Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் டக்ளசை எரிச்சலூட்டியுள்ள பாடகர் உன்னி கிருஷ்ணனின் மன்னிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சர் டக்ளசை எரிச்சலூட்டியுள்ள பாடகர் உன்னி கிருஷ்ணனின் மன்னிப்பு

5fa8c6f6d421013928e7ca181195bf29.jpg

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நற்பெயரைப் பெறும் நோக்குடனே தென்னிந்திய பாடகர் உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கோரியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று காலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான விருந்தில் கலந்துகொண்ட சமயம் ஊடகவியலாளர்கள் மத்தியில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன அழைப்பு விடுத்தமையாலே தான் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர்,

புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடம் தனது பிழைப்பை நடத்துவதற்காகவும் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே உன்னி கிருஷ்ணன் இவ்வாறு தனக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து உலகத் தமிழர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார் எனத் தெரிவித்தார்.

நல்லூர் கந்தன் ஆலயத் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார். இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கோருவதாகவும் தமிழகத்திலிருந்து வெளியாகும் இதழ் ஒன்றுக்கு உன்னி கிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் டக்ளஸ் பொன்னாடை போர்த்தியமையானது என் இசை பயணத்தில் கரும்புள்ளியாகும் எனவும் உன்னி கிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார்.

உன்னி கிருஷ்ணனின் இக் கூற்று தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எரிச்சலையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

http://onlineuthayan.com/News_More.php?id=625101421213344814

[size=4]உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு இந்தியதுணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன அழைப்பு விடுத்தமையாலே தான் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர்
[/size]

[size=4]இந்த விடயத்தில் திடீரென தோன்றி பொன்னாடை போர்த்ததாக உன்னி கூறியிருந்ததாக முன்னர் செய்திகள் வெளியாயின. [/size][size=1]

[size=4]இதில் டக்கியா உன்னியா உண்மை கூறுகிறார்கள்? [/size][/size][size=1]

[size=4]இரண்டு பேருமே உண்மை கூறலாம், இருவரையும் இந்திய தூதுவரகமே ஏமாற்றி விட்டது என எண்ணுகிறேன். [/size][size=4] [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சைக் குறைத்துவிட்டு சென்னை கேசில் ஆஜராகும்படி உன்னி டக்கியை கேட்டுக்கொள்ள வேண்டும்.. :D

பேச்சைக் குறைத்துவிட்டு சென்னை கேசில் ஆஜராகும்படி உன்னி டக்கியை கேட்டுக்கொள்ள வேண்டும்.. :D

:D :D :icon_idea:

அப்படி இல்லாவிட்டால் சென்னை நீதிமன்றில் ஆஜராக வரும் டக்ளசுக்கு, உன்னி தனக்கு போர்த்திய பொன்னாடையை தோய்க்காமல் திரும்ப போர்த்தி விட வேண்டும். :lol:

டக்கி கொலைப் புகழை விட்டு கலைப் புகழை தேட வந்த பொது நடந்த அபத்தம் இது. உன்னியை பற்றி எமக்கு அதிகம் கவலை இல்லை. அவர் மன்னிப்பு கேட்டாயிற்று. அவர் விரும்பி போகவிருந்தாலும் இப்போ அவர் டக்கியை எதிர்த்து மன்னிப்பு கேட்டதினால் புலி பட்டியலில். இப்படி இரண்டு மூன்றை வெற்றிகரமாக நிறைவேற்றினால்த்தான் டக்கி எல்லோரையும் சுதர்சன நாச்சியப்பன் என்று நினைக்க மாட்டான்.

Edited by மல்லையூரான்

உன்னியின் நிதிசேர் இசை நிகழ்வு செப்டம்பர் 15 மாலை டொரொன்டொ சேர் ஜோன் மக் டொனால்ட் கலையரங்கில் நடபெறவுள்ளது என்பது நினைவிருக்கட்டும்.

உன்னியின் நிதிசேர் இசை நிகழ்வு செப்டம்பர் 15 மாலை டொரொன்டொ சேர் ஜோன் மக் டொனால்ட் கலையரங்கில் நடபெறவுள்ளது என்பது நினைவிருக்கட்டும்.

யாருக்காக சேர்க்கின்றார்... டக்ளஸுக்கு போர்வை வாங்கவா? :D

புலம் பெயர் தமிழனின் பணத்தைக்கொள்ளை அடிக்க எத்தனை வழிகள்?

