Jump to content

நீலக்கால் நண்டுக்கறி – யாழ்ப்பாணம் முறை

Recommended Posts

பதியப்பட்டது

post-8572-0-30709200-1349050237_thumb.jp

[size=5]தேவையான பொருட்கள்:[/size]

[size=5]நண்டு - 500 கிராம்

பெரிய வெங்காயம் - ஒன்று

சிறிய வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 5

பூண்டு - 5 பல்

கறிவேப்பிலை – 1 இறகு

புளி – சிறிய தேசிக்காயளவு

இஞ்சி - சிறிது

சரக்கு மிளகாய்த்தூள்- 3 தேக்கரண்டி (உறைப்பு தேவைக்கேற்ப)

மஞ்சள்தூள் - சிறிதளவு

பெருஞ்சீரகம் (சோம்பு) - 1 தேக்கரண்டி

கடுகு - சிறிதளவு

மிளகு - சிறிதளவு

வெந்தயம் - சிதளவு

தேங்காய் - பாதி

எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:[/size]

[size=5]1.நண்டைச் சுத்தம் செய்து, பெரிய நண்டாக இருந்தால் 4 துண்டுகளாக உடைக்கவும்

சிறிய நண்டாயின் இரண்டாக உடைக்கவும்.

பெரிய கால்களை இரண்டாக முறிக்கவும்.

அவற்றை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும். (சிலர் மஞ்சள் பாவிப்பதில்லை)

2. பாதித் தேங்காயை துருவி ஒரு தட்டில் வைக்கவும்.

வெண்காயம், பச்சைமிளகாய், என்பனவற்றை நீட்டாக வெட்டி பிறிம்பு பிறிம்பாக வைக்கவும்.

உள்ளியை சிறுதுகள்களாக சீவிக் கொள்ளவும்.

இஞ்சியையும் சீவிக் கொள்ளலாம் அல்லது குத்திக் கொள்ளவும்

3. தேங்காய், பெருஞ்சீரகம், மிளகு, ஆகியவற்றை ஒரு தாச்சியில் இட்டு தேங்காய்பூ பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கவும்.

3. தாச்சியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் அதில் கொஞ்ச கடுகு, பெருஞ்சீரகத்தை போடவும். கடுகு வெடித்ததும் அதற்குள் கொஞ்ச வெந்தயம் போடவும். வெந்தயம் பொரிந்து சிவத்ததும் வெட்டிவைத்த பெரிய வெங்காயத்தையும், பச்சை மிள்காயையும், உள்ளியையும் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கி வந்ததும் அதற்குள் கழுவி வைத்த நண்டை போட்டு கிழறி வதங்க விடவும். கொஞ்சம் வதங்கி வந்ததும் அதற்குள் பழப்புளியைக் கரைத்து விடவும். அத்துடன் நண்டு அவிய தேவையான அளவு தண்ணீரையும் விடவும்.

அதற்குள் 3 தேக்கறண்டி சரக்குமிளகாய்தூளும் (உறைப்புக்கேற்ப), தேவையான உப்பும், சீவி வைத்த இஞ்சியையும், வெட்டி வைத்த சின்ன வெங்காயமும் போட்டு கலக்கி மூடி அவிய விடவும். சிலர் வெட்டிய பச்சை மிள்காயை வதக்காது சின்ன வெங்காயத்துடன் சேர்த்து அவியப் போடுவார்கள்.

நண்டு அரை அவியல் அவிந்ததும் அதற்குள் நாம் வறுத்து வைத்த தேங்காய் வறுவலைப் போட்டு நன்கு கலக்கித் துளாவி திரும்பவும் கொதித்து அவிய விடவும்.

கறி வற்றி பிரட்டல் கறியாக வரும் போது கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி மூடிவிடவும்.

இப்போது நண்டுக் கறி ரெடி.

குறிப்பு:

சிலர் பழப் புளிக்கு பதிலாக தேசிக்காய் புளியும் விடுவார்கள்.

இன்னும் சிலர் கறிமுருக்கம் இலை சேர்ப்பார்கள்,

தேங்காய் பாலாகவும் சேர்க்கலாம். கறி தடிக்காது. பூவை வறுத்துப்போட்டால் கறி தடிக்கும், ருசியாகவும் இருக்கும்

நண்டு வாங்கும்போது பாரமான பெட்டை நண்டாக பார்த்து வாங்கவும்[/size]

http://panippulam.com/index.php?option=com_content&view=article&id=3219:2011-09-01-15-02-09&catid=90:games&Itemid=455

Posted

இணைப்புக்கு நன்றி அலை !!

