Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ?????? - கருத்துக்கள்

Featured Replies

நான் உங்கடை வழித்தோன்றலா?? :lol: எதுக்கும் டி என் ஏ எடுத்து பாப்பம்... நீங்கள் தொடங்குங்கள்.

இன்றைய மனித ஒற்றுமை வேற்றுமைகளை பயன் உள்ள வழியில் DNA யை வைத்து ஆராய முடியாது.

DNA இரத்த உறவை காட்டலாம். வங்களாருக்கும் எமக்குமிடயில் DNA வேறுபாடுகள் அதிகம் இருக்க சந்தர்ப்பம் இல்லை.

ஆனால் நாகரீகத்தொடர்பு அற்றுவிட்டோம். அவர்களிடம் திராவிட மொழி இல்லை. திராவிட மதம் இல்லை.

இது ஈரானிய பிருகிகளுக்கு மற்ற திசையில் பொருந்தும். அவர்களிடம் திராடவிட எதுவும் இல்லை. அவர்கள் இரதத்தில் திராவிடர்களே அல்ல.

மேலும் வங்காளிகள் அரக்கர்களாக வர்ணிக்க பட்டு இல்லை. தென் மானில திராவிடர் ஆபிரிக்கருடன் 6,000-7,000 ஆண்டுகளுக்கு முன் கலாச்சார, வியாபார உறவுகள் வைத்திருந்திருக்கலாம். ஆபிரிக்கர்களில் கனிசமானவர்கள் 10,000 ஆண்டுகளுக்கு முன் தென் பகுதிகளில் வாழ்ந்திருக்கலாம். உலகின் முதல் விவசாயிகளான திராவிடர், உடல் உழைப்பு தேவைகளுக்காக நேற்றைய அமெரிக்கர் வைத்திருந்த மாதிரி அடிமைகள் வைத்திருந்தார்களா தெரியாது.

எகிப்தில் பிரமிட்டுக்களை அடிமைகள்தான் கட்டினார்களாம். அந்த மாதிரி பார்த்தால் மொகிஞ்சோதரா, கரப்பா போன்ற இடங்களில் காணப்படும் கட்டங்கள் வேலைத்தொகையால் பியரமிட்டுகளை விட எத்தனையோ மடங்கு கூட. திராவிடர் இவற்றை எங்கிருந்தும் அடிமைகளை கொண்டு வந்து கட்டவில்லையா?

DNA யின் படி திராவிடருக்கு ஐரோப்பிய இனங்களுடன் காணப்படும் நெருக்கம் வேறு எந்த இனத்துடனும் காணப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

  • Replies 130
  • Views 20.8k
  • Created
  • Last Reply

மல்லையூரான் எங்கிருந்து இப்படியான தகவல்கள் பெற்றீர்கள் என்றும் கூறினால் எனக்கு உதவியாக இருக்கும்.

இந்த பக்கத்தில் இருந்த ஆர்வத்தால் ஒழுங்கான ஆராச்சி என்றில்லாமல் ஓட ஒட வாசிப்பதால் உங்களுக்கு சரியான மேற்கோள் தரமுடியாது.

ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறேன். யாரவது கிடைத்தாலும் போட்டு விடலாம்.

உலகிலேயே அதிகம் மொழி அறிந்தவர்களில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சுவாமி ஞானபிரகாசர்.

கிடத்தட்ட 75 பாசை அறிந்தவரும் மேலும் சில சில பாசைகளில் கணிசமான சொற்களை தெரிந்தவருமாவார். பல மொழிகளை அவற்றின் அகராதிகளை இரண்டு மூன்று நாட்கள் வாசித்து தெரிய வந்தார் என்றும் கூறப்படுகிறது. ஃபாதர் டேவிட் இவரின் சீடர். அவர் யாழ்ப்பாண நூலக செய்தியால் இறக்கும் போது 30 பