Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ விடுதலை அமைப்புகளின் சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்! - விகடனிடம் பழ.நெடுமாறன்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் அண்மையில் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி... சிறீலங்கா போய் உயர்மட்ட உளவாளிகளை (ஒட்டுக்குழு ஆட்கள் உட்பட) சந்தித்து வந்ததோடு.. அவரின் புலித்தோல் வேசம்.. உரிஞ்சு தொங்குது. இப்போ இவரின் கடமை.. வன்னிக்க பெட்டி அடிச்சு தாக்க விட்டு மக்களை குழப்பினது போல.. எஞ்சியுள்ள தமிழீழ ஆதரவுக் குரல்களை அழிப்பது.!

சபேசனின்.. நோக்கங்கள் கொடூரமானவை. அடுத்தவனுக்கு தாலி தேவை இல்லை.. என்று எழுதிக் குவித்த இவர்... பல குடும்பங்களை சீரழித்த இவர்.. தனக்கு அம்மா விரும்பிற படியா தாலி வேண்டும் என்று கட்டின வடிகட்டின சுயநலவாதி...!

இவர் ஏதோ இயக்க வரலாறுகளை அடி முடி அறிஞ்ச கணக்கா நெடுமாறன் ஐயா மீது கருணாநிதிக்கு சமனாக குற்றம்சாட்ட முனைவதன் நோக்கம்.. எஞ்சியுள்ள தமிழீழ ஆதரவுக் குரல்களை அடக்குதல். அண்மையில் கே பியும் கூட கோத்தாவிற்கு ஈடாக நெடுமாறன்.. வை கோ போன்றவர்களை கண்டித்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • Replies 74
  • Views 4.5k
  • Created
  • Last Reply

கலைஞர், வீரமணி, சுபவீரபாண்டியன் போன்றவர்கள் வெளிப்படுத்துகின்ற தமிழீழ ஆதரவுக் குரல்களை அழிக்கின்ற வேலையை சிலர் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் அவர்களைக் கண்டிக்கின்றேன்.

பதிலுக்கு என்னை தமிழீழ ஆதரவுக் குரல்களை அழிப்பதாக குற்றம் சாட்டுவது வேடிக்கையாக இருக்கிறது.

தாயகத்தில் என்னைச் சந்தித்தவர்கள் உளவாளிகள் என்பது எனக்கு தெரிந்திருக்கவில்லை. இங்கே ஒரு உலக மகா உளவாளி அதைக் கண்டுபிடித்து சொல்லியிருப்பதால், அடுத்த முறை போகும் போது அவர்களுடன் கவனமாக இருக்கிறேன். தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வீரமணி.. சுபவீரபாண்டியன்.. இவர்களுக்கு தங்க குடும்பத்தை விட.. கருணாநிதி தான் முக்கியம். அவைக்கு கொள்கை முக்கியமா இருந்ததில்லை. கருணாநிதி கத்துடான்னா கத்துவாங்க. நிறுத்துடான்னா நிறுத்துவாங்க. பெரியாரும்.. கறுப்புத் துண்டும் இல்லைன்னா.. அவங்க.. விலாசமே கண்டுபிடிக்கிறது கஸ்டமாகிடும்..! இவர்கள் இதய பூர்வமான தமிழீழ ஆதரவாளர்கள் என இனங்காணப்படுவதிலும்.. கருணாநிதியின் இலாப நட்டத்திற்கு ஏற்ப ஈழ ஆதரவை வெளிக்காட்டிறவங்க என்பது தான் உண்மை.

மேலும்.. முடியுமுன்னா.. சபேசன் தான் யார் யாரை சந்திச்சது.. இணக்க அரசியல் பற்றி போதனை வாங்கினது.. அதை.. எல்லா இடமும் காவிக் கொண்டு திரியுறது.. உட்பட எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்தட்டும் பார்க்கலாம்.

