Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாத் தமிழர்களின் தொடரும் ''அரங்கேற்ற'' வியாதிகள்

Featured Replies

பழந்தமிழர்கள் தமக்கு எனச் சில கலை வடிவங்களை உருவாக்கி வைத்துள்ளனர். அது இன்றளவு வரை பல்வேறு பரிணாமங்களைப் பெற்று வளர்ந்து வருகின்றது. தமிழர்கள் மட்டுமல்ல இந்தியத் துணைக் கண்டத்தின் ஒவ்வொரு இனங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்தும், புணர்ந்தும் தனித் தனிப் பண்பாட்டுக் கூறுகளை உருவாக்கி வைத்துள்ளன. அத்தோடு கூட அந்நியர்களால் கொண்டு வரப்பட்ட பல்வேறு பண்பாட்டுக் கூறுகளும் கலக்கப்பட்டுப் புதிய பண்பாட்டு வடிவங்கள் உருவாக்கம் பெற்று வருகின்றன.

முக்கியமாகப் புலம் பெயர்ந்த தமிழர்கள் தமது பண்பாடுகளைப் பேண நினைக்கின்றார்கள். தாம் சார்ந்த மண்ணின் கலாச்சாரங்களை ஒதுக்க முடியாத போதும், தமிழ் பண்பாடுகளைப் பற்பல சந்தர்பங்களில் வெளிக்காட்டி வருகின்றார்கள். அதன் படி தமது சந்ததியினருக்கு கலை, வாழ்வியல், சமயம், பண்பாடுகளைப் போதித்து வருகின்றார்கள். ஆனால் உண்மையில் இவையாவும் தமிழ் பண்பாடு மீது கொண்ட அளவற்ற அன்பிலா அல்லது வேறு உட்காரணங்களாலா என்று பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு கலையை முறைப்படிக் கற்று முதன் முறையாக அக் கலைத் திறனை சான்றோர் முன் வெளிக்காட்டுவதைத் தான் அரங்கேற்றம் எனப்படும் அல்லவா. அதாவது அரங்கத்தில் முதன் முதலாய் ஏறுவது என்ற பொருள் தருவது ஆகும். ஆனால் கடந்த சில காலமாகக் கனடியத் தமிழர்களிடையே ஒரு விநோத தொற்று நோய் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது அவர்களின் பிள்ளைகள் பலரையும் வலியத் திணிக்கப்பட்டுப் பாரம்பரிய கலைகளைப் பயிற்றுவிக்கின்றனர். அதாவது ஒரு கலையின் மீதான ஆர்வமானது குழந்தைகளுக்கு இயல்பாகவே வர வேண்டும், அந்தக் கலையை முறைப்படிக் கற்று அதில் திறமைகளை வெளிப்படுத்திச் சாதனைகள் புரிய வேண்டும். சொல்லப் போனால் கலையார்வம் கொண்ட பிள்ளைகள் கலைத் துறையையே தமது வாழ்க்கையாக மாற்றிக் கொள்வார்கள் அல்லவா.

ஆனால் இங்குள்ள தமிழர்கள் அப்படிச் செய்வது இல்லை, பெண் பிள்ளையாக இருந்தால் ஒரு ஐந்து வயதிலயே கொண்டு போய் ஒரு பரத்தையர் நாட்டிய வகுப்பில் சேர்த்துவிடுகின்றார்கள். ஆண் பிள்ளையாக இருந்தால் மிருதங்க வகுப்புகளில் இணைத்து விடுகின்றார்கள். அந்தப் பிள்ளைகளுக்கு ஆர்வம் உண்டா, நேரம் உண்டா, விருப்பம் உண்டா என்றெல்லாம் பெற்றோர்கள் சற்றும் சிந்திப்பதே இல்லை. இதன் பின்னணியில் பெற்றோர்கள் மற்றும் கலைகளைக் கற்றுத் தரும் குருக்களின் சுயநலம் மட்டுமே தங்கியுள்ளன. அந்தப் பிள்ளைகள் ஓரளவு கற்றுவிட்ட பின் அரங்கேற்றாம் என்ற பெயரில் இவர்கள் செய்யும் அலம்பல்கள் தாங்க முடியாதவை.

