணாமூச்சி ஆடையில கால்க்கொலுச நீதொலைக்க

சூடுவைப்பா கெழவின்னு சொல்லிசொல்லி நீஅழுக

எங்காலுக் கொலுசெடுத்து உனக்குப் போட்டனுப்பிவிட்டு

என்வீட்டில் நொக்குப்பெத்தேன் ஏண்டீ நெனப்பிருக்கா?

வெள்ளாறு சலசலக்க வெயில்போல நிலவடிக்க

பல்லாங்குழிஆடையில பருவம்திறந்துவிட

என்னமோஏதோன்னு பதறிப்போய் நானழுக

விறுவிறுன்னு கொண்டாந்து வீடுசேர்த்தே நெனப்பிருக்கா?

ஒன்னாவளந்தோம் ஒருதட்டில் சோறுதின்னோம்

பிரியாதிருக்க ஒரு பெரியவழி யோசிச்சோம்

ஒருபுருஷன்கட்டி ஒருவீட்டில்குடியிருந்து

சக்களத்தியா வாழச் சம்மதிச்சோம் நெனப்பிருக்கா?

ஆடு கனவுகண்டா அருவா அறியாது

புழுவெல்லாம் கனவுகண்டா கொழுவுக்குப் புரியாது

எப்படியோ பிரிவானோம் இடிவிழுந்த ஓடானோம்

வறட்டூருதாண்டி வாக்கப்பட்டு நாம்போக

தண்ணியில்லாக்காட்டுக்குத் தாலிகட்டி நீபோக

எம்புள்ள எம்புருசன் எம்பொழப்பு என்னோட

உம்புள்ள உம்புருசன் உம்பொழப்பு உன்னோட

நாளும்கடந்திருச்சு நரைகூடவிழுந்திருச்சு

வயித்துல வளந்தகொடி வயசுக்கு வந்திருச்சு

ஆத்தோரம் பூத்தமரம் ஆனைகட்டும் புங்கமரம்

போனவருசத்துப் புயல்காத்தில் சாஞ்சிருச்சு!!

  • 1 month later...
  • தொடங்கியவர்

[size=4]சிரிப்பு [/size]

[size=4]வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது

சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்

அது திறந்து கொள்கிறது

வாழ்வின்மீது இயற்கை தெளித்த

வாசனைத் தைலம் சிரிப்பு

எந்த உதடும் பேசத் தெரிந்த

சர்வதேச மொழி சிரிப்பு

உதடுகளின் தொழில்கள் ஆறு

சிரித்தல் முத்தமிடல்

உண்ணால் உறிஞ்சல்

உச்சரித்தல் இசைத்தல்

சிரிக்காத உதட்டுக்குப்

பிற்சொன்ன ஐந்தும்

இருந்தென்ன? தொலைந்தென்ன?

தருவோன் பெறுவோன்

இருவர்க்கும் இழப்பில்லாத

அதிசய தானம்தானே சிரிப்பு

சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே

துன்பம் வெளியேறிவிடுகிறது

ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்

இருதயம்

ஒட்டடையடிக்கப்படுகிறது

சிரித்துச் சிந்தும் கண்ணீரில்

உப்புச் சுவை தெரிவதில்லை

முள்ளும் இதுவே

ரோஜாவும் இதுவே

சிரிப்பு

இடம்மாறிய முரண்பாடுகளே

இதிகாசங்கள்

ஒருத்தி

சிரிக்கக்கூடாத இடத்தில்

சிரித்துத் தொலைத்தாள்

அதுதான் பாரதம்

ஒருத்தி

சிரிக்க வேண்டிய இடத்தில்

சிரிப்பைத் தொலைத்தாள்

அதுதான் ராமாயணம்

எந்தச் சிரிப்பும்

மோசமாதில்லை

பாம்பின் படம்கூட

அழகுதானே?

சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்

மரணம் உட்கார்வதேயில்லை

பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்

மரணம்

ஒவ்வொரு சாயங்காலமும்

படுக்கைதட்டிப் போடுகிறது

ஒரு

பள்ளத்தாக்கு முழுக்கப்

பூப் பூக்கட்டுமே

ஒரு

குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?

காதலின் முன்னுரை

கடனுக்கு மூலதனம்

உதடுகளின் சந்திரோதயம்

விலங்கைக் கழித்த மனிதமிச்சம்

சிரிப்பை இவ்வாறெல்லாம்

சிலாகித்தாலும்

மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்

உண்டா இல்லையா?

சிரியுங்கள் மனிதர்களே!

