Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சிங்கத்தின் கதை..

Featured Replies

அந்தக் கம்பீரம் மிக்க ஆண் சிங்கம் இப்படி மலை உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. காதல் கணவனின் திடீர் இழப்பு பெண் சிங்கத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

சில மாதங்களாகவே ஆண் சிங்கம் ஏதோ குழப்பத்தில் இருப்பதை பெண் சிங்கம் கவனிக்கத்தான் செய்தது. முன்பு போல் கனிவு இல்லை, சுகமான அணைப்பு இல்லை. எல்லாம் இயந்திரத் தனமாக இருந்தது.

திடீர் திடீரென்று கடும் யோசனையில் சிங்கம் ஆழ்ந்திருக்கும். திடீர் திடீரென்று நாட் கணக்கில் காணாமலும் போய் விடும்.

முன்பு எல்லாம் இப்படி இல்லை. அங்கே வாழ்;ந்த சிங்கக் கூட்டத்திற்கே இந்த இரண்டு சிங்கங்களும்தான் காதலிற்கு முன்னுதாரணங்கள். மற்றைய சிங்கங்களிடம் இல்லாத ஒரு பிரத்தியேக வாசனை ஒன்றும் அந்த ஆண் சிங்கத்திற்கு இருந்தது.

ஆண் சிங்கம் கம்பீரமாய் தூரத்தில் நடந்து வரும் போதே அதன் வாசனை சிங்கக் கூட்டத்திடம் பரவி விடும். கூட்டத்தின் பெண் சிங்கங்கள் ஏக்கமாய் ஒரு பார்வை பார்க்கும். ஆண் சிங்கம் நேராக தன்னுடைய துணைவியடமே போகும்.

இரண்டு சிங்கங்களுக்கும் குழந்தைகள் இல்லை. தமக்கு வாரிசு வேண்டும் என்று அதிகமாக பெண் சிங்கம்தான் ஏங்கியது. ஆனால் குட்டிகள்தான் பிறந்தபாடாக தெரியவில்லை. ஆயினும் அந்தக் கவலையும் அவர்களின் காதலில் மறைந்தே போனது.

தற்போது சில மாதங்களாக ஆண் சிங்கத்தின் போக்கு மாறி விட்டது. அன்றைக்கும் சொல்லாமல் கொள்ளமால் எங்கேயே போய் விட்டது. சில நாட்கள் கழித்துத்தான் திரும்பியது. பெண் சிங்கம் மெதுவாய் தன்னுடைய துணைவனிடம் தயங்கியபடியே கேட்டது. „உங்களுக்கு என்ன பிரச்சனை?'. ஆண் சிங்கம் பதில் சொல்லாமல் பேசாது நின்றது.

பெண் சிங்கம் விடவில்லை. „எனக்கு உங்களில் சந்தேகமாக இருக்கிறது, எனக்குப் போட்டியாக யாரோ வந்து விட்டதாக என் உணர்வு சொல்கிறது'. அதற்கும் ஆண் சிங்கம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் மௌனம் சம்மதத்தின் அறிகுறி என்று யாரோ சொல்லியிருப்பது பெண் சிங்கத்திற்கு தெரிந்தே இருந்தது.

„இத்தனை நாள் உங்களுக்கு நான் மட்டும்தான் என்று இறுமாப்பில் இருந்தேன், உங்கள் வாசனையை நான் மட்டும்தான் நுகரலாம் என்று பெருமையோடு இருந்தேன், ஆனாலும் பரவாயில்லை, அவளும் இருக்கட்டும், அவளை இங்கேயே அழைத்து வாருங்கள், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, ஆனால் தயவுசெய்து இங்கேயே இருங்கள், என்னை விட்டுப் போய் விடாதீர்கள்' பெண் சிங்கம் கண்ணீர் விட்டு அழுதது.

„இல்லை அப்படிச் செய்ய முடியாது, அது நடைமுறைக்கு சரி வராது' ஆண் சிங்கம் பதில் சொன்னது. அடுத்த நாள் ஆண் சிங்கம் மலை உச்சியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது.

சில நாட்கள் பெண் சிங்கம் அழுகையோடும் பட்டினியோடும் கழித்தது. „எத்தனை நாட்கள் எதையும் உண்ணாமலேயே கிடப்பாய், வேட்டைக்கு கிளம்பு' மற்றைய சிங்கங்கள் அறிவுறுத்தின. பெண் சிங்கம் தன்னை தேற்றிக் கொண்டு கிளம்பியது.

