Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மொனோப்பொலி விளையாட்டு

Featured Replies

யாழில் வந்த கொடி பற்றிய கவிதையும் அதற்கு வந்த பின்னோடங்களுமே இதை என்னை எழுத தூண்டியது .

பண்ணிதர் இருந்த காலத்திலேயே நல்லூரடியில் தமிழிழ மிருகசாலை என்று ஒரு முதலையை கட்டி வைத்திருக்கின்றார்கள் என்று சொல்லி யாரோ சொன்னார்கள் .

பின் போராட்டம் வலுவடைத்து தமிழிழ பரப்பளவில் முக்கால்வாசியை புலிகள் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்த நேரம் வீதிகள் ,பூங்காக்கள் போன்றன மாவீரர்கள் பெயர்கள் சூட்டப்பட்டன .

அத்துடன் தேசிய கொடி ,பூ ,விலங்கு,பறவை என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு பின் வன்னி மட்டும் கட்டுப்பாட்டிற்குள் இருந்த காலத்தில் ஒரு நிழல் அரசே அங்கு இருந்ததும் உண்மை .

ஆனால் இவையெல்லாம் பலராலும் ஒரு மொனோபொலி விளையாட்டில் கிடைக்கும் ஒரு விளையாட்டு பொருட்கள் போலவே பார்க்கப்பட்டது .தமிழிழம் கிடைக்க போகுது அதற்கான முதற்படியாக புலிகளின் ஒரு குறிப்பிட்ட விசுவாசிகளே பார்த்தார்கள் ஒழிய பெரும்பான்மை தமிழர்களோ அல்லது சர்வதேசமோ இதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை .

இதற்கு முக்கிய காரணம் புலிகளின் நிழல்அரசு முழுமையாக முக்கிய பல விடயங்களில் இலங்கை அரசிலேயே தங்கியிருந்தது .அதைவிட தமிழிழத்தை வெளிப்படையாக எந்த ஒரு நாடும் அங்கீகரிக்கவில்லை .

நான் ரணிலின் சமாதன உடன்படிக்கை காலத்தில் நாட்டிற்கு சென்றிருந்தேன் .யாழ்ப்பாணம் பஸ்ஸில் போய் பஸ்சிலேயே திரும்பி வந்தேன் .அப்போது புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தை கடக்கும் போது இது எங்கள் நாடு ,எமது நிர்வாகம் நடக்கின்றது என்ற உணர்வே வராமல் எதோ இன்றோ நாளையோ மூடப்படப்போகும் தற்காலிக அமைப்பாகவே தோற்றமழித்தது.

உந்த அனைத்து அடையாளங்களும் புலிகளினால் உருவாக்கப்பட்டது.தமிழர்களுக்கு என்று ஒரு நீண்ட வரலாறும் அதற்கான அனைத்து அடையாளங்களும் இருக்கு .இடையில் ஒரு இருபது வருடங்கள் அதுவும் வன்னியில் மட்டும் முழுமையாக ஆட்சி நடாத்திய புலிகளால் கொண்டுவரப்பட்ட உந்த அடையாளங்கள் எல்லாம் புலிகளுக்குரியவை மட்டுமே .

இதில் குளறுபடிப்பட்டு எம்மில் சிலர் இப்போதும் கிட்டு பூங்கா என்கின்றார்கள் ,அது ஓல்ட் பாக் தானே ஒழிய கிட்டு பூங்கா அல்ல .

கனடாவிலும் பல கனேடிய பாடசாலை மண்டபங்களை மாவீரர்கள் பெயரில் அழைத்துத்தான் விழா செய்கின்றார்கள் (சாந்தியக்கா புத்தக வெளியீடு செய்த இடமும் அப்படிதான் ).எமக்காக நாம் ஒரு பெயரை இடலாம் அதில் ஒரு தப்புமில்லை ,ஆனால் அதை கனேடிய அரசிடமே போய் பள்ளி கூடத்தின் பெயரை மாற்று என்ற அளவுக்கு போகமுடியாது .

அப்படித்தான் தமிழித்தில் இருக்கும் அனைத்து இடங்களும் அடையாளங்களும், ஆட்சியில் இருப்பவர்கள் தமக்கு விருப்பமான பெயர்களை அவரவர் விருப்பத்திற்கு மாறி மாறி வைத்துக்கொண்டிருக்க முடியாது . கொடி உட்பட .