பூக்களால் சிரிக்கத் தெரியாத

செடிகொடிகளுக்கு

வண்டுகளின் வாடிக்கை இல்லை

சிரிக்கத் தெரியாதோர் கண்டு

சிரிக்கத் தோன்றுமெனக்கு

இவர்கள் பிறக்க

இந்திரியம் விழவேண்டியவிடத்தில்

கண்ணீர் விழுந்துற்றதோவென்று

கவலையேறுவேன்

சற்றே உற்றுக் கவனியுங்கள்

சிரிப்பில் எத்தனை ஜாதி?

கீறல்விழுந்த இசைத்தட்டாய்

ஒரே இடத்தில் சுற்றும்

உற்சாகக் சிரிப்பு

தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்

விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு

தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்

சென்றடித் தேய்ந்தழியும் சிரிப்பு

கண்ணுக்குத் தெரியாத

சுவர்க்கோழி போல

உதடு பிரியாமல்

ஓசையிடும் சிரிப்பு

சிரிப்பை இப்படி

சப்த அடிப்படையில்

ஐ�தி பிரிக்கலாம்

சில

உயர்ந்த பெண்களின் சிரிப்பில்

ஓசையே எழுவதில்லை

நிலவின் கிரணம்

நிலத்தில் விழுந்தால்

சத்தமேது சத்தம்?

சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு

ஜீவ அடையாளம் சிரிப்பு

ஒவ்வொரு சிரிப்பிலும்

ஒருசில மில்லிமீட்டர்

உயிர்நீளக் கூடும்

மரணத்தைத் தள்ளிப்போடும்

மார்க்கம்தான் சிரிப்பு

எங்கே!

இரண்டுபேர் சந்தித்தால்

தயவுசெய்து மரணத்தைத்

தள்ளிப் போடுங்களேன்![/size]

[size=5][size=4]
இனம் தின்னும் ராஜபக்சே.................
[/size][/size]

[size=4]சொந்த நாய்களுக்குச்

சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!

ஓர் இனமே

நிலமிழந்து நிற்கிறதே

நிலம் மீட்டுத் தாருங்கள்

பூனையொன்று காய்ச்சல் கண்டால்

மெர்சிடீஸ் கார் ஏற்றி

மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்

மரணத்தை தொட்டு

மனித குலம் நிற்கிறதே!

மனம் இரங்கி வாருங்கள்!

வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்

வாளை மீனைப்போல்

உமிழ்நீர் வற்றிய வாயில்

ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு

ரொட்டி ரொட்டியென்று

கைநீட்டிடும் சிறுவர்க்குக்

கைகொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்

துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்

சிங்கள வெறிக் கூத்துக்களை

நிரந்தரமாய் நிறுத்துங்கள்!

வாய்வழி புகட்டிய தாய்ப்பால்

காதுவழி ரத்தமாய் வடிவது கண்டு

கண்வழி உகுக்கக் கண்ணீரின்றிக்

கண்ணீரை மாற்றுங்கள்!

அடுக்கி வைத்த உடல்களில்

எந்த உடல் தகப்பன் உடல் என்று தேடி

அடையாளம் தெரியாத ஒரு பிணத்துக்கு

அழுது தொலைக்கும் பிள்ளைகளின்

அவலக்குரல் போக்குங்கள்!

எனக்குள்ள கவலையெல்லாம்

இனம் தின்னும்

ராஜபக்சே மீதல்ல..

ஈழப்போர் முடிவதற்குள்

தலைவர்கள் ஆகத்துடிக்கும்

தலையில்லாப் பேர்வழிகள் மீதல்ல

எம்மைக் குறையாண்மை செய்துவைத்த

இறையாண்மைமீதுதான்!

குரங்குகள் கூடிக்

கட்டமுடிந்த பாலத்தை

மனிதர்கள் கூடிக்

கட்ட முடியாதா?போரின் முடிவென்பது

இனத்தின் முடிவல்ல

எந்த இரவுக்குள்ளும்

பகல் புதைக்கப்படுவதில்லை

எந்த தோல்விக்குள்ளும்

இனம் புதைக்கப்படுவதில்லை

அழிந்தது போலிருக்கும் அருகம்புல்

ஆனால்

கண்ணுக்குத் தெரியாத வேர்கள்[/size]

[size=4]அங்கே

சிந்திய துளிகள்

சிவப்பு விதைகள்

ஒவ்வொரு விதையும் ஈழமாய் முளைக்கும்

பீரங்கி ஓசையில்

தொலைந்து போன தூக்கணாங்குருவிகள்[/size]

[size=2] [/size]

[size=2]
- x- x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
[/size][size=2]
x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-
[/size]

எந்த தோல்விக்குள்ளும்

இனம் புதைக்கப்படுவதில்லை

அழிந்தது போலிருக்கும் அருகம்புல்

ஆனால்

கண்ணுக்குத் தெரியாத வேர்கள்

அங்கே

பிடித்தவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.