ஏற்கனவே பாடகர் ஹரிகரன் இலங்கையில் நடக்கவிருந்த ஒரு இசை நிகழ்ச்சியை பகிஸ்கரித்ததையும் அசின் இலங்கை நிகழ்வுகளில் பங்கு பற்றி பட்ட அவஸ்தைகளையும் பட உலகுடன் தொடர்புடைய இவர் அறிந்திருக்கவில்லை என்று பூச் சுத்துகின்றாரா?

[size=5]இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் ஈனத் தமிழர்கள் இன்னும் எத்தனை உயிர்களைப் பலியாகக் கேட்கின்றார்கள்? செத்துத் தொலைந்த எம்மக்களின் உடலங்களின் மேல் நின்றும் பணம் சேர்க்கும் ஆசை போகவில்லையா?[/size]

[size=5]அகதி முகாம் மக்களுக்காகவே எனினும் இப்படிப்பட்டவர்களை முன்னிறுத்துவது...சரியல்ல.. தெரிந்தே தெரிந்தே எம் தலையில் மிளகாய் அரைக்க இப்படிப்பட்ட பச்சோந்திகள் முயல்வார்கள்[/size].

அந்த தாடி வைத்த டக்ளஸ் போக்கிரியின் மூஞ்சியை இவர் ஒருகாலமும் அறிந்திருக்கவில்லை என்பதை நாம் நம்புகின்றோம்.. :icon_mrgreen: :icon_mrgreen:

[size=5]மானமுள்ள தமிழன் எவனும் உன்னியின் நிகழ்ச்சிகளுக்குப் போகக் கூடாது.[/size]

Edited by எல்லாள மகாராஜா

  • கருத்துக்கள உறவுகள்

உன்னியின் நிதிசேர் இசை நிகழ்வு செப்டம்பர் 15 மாலை டொரொன்டொ சேர் ஜோன் மக் டொனால்ட் கலையரங்கில் நடபெறவுள்ளது என்பது நினைவிருக்கட்டும்.

அதற்காகத்தான் இந்த மன்னிப்பா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாருக்காக சேர்க்கின்றார்... டக்ளஸுக்கு போர்வை வாங்கவா? :D

புலம் பெயர் தமிழனின் பணத்தைக்கொள்ளை அடிக்க எத்தனை வழிகள்?

ஏற்கனவே பாடகர் ஹரிகரன் இலங்கையில் நடக்கவிருந்த ஒரு இசை நிகழ்ச்சியை பகிஸ்கரித்ததையும் அசின் இலங்கை நிகழ்வுகளில் பங்கு பற்றி பட்ட அவஸ்தைகளையும் பட உலகுடன் தொடர்புடைய இவர் அறிந்திருக்கவில்லை என்று பூச் சுத்துகின்றாரா?

[size=5]இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் ஈனத் தமிழர்கள் இன்னும் எத்தனை உயிர்களைப் பலியாகக் கேட்கின்றார்கள்? செத்துத் தொலைந்த எம்மக்களின் உடலங்களின் மேல் நின்றும் பணம் சேர்க்கும் ஆசை போகவில்லையா?[/size]

[size=5]அகதி முகாம் மக்களுக்காகவே எனினும் இப்படிப்பட்டவர்களை முன்னிறுத்துவது...சரியல்ல.. தெரிந்தே தெரிந்தே எம் தலையில் மிளகாய் அரைக்க இப்படிப்பட்ட பச்சோந்திகள் முயல்வார்கள்[/size].

அந்த தாடி வைத்த டக்ளஸ் போக்கிரியின் மூஞ்சியை இவர் ஒருகாலமும் அறிந்திருக்கவில்லை என்பதை நாம் நம்புகின்றோம்.. :icon_mrgreen: :icon_mrgreen:

[size=5]மானமுள்ள தமிழன் எவனும் உன்னியின் நிகழ்ச்சிகளுக்குப் போகக் கூடாது.[/size]

உன்னிக்கு தமிழ் பற்று எந்த அளவில் இருக்கின்றது என்று அறிவதோ! இல்லை எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதோ! எமது தேவையின் பயன்கள் அல்ல! இந்த அளவினதான உன்னியின் இறக்கம் எமது வலிமைக்கு அங்கீகாரம்! இந்த வாய்பு அறியாதவர்களுக்கு ஒரு பாடம்!