'' அரங்கேற்றம் '' செய்வதில் ஒவ்வொரு பெற்றோரும் தமது செருக்கை, பெருமிதங்களை வெளிப்படுத்தவே விரும்புகின்றனர். பிள்ளைகள் மீதான பரிவோ, கலையார்வமோ, பண்பாட்டின் மீதான விருப்போ கிடையாது. சுருக்கமாகச் சொல்லப் போனால் பந்தா செய்யவே அரங்கேற்றங்கள் நடத்தப்படுகின்றனர். ஒரு அரங்கேற்றம் செய்ய இவர்கள் செய்யும் செலவுகளை நினைத்தால் மலைக்கச் செய்யும். அண்மையில் ஒரு பெண்ணின் நாட்டிய அரங்கேற்றம் செய்திருந்தனர். அவர்கள் சாலையில் போவோர் வருவோர் எல்லோரையும் அழைத்திருந்தனர். ஒரு பெரிய மண்டபம் பிடித்து நடத்தினார்கள். அங்கே போனால் மொக்கை தான் மிச்சம் எனலாம். கலை ரசனை இல்லாதோர் தான் அரங்கத்தை நிரப்பிக் கொண்டிருந்தனர். ஆடும் சிறுமியோ பாவமாக ஒவ்வொரு பாடலுக்கும் ஆடிக் கொண்டிருந்தாள். ஐயகோ ! இந்த அரங்கேற்றாம் செய்ய எவ்வளவு செலவாகி இருக்கும் என விசாரித்த போது தலையே சுற்றி விட்டது. சுமார் ஐம்பதாயிரம் கனடிய டாலர்கள் ( 25 லட்சம் இந்திய ரூபாய்கள் ) செலவாகியுள்ளனவாம்.

இவ்வளவு செலவு செய்து அரங்கேற்றம் செய்யும் பிள்ளைகள் கலைத் துறையில் சாதிக்கப் போகின்றனவா என்றால் இல்லை, உயர் பள்ளிக்குச் சென்ற பின் நாட்டியங்களை விட்டுவிடுவோரே மிகுதியாக உள்ளனர். அதன் பின் அது குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதும் இல்லை. பெரும்பாலும் தமது பணப் பலத்தைப் பிறர் மத்தியில் நிலைநாட்டவே அரங்கேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன, அவற்றைப் படம் பிடித்து உள்ளூர் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பணம் கட்டி விளம்பரப் படுத்துகின்றனர். ஏன் இவ்வளவு செலவு என்று கேட்டால் ஒரு பதிலும் நமக்குக் கிடைக்காது.

இதில் என்ன கொடுமை என்றால் எதோ ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு அரங்கேற்றம் நிகழ்கின்றன என நினைக்க வேண்டாம். ஆயிரக் கணக்கான அரங்கேற்றங்கள் நடத்தப்படுகின்றன. சொல்லப் போனால் சொந்தக் காரர்களில் ஒருவர் அரங்கேற்றம் செய்துவிட்டால், போட்டி போட்டுக் கொண்டு பிறரும் அதனைச் செய்கின்றனர். இவர்கள் இதற்காக விரயம் செய்யும் பணமானது பல சமயம் லட்சம் கனடிய டாலர்களைக் கூடத் தொட்டுவிடுவதுண்டு. எங்கிருந்து இவர்களுக்கு இவ்வளவு பணம் என்று வேறு சிந்திக்கத் தூண்டுகின்றது. செலவு செய்யும் பல பெற்றோர்கள் வியாபாரிகளோ, ஐந்திலக்க சம்பளம் பெறுவோரோ இல்லை. பலரும் இயல்பான நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்களே ஆவார்கள்.

இலங்கையில் தமிழர்கள் பலர் போதிய வாழ்வாதாரம் இன்றித் துன்பப் படுகின்ற சூழலில், இங்குள்ள தமிழர்களின் இவ்வளவு பெரிய ஆடம்பரங்கள் தேவை தானா ? அல்லது அரங்கேற்றங்களைக் கோவில்களில் உள்ள சிறிய மண்டபத்தில் நடத்தினால் போதாதா ?

கலைகள் வளர்வது நல்லது தான், ஆனால் வெறும் பகட்டுக்காக பிள்ளைகள் மீது திணிப்புக்கள் செய்வதும், எத்தனைப் பிள்ளைகள் அரங்கேற்றம் தாண்டியும் கலைப் பயணத்தைத் தொடர்கின்றன சொல்லுங்கள். அத்தோடு கடன் பட்டும், முறையற்ற வழிகளில் பணம் சேர்த்தும் ஆடம்பர அரங்கேற்றங்கள் எல்லாம் தேவை தானா என்பது தான் எனதுக் கேள்வி. இவ்வாறாக பணத்தை விரயமாக்குவதைக் காட்டிலும், அப் பணத்தை சேமித்து வைத்தால் எதிர்க்காலத்தில் குழந்தைகளின் மேற்கல்வியை கடன் இல்லாமல் பெற முடியுமல்லவா. சற்றே சிந்தியுங்கள் தமிழர்களே !

