Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்கிழக்கு சீமையிலே

Featured Replies

வணக்கம் வாசகர்களே!!!!! கள உறவுகளே !!!!

மீண்டும் " தென்கிழக்குச் சீமையிலே " என்ற ஒரு வரலாற்று தொடர் கதையுடன் உங்களைச் சந்திக்கின்றேன் . அண்மையில் நீண்ட காலங்களின் பின்பு பிரான்ஸ்சின் தென் கிழக்குப் பகுதியான ஆல்ப்ஸ் மறைற்ரும் மானிலத்தின் தலைநகராம் நீஸ் மாநகரிற்கு குடும்பமாக விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்தேன் . அங்கு நான் கண்ட கேட்ட வரலாற்றுக் கதைகளையும் , நகைச்சுவையான சந்திப்புகளையும் இருவேறு பாணிகளில் பதிகின்றேன் . உங்கள் ஆதரவை நாடும் ................

நேசமுடன் கோமகன்

***************************************************************************

3140.jpg

நீசில் இருந்து கடந்த பலமாதங்களாக வந்த பலத்த நெருக்குவாரங்களினால் நானும் மனைவியும் நீஸ் புறப்படத் தேவையான ஒழுங்குகளைச் செய்தோம் . இருவரும் வேலை செய்வதால் ஓரே நேரத்தில் நேர்கோட்டிற்கு விடுமுறை வருவது அவ்வளவு சுலபமில்லை . இரண்டு மாதங்களுக்கு முதலே வேலை செய்கின்ற இடத்தில் இரண்டு கிழமை லீவுக்கு கேட்டிருந்தோம் . நீஸிசில் இருந்து எங்களை வரவைப்பதிற்கு அரையண்டம் குடுத்தவர் வேறை ஒருத்தரும் இல்லை எங்கடை சாத்தர் தான் . நாங்கள் ஒவ்வரு நாளும் சாத்தருக்கு நீஸ் வாறது சம்பந்தமான புதுப்புது செய்தியளை குடுத்தம் . அவரும் பெரிய புழுகத்தில இருந்தார் . நான் இங்கு இருந்தே இருவரும் நிற்பதற்கு எங்களது தங்குவிடுதியினாலேயே முற்பதிவு செய்திருந்தேன் . நான் அதை சாத்தருக்கு சொன்ன பொழுது , நறுக்கென்று சாத்தர் சொன்னார்

" என்ன கோதாரிக்கு இங்கை வாறியள் ? நான் என்னத்துக்கு இங்கை இருக்கிறன் ? எண்டு .

எனக்கு சாத்தரை சமாதானப்படுத்திறதே பெரிய வேலையா போச்சு . சுவிசில் இருந்து சயந்தன் குடும்பமும் வருவதாக சாத்தர் சொல்ல எனக்கு உண்மையிலேயே புழுகமா போச்சுது .

நீஸ் அடிப்படையில் பிரான்சின் தென்கிழக்கில இருக்கின்ற ஒர் துறைமுக நகரம் . இதுதான் பிரான்சின் ஐந்தாவது பெரிய நகரம் . சனத்தொகை ஏறத்தாள 3,48,000 பேர் . ஏறத்தாள 2000 வருடங்களுக்கு முன்பு இந்த நகரத்தினுடைய பெயர் « நீசியா ஒப்பிடும் « (Nicaea oppidum ). பழைய கிரேக்கத்தில நீசியா ( Nizzia ) என்றால் < வெற்றி கொடுக்கின்றது< என்று அர்த்தம் . நீஸ் கிரேக்கர்களுடைய ஆழுகைக்கு உட்பட்ட ஒரு நாடாகவே இருந்தது . இதற்கு என்று தனிப்பட்ட பாரம்பரியமும் ஏன் மொழியும் கூட இருந்தது . நீஸ் நாட்டவர்களை < நீசுவா > ( Niçoie ) என்றும் , அதன் தாய் மொழியை < நீசுவாஸ் > ( Niçios ) என்றும் அழைக்கப்பட்டனர் . காலப்போக்கில் 1860ல் நீஸ் பிரான்ஸ்சின் ஆழுகைக்குள் வந்தது .

புராதன நீஸ் இன் கட்டமைப்பு

Plan-Nice-1624.jpg

நீஸினுடைய புவிஇயல் எல்லைகளாக , 30 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து இத்தாலியும் , தெற்குபக்கத்தில் மெடிற்ரிறேனியன் சீ என்கின்ற மத்தியதரை கடலும் , வடக்கு பக்கத்தில் ஆல்ப்ஸ் மலையும் எல்லைகளாக அமைந்துள்ளது . இவ்வாறு மிதமான காலநிலையில் நீஸ் இருப்பதினால் இந்த நகரத்துக்கு உல்லாசப்பயணியள் கூடுதலாக வருகின்ற நகரமாக நீஸ் பிரான்ஸ்சில் இடம்பிடிக்கின்றது . அத்துடன் சர்வதேச திரைப்படவிழா நடக்கின்ற கான் நகரம் , நீஸில் இருந்து ஏறத்தாள 30 கிலமீற்றர் தூரத்தில் இருப்பதாலும் , மொனாக்கோ என்கின்ற பிரான்ஸ் அதிகாரத்துக்கு உட்பட்ட சிறிய நாடு ஏறத்தாள 37 கிலோமீற்றர் தூரத்தில் இருப்பதாலும் உல்லாசப்பயணிகளின் வருகை நீஸில் அதிகமாகவே காணப்படும் .

கான் நகரம்

Cannes_vieux-port_pecheurs_r8.jpg

மொனாக்கோ

Panorama_von_Monaco-La_Turbie.jpg

தொடரும்

Edited by கோமகன்

  • Replies 196
  • Views 18.6k
  • Created
  • Last Reply

[size=5]தொடருங்கள் கோ![/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்களாவது யாழில் ஒரு முழு பயணத்தொடரை முடிக்க ஆண்டவனைப் பிரார்த்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களாவது யாழில் ஒரு முழு பயணத்தொடரை முடிக்க ஆண்டவனைப் பிரார்த்திருக்கிறேன்.

:(

  • தொடங்கியவர்

நீங்களாவது யாழில் ஒரு முழு பயணத்தொடரை முடிக்க ஆண்டவனைப் பிரார்த்திருக்கிறேன்.

வணக்கம் காவடி நான் யாழ் இணையத்தில் இணைந்து வாசகர்கள் மத்தியில் பிரபல்யமானதே " நெருடிய நெருஞ்சியினால் " தான் . நேரம் உள்ளபொழுது வாசியுங்கள் . உங்கள் வருகைக்கும் மிக்க நன்றிகள் .

http://www.yarl.com/...showtopic=86211

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

[size=5]தொடருங்கள் கோ![/size]

தொடர்ந்து இருங்கோ அலை . பல திருப்பங்கள் காத்திருக்கின்றது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் கோமகன். அப்படியே எனக்கும் சேர்த்து எழுதி விடுங்கள். :) வேண்டுமானால் படங்கள் நான் போடுகிறேன். கடற்கரையொன்றில் நள்ளிரவில் மலைசாய்ந்த படம் போட்டு ஆரம்பிக்கவா :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கோமகன். அப்படியே எனக்கும் சேர்த்து எழுதி விடுங்கள். :) வேண்டுமானால் படங்கள் நான் போடுகிறேன். கடற்கரையொன்றில் நள்ளிரவில் மலைசாய்ந்த படம் போட்டு ஆரம்பிக்கவா :)

வேணாம் கோ அழுதிடுவார் :(

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் கோமகன். அப்படியே எனக்கும் சேர்த்து எழுதி விடுங்கள். :) வேண்டுமானால் படங்கள் நான் போடுகிறேன். கடற்கரையொன்றில் நள்ளிரவில் மலைசாய்ந்த படம் போட்டு ஆரம்பிக்கவா :)

எங்கள் சந்திப்பிலே பல நகைச்சுவையான சம்பவங்கள் இடம்பெற்றன . உங்கள் பார்வையில் நான் சாத்திரி எப்படி என்பதையும் , சாத்திரிபார்வையில் நாம் இருவரும் எப்படி இருந்தோம் என்பதையும் , என் பார்வையில் நீங்கள் இருவரும் எப்படி இருந்தீர்கள் என்பதையும் பதிந்தால் இத்தொடரின் நகைச்சுவைக்கான பகுதி பூரணமாகும் என நினைக்கின்றேன் . மலைசாய்ந்த பொழுது வந்த சுனாமியையும் குறிப்பிடுங்கோ :lol: :lol: :D:icon_idea: வருகைக்குநன்றிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கோ கோ படிப்பதற்கு ஆவலாக உள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]வாழ்த்துக்கள் கோமகன் தொடருங்கள்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் கதை கதையறிய ஆவலாய் இருக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், கோமகன்!

மணியனின் 'இதயம் பேசுகிறது; வாசித்து அந்த நாடுகளுக்குப் போன போது, எமாற்றமடைந்தவன் நான்!

உதாரணத்திற்கு அவரது 'இங்கிலாந்துப் பயணக் கட்டுரையில்' இருந்து!

லண்டன் நகரத்தின் நிலங் கீழ்ப் புகையிரதத்தில் போய்க்கொண்டிருந்தேன்!

திடீரென 'அந்த ஜாக்கேட்டுகுள்ளாலும்' பயங்கரமாகக் குளிர்ந்தது!

பக்கத்தில் இருந்த வெள்ளையர், எனது முகத்தைப் பார்த்துவிட்டு, நான் கேட்காமலே கூறினார்!

நாங்கள் இப்பொழுது, ஸ்டாக்வெல், புகையிரத நிலையத்தை நோக்கிப் போகிறோம்!

இப்போது, இந்த ரயில், பிரபலமான 'தேம்ஸ்' நதிக்குக் கீழால் போகின்றது!

அது தான் இந்தத் திடீர்க் குளிர்!

???????

உங்கள் கதைகள், உண்மை பேசுகின்றன!

இதே மணியன், மட்டக்களப்பை, மட்டக்களப்பு என்று, எழுத மறுத்து, நாங்கள் திரும்பத் திரும்ப வற்புறுத்தியும், பட்டிக்கலோயா என்று தான், தனது இலங்கைப் பயணக் கட்டுரையில் எழுதியவர்!

அந்தளவுக்கு, தமிழ்த் துவேசம் பிடித்தவர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னட்டை இருக்கிற படத்தையும் இணைக்கட்டோ கோமகன் அண்ணா? :rolleyes::lol::icon_idea:

ஆரம்பமே அசத்தலா இருக்கு தொடர்ந்து காக்க வைக்காமல் விரைவாக முடித்து விடுங்கள் அண்ணா. :)

[size=5]தொடர்ந்து காக்க வைக்காமல் விரைவாக முடித்து விடுங்கள் அண்ணா.[/size]

[size=5]2014 தொடங்க முன் கோ அனேகமாக எழுதி முடிப்பார்![/size]

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொடருக்கு வாழ்த்துக்கள் கோம்ஸ்.. :D படிக்க ஆவலாக உள்ளோம்..! :)

  • தொடங்கியவர்

எழுதுங்கோ கோ படிப்பதற்கு ஆவலாக உள்ளது

நன்றி அக்கை . நீங்கள்தான் எனக்கு நல்லது கெட்டது சொல்லவேணும் சொல்லிப்போட்டன் :D :D :icon_idea: .

  • தொடங்கியவர்

நாங்கள் விடியப்பறம் முதல் கோச்சியை எடுத்தம் பரிஸ் கார் து லியோனுக்குப் (Paris Gare de lyon ) போறதுக்கு . என்ரை மனுசி சாத்தருக்கும் மனுசிக்கும் பருத்திதுறை வடை , பாரிஸில இருந்து உள்ள ஊரி காய்பிஞ்சுகள் எண்டு எக்கச்சக்கம் அயிட்டங்கள் கொண்டு வந்ததால எனக்கு செரியான கோபம் . நான்தானே சாமானுகள் காவிறது :( . நான் சொன்னன் ,

" நீ கொண்டு போறாய் சாத்தரை பத்தி உனக்கு தெரியாதெண்டு ".

அவா சொன்னா,

"போற இடத்தில கட்டுசெட்டாய் போகவேணும் பரிசுகெடுத்தாமல் வா எண்டு" .

எனக்கு ஏன்ரா வாயைக்குடுத்தம் எண்டு போச்சுது :wub: . இப்ப கார் து லியோன் எல்லாம் வடிவாய் திருத்தி படு சோக்காய் இருந்தீச்சுது . எங்களுக்கு 6h 45 க்கு நீஸ் போற ரீ ஜீ வி (பிரான்ஸ்சின் அதிவேக புகையிரதம் ( TGV , Train Grande à Vitesse) எண்டபடியால் நான் வெளியலை போய் ஒரு கபேயுடன் சிகரட்டை பத்தினன் . விடியப்பறம் கபேயோடை கன சனமில்லாத கார் து லியோனில சிகரட் அடிக்க ஒரு சந்தோசமாய்தான் இருந்திது . மனிசி ஒரு லுக்கு விட்டா . நான்வேறை பக்கம் திரும்பி கொண்டு பத்தினன் . எனக்கு என்ரை ரென்சன் . இதுக்குள்ளை சாத்தர் சொல்லியிருந்தவர் தனக்கு வரேக்கை ஒரு செம்மறி ஆடு பிடிச்சுகொண்டு வரச்சொல்லி . நான் எங்கை செம்மறி ஆட்டுக்கு போறது . சிலநேரம் என்னைத்தான் இவர் நக்ஸ்சுக்கு சொன்னாரோ :lol: :D எண்டு யோசினை முட்டிக்கொண்டு நிக்க சிகறட் கையில சுடவும் சரியாய் இருந்திது . கோச்சி வெளிக்கிடப் போகுது எண்டு அறிவிச்சினம் . கோச்சி அரை கிலோமீற்றர் நீளத்துக்கு வளைஞ்சு நெளிஞ்சு பாம்புமாதிரி ஒரே நீட்டாய் நிண்டுது . கனகாலத்துக்கு பிறகு நான் பிராசின்ஸ்சின்ரை வெளி இடத்துக்குப் போறதால நல்லாய் விடுப்பு பாத்தன் . நாங்கள் எங்கடை பெட்டியில ஏறி சீற்றை பாத்து இருந்தம் . சும்மா சொல்லக்கூடாது உள்ளுக்கை பிளேன் கணக்காய்த்தான் கிடந்திது . வெளிக்கிட்ட ஐஞ்சு நிமிசத்தில 300 கிலோமீற்றர் வேகத்தை எடுத்திது . சாத்தர் கூவே எண்டு கூப்பிடுகிற தூரத்திலேயே இருக்கிறார் . ஐஞ்சரை மணித்தியால ஓட்டம் வெளீல . வெளியில கோடு கிளிச்சமாதிரி கிடந்திது .

இது நாங்கள் போன ரீ ஜி வி :) .

TGV-Duplex_Paris.jpg

இதுதான் நான் சாத்தருக்கு கொண்டு போன செம்மறி ஆடு :lol::D:icon_idea: .

pmdollynarrowweb300x395.jpg

ஆல்ப்ஸ் மறிற்றீம்ஸ் ( Alpes Maritimes ) என்ற டிப்பாற்மன்ரின் ( நிர்வாக அமைப்பு Dipartement ) தலைநகர் நீஸ் ஆகும் . ஆனால் கொட் ஆசூர் மானிலத்தின் ( Provence cote D’Azur ) இரண்டாவது பெரிய நகர் நீஸ் ஆகும் . நீஸ் பெரும் பணக்காரர்களை உள்ளடக்கிய ஒரு நகரம் . உலகில் உள்ள பணக்காரர்களை நீஸில் முதலிடச்செய்து இறுதியில் அவர்களது சொத்துக்களை சட்டபூர்வமாக முடக்குவது பிரான்சின் கைவந்தகலை . இதில் கூடுதலாக மாட்டுபவர்கள் மஃபியாக்களும் , மத்தியகிழக்கு நாடுகளைச் சேர்ந்தவர்களுமே . நான் எனது மனைவி சாத்திரி மூவரும் முதல் நாள் மாலை நீஸ் தங்கக்கடற்கரையில் நடந்து சென்றபொழுது ஒரு ஆடம்பர நட்சத்திர விடுதியைக் கண்டேன் . இதன் பெயர் கொட்டேல் நெஜிறிஸ்க்கோ ( Hotel Negresco ) . றுமேனிய பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேரந்த ஹென்றி நெஜிறிஸ்க்கோ ( Henri Negresco ) (1868-1920 ) இந்தக் கட்டிடத்தைக் கட்டினார் . முதலாவது உலகப்போரில் சிதைக்கப்பட்ட இக்கட்டிடம் இரண்டு வருடங்களின் பின்பு மீண்டும் இவரால் உயிர்பெற்றது . பின்பு இந்த தங்கு விடுதி வைத்தியசாலையாக மாற்றப்பட்டது . பலத்த நிதி நெருக்கடியை சந்தித்த இக்கட்டிடம் 1957 ல் ஓஜ்ஜியர் ( Augier )குடும்பத்திற்கு விற்கப்பட்டது . அக்குடும்பத்தைச் சேர்ந்த சீமாட்டி ஜெனி ஓஜ்ஜியர் ( Jeanne Augier ) மீண்டும் ஆடம்பர நட்சதிர தங்கும்விடுதியாக உருமாற்றினார் . பின்பு 2003 ல் பிரான்ஸ் அரசு இக்கட்டிடத்தை வரலாற்றுத் தொன்மை வாய்ந்த கட்டிடங்கள் வரிசையில் சேர்த்து கையகப்படுத்தியுள்ளது . அதாவது நீஸ் மாநகரசபைக்குச் சொந்தமானது .

இது கொட்டேல் நெஜிறெஸ்கோ

640px-Hotel_Negresco_%282%29.JPG

தொடரும்

Edited by கோமகன்

தொடருங்கள் கோ, வாசிக்க ஆவலாக உள்ளோம். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே பிடியைப்பிடியுங்கோ... :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கோ அந்த மதிரிப்போகுது

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு.. தொடருங்கள்.. :D

சூப்பர் கோ தொடருங்கோ ,படங்கள் அந்த மாதிரி .

கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கு .

  • தொடங்கியவர்

[size=5]வாழ்த்துக்கள் கோமகன் தொடருங்கள்[/size]

மிக்க நன்றிகள் லியோ தொடர்ந்து இருங்கோ .

வாழ்த்துகள் தொடருங்கள் உங்கள் கதை கதையறிய ஆவலாய் இருக்கிறன்

தென்கிழக்கு சீமையிலே தொடங்குவதற்கு ஒற்றைகாலில் நின்றவர் நீங்கள்தான் :) :) இது நிச்சயம் உங்களையும் சுண்டும் :D :D :icon_idea: வருகைக்கு மிக்க நன்றிகள் :) .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.