Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள் வரவு செலவை பார்வையிட முயலுங்கள்.

வெளியில் நில்லாது உள்ளே சென்று கேள்வி கேளுங்கள். திருத்தங்களை கொண்டு வாருங்கள். ஒவ்வொரு தமிழனும் செய்யணும்.

தீயவர்கள் இனம் காணப்படணும். நல்லவர்கள் ஒன்று சேரணும். எல்லோரும் சேர்ந்து தேரை கரை சேர்க்கணும்.

வசை பாடுதல் உள்ளதையும் எமது காலத்திலேயே இல்லாது செய்துவிடும்.

அப்படியாயின் அடுத்த சந்ததி.......................???

எல்லோரும் கள்ளர் என்பது கிடையாது. இப்போது இங்கே இசை நிகழ்ச்சியை குழப்ப முற்படுபவர்கள் தேசீயப் பற்றினால் மாவீரர் பற்றினால் இல்லை என்பது சர்வ நிச்சயம். ஒரு சிலரே இதை ஆரம்பிக்கின்றாரகள் அவர்களுக்கு பணமும் நான் பெரிது நீ பெரிது என்ற அடயாளப்போட்டியும் பிரதானமானது. ஆனால் அவர்கள் ஆரம்பித்துவிட அதன் பின்னால் செல்பவர்கள் உண்மையாக தேசீயப்பற்றுள்ளவர்களாக இருக்கின்றனர். இந்த நிலை ஆபத்தானது என்பதையே சுட்டிக்காட்டுகின்றேன்.

எனக்கு கனடா பற்றி தெரியாது

அதை அங்குள்ள மக்களே பார்க்கணும்

இங்கு கருத்து எழுதிய பல கனடிய உறவுகள் புறக்கணிப்புக்கு சார்பாகவே கருத்து எழுதியுள்ளனர்.

எனது சொந்தக்கருத்து

நவம்பர் 3இல் செய்யலாம் என்பதே.

எந்த இனத்திலும் அதி தீவிரவாதிகள் இருப்பர். அவர்களும் தமது கருத்தை வைக்க சுதந்திரம் உண்டு. ஏற்பதும் ஏற்காததும் மக்களின் கையில்.

புலம் பெயர் நாடுகளில் நவம்பர் மாதத்தை ஒரு ஆடம்பரமற்ற மாதமாக்க வேண்டப்பட்டது தெரியும். ஆனால் சாத்தியமில்லை என்பது எனது கருத்து.

ஒருகிழமை என்பது சரி வரலாம்

  • Replies 272
  • Views 20.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

80/20 விதியின்படி 20 வீதமானவர்கள் அர்ப்பணிப்புடன் இருந்தாலே வெற்றி..! :icon_idea:

என்னில் கனடாவில் நடப்பது எனக்கு தெரியாது ....நீங்கள் கனடாவை எனக்கு உதாரணம் காட்டதேவை இல்லை ..நான் வாழும் நாட்டில் மாவீரை தினம் செய்பவர்களின் உணர்வோடுதான் எதிர்க்கருத்தேழுதினேன்

அப்ப நீங்கள் கனடாவில் இல்லை. வேறு ஒரு நாட்டில் இருந்துகொண்டுதான் இங்கு கனடாவில் இசை நிகழ்ச்சியை குழப்புபவர்களின் தேசீயத்துக்கு வக்காலத்து வாங்கினீர்கள். நல்லது உங்கள அரிய சேவையை தொடர்ந்து செய்யுங்கள்.

அதி தீவிர தேசியவாதிகள் என்று யாரும் இல்லை அத்தனையும் வேஷம் .

உலகம் அறிந்த ஒரு உண்மையை இன்னமும் விளங்காத மாதிரி எழுதுவது ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள்ள முடியாது.