சில மணி நேரத்திலேயே ஒரு மான் கண்ணில் பட்டது. அந்தப் பெண் மான் கண்ணில் மிரட்சியோடு நின்றிருந்தது. பாய்ந்து வந்த பெண் சிங்கத்திடம் இருந்து அதனால் தப்ப முடியவில்லை.

மானை அடித்து வீழ்த்தி, அதை உண்டு கொண்டிருக்கும் போதுதான் கவனித்தது. சற்றுத் தள்ளி ஒரு புதருக்குள்ளே பிறந்து சில நாட்களே ஆனா ஒரு மான் குட்டி ஓட வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டு நின்றிருந்தது.

பெண் சிங்கத்திற்கு இன்றைக்கு நல்ல வேட்டை. மான் குட்டியை நோக்கிப் பாய்ந்தது. வேகமாய் நெருங்கிய பெண் சிங்கம் திடீரென்று அதிர்ந்து போய் நின்றது.

„இந்த வாசனை??!!!'....ஐயோ...இது என்னவனின் வாசனை!!!..'

ஒரு சிங்கத்தின் நிறத்தோடு நின்ற அந்த மான் குட்டியை பெண் சிங்கம் மெதுவாய் நெருங்கியது. அதனுடைய சீற்றம் காணமல் போயிருந்தது. 'என் செல்லமே' என்று மான் குட்டியை அணைத்து கொண்டு தூர தேசம் நோக்கி பெண் சிங்கம் நடக்கத் தொடங்கியது.

singam.jpg

upload pictures

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு விபரீதமான, கற்பனை!

உங்கள் கற்பனையைப் பாராட்டாமல், நகர முடியவில்லை! :D

சோரம் போனது, சிங்கமா, மானா?

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கு போவதில்லை என்று முடிவெடுத்தாச்சு போல........

சிங்களவரை இப்படி கேலி செய்கிறீர்கள்???? :lol::D :D

ஊருக்கு போவதில்லை என்று முடிவெடுத்தாச்சு போல........

சிங்களவரை இப்படி கேலி செய்கிறீர்கள்???? :lol::D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5] அருமையான கதை [/size]

  • தொடங்கியவர்

பாராட்டுக்கு நன்றிகள். இதை மானை தத்தெடுத்த சிங்கம் பற்றிய திரியில் ஒரு சிறிய கருத்தாக வைக்க இருந்தேன். பின்பு இதை ஒரு கதையாக எழுதினால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அப்படியே எழுதியாகி விட்டது.

விசுகு! இதற்கு இப்படி ஒரு அர்த்தம் கற்பிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஊருக்குப் போகும் போது சிங்கத்தை ஆகா, ஓகோ என்று புகழ்ந்து இன்னொரு கதை எழுதினால் போச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கு நன்றிகள். இதை மானை தத்தெடுத்த சிங்கம் பற்றிய திரியில் ஒரு சிறிய கருத்தாக வைக்க இருந்தேன். பின்பு இதை ஒரு கதையாக எழுதினால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அப்படியே எழுதியாகி விட்டது.

விசுகு! இதற்கு இப்படி ஒரு அர்த்தம் கற்பிப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஊருக்குப் போகும் போது சிங்கத்தை ஆகா, ஓகோ என்று புகழ்ந்து இன்னொரு கதை எழுதினால் போச்சு.

உண்மை முகம்

  • கருத்துக்கள உறவுகள்

மானுடன் விபரீதமான உறவு வைத்த ஆண் சிங்கம் அவமானத்தில் தற்கொலை செய்ததா?

பெண் சிங்கம் மான் குட்டியையும் கொன்றிருக்கவேண்டும்.

  • தொடங்கியவர்

ஏன் ஆண் சிங்கம் தற்கொலை செய்தது என்று சரியாகத் தெரியவில்லை. துரோகம் செய்த பிற்பாடும் தன்னுடன் இருக்கும்படி அழுத பெண் சிங்கத்தால் ஏற்பட்ட குற்ற உணர்வும் காரணமாக இருக்கலாம். தன்னுடைய செய்கை பற்றிய அவமானமும் காரணமாக இருக்கலாம்.