தமிழ் தேசியம் பேசிய.. புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் சிறீலங்கா போக அஞ்சுகின்ற வேளையில்.. வன்னியில் பெட்டி அடிச்சு சிங்கள ஆமிக்கு அடியுங்கோ என்று புலிகளுக்கே ஆராய்ச்சி உபதேசம் செய்த.. சபேசனுக்கு எப்படி சிங்கள வாயில் கதவு சலூட் அடிச்சு திறந்து விட்டது..????! (புலிகளின் போர் வியூகங்களை வெளியில் இருந்து காட்டிக் கொடுத்தோரில் சபேசனும் அடக்கம் போல) இதனையும் தன் பயணக்கட்டுரையில் சொல்லி இருக்கலாமே..! ஏன் மறைப்பான்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இந்திய இராணுவம் ஈழத்தில் நின்ற காலத்திலும், ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட பின்னரும், என்றைக்கும் தமிழீழத்திற்காக ஆதரவுக் குரல் கொடுத்தவர்களில் வீரமணி மிக முக்கியமானவர். அதே போன்று சுபவீரபாண்டியனும் பலர் அஞ்சி தயங்கி நின்ற வேளையிலும் எமக்காக குரல் கொடுத்தவர்கள்.

இன்றைக்கு அவர்கள் கலைஞரை ஆதரிக்கின்றார்கள் என்பதற்காக அவர்களின் உணர்வுகள் பொய் ஆகிவிடாது. தமிழீழத்திற்கு ஆதரவான குரல்கள் அனைத்துக் கட்சிகளிலும் உண்டு. தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படையில் அவர்கள் எடுக்கின்ற முடிவுகளை தமிழீழ நிலைப்பாடு நாம் பொருத்திப்பார்ப்பதோ, தமிழ்நாட்டு அரசியலை நாம் வழிநடத்த முனைவதோ பொருத்தம் அற்றது.

இன்றைக்கு யாரிடம் இருந்த தமிழீழ ஆதரவுக் குரல் வந்தாலும் அவற்றை அழித்து விடாதீர்கள் என்பதே என்னுடைய வேண்டுகோள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐயா எத்தனையோ சோதனைகள் மத்தியிலும்.. ஆபத்துக்கள் மத்தியிலும்.. புலி வேட்டையில் இருந்த இந்தியப் படைகளையும் கருணாநிதி சார்பு தமிழ் ஒட்டுக்குழுக்களையும் மீறி.. தாயகம் வந்து தன் ஆதரவை தமிழ் மக்களுக்கு நேரில் கையளித்த ஒரு பெரியவர். ஆட்சியாளர்களின் தயவின்றி தனித்து ஈழத்தவருக்காகப் போராடிய போது கருணாநிதியால் வயதான நேரத்திலும் சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர்.

வீரமணி.. சுப வீரபாண்டியன் போன்றவர்களின் குரலுக்கு உள்ள மதிப்பை விட நெடுமாறன் ஐயாவின் செயலும் குரலும்.. ஈழத்தமிழர்களின் பால் அதிகம் நாட்டம் கொண்டது. அவரை நவீன காக்கவன்னியன் கருணாநிதியோடும் அவருக்கு முண்டு கொடுப்பவர்களோடும்.. ஒப்பிட்டு.. மட்டம் தட்டி.. நெடுமாறன் ஐயாவின் கடந்த கால செயல்களையும் தியாகங்களையும் அவரின் இதய சுத்தியான ஈழத் தமிழர் அக்கறை உணர்வையும் கேவலப்படுத்த வேண்டாம் என்பதே எங்களுடைய வேண்டுகோள்..!

Edited by nedukkalapoovan

நெடுமாறன் முன்னர் கருணானிதியை நம்பி இருக்கலாம், பலரைப் போல்.ஆனால் முள்ளிவாய்க்கால் துரோகத்தின் பின்னும் எவரும் கருணானிதியை நம்பி அவர் பின்னால் நிற்பார்கள் ஆயின் அது அவர்களின் தனிப்பட்ட நலங்களின் அடிப்படையில் தான் அமைவதாக இருக்கும்.