[size=2]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை அந்த இசை நிகழ்ச்சி அரங்கம் நிறைந்த மக்களோடு வெற்றிகரமாய் நடந்திட்டுது என்டால் அதன் பிறகு இதில் வந்து என்ன எழுதுவீங்கள் கன்டாக்காரருக்கு இனப்பற்று இல்லை என்டா?

ஒரு வேளை அந்த இசை நிகழ்ச்சி அரங்கம் நிறைந்த மக்களோடு வெற்றிகரமாய் நடந்திட்டுது என்டால் அதன் பிறகு இதில் வந்து என்ன எழுதுவீங்கள் கன்டாக்காரருக்கு இனப்பற்று இல்லை என்டா?

புலிகள் தோற்றதன் பின் உண்மையான விடுதலை விரும்பிகள் எப்படி எழுதுகிறார்கள் என்று அனுபவ பட்டீர்களா இதுவரையில்?

அதி தீவிர தேசியவாதிகள் என்று யாரும் இல்லை அத்தனையும் வேஷம் .

உலகம் அறிந்த ஒரு உண்மையை இன்னமும் விளங்காத மாதிரி எழுதுவது ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள்ள முடியாது.

இது எப்படி வரையறுக்கப்படுகிறது என்று கூற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வேளை அந்த இசை நிகழ்ச்சி அரங்கம் நிறைந்த மக்களோடு வெற்றிகரமாய் நடந்திட்டுது என்டால் அதன் பிறகு இதில் வந்து என்ன எழுதுவீங்கள் கன்டாக்காரருக்கு இனப்பற்று இல்லை என்டா?

இளையராசாவின் இசை நிகழ்ச்சிக்கு மக்கள் போவார்கள். அது வெற்றியடையும். வெற்றியடையணும் என்பது தான் எனது கருத்தும். ஏனெனில் அவரும் எமது பெரும் சொத்துத்தான். ஆனால் நவம்பர் மாதத்தில் வைக்காமல் விட்டிருக்கலாம் என்று சொல்ல பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமையுண்டு.

அதை ஒரு ஆடம்பரமற்ற இசை நிகழ்ச்சியாக மாற்றினால் இன்னும் நன்று.

இது எனது கருத்து மட்டுமே.

அப்ப நீங்கள் கனடாவில் இல்லை. வேறு ஒரு நாட்டில் இருந்துகொண்டுதான் இங்கு கனடாவில் இசை நிகழ்ச்சியை குழப்புபவர்களின் தேசீயத்துக்கு வக்காலத்து வாங்கினீர்கள். நல்லது உங்கள அரிய சேவையை தொடர்ந்து செய்யுங்கள்.

உண்மையில் நீங்கள் யார் என்பது எனக்கு புரிகிறது ...........கனடாவில் நடக்கும் இசை நிகழ்சியை குழப்பும் வகையில் நான் குவாத் பண்ணி எழுதினேனா.........அந்த நிகழ்ச்சி நடக்க கூடாது என்று எங்கேயும் நான் எழுதினேனா..........இங்கே பிரான்சில் உள்ள சபேசன் மாவீரர் தினம் நடத்துபவரை பற்றி கீழ்த்தரமான விமர்சனம் செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா.........ஆகவே நான் கொலண்டில் இருந்து தமிழ்சூரியன் அதற்கு குவாத் பண்ணி கருத்தேழுதியத்தை வாசிக்கவில்லையா..........அதன் பின் நீங்கள் என் கருத்தை குவாத் பண்ணி கருத்தெழுதியதற்கு நான் கருத்தேழுதியத்தை வாசிக்கவில்லையா........சபேசனின் கீழ்த்தரமான சிந்தனைக்கு மட்டுமே நான் கருத்தெழுதினேன் .....நீங்கள் என்னடாவென்றால் .........நீங்கள் குழப்பும் இளைய ராயாவின் இசை நிகழ்ச்சியை இதற்குள் புகுத்தி மாவீரர் தினத்தையும் குழப்பி உங்களையும் குழப்பி என்னையும் குழப்பி .............என் இந்த கொலை வெறி .......... :D

கவலையை விடுங்கள் விசுகு. இசைஞானி பொதுவாகவே மிக அமைதியாகவே இசை நிகழ்ச்சியை நடத்துவார். இங்கே நடக்கின்ற நவம்பர் 27 கொண்டாட்டங்கள் போன்று விசில் அடித்து ஆட்டம் பாட்டம் என்று அவர் நடத்துவது இல்லை.

அமைதியான இசை. அமைதியான பார்வையாளர்கள். சாந்தம் தவழும் முகத்தோடு ஒரு மனிதன் இசையை மீட்டிச் செல்வான். மாவீரர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் இருப்பது யேர்மனியில்.........

தமிழ் சூரியன், நீங்கள் எனக்கு பதில் சொல்லி இருப்பதை இப்பொழுதுதான் நான் கவனித்தேன். நான் இங்கே புலம்பெயர் நாடுகளில் நடக்கின்ற மாவீரர் தினத்தை வைத்துக் கொண்டே என்னுடைய கருத்தைச் சொன்னேன்.

கடந்த ஆண்டு மாவீரர் நாள் இரண்டாக நடைபெற்ற காரணத்தினால், அதுவும் போராளிகள் வேறு சம்பந்தப்பட்டிருந்ததால், சில இடங்களில் கேளிக்கை நிகழ்வுகள் தவிர்த்து உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

மற்றையபடி நாங்கள் அங்கே சென்று சென்று சிங்களவர்களை கிண்டல் அடிக்கின்ற நாடகங்களையும், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பகிடிகளையும் பார்த்து வயிறு குலங்கச் சிரித்து விட்டு வருவோம்.

தேசியப் பணியாளர்கள் கொத்துரொட்டி, கலண்டர் தொடங்கி முருங்கைக்காய் வரை சுறுசுறுப்பாக விற்றுக் கொண்டிருப்பார்கள். கீழ்த்தனமாக இருந்தாலும் உண்மையை பேசாமல் இருக்க்கு கூடாது அல்லவா?

சபேசன் இருப்பது யேர்மனியில்.........

நன்றி அண்ணா ...........தகவலுக்கு கலை சம்பந்தமாக பிரான்சில் பார்த்த நினைவு ...அதனாலேயே குழப்பம் ........

மன்னிக்கவும்......... :rolleyes: :rolleyes:

இளையராசாவின் இசை நிகழ்ச்சிக்கு மக்கள் போவார்கள். அது வெற்றியடையும். வெற்றியடையணும் என்பது தான் எனது கருத்தும். ஏனெனில் அவரும் எமது பெரும் சொத்துத்தான். ஆனால் நவம்பர் மாதத்தில் வைக்காமல் விட்டிருக்கலாம் என்று சொல்ல பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமையுண்டு.

அதை ஒரு ஆடம்பரமற்ற இசை நிகழ்ச்சியாக மாற்றினால் இன்னும் நன்று.

இது எனது கருத்து மட்டுமே.

இசை நிகழ்ச்சி என்பதே கேட்டு இன்பமாயிருக்க என்றே நடாத்தப்படுவது. அதனை துன்பம் சுமந்த ஒரு மாதத்தில் வைக்க முனைவதில் சிங்களத்தின் சதி இருக்குமோ என்பதே எமது சந்தேகம். அத்தகைய ஒரு சதியில் எமது தேசியம் சார்ந்த உணர்வுகள் சீர் குலைந்து போகக் கூடாது என்பதே எமது எதிர்ப்பிற்கு காரணம்.

இதை ஏன் இந்நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்கள் அவர்கள் யாராய் இருந்தாலும் அதேபோல் இளையராஜாவும் புரிந்து கொள்ள முற்படவில்லை? இதிலிருந்தே எம் சந்தேகம் மேலும் பெரிதாக கொழுந்து விட்டெரிகின்றது.