கலைக்காக மனிதர்கள் அல்ல, மனிதர்களுக்காகவே கலைகள், ஒரு விடயம் அழிவதும், அழியாததும் இயல்பு நிலை வாழ்க்கையின் முன்னகர்தலைப் பொருத்து, கலை அழியக் கூடாது என்பதற்காக அவற்றை பிள்ளைகள் மீது திணிப்போம் என்பது முறையான கருத்தல்ல ..

சரி ! தமிழர் கலைகள் அழிகின்றது என்ற ஆர்வத்தில் திணிக்க முற்படுவோர், ஏன் பானை செய்வதையும், கரகாட்டத்தையும், தேவராட்டத்தையும், தப்பாட்டத்தையும், ஒயிலாட்டத்தையும் பிள்ளைகளுக்கு பயிற்றுவிப்பதில்லை. அதெப்படி எல்லாப் பிள்ளைகளும் பரத்தையர் நாட்டியம் மட்டும் பழக வைக்கப்படுகின்றார்கள் .. உண்மையில் இது கலை மீதான ஆர்வமா ? அல்லது ஆதிக்கச் சாதி அடையாள சுவீகரமா ?

  • கருத்துக்கள உறவுகள்

கனடா தமிழர் மட்டுமல்ல அவுஸ்ரேலியா தமிழர்களும்தான்...இப்ப நான் ஒரு அரங்கேற்றத்துக்கு போறன்...மனிசி சொன்னவ போய் பார்ப்போம் அப்ப தான் பிள்ளைகளின்ட அரங்கேற்றம் எப்படி செய்யலாம் என்று ஒரு ஐடியா வருமாம்?

அரங்கேற்றத்தால் அதிக இலாபம் அடைபவர்கள் இந்தியர்கள்...உடையில் இருந்து கலைஞர்கள் வரை இந்தியா இறக்குமதி...இலங்கையில் இருந்து ஒரு துரும்பும் இறக்குமதி செய்வதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு பகிர்வு, சுகன்!

ஒரு சிந்தனையாளனின், சிந்தையில் இருந்து உதிக்கும் கருத்துக்கள்!

பரதம் மட்டுமல்ல, மிருதங்கம், நாம் வணங்கும் பல தெய்வங்கள், எங்கள் திருமண முறை, எதுவுமே எங்களது பாரம்பரியங்கள் அல்ல.

யாருடையதோ கலாச்சாரங்களை, நாங்கள் வளர்த்துக் கொண்டு திரிகிறோம்!

ஏன், திருமணங்களில், கட்டப் படும் தாலி கூடத் தமிழ்க் கலாச்சாரத்துடன் இணைந்தது அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு பகிர்வு, சுகன்!

ஒரு சிந்தனையாளனின், சிந்தையில் இருந்து உதிக்கும் கருத்துக்கள்!

பரதம் மட்டுமல்ல, மிருதங்கம், நாம் வணங்கும் பல தெய்வங்கள், எங்கள் திருமண முறை, எதுவுமே எங்களது பாரம்பரியங்கள் அல்ல.

யாருடையதோ கலாச்சாரங்களை, நாங்கள் வளர்த்துக் கொண்டு திரிகிறோம்!

ஏன், திருமணங்களில், கட்டப் படும் தாலி கூடத் தமிழ்க் கலாச்சாரத்துடன் இணைந்தது அல்ல!

ஆனால் 99.9% டமிழ்மக்கள் சொல்லினம் இது எங்கன்ட கலாச்சாரம் என்று புங்கையூரன்

அருமையான ஒரு பகிர்வு, சுகன்!

ஒரு சிந்தனையாளனின், சிந்தையில் இருந்து உதிக்கும் கருத்துக்கள்!

பரதம் மட்டுமல்ல, மிருதங்கம், நாம் வணங்கும் பல தெய்வங்கள், எங்கள் திருமண முறை, எதுவுமே எங்களது பாரம்பரியங்கள் அல்ல.

