Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னை நாள் போராளிகளும் முகப்புத்தக லைக்குகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னை நாள் போராளிகளும் முகப்புத்தக லைக்குகளும்

சாத்திரி ஒரு பேப்பர்

யுத்தம் முடிந்து ஆண்டு மூன்று உருண்டோடி விட்டது . முதலாவது ஆண்டை விட மூன்றாவது ஆண்டில் இலங்கைக்கு தங்கள் உறவுகளை பார்க்கவும் வீடு காணிகளை பார்வையிடவும் விடுமுறையை செலவிடவென செல்லும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொகையும் அதிகரித்து விட்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் எதிர் பார்த்த ஒன்று என்பதற்குமப்பால் இலங்கைக்கான பயணம் என்பது தவிர்க்க முடியாதுதம்கூட. அதனை தவறென்று வாதிடவும் முடியாது. ஆனால் அப்படிப் போகின்றவர்கள் போன தெவைகளை மட்டும் நிறைவேற்றி விட்டு திரும்பி வந்தால் எவ்வித சிக்கல்களும் இல்லை. போகிறவர்கள் தங்கள் தேவைகள் அல்லது வேலைகள் தவிர்ந்து வேறு விடயங்களில் மூக்கை நுளைப்பது பிரச்சனையாகிப் போகின்றது. அதில் முதலாவது போகின்றவர்கள் அவர்களிற்கு தெரிந்த அல்லது அவர்கள் கண்ணில் படும் காயமடைந்து அங்கவினர்னகளாகி அல்லது மாற்றுத் திறநாளிகளாக வாழும் முன்னை நாள் போராளிகளை படமெடுத்து விட்டு தங்கள் நாட்டிற்கு திரும்பியதும் அதனை தங்கள் தளங்களில் அல்லது முகப் புத்தகத்தில் பதிவு செய்து விடுகின்றனர்.

பதிபவரது நோக்கம் என்னவாக இருக்கும் என்பதற்குமப்பால். அதனை பார்ப்பவர்கள் அதற்கு லைக் போட்டு பார்வைகளை கூட்டுகின்றார்கள். அண்மையில் ஊரிற்கு போயிருந்த ஒருவர் கைகள் இரண்டு இயங்காத முன்னை நாள் பெண் போராளியொருவர் வாளிக் கயிற்றினை வாயால் கவ்வி இழுத்து கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளுவதை படமெடுத்து தனது முகப் புத்தகத்தில் பதிந்திருந்தார். அந்தப் படத்திற்கு சுமார் நூற்று முற்பதற்கும் மேற்பட்டவர்கள் லைக் பண்ணியிருந்தார். அதனை பார்த்த எனக்கு உண்மையில் எதுவுமே புரியவில்லை. வாயால் தண்ணி அள்ளுவதற்காக லைக் போட்டார்களா? அல்லது அவரது கைகள் இரண்டும் இயங்காதற்கு லைக் போட்டார்களா?? அல்லு முன்னை நாள் பெண் போராளி என்பதற்காகவா? அல்லது அந்தப் படம் தத்துரூபமாக எடுக்கப்பட்டதற்கா? தனது மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி தனது கணவனையும் வாழ்வையும் தொலைத்து இரண்டு கைகளும் இயங்கமுடியாத நிலையிலும் நம்பிக்கையோடு தன் வாழ்நாளை எதிர் கொள்ளும் ஒரு பெண் போராளியின் படம் லைக் பண்ணக் கூடியததாகவா இருக்கின்றது? இதனை நண்பர் ஒருவரிடம் நான் கூறி கவலைப்பட்டபொழுது அவர் சொன்ன விடயம். அம்மா இறந்து போனார் என்று ஒருவர் முகப் புத்தகத்தில் தனது தயாரின் படத்தை போட்டு மரண அறிவித்தல் போட்டிருந்தாராம். அதற்கே நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் லைக் பண்ணியிருந்தார்களாம். அதை விட இது பரவாயில்லையென்றார்.

