Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சில் வருமான வரி 75 வீதமாக உயர்வடைகிறது..

Featured Replies

நேற்று முன்தினம் பிரான்சில் மூன்று மில்லியன் பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது, நேற்று அதற்கான புதிய திட்டத்தை பிரான்சிய அதிபர் பிரான்சியோ ஒலந்த முன் மொழிந்துள்ளார்.

[size=2][size=4]இன்றுள்ள பிரான்சிய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ள அவர் இரண்டு வழிகளில் முயன்றுள்ளார், ஒன்று அதிக வருமானம் பெறும் தனிநபர்கள், பெரும் பணக்காரர்களின் வருமான வரியை 75 வீதமாக உயர்த்தலாம் என்று கூறியுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]இதன் மூலம் 10 பில்லியன் யூரோக்களை மீதம் பிடிக்கலாம் என்பது அவருடைய கணக்கு, இரண்டாவதாக பாரிய இலாபம் உழைக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரியையும் உயர்த்தி 10 பில்லியன் யூரோவை மீதம் பிடிக்க திட்டமிட்டுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]மறுபுறம் பொதுச் செலவில் கடும் குறைப்புக்களை செய்தும் மீதம்பிடித்து, மேலும் கீழுமாக இருவழி வருமானம் பெற திட்டமிட்டுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]முதலாளிகளுக்கும், அதிக வருமானம் பெறுவோருக்கும் ஆதரவாக இருந்த வலதுசாரி ஸார்கோஸியின் ஆட்சி தோல்வியடைந்த பின்னர் மலர்ந்துள்ள சோசலிச ஆட்சி பணக்காரருக்கு எதிராக திரும்பியுள்ளது.[/size][/size]

[size=2][size=4]இந்த முயற்சி பொருளாதாரத்தை ஆரோக்கியமான பக்கத்தில் சுழலவிடாது, குறுகிய வழியில் எதிர்ப்புற சுழர்ச்சியை ஏற்படுத்தி பெரும் தொல்லைகளை எதிர்காலத்தில் ஏற்படுத்தும், இதே தவறை டென்மார்க் போன்ற பல ஐரோப்பிய நாடுகள் செய்துள்ளன.[/size][/size]

[size=2][size=4]கூர்ந்து அவதானித்தால் ஐரோப்பிய ஒன்றிய அரங்கில் வரி உயர்வு, மீதம் பிடித்தலுக்கு எதிரான கருத்துக்களை பிரான்சிய அதிபர் ஒலந்த முன்வைத்து, ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலுடன் முரண்பட்டுள்ளார்.[/size][/size]

[size=2][size=4]அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் பேசும் பேச்சுக்களுக்கு முரணான கொள்கைகளை தனது சொந்த நாட்டில் அவர் கடைப்பிடிக்க முயல்வதை இச்சட்டப் பிரேரணையால் உணர முடிகிறது.[/size][/size]

[size=2][size=4]இது இவ்விதமிருக்க பொருளாதார நெருக்கடியால் சீரழிந்து சின்னாபின்னமாகி வரும் கிரேக்கத்தில் பெரும் ஊழல் புரிந்த 36 அரசியல்வாதிகளின் பெயர்கள் பொது மன்றில் வெளியாகியுள்ளது.[/size][/size]

[size=2][size=4]எரிகிற வீட்டில் புடுங்கியது ஆதாயமென புடுங்கிக்கொண்டோடிய இவர்களில் முன்னாள் சபாநாயகர், 11 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் உதவி மந்திரிகள், 12 முன்னாள் பா.உக்கள் அடங்குகிறார்கள்.[/size][/size]

[size=2][size=4]இவர்கள் வரி மோசடி, அதிகாரத்தை பயன்படுத்திய ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களில் சிக்குண்டுள்ளதால் இவர்களுக்கு எதிரான விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.[/size][/size]

http://www.alaikal.com/news/?p=114152

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..! :D

  • தொடங்கியவர்

[size=4]எந்த நாட்டிலும் ஒருவர் உழைப்பதில் ஐம்பது வீதத்திற்கும் மேலாக [/size][size=4]வரி[/size]

[size=4]இருந்தால் உழைப்பவர்கள், ஏன் உழைப்பான்? என எண்ணுவார்கள்.