யாருடையதோ கலாச்சாரங்களை, நாங்கள் வளர்த்துக் கொண்டு திரிகிறோம்!

ஏன், திருமணங்களில், கட்டப் படும் தாலி கூடத் தமிழ்க் கலாச்சாரத்துடன் இணைந்தது அல்ல!

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை புங்கையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் கனடாவில் வாழும் தமிழர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பெரும் தொற்று வியாதி... தொற்றுவியாதி என்றாலும் மாற்றிவிடலாம் இது மாற்ற முடியாதது

அட போங்கண்ணை நான் தமிழ் வகுப்பில் சில கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கரகாட்டத்திற்காக பிள்ளைகளை சேர்த்தபோது பெற்றோர்தான் முகஞ்சுழித்துக் கொண்டார்கள்.... சரியான பட்டிக்காடாம்..:(

பச்சை போட முடியவில்லை நிர்வாகம் இந்தப்பச்சைப்புள்ளிகள் விடயத்தை கவனத்தில் எடுத்தால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்பு பட்ட திரி.. http://www.yarl.com/forum3/index.php?showtopic=108552

நாவலனின் பின்னூட்டம் இந்தத் தலைப்புடன் பொருந்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு எனது உறவு ஒருத்தர் சில வருடங்களுக்கு முன் 1 லட்சம் ஈரோ செலவு செய்து அரங்கேற்றம் செய்தார்.

அண்மையில் ஒரு விழாவில் எல்லோரும் ஆடினார்கள். அந்த பெண் மட்டும் தனியே ஆடாது தனியே நின்றிருந்தார். ஆடச்சொல்லி முன்னுக்கு இழுத்து விட்டேன். ஆட்களுக்கு முன் ஆட வெட்கம் என்றார். கிளிஞ்சுது போ. உங்கப்பர் அரங்கேற்றம் வீட்டுக்குள்ள நடாத்தியிருக்கலாம் என்று பேசி அனுப்பினேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இனத்துவ அடையாளங்களை இழந்த பிள்ளைகள் பத்ன்ம வயசில் வன்முறை, உள்ளொடுங்குதல் போன்ற மன சிக்கல்களுக்கு உள்ளாவதாக உளவியலார் சிலர் சொல்லக் கேட்டுள்ளேன்.

பிள்ளைகளை நிர்பந்தித்து கற்பிப்பதும் அவர்களை பாதிக்கிறது.

அழுத்தங்களின்றி பிள்ளைகள் தங்கள் சுய இனத்துவ அடையாளங்களை தேட உதவுதல் பரீட்சயப் படுத்துதல் பெற்றோரின் கடமையெனவும் அது நல்லது எனவும் நம்புகிறேன்.

சிறுவர்கள் மன்றேறுதல் சங்கம் தொட்டு நிலவும் வளக்கம்தான்.அதனை நிராகரிப்பதைவிட தரப்படுத்துவது நடைமுறைச் சாத்தியமானது என காண்கிறேன். வரைமுறை ஒழுங்கு படுத்துவது பயனுள்ளது.

ஆரோக்கியமானதாகவும் ஆடம்பரமில்லாமலும் நமது விழக்கள் நிகழவேண்டும். ஒவ்வொரு விழாவினது நினைவாக சிறிய அளவினேலும் ஈழத்தின் துன்பம் ஒன்றையாவது துடைக்க முனையவேணும். அதுபற்றி பற்றி விவாதித்து வழிதேடுவது நடைமுறை சாத்தியமும் பயனும் உள்ளதாகும்..

Edited by poet

  • தொடங்கியவர்

இனத்துவ அடையாளங்களை இழந்த பிள்ளைகள் பத்ன்ம வயசில் வன்முறை, உள்ளொடுங்குதல் போன்ற மன சிக்கல்களுக்கு உள்ளாவதாக உளவியலார் சிலர் சொல்லக் கேட்டுள்ளேன்.

பிள்ளைகளை நிர்பந்தித்து கற்பிப்பதும் அவர்களை பாதிக்கிறது.

அழுத்தங்களின்றி பிள்ளைகள் தங்கள் சுய இனத்துவ அடையாளங்களை தேட உதவுதல் பரீட்சயப் படுத்துதல் பெற்றோரின் கடமையெனவும் அது நல்லது எனவும் நம்புகிறேன்.

