Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10,000 பதிவுகளை தந்த விசுகு அண்ணாவிற்கு வாழ்த்துக்கள்...........!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவரசங்களையும், வெளிப்படுத்தக் கூடிய, ஒரு கருத்தாளர், நீங்கள்!

ஒளிவு, மறைவில்லாத பதிவுகள்! அது எனக்குப் பிடித்தது!

ஆனால், இரண்டு கவலைகள் எனக்கு உண்டு!

முதலாவதாகத், துளசியின் வரிசையில் நாலாவதாகப் போய் விட்டீர்களே என்று!

இரண்டாவது, இந்த நாலுக்குள்ளும், சுண்டலைக் காணவில்லையே என்று! :icon_idea:

வாழ்த்துக்கள், விசுகர்!!!

:D :D.

அவன் அவனுக்கு ஆயிரம் கவலைகள் நம்ம புங்க்ஸ் அண்ணாக்கு ஏதோ கவலை முடியல்ல.....:D

  • Replies 88
  • Views 8.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல ஆயிரம் கருத்துக்களை எழுத நல்வாழ்த்துக்கள், விசுகு அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவிற்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எனது யாழ் குடும்பமே.

முதலில் நன்றி மோகன் அண்ணாக்கு

ஆரம்ப காலத்தில் எம்போன்றோர நிலை எடுக்கும்வரை செய்த குற்றங்களை தாங்கிக்கொண்ட நிலம் அவர்.

அடுத்து

நிழலி இணையவன் இரண்டும் இரு தூண்கள்.

நிழலி ஆடிப்பாடி ஆனால் காரியத்தில் கண்ணாக இருப்பார்.

இணையவனை எனக்கு அந்த மூன்று குரங்கு படங்களுடன்தான் ஒப்பிட விருப்பம்.

ஒன்றையும் பார்க்காது ஒன்றையும் கேட்காது ஒன்றையும் பேசாது இருந்து கொண்டு பொறுத்த இடத்தில் போட்டுத்தாக்கிவிடுவார்.

நீடூழி வாழ்க ஐயாக்கள் மூவரும்.

அடுத்து

யாழுக்கு நான் வந்ததை பலமுறை எழுதிவிட்டேன்.

தமிழன் தள்ளாடி நின்றவேளை எல்லாப்பக்கமும் வஞ்சகமும் கொடூர கரங்களும சுத்திநின்று அடிமையாக வாழத்தயாராகு என்றபோது இளைப்பாற ஒரு மரம் தேடிவந்தேன். யாழ் எனக்கு ஆலமரமானது.

உங்கள் ஒவ்வொருவரதும் கருத்து பதில் எழுதமுன் ஒரு வேண்டுகோள்.

வாழ்த்தோடு

நிறைகளையும் குறைகளையும் (நெடுக்கு எழுதியுள்ளது போல்)

எப்படி எமக்குள்ளான எழுத்து ஆரம்பமானது (துளசி எழுதியுள்ளது போல்)

போன்றவற்றையும் எழுதுங்கள்.

எனது யாழ் வாழ்க்கை யாழுள்ளவரை தொடரும்.

எனவே என்னை சீர்தூக்கி பார்க்க இது உதவும்.

நான் ஒரு விடயத்தில் மட்டுமே சிலருடன் முரண்பட்டுள்ளேன்.

அது தமிழரின் உரிமை மற்றும் அதற்காக தம்மைக்கொடுத்தோர் பற்றிய தவறான பார்வைக்காக மட்டுமே.

மற்றும்படி

எனது எழுத்துக்கள்

நான் கண்டவை

சந்தித்தவை

அனுபவங்கள் மற்றும் குடும்பவாழ்க்கை பற்றியதே. அதுவே இன்றைய தேவை எனக்கருதுகின்றேன்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரம் பதிவுளை யாழ்களத்திற்கு தந்த விசுகு அண்ணாவிற்கு நன்றிகளும் பாராட்டுக்களும். இன்னும் பல ஆயிரம் பதிவுகளை தந்திட வாழ்த்துக்கள்........!

நன்றி தமிழ் இனி பதிவுக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும்.

எங்கள் யாழ் குடும்ப இளவரசியால் தொடங்கப்பட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.

