Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆண்களின் அழகு !!!!!!!!!!!

Featured Replies

தங்கம் இன்றைக்கு விற்க்கும் நிலையில் வீட்டில் உள்ள அனைத்து சொத்தையும் விற்று தங்கத்தை வாங்கி அதனுடன் கார் இருக்கின்ற அனைத்து சாமான்களை வாங்கி பெண்ணை கட்டி கொடுத்தால் கட்டினவன் ஆண்மையற்றவனாக இருந்தால் எப்படி இருக்கும். அந்த பெண்ணின் நிலைமையை நினைத்து பாருங்கள்

ஒரு பெண்ணுக்கு வரன் பார்க்க வேண்டும் என்று நினைத்தவுடன் என்ன செய்கிறார்கள். பையன் என்ன வேலை பார்க்கிறான். பெரிய கம்பெனியில் வேலை பார்க்கிறானா மாதத்திற்க்கு எவ்வளவு சம்பாதிக்கிறான். லட்சத்தை தாண்டுமா என்று பார்க்கிறார்கள். லட்சத்தை பார்க்கிறார்களே தவிர ஆணுக்கு உடைய லட்சணத்தில் இருக்கிறானா என்று பார்ப்பதில்லை.

நிறைய சம்பாதிப்பவன் என்ன செய்வான் வேலையை கட்டிக்கொண்டு அதனுடன் போராடிக்கொண்டிருப்பான் அவன் வீட்டிற்க்கு வந்தவுடன் எப்படா படுத்து தூங்கலாம் என்று தான் பார்ப்பான். மனைவியுடன் என்ன பேசபோகிறான்.

சம்பளம் எந்தளவுக்கு வாங்குகிறானோ அந்தளவுக்கு மன உளச்சல் கண்டிப்பாக அவனுக்கு இருக்கும் எவனும் சும்மா பணத்தை தரமாட்டான் அந்தளவுக்கு வேலையை வாங்கிகொண்டு தான் சம்பளத்தை கொடுப்பான்.

ஆண்களின் ஜாதகத்தில் மூன்றாவது வீடு என்பது முக்கியமான ஒன்று அதை நன்றாக பார்த்து தான் பெண் வீட்டார்கள் பெண்ணை கொடுக்க வேண்டும்.

சுக்கிரனை சுக்கிலகாரகன் என்றும் சொல்லுவார்கள் சுக்கிரன் கெட்டால் ஆண்மை இழப்பு இருக்கும். மூன்றாம் வீட்டில் சுபகிரகங்களை விட தீயகிரகங்கள் இருந்தால் ஆண்மை தனம் மின்னும்.

இல்லற வாழ்க்கையில் தாம்பத்திய உறவு என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது. தாம்பத்திய உறவுக்கு நல்ல மனநிலை இருந்தால் தான் ஈடுபாடு இருக்கும். வேலையை கட்டிக்கொண்டு இருப்பவன் மனநிலை குறைபாடு இருக்க செய்யும். மனகாரகனாகிய சந்திரனும் நன்றாக இருந்தால் தான் முழு ஈடுபாட்டோடு ஈடுபடமுடியும்.

ஆண்களின் ஜாதகத்தில் மூன்றாவது இடம், இனஉறுப்புகளை காட்டும் எட்டாம் இடம், படுக்கையறையை காட்டும் பனிரெண்டாம் இடம் ஆகியவற்றை நன்றாக ஆராய்ந்து பெண்ணை திருமணம் செய்து வைப்பது நல்லது.

ஆண்களின் ஜாதகத்தில் பெண் கிரகங்கள் பலம் பெற்று நின்றால் ஆண்கள் பெண்கள் போல இருப்பார்கள் நடை பாவனை செயல்பாடு அனைத்தும் பெண்மை மின்னும்.

ஆண்களின் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசி அவர் எந்த நட்சத்திரத்தில் செல்லுகிறார் அனைத்தையும் பார்த்து தான் ஆண்மை உடையவரா என்று பார்க்கமுடியும். அலிகிரகத்தில் நின்றால் அலிதன்மையை அதிகமாக தரும். சுக்கிரன் செல்லும் நட்சத்திரமும் முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மூன்றாவது வீடு என்பது உங்களின் இளைய சகோதரர் மற்றும் பக்கத்துவீட்டுகாரரை காட்டும் இடமும் கூட நீங்கள் இந்த விசயத்தில் வீக்காக இருந்தால் இவர்களின் பங்களிப்பு உங்களின் வாழ்க்கையில் வந்துவிடும் எச்சரிக்கை.