பெண் சிங்கம் குட்டியைக் கொல்லவில்லை. ஆண் சிங்கம் மீது கொண்ட அதீத காதல்தான் மான் குட்டியை கொல்லாமல் தன்னுடைய பிள்ளையாக ஏற்க வைத்திருக்கும்.

சபேசன்,

உங்கள் கதை சார்ந்து சில கேள்விகள். நேரமிருப்பின் உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

உங்கள் பார்வையில் உருவகக் கதையின் தேவை எப்போது எழுகிறது?

உருவகக் கதையிற்குள் தன் சமூகப் பெறுமதிகள் அல்லது பத்தாம்பசலித் தனங்கள் சற்றும் பிசகாமல் அப்படியே வெளிப்படவேண்டும் என்றால் எதனால் உருவகம் அவசியப்படுகிறது? உதாரணமாக:

அ) வெளியில் சென்று திரும்பிய ஆண்சிங்கத்திடம் வீட்டோட இருந்த பெண்சிங்கம் தயங்கித் தயங்கித் தன் சந்தேகத்தைக் கேட்டிச்சு

ஆ) துரோகம் என்று தெரிந்ததும் சக்காளத்தியைக் கூட்டிவந்து கூட்டுக் குடும்பம் நடத்தச் சொல்லி;ச்சு,

இ) ஆண் சிங்கம் நடந்து வந்தால் மற்றப் பெண்சிங்கங்கள் பெருமூச்சு விட்டிச்சுதுகள். ஆனால் ஆண்சிங்கத்திற்கு மான் தான் சிலிர்க்கச் செய்திச்சு.

ஈ) ஆண் தன் துரோகம் சார்பாய் மௌனம் சம்மதம் என்ற அளவிற்கே உரையாடுவான்

உ) குற்ற உணர்ச்சிக்கான பொதுவான தீர்வு தற்கொலை

ஊ) விந்தென்பது விதைப்பதற்காகவே இருப்பதனால் தன் ஆடவனின் குழந்தைகள எங்கு கண்டாலும் பெண்கள் மனோகரா பட வசனம் கணக்கில பேசிக் குழந்தைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று வழர்ப்பார்கள்

மானிற்கு வேணுமாயின் சிங்கம் எதிரியாக இருக்கலாம், ஆனால் சிங்கத்தைப் பொறுத்தவரை மான் என்பது உணவு மட்டுமே. ஏனெனில் ஒன்று இன்னுமொன்றிற்கு எதிரியாகவேண்டுமாயின் இரண்டிற்கும் இடையே நலன்கள் சார்ந்து போட்டி இருக்கவேண்டும் என்பதற்கு மேல் போட்டி உணரப்படவேண்டும். மான் சிங்கத்தின் நலன்களைத் தான் அடைவதற்காகப்; போட்டிபோடுவதில்லை. அத்தோடு தன்னை அழிக்கும் சிங்கத்தை அழிக்க ஆட்டிலறி தயாரிப்பதும் இல்லை. கொம்பிருக்கும் மான்கள் கூட சிங்கத்தைக் கண்டால் ஒடமட்டுமே செய்கின்றன. சேவலைக் கறிகாய்ச்சப் பிடிக்க மனிதன் துரத்தச் சேவல் ஓடினால் மனிதன் சேவலை எதிரி என்பதில்லை. இந்நிலையில், ஆண்சிங்கத்திற்கும் பெண்சிங்கத்திற்கும் மான் என்பது இரை மட்டுமே. அவ்வகையில் சிங்கத்திற்கும் அதன் உணவிற்கும் பிறந்த பிள்ளை அல்லது அவர்களிற்கிடையேயான உறவு இங்கு எதனைக் குறியீடு செய்கிறது?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் கதையும் அதற்கு இன்னுமொருவனின் கருத்தும் நன்றாக இருக்கிறது.

சாத்தியமற்ற புனைவை சாத்தியப்படுத்திய சபேசனின் எழுத்து இரசிக்கக்கூடியதாக உள்ளது. அதே நேரம் சாத்தியப்படுத்தப்பட்ட புனைவுக்குள்ளும் சமூகத்தின் பத்தாம் பசலித்தனங்களை சுட்டிக்காட்டி இயல்புக்கு மாறான சாத்தியமற்ற புனைவுகளின் வெறுமையை இன்னுமொரவன் நாடி பிடித்துக்காட்டியுள்ளார். வாசிப்பிற்கு வித்தியாசமாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]"அந்தமான் எங்கள் சொந்த மான்"[/size]

[size=4]கதையில்வரும் மானை சொல்லவில்லை. தீவை சொன்னேன்.[/size]

  • தொடங்கியவர்

இன்னுமொருவன்,

பொதுவாக ஆண், பெண், துரோகம், குழந்தை என்பவை பற்றி திரைப்படங்களும், நாடகங்களும் கட்டமைத்து வைத்திருக்கும் விம்பத்தை உடைக்காமலேயே கதையை எழுதினேன்.

நீங்கள் மான் குட்டியை தத்தெடுத்த சிங்கம் மீண்டும் தன்னுடைய கூட்டத்திடம் திரும்பாமல் அல்லது திரும்ப முடியாமல் தூர தேசம் போவதையும் இதில் பார்க்கலாம்.

மீண்டும் வாசித்துப் பார்த்த பொழுது கவனித்தேன். உயர்சாதி மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றிய உருவகக் கதை என்று இதை விளங்கிக் கொள்வதற்கும் நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஆனால் உண்மையில் ஒரு சுவாரஸ்யமான கதையை எழுத வேண்டும் என்பதில் மட்டும்தான் சிந்தனை இருந்தது.

சிங்கம் தற்கொலை செய்து கொள்வதில் ஆரம்பிப்போமா, இரண்டு சிங்கங்களும் பேசிக் கொள்வதில் ஆரம்பிப்போமா என்று கதையை வடிவமைப்பது பற்றித்தான் நான் அதிகம் சிந்தித்தேன்.

மற்றையபடி முளையை கசக்காது சமூகம் ஏற்கனவே கற்றுத் தந்த வகையில் கதையைக் கொண்டு போனேன்.

சிங்கத்துக்கும் மானுக்கும் நடந்த காதல் லோலாயத்தை கைவிட்டுவிடு கடசியில் முடிவை மட்டும் முன்வைத்து , சிங்கத்தை பொறுத்தவரை மான் எப்போதும் உணவுதான் தமிழரின் நிலை தற்போது மான்குட்டியின் நிலை. எப்ப வேண்டுமானாலும் சிங்கம் அடித்துக்கொன்று தின்னும். சிங்கத்தின் பின்னால்தான் போகவேண்டும். ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் புலியாய் இருக்கலாம். என்ன ஒன்று புலிக்கும் மான் உணவு என்பது தான் துயரம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கத்துக்கும் மானுக்கும் நடந்த காதல் லோலாயத்தை கைவிட்டுவிடு கடசியில் முடிவை மட்டும் முன்வைத்து , சிங்கத்தை பொறுத்தவரை மான் எப்போதும் உணவுதான் தமிழரின் நிலை தற்போது மான்குட்டியின் நிலை. எப்ப வேண்டுமானாலும் சிங்கம் அடித்துக்கொன்று தின்னும். சிங்கத்தின் பின்னால்தான் போகவேண்டும். ஆனால் புலம்பெயர்ந்தவர்கள் புலியாய் இருக்கலாம். என்ன ஒன்று புலிக்கும் மான் உணவு என்பது தான் துயரம்.

[size=4]புலம் பெயர்ந்தவர்கள் என்று நீங்கள் யாரை சொல்கிறீர்கள்?[/size]

[size=4]அல்லும் பகலும் உழைத்தும் வெறும் கையுடன் இருக்கிறார்கள் பலர்.[/size]

[size=4]இன்னமும் தொலைபேசி அழைப்புகளே......[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் இந்த கதையை போஸ்ட் பண்ணும் பொழுது கருத்தற்ற கதை என போட்டிருந்தீர்கள் இப்ப இவ்வளவு கருத்தையும் சொல்லுகிறீர்கள்.....

