Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகம் தஞ்சை மாவட்டத்திற்கு வந்த 184 சிங்களவர்கள் விரட்டியடிப்பு! (படங்கள் )

Featured Replies

நான் நினைக்கின்றேன் நாங்கள் வென்று விட்டோம் என்று...தமிழ்நாட்டு தமிழரின் வீரம் கொஞ்சம் கொஞ்சமாக கிளம்புகின்றது...

சிறு அக்னி குஞ்சு...பற்றி எரிய தொடங்குகிறது...

ஊரிலிருக்கும் ஒவ்வொரு தமிழனுக்கும் அடி விழலாம். இனவாதத்திற்கு மேலும் வலுவூட்டுவதாகவே அமையும். இந்தியாவே ஒரு கேவலங்கெட்ட நாடு அத்துடன் அநேக தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் கடும் சுயநலக் காரர்கள். நாங்கள் இளிச்ச வாயர்கள் என்பதும் அவர்களுக்கு தெரியும்.

[size=4]இன்றும் எந்த தமிழனுக்கும் அங்கு அடி விழலாம் என்ற நிலை உள்ளது. அத்துடன், யாரையும் கடத்தலாம், கொல்லலாம்.தமிழக நிகழ்வுகளால் சில இடங்களில் சில அதிகரித்த ஆபத்துக்கள் உருவாகினாலும் இது சிங்கள அரசுக்கு ஒரு பாடமாகவே நான் பார்கிறேன். அதாவது 'தமிழகர்களுக்கு சம உரிமைகளை வழங்கியே ஆகவேண்டும்' என்பதே. [/size]

[size=4]தமிழக அரசியல்வாதிகள் சுயநலவாதிகளே. ஆனால், மக்கள் அவ்வாறு இல்லை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, நாங்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி வந்திட்டம், ஊரில இருக்கிறவனுக்கு அடி விழுந்தால் என்ன, உதை விழுந்தால் என்ன <_< .

மக்கள் சுயநலமில்லாமல் இருக்கலாம் ஆனால் அவர்களை யாரும் இலகுவில் வாங்கி விடலாம் என்பது உண்மை. சினிமா மோகத்திலே மூழ்கிக் கிடக்கும், நடிகர்களைக் கடவுளாக வணங்கும் பெரும்பான்மையைக் கொண்ட தமிழ் நாட்டை நம்பினால் உருப்பட்ட மாதிரித் தான். மிகப்பெரிய நாடான இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ் நாடு ஆணியே புடுங்க முடியாது. தண்ணீர்ப் பிரச்சனை, மின்சாரப் பிரச்சனை எண்டு அவங்களுக்கே ஆயிரம் சோலிகள் இருக்கு :huh: .

அது சரி, நாங்கள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடி வந்திட்டம், ஊரில இருக்கிறவனுக்கு அடி விழுந்தால் என்ன, உதை விழுந்தால் என்ன <_< .

[size=4]நான் கூறியது அவர்களுக்கு இதனால் தான் அடிவிழும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்பதே. அங்கு கடந்த மூன்று வருடங்களாக அடி, உதை, கொலை, வன்புணர்வு, கப்பம்... என எல்லாமே தமிழர்களுக்கு எதிராக அதிகரித்து வருகின்றது. அதனால் தான் இன்னும் மக்கள் ஓட முனைகிறார்கள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆக மிச்சம் ஒரு பிரியாணி பாசல் காணும் .

சரி பிழைகளுக்கு அப்பால், அவர்கள் தமது உணர்வுகளை வெளிக்காட்டுவதை

பிரியாணி பாசலுக்காய் என்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தெரியாத நீங்கள் போராட்டம் குறித்து வகுப்பெடுப்பதை வெட்ககேடாக நினைக்கிறோம். மற்றவர்கள் உங்களையும்,நீங்கள் சார்ந்த கட்சியையும் சோத்துப்பாசல் என்பது தவறில்லையோ என்று கருதும் அளவுக்கு தாங்களின் நடவடிக்கை உள்ளது, எதற்கும் தங்கள்,தங்கள் சார்ந்த கட்சியின் கடந்த கால வரலாறுகளை மனதில் இருத்தி கருத்து எழுதுங்கள்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

வீரமிருந்தால் சிறிலங்கா ஹைக் கொமிசனை போய் உடைக்கின்றது அங்கு தான் சிங்கள அரசு அதிகாரிகள் இருக்கின்றார்கள் .