மர்றும் படி இளையராஜாவிற்கோ தமிழரின் எந்தவொரு முயற்சிக்குமோ நாம் எதிரிகள் அல்ல. இதை இங்கு களமாடும் உறவுகள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ச்சூரியன் நெதர்லாந்து தொண்டர்கள் என்ற கறுப்புக்கண்ணாடியைக் கழட்ட மறுக்கின்றார். அதனூடாகப் பார்த்தால் நாம் அவருடன் மட்டுமல்ல உண்மையான தமிழ்த்தேசியம் சார்ந்த உணவாளர்களுடனும் முரண்படுவதாகவே படும்.

ஆனால்க் கனடா வேறொரு வகையான கண்ணாடியூடாகப் பார்க்கப்பட வேண்டிய இடம்.விசுகு சொல்வதைப் போல இங்கு புலிகள் சார்பில் இயங்குபவர்களுடன் இந்தக் காசுக்கதை எல்லாம் கதைக்க முடியாது. அவர்கள் உங்களுடன் கதைக்க மட்டுமல்ல காது கொடுத்துக் கேட்கவே தயாரில்லை.

அதிகமான துரோகிகள் வாழும் இடம் கனடா என்றே நினைக்கின்றேன். அத்தனை துரோகிகளையும் வகைப்படுத்தியவர்களும் வெளிப்படுத்தியவர்களும் புலிகளின் பெயரில் பணம் வசூலித்தவர்களும் மக்களின் பணத்தில் இன்று கொழுத்த பணக்காரராய் இருப்பவர்களும் இவர்களே.

இப்பொழுது கனடாவில் வாழும் சிலர் அவர்களை வெளிப்படுத்த முன்வரலாம். அர்ஜுன் ,சுகன் போன்றவர்கள் கனடிய நிலைமைகளைக் கோடிட்டுலக் காட்டியுள்ளனர். புலிகளிந்மக்கள் பணத்தில் 3,4 வீடுகளை ஒருவர் பெயரில் வாங்கியவர் இன்று புலிகள் அழிந்த நிலையில் அத்தனையையும் வித்து காசாக்கி ஸ்வாகா செய்திருக்கின்றார். இந்தத் திரி அப்படியானவர்களை வெளிப்படுத்த உதவினால் மகிழ்ச்சியே...

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கள் அவர்களது முகமூடிகளை கிழியுங்கள் பெயர் முகவரியுடன்.

நன்றி

உங்கள் கருத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன் பந்தியாக எழுதுபவன் அல்ல ....ஒரு தவறை சுட்டிக்காட்டுவதற்கும் ..........அந்த தவறை சுட்டிக்காட்டி இன்னொன்றை குழப்புவதற்கும் வித்தியாசம் இருக்கு ........ புரிந்து கொள்வீர்கள் .........புரியாதவர்க்கு கூறவேண்டியிருப்பதால்

மீண்டும் விவரிக்கிறேன் ...............நாம் தமிழர்கள் .எமக்காக நாமே போராட்டத்தை ஆரம்பித்தும் ...போராட்டம் தொடர்கிறது .தொடரவேண்டிய தேவையில் நாம் இருக்கிறோம் [வழிகள் வேறுபடலாம் ] குறைகள் ,தவறுகள் நிச்சயம் இருக்கும் .என்னில் நாம் மனிதார்கள் ...........அவற்றை சுட்டிக்காட்டுவதற்கும் ,அவற்றை சுட்டிக்காட்டி இந்தப்போராட்டத்தை தடுப்பதற்கும்,அல்லது முடக்குவதற்கும் இடையில் வித்தியாசம் உள்ளதல்லவா,...அந்த வகையில் கருத்துக்கள் இருந்ததனாலேயே .நான் இவ்வளவு நேரமும் இனத்துக்குள் மினக்கேட்டேன் ........ஆளை விடுங்க மாவீரை கானம் இசைத்தட்டுடன் மினக்கேட்டுக்கொண்டிருக்கிறேன்.........மீண்டும் உங்களை சந்திப்பேன் நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, "பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு" என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், "இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்" என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர். இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "கலி முற்றிவிட்டது... இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்" என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து "இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; கொடுமைக்கார ஜென்மங்கள்!" என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!" என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