இரண்டாவது விடயம். இறுதி யுத்தம் நடந்து முடிந்த பின்னர் இலங்கையரசு தனது வெற்றியை பறைசாற்றவும். தம்மை யாரும் வெல்ல முடியாது தங்களோடு மோதுபவர்களிற்கு இதுதான் முடிவு என்கிற மமதையை தன் குடிமக்களிற்கும் உலகிற்கும் சொல்வதாற்காக முல்லைத் தீவில் புலிகளிடம் கைப்பற்றிய ஆயுதங்களை சேகரித்து ஒரு கண்காட்சி இடத்தையும். பிரபாகரன் வசித்த அதி உச்ச பாதுகாப்பு வசதியுடன் அமைந்திருந்த நிலக் கீழ் வீட்டையும் கடற் புலிகளின் பயிற்சி பெற்ற நீச்சல் குளத்தையும் சுற்றுலா மையங்களாக்கியிருக்கின்றது அனைவரும் அறிந்த விடையம். தங்கள் இராநுவம் வெற்றி கொண்ட இடங்களை பார்த்து மகிழ்வதற்கு தினமும் தென்னிலங்கையிலிருந்து பெருந்தொகை சிங்களவர்கள் படையெடுக்கிறார்கள். இதுவும் அறிந்த விடையம்தான். ஆனால் எம்மவர் அறியாத விடயம் வெளிநாடுகளில் இருந்து செல்லும் எம்மவர்களும் வாகன ஒழுங்குகள் செய்தும் தனியாகவும் பெருமளவில் இந்த இடங்களை பார்வையிட செல்கிறார்கள். அவற்றை கண்டு மகிழ அவை எமது வெற்றிச் சின்னங்களும் அல்ல களித்து மகிழ அவை எமது சுற்றுலா தலங்களும் அல்ல. எமது இனத்தின் அவலத்தை எமது முப்பதாண்டு கால விடுதலை யுத்தத்தின் தோல்வியை எமது மாவீரர்களின் கனவை எமது உறவுகளின் உணர்வுகளை என அனைத்தையும் அழித்து புதைத்த இடங்கள் அவை.அவற்றை எப்படி கண்கொண்டு பார்க்க முடியும் முடிகிறதா உங்களால்.

ஆனால் இலங்கையரசு வெளிநாடுகளில் இருந்து இவற்றை பார்க்கப் போகும் தமிழர்களின் விபரங்களை மட்டும் பதிந்து விட்டு அவர்களிற்கு ஒவ்வித சோதனை கெடுபிடிகளையும் செய்வதில்லை என்பதோடு அவர்களை இன் முகத் தோடு வரவேற்கவும் முடிந்தளவு தமிழில் உரையாடக்கூடிய இராணுவத்தினரையும் இந்த இடங்களில் பணிக்கு அமர்த்தியுள்ளார்கள். இதே நேரம் உள்ளுரில் உள்ள ஒரு தமிழர் இந்த இடங்கிளிற்கு போவதென்றால் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அப்படி வெளிநாட்டிலிருந்து பொய் வந்தவர் இங்கு வந்து மற்றவர்களிடம். ஊருக்கு போவதில் எந்த பிரச்சனையும் இல்லை ஆமிக்காரன் கைப்பையை கூட திறந்து பாக்கேல்லை. தமிழிலையே சிரிச்சு கதைக்கிறாங்கள் என்றதும். அந்தக் கதையை கேட்டவர் அடுத்த விடுமுறைக்கு இலங்கைக்கு போவதற்கு மலிவு விலையில் றிக்கற் தேட ஆரம்பித்து விடுவார். இங்கிருந்து இலங்கையரசின் உளவியல் யுத்தம் வெற்றிபெறத் தொடங்குகின்றது. வெளிநாடுகளில் தங்கள் புகலிடக் கோரிக்கைகளில் புலிகளாலும் தங்களிற்கு உயிர் அச்சுறுத்தல் என்றுதான் 80 வீதமானவர்களிற்கு மேற்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் அப்படி வாக்கு மூலம் கொடுத்து அகதி அந்தஸ்த்து பெற்றுவிட்டு பின்னர் போராட்டங்கள் ஊர்வலங்களில் கொடியை பிடித்தக்கொண்டு எங்கள் தலைவன் பிரபாகரன் புலிகள் மீதான தடையை நீக்கு என்று கத்தியதும் அதை கேட்டு மக்கள் திரண்டு விட்டார்கள் என்று பயந்து போய் நடவடிக்கை எடுப்பதற்கு வெள்ளைக்காரன் என்ன கேணைப்பயலா?