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கான எதிர்காலம்: "வரலாறு என்றுமே நேர் கோட்டில் பயணிப்பதில்லை"

மே18ஆம் திகதிக்குப் பின்னர் தமிழ் தேசியப் போராட்டத்தில் உண்டாகியுள்ள தலைமைத்துவ வெற்றிடம், தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளதோடு, தமிழர் உரிமைப் போராட்டத்துக்கு எதிரான அவர்களது செயற்பாடுகளும் வலுவாக அதிகரித்து வருகிறது.

அதே வேளை, இந்த தலைமைத்துவ வெற்றிடம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்ப நிலையையும், விரக்தி மனோ நிலையையும் உருவாக்கி வருகிறது. இது சலிப்பான கருத்துக்களுக்கு வழியேற்படுத்துகிறது.

சலிப்பான மனோ நிலை போரட்டம் ஒன்றிற்கு தேவையான உளவுரணை தகர்ப்பதற்கு வழியேற்படுத்துகிறது.

ஆக்கபூர்வமான சிந்தனை ஓட்டத்திற்கு உரிய இடம் வழங்கப்படாமை இன்றைய தருணத்தில் தமிழ் மக்களை நோக்கிச் சூழ்ந்துள்ள இன்னொரு பின்னடைவு.

* பிரபாகரன் என்ற 'வரலாற்றின் பிரசவத்தால்' செய்ய முடியாததை, தமிழர்களின் சக்தியாக இருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் செய்ய முடியாததை இனி யாரால் தான் செய்ய முடியும் என்ற கேள்வியைப் பரவலாகக் கேட்க முடிகிறது.

இந்தக் கேள்வி நியாயமானதும், அதிக பெறுமதியுடையதும் தான்.

* ஆனால், தமிழர்களுடைய இராணுவ பலம் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற காரணத்திற்காக, எமது விடுதலைப் பயணத்தை இடை நடுவில் விட்டுவிடமுடியாது.

முள்ளிவாய்க்கால் முடிவல்ல; அது இன்னொரு ஆரம்பத்தின் தொடக்கம். அதனைத் தான், விடுதலைப் புலிகளின் இறுதிக் கட்டச் செயற்பாடுகளும் எடுத்தியம்புகின்றன.

சுமார் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னர், ஆயுதங்களைத் தமிழ் தேசியப் போராட்டத்தின் கவசங்கள் ஆக்கிய விடுதலைப் புலிகள், 2009 மே மாத நடுப்பகுதியில் அதனை மௌனமாக்குகின்றோம் என்று அறிவித்தனர்.

* தமிழர் உரிமைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தைக் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுப்பதற்கான அடித் தளத்தை விடுதலைப் புலிகள் முள்ளி வாய்க்காலில் உருவாக்கி விட்டிருந்தார்கள். அதற்கு முன்னோடியாக, தமிழ் தேசியப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை எதிர்கால தமிழ் சந்ததியிடம் கையளிப்பதாக 2008 மாவீரர் நாள் உரையில், திரு. பிரபாகரன் அவர்களே குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் உரிமைப் போரட்டத்தை விசுவாசிக்கின்ற, மாவீரர்களை மதிக்கின்ற மற்றும் இயக்கத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவருக்கும் இன்றிருக்கின்ற வரலாற்றுப் பொறுப்பு, தமிழ்த் தேசியப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதாகும்.

* எங்களுக்காக நாம் தான் போராட வேண்டும். எமது பலம் தான் எமது வாழ்வை நிர்ணயிக்கும். யாரும் எமக்கான விடுதலையை பெற்றுத் தந்துவிடுவார்கள் என்றெண்ணி மீண்டும் ஒரு தடவை நாம் ஏமாந்து விடக்கூடாது.

* தாயகத்தில், எமக்கு சாதகமான நிலை இன்று இல்லாவிட்டாலும், என்றோ ஒரு நாள் அது எமக்கு மீணடும் கைகூடும் என்பதை மனதிற்கொள்க.