நீதி : மற்றவர்களைப் பற்றி கவலைபடாமல் நமக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை தைரியமாக செய்ய வேண்டும். சொல் புத்தியைவிட சுயபுத்தி மிக அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

சோ என்ன சொல்ல வாறன் எண்டா ஆயிரத்திக்கு மேல அமைப்புகள் இருக்கு.....

தங்களும் இருக்கிறம் இப்பிடியும் ஒரு அமைப்பு இருக்கு அப்பிடி எண்டு காட்ட அறிக்கைகள் வரும் பட் முடிவு எடுக்க வேண்டியவங்க நாங்க சோ அவன் சொல்லுறான் இவன் சொல்லுறான் என்றத விட்டிட்டு நீங்களா ஒரு முடிவெடுங்க மக்களே

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் இப்போ மப்பு கிப்பில் இல்லையே.. மீண்டும் நான் எழுதியதை திருப்பி வடிவாகப் படித்து விளங்கிக் கொள்ளவும் :D

சரியாக விளங்கிகொள்ளாது அட்வைஸ் பண்ணுவதைத் தான் சகிக்க முடியவில்லை. :rolleyes: :rolleyes:

புலிகள் சொத்து சேர்த்தது பற்றி குறை சொல்லியிருக்கேனா? யுத்தம் முடிந்த பின்னால் புலிகளும் அழிந்த பின்னால்...இது மனச்சாட்சியின் படி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் கஸ்டப்படும் மக்களுக்காவது பயன்பட்டிருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம்.

ஆனால் அப்படி நடக்கவில்லையே.இப்போ யார் யார் புலிகளின் சொத்துகளை ஆண்டு அனுபவிக்கின்றார்கள் .ஏன் இப்படி நடக்கின்றது?

அதைபற்றித் தான் எழுதியிருந்தேன். உங்களுக்கு தில்லிருந்தால் இவர்களைத் தட்டிக் கேளுங்கள் பார்ப்போம்..அது சரி நீங்கள் இப்படி கரைவதைப் பார்த்தால் உங்களுக்கும் பிறங்கை நக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. நான் சொல்வது சரிதானே?

டிஸ்கி: நான் எழுதியதற்கும் நெடுக்கு கேள்வி கேட்டிருப்பதற்கும் ஏதாவது தொடர்பிருக்கா மஹாஜனங்களே.

நெடுக்கின் காதில் யாராவது ஓதி விடுங்கள்.

நெடுக்கு கூக்குரலிடுவது புலிகளின் காலத்து கதையை.

நான் சொல்லுவது புலிகளின் அழிவிற்குப் பின்னாலுள்ள காலக்கதையை

கனடாவில் இருக்கும் அரைவாசிக்கு மேற்பட்ட கடைகள் மக்கள் பணத்தில் புலிகளின் பினாமிகளால் தொடங்கப்பட்டது என்பதாவது தெரியுமா?

கீழே காட்டப்பட்ட செய்தி உங்களது தானே..!!

விடுதலைப்புலிகள் பலவிதமான முதலீடுகளை பல்வேறு முறைகளில் செய்திருக்கலாம். அவற்றை எல்லாம் குறை சொல்லவோ... இனங்காணவோ உங்களால் முடியாது. காரணம் அவர்கள் மக்களிற்கு பகிரங்கமாகச் சொல்லித்தான் நன்கொடைகள் என்றாலும் சரி தங்கம் என்றாலும் சரி பெற்றார்கள். யாரிடமும் தட்டிப் பறிக்கவில்லை. களவாக குடும்பமாக போராட்டத்தைக் காட்டி நாட்டை விட்டு ஓட முற்பட்டவர்கள் மட்டும்... தட்டிக்கேட்கப்பட்டார்கள்..! அது நியாயமும் கூட. போராட்டத்தை அடகு வைத்து வாழ முற்பட்டவர்களிடம் போராளிகளுக்கு கேட்கும் உரிமை உள்ளது..!!