இல்லை உழைப்பதை மறைத்து வரை கட்ட மாட்டார்கள். இல்லை நாட்டை விட்டு ஓடுவார்கள்.

பிரான்சில் இவை எல்லாம் நடக்கலாம்![/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எந்த நாட்டிலும் ஒருவர் உழைப்பதில் ஐம்பது வீதத்திற்கும் மேலாக [/size][size=4]வரி[/size]

[size=4]இருந்தால் உழைப்பவர்கள், ஏன் உழைப்பான்? என எண்ணுவார்கள்.

இல்லை உழைப்பதை மறைத்து வரை கட்ட மாட்டார்கள். இல்லை நாட்டை விட்டு ஓடுவார்கள்.

பிரான்சில் இவை எல்லாம் நடக்கலாம்![/size]

உண்மை அகூதா அண்ணா...நான்கூட சிலநேரம் நினைப்பதுண்டு இப்பிடிகஸ்ரப்பட்டு உழைத்து அதில பெரும்பகுதியை டக்ஸாக கட்ட பெனிபிற் எடுக்கிற கூட்டம் வேலைக்கே போகமால் எங்கள் டக்ஸ் காசில் வாழ்வதை பார்க்க கடுப்பாக இருக்கும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெனிபிற் எடுக்கிறதிலை இருக்கிற சந்தோசம் வேறையொண்டிலையுமில்லை......ஞாயிற்றுக்கிழமை முதலாம் திகதியெண்டால் வெள்ளிக்கிழமையே வங்கி எக்கவுண்ட் மங்களகரமாய் ஜொலிக்கும்......திங்கள்கிழமை பேசீட் தபால்பெட்டிக்கை வந்திருக்கும்....அதிலை எவ்வளவு பென்சன்....எண்டு எல்லாம் விளாவாரியாய் இருக்கும் :lol:

எல்லோரையும் உழைக்க வழி பண்ணி நாட்டின் பொருளாதாரத்தைக் கூட்டாமல் உழைத்து முன்னேறுபவர்களிடம் அதிக வரி அறவிட்டால், சோஷலிச சமுதாயமன்றி 'பெனிபிட்' சமுதாயம்தான் மலரும். இதை இன்று இங்கிலாந்து அனுபவிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அடி மடியில கை வைக்குறியல் நல்லாயில்ல :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடி மடியில கை வைக்குறியல் நல்லாயில்ல :(

தம்பி நண்டு! சட்டத்திலை ஆயிரம் ஓட்டையள் இருக்கு கவலைப்படாதையும்.... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

i read on Toronto star that they were proposing 75% income tax rate for people earning more than 1 million euro annually. it is being proposed but whether it will pass or not is another question. it wont affect many of us i think! unless I'm mistaken and there are many of our people making that kind of money in France. :)

  • தொடங்கியவர்

i read on Toronto star that they were proposing 75% income tax rate for people earning more than 1 million euro annually. it is being proposed but whether it will pass or not is another question. it wont affect many of us i think! unless I'm mistaken and there are many of our people making that kind of money in France. :)

[size=4]பொதுவாக வரி என்று அதிகளவில் செலுத்துபவர்கள் தான் வேலை வாய்ப்புக்களையும் உருவாக்குகின்றவர்கள். அதுதான் முதலாளித்துவதும்.

அவர்கள் வெளியேறும் பொழுது இல்லை தமது முயற்சிகளை கைவிடும்பொழுது கீழ் மட்டத்தில் உள்ள அனைவரும், எம்மவர்கள் உட்பட, பாதிக்கபடுவார்கள். [/size]

[size=3]Mitt Romney released his [/size]2010 tax return[size=3] on Monday. His total income for the year was listed as $21.6 million. [/size]

[size=4]Republican presidential candidate Mitt Romney released tax records on Tuesday indicating he is paying $6.2 million in taxes on a total of $42.5 million in income over the years 2010 and 2011.[/size][size=4]

Bowing to increasing political pressure to provide more detail about his vast wealth, the former private equity executive released tax returns indicating he and his wife, Ann, paid an effective tax rate of 13.9 percent in 2010. They expect to pay a 15.4 percent rate when they file their returns for 2011.[/size][size=4]

Romney's 2010 returns show the candidate is among the top 1 percent of taxpayers.[/size]