யானை படுத்தால் எறும்பு கூட ஏறி மிதிக்குமாம்!

1 ) அர்ஜுன் அண்ணா என்ன செய்வது உங்கள் அளவிற்கு நெடுமாறன் ஐயா படிக்கவில்லை. நீங்க உலக மேதாவி அதன் மூலம் இண்டைக்கு இலங்கைத்தமிழர்கள் அனைத்து உரிமைகளோடையும் வாழுகிறார்கள். பாவம் மாலைதீவு மக்கள் உரிமை இழந்து உடமை இழந்து நிலம் இழந்து உயிர் இழந்து ரொம்ப கஷ்டப் படுறாங்க நீங்க அங்கை போய் அந்த மக்களுக்காக போராடுங்க வாழ்த்துக்கள்.

2 ) சபேசன் அண்ணாவின் அண்மைய கருத்துக்கள் செய்திகள் எல்லாமே புல்லரிக்குது.

Edited by யாழ்அன்பு

யாழ்அன்பு,

இந்தக் கட்டுரை நான் எழுதியது இல்லை. நான் எழுதிய கட்டுரைகளில் "வி.சபேசன்" என்றுதான் இருக்கும். அத்துடன் இலங்கைநெற்றில் எல்லாம் நான் எழுதவும் போவதில்லை. இந்தக் கட்டுரையை நான் இன்னும் வாசிக்கவில்லை. அதனால் இது பற்றி பின்பு கருத்துச் சொல்கிறேன்.

நல்லது சபேசன் அண்ணா மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி அந்த மாதிரி பதில் கொடுத்திருக்கின்றார் .நெடுமாறன் தேர்தலில் தோற்று பின் ஒரு கட்டத்தில் கட்டுக்காசும் எடுக்காத பேர்வழி . அதன் பின் தான் ஈழவிடுதலை அரசியலை வியாபாரமாக தொடங்கினார்.

1980ம் ஆண்டுத் தேர்தல் எம்.ஜீ.ஆர் தலைமை அதிமுக கூட்டணி ஆட்சி அமைத்தது. இக்கூட்டணிக்கு எதிராக திமுக, காங்கிரஸ் கூட்டணி போட்டியிட்டது . நெடுமாறன் அவர்கள் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 45700(58.13%) வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட நெடுமாறன், காந்தி காமராஜ் காங்கிரசு,அர்ஸ் காங்கிரசு ஆகியவை அதிமுக கூட்டணியில் போட்டியிட்டன. நெடுமாறனை எதிர்த்துப் போட்டியிட்ட பழனிவேல் ராஜன் (திமுக கூட்டணி) 40.15 வீத வாக்குகளைப் பெற்றார்.1984ல் அதிமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்தன. திமுக கூட்டணியில் கம்னியூஸ்ட் கட்சிகள் இடம்பிடித்தன. நெடுமாறன் இருந்த தமிழ்நாடு காங்கிரசு (கே)அணி 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டு 5 தொகுதியிலும் தோல்வி அடைந்தது. ஆனால் மதுரை மத்திய தொகுதியில் 2ம் இடத்தினை நெடுமாறன் பிடித்தார். முதல் இடத்தினைஅதிமுக கூட்டணியில் உள்ள இந்தியக்காங்கிரஸ் கட்சி தேவநாயகம் 41272 வாக்குகள்(50.76%)அவரை எதிர்த்து நெடுமாறன் தமிழ் நாட்டுக்காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு 39012 (47.98%) வாக்குகளைப் பெற்றார். திமுக கூட்டணியை விட அதிக வாக்குகளைப் பெற்றார் நெடுமாறன்.1989ம் ஆண்டு தேர்தலில் எம்.ஜீ. ஆரின் மறைவுக்கு பிறகு திமுக ,காங்கிரஸ், அதிமுக(ஜெயா அணி) அதிமுக( ஜானகி அணி)என 4 முனைப் போட்டி நடைபெற்றது. இங்கு நெடுமாறன் அவர்கள் சிவாஜி கணேசன் தலைமையில் அதிமுக(ஜானகி)அணியில் போட்டியிட்டார். இத்தேர்தலில் அதிமுக( ஜானகி)அணியினர் படு தோல்வி அடைந்தனர்.1989 ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே நெடுமாறன் விடுதலைப்புலிகள் மீது ஆதரவு வைத்திருந்தார். தேர்தலில் தோற்றதினால் தான் ஈழ அதரவினை எடுத்தார் என்ற வாதம் பிழையானது.