தற்போது தாங்களும் அதிகம் எழுதத்தொடங்கியிருக்கிறீர்கள். தொடர வாழ்த்துக்கள்.

அச்சம் வேண்டாம். அண்ணன்மார் உள்ளோம்.

ஆனால், இரண்டு கவலைகள் எனக்கு உண்டு!

முதலாவதாகத், துளசியின் வரிசையில் நாலாவதாகப் போய் விட்டீர்களே என்று!

இரண்டாவது, இந்த நாலுக்குள்ளும், சுண்டலைக் காணவில்லையே என்று!

:o:D:lol:

என்ன கவலை அண்ணா உங்களுக்கு... :lol: நீங்கள் எங்களை கொழுவி விட பார்க்கிறீர்களே.... :icon_idea:

அண்ணா, அதுக்கு நான் ஒண்டும் செய்ய ஏலாது.... நான் விசுகு அண்ணாவை பார்க்க முன்னமே அதற்கு மேலுள்ள 3 நபர்களையும் பார்த்து அவர்களை எனக்கு பிடித்து விட்டது......

இன்னொரு திரியில் முதல் 6 நபர்களையும் எழுதியிருக்கிறன்... அதற்குள்ளும் சுண்டல் அண்ணா இல்லை....

யாழுக்கு வரும் போதே முதலில் அகூதா என்ற பெயர் தான் என்னை ஈர்த்தது....

நான் வந்து ஒரு மாதத்தில் மோகன் அண்ணா பொறுப்புகளை நிழலி அண்ணாவிடம் ஒப்படைத்து விட்டார். ஆனாலும் அதற்குள் அவர் எனக்கு ஒரு திரியில் உதவி செய்திருந்தார். அத்துடன் அவரின் அமைதி எனக்கு பிடித்திருந்தது. மற்றவர்கள் மோகன் அண்ணாவை பற்றி கூறியவற்றை வாசித்து அவர் மேல் மதிப்பு அதிகரித்தது...

அடுத்து நிழலி அண்ணாவை ஒரு நிர்வாகத்தவராக எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. நிழலியாக பார்க்க போனால் அவர் கருத்துகளில் பெருமளவில் எனக்கு உடன்பாடில்லை. அதுபோல் அவருக்கும் பெருமளவிலான என் கருத்துகளில் உடன்பாடில்லை. ஆனாலும் சாதாரணமாக பழகும் போது மிகவும் நல்ல மனிதர். நிழலி அண்ணாவுடன் சண்டை பிடித்து விட்டு யாழை விட்டு விலகுவதாக கூறி பின்னர் மீண்டும் வந்ததும் அதே நாள் திண்ணையில் என்னுடன் மகிழ்ச்சியாக உரையாடினார். :) அதன் பின்னும் நிழலி அண்ணாவோட சில திரிகளில் சண்டை பிடித்தாலும் அவரை இடைக்கிட சீண்டினாலும் :D அவர் என்ட செல்ல அண்ணாக்களில் ஒருவர்..... :) திரியை விட்டு வெளியில் வந்தவுடன் நடந்ததை நானும் மறந்து அவரும் மறந்து திண்ணையில் மகிழ்ச்சியாக உரையாடுவோம்.... (அந்த குணம் யாழில் பெருமளவு நபர்களுக்கு இல்லை... அதனால் நிழலி அண்ணா மேல் இன்னும் எனக்கு மதிப்பு உயர்ந்து விட்டது )

சுண்டல் அண்ணாவை இப்ப கொஞ்ச நாளா தான் எனக்கு தெரியும். மிகவும் நகைச்சுவையாக உரையாடுவார். ஆனால் புதியவர்களை பார்த்ததும் பழையவர்களை என்னால் மறக்க முடியாது. :) அதற்காக சுண்டல் மச்சி கோவிச்சிடாதையுங்கோ...... :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன துளசி, எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்கொண்டு! :D

எனக்கும் நீங்கள் சொன்ன எல்லாரையும் பிடிக்கும்! நீங்களும், சுண்டலும் உட்பட! :)

  • கருத்துக்கள உறவுகள்

:o:D:lol:

என்ன கவலை அண்ணா உங்களுக்கு... :lol: நீங்கள் எங்களை கொழுவி விட பார்க்கிறீர்களே....