எங்கள் தேசியத்தின் ஆத்மா

ஆனால், நாம் எடுக்கின்ற முயற்சியில் தான் அந்தக் காலக் கனிவு உண்டாகும் என்பதையும் கவனத்திற் கொள்க. ஒரு விடுதலைப் போராட்டம் தனித்து ஆயுத பலத்தில் மட்டும் தங்கியிருக்க முடியாது.

ஒரு அடக்கப்பட்ட இனம் அதன் பலத்தை வெவ்வேறு பரிமாணங்களில் வெளிக்காட்ட முடியும். ஒரு கதவு மூடப்படும் போது இன்னொரு கதவு தன்னியல்பாகத் திறக்கப்படுவதே தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்கான பண்பு.

* தேக்கமடைந்துள்ள போராட்டச் சக்கரத்தை நகர்த்துவதற்காகப் போட்டிகள், தேவையற்ற விமர்சனங்கள், சுய நலத்தைக் கைவிட்டு விட்டு தேசியம் மீதான பற்றுறுதியோடு நீண்டகால அடிப்படையில் செயற்படுவதற்கு ஒற்றுமைப்படுவோம், உறுதி பூணுவோம்.

ஆகவே, இன்று எமது உளவுரணை வலுப்படுத்தக் கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். போரால் நாம் ஒரு வரலாற்றுப் பேரழிவைச் சந்தித்து நிற்கிறோம் என்பது உண்மை. ஆனால், அதே வேளை, வரலாறு எமக்கு சில சந்தர்ப்பங்களையும் தந்துள்ளது. இதனை நாம் சரிவரப் பயன்படுத்த வேண்டும்.

* கிடைக்கும் சந்தர்ப்பங்களின் கடினமான பகுதிகளையே நம்பிக்கையற்றவன் பார்ப்பான். ஆனால், நம்பிக்கையானவனோ, கடினமான பகுதிகளில் கூட சந்தர்ப்பங்களை காணுவான் என்ற சாரப்பட்ட கருத்தை பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் [Winston Churchill] தெரிவித்திருந்தார்.

எமது அடுத்த கட்டப் போராட்டத்தின் நுழைவாயிலாக பின்வரும் விடயங்களை கருத்தில் கொள்ளலாம்.

1. தமிழ் தேசிய அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு இடையில் மறுசீரமைப்பினை மேற்கொள்ளல்.

2. . தமிழ் தேசிய ஊடகங்களுக்கிடையில் பொது கொள்கை உருவாக்கம் ஒன்றினை ஏற்படுத்துதல்.

3. . சிறிலங்கா அரசாங்கம் மீதான அழுத்தங்களை உருவாக்குதல் - அதிகரித்தல்

4. . சிறிலங்கா அரசாங்கத்தின் மனித குலத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Humanity] மற்றும் சமாதனத்திற்கு எதிரான குற்றம் [Crimes Against Peace] போன்ற செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டு அவர்களை சர்வதேச ரீதியான குற்றவாளிக் கூண்டிற்குள் கொண்டுவந்து நீதியின் முன்னால் நிறுத்துதல்.

5. . சிங்கள பேரினவாதிகளுக்கிடையே (சரத் - மகிந்த சகோதரர்கள்) ஏற்பட்டுள்ள பிளவை தமிழ் தேசியப் போராட்டத்திற்கு ஆதரவான வகையில் கையாளுதல்.

6. . ஒற்றைப் பரிமாணத்திலிருந்து விடுபடும் உலக ஒழுங்கை எமக்கு சாதகமாக பயன்படுத்துதல். உதாரணமாக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பனிப் போரின் ஒரு கட்டமாக, தாய்வானுக்கான அமெரிக்காவின் ஆயுத விற்பனை விவகாரமும், தலாய்லாமாவிற்கும் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிற்குமிடையில் வெள்மை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பையும் குறிப்பிடலாம். அதே வேளை, சீனாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையில் பிணைப்பு இறுகி வருகிறது. இது, அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் விரும்பத்தகாத ஒன்று.

7. தாயகத்தில் சிதவடைந்து போயுள்ள எமது மக்களின் வழ்வாதாரத்தையும், சமூக கட்டுமானங்களையும் வலுப்படுத்தல்.

8. புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களை வலுப்படுத்துதல்

9. ஏனைய வெளிநாட்டு சமூக இயக்கங்கள், சிவில் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள், ஊடகவியலாளர்கள், ஒருமைப்பாட்டு இயக்கங்களோடு வலையமைப்பை உருவாக்கி ஆரோக்கியமான உறவைப் பேணுதல்.

10. தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்துக்குச் சாதமான முறையில் அமையக் கூடிய கற்கை நெறிகள், ஆய்வு மன்றங்களை உருவாக்குதல்

மேற் போன்ற, காலத்துக்கு தேவையான, எத்தனையோ பணிகள் எம் முன்னே விரிந்து கிடக்கிறன. இன்று, தமிழர் உரிமையை வென்றெடுக்க விரும்புவோர் சிந்திக்க வேண்டியதும், செயற்பட வேண்டியதும் இவ்வாறான பணிகளே.

வரலாறு என்பது என்றுமே ஒரே கோட்டில் பயணிப்பதில்லை.

புதினப்பலகை-க்காக சுந்தரம் இராஜவரோதயன்

[size=4]இதே சர்வதேசமே சிங்களத்துடன் இணைந்து புலிகளை அழித்தல் என்ற பெயரில் மக்களை அழித்ததை நீங்கள் மறைப்பது தான் உண்மையான மோனோபோலி![/size]

[size=4]உங்கள் கருத்துக்கள் பொதுவாக ஒரு மாற்றுக்கருத்தாளன் என்ற பெயரில் முன்வைக்கப்பட்டாலும் அதில் எப்பொழுதுமே பல ஓட்டைகள் இருக்கும், உண்மைகள் முழுதாக இருக்காது, ஒரு வாலில் மட்டுமே [/size][size=4]தாங்கிய [/size] கருத்துக்களாக இருக்கும்.

[size=1][size=4]உதாரணத்திற்கு நீங்களே உங்களை முட்டி மோதுகின்றார்கள் இந்த இரண்டு பந்திகளிலும்: [/size][/size]

[size=1][size=4]

ஆனால் இவையெல்லாம் பலராலும் ஒரு மொனோபொலி விளையாட்டில் கிடைக்கும் ஒரு விளையாட்டு பொருட்கள் போலவே பார்க்கப்பட்டது .தமிழிழம் கிடைக்க போகுது அதற்கான முதற்படியாக புலிகளின் ஒரு குறிப்பிட்ட விசுவாசிகளே பார்த்தார்கள் ஒழிய பெரும்பான்மை தமிழர்களோ அல்லது சர்வதேசமோ இதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை .
[/size][/size]

[size=1][size=4]

இதற்கு முக்கிய காரணம் புலிகளின் நிழல்அரசு முழுமையாக முக்கிய பல விடயங்களில் இலங்கை அரசிலேயே தங்கியிருந்தது .அதைவிட தமிழிழத்தை வெளிப்படையாக எந்த ஒரு நாடும் அங்கீகரிக்கவில்லை .
[/size][/size]

[size=1][size=4]- [/size][size=4]ஒரு நாடாவது அங்கீகரித்து இருந்தால் அது நிழல் அரசு என்ற நிலையை தாண்டி இருக்கும். [/size][/size]

[size=4]- 'பெரும்பான்மை தமிழர்கள்' இன்றும் அங்கீகரித்து தான் உள்ளார்கள். முடிந்தால் ஐ.நா. சாசனப்படி உலகில் எந்த இனத்திற்கும் உள்ள சுயநிர்ணய உரிமைக்காக [/size][size=4]வா[/size]க்கெடுத்துப்பார்க்க முடியுமா?

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிட்டு பூங்கா என்கின்றார்கள் ,அது ஓல்ட் பாக் தானே //

கிட்டு பூங்கா அமைக்கப்பட்ட இடத்திலேயா முன்னர் ஓல்ட் பார்க் இருந்தது.. ?

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டு பூங்கா, முத்திரைச் சந்தியடியில் இருக்கிறது என எண்ணுகின்றேன்!

ஓல்ட் பார்க், என்பது கச்சேரியடியில் உள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

தனிநாட்டை பிரகடனப்படுத்துவதற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கு சுயபொருளாதாரம், கட்டுமானம், அரச இயந்திரம் முழுமை பெற்றிருக்கவேண்டிய அவசியமில்லை. அண்மையில் சுதந்திரம் பெற்ற நாடுகளான தெற்கு சூடான், கிழக்கு தீமோர் போன்றவையும், ஐரோப்பிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பொஸ்னியாவும், ஐ.நா.வால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பலஸ்தீனமும் முறையே சூடான், இந்தோனேசியா, சேர்பியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் அதிகம் தங்கித்த்தான் இருந்தன/இருக்கின்றன.