கனடாவில இருக்கிற கைகொமிசனுக்குள்ள நீங்கள் பாய்ந்து காட்டினால் அவர்கள் பின்தொடர்வார்கள்.

செய்பவனுக்கு என்ன செய்யவேணும் என்று தெரியும்.

அதுக்கு மேலே ஏதும் புடுங்க தெரிந்தால் முதலில் புடுங்கி காட்டுங்கள்.

இந்த வாய்ச்சவடால் அடிக்கிறதை தவிர வேறு ஏதும் தெரிந்தால் செய்து காட்டலாம்.

ஆக மிச்சம் ஒரு பிரியாணி பாசல் காணும் .

நீங்கள் சாப்பிடாத புரியாணி பாசலா.................... :icon_mrgreen: :icon_mrgreen:

சிங்கள பொதுமகனை அடிக்க நான் என்ன முட்டாள் பயலா ?

எமது கிரிக்கெட் டீமில் சிங்களவர்கள் சிலரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் .

வைக்க கூடாத கை வைத்து ------------ கிடக்க முடியாது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் வாதிகளுக்கு இது அரசில் தலைகுனிவு,- அப்படித்தான் நடிக்க வேண்டும்- மனோ கணேசன் அறிக்கை விட்டு விடார், இனி சம்பத்தரும் விடுவார்..........................,

,ஆனால் இதை ஒரு தனியான ஒரு நிகழ்வாக பார்க்காமல், விமல் வீர வன்ச சொல்லுவது போல் மத்திய அரசினதும், மாநில அரசினதும் வேலை என்றுதான் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் இலங்கை அரசு தனது ஆட்களை பயணம் செய்ய வேண்டாம் என்று சொன்னால் பிறகும் நடந்தது- எதோ மறை முக செய்தி உண்டு என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

அது தமிழருக்கு சாதகமாக, அல்லது இதனால் வரும் விளைவுகளை மத்திய அரசோ, மாநில அரசோ தடுக்கும் என்று சின்னபிள்ளத்தனமாக நினைக்க கூடாது. அதே நேரத்தில் பெரியளவில் இதே மாதிரி செய்வது இலங்கைக்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். ஆனால் இதைவிட "வெளியில் சத்தம் போடாமல்" பல மடங்கு செய்யலாம், செய்து கொண்டுதானே இருக்கிறார்கள். அதில் மற்றம் வர அங்குள்ளவர்கள் அரசியல் செய்யவேண்டும். அவர்கள் பாவம் தங்களுக்குள் பட்டமளிப்பு செய்து கொண்டிருக்கவே நேரம் இல்லாமல் இருக்கிறார்கள்.

சிங்கள பொதுமகனை அடிக்க நான் என்ன முட்டாள் பயலா ?

எமது கிரிக்கெட் டீமில் சிங்களவர்கள் சிலரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் .

வைக்க கூடாத கை வைத்து ------------ கிடக்க முடியாது .

இருந்தாலும் பிளொட் செய்யாததல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்கள பொதுமகனை அடிக்க நான் என்ன முட்டாள் பயலா ?

எமது கிரிக்கெட் டீமில் சிங்களவர்கள் சிலரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் .

வைக்க கூடாத கை வைத்து ------------ கிடக்க முடியாது .

இந்த வார்த்தைப் புயல் யாழ்களத்துக்குள் நுளைவதே வெறியில கிக் ஏறும் போதுதான்.