சிறுவர்கள் மன்றேறுதல் சங்கம் தொட்டு நிலவும் வளக்கம்தான்.அதனை நிராகரிப்பதைவிட தரப்படுத்துவது நடைமுறைச் சாத்தியமானது என காண்கிறேன். வரைமுறை ஒழுங்கு படுத்துவது பயனுள்ளது.

ஆரோக்கியமானதாகவும் ஆடம்பரமில்லாமலும் நமது விழக்கள் நிகழவேண்டும். ஒவ்வொரு விழாவினது நினைவாக சிறிய அளவினேலும் ஈழத்தின் துன்பம் ஒன்றையாவது துடைக்க முனையவேணும். அதுபற்றி பற்றி விவாதித்து வழிதேடுவது நடைமுறை சாத்தியமும் பயனும் உள்ளதாகும்..

எமக்கான ஒரு கலையை காலத்தக்கேற்ப நவீனப்படுத்துவது தப்பில்லை. பரத்தையாட்டம், தேவடியார் ஆட்டம் அல்லது தேவதாசியர் ஆட்டம் என்பது தேவதாசிகளிடம் இருந்து புடுங்கப்பட்டு தனது பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு பரதமுனிவர் போதித்தார் என்று புனைக்கதையும் விட்டுக்கொண்டிருப்பது கேவலமில்லையா? இதற்கும் எமது கலை பண்பாட்டிற்கும் என்ன சம்மந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்

. ஒவ்வொரு விழாவினது நினைவாக சிறிய அளவினேலும் ஈழத்தின் துன்பம் ஒன்றையாவது துடைக்க முனையவேணும். அதுபற்றி பற்றி விவாதித்து வழிதேடுவது நடைமுறை சாத்தியமும் பயனும் உள்ளதாகும்..

அரங்கேற்றத்தை தவிர ஏனைய விழாக்களில் ஒரளவு முயற்சி செய்கிறார்கள்

எமக்கான ஒரு கலையை காலத்தக்கேற்ப நவீனப்படுத்துவது தப்பில்லை. பரத்தையாட்டம், தேவடியார் ஆட்டம் அல்லது தேவதாசியர் ஆட்டம் என்பது தேவதாசிகளிடம் இருந்து புடுங்கப்பட்டு தனது பெயரை மட்டும் மாற்றிக்கொண்டு பரதமுனிவர் போதித்தார் என்று புனைக்கதையும் விட்டுக்கொண்டிருப்பது கேவலமில்லையா? இதற்கும் எமது கலை பண்பாட்டிற்கும் என்ன சம்மந்தம்?

நீங்கள் இப்படி சொல்லுகிறீர்கள் ஆனால் இந்த நடனம் இன்று புலம்பெயர் மக்களிடம் புனிதமான ஒரு கலையாக உருவெடுத்துள்ளது இதை மாற்றுவது என்பது முடியாத காரியம்

இது சாதிய அடையாளமில்லை.

இந்த 'பரத்தையர் நாட்டியம்' பற்றிய விபச்சார வரலாறு (தயவு செய்து யாராவது 'பாலியல் தொழில்' என்று மாற்றச் சொல்லி பூணாரம் புடுன்காதீங்கள்) விளங்காமல் ஊக்கிவிக்கும் பெற்றோர்களைத்தான் சொல்ல வேண்டும்.

தமிழனுக்கு உரிய சொந்தக் கலைகள் நிறைய உண்டு. அதைத் தவிர்ப்பதுதான் எப்போதும் தமிழனின் நாகரீகம்.

[size=4]தமிழர் கலைகள் அழிகின்றது என்ற ஆர்வத்தில் திணிக்க முற்படுவோர், ஏன் பானை செய்வதையும், கரகாட்டத்தையும், தேவராட்டத்தையும், தப்பாட்டத்தையும், ஒயிலாட்டத்தையும் பிள்ளைகளுக்கு பயிற்றுவிப்பதில்லை. அதெப்படி எல்லாப் பிள்ளைகளும் பரத்தையர் நாட்டியம் மட்டும் பழக வைக்கப்படுகின்றார்கள் .. உண்மையில் இது கலை மீதான ஆர்வமா ? அல்லது ஆதிக்கச் சாதி அடையாள சுவீகரமா ?
[/size]

[size=4]உங்கள் கட்டுரைக்கும் அதில் கேட்கப்பட்ட கேள்விக்கும் இடையே எவ்வாறு இந்த வரி பொருந்துகின்றது ?[/size]

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.