தமிழீழம் என்ற நாடு உருவாகக் கூடிய சூழலை புலிகள் படிப்படியாக அமைத்து முன்நகர்த்தி வந்தார்கள் என்பதையும், புலிகளின் அரசியல் கொள்கைகளோடு உடன்படாத ஆனால் தமிழீழத்தை விரும்பிய புலம்பெயர் மாற்று இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சிலர்கூட அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கெடுத்திருந்தார்கள் என்பதையும் இலகுவில் நிராகரித்து வெறும் "மொனோப்பொலி" விளையாட்டு என்று சொல்லமுடியாது.

தமிழர்கள் தனிநாட்டை அடையக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது. அதனை விரும்பாத இந்தியாவும் சர்வதேச நாடுகளும் அமைதிமுயற்சி என்ற சூழ்ச்சியை நோர்வே ஊடாக அறிமுகப்படுத்தி புலிகளைத் தந்திரமாக அழித்தார்கள் என்றுதான் நினைக்கின்றேன்.

புலிகளுக்கு பேச்சுவார்த்தை ஒரு சூழ்ச்சியாகத் தெரிந்திருந்தும், அதனை விஞ்சக்கூடிய திட்டங்கள் சிலவற்றுடன்தான் அமைதிமுயற்சியில் இறங்கியிருப்பார்கள். எனினும் திட்டங்கள் தோல்வியில்போய் இறுதியில் புலிகளின் அழிவோடு தமிழர்களின் அடிமை வாழ்வு தொடர்கின்றது.

அடிமைகள் எப்போதும் விடுதலைக்காகப் போராடிக்கொண்டே இருப்பார்கள்!

  • தொடங்கியவர்

தனிநாட்டை பிரகடனப்படுத்துவதற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுவதற்கு சுயபொருளாதாரம், கட்டுமானம், அரச இயந்திரம் முழுமை பெற்றிருக்கவேண்டிய அவசியமில்லை. அண்மையில் சுதந்திரம் பெற்ற நாடுகளான தெற்கு சூடான், கிழக்கு தீமோர் போன்றவையும், ஐரோப்பிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட பொஸ்னியாவும், ஐ.நா.வால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பலஸ்தீனமும் முறையே சூடான், இந்தோனேசியா, சேர்பியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் அதிகம் தங்கித்த்தான் இருந்தன/இருக்கின்றன.---கிருபன் .

நிழல் அரசாங்கம் வைத்திருந்தார்களே ஒழிய சர்வதேச அங்கீகாரம் பெறும் நிலைக்கு அவர்கள் கிட்டவும் வரவில்லை .பாலஸ்தீனம் தனிநாடாக இல்லாவிடாலும் பல நாடுகள் அவர்களை அங்கீகரித்துள்ளன ,இந்தியாவில் அவர்களுக்கு தூதரகமே இருக்கு .

விடுதலைப்புலிகள் அங்கீரத்தை பெறாவிட்டாலும் அவர்களை பயங்கர வாத பட்டியலில் இடும் நாடுகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போனதே தவிர அங்கீகாரம் என்ற ஒன்றை அவர்கள் அண்டவே இல்லை .

மாற்றுகருத்தாளர்களும் அவர்களின் அரசியல் செயற்பாட்டில் உதவிசெய்தார்கள் என்பது முற்றிலும் உண்மை ,அவர்கள் தான் எமது விமர்சனத்திற்கு உட்பட வேண்டியவர்கள் (தராக்கி ,ஜெயபாலன் ,சேரன் ) இவர்கள் எல்லோரும் தமது அங்கீகாரத்திற்கு எங்கும் போக கூடியவர்கள்.இவர்களால் புலிகளை ஒரு வீதம் கூட மாற்றமுடியவில்லை ,இவர்களால் ஒத்துஊதத்தான் முடிந்தது .