அண்ணா, அதுக்கு நான் ஒண்டும் செய்ய ஏலாது.... நான் விசுகு அண்ணாவை பார்க்க முன்னமே அதற்கு மேலுள்ள 3 நபர்களையும் பார்த்து அவர்களை எனக்கு பிடித்து விட்டது......

இன்னொரு திரியில் முதல் 6 நபர்களையும் எழுதியிருக்கிறன்... அதற்குள்ளும் சுண்டல் அண்ணா இல்லை....

யாழுக்கு வரும் போதே முதலில் அகூதா என்ற பெயர் தான் என்னை ஈர்த்தது....

நான் வந்து ஒரு மாதத்தில் மோகன் அண்ணா பொறுப்புகளை நிழலி அண்ணாவிடம் ஒப்படைத்து விட்டார். ஆனாலும் அதற்குள் அவர் எனக்கு ஒரு திரியில் உதவி செய்திருந்தார். அத்துடன் அவரின் அமைதி எனக்கு பிடித்திருந்தது. மற்றவர்கள் மோகன் அண்ணாவை பற்றி கூறியவற்றை வாசித்து அவர் மேல் மதிப்பு அதிகரித்தது...

அடுத்து நிழலி அண்ணாவை ஒரு நிர்வாகத்தவராக எனக்கு அவ்வளவாக பிடிப்பதில்லை. நிழலியாக பார்க்க போனால் அவர் கருத்துகளில் பெருமளவில் எனக்கு உடன்பாடில்லை. அதுபோல் அவருக்கும் பெருமளவிலான என் கருத்துகளில் உடன்பாடில்லை. ஆனாலும் சாதாரணமாக பழகும் போது மிகவும் நல்ல மனிதர். நிழலி அண்ணாவுடன் சண்டை பிடித்து விட்டு யாழை விட்டு விலகுவதாக கூறி பின்னர் மீண்டும் வந்ததும் அதே நாள் திண்ணையில் என்னுடன் மகிழ்ச்சியாக உரையாடினார். :) அதன் பின்னும் நிழலி அண்ணாவோட சில திரிகளில் சண்டை பிடித்தாலும் அவரை இடைக்கிட சீண்டினாலும் :D அவர் என்ட செல்ல அண்ணாக்களில் ஒருவர்..... :) திரியை விட்டு வெளியில் வந்தவுடன் நடந்ததை நானும் மறந்து அவரும் மறந்து திண்ணையில் மகிழ்ச்சியாக உரையாடுவோம்.... (அந்த குணம் யாழில் பெருமளவு நபர்களுக்கு இல்லை... அதனால் நிழலி அண்ணா மேல் இன்னும் எனக்கு மதிப்பு உயர்ந்து விட்டது )

சுண்டல் அண்ணாவை இப்ப கொஞ்ச நாளா தான் எனக்கு தெரியும். மிகவும் நகைச்சுவையாக உரையாடுவார். ஆனால் புதியவர்களை பார்த்ததும் பழையவர்களை என்னால் மறக்க முடியாது. :) அதற்காக சுண்டல் மச்சி கோவிச்சிடாதையுங்கோ...... :D

என்ன மாதிரி யாழ்ல strike ah அறிவிக்கவா? :D

என்ன துளசி, எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்கொண்டு! :D

அட நானும் பகிடியா சிரிச்சுக்கொண்டு தானே பதில் பதில் எழுதினான்...... :D விசுகு அண்ணா ஏன் நான்காம் இடத்தில் உள்ளார் இவரை விட மற்றவர்களை ஏன் அதிகளவில் பிடிக்கும் என்று கூறுவதற்கு இன்னொரு சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது. அதுதான் சந்தர்ப்பம் கிடைக்கும் போது பயன்படுத்திக்கொண்டேன். சந்தர்ப்பம் அமைத்து தந்த உங்களுக்கு நன்றி.... :)

எனக்கும் நீங்கள் சொன்ன எல்லாரையும் பிடிக்கும்! நீங்களும், சுண்டலும் உட்பட! :)

நன்றி அண்ணா... :)