  • தொடங்கியவர்

[size=4]நிகர வரியில் அதிகம் செலுத்தி இருந்தாலும், வீதம் என்று பார்க்கும்பொழுது ரொம்னி செலுத்திய வரி வீதம் மிக குறைவு :icon_mrgreen:[/size]

ரோம்னி அதிபராக வந்தால் நட்பு நாடு என்று பாராமல் பிரான்சு மீது குண்டு போட்டாலும் போட்டுவிடுவார். எதற்கும் புறக்கணி இலங்கை பிறகு. பிரான்சில் தமிழ் உறவுகள் எயர் லங்கா பக்கம் போய் டிகெட் விலையை கேட்டு வையுங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் அரச சொத்தாக்கி விட்டு கம்யூனிச பிரான்சின் உதயம் என்று அறிவித்தால் நன்றாக இருக்கும்.

அளவு கணக்கற்ற தனியார் மயப்படுத்தலின் விளைவுகளில் இதுவும் ஒன்று!

வருமானத்தில் 75 % த்தை வரியாக அரசு சுரண்டுவது பகற்கொள்ளை!

அந்த நாடு அழிவை நோக்கி செல்கிறது!

  • கருத்துக்கள உறவுகள்

உதென்ன பிரமாதம்.. :D கனடாவின் கதையைக் கேளுங்கோ.. :wub:

http://www.cra-arc.gc.ca/tx/ndvdls/fq/txrts-eng.html :rolleyes:

பொருளாதாரத்தை பாதிக்கும் என்று சொல்லமுடியாது. வரியில் இருந்து தப்பிக்க அவர்கள் இலாபத்தை முதலீடு செய்வார்கள். இதனால் பொருளாதாரம் வளரும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐனாதிபதித்தேர்தலில் இந்த கோட்பாட்டை வைத்து அவர் வென்றும் இருந்தார்.

அந்த வகையில் கொடுத்த வாக்கைக்காப்பாற்ற அதை அமுல்படுத்த முயல்கிறார்.

இது வருடம் ஒரு மில்லியனுக்கும் அதிகம் வருமானமாகப்பெறுபவர்களுக்கு மட்டுமே. அதிலும் சில விதிவிலக்குகள் உண்டு.

இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது விளையாட்டு வீரர்களும் திரைப்பட தொலைக்காட்சி நடிக நடிகைகளுமே. அதனால்தான் அதற்கு இந்தளவு விளம்பரம். அதிலும் உதை பந்தாட்டக்காறர்கள் வருடத்திற்கு பல மில்லியன்களை எடுத்துக்கொண்டு நாடு மாறி விடுகின்றனர். இனி கட்டிவிட்டுப்போகட்டுமே......

(எப்படியும் இங்கு அவர்கள் தங்கப்போவதில்லை)

அதேநேரம் பிரான்சின் அதிக மக்களிடம் இதற்கு வரவேற்பிருக்கிறது. இதுவும் இன்றைய பொருளாதார மந்த நேரத்தில் ஒரு பிரபுத்துவத்துக்கெதிரான புரட்சியாகவே பார்கக்கப்படுகிறது.

  • தொடங்கியவர்

[size=4]பிரான்சின் முதலாவது இடத்தில் உள்ள பணக்காரர் பெல்ஜிய நாடு பிரசா உரிமை பெற முயற்சிப்பதாக செய்தி வந்ததே ?[/size]

[size=4]அவரே ஓடும்பொழுது ... யார் முதலீடு செய்வார்கள் ? யார் நிற்பார்கள் ?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பிரான்சின் முதலாவது இடத்தில் உள்ள பணக்காரர் பெல்ஜிய நாடு பிரசா உரிமை பெற முயற்சிப்பதாக செய்தி வந்ததே ?[/size]

[size=4]அவரே ஓடும்பொழுது ... யார் முதலீடு செய்வார்கள் ? யார் நிற்பார்கள் ?[/size]

எதையுமே அமுல் படுத்த முயலும்போது இந்த பணக்காற முதலைகள் ஒரு எச்சரிக்கைக கொடுப்பார்கள். அந்தவகை எதிர்ப்புத்தான் இது. ஆனால் அவர் தெரிவு செய்த நாடு நன்றாகவா உள்ளது. அங்கு கடிக்க எங்கு போவார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.