எந்த கிரகம் எப்படி இருந்தாலும் உங்கள் லக்கானாதிபதி நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே தாம்பத்திலும் திருப்திகரமான வாழ்வு இருக்கும்.

அந்த காலத்தில் பெண்ணை கொடுப்பதற்க்கு மாட்டை அடுக்குவது கல்லை தூக்க சொல்வது எல்லாம் இதற்கு தான் இருக்கும். இந்த காலத்தில் இந்த டெஸ்ட் வைத்தால் ஒரு பெண்ணுக்கு கூட திருமணம் நடைபெறாது. ஒருவன் எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு பெண்ணை திருப்திபடுத்தமுடியவில்லை என்றால் அவன் உயிரோடு இருந்தும் வீண்தான்.

ஆண்களின் அழகு சம்பாதிப்பதில் விட ஆண்மையை காட்டுவதில் தான் இருக்கிறது.

தாம்பத்திய வாழ்வைப்பற்றி பார்க்க வேண்டும் என்றால் ஏகாபட்ட தகவல் சோதிடத்தில் இருக்கிறது அதை எல்லாம் அவ்வப்பொழுது பார்க்கலாம். இப்பொழுது இந்த தகவல் போதும்.

பரிகாரம்

மன்மதன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள் :lol: :lol: :D:icon_idea: .

http://astrovanakam.blogspot.fr/2012/10/blog-post_4.html

  • Replies 53
  • Views 10.2k
  • Created
  • Last Reply

இந்த நவீன உலகில் ஆண்மை குறைவு போன்ற மருத்துவ ரீதியில் அணுக வேண்டிய விடயங்களுக்கு கூட சாத்திரத்தையும் சாதகத்தையும் நம்புவதற்கு தமிழனால் மட்டும் தான் முடியும்

பக்கத்து வீடு தெரியும். அதென்னப்பா மூணாவது வீடு? :D

  • தொடங்கியவர்

இந்த நவீன உலகில் ஆண்மை குறைவு போன்ற மருத்துவ ரீதியில் அணுக வேண்டிய விடயங்களுக்கு கூட சாத்திரத்தையும் சாதகத்தையும் நம்புவதற்கு தமிழனால் மட்டும் தான் முடியும்

என்னதான் கைராசிக்காற டாக்குத்தார்மார் வைத்தியம் செய்தாலும் , வெளியிலை வைச்சு முட்டையை பொரிக்கவைச்சு உள்ளுக்கை வைச்சாலும் , கிரகநிலையள் ஏறுக்கு மாறாய் நிண்டால் வரப்போற சீவன் வாருமோ ராசா :D :D ?? இதுக்கு அனுபவம்தான் மாஸ்ரர் . இளரத்தம் எல்லாத்தையும் கதைக்கும் . நிண்டு யோசிக்காது :lol: :lol: . இது சம்பந்தமாய் வலுகெதியில ஒரு சுய ஆக்கம் ஒண்டு தாறன் .

ஆண்களின் ஜாதகத்தில் மூன்றாவது வீடு என்பது முக்கியமான ஒன்று

.........................

.........................

மூன்றாம் வீட்டில் சுபகிரகங்களை விட தீயகிரகங்கள் இருந்தால் ஆண்மை தனம் மின்னும்.

வீடு; சின்ன வீடு; மூன்றாம் வீடு? நிச்சயமாக என்னென்னவோ எல்லாம் மின்னுது.

சின்ன வீட்டிலை இருக்கிறதே வழக்கத்தில் சரியானதாக இருக்காது. அதனால் மூன்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருபது தான் திட்டம் முன்னல் செல்ல வசதியாக இருக்கும். :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் சாத்திரம் போன்ற மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லாதவர் என்று நினைத்தேன்!