  • கருத்துக்கள உறவுகள்

1989 ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே நெடுமாறன் விடுதலைப்புலிகள் மீது ஆதரவு வைத்திருந்தார். தேர்தலில் தோற்றதினால் தான் ஈழ அதரவினை எடுத்தார் என்ற வாதம் பிழையானது.

அது உங்களை போன்றவர்களுக்கு.......

வாந்திகளுக்கு என்ன நடந்தது என்ற புள்ளிவிபரம் தேவையில்லை.

நாம் அதை திரும்ப திரும்ப எடுப்பதால் அதை நம்பி விடுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

அது உங்களை போன்றவர்களுக்கு.......

வாந்திகளுக்கு என்ன நடந்தது என்ற புள்ளிவிபரம் தேவையில்லை.

நாம் அதை திரும்ப திரும்ப எடுப்பதால் அதை நம்பி விடுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

1989ம் ஆண்டுத்தேர்தலில் நெடுமாறன் போட்டியிட்ட மத்திய மதுரை தொகுதியில் திமுக வெற்றி பெற்றது. போல்ராஜ் என்ற திமுக வேட்பாளர் 39.73% வீத வாக்கினைப் பெற்றார். அதிமுக(ஜெ), தமிழ் நாட்டு காங்கிரஸ் இரண்டு அணிகளும் 14 வீதத்துக்கு குறைவான வாக்குகளே பெற்றார்கள். 1989 தேர்தலில் படுதோல்வி அடைந்த வேட்பாளர்கள் பின்பு நடைபெற்ற தேர்தல்களில் சட்டசபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். 91 ம் ஆண்டு தேர்தலில் ராஜீவின் மரணத்தின் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியீட்டியது. ஆனால் 96ல் அதிமுக படு தோல்வியடைந்தது. 2011 தேர்தலில் அதிமுக அமோக வெற்றியிட்ட திமுக காங்கிரஸ் அணி படுதோல்வியடைந்தது. நெடுமாறன் படுதோல்வியடைந்த 1989 தேர்தலில் அதிமுக(ஜானகி அணி) தமிழ் நாட்டு காங்கிரஸ் கூட்டணி பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தோற்றது. 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

எனக்கு என்னவோ இவர்கள் இருவரும் இணைந்துதான் இயக்க மோதல்களை தொடக்கி வைத்திருப்பார்களோ என்று இப்பொழுது தோன்றுகிறது.

1991 ல் கலைஞரின் ஆட்ச்சியை ஏன் கலைச்சவை... ???

644346_3621228255679_1038393460_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

வீரமணி பற்றிச் சபேசன் புகழ்ந்து எழுதுகின்றார். ஆனால் 2009ம் ஆண்டு காலப்பகுதியில் அவர் வாயே திறக்கவில்லை மட்டுமல்லாமல், ஒரு அறிக்கை கூட விடவில்லை. ஏன் கௌத்தூர் மணி, பெரியார் திராவிடக்கழகம் தொடங்க வே;டி ஏற்பட்டது என்பதும், தமிழன ஆதரவாளர்கள் அனைவரும் வீரமணியை விட்டு விலகிச் சென்றார்கள் என்பதையும் கேளுங்கள்.