புலிகள் மீதான தடை கொண்டு வருவதற்கு ஒவ்வொருவரும் புலிகளாலும் தங்களிற்கு உயிராபத்து என்று கொடுத்த வாக்குமூலங்களும் ஒரு காரணம். அது மட்டுமல்ல வெளிநாடுகளில் நடந்து முடிந்த ஊர்லங்கள் ஆர்ப்பாட்டங்களிற்கு இடத்தை ஒதுக்கி கொடுத்துவிட்டு வெளிநாடுகள் போசாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பதற்கு அதுவும் ஒரு காரணமாக அமையும். இதே போலத்தான் முல்லைத் தீவிற்கு சுற்றுலா பயணிகளாக படையெடுக்கும் எம்மவர்களது விபரங்கள் அனைத்தையும் திரட்டி ஒரு வருடத்தில் இத்தனை ஆயிரம் தமிழர்கள் எவ்வித பிரச்சனைகளும் இன்றி தங்களால் வெற்றி கொள்ளப் பட்ட பயங்கரவாதத்தின் வெற்றிச்சின்னங்களை பார்வையிட்டு படமெடுத்து சென்றார்கள் எனவே வெளிநாடுகளில் யாரோ ஒருசில தமிழர்கள் எம் மீது போர்குற்றம் விசாரணை என்று ஊர்வலம் போகிறார்கள். அவர்கள் புலிகளின் எச்சங்கள் என்று சுலபமாக தன்து பிரச்சனைகளை முடித்துக் கொள்ளும். அதே நேரம் இங்கேயும் தலைவர் பிரபாகரன் வாழ்ந்த நிழக்கீழ் வீட்டையும் புலிகளின் ஆயுதங்களின் படங்களும் முகப்புத்தகத்தில் போட்டு லைக்குகள் போய்க்கொண்டு இருக்கின்றது. இறுதியாக. யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கான பாடசாலைகள் நாசமடைந்து இன்னமும் அவை திருத்தப்படாமல் மாணவர்கள் இடிந்த கட்டங்களிலும் கொட்டில்களிலும் மழைவந்தால் எழுந்து நின்றும் கல்வியை தொடந்து கொண்டிருக்கின்ற நிலைமையே தொடர்கின்றது ஆனால் அவைக்கு அருகில் உள்ள கோயில்கள் எல்லாமே புனரமைக்கப் பட்டு கோபுரங்கள் கட்டப்பட்டு வெள்ளையடிக்கப்பட்டு குளங்களும் புதுப் புது வடிவங்களில் அமைக்கபட்டு வருவது மட்டுமல்ல.

எல்லாவற்றிற்கும் ஒரு படிமேலே போய் எமது வாழ்விடங்களை அழித்து எம் மக்கள் தலைகளில் குண்டு மாரி பொழிந்த இலங்கை விமானப்படை உலங்கு வானுர்திகளை பல இலட்சங்கள் கொடுத்து வாடைகைக்கு அமர்த்தி சில நிமிடங்கள் மட்டுமே வானத்தில் வட்டமிட்டு கோயில்கள் மீது பூமாரி பொழிய வைக்கின்றனர். எமது அடுத்த சந்ததியையும் மொழியையும் காப்பாற்றப் போவது கல்வி மட்டுமே அதுவே எமக்கு எஞ்சியுள்ள இறுதி ஆயுதம். கோயில்களோ சாமிகளோ அல்ல. அதற்காக கோயில் கூடாது என்று சொல்லவில்லை கோயில்கள். பணம் மெத்திப்போய் கூத்தடிப்பவர்களின் கூடாரமாகிவிடக்கூடது .சந்தணம் மெத்திய சில புலம்பெயர் தமிழர்களே உங்களிற்கு எங்கு வேணுமானாலும் தடவிக் கொள்ளுங்கள் ஊருக்குப் போய் அங்குள்ள மக்களின் தலைகளில் தடவாதீர்கள்.

Edited by sathiri

சந்தணம் மெத்திய சில புலம்பெயர் தமிழர்களே உங்களிற்கு எங்கு வேணுமானாலும் தடவிக் கொள்ளுங்கள் ஊருக்குப் போய் அங்குள்ள மக்களின் தலைகளில் தடவாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தணம் மெத்திய சில புலம்பெயர் தமிழர்களே உங்களிற்கு எங்கு வேணுமானாலும் தடவிக் கொள்ளுங்கள் ஊருக்குப் போய் அங்குள்ள மக்களின் தலைகளில் தடவாதீர்கள்.

தடவிக்கொண்டுதானே இருக்கிறார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஒருக்காத்தான் தடவினார்கள்.

நாம் இங்கு எத்தனை தடவை தடவுகின்றோம்.............??? :( :( :(

அவர்கள் ஒருக்காத்தான் தடவினார்கள்.