புலிகள் பற்றி சர்வதேசம் மிக தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதை அவர்களுக்கு மிக தெளிவாக சொல்லியும் இருந்தது ,அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை .மகிந்தாவை கொண்டுவந்தது யுத்தம் புரியத்தான் .யுத்தம் மூலம் நாடு பிடிக்கலாம் என்பதே அவர்கள் எண்ணம் .

பாலசிங்கமே கடைசிகாலத்தில் ஒதுக்கபட்டுத்தான் இருந்தார் .

விளையாட்டு பிள்ளை மணல் வீடு போல் எவ்வளவு உயிர்பலி ,உடல் உழைப்பு ,அனைத்து கட்டுமானங்கள் எல்லாம் ஆகிவிட்டது .அதைதான் நான் மோனோபோலி என்றேன் .

தமிழ் அடிமைகள் இனி சுதந்திரம் கிடைக்கும் மட்டும் போராடிக்கொண்டே இருப்பார்கள் சற்று இராஜதந்திரமாக .

Edited by arjun

[size=4]அர்யுன் அண்ணா, [/size][size=1]

[size=4]இன்றைய நிலையில் நாம் என்ன செய்யவேண்டும் ? [/size][/size]

  • தொடங்கியவர்

[size=4]அர்யுன் அண்ணா, [/size]

[size=1][size=4]இன்றைய நிலையில் நாம் என்ன செய்யவேண்டும் ? [/size][/size]

அண்மையில் நாடு சென்று வந்த மீரா பாரதியின் கட்டுரை ஒன்று இணைத்திருக்கின்றேன் .அதனுடன் உடனும் படுகின்றேன் .

அண்மையில் நாடு சென்று வந்த மீரா பாரதியின் கட்டுரை ஒன்று இணைத்திருக்கின்றேன் .அதனுடன் உடனும் படுகின்றேன் .

[size=4]என்னால் முழுதாக உடன்பட முடியவில்லை. காரணம் எமது தாயக பிரச்னைக்கு தேவையானது அரசியல் தீர்வு. அதை பெறவேண்டியது, பெற்றுத்தரவேண்டியது எமது முதன்மை கடமை. [/size]

[size=4]அதேவேளை உதவிகளையும் செய்தே ஆகவேண்டும் [/size][size=1]

[size=4]இந்த இரண்டையும் சமாந்தரமாக முன்னெடுப்பது சவால் நிறைந்தது. [/size][/size]

சமாதான காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றபோது ஒரு புலம் பெயர் தமிழன் எவ்வாறு உணர்நதான் என்பது அவரவர் சார்ந்தது(அவரவரின் பல்வேறு உளவியல் சுமைகள் சார்ந்தது). அதில் வேறுபாடுகுளிற்கான சாத்தியம் உண்டு. ஆனால், நான் ஒருவகையில் உணர்ந்தேன் என்பதற்காக மட்டும் எனது உணர்வுதான் பெரும்பான்மையானவர்களிற்கும் இருந்திருக்கும் என்று கூறிவிடமுடியாது.

புலிகள் பெற்றதெல்லாம் மொனோபொலி விளையாட்டின் விடையங்களை ஒத்தனவே என்று கூறுவதும் ஏற்புடையதல்ல. அதிகபட்சம் நூறு வயதில மண்டையப்போடப்போறம். அதுக்குள்ள, வேலைக்கேன் போவான் சம்பளம் ஏன் பெறுவான், வீட்டை ஏன் வாங்குவான், நிலையற்ற நீர்க்குமிழி போன்ற உலகில் ஏன் கலியாணத்தைக் கட்டி இன்னுமொரு உயிரைக் கொண்டுவருவான், பந்தபாசம் ஏன் என்ற அடிப்படையில் அனைத்தும் பார்க்கப்படுமேயாயின் மொனோபொலி உதாரணம் சரியாகலாம். வேட்டையாடிச் சேகரித்து உண்ட ஆதி மனிதனைப் போல, உடலின் உந்துதல்களை மட்டும் சார்ந்து அடிப்படைத் தேவைகளை மட்டும் நோக்கி, நான் வென்றால் இறைச்சி அது வென்றால் சாவு என்று வாழ்பவர்கள் தமிழரின் போராட்ட வெற்றிகளை மொனோபொலியுடன் ஒப்பிட்டு எல்லாம் மாயை காற்றடைத்த பையடா காயம் வெறும் பொய்யெடா என்ற ரீதியில் சொன்னால், அங்கு விhவாதிப்பதற்கு எதுவும் இருக்காது ஏனெனில் அது தத்துவார்த்த வாழ்க்கை முறை. அதை விடுத்து, தமிழீழத்தை ஆதரிக்கிறேன், அரசியலைப் போற்றுகிறேன், உழைப்பை மெச்சுகிறேன், வென்ற சமூகங்களைக் கண்டு வியக்கிறேன் என்று சொல்லியபடி புலிகள் பெற்ற வெற்றிகள் எல்லாம் மொனோபொலி என்றால் அது கொஞ்சம் அளாப்பல் ஆட்டமாகத் தெரிகிறது.