பணக்காற நாய்க்கு பட்டத்து யானை போன்ற வைரமுத்துவே வாலை ஆட்டிக் காலை நக்குகின்ற இந்தக் காலத்தில் உன்னியின் குற்றம் அவ்வளவு பெரியதா?

  • கருத்துக்கள உறவுகள்

உன்னிக்கிருஸ்ணனின் மன்னிப்பு இருக்கட்டும். சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு சிங்களத்து நாட்டு தேசியக் கொடி பிடித்து ஆதரவு தந்து, சிங்களத்து டில்மா தேநீரினை வீட்டில் வாங்கி வைத்து பருகி, சிங்கள நாடு விமானத்தில் பயணம் செய்யும் எம்மவர்களே மன்னிப்புக் கேட்காமல் இருக்கும் போது உன்னிக்கிருஸ்ணன் மன்னித்தால் என்ன விட்டால் என்ன.

உன்னைத் திருத்திக் கொள். சமுகம் தானாகவே திருந்திவிடும்.

அப்பிடி போடுங்க :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை ஒழுங்கு படுத்துவது டொரோண்டோ தமிழ் விளையாட்டு கழகம் என்று யாரோ போடிருந்தார்கள், அதில் விளையாடுவது, பயிற்சி கொடுப்பது சிங்களவர்கள்தான் என்கிற இந்த திரிக்கு தொடர்பில்லா செய்தி ஒன்றையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உன்னிக்கிருஸ்ணனின் மன்னிப்பு இருக்கட்டும். சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு சிங்களத்து நாட்டு தேசியக் கொடி பிடித்து ஆதரவு தந்து, சிங்களத்து டில்மா தேநீரினை வீட்டில் வாங்கி வைத்து பருகி, சிங்கள நாடு விமானத்தில் பயணம் செய்யும் எம்மவர்களே மன்னிப்புக் கேட்காமல் இருக்கும் போது உன்னிக்கிருஸ்ணன் மன்னித்தால் என்ன விட்டால் என்ன.

உன்னைத் திருத்திக் கொள். சமுகம் தானாகவே திருந்திவிடும்.

[size=5]இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி? ஏதாவது ஒரு புள்ளியில் தொடங்கத்தானே வேண்டும்... அது உன்னியின் நிகழ்ச்சியாய் இருந்து விட்டுப் போகட்டுமேன் கந்தப்பு... :icon_mrgreen:[/size][size=5] [/size]

"இதை ஒழுங்கு படுத்துவது டொரோண்டோ தமிழ் விளையாட்டு கழகம் என்று யாரோ போடிருந்தார்கள், அதில் விளையாடுவது, பயிற்சி கொடுப்பது சிங்களவர்கள்தான் என்கிற இந்த திரிக்கு தொடர்பில்லா செய்தி ஒன்றையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்."

செய்திக்கு நன்றி எரிமலை :D (வல்கனோ)

[size=6]இப்போ என்ன செய்ய உத்தேசம்...?[/size] :icon_mrgreen:

[size=5]-கேள்வியுடன் எல்லாள மஹாராஜா[/size]

Edited by எல்லாள மகாராஜா

சுயநல நோக்குடனேயே புலம்பெயர் தமிழர்களிடம் உன்னிகிருஷ்ணன் மன்னிப்பு கோரினார்!- டக்ளஸ்

[ வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2012, 09:40.26 AM GMT ]

unni_douglas1.jpg

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் தனது பிழைப்பை நடத்தும் சுயநல நோக்கத்திற்காகவே தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் பொதுமன்னிப்பு கோரியுள்ளார் என சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து நடத்திய சுக அனுபவம் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததினால் தான் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ள அமைச்சர்,

புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடம் தனது பிழைப்பை நடத்துவதற்காக 'உன்னிக்கிருஷ்ணன் இவ்வாறு தமக்கெதிரான கருத்துக்களை முன்வைத்து பொதுமன்னிப்பும் கோரியுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாள மகாராஜாவின் சுருதி மாறுது..! உன்னிக் கிருஷ்ணன்.. மன்னிப்பே கேட்காமல்.. விட்டிருந்தாலும்.. எம்மவர்கள் அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தித் தான் இருப்பர். அந்த வகையில்.. மன்னிப்புக் கேட்டுக் கொண்டது அவரின் நல்ல பண்பு. அதை தனது சுயநலத்துக்காக.. விமர்சிப்பது டக்கிளசின் கேணப் புத்தி..! டக்கிளசுக்கு முள்ளிவாய்க்காலோட காலம் சரியில்ல..!