நெடுக்ஸைக் கேட்டால் விஞ்ஞான ரீதியில் என்ன என்ன சோதனைகள் செய்து ஒரு ஆணும், பெண்ணும் குழந்தை பெறத் தகுதியானவர்களா என்று சொல்வார். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களின் அழகு சம்பாதிப்பதில் விட ஆண்மையை காட்டுவதில் தான் இருக்கிறது.

http://astrovanakam....log-post_4.html

அப்ப சரி

  • தொடங்கியவர்

பக்கத்து வீடு தெரியும். அதென்னப்பா மூணாவது வீடு? :D

பன்ரெண்டு பெட்டியை போட்டு எண்ணிக்கொண்டு வாங்கோ சிலநேரம் தெரிஞ்சாலும் தெரியும் :lol::D:icon_idea: .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த நவீன உலகில் ஆண்மை குறைவு போன்ற மருத்துவ ரீதியில் அணுக வேண்டிய விடயங்களுக்கு கூட சாத்திரத்தையும் சாதகத்தையும் நம்புவதற்கு தமிழனால் மட்டும் தான் முடியும்

நீங்கள் குறிப்பிடும் இந்த நவீன உலகில் தான்........அதிகளவு ஆண்மைக்குறைபாடுகள் வருகின்றன! ஏன்?எப்படி?எதனால்?...........சாத்திரத்தை நம்புவது தமிழன் மட்டுமல்ல.....இந்த உலகமே சாத்திரத்தை நம்புகின்றது....ஏன் நாசா கூட நம்புகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் சாத்திரத்தை நம்புவார்கள்

நீங்கள் குறிப்பிடும் இந்த நவீன உலகில் தான்........அதிகளவு ஆண்மைக்குறைபாடுகள் வருகின்றன!

நவீன காலத்தில் ஆண்மை அற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சாத்திரத்தை நம்ப வேண்டும் என்று சொல்கின்றீர்களா? அல்லது சாத்திரத்தை நம்பினால் இவை சரியாகும் என்கின்றீர்களா? ஆண்மை குறைபாடுக்கு எங்களிடம் வாங்கள் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் போடும் உள்ளூர் சாமியார்கள் இதைத்தான் சொல்லித் தான் விற்கின்ற்னர்

நான் குறிப்பிட்டது, மருத்துவ ரீதியில் அணுகப்பட வேண்டியவற்றுக்கு மொக்குத் தனமாக சாத்திரத்தை நாடுவதைத்தான். உங்கள் பிள்ளைகளுக்கு வருத்தம் வரேக்கு விஞ்ஞான முறைகளை தொடரும் மருத்துவரிடம் போறீர்களா இல்லை சாத்திரப் புத்தகத்தை தூக்கிக் கொண்டு சாத்திர காரரிடம் போகின்றீர்களா?

ஆண்களின் அழகு என்ற தலைப்பை பார்த்து என்ரை படமும் இருக்கோ என்று எட்டிப்பார்த்தால் கோ வின் சாத்திர புத்தகம் பாதி திறந்து கிடக்கு.

எதையும் நம்புங்கோ ஆனால் விஞ்ஞானத்தை நம்புவதை கை விட்டு விடாதையுங்கோ .

பழைய காலத்து ஆட்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள் என்பதேல்லாம் சுத்த அபத்தம் .என்ன நோய் என்று தெரியாமலே உயிரை போகவிட்ட காலங்கள் அவை .புள்ளிவிபரங்களை பார்த்தால் மனிதன் உயிர் வாழ்தல் (ஆயுள் )எத்தனை ஆண்டுகள் கூடியிருக்கின்றதேன்று தெரியும் .

கடவுளை நம்புங்கள்,மதங்களை நம்புங்கள் ,சாஸ்திரங்களை நம்புங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் எங்கட தான் திறம் என்று மற்றவனை அடிக்கதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஆண்மை என்றால் என்ன???

நானறிந்தவரை

2க்கும் அதிகமான பெண்டாட்டி வைத்திருப்பவன்.

பக்கத்து வீட்டை போய் வாறவன்?

அப்படி பார்த்தால்

நம்ம பிள்ளையார்............?

முருகன் ஆண்மையுள்ளவர்.

நானும் முருக பக்தன்

அப்ப நானும் அதுதான். :lol:

ஆனால் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்குமான உடலுறவைத்தீர்மானிப்பவை

அன்பும் அரவணைப்பும்

கொடுக்கணும் என்ற மனமுமே.

முன்னைய சமூதாயம் சின்ன மீனுடனேயே திருப்திப்பட்டுக்கொண்டது.

இன்றைய சமூதாயம்

திருப்திப்படாது ஓடத்தொடங்கியுள்ளது.

அதற்கு இனி திமிங்கிலத்தை கண்டாலும் அடங்காது. :lol:

என்னதான் கைராசிக்காற டாக்குத்தார்மார் வைத்தியம் செய்தாலும் , வெளியிலை வைச்சு முட்டையை பொரிக்கவைச்சு உள்ளுக்கை வைச்சாலும் , கிரகநிலையள் ஏறுக்கு மாறாய் நிண்டால் வரப்போற சீவன் வாருமோ ராசா :D :D ?? இதுக்கு அனுபவம்தான் மாஸ்ரர் . இளரத்தம் எல்லாத்தையும் கதைக்கும் . நிண்டு யோசிக்காது :lol: :lol: . இது சம்பந்தமாய் வலுகெதியில ஒரு சுய ஆக்கம் ஒண்டு தாறன் .

கோவின்

இதுவரையான எழுத்துக்கும்

இந்த திரிக்கு எழுதுவதற்கும் வித்தியாசமாக இருக்கே....

கன விடயங்களை இன்னும் கழட்டணுமே கோ...

:D

  • கருத்துக்கள உறவுகள்

பரிகாரம்

மன்மதன் கோவிலுக்கு சென்று வழிபடுங்கள் :lol: :lol: :D:icon_idea: .

http://astrovanakam....log-post_4.html

மன்மதன் கோவில் எங்கே இருக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

மன்மதன் கோவில் எங்கே இருக்கிறது?

என்னட்டை கேளுங்கோ சொல்றன் :lol:

August-201200072.jpg

ரதி மன்மதன் கோவில் கும்பாபிஷேக விழா

ஜூன் 08,2012

[size=2]

உளுந்தூர்பேட்டை: எலவனசூர் கோட்டை அடுத்த கீழப்பாளையத்தில் உள்ள ரதி-மன்மதன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு முதல் கால பூஜையும், இரவு 8 மணிக்கு இரண்டாம் கால பூஜையும் நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு கோ பூஜையும் நடந்தது. தொடர்ந்து 7.45 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=11270 [/size]

  • தொடங்கியவர்

வீடு; சின்ன வீடு; மூன்றாம் வீடு? நிச்சயமாக என்னென்னவோ எல்லாம் மின்னுது.

சின்ன வீட்டிலை இருக்கிறதே வழக்கத்தில் சரியானதாக இருக்காது. அதனால் மூன்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருபது தான் திட்டம் முன்னல் செல்ல வசதியாக இருக்கும். :D

தெரியாத்தனமாய் தொடங்கி போட்டன் புள்ளியள் சேருதே............... :o:lol::D:icon_idea: .

  • தொடங்கியவர்

கோமகன் சாத்திரம் போன்ற மூடநம்பிக்கைகளில் நம்பிக்கை இல்லாதவர் என்று நினைத்தேன்!

நெடுக்ஸைக் கேட்டால் விஞ்ஞான ரீதியில் என்ன என்ன சோதனைகள் செய்து ஒரு ஆணும், பெண்ணும் குழந்தை பெறத் தகுதியானவர்களா என்று சொல்வார். :icon_idea:

எனக்கு மூட நம்பிக்கை இருக்கோ இல்லையோ எண்டது ஒருபக்கம் இருக்க , வாழ்க்கையில வாற கூட்டல் கழித்தலில சில " ஏன் " களுக்கு விடையை கண்டுபிடிக்க ஏலாமல் கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மூட நம்பிக்கை இருக்கோ இல்லையோ எண்டது ஒருபக்கம் இருக்க , வாழ்க்கையில வாற கூட்டல் கழித்தலில சில " ஏன் " களுக்கு விடையை கண்டுபிடிக்க ஏலாமல் கிடக்கு .

அண்மையில் The Grand Design என்ற புத்தகம் படித்தேன். "ஏன்" களுக்கு விரைவில் விடைவந்துவிடும் போலத்தான் உள்ளது. அதற்கு M-theory ஐப் படிக்கவேண்டும்!

  • தொடங்கியவர்

அண்மையில் The Grand Design என்ற புத்தகம் படித்தேன். "ஏன்" களுக்கு விரைவில் விடைவந்துவிடும் போலத்தான் உள்ளது. அதற்கு M-theory ஐப் படிக்கவேண்டும்!

அப்படியானால் அதை ஊதிப்பெருத்து பின் சுருங்கல் என்று எடுத்துக்கொள்ளலாமா :) ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் அதை ஊதிப்பெருத்து பின் சுருங்கல் என்று எடுத்துக்கொள்ளலாமா :) ?

அது பழசு.

  • தொடங்கியவர்

அப்ப சரி

அதே................. :lol: :lol: :D:icon_idea: .

[size=5]குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர். 66[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவீன காலத்தில் ஆண்மை அற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சாத்திரத்தை நம்ப வேண்டும் என்று சொல்கின்றீர்களா? அல்லது சாத்திரத்தை நம்பினால் இவை சரியாகும் என்கின்றீர்களா? ஆண்மை குறைபாடுக்கு எங்களிடம் வாங்கள் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் போடும் உள்ளூர் சாமியார்கள் இதைத்தான் சொல்லித் தான் விற்கின்ற்னர்

நான் குறிப்பிட்டது, மருத்துவ ரீதியில் அணுகப்பட வேண்டியவற்றுக்கு மொக்குத் தனமாக சாத்திரத்தை நாடுவதைத்தான். உங்கள் பிள்ளைகளுக்கு வருத்தம் வரேக்கு விஞ்ஞான முறைகளை தொடரும் மருத்துவரிடம் போறீர்களா இல்லை சாத்திரப் புத்தகத்தை தூக்கிக் கொண்டு சாத்திர காரரிடம் போகின்றீர்களா?

குறுகிய கோட்டுக்குள் நின்று சாத்திரத்தின் அர்த்தம் தெரியாமல் கதைக்கின்றீர்கள்..

வியாபாரத்திற்க்காக சாத்திரம் இது ஒரு வகை..... இங்குதான் தான் பலர் மோகம் கொண்டுள்ளனர்....இதனால்த்தான் உங்களைப்போன்றவர்கள் வெறுப்படைய வேண்டி வருகின்றது.முழு அமாவாசை நாளிலும் திருமணநாள் குறித்து தரக்கூடிய ஐயர்,ஆசான்கள் வாழும் உலகில்த்தான் நாமும் வாழ்கின்றோம்.நல்லதை எடுத்துக்கொள்வதும்....கெட்டதை ஒதுக்கி வைப்பதுதான் உண்மையான மனிதர்க்கு அழகு.

மேலைத்தேய உலகில் விஞ்ஞானம் இவ்வளவு வளர்ந்த பின்னும்...........காடு வெட்டிகள் தளிர்காலத்தில் ஒருமரத்தைக்கூட வெட்டமாட்டார்கள்.சட்டமும் அனுமதிப்பதில்லை.

சாத்திரம் என்பது நாம் மழைக்கும்,வெய்யிலுக்கும் பிடிக்கும் குடை மாதிரி....

வருமுன் காப்போம்....அதற்குத்தான் உண்மையான சாத்திரம்........கண்டகண்ட பொய்யானவர்களிடம் அகப்பட்டு உள்ளதையும் இழக்காமல்......நல்லபடியாக வாழ வேண்டுகிறேன் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்களின் அழகு என்ற தலைப்பை பார்த்து என்ரை படமும் இருக்கோ என்று எட்டிப்பார்த்தால் கோ வின் சாத்திர புத்தகம் பாதி திறந்து கிடக்கு.

எதையும் நம்புங்கோ ஆனால் விஞ்ஞானத்தை நம்புவதை கை விட்டு விடாதையுங்கோ .

பழைய காலத்து ஆட்கள் ஆரோக்கியமாக இருந்தார்கள் என்பதேல்லாம் சுத்த அபத்தம் .என்ன நோய் என்று தெரியாமலே உயிரை போகவிட்ட காலங்கள் அவை .புள்ளிவிபரங்களை பார்த்தால் மனிதன் உயிர் வாழ்தல் (ஆயுள் )எத்தனை ஆண்டுகள் கூடியிருக்கின்றதேன்று தெரியும் .

கடவுளை நம்புங்கள்,மதங்களை நம்புங்கள் ,சாஸ்திரங்களை நம்புங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் எங்கட தான் திறம் என்று மற்றவனை அடிக்கதையுங்கோ.

நாலு நல்லதை சொல்லிப்போட்டு.......கையோடை கையாய்............. உள்ளுக்கை இருக்கிறதை வாந்தி எடுக்கிறதுக்கும் ஒரு திறமை வேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே ஒரு சாத்திரம் ஒளிந்து இருக்கின்றது! அதை கண்டு பிடியுங்கள் நிழலி! வரும் காலத்தை ஒளிபிடித்து காட்டிய பொன்னான திரைப்படம் இது

:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.