Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருடிய நெருஞ்சி

Featured Replies

கள நண்பர்களுக்கு வணக்கம்.

நான் கடந்த மாதம் பூராக பிரான்ஸ்சில் இல்லை. ஏறத்தாள 25 வருடங்களுக்குப் பின்பு இலங்கைக்குச் சென்றிருந்தேன். எனது வாழ்க்கையில் பாதியை தொலைத்த எனது புலப்பெயர்வு கடந்த மே மாதத்தில் எனக்குப் புதிய ரத்தத்தைப் பாச்சியது. நான் 25 வருடங்களின் பின்பு தாயகத்தைப் பார்த்தபொழுது எனது மனதின் வலிகளையும், நான் பார்த்த கேட்ட செய்திகளை கற்பனை

என்ற கலப்படங்கள் இல்லாது உங்களுடன் பகிரலாம் என ஆவலாக உள்ளேன். இதன் தலைப்பு < நெருடிய நெருஞ்சி> . இதை நான் விளம்பரத்திற்காகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ எழுதவில்லை. உங்களுடைய ஆரோக்கியமான விமர்சனங்களே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கும் ஊக்கிகள். நண்பர் சாத்திரி தனது பயணத்தை சொல்லும் பொழுது , நானும் சொல்வது சரியா என்ற நியாயமான உறுத்தலுடன் தொடருகின்றேன்.

அன்புடன்

கோமகன்

Edited by கோமகன்

  • Replies 516
  • Views 65.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் பலர் காத்திருகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்ததை, பாதித்ததை பகிர்ந்துகொள்ளுங்கள்.

எந்தவித விட்டுக் கொடுப்பும் இல்லாமல் பார்த்ததை, கேட்டதை அப்படியே எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்த்ததை,

கேட்டதை அப்படியே எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப எல்லாம் யாராவது புதிதாய் கதை எழுதப் போறோம் எனச் சொன்னால் எனக்கு .......................ஆனாலும் பரவாயில்லை நீங்கள் எழுதுங்கள்

தனிப்பட்ட கோணத்திலிருந்து பார்க்காமல், கண்டவற்றை அப்படியே எழுதுங்கள்.

  • தொடங்கியவர்

நான் பயணத்தை ஆரம்பிக்க முன்பும் எனக்கு வேலை. நான் ஒரு 4 நட்சத்திர ஹோட்டலில் காலை உணவுப் பிரிவின் முகாமையாளராக வேலை செய்கின்றேன். வளக்கமான காலை பரபரப்புடன் எனது வேலை தொடங்கியது.அன்று பார்த்து எனது உதவியாளர் மருத்துவ விடுமுறை. சரி இன்று நான் துலைந்தேன் என எண்ணியவாறே வேலையை தொடரந்தேன். எனது மனமோ நாளைய பயணத்திலேயே லயித்தது.எவ்வளவு நாள் கனவு,கண்ணீர் இன்னும் 24மணித்தியாலங்கள். மனம் என் சொல் கேடக்கவில்லை. ஹோட்டல் இயக்குனரின் காலை வணக்கம் என்னைக் கலைத்தது. பதில் வணக்கம் சொல்லி விட்டுத் தொடர்ந்தேன். தன்னை வேலை முடிந்தவடன் சந்திக்க முடியுமா என இயக்குனர் கேட்டரர்.மதியம் 1 மணியாகியது இயக்குனரின் ஞபகம் வரவே யோசனையுடன் அவரது அலுவலகம் நோக்கிச் சென்றேன்.அவரது வழக்கமான லொள்ளு தொடங்கியது.

" ராஜன் உங்களுடைய விடுமுறையை எனக்காக தள்ளிப்போடமுடயுமா?"

" எனக்குப் புண்ணில் புளிப்பத்தியது."

" ஏன்? "

" உங்களுடைய இடத்திற்கு வர இருப்பவர் கடைசி நேரத்தில் வர முடியது என்று சொல்லி விட்டார்" .

கண்கள் சிவக்க ஆளமாக அவரைப் பார்த்தேன்.

" நான் ஒரு மாதத்திற்கு முன்பே முறைப்படி எழுத்து மூலம் கேட்டுப் பெற்றது மாற்றமுடியாது" .

" ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிவரும்" .

" உங்களால் முடிந்ததை செய்யுங்கள்" .

நான் விடுமுறையில் செல்வது உங்களுக்குப் பொறாமை. உங்கள் விடுமுறை பிரான்ஸ்சுடன் முடிவது உங்கள் பொறாமையால் தான் உங்கள் அதிகாரத்தைப் பாவக்கின்றீர்கள் என்று வெடித்தேன். கனத்த இதயத்துடன் தொடரூந்தில் வீடு திரும்பினேன். மனமோ கொதிகலனாக இருந்தது. என்ன மனிதர்கள் இவர்கள்? தாங்கள் விடுமுறையில் போகும் பொழுது படம் எடுப்பார்கள். எங்களுக்கு சந்தோசமாக வழியனுப்ப மாட்டார்கள். பொறாமை நிறம் பார்ப்பதில்லையோ?

மனைவியும் வேலையால் வந்தா. இருவருமே உடலால் மிகவும் களைத்து விட்டோம். பயணப் பொதிகளை இறுதிக் கட்டமாக சரி பர்த்து பூட்டிவிட்டு படுக்க இரவு 11 மணியாகி விட்டது. காலை 9 மணிக்குத் தான் விமானம். காலை 6 மணிக்கு விமானநிலையத்தில் நின்றால் போதுமானது. மனம் நிலை கொள்ளாது தவித்தது. மனதிற்கும் நித்திரைக்கும் சண்டை தொடங்கியது. மனைவியிடம் " பிரச்சனை இல்லை தானே எனக்குப் பயமாக இருக்கின்றது", "நீர் அடிக்கடி போறனீர்" , "நான் முதல் தரம்" நித்திரை வரேல. மனைவி என்னைப் பரிதாபமாகப் பரர்த்தாள். ஒண்டும் இல்லை நீங்கள் படுங்கோ. நான் சொன்னான் தானே பிரச்சனையில்லாமல் கூட்டிக்கொண்டு போவன் என்று என்னைப் படுக்க விடுங்கோ. மணியை பரர்த்தேன் அதிகாலை 1 மணியாகியிருந்தது. 100ல் இருந்து பிறவளமாக எண்ணத் தொடங்கினேன், மனம் வெற்றி கொண்டது. காலை 4மணிக்கு எழும்பி குளித்து கோப்பியை இருவருக்கும் போட்டுவிட்டு மனைவியை எழுப்பினேன். விடிந்துவிட்டதா என்றாள். நானோ பரபரத்தேன். விமான நிலயத்திற்கு தொடரூந்தில் போவோம் என்றாள்.

"ஏன் ரக்சியில் போகலாம்தனே"?

"இல்லை, இலங்கை பயணத்தில் முதல் அப்பியாசம் உங்களுக்கு" .

முடிவாகவே மனைவி சொன்னாள். எனது வழிகாட்டி மெய்ப்பாதுகாவலரிடம் குழம்பக்கூடாது என்று மனவி சொல்கேட்டு இருவரும் தொடரூந்து நிலயம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். 5 நிமிடத்தல் பரிஸ் சார்ல்ஸ் டு கோல் சர்வதேச விமான நிலயத்தில் நின்றோம். மனம் பரபரத்தது,கோப்பியும் சிகரட்டுமாக நேரத்தை போக்காட்டினேன். மனைவி முறாய்துப் பார்தாள். அவளிற்கு என் நிலமை விளங்கவில்லை, என்னுடைய இடத்தில் அவளை இருத்தனால் விளங்குமோ? மே 4 காலை ஓருவாறு 7.30 மணியாகியது. நான் இம்முறை ஐரோப்பியனாகப் போவதால் குடியகல்வு சுலபமக இருந்தது. நாங்கள் இருவரருமே எமது பயணத்தை யாருக்குமே அறிவிக்கவில்லை. அதிசயாமக எனது சகோதரங்கள் முன் நிற்கவே ஆசைப்பட்டேன். காலை 9.30 ற்கு குவைத் எயார்வேஸ் எம்மைச் சுமந்து ஓடு பாதையில் ஓடி மேலே எழுந்தது.

தொடரும்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

. எனது வழிகாட்டி மெய்ப்பாதுகாவலரிடம் குழம்பக்கூடாது என்று மனவி சொல்கேட்டு இருவரும் தொடரூந்து நிலயம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். 5 நிமிடத்தல் பரிஸ் சார்ல்ஸ் டு கோல் சர்வதேச விமான நிலயத்தில் நின்றோம். .

தொடரும்

நெருங்கிட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

மனைவி மெய் பாதுகாவலாளியாய் வழி காட்டியாய் . :D .......பத்திரமாய் கொண்டுவந்து சேர்த்து விடுவார்.

தொடருங்கள். தினமும் பதியுங்கள்.

  • தொடங்கியவர்

நெருங்கிட்டம்

என்னத்தில் :D:D:D:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் கோமகன்! பயணத்தின் ஆரம்பமே நன்றாக இருக்கின்றது!!!

  • கருத்துக்கள உறவுகள்

5209313444_f83ca7ce79.jpg

கோமகன், ஊரில் உள்ள உறவினர்களுக்கு கொண்டு போக..... பரிசில் உள்ள டியூட்டி ஃFபிரீயில் ஒண்டும் வாங்கவில்லையா? :D

தொடருங்கள் கோமகன். வாசிக்க ஆவலாக உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் கோமகன்.

பார்த்ததை, பாதித்ததை பகிர்ந்துகொள்ளுங்கள்.

ஏதும் உள் நோக்கம்?

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் நண்பரே! வாழ்த்துகள். :)

  • தொடங்கியவர்

மனைவி கண்ணை மூடிக்கொண்டு பேசாமல் இருந்தா.

"என்ன பயமோ?"

"என்னதான் இருந்தாலும் இப்ப எங்கட உயிர் ஓட்டுறவற்ற கையுக்கள்ள கதைக்காமால் வாங்கோ".

விமானம் தன்னை நிலைப்படுத்தி மேகக்கூட்டங்களிடையே சீறிப் பாய்ந்தது. இப்பொழுது தான் மனைவி கண்ணைத் திறந்தா.என்னதான் துணிவானவர்களானுலும் இந்த நேரத்தில் தியானிப்பரர்கள்.கீழே பரந்து வயல்வெளிகள் பச்சைக்கம்பளமாக விரிந்தன. என் மனமோ பின்னோக்கிப் பாய்ந்தது. விடலைப் பருவத்தில் வீட்டைப் பிரிகின்ற ஏக்கத்துடன் கண்களில் கண்ணீர் ஒழுக கட்டுநாயக்கா விமானநிலயத்தால் வெளியேறி, ஜேர்மனி வந்து, ஒவ்வொரு இடமாக அல்லாடி அப்பொழது தான் அகதி வாழ்வின் வலி சுட்டது, பின்பு 87களில் பிரான்ஸ் வந்து ஒரு வருடத்தில் அகதி முத்திரை எனது முகத்தில் ஆழமாகக் குத்தியதும், அதுவே வாழ்வின் விதியாகி இழப்புகளையும் வேதனைகளையும் ஆழ மனதில் உழுது மனதே ரணகளமாகியதை யாருமே அறியமாட்டார்கள். மற்றவர்கடைய அழுகையையும் சோகத்தையும் ஆற்றிய எனக்கு எனது வலிகளுக்கு மருந்து போட யாருமே இல்லை. வந்து 6 மாதத்தில் அப்பாவையும் பின்பு போனவருடம் எனது முதல் மொழியையும் காலச்சக்கரத்தின் ஆட்டத்தில் தொலைத்தபொழுது வெறுமையே வெறுமையாகிப் போனது.

"என்ன மலரும் நினைவுகளோ"?

மனைவியின் குரல் கலைத்தது. எனது கண்களில் இருந்த கண்ணீரைப் பார்த்துப் பதறிப்போய் விட்டா.

"என்ன சின்னப் பிள்ளையள் மாதிரி , கொஞ்சநேரத்திலை எல்லாரையும் பாக்கத்தானே போறம்".

சரி,

"எல்லோரும் பழைய மாதிரி இருப்பார்களா"? "நான் பாத்த இலங்கை பரித்திதுறையில் வீதியில் ஊர்ந்த கவசவாகனங்களும், சோதனைச் சாவடிகளும் தானே அதன் பின்பு இப்ப தானே போறன் . இவங்களை நினைச்சாலே என்னமோ பண்ணுது".

"இப்ப அப்படி எல்லாம் இல்லை நீங்கள் கண்டதையும் யோசிக்காதையுங்கோ" .

என்று என்னை மனைவி சமாதனப்படுத்தினா. விமானம் குவைத் சர்வதேச விமான நிலயத்தில் இறங்கத் தன்னைத் தயார்ப்படுத்தியது. மனைவியும் மீண்டும் விமானத்தை ஓட்டுபவரை நினைத்தா. கால்வாசியாக வந்த விமானம் குவைத் இலங்கைத் தொழிலாளர்களால் நிறைந்து வழிந்து. எல்லோருக்கும் உறவுகளைப் பார்க்கும் சந்தோசம். விமானமே சந்தைக்டையாக மாறியது. எனக்கோ தலைஇடியாக இருந்தது.நீண்ட நேரப்பயணம் அசதியாக இருந்தது.கண்கள் இரண்டும் நித்திரையின்மையால் சிவந்து போய் இருந்தன. பலர் பெண்களாகவே இருந்தனர். எல்லோரும் குடிவரவு விண்ணப்பத்தை நிரப்புவதில் மும்மரமக இருந்தார்கள். சிலருக்கு நிரப்பவே தெரியவல்லை. இவர்களது அறியாமை அரபுகளுக்குக் குறைந்த தினார்களாகவும், அரசயல்வாதிகளுக்கு அரசியலாகவும் போவதை நினைக்க மனது கனத்தது. இவர்களும் எங்களைப் போல் தானே வெய்யிலிலும் குளிரிலும் அல்லாடுவரர்கள். நேரம் அதிகாலை 4 மணி. விமானம் பண்டரநாயக்கா சர்வதேச விமானநிலயத்தில் தன் கால்களை அகலப்பரப்பி வேகமாக இறங்கி ஓடுதளத்தில் ஓடி நின்றது.

தொடரும்

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி கோமகன் அண்ணா உங்கள் பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்கடைய அழுகையையும் சோகத்தையும் ஆற்றிய எனக்கு ,

எனது வலிகளுக்கு மருந்து போட யாருமே இல்லை

உள்ளம் தொடும் வரி .எல்லோருக்கும் இப்படிதான் வாழ்க்கை.............. தொடருங்கள்.

  • தொடங்கியவர்

"எதற்கும் பயப்பிடாமல் துணிவாய் வாங்கோ நான் இருக்கிறன்".

எனக்கோ கைகால் வேர்த்தது. பார்தீபனுக்குப் பின் மாலையுடன் செல்லும் வடிவேலு போல மனைவியைப் பின்தொடர்ந்தேன் . குடிவரவுப் பகுதியில் நாங்கள் நின்றோம். மனைவியை முன்னே விட்டு நான் பின்னால் நின்றேன். எங்கள் முறை வந்தது. மனைவி கடவுச்சீட்டை நீட்டினா. மேலும் கீழும் பார்த்துவிட்டு வருகைக்கு முத்திரையை அடித்துக் கொடுத்தார் அந்த அதிகாரி. எனது முறை எனது கடவுச்சீட்டை நீட்டினேன். காலைவணக்கம் சொன்னார், பதிலுக்கு நானும் சொல்லி வைத்தேன். வடிவாகப் பார்த்துவிட்டு,

"முதன் முறையாக இலங்கை வருகின்றீர்களா"?

"ஆம்".

"இலங்கை உங்களை அன்புடன் வரவேற்கிறது, உங்களை வரவேற்பதில் மகிழ்சி அடைகின்றோம்".

என்னை என்னால் நம்பமுடியவில்லை. நான் காணுவது கனவா இதன்பின்னால் ஏதாவது வில்லங்கம் இருக்குமோ?. ஒரு புன்னகையை அவரிற்கு பொதுவாக வளங்கினேன். வருகையைப் பதிந்து புன்னகையுடன் எனது கடவுச்சீட்டைத் திருப்பித் தந்தார் அந்த அதிகாரி. இனித்தானே அடுத்த கண்டம், மனைவி சொல்படி அவாவைப் பின்தொடர்ந்தேன்.

"நான் எதிர்பார்த்தது ஒன்றுமே நடக்கவில்லை, இந்தமுறை ஒருத்தரையும் காணேல அதிசயமாய் கிடக்கு".

மனைவி சிரிப்புடன் என்னுடன் சேர்ந்து நடந்தா.

"என்ன காணேல"?

"குற்றப்புலனாய்வுத்துறையும் தலையாட்டியும் தான்".

"என்னெண்டு உமக்குத் தெரியும்"?

"அது ரெக்னிக் உங்களுக்குத் தெரியாது".

மனைவி தன்னுடைய பதவியைக் காட்டத் தொடங்கி விட்டா.

அந்தக் காலை வேளை எங்களைச் சுமந்து பம்பலப்பிட்டி நோக்கி விரைந்தது ரக்சி.