நாம் இங்கு எத்தனை தடவை தடவுகின்றோம்.............??? :( :( :(

சரியான பதில்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பல முறை சிந்திப்பதுண்டு எதற்காக முகநூலில் தேவை இல்லாதவற்கு எல்லாம் லைக் பண்ணுகிறார்கள்...ஒரு இறந்த ஆத்மாவுக்கு அது போனது சரி என்பது போலவும் அதற்கு லைக் பண்ணி அஞ்சலி செலுத்துவது போலவும் தான்...மரண அறிவித்தல்களுக்கு லைக் பண்ணுவார்கள்...இப்போ லைக்கும் இறப்பு வீட்டுக்கு மனிதர்களுக்கு பதிலாக போகிறது..சரி அதை விடுவம்.

ஊரில் இருப்பவர்கள் எதற்காக வெளிநாடுகளில் இருந்து எடுப்புக் காட்ட வருபவர்களின் கதையைக் கேட்டு அவர்கள் சொல்வதற்கு எல்லாம் சம்மதிக்கனும்..அங்குள்ளவர்களையும் நாங்கள் சிறு பிள்ளைகள் என்று எண்ணி விட முடியாது தானே..அங்கு செல்லும் ஒருவர் தானே முன்வந்து ஐந்தோ,பத்தோ கொடுத்து அதற்கு மேலால் ஏதோ ஒரு விடையத்தை பெற்று கொள்ளும் முகமாகத் தானே நடக்கிறார்கள்...உடல்,உள ரீதியான பாதிப்புக்களை சுமந்து கொண்டு வாழும் உறவுகளிடம் படம் எல்லாம் எடுக்க மனமே வராது..அந்தப் படம் நானும் பார்க்கும் சந்தர்பம் கிடைத்தது...தானும் கஸ்ரபட்டு ஒரு குழந்தையையும் கஸ்ரப்படுத்தும் படமாக அது இருந்தது...சொல்லப் போனால் வெளிநாடுகளில் இருந்து தாயகம் போகிறவர்களுக்கு காட்சிப் பொருட்களாக இவ்வாறன பாதிக்கபட்ட மக்களும் தென்படுகிறார்கள்.

Edited by யாயினி

சாத்திரியின்ரை முன்னைநாள் போராளியளும் முகப்புத்தக லைக்குகளும் எங்கடை சனத்துக்கு பச்சைமட்டை அடி . ஆனால் எருமைமாட்டில மழை பெஞ்சமாதிரி .

[size=5]ஐயையோ... எருமை மாடு சூடு சுரணையுள்ளது[/size], எருமை மாடுகள் சிங்கத்தைக் கலைத்துக் கலைத்துக் குத்திய காட்சியை கோமகன் பார்க்கவில்லையா?

[size=5]தமிழர் சிலரில் மழை பெய்தமாதிரி என்று தான் எருமைமாடுகள் தமது இனத்தத்தில் உள்ள சிலதுகளைப் பேசுதுகளாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரியின் இந்த ஆக்கத்திற்கு பச்சை குத்தின ஆட்களை என்ன சொல்ல :unsure: ...கட்டுரையில் சொன்ன விடயம் உண்மை தான்

Edited by ரதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி

நல்லதொரு பதிவு, பலதையும் பதிந்து உள்ளீர்கள்.

ஆனால் எனக்கு விளங்காத விடயம் உந்த லைக் பண்ணுவது தான். இதை பற்றி facebook இல்லும் போட்டிருந்தார்கள். யாரோ ஒருவர் மரண அறிவித்தல் போட்டதிர்ற்கு லைக் போட்டது என்று. அதை எப்படி எடுக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. முதலில் என்னதிர்ற்கு பாசெபூகில் போட்டவர் அந்தகைய செய்தியை? அப்படி பார்த்த செய்தியை, மற்றவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எதிபார்கிரார்கள்? பார்த்தும் பார்க்காது மாதிரி போவதா? dislike போடுவதா- எனக்கு dislike போட்டா என்ன நடக்கும் என்று தெரியாது, அல்லது பார்த்து விட்டு கருத்து பகிர வேண்டுமா? பிறகு அதற்கு அவர் பதில் எழுத வேண்டுமோ என்றும் தெரியாது?