மேலும்.. புலி அழிப்பு என்ற பதத்தை எந்த வகைக்கு இங்கு பாவிக்கிறீர்கள்..???! உங்களிற்கும் சிங்கள அரசிற்கும் இதில் என்ன வேறுபாடு..??!

எல்லாள மகாராசா அழிப்பு என்று வரலாறு எழுதப்படவில்லை. எல்லாள மகாராசா போர்களத்தில் போரில் வீழ்த்தப்பட்டார் என்று தான் வரலாறு உள்ளது..!

தயவுசெய்து பதங்களின் தாக்கம் பற்றி அறிந்து எழுதுங்கள்...!!

உங்கள் தனிப்பட்ட தாக்கங்களிற்காக முழுப் போராட்டத்தையும் போராளிகளையும்..உதவியவர்களையும் குறை சொல்ல முடியாது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்க நெடுக்ஸ் அண்ணா எல்லாளன் ரொம்ப பாதிக்க பட்டிட்டார் அதான்

கீழே காட்டப்பட்ட செய்தி உங்களது தானே..!!

விடுதலைப்புலிகள் பலவிதமான முதலீடுகளை பல்வேறு முறைகளில் செய்திருக்கலாம். அவற்றை எல்லாம் குறை சொல்லவோ... இனங்காணவோ உங்களால் முடியாது. காரணம் அவர்கள் மக்களிற்கு பகிரங்கமாகச் சொல்லித்தான் நன்கொடைகள் என்றாலும் சரி தங்கம் என்றாலும் சரி பெற்றார்கள். யாரிடமும் தட்டிப் பறிக்கவில்லை. களவாக குடும்பமாக போராட்டத்தைக் காட்டி நாட்டை விட்டு ஓட முற்பட்டவர்கள் மட்டும்... தட்டிக்கேட்கப்பட்டார்கள்..! அது நியாயமும் கூட. போராட்டத்தை அடகு வைத்து வாழ முற்பட்டவர்களின் போராளிகளுக்கு கேட்கும் உரிமை உள்ளது..!!

மேலும்.. புலி அழிப்பு என்ற பதத்தை எந்த வகைக்கு இங்கு பாவிக்கிறீர்கள்..???! உங்களிற்கும் சிங்கள அரசிற்கும் இதில் என்ன வேறுபாடு..??!

எல்லாள மகாராசா அழிப்பு என்று வரலாறு எழுதப்படவில்லை. எல்லாள மகாராசா போர்களத்தில் போரில் வீழ்த்தப்பட்டார் என்று தான் வரலாறு உள்ளது..!

தயவுசெய்து பதங்களின் தாக்கம் பற்றி அறிந்து எழுதுங்கள்...!!

உங்கள் தனிப்பட்ட தாக்கங்களிற்காக முழுப் போராட்டத்தையும் போராளிகளையும்..உதவியவர்களையும் குறை சொல்ல முடியாது. :):icon_idea:

மீண்டும் மீண்டும் என்ன சொல்ல வருகின்றீர்கள் நெடுக்ஸ்.. நான் என்ன சொல்கின்றேன் என்று புரிகின்றதா?