கொழும்பு நிறையவே மாறியிருந்தது. ஏர்ரெல் விளம்பரத் தட்டிகளும், போரின் வெற்றி விழாக் கொண்டாட்டங்களின் விளம்பரத் தட்டிகளும் அதில் மகிந்தரின் ட்றகுல்லாச் சிரிப்பும் மனதைப் பிசைந்தன. ஏதும் அறியா அப்பாவிகளில் தூசி விளாது போரை எதிர்கொண்ட நாங்கள் எங்கே? இந்த ஐந்தறிவு மகிந்தா எங்கே? 25க்கும் அதிகமான கூட்டாளிகளுன் சேர்ந்து பத்துடன் பதினொன்றாக இருந்த மகிந்தா குலைப்பது தான் கலிகாலமோ? ரக்சி களனிப் பாலத்தின் மேல் ஓடிக்கொண்டருந்தது. களனி அமதியாக ஓடிக் கொண்டிருந்தது. உன்னில் தானே ஜேவிபி இளைஞர்களும் தமிழ் இளைஞர்களும் மிதந்தார்கள். நாற்காலி இனபேதம் பார்பதில்லையோ? எல்லோரும் தானே இந்த உழுத்த நாட்டின் தலைவிதியை மாற்ற போராடினோம். ரோகண விஜயவேரவின் காலத்துடன் ஜேவிபி எலும்புத்துண்டுகளுக்குத் தாளம் போட நாங்கள் தானே முழுமூச்சாக நின்றோம். ஏன் எங்கள் நியாயத்தைபுரிகின்றார்கள் இல்லை?

ரக்சி மனைவியின் நண்பி வீட்டின் முன்பு நின்றது. நண்பிகளின் கலகலப்பான உரையாடல்களில் மனம் ஒட்டாது தனிமையை நாடியது. சிகரட்டை எடுத்துக் கொண்டு வீட்டு பல்கனிக்கு வந்தேன். காலை வேளை இளஞ் சூரியன் சுட்டது. எதிரே இந்து சமுத்திரம் அமைதியாக விரிந்து கிடந்தது. தேமாப்பூவும் வண்ணக் குரோட்டன்களும் அலரிப்பூக்களும், துள்ளித் திரிந்த அணில் பிள்ளைகளும் மனதை வருடின. மனைவியின் நண்பி கோப்பி சுடச்சுடக் கொண்டுவந்து தந்தா. கோப்பியைக் குடித்தவாறே சிகரட்டைப் பற்றவைத்து புகையை ஆழ இழுத்தேன். பலர் கடற்கரையில் நடைப்பயிற்சி செய்வது தெளிவாகத் தெரிந்தது. கடலில் தூரத்தே சரக்குக் கப்பல் ஒன்று போய்க் கொண்டிருந்தது. கரையில் கால்வாசி பச்சை நிறமாக இருந்தது. இதேபோல ஒரு காலையில் தானே கடல் தாண்டவம் ஆடியது. எவ்வளவு இளப்புகள்? அதிலும் கிழக்கில் மனிதத்தைத் தானே காட்டினோம்? மனிதம் இவர்களுக்குப் புரியாதோ? சிங்க வம்சத்திடம் மனிதத்தை எதிர்பார்த்தது எங்கள் பிளையோ?

வீதியில் பெண்கள் கப்பாயம் கட்டி அலவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தார்கள். வெசாக் பண்டிகையின் வெளிச்சக் கூடுகள் வரிசை கட்டி நின்றன. எனக்கு பிரான்ஸில் அரபுக்களின் நிலைப்பாடும் சார்க்கோசியின் நடவடிக்கைகளும் நினைவுக்கு வந்தன. இவைகள் மற்றயவர்களின் மனதைப் புண்படுத்துமே ஒழிய வளப்படுத்தாது.

இரவு 6 மணியாகியது மனைவி யாழ்பாணத்திற்கு போக சொகுசு பஸ்சில் பதிவு செய்து வைத்திருந்தா. நாங்கள் யாழ்ப்பணத்தை நோக்கி புறப்பட தயாரானோம்

தொடரும்.

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அதில் மகிந்தரின் ட்றகுல்லாச் சிரிப்பும் மனதைப் பிசைந்தன

சரியான கணிப்புத்தான்.

என்ன கோ.....மகன் அந்தரத்தில விட்டிட்டியள்...............

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் அண்ணா மிகுதி கொஞ்சம் எழுதிப் போட்டு திண்ணையில் போய் நின்று பேசுங்கோ :lol::lol:

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலை RER B செவரோன் பக்கம் இருக்கிறீங்கள்போலை. சிறீலங்கா இமிக்கிறேசனிலை உங்களை பிடிச்சு உருட்டி பிரட்டி நாலு கேள்வி கே;காமல் விட்டது கவலையாய் இருக்கு சரி தொடருங்கள். :lol:

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.