Posted

வாவ் lekker ................இணைப்பிற்கு நன்றிகள் அலை

:)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏனக்கு மிகவும்பிடித்த ஒரு கறி நண்டுக்கறி.

கொஞ்சம் காரம்அதிகமாகவும் அதிகம் தண்ணியாக இல்லாமலும் இருக்கணும்.

புட்டு

சோறு

எதுவாக இருந்தாலும் நன்றாக இருக்கும்.

(மனைவி பக்கத்தில் இருந்து உடைத்துத்தந்தால் இன்னும் விசேசம்)

நன்றி பதிவுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிட்டத்தட்ட.... இதே... முறையில் தான், நாங்கள் தேங்காய்ப்பால் விடாமல், சமைப்போம்.

வீட்டில் திருவலையின்..., பிடிச்சிராவி உடைந்து போனதால்... ஸ்ரீலங்காவில் இருந்து, புது திருவலை... இறக்குமதி செய்ய விருப்பமில்லை.

நீலக்கால் நண்டை, தேடிப்பார்த்து வாங்கிச் சமைத்த பின்... சிவப்புக்காலாய் மாறுகின்றது, உங்களுக்கும் அப்பிடியா? :icon_idea:

நன்றி அலை, உங்கள் சமையல் குறிப்பிற்கு.

Posted

இணைப்பிற்கு நன்றி அலைமகள் அக்கா! நண்டுக்கறிக்கு நான் தேங்காய்ப்பால் சேர்ப்பதில்லை.. ஆனாலும் உருசியாகத் தான் இருக்கும்...

என்ன ஒரு கவலை.. பசி வந்தால் தான் குசினிப்பக்கம் போவது, பசியில் நண்டைச் சமைத்தால் கோது உடைக்க முதலே பசி போய்விடுமே என்பது தான்... :(

மீனுக்கு செதில் எடுத்து வெட்டி பைகட்டில் போட்டு வருவது போல, நண்டுக்குக் கோது உடைத்து பைக்கட்டில் அடைக்க இன்னும் யாருக்கும் யோசனை வரவில்லையா? :icon_idea:

பிலிப்பன், தாய்லாந்து, சீனாக் கடைகளில்... நண்டுச்சதை, சிறிய ரின்னில்... அடைத்து விற்கிறார்கள் குட்டி.

ஆனால்... அதில், சுவை குறைவு, நண்டு சாப்பிட்ட மாதிரி இருக்காது.... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீலக்கால் நண்டுக் கறியும் வெள்ளை புட்டும் மிக மிக அருமையாக இருக்கும் .

தகவலுக்க நன்றி அலைமகள்.

Posted

இணைப்புக்கு நன்றி அலைமகள் :)

Posted

நண்டுக் கறியும் தேங்காய்ப் பூ கலந்த புட்டும் நல்ல விருப்பம். சென்ற வார விடுமுறையிலும் நண்டு பால் பிரட்டல் செய்தேன்

கடல் நண்டு, ஆற்று நண்டு, முகத்துவாரத்து நண்டு ஒவ்வொன்றும் வேறு வேறு சுவையாக இருக்கும். தேங்காய்ப் பூ, மிளகு, பெருஞ்சீரகம், அரிசி ஆகியவற்றை தனித் தனியே வறுத்து கறியை இறக்கும் முன் போட்டால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நண்டுக்கறி எனக்கும் மிகவும் பிடிக்கும் இதனை வெவ்வேறு விதமாக சமைத்து சாப்பிட்டாச்சு இந்தமுறையிலும் சமைத்தால் போச்சு ..... :D

இணைப்பிற்கு நன்றி அலைமகள் :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இணைப்பிற்கு நன்றி அலைமகள் அக்கா! நண்டுக்கறிக்கு நான் தேங்காய்ப்பால் சேர்ப்பதில்லை.. ஆனாலும் உருசியாகத் தான் இருக்கும்...