புலிகளின் பெயரால் அவர்களின் பினாமிகளாகச் செயற்பட்டவர்கள் அவர்கள் இல்லாத இந்தக் காலத்தில் அந்தப் பணத்தை யுத்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். என்பதே என் கருத்து

போராட்ட காலத்தில் அதன் தேவை கருதி போடப்பட்ட முதலீடுகள் பற்றியோ சேகரிக்கப்பட்ட பணம் பற்றியோ எனக்கு குறை ஒன்றும் இல்லை. அந்த காரணம் இப்போது இல்லாத பொழுது யுத்தம் கைவிடப்பட்டபொழுது அந்தப் பணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காவது குறைந்த பட்சம் சேர வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு.

.இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கொஞ்சமாவது நன்றியை சொல்லுங்கோ நவம்பர் 2ம் திகதி வைக்காமல் 3ம் திகதி வைக்கிறார்கள் என்பதற்காக :)

547978_10152178568820716_1580970583_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் என்ன சொல்ல வருகின்றீர்கள் நெடுக்ஸ்.. நான் என்ன சொல்கின்றேன் என்று புரிகின்றதா?

புலிகளின் பெயரால் அவர்களின் பினாமிகளாகச் செயற்பட்டவர்கள் அவர்கள் இல்லாத இந்தக் காலத்தில் அந்தப் பணத்தை யுத்தத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். என்பதே என் கருத்து

போராட்ட காலத்தில் அதன் தேவை கருதி போடப்பட்ட முதலீடுகள் பற்றியோ சேகரிக்கப்பட்ட பணம் பற்றியோ எனக்கு குறை ஒன்றும் இல்லை. அந்த காரணம் இப்போது இல்லாத பொழுது யுத்தம் கைவிடப்பட்டபொழுது அந்தப் பணம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காவது குறைந்த பட்சம் சேர வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு.

.இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். :D

நீங்கள் சொல்வதைத்தான் சிறீலங்கா சிங்கள அரசும் சொல்கிறது. கே பி போன்றவர்களும் சொல்கின்றனர்.

பிரச்சனை நீங்கள்.. நினைப்பவர்களை... அல்லது உங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம்.. புலிப் பினாமி என்பது தான்.

போராட்டப் பணத்தை கையாடல் செய்வது எல்லா போராளி அமைப்புக்களுக்குள்ளும் இருந்த இருக்கின்ற பிரச்சனை தான். தமிழீழம் கேட்டுப் போராடின எல்லோருக்கும் இந்தப் பிரச்சனை இருந்தது. இருக்கிறது. விடுதலைப்புலிகள் மட்டுமே நிதி விடயத்தில் கூடிய அளவு பொறுப்போடு செயற்பட்டிருந்திருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பைப் பொறுத்த வரை அந்த அமைப்பின் ரகசிய வலை அமைப்புக்கள் பற்றி பலருக்கு தெரியாது. பல நாடுகளுக்கே தெரியாது. மிகுதி கூட எம்மவர்கள் போட்டி பொறாமையில் காட்டிக் கொடுத்தது தான் அதிகம்..!

நீங்களும் அதையே இங்கு செய்கிறீர்கள். மக்களுக்கு எதைச் செய்யனுன்னு அடுத்தவனுக்குச் சொல்ல முதல்.. நீங்கள் உங்களால் இயன்றதைச் செய்யுங்கள். புலிப் பினாமிகளோ.. மற்றவர்களோ அவர்களுக்குரிய நேரத்தில் வேண்டியதைச் செய்யட்டும். இன்றைய காலக்கட்டத்தில்.. கொள்ளை அடிக்கிறவையை தடுக்க முடியாது..!

நீங்கள் சொல்லுறதை.. ஒழுங்காச் சொன்னா.. பிரச்சனை இல்ல. உங்கள் கருத்துக்களில் இடம்பெறும் பதப்பிரயோகங்கள்.. தவறான திசைக்கு கருத்துக்களை விளங்கிக் கொள்ள செய்கின்றன. நீங்களும் திருத்துவதாக இல்லை. நீங்க பிடிச்ச முயலுக்கு 3 கால் என்று காட்டவே நினைக்கிறீர்கள்..! :icon_idea::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.