ஏன் அனைத்து நாடுகளும் அங்கீகரித்து, ஐநாவில் கொடி பறந்நது கொண்டிருக், தமிழீழத்தில் தென்னையில் இருந்து தேங்காய் விழுந்து பக்கத்தில் நின்ற பலாவின் பழுத்த பழத்தை உடைத்து, இரண்டுமாய்ச்சேர்ந்து உருண்டுபொய் அங்கால கிடந்த மாம்பழக்குவியலைச் சாறாக்கி, உடன கறந்த பாலிற்குள் மாவும் பலாவும் சேர்ந்த சாறு பிழிய எல்லாரும் அதைக் குடிச்சுப்போட்டு நிமிந்து பாத்தால் நாயின் முதுகில பூனை சவாரிசெய்யுது பருந்து கோழிக்குஞ்சைப் பாத்துக்கொள்ள கோளி நிழலிற்குள் கொஞ்சம் இளைப்பிற்காய் நித்திரை கொள்ளுது என்ற கணக்கிலான ஆட்சி தமிழீழத்தில் நடந்து கொண்டிருந்தாலும் கூட, சுனாமி வரலாம் தானே, எனவே எல்லாம் மொனோப்பொலி என்று கூடச் சொல்லலாமாயினும், அது ஏற்புடையது அல்ல. வாழ்வே வாழ்வதற்கான போராட்டம் என்கையில், அந்தந்த நிமிடத்திற்குள் தாம் எதனை வாழ்வென்று புரிந்து கொள்கிறார்களோ அதற்கேற்ப வாழ முனைவது தானே வாழ்வு. அவ்வகையில் மொனோபொலி உதாரணம் ஏற்புடையதாய்த் தெரியவில்லை. புலிகள் ஒன்றும் தெரியாதவர்களாக இருந்ததனால் தான் எல்லா நாடுகளும் சேர்ந்து அறிவாளிக்கூட்டமான சிங்களத்திற்கு உதவியது என்பதல்லவே நிஜம். புலிகளைத் தவிர மற்றையவர்கள் அனைவரிற்கும் என்னசெய்தால் எமது நிழல் அரரை நிரந்தர அரசாக்கித் தமிழீழக் கொடியை முழுச் சுதந்திரத்தோடு ஐ.நாவில் பறக்கவிடலாம் என்று தெரிந்திருந்தது ஆனால் புலிகள் தான் கேட்கவில்லை என்ற கருத்தையே மொனோபொலி உதாரணம் சித்தரிக்க விளைகிறது. ஆனால், சர்வதேசம் என்பது கறுப்பு வெள்ளை அல்லவே.

ஓல்ட்பார்க் தான் கிட்டுப்பூங்கா என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். இன்றும் அதனைச் சனம் கிட்டுப்பூங்கா என்பது குளறுபடி, புலிகளே இல்லைப் பிறகு புலிகள் வைத்த பெயரில் அதை எப்படி அழைப்பது என்ற விவாதத்தைப் பார்த்தால். ஓல்ட்பார்க் என்ற பெயரை என்ன செகராசசேகரானா வைத்திருப்பான்? ஆல்லது சனநாயக ரீதியில் வாக்கெடுப்பு ஒன்று நடத்தி யாழ்வாழ் தமிழ் சனங்கள் அறுதிப்பெரும்பான்மையாய் ஓல்ட்பார்க் என்று பெயரிட்டிருப்பார்களா? ஓல்ட்பாக் என்று பெயரிட்டவன் புலிகளிற்குப் பலகாலம் முன்னரே போய்விட்டான். ஒருத்தன் ஒன்றிற்கு ஒரு பெயரை வைக்கவேண்டும் என்றால், பெயர்வைக்க வேண்டியது வைக்கிறவனிற்கு முன்னமே இருந்திருக்க வேண்டும் (essense precedes existence). அப்படியிருக்கையில் சில பத்து வருடங்கள் முன்னர் ஒருபெயரை ஆரோ ஒன்றிற்குச் சூட்டியதால் அந்த விடயத்தை அனைவரும் அந்ப் பெயரிற்குக் கட்டுப்பட்டுத்தான் பாhக்கவேண்டும், புதிதாக எதையும் கண்டுவிடக்கூடாது என்று கூறிவிடமுடியாது.