சுண்டல் மச்சி இவருக்கு என்னையும் உங்களையும் பிடிக்குமாம். தப்பா திங் பண்ணிடாதையுங்க.... :lol::icon_idea:

Edited by துளசி

என்ன மாதிரி யாழ்ல strike ah அறிவிக்கவா? :D

:D :D

எனதினிய வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் பல கருத்துக்கள் எழுத வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகை, களத்தில் கண்டாலே... எல்லோருக்கும், குதூகலம். :D

முன்பு, திண்ணையில்... இவர் போடும், அலப்பரைக்கு அளவேயில்லை :lol:

களத்தில்... இவரின் எழுத்துக்கள் எப்போதும்... ஈழ விடுதலையைப் பற்றிய கருத்துக்களே... அதிகம்.

முகம் காணாத, இனிய உறவு, விசுகு. :)

நன்றி சிறி வாழ்த்துக்கும் அரவணைப்பாக கருத்துக்கும் பாசத்திற்கும்

சிறியை நான் சகோதரர் என்றோ தம்பி என்றோ எழுதுவதில்லை.

இருவரும் பல உறவு முறைகளை எழுத்துக்கள் கருத்துக்கள் மூலமாக எடுப்போம்.

அண்ணன் தம்பியாக ஒரு இடத்திலும் மச்சான்களாக இன்னொரு இடத்தில் அதே நேரத்திலேயே பேசுவோம். அந்த அளவுக்கு புரிந்துணர்வு எம்மிடம்.

கொடுத்து வைத்திருக்கணும் இவ்வாறு உறவுகளைப்பெறுவதற்கு.

நான் முகம் காண விரும்பும் ஒரு இனிய உறவு சிறி.

அவரே இத்திரியின் முதல் ஆளாக இருப்பது பாக்கியம் எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எனது அருமை அண்ணை பத்தாயிரம் பதிவைப் போட்டது உண்மையில மிச்சம் சந்தோசம். உங்களை மனசார வாழ்த்தி இதே பிடியை தொடந்தும் பிடியுங்கோ எண்டு வாழ்த்திறன் .

நன்றி கோ.

கருத்துக்கும் நேரத்திற்கும் ஊக்குவிப்புக்கும்.

இந்த கருத்துக்கு குமாரசாமியண்ணை விருப்பு வாக்குப்போட்டுள்ளார். அதை நான் புரிந்து உள்வாங்கிக்கொள்கின்றேன்.

கோ

பழக இனிமையானவர்.

அவரைப்பார்த்து நான் பொறாமைப்படும் ஒரு விடயம் மிகவும் ரசித்து ரசித்து பறவைகள் மீன் இனங்கள் பறவைகள் பூக்கள் இயற்கை என படங்கள் எடுத்து இங்கு இணைப்பது.

(எனக்கு இந்தப்பொறுமையில்லை)

முத்து முத்தாய் பத்தாயிரம் தித்திக்கும் முத்தமிழ் கருத்திகளைகளை சிந்திய செந்தமிழ் சிப்பி விசுககண்ணைக்கு வாழ்த்துகள்

நன்றி மல்லை

கருத்துக்கும் வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

உங்களை மாதிரி எல்லாம் சகலாகலா வல்லவன் இல்லையப்பா.

உங்கள் பலமுக திறமை கண்டு மலைத்துள்ளேன்.

தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி.

  • கருத்துக்கள உறவுகள்

10000 பதிவுகளை தாண்டிய வி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் ..மேலும் இப்போது போன்று பல யாதார்த்தமான உண்மையான கருத்துக்களையும் ,கருத்துச்செறிவுமிக்க ஆக்கனகளையும் வழங்க அந்த இறைவன் அவருக்கு அருள்புரிவாராக

நன்றி தம்பி

கருத்துக்கும் ஆசிக்கும்

இசையில் பெரும திறமையுள்ள நீங்கள் வளரணும்

அதை நான் பார்க்கணும். இனி இதுவே எனது வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தக் கருத்துக்களை எழுதிவிட்டுச் சென்றுவிடாமல் சக கருத்தாளர்களையும் அவர்களின்

கருத்துக்களையும் எழுதும் பாணியையும் கவனித்து அதற்கேற்ப அவர்களுடன் கருத்தாடி மகிழும் :D

விசுகு அண்ணை களத்தில் ஒரு வித்தியாசமான வைரக்கல்.