புலிகள் மறைமுகமாக எத்தினை பேருக்கு உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்வளித்திருக்கிறார்கள்..! :icon_idea::)

உன்னியின் தவறு ஒண்டும் இல்லை. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது இந்திய தூதரகம். இடையில் குத்தியன் போய் போர்வை போற்றினான். உன்னி மன்னிப்பு கேட்டுவிட்டார். இதுவே கொலைகார குத்தியனுக்கு செருப்படி

கந்தப்பு சொன்ன மாதிரி முதலில் நம்மவர் திருந்த வேண்டும் பல வழிகளில். சிறிலங்கா துடுப்பாட்ட அணிக்கு சிங்களத்து நாட்டு தேசியக் கொடி பிடித்து ஆதரவு தந்து, சிங்களத்து டில்மா தேநீரினை வீட்டில் வாங்கி வைத்து பருகி, சிங்கள நாடு விமானத்தில் பயணம் செய்யும் எம்மவர்களே மன்னிப்புக் கேட்காமல் இருக்கும் போது உன்னிக்கிருஸ்ணன் மன்னித்தால் என்ன விட்டால் என்ன.

பின்னர் தமிழ் நாட்டார் திருந்தனும் அப்புறம் மலையாளி திருந்துவான். எதுகெடுத்தாலும் எங்கள் பணத்தில் அவர்கள் வாழுகிறார்கள் என்ற சுருதிய குறையுங்கோ இல்லது அவர்கள் சாப்பிட வழியில்லாமலா இருக்குறார்கள்? புகழின் உச்சியில் இருக்கும் போதே விடுதலைப் பாடல் பாடிய அந்த துணிவுள்ள பாடகர்களை நாம் கேனைத்தனமாக மட்டம் தட்டுவது அழகல்ல.

. புலன்பெயர் தமிழன் பணத்தை அவர்கள் தான் கொள்ளை அடிக்க வேண்டும் என்று இல்லை. புலிகளின் பணத்தில் எத்தனையோ நரிகள் வாழுது உலகத்தில் அதற்காக பரி எல்லாம் நரி அல்ல ,குத்தியனின் குரோதப் புத்தி தெரியாத மாதிரி யாரும் பேச வேண்டாம். குத்தியன் சொன்னா சரி உன்னி சொன்னா பிழை என்று கருத்து எழுதுபவர்கள் என்ன நோக்கத்தில் எழுதுகிறிர்கள்? மவராசா எதோ எதிர்பார்த்து கருத்து எழுதுகின்றிர்கள். பல இடங்களில் பார்த்து இருக்குறேன்...

டக்கியின் பிரசார அலுவலகம் மாதிரி வருகிறது யாழ். பலதும் பத்தும் எழுதுவதில் யாழின் பல அனுபவசாலிகளை அடித்துகொண்டு மேலே போய்விட்டர். மவராச என்ன யாழ்களத்தில் மாறு வேடமோ? மாறு வேடங்களால் இப்போது ஒருவரும் வரவேற்புக்கு போக விருப்பமில்லாமல் இருக்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மாறு வேடங்களால் இப்போது ஒருவரும் வரவேற்புக்கு போக விருப்பமில்லாமல் இருக்கிறார்கள்.

ம்ம்ம்

உன்னி அவர்கள் இது தான் முதல் தரமல்ல

வெளியில் வருவது.

ஏற்கனவே பல தடவை வந்தவர். எனவே மன்னிப்பு அதற்காகத்தான் என்பது பூச்சுத்தும்வேலை.

அவர் எதிர்பார்க்காத வேளையில் குத்தி மாலையைப்போட்டுவிட்டது. அந்த செக்கன்களில் அதை அவரால் மறுக்கமுடியவில்லை என்பது தான் சரியாக இருக்கும்.

எந்த ஒரு கலைஞனும் தன் இசை வாழ்வவல் கரும்புபுள்ளி என்ற வசனத்தை பாவிக்கமாட்டான். அதை அவர்சொல்லியுள்ளது அதனை அவர் மனதார உணர்ந்துள்ளதைக்காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

குத்தியனின் குத்துக்கரணங்களை யாமறிவோம்.

தம்பி மகாராசா,

எது உண்மை எது பொய் என்றெல்லாம் எழுத கூடாது .எங்களுக்கு சார்பா இல்லையா என்பதுதான் முக்கியம் .