மண்டபங்களிற்குப் பெயர்சூட்டுவதைப் பார்த்தால். எவரும் சிற்றியில போய் பேரை மாத்து தபால் தலையில் போடு என்று கூறவில்லையே. ஒரு பள்ளிக்கூடத்தில் ஜிம்னாசியம், விளையாட்டு நேரத்தில் ஜிம்னாசியம். கற்றீனா அல்லது ஐசாக் போன்ற அனர்த்தத்தால் சனம் வந்து தங்கினால் அகதி முகாம். பள்ளி நடன இரவில் அது நடன மண்டபம். ஒரே கட்டிடம் தான். ஆனால் அதன் பெயர்கள் குறியீடுகள் சந்தர்ப்பத்தைச் சார்ந்தும் பார்ப்பவரைச் சார்ந்தும் மாறுபடுவதை ஏன் அபத்தமாகப் பார்க்கவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஓல்ட் பார்க் முதலில் இருந்து இப்ப வரைக்கும் ஓல்ட் பார்க் தான் :lol: கிட்டு பூங்கா முத்திரை சந்திக்கு அங்கால இருக்குது

  • கருத்துக்கள உறவுகள்

ஓல்ட் பார்க்க்கும் கிட்டு பார்க்கும் தெரியாதவர் வன்னியை எப்படி பார்த்திருப்பார் என்று தெரிகிறது.அதோடை நெடுமாறன் சொல்லுகிறது எல்லாம் பொய்யாம்.தப்பு தண்ணி ரொரண்டோவில் எங்காவது இருக்கா??? :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன்! நீங்கள் வரவர வாயாலை நல்லாவே வடை சுடுறியள்

  • கருத்துக்கள உறவுகள்

ஓல்ட் பார்க் முதலில் இருந்து இப்ப வரைக்கும் ஓல்ட் பார்க் தான் :lol: கிட்டு பூங்கா முத்திரை சந்திக்கு அங்கால இருக்குது

அங்கால இல்ல முத்திரைச்சந்தியில தான் இருக்குது :(

  • தொடங்கியவர்

ஒரு இடத்தை மாறி எழுதியதை வைத்தே பல்லக்கு தூக்கி விடுவீர்களே ?

இவ்வளவு அழிவும் ஏன் வந்தது என்பதை இன்னமும் அறிய முற்படாவிட்டால் எதுவும் சாத்தியமில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏனண்ணை வந்தது?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இடத்தை மாறி எழுதியதை வைத்தே பல்லக்கு தூக்கி விடுவீர்களே ?

இவ்வளவு அழிவும் ஏன் வந்தது என்பதை இன்னமும் அறிய முற்படாவிட்டால் எதுவும் சாத்தியமில்லை .

எப்பவும் நிதானம் முக்கியம் தோழரே வரலாறு அதை விட முக்கியம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அண்ணை அழிஞ்சது அழிஞ்சு போச்சுது......அழியாமல் இருக்கிற அவையள் இப்ப என்ன செய்யினம்? அவையளும் தனிநாடு கேட்டுத்தானே வெளிக்கிட்டவையள்? இப்ப எங்கை அடைகாக்கினம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமாரசாமியண்ணை அவையள்தனிநாடு கேட்கேல்லை.தனித்தனி நாடு கேட்டவை.மற்றது அடைகாக்கத்தேரியும்.குஞ்சு பொரிக்கமாட்டினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

`......! நீங்கள் வரவர வாயாலை நல்லாவே வடை சுடுறியள்

(வாயால மட்டுமா'

Edited by anni lingam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.