என்ன ஒரு கவலை.. பசி வந்தால் தான் குசினிப்பக்கம் போவது, பசியில் நண்டைச் சமைத்தால் கோது உடைக்க முதலே பசி போய்விடுமே என்பது தான்... :(

மீனுக்கு செதில் எடுத்து வெட்டி பைகட்டில் போட்டு வருவது போல, நண்டுக்குக் கோது உடைத்து பைக்கட்டில் அடைக்க இன்னும் யாருக்கும் யோசனை வரவில்லையா? :icon_idea:

என்னெண்டுதான் குடும்பம் நடத்துறியளோ?????? சோம்பல் பிடிச்ச குட்டியர் போலை கிடக்கு :D:lol:

நீலக்கால் நண்டுக்கு நன்றி அலைமகள் :)

Posted

என்னெண்டுதான் குடும்பம் நடத்துறியளோ?????? சோம்பல் பிடிச்ச குட்டியர் போலை கிடக்கு :D:lol:

நீலக்கால் நண்டுக்கு நன்றி அலைமகள் :)

குட்டி இன்னும் குடும்பஸ்தன் ஆகவில்லை கு.சா.

எங்கள் வீட்டில் நண்டுக் கறியும் ஆட்டிறைச்சிக் கறியும் அடிக்கடி சமைக்கப்படும். அதிலும் நண்டுக்கறி விதம் விதமான நண்டுகளில் சமைக்கப்படும். உறைப்பு சொல்லி மாளாது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாலு பேர் சுத்தி இருந்து நண்டுக்கறி சாப்பிட்டா ஆளையால் பாத்து அழவேணும்....அப்பிடி உறைப்பாய் இருந்தால் அந்தமாதிரி இருக்கும்...ஊரில் இருக்கும்போது தடிமனுக்கு நல்ல உறைப்பாய் நண்டுக்கறி சாப்பிட்டே எனக்கு தடிமன் போயிருக்கு...அலை அக்கா கையோட எப்பிடி நண்டை உடைத்து சாப்பிடுவது என்பது பற்றியும் ஒரு சிறு குறிப்பெழுதி விடுங்கோ...தமிழச்சி அக்காவீட்டு சாப்பாடு பற்றி சொல்லி வேலை...நல்ல விதம்விதமாய் அம்மா சமைத்துதர புல் கட்டுக் கட்டீட்டு வந்து எங்களை மாதிரி பச்சிலருக்கு கடுப்பேத்துறது நல்லாயில்லை சொல்லீட்டன்.... :D

இந்தக் கறிகள் சமைப்பது அம்மா இல்லை சுபேஸ். எங்கள் வீட்டில் இவைகளைச் சமைப்பது அநேகமாக ஆண்கள்தான். எங்கள் வீட்டில் உள்ளுக்குள் ஏற்றிய பிறகு சாப்பிடுவதற்காகச் செய்வார்கள். இவற்றை எனது தம்பியும் நண்பர்களும்தான் இந்த முறையில் சமைப்பார்கள். :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓ...தண்ணி அடிக்கிற ஆக்களுக்கு நல்லாய்த்தான் இருக்கும் உறைப்பாய் இருந்தால்...அப்படியே அடுத்தமுறை நண்டுப்பிரட்டல் வைத்தால் வீட்டில் ஆண்கள் போத்தல் உடைக்குமுன் நிழலி அண்ணாவையும் கூப்பிடுங்கள்...

Posted

இணைப்பிற்கு நன்றி அலைமகள் அக்கா! நண்டுக்கறிக்கு நான் தேங்காய்ப்பால் சேர்ப்பதில்லை.. ஆனாலும் உருசியாகத் தான் இருக்கும்...

என்ன ஒரு கவலை.. பசி வந்தால் தான் குசினிப்பக்கம் போவது, பசியில் நண்டைச் சமைத்தால் கோது உடைக்க முதலே பசி போய்விடுமே என்பது தான்... :(

மீனுக்கு செதில் எடுத்து வெட்டி பைகட்டில் போட்டு வருவது போல, நண்டுக்குக் கோது உடைத்து பைக்கட்டில் அடைக்க இன்னும் யாருக்கும் யோசனை வரவில்லையா? :icon_idea:

பைக்கற் சிலோன் நண்டு தமிழ் கடையில் மொன்றியலில் இருக்கு குட்டி. ரொறன்ரோவிலும் இருக்கும் என நினைக்கிறேன். நிழலியைக் கேளுங்கள்!

குட்டி இன்னும் குடும்பஸ்தன் ஆகவில்லை கு.சா.

எங்கள் வீட்டில் நண்டுக் கறியும் ஆட்டிறைச்சிக் கறியும் அடிக்கடி சமைக்கப்படும். அதிலும் நண்டுக்கறி விதம் விதமான நண்டுகளில் சமைக்கப்படும். உறைப்பு சொல்லி மாளாது.

குட்டிக்கும் நண்டுக் கறியில அனுப்பி விடுங்கோ தமிழச்சி!

இந்தக் கறிகள் சமைப்பது அம்மா இல்லை சுபேஸ். எங்கள் வீட்டில் இவைகளைச் சமைப்பது அநேகமாக ஆண்கள்தான். எங்கள் வீட்டில் உள்ளுக்குள் ஏற்றிய பிறகு சாப்பிடுவதற்காகச் செய்வார்கள். இவற்றை எனது தம்பியும் நண்பர்களும்தான் இந்த முறையில் சமைப்பார்கள். :lol: :lol: :lol:

லக்கி தமிழச்சி!

Posted

ஓ...தண்ணி அடிக்கிற ஆக்களுக்கு நல்லாய்த்தான் இருக்கும் உறைப்பாய் இருந்தால்...அப்படியே அடுத்தமுறை நண்டுப்பிரட்டல் வைத்தால் வீட்டில் ஆண்கள் போத்தல் உடைக்குமுன் நிழலி அண்ணாவையும் கூப்பிடுங்கள்...

என் மனிசி நண்டுக் கறியில் கலாநிதிப் பட்டம் வாங்கியர்....

Posted

நாலு பேர் சுத்தி இருந்து நண்டுக்கறி சாப்பிட்டா ஆளையால் பாத்து அழவேணும்....அப்பிடி உறைப்பாய் இருந்தால் அந்தமாதிரி இருக்கும்...ஊரில் இருக்கும்போது தடிமனுக்கு நல்ல உறைப்பாய் நண்டுக்கறி சாப்பிட்டே எனக்கு தடிமன் போயிருக்கு...அலை அக்கா கையோட எப்பிடி நண்டை உடைத்து சாப்பிடுவது என்பது பற்றியும் ஒரு சிறு குறிப்பெழுதி விடுங்கோ...தமிழச்சி அக்காவீட்டு சாப்பாடு பற்றி சொல்லி வேலை...நல்ல விதம்விதமாய் அம்மா சமைத்துதர புல் கட்டுக் கட்டீட்டு வந்து எங்களை மாதிரி பச்சிலருக்கு கடுப்பேத்துறது நல்லாயில்லை சொல்லீட்டன்.... :D

கையால் தான் உடைப்பது :lol: 30 வயது வரை பொறுங்கோ பின்பு மனைவி உடைத்துத் தருவா :lol: ( யாருக்குத் தெரியும் பெடி தான் மனிசிக்கு நண்டு உடைத்துத் தீத்தி விட வேணுமோ )

என் மனிசி நண்டுக் கறியில் கலாநிதிப் பட்டம் வாங்கியர்....

நிழலிக்கும் மனைவிக்கும் சமைக்கத் தெரியாத நண்டா??? அர்ஜுன் அண்ணா நிழலி வீட்டு நண்டுக் கறி பற்றி எழுதினவர்.

Posted

கருத்துக்களிட்ட அனைவர்க்கும் நன்றிகள்! :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என் மனிசி நண்டுக் கறியில் கலாநிதிப் பட்டம் வாங்கியர்....

குடுத்து வச்சனியள்...அனுபவிக்கிறியள்...நாங்கள் லாச்சப்பல்லை சாப்பிட்டிட்டு விட்டத்தை பாத்து தூங்கிறம்...போனகிழமை நண்டு சமைப்பம் எண்டு வீட்டை வாங்கி வைத்து சமைத்து முடிய நண்டுக்கறியில் நண்டு சேரவே இல்லை...நண்டு வேறு குழம்பு வேறாக....என்ன கறியெண்டு கேட்ட ஆக்களிட்ட சும்மா சிரிச்சு சமாளிச்சிட்டன்.. :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கையால் தான் உடைப்பது :lol: 30 வயது வரை பொறுங்கோ பின்பு மனைவி உடைத்துத் தருவா :lol: ( யாருக்குத் தெரியும் பெடி தான் மனிசிக்கு நண்டு உடைத்துத் தீத்தி விட வேணுமோ )

தலைகீழாய் நிண்டாலும் தலையில் என்ன எழுதி இருக்கோ அதுதான் நடக்கும்... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.