எங்களுக்கு தெரியாத மீடியாவை பாவிப்பதால் வரும் பிரச்சனை என்று நான் நினைக்கிறன். ஊரில- மரண அறிவித்தலை, ஸ்பிகர் கட்டி, கார் பிடித்து அறிவிப்பார்கள்..இதை மற்றாக்களுக்கு சொன்னால், என்னடா தலை கழண்ட இடத்தில இருக்கிறாயே என்று..; தெரியாத ஊடகத்தை பயன்படுத்தவதால் வருகிற விடையம் என்று நினைக்கிறன்,

எனக்கு தெரிய ஒருவர் வீடில் நிகழ்ந்த நிகழ்வொன்றை பாசெபூகில் போட்டுவிட்டு, பிறகு கதைக்கும் போது, "facebook போட்டது தெரியாதோ" என்று கேட்டார்.. இனிமேல் facebookthaan எல்லமோ தெரியவில்லை.

facebook கறார் இடம் சொல்ல வேண்டும், மரண அறிவித்தல் வந்தால், அதை முறைப்படி அறிந்தோம் என்று, போடக்கூடியமாதி ஒரு அப்ப்ஸ் செய்ய சொல்லி...

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், என்னைக் கன காலமாகக் குடைஞ்சு கொண்டிருக்கிற, விசயம் இது?

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், சாமி? :icon_mrgreen:

இந்த 'லைக்' போடுற விசயம், ஒருவரது பதிவை, நான் வாசித்துள்ளேன் என்ற அர்த்தத்தில் தான் நான் எடுத்துக் கொள்கிறேன்!

ஒரு விதமான, 'acknowledgement' மாதிரி!

எது சரி என்று சொல்லுங்கள், சாமி! :icon_idea:

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணாவின் ஆக்கத்தில் பகிர்ந்து கொண்ட விடையம் பிடித்திருந்தது ஆகவே லைக் போட்டேன்..ஒரு ஆக்கத்திற்கு லைக் பண்ணுவதற்கும் மரண அறிவித்தலுக்கு லைக் பண்ணுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.. ஒரு ஆக்கத்திற்கு லைக் போடும் பட்சத்தில் அவரை மேலும்,மேலும் எழுத தூண்டும்......எதற்கு மரண அறிவித்தலுக்கு லைக் போட வேண்டும்......??மரண அறிவித்தலுக்கு ஏதாவது எழுத பஞ்சியாக இருந்தால் கவலைக் குறியை போட்டுட்டு நம்ம பாட்டுக்கு போகலாம் தானே..துக்க விடையத்திற்கு லைக் போடுவது எனக்கும் அறவே பிடிக்காத விடையம்.என் அறிவுக்கு எட்டியது இது தான்.

Edited by யாயினி

சாஸ்திரியின் இந்த ஆக்கத்திற்கு பச்சை குத்தின ஆட்களை என்ன சொல்ல :unsure: ...கட்டுரையில் சொன்ன விடயம் உண்மை தான்

[size=5]என்ன சொல்லப் போறியள்???[/size]

இவ்வாறான படங்களின் கீழ் அவரவரது கருத்துக்களை எழுதுவதே சிறந்தது. ஒரு சமூக வலைத்தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரியாதநிலையில் அதை வைத்து எங்கே மாற்றத்தை ஏற்படுத்தவது !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார், என்னைக் கன காலமாகக் குடைஞ்சு கொண்டிருக்கிற, விசயம் இது?

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், சாமி? :icon_mrgreen:

இந்த 'லைக்' போடுற விசயம், ஒருவரது பதிவை, நான் வாசித்துள்ளேன் என்ற அர்த்தத்தில் தான் நான் எடுத்துக் கொள்கிறேன்!

ஒரு விதமான, 'acknowledgement' மாதிரி!

எது சரி என்று சொல்லுங்கள், சாமி! :icon_idea:

யாயினி எழுதியதைப்போல கருத்தை பகிரலாம். கருத்து பகிர நேரமில்லாதவர்கள்.சோக முகக் குறியினை :( பதிந்து விடலாம் என்பது என்னுடைய கருத்து :(

  • கருத்துக்கள உறவுகள்

எவராலும் அழிக்க முடியாததும் இந்த கல்விதான் . எம்மால் முடிந்த உதவிகளை செய்வோம்.....

.

எமது அடுத்த சந்ததியையும் மொழியையும் காப்பாற்றப் போவது கல்வி மட்டுமே அதுவே எமக்கு எஞ்சியுள்ள இறுதி ஆயுதம்.

இதை நான் like பண்ணுகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.