டொரண்டோவில் நடக்கும் உன்னி கிருஷ்ணனின் நிகழ்சியை நடாத்துபவர்கள் டொராண்டோ தமிழர் விளையாட்டு கழகம் ,சென்சூரியன்ஸ் கிரிகெட் விளையாட்டுகழகம்.இந்த விளையாட்டுக்கழகங்கள் தமிழர்களால் ஆரம்பித்து தமிழர்களால் நடாத்தபடுபவை.இதில் சிங்கள விளையாட்டுவீரர்களும் பயிற்சியாளர்களும் இருக்கின்றார்கள்.பல வெற்றிகளை குவித்தும் அவர்கள் தான்.சாந்திகுமார் தொடக்கம் சஞ்சயன் வரை விளையாடிய கழகங்கள் இவைதான் .

கனடாவில் ரிப்போட்டர் என்றொரு ஆங்கில பத்திரிகை வருகின்றது ,சிங்களவரால் சிங்கள செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடாத்த படுகின்றது .அவர்களின் பல நிகழ்சிகளுக்கு பிரதம விருந்தினர் இலங்கை தூதுவர் தான் .ஆனால் அந்த பத்திரிகையில்வரும் முக்கால்வாசி விளம்பரம் தமிழர்களுடையது .

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் இதே தமிழர்களின் விளம்பரம் தேசியம் என்று மாயும் பத்திரிகைகளிலும் வருவதுதான் .

காசேதான் கடவுளடா எந்த புலிகளுக்கும் அது தெரியுமப்பா.

சுயநல நோக்குடனேயே புலம்பெயர் தமிழர்களிடம் உன்னிகிருஷ்ணன் மன்னிப்பு கோரினார்!- டக்ளஸ்

[ வியாழக்கிழமை, 13 செப்ரெம்பர் 2012, 09:40.26 AM GMT ]

unni_douglas1.jpg

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் தனது பிழைப்பை நடத்தும் சுயநல நோக்கத்திற்காகவே தென்னிந்திய பாடகர் உன்னிகிருஷ்ணன் பொதுமன்னிப்பு கோரியுள்ளார் என சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய துணைத் தூதரகம் மற்றும் வடக்கு மாகாண சபையின் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் என்பன இணைந்து நடத்திய சுக அனுபவம் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததினால் தான் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ள அமைச்சர்,

புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடம் தனது பிழைப்பை நடத்துவதற்காக 'உன்னிக்கிருஷ்ணன் இவ்வாறு தமக்கெதிரான கருத்துக்களை முன்வைத்து பொதுமன்னிப்பும் கோரியுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதிலிருந்து நான் சொல்லவந்தது என்னவென்றால் .... உன்னி நிகழ்ச்சிக்குப் போக முன்னரே இதை ஒழுங்கு செய்திருந்த இந்தியத் தூதரகம் ..இன்னின்னார் பிரதம மற்றும் எடுபிடிகளாக வருவார்கள்...மாலை இன்னபிற பொன்னாடை போர்வைகள் போர்த்துவார்கள்... என்று முன் கூட்டியே அறிவித்திருப்பார்கள். அல்லாது முன்கூட்டியே அது அறிவிக்கப்படாது இருந்தாலும் ... அரசில் ஆட்சியில் எடுபிடிகளாக இப்போது செல்வாக்குடன் இருக்கும் டக்ளஸ் குத்தியன் வகையறாக்கள் போன்ற வீண் பிலிம் காட்ட முயற்சிக்கும் கூட்டம் மலர் மாலையணிவித்து கழுத்தை முறிக்க அல்லது போர்வை போர்த்தி முகுதை ஒடிக்க முயற்சிக்கும் என்பதை ஊகித்திருக்கவே முடியாத அறிவுத் திறன் குறைந்தவரோ விவேகம் இல்லாதவரோ அல்ல உன்னி.

அப்படியே ஏதாவது குறையறிவுள்ளவராக இருந்தாலும் கூட

இந்த வில்லத்தனங்களிலிருந்து தப்ப தன் வரும்படியையே ஒதுக்கி முன்னுதாரணமாக இருந்து தமிழ் மக்களின் நெஞ்சினில் ஆணியடித்து படம் மாட்டியிருக்கும் தன் முன்னோடி ஹரிஹரன் போன்றவர்களிடம் கூட கலந்தாலோசித்திருக்கலாம்...