கருணாநிதி நடத்துகின்ற இந்த நாடகத்தில் என்ன பலனைத் தமிழ் மக்கள் அனுபவிப்பார்கள் என்று சபேசன் சொன்னால் நல்லது! இந்த டெசோ கூட்டம் செய்திருக்கின்ற தமிழ்மக்களுக்கான பரிந்துரை என்ன?

உண்ணாவிரதம் என்ற நாடகத்தை நடத்தி, அங்கே சண்டை நின்று விட்டது என்ற தோற்றத்தை உருவாக்குவதன் மூலம், தமிழகச் செந்தங்கள் மத்தியில் ஏற்பட்ட உணர்வலைகளை முடக்கச் சதி நின்றார் இந்தக் கருணாநிதி. இப்போது சொல்கின்றார் பிரணாப் முகர்ஜி தன்னை ஏமாற்றிவிட்டார் என்று... ஆனால் அதே முகர்ஜிக்கு ஆதரவாகத் தான் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தார். ஏமாற்றிவிட்ட விடயம் நெடுமாறன் பட்டியலிட்ட பின்னரா இவருக்குத் தெரியும்?? அத்தோடு உண்ணாவிரதம் நடைபெற்ற நேரத்தில் சன் தொ.கா, கலைஞர் தொ.கா, மற்றும் முரசொலியின் மின்னஞ்சல் கிடைக்காததால் தொலைபேசி ஊடாகவும் விபரம் தெரிவிக்கப்பட்டிருந்தது. நானே படங்கள், மற்றும் செய்திகளை அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.

அப்படியிருந்தும் 3 வருடம் கழித்தா இவருக்கு என்ன நடந்தது என்று தெரிகின்றது? அல்லது, உண்ணாவிரதம் இருந்தோமே என்ன ஆகிவிட்டது என்று அறிந்து கொண்டாரா??

அத்தோடு அக்காலப்பகுதியில் ஒரு தடவை கூட இவர் டில்லிக்குப் போய் மத்திய அரசை ஒரு கேள்வி கேட்கவில்லை. ஆனால் கனிமொழியைக் கைது செய்தவுடன் மட்டும் பல தடவைகள் ஓடிச் சென்றார்...

ஆக அரசியலில் இவருக்குக் கிள்ளுக்கீரைகளாக நாம் தேவைப்படுகின்றோம். கலைஞரிடம் எவ்வளவு பெரிய ஆதரவுக் கூட்டமும் இருக்கலாம். அதனால் என்ன பலன்?

இந்த டொசோ நிகழ்வு என்பது அரசியலில் இவருக்குத் தேவைப்படுகின்ற அடுத்த படியே அன்றி, தமிழ்மக்களுக்கான தீர்வு எதும் கிடையாது.

அர்ஜின்இ உங்களுககு வீட்டைப் புடுங்குறது.. விற்கின்றது ஒன்றும் வாய்க்காது விடின்இ ஏன் இங்கு வந்து புலம்புகின்றீர்கள்

பகுதி நேரம் மந்தை மேய்க்கின்ற தொழிலும் செய்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

பகுதி நேரம் மந்தை மேய்க்கின்ற தொழிலும் செய்கின்றேன் .

நீங்கள் இப்படி எம்மை அடிக்கடி எழுதுவது எனக்கு கோபத்தை தரவில்லை. மாறாக அனுதாபத்தை தருகிறது.

எமக்கு இப்படி ஒரு மேய்ப்பரா என.......???

கடவுளே எமக்கு இவரது பழக்கங்கள் எதுவும் ஒட்டாமல் பார்த்துக்கொள்ளும் :D

Edited by விசுகு

:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்

அலோ ஈழ தமிழர் விவகாரம் என்பது அரசியல் வியாதிகளை அவர்களின் எடுபிடிகளை பொறுத்தவரை...