வாழ்த்துகள்

நன்றி வாத்தியார்

கருத்துக்கும் நேரத்திற்கும் வைரக்கல் பட்டத்திற்கும்

உங்களிடமிருந்து இதைப்பெறுவது அவ்வளவு சுலபமல்ல.

வாத்தியார்

நான் இங்கு பார்த்த வித்தியாசமான எழுத்தாளர் பெயருக்கு ஏற்றாப்போல்.

வந்தால்

கூட்டித்துப்பரவாக்கிவிட்டுத்தான் போவார்.(முகம் பார்ப்பதில்லை)

இவரிடம் இன்னும் எழுதணும் என கேட்டுக்கொள்கின்றேன். (எதற்காகவோ தெரியாது அடக்கி வாசிக்கின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு என்றபெயரில் மறைந்துள்ள முகம் தெரியாத அண்ணாவுக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

விசுகு என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று அறிய ஆவல்.

(பெயரில் உள்ள முதல் எழுத்துகளை கோர்த்துள்ளீர்களா அல்லது வேறு ஏதும் அர்த்தம் உள்ளதா??)

முடிந்தால் பகிருங்கள் அண்ணா.

நன்றி கயன்

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

வி.சு.கு.

விசுவலிங்கம் சுப்பிரமணியம் குகதாசன்.

நீங்களும் நேரமொதுக்கி அதிகம் எழுதணும்.

சமூக சேவைகளில் ஈடுபடுவது மகிழ்ச்சி தருகிறது.

தொடரட்டும் தங்கள் பணி.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசு அண்ணா. யாழ் களத்தில் நான் திண்ணையில் அடிக்கடி கதைப்பது இந்த விசு அண்ணாவோடு மட்டும் தான் முகமறியாத ஒரு நல்ல நண்பர்.

நன்றி தம்பி

நேரத்திற்கும் பாசத்துக்கும்

கிளியவன் நீங்கள் குறிப்பிட்ட நாடொன்றிலிருந்து எம்மோடு தொடர்பிலிருப்பது மட்டுமன்றி தாயகம் சார்ந்த கருத்துக்களில் எந்த விட்டுக்கொடுப்புமின்றி துணிந்து எழுதுவது பெரிய விடயம்.

கடவுள் உங்களுடன் இருப்பார் ராசா.

என் மீதான பாசத்துக்கு மீண்டும் நன்றிகள்.

ஒரு நாள் நாமெல்லாம்அந்த தாயக முற்றத்தில் கூடி மகிழணும். அதை காலம் செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா..

நன்றி புள்ளை

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

சும்மா எட்டி எட்டிப்பார்த்த யாயினி தற்போது கவிதை கருத்துக்கள் என எழுதத்தொடங்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது

தொடருங்கள்

அண்ணன்மார் அப்பாக்கள் இருக்கும் யாழில் தங்களுக்கு பெரும் ஊக்கமும் உதவியும் கிடைக்கும்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.

நன்றி இணையவன்

கருத்துக்கும் நேரத்திற்கும்

உங்களைப்பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகண்ணா...

நன்றி தம்பி

நேரத்திற்கும் வாழ்த்துக்கும்

கவிதை

கட்டுரை

இசை என தங்கள் வளர்ச்சி பெரும் சந்தோசம் தருகிறது.

ஆனாலும் உங்களை நினைத்து ஒரு பதட்டம் உண்டு. படிக்கும் வயதைத்துலைத்து விடுவீர்களோ என்று.

நல்ல செய்திக்காக காத்திருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அட விசுகு அண்ணாவும் 10 ஆயிரம் தாண்டியாச்சா!!!!!

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா தொடந்து லட்சம் தாண்ட வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரம்? நூறு நூறு?? ஆயிரம் பத்து??? பத்தாயிரம் பத்துக்களையும் எழுத வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

நன்றி நந்தன்

நேரத்துக்கும் வாழ்த்துக்கும்

பதிவுகள் எதையும் இட்டதாக தெரியவில்லை

முயற்சி செய்யுங்கள்.

நாமிருக்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

10,000 பதிவுகளை தாண்டிய விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துகள்..... :)

யாழில் எனக்கு பிடித்த நான்காவது நபர் நீங்கள். :)

1. அகூதா அண்ணா

2. மோகன் அண்ணா

3. நிழலி அண்ணா

4. விசுகு அண்ணா

உங்களை நான் முதல் முதல் சந்தித்தது சாத்திரி அண்ணாவின் திரியில் தான். அது மிகவும் சுவாரஸ்யமான சம்பவம். அங்கு உங்களுடைய ஒருகருத்துக்கு சிவப்பு குத்தப்பட்டிருந்ததும், இந்த கருத்துக்கும் சிவப்பா என்று கேட்க எனக்கும் சிவப்பு குத்தப்பட்டது. :D பின்னர் எனக்கும் சிவப்பு குத்தப்பட்டு விட்டது என்று நான் சொல்ல அதற்கும் சிவப்பு குத்தப்பட்டது. :D யாழில் நான் பெற்ற இரு சிவப்புகள் அவை என்பதால் அந்த சம்பவம் இன்னும் மறக்க முடியாமல் இருக்கிறது. :D உங்களையும் சிவப்பு குத்தியவரையும் அன்று தான் அவதானித்தேன். :D (சிவப்பு குத்தியவரும் நானும் இப்ப cool :))

நீங்கள் தமிழீழத்திற்காக உங்களை அர்ப்பணிக்கும் ஒருவர் என்பதை பின்னர் தான் கண்டேன். உங்களை "உரிமைக்குரல்" என்று யாழில் பலர் கூறுவார்கள். மிகவும் உண்மை. தமிழீழத்திற்காக கதைப்பதுடன் தமிழீழத்திற்கான பங்களிப்புகளிலும் பங்குபற்றுவீர்கள்.

பல திரிகளில் நான் வீண் விவாதத்திற்குள் செல்லாமல் இருக்க முதலே தடுத்து நிறுத்த முயன்றிருக்கிறீர்கள். அதை என்றும் மறக்க மாட்டேன். :) அதையும் தாண்டி நான் வீண் விவாதத்திற்குள் போய் விழுந்திருக்கிறேன் என்பதையும் நான் ஏற்றுக்கொள்ள தான் வேணும். :D

உங்கள் பிள்ளைகளையும் தாயக பற்றுடன் வளர்த்திருப்பதற்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெளிநாட்டில் அது ஒரு சாதாரண விடயம் அல்ல.

எந்த நேரமும் யாழை சுற்றியே உங்கள் மனம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அகூதா அண்ணா, மற்றும் உங்களை பார்த்த பின்னர் தான் நான் இப்பொழுது செய்வதை விட எதிர்காலத்தில் தாயகத்திற்கு அதிகம் செய்ய வேண்டும் என்ற வேகம் எனக்கு உருவானது. நிச்சயம் செய்வேன்.

யாழில் மேலும் மேலும் கருத்துகளை வைக்கவும் தாயகத்துக்கான உங்கள் பணி தொடரவும் என் மனமார்ந்த வாழ்த்துகள். :)

நன்றி பிள்ளை

எல்லாவற்றையும் கோர்த்து எழுதியிருக்கிறீர்கள்.

நன்றி நேரத்துக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

தங்களின் வாழ்க்கையின்அடுத்தபடிக்காக வேண்டுதல் செய்கின்றேன்.

யாழில் வசனத்தின் நீளத்தைக்குறைத்து சுருக்கமாக எழுதினால் எல்லோராலும் விரும்பப்படுவீர்கள்.

விசுகு அண்ணாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தொடர்ந்து பல பதிவுகள் இட வாழ்த்துக்கள்

நன்றி புத்தன்

வாழ்த்துக்கும் நேரத்திற்கும்

எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் நீங்கள்.

எல்லோரையும கவரும் திறமை உள்ளவர்.

ஏனோ தற்பொழுது அதிகம் எழுதுவதில்லை.

கொஞ்சம் அதிகரியுங்களேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் விசுகு அண்ணா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.