இப்படியான கயிறிழுப்புகளும் அட்டைக்கத்தி வெட்டுகளும் சகட்டு மேனிக்கு விழும் என்று தெரிந்தும் அசட்டுத்தமிழனின் அசட்டைப் போக்கைலும் அசமந்த மறதியிலும்

சூடுசொரணையற்ற தன்மையிலும் (இல்லாவிட்டால் இந்த நிகழ்ச்சியை டோரண்டோவில் நடத்துவார்களா..?) அளவுக்கதிகமான நம்பிக்கை வைத்தே காசு பார்க்கப் போயுள்ளார்.

ஆனாலும் அசமந்த தமிழன் அதையெல்லாம் மூட்டைகட்டி வைத்து விட்டு இப்போது அலேட்டாய் இருப்பதைப் பார்த்தே இந்த கரும்புள்ளி செம்புள்ளி விளையாட்டெல்லாம்...

[size=5]மற்றது மாறு வேசமா மவாராசா - மல்லையூரான்[/size]

ஆம் மாறு வேசமே எல்லாள மஹாராஜா என்பது :D

[size=5]-மாறு வேசத்துடன் ஊர் காவல் செய்யும் எல்லாள மஹாராஜா[/size]

தம்பி மகாராசா,

எது உண்மை எது பொய் என்றெல்லாம் எழுத கூடாது .எங்களுக்கு சார்பா இல்லையா என்பதுதான் முக்கியம் .

டொரண்டோவில் நடக்கும் உன்னி கிருஷ்ணனின் நிகழ்சியை நடாத்துபவர்கள் டொராண்டோ தமிழர் விளையாட்டு கழகம் ,சென்சூரியன்ஸ் கிரிகெட் விளையாட்டுகழகம்.இந்த விளையாட்டுக்கழகங்கள் தமிழர்களால் ஆரம்பித்து தமிழர்களால் நடாத்தபடுபவை.இதில் சிங்கள விளையாட்டுவீரர்களும் பயிற்சியாளர்களும் இருக்கின்றார்கள்.பல வெற்றிகளை குவித்தும் அவர்கள் தான்.சாந்திகுமார் தொடக்கம் சஞ்சயன் வரை விளையாடிய கழகங்கள் இவைதான் .

கனடாவில் ரிப்போட்டர் என்றொரு ஆங்கில பத்திரிகை வருகின்றது ,சிங்களவரால் சிங்கள செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடாத்த படுகின்றது .அவர்களின் பல நிகழ்சிகளுக்கு பிரதம விருந்தினர் இலங்கை தூதுவர் தான் .ஆனால் அந்த பத்திரிகையில்வரும் முக்கால்வாசி விளம்பரம் தமிழர்களுடையது .

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் இதே தமிழர்களின் விளம்பரம் தேசியம் என்று மாயும் பத்திரிகைகளிலும் வருவதுதான் .

காசேதான் கடவுளடா எந்த புலிகளுக்கும் அது தெரியுமப்பா.

சரி துவங்கி விட்டீர்கள்.... :lol: :lol: இனி இது சூடாறிப் போகாது கனன்று கொண்டிருக்க என்ன செய்வது என்பது தான் என் கவலை... :D

இனி தமிழ் தேசியம் பற்றி அக்கறையுள்ள உங்கள் ஆலோசனையையும் அதிரடி நடவடிக்கைகளையும் அள்ளியிறையுங்கள்.

[size=6]யாழ் களத்தில் உருப்படியான ஒரு வேலை செய்த புண்ணியமாவது வந்து சேரும்....[/size]

[size=6]நண்பேண்டா...[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அர்ஜுன் என்ன சொல்ல வாறிங்கள்.... :rolleyes:

முந்தி கொழும்புக்கு வந்த புதிதில், தெஹிவளை இல் இருந்து வெள்ளவத்தைக்கு போக நிற்கும் போது, களுத்துற, கதிகாமம், காலி என்று லாங் ட்ரிப் ஓடுகிற இன்டசிட்டி பாஸ் - மினிபஸ் ஆக்கள்,,நாங்கள் இப்படி 2 - 3 பேரா நின்றால் ஸ்லொவ் பண்ணி " பிட்ட கொட்டுவ, பிட்ட கொட்டுவ..கேலிம் பாற பிட்ட கொட்டுவ" என்று சொல்லுவார்கள்..எங்களுக்கு அது என்ன வேறு தெரியாது, ஏறினால் 5 ரூபா எடுப்பார்கள்...அந்த நேரத்தில் 2 ரூபா தான்..எதோ இன்ட சிட்டி காரன் எடுக்கிறான் எண்டு கண்டும் காணாமல் விடுவம்...பெரிய பிரச்சனை என்னவென்றால்..பிரிட்ச் தாண்டின உடன சொல்லுவம் "இசற பஹிண்ட" விழும் பேச்சு...அதை தமிழில எழுதுவம்...""முதலே சொன்னது தெரியாதோ " கேலிம் பாற பிட்டகொட்டுவ"....""அது என்ன வென்று தெரியாமல் திரிந்தது...

ஏன் இந்த கதை என்றால்..

இனிமேல் பொன்னாடை என்றால் ..."கேலிம சீமான்தமாய் "

சிங்களமே தெரியாத யாழ் இணைய நேயர்களுக்காய்.கேலிம்- நேராக /அங்கே மட்டும்/

-ஒரு விளம்பரம் இருந்தது ..."ஹெலிம யன்ன லங்கா ஒரிஸ் லீசிங் சாமகம"-

இதை ஒழுங்கு செய்திருந்த இந்தியத் தூதரகம் ...மாலை இன்னபிற பொன்னாடை போர்வைகள் போர்த்துவார்கள்... என்று முன் கூட்டியே அறிவித்திருப்பார்கள். அல்லாது முன்கூட்டியே அது அறிவிக்கப்படாது இருந்தாலும் .

[size=5]-மாறு வேசத்துடன் ஊர் காவல் செய்யும் எல்லாள மஹாராஜா[/size]

இதை மறுப்பதல்ல எமது நோக்கம். இந்திய தூதகரத்தை நாம் கண்டு கொள்ளக்கூடாது. நாம் எம்மை அடித்த மேற்குலகத்திடம் இப்போது தீர்வை தேடுகிறோம். ஏன் பலர் சீனாவுடன் கூட்டு சேர்ந்தால் அதை இலகுவாக அடையலாம் என்றுகூட நான் யாழுக்கு வந்த பின்னர் எழுதியிருக்கிறார்கள். தீர்வு மட்டும்தான் நாம் கேட்கவேண்டும். அதை சர்வதேசம் ஐ.நா ஊடாக செய்து தரவேண்டும். இதில் உன்னியை எதிர்ப்பது எமது நோக்கமாக திசை திருப்பிவிடாமல் குத்தியை எதிர்ப்பது எமது நோக்கமாக வைத்துகொண்டோமாயின் உன்னி சொல்வது சரி குத்தி சொல்வது பிழை என்றாகும். பணம் சேர்க்கப்பட்ட பின்னர் செலவழிப்பதில் அவர் இல்லை என்பதால் அதை யார் செய்கிறார்கள் என்பதை வைத்து உன்னியை எதிர்க்க முடியாது.

வெளிநாடுகளில் சுதந்திரமாக இருக்கும் நடத்தைகளை நாம் கட்டுப்படுத்த முயலக் கூடாது. யாரும் யாரையும் அழைத்து நிகழ்சி நடத்தலாம். "புறக்கணி இலங்கை " ஜனநாய ரீதியில் வெளிநாடுகளில் நடத்தப்பட வேண்டிய போராட்டம். இதில் எம்மை நாம் இணைத்து கொள்ளத்தாயாரில்லாமல் இந்திய நட்சத்திரங்களை இணைக்க முயலக்கூடாது. அவர்கள் ஆர்வமாக மகிந்தாவை பிரசாரப்படுத்த முயலாவிட்டல் அவர்கள் வந்து தமது நிகழ்சிகளில் பங்கு பற்றுவதை நாம் கண்டு கொள்ளக்கூடாது. இதில் அர்ச்சுன் சொல்லியிருக்கும் கருத்துக்கள் சில கவனிக்கப்படவேண்டும். யூத இனத்து பெண் ஒருவர் சில சனிக்கிழமைகளில் புறக்கணி போராட்டம் நியூயோர்க்கில் நடத்துவார். இதில் நாம் தமிழர் இயக்க இளைஞர்கள் மட்டும் பிரதானமாக பங்கு பற்றுவார்கள். ஆனல் தமிழ்க்கடைகளில் விற்கப்படுவதும் வாங்கப்படுவதும் MD யின் தயாரிப்புகள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.