MTR_MixedVegPickle.jpg

நக்கிட்டு போய்விடுவார்கள்.. மக்களை கவர் பண்ணால்தான் வேலைக்கு ஆகும்...

  • கருத்துக்கள உறவுகள்

மிகுதி நேரம் ”சோத்துப் பார்சல்” கட்டுகின்றீர்களா??

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

மிகுதி நேரம் ”சோத்துப் பார்சல்” கட்டுகின்றீர்களா??

வாந்தியெடுப்பது என்று உண்மையை எழுதினால் வெட்டிவிடுவார்கள் என்றுதான் நான் எழுதவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மிகுதி நேரம் ”சோத்துப் பார்சல்” கட்டுகின்றீர்களா??

அதையும்

மக்களோடு ஒட்டுவதற்கான மிகச்சிறந்த வழி என்றுதான் அவர் இங்கு பலமுறை எழுதியுள்ளார் என்பதை மேய்ப்பர் சார்பாக கூறிக்கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாந்தியெடுப்பது என்று உண்மையை எழுதினால் வெட்டிவிடுவார்கள் என்றுதான் நான் எழுதவில்லை.

ஆமாம். இந்த உண்மையை எழுதிவிடாதீர்கள்.

1990 ல கலைஞர் ஆட்ச்சிதான் நடந்தது...அப்ப இந்திய இராணுவத்துக்கு வரவேற்ப்பு குடுக்க போக மாட்டன் எண்டு படம் காட்டின கருணாநிதி எதுக்காக இந்திய இராணுவத்துக்கு மிண்டு குடுத்து தமிழர் அழிப்பில் பங்கு வகிச்ச பத்மநாபா குழுவுக்கு திருச்சி ஶ்ரீரங்கத்தில் வெளிப்படையாக ஆயுதங்களோடை தங்க அனுமதி குடுத்து வைத்து இருந்தாரே எதுக்காக...??

போடுற எலும்புக்கு அளவுக்கு அதிகமாக வாலை ஆட்டுற நாய்க்கு ஆதரவு... அதைப்பார்த்து மற்ற நாய்களும் எலும்புக்காக தன் விட்டு வாசலிலை நிக்க வேணும் அது மட்டும் தான் கருணாநிதியின் எண்ணமாக இருந்தது இருக்கிறது... இதை கனபேர் திரிச்சு வேறை விதமாக கதையாக சொல்ல நினைக்கிறது ஆச்சரியமாக இல்லை...அது வளமைதான்..

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி ஒரு தமிழினக் கொலையாளி !!! தனது அதிகாரத்தைத் தக்கவைக்கவும், குடும்ப ஊழலை மறைக்கவும் ஒரு இனத்தின் அழிவைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்த ஈனப்பிறப்பு. இங்கே அவனையும் நெடுமாறனையும் ஒப்பிடுவது சபேசனின் நோக்கத்தினைச் சந்தேகிக்க வைக்கிறது.சுபவீரபாண்டியன் 2009 இனவழிப்பின் உச்சத்தில் கருணாநிதியை நியாயப்படுத்தி அவருடன் போய் ஒட்டிக்கொண்டவர். அதேபோல வீரமணி தமிழர்களுக்கு ஒருமுகத்தையும், அரசுக்கு ஒரு முகத்தையும் காட்டும் விலாங்கு மீன். அவர்களை சபேசன் சரியானவர்கள் என்கிறார்.

மற்றும்படி அர்ஜுனின் கருத்துக்களை வழக்கம் போல வாசித்துவிட்டுப் பேசாமலிருப்பதே நல்லது. நாங்கள் வாசிக்கவேண்டும் என்பதற்காகவும் அதன்பிறகு ஆத்திரமடைய வேண்டும் என்பதற்காகவும் மட்டுமே அவர் எழுதுகிறார். அவரிடம் வேறு எந்த நல்ல நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.