இன்று வாசிப்பு பழக்கம் மக்களிடையே மிகவும் குறைந்து வருகின்றது.சொல்ல வரும் கருத்தை இலகுவாக புரியும்படி சொன்னா என்னை போன்ற வாசகர்களுக்கு நன்மை பயக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]புலம் பெயர்ந்தவர்கள் என்று நீங்கள் யாரை சொல்கிறீர்கள்?[/size]

[size=4]அல்லும் பகலும் உழைத்தும் வெறும் கையுடன் இருக்கிறார்கள் பலர்.[/size]

[size=4]இன்னமும் தொலைபேசி அழைப்புகளே......[/size]

சிங்கத்தின் காட்டில் உள்ள மானுடன் வெளியில்(புலத்தில்)உள்ள புலி காதல் கீதல் கொள்ள கூடாது.அந்த மான் உயிர் வாழ வேண்டும் என்றால் புலி சிங்கத்தை பார்த்து முறைக்கவே கூடாது.முயல் மற்ற மிருகங்களுடன் சேர்ந்து சிங்கத்தை பிளான் பண்ணி கிணற்றுக்குள் தள்ளிய கதை ஒன்றும் இருக்கு.....:D

  • தொடங்கியவர்

புத்தன்,

உண்மையில் இந்தக் கதையை எந்தக் கருத்தையும் சொல்வதற்காக எழுதவில்லை. ஒரு பம்பலாகத்தான் எழுதினேன். சீரியசான விடயம் எதுவும் எழுதுகின்ற மனநிலையிலும் நான் இன்றைக்கு இருக்கவில்லை.

இங்கே களத்தில் இருக்கின்ற இன்னுமொருவன், நிழலி, சுகன், சகாறா போன்றவர்கள் இந்த கதையை ஆய்வுக்கு உட்படுத்தி கேள்விகள் கேட்டால் நான் துலைந்தேன் என்பது எனக்கு தெரியும். அதனாற்தான் முதலில் கதையும் இணைக்கும் போது "கருத்துக்கள் எதையும் சொல்லாத கதை" என்று இணைத்தேன்.

பின்பு ஒரு சந்தேகம். யாராவது இதைப் படித்து இந்தக கதைக்கு கருத்தக் சொல்லக் கூடாது என்று இதை விளங்கி விட்டால் என்ன செய்வது என்று ஓடி வந்து அதை நீக்கி விட்டேன்.

ஆனால் உண்மையில் அனைத்துக் கதைகளுமே ஏதோ ஒரு கருத்தை சொல்கின்றன என்பதுதான் உண்மை. எழுதுபவனக்கு அது தெரியாது விட்டாலும் வாசிப்பவனுக்கு அது தெரிந்தே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன்,

உண்மையில் இந்தக் கதையை எந்தக் கருத்தையும் சொல்வதற்காக எழுதவில்லை. ஒரு பம்பலாகத்தான் எழுதினேன். சீரியசான விடயம் எதுவும் எழுதுகின்ற மனநிலையிலும் நான் இன்றைக்கு இருக்கவில்லை.

இங்கே களத்தில் இருக்கின்ற இன்னுமொருவன், நிழலி, சுகன், சகாறா போன்றவர்கள் இந்த கதையை ஆய்வுக்கு உட்படுத்தி கேள்விகள் கேட்டால் நான் துலைந்தேன் என்பது எனக்கு தெரியும். அதனாற்தான் முதலில் கதையும் இணைக்கும் போது "கருத்துக்கள் எதையும் சொல்லாத கதை" என்று இணைத்தேன்.

பின்பு ஒரு சந்தேகம். யாராவது இதைப் படித்து இந்தக கதைக்கு கருத்தக் சொல்லக் கூடாது என்று இதை விளங்கி விட்டால் என்ன செய்வது என்று ஓடி வந்து அதை நீக்கி விட்டேன்.

ஆனால் உண்மையில் அனைத்துக் கதைகளுமே ஏதோ ஒரு கருத்தை சொல்கின்றன என்பதுதான் உண்மை. எழுதுபவனக்கு அது தெரியாது விட்டாலும் வாசிப்பவனுக்கு அது தெரிந்தே இருக்கிறது.

யாழ் களம், பார்ப்பதற்கு, சிம்பிளாகத் தெரிந்தாலும், அது 'சங்கப் பலகை' யாக்கும்!