வெறியில் இப்படி வார்த்தைகள் விட்டு விட்டு கோர்த்தால் புரிவதர்க்கும் கிக் ஏற்ற வேண்டும் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடலிலே தன்னுடைய உறவுகள் சிங்கள இராணுவத்தால் வேட்டையாடப் பட்ட போது கூட அமைதி காத்த தமிழ்நாடு இன்று இப்படி ஒரு வழியை நாடி இருக்கின்றார்கள் என்றால் அதற்கு இந்திய மத்திய அரசின், மக்களின் உணர்வுவெளிப்பாடுகளை செல்லாக்காசாய் நினைத்த அந்தப் போக்கு ஒன்றேதான் காரணம்!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சாப்பிடாத புரியாணி பாசலா.................... :icon_mrgreen: :icon_mrgreen:

பழக்க தோஷம்தானே வார்த்தைகளிலும் வரும்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மீனவர்களைச் சிங்களப் படைகள் நடுக்கடலில் வைத்துத் தாக்கியதற்கு எதிராக உணர்வுள்ள தமிழ் நாட்டு மக்கள் அங்கு வரும் சிங்களச் சிப்பாய்களின் உறவுகளைத் தாக்குகின்றனர்.

இதற்கும் ஈழத் தமிழர்களுக்கும் அவர்களுடைய பிரச்சனைக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது.

இந்த நேரம் ஈழத் தமிழர்களைத் தாக்குவதற்கு மகிந்த முட்டாளும் அல்ல.

அப்படித் தாக்கினாலும் நான்காம் உலக மகா யுத்தம் ஆரம்பித்த மாதிரித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பொதுமகனை அடிக்க நான் என்ன முட்டாள் பயலா ?

எமது கிரிக்கெட் டீமில் சிங்களவர்கள் சிலரும் விளையாடிக்கொண்டுதான் இருந்தார்கள் .

வைக்க கூடாத கை வைத்து ------------ கிடக்க முடியாது .

உங்களுடைய அறிவுக்கு அப்படி செய்யுங்கள் என்று யாராவது சொல்வார்களா?

உங்கள் அறிவை அலசி அரசியல் செய்து இதை செய்யுங்கோ என்று நீங்கள் மற்றவருக்கு சொன்னதை. நீங்கள் வழிகாட்டியாக முன்னுக்கு சென்று செய்யுங்கள் என்றுதான் சொன்னோம்.

தமிழ் நாட்டு மீனவர்களைச் சிங்களப் படைகள் நடுக்கடலில் வைத்துத் தாக்கியதற்கு எதிராக உணர்வுள்ள தமிழ் நாட்டு மக்கள் அங்கு வரும் சிங்களச் சிப்பாய்களின் உறவுகளைத் தாக்குகின்றனர்.

இதற்கும் ஈழத் தமிழர்களுக்கும் அவர்களுடைய பிரச்சனைக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது.

இந்த காரணத்தை சொல்லி சிங்களவனை கலைத்திருந்தாலாவது தமிழ்நாட்டு தமிழனை பார்த்து சிங்களவன் பயப்பட வழி இருந்திருக்கும் ...

இப்போது எல்லா தமிழ்நாட்டினரையும் (முன்பு அரசியல் வாதிகளை மட்டும் ) கோமாளிகள் என்று தான் சொல்லி சிரிப்பார்கள் ...ஏனென்றால்

தமிழ்நாட்டுக்கு போகும் சிங்களவர்கள் தமிழர்களோடு பழகுபவர்களாக இருப்பார்கள்..அவர்களுக்கே அடித்தால் என்ன சொல்லுவது...

தமிழ்நாட்டுக்கு போகும் சிங்களவர்கள் தமிழர்களோடு பழகுபவர்களாக இருப்பார்கள்
உங்களுக்கு அப்படி நினைக்க உரிமை உண்டு. மற்றவர்களுக்கு அவர்கள் மகிந்தா மாதிரி வேண்டாத இடத்திற்கு சென்று சண்டித்தனம் காட்டுபவர்களாக எடுத்துக்கொள்ள உரிமை உண்டு. மகிந்தா எது நடந்தாலும் தான் மத்திய பிரதேசம் போவதாக சபதம் செய்திருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முதல் பிக்குகள் சென்னையில் காட்டிய ஆர்ப்பாடம் மறக்க முடியாதது,

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.