இனிமேல், 'தருமி' மாதிரிப் பாட்டெளுதினால், அந்தப் பரமசிவனாலும் உங்களைக் காப்பாற்றமுடியாது! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உண்மையில் அனைத்துக் கதைகளுமே ஏதோ ஒரு கருத்தை சொல்கின்றன என்பதுதான் உண்மை. எழுதுபவனக்கு அது தெரியாது விட்டாலும் வாசிப்பவனுக்கு அது தெரிந்தே இருக்கிறது

அதனால்தான் எழுத்தாளர்கள் எழுதியதை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுகின்றார்கள்.

என்னை பொறுத்தவரை எந்த கதையும் எழுதுபவனின் மன பிம்பம் தான். அது எப்படி எழுதப்பட்டாலும் எழுதுபவரின் மன உணர்வுகளை வெளிக்காட்ட தவறுவதில்லை.

அந்த வகையில் இந்த கதை இன்னுமொருவன் சொன்னது போல உண்மையில் எழுந்தமானமாக சபேசனால் எழுதப்பட்டாலும் அது சபேசனுக்குள் உறங்கும் ஒரு கருத்தியல் அடிப்படையில் தான் வந்திருக்கும்.

தோல்வி, சமுதாயத்தை எதிர் கொள்ள பயபடுதல் இதற்கு எல்லாம் தற்கொலையை காரனமாக்கும் ஒரு ஆண் சிங்கம் எப்படி ஒரு இனத்துக்கு தலைமை பொறுப்பை கொண்டிருக்க முடியும். மான் குட்டியை தன பிள்ளையாக வளர்க்க நினைக்கும் பெண் சிங்கத்துக்கு இருக்கும் தைரியம் ஏன் அந்த ஆண் சிங்கத்துக்கு இல்லாமல் போனது.

இருந்தாலும் உங்கள் வழக்கமான அரசியல் கற்பனை இப்படி ஒரு உருவக கதைக்கு உருவம் கொடுத்துள்ளதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை .

@சண்டமாருதன் ,

தாயகத்திலே இதுவரை சிங்கத்திடம் இருந்தும் மான்களை காப்பாற்றிய புலிகளை,வெளியில் இருந்த நரிகளுடன் கூட்டு சேர்ந்து சிங்கம் கொன்றுவிட்டது . இப்போ அந்த புலிகள் விட்டு சென்ற வீரத்தை மனசில் வைத்து மான்கள் தங்களால் இயன்ற போராட்டத்தை தான் செய்கின்றன.

இது சிங்கத்தை வெல்லும் ஆனால் காலம் செல்லும் . அதுவரை உங்களால் பொறுமையாக இருக்க முடியாதா .?

Edited by பகலவன்

„எனக்கு உங்களில் சந்தேகமாக இருக்கிறது, எனக்குப் போட்டியாக யாரோ வந்து விட்டதாக என் உணர்வு சொல்கிறது'. .

„இத்தனை நாள் உங்களுக்கு நான் மட்டும்தான் என்று இறுமாப்பில் இருந்தேன், உங்கள் வாசனையை நான் மட்டும்தான் நுகரலாம் என்று பெருமையோடு இருந்தேன், ஆனாலும் பரவாயில்லை, அவளும் இருக்கட்டும், அவளை இங்கேயே அழைத்து வாருங்கள், யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை, ஆனால் தயவுசெய்து இங்கேயே இருங்கள், என்னை விட்டுப் போய் விடாதீர்கள்' பெண் சிங்கம் கண்ணீர் விட்டு அழுதது.

சில நாட்கள் பெண் சிங்கம் அழுகையோடும் பட்டினியோடும் கழித்தது. „எத்தனை நாட்கள் எதையும் உண்ணாமலேயே கிடப்பாய், வேட்டைக்கு கிளம்பு'

இதனை நோக்கும் போது, பெண்சிங்கம் சின்னத்திரை பார்த்த தமிழ் ஆட்கள் வளர்த்த சிங்கமாக இருக்கும்.

மேலும், சிங்கம் மானிடம் காதல் மொழி பேசியிருக்காது, பலத்காரத்தினால் மானைத் தன்னிச்சைக்குட்படுத்தியிருக்கும். அதற்கு பிறந்த குட்டியின் எதிர்காலம்தான் கேள்விக் குறி? மானினம் அதைச் சேர்ககுமா? சிங்க இனம் அதனைச் சோக்குமா,? வீதியில் வீசப்பட்ட குழந்தைகள் நிலையச் சநிதிக்கக் கூடிய கதை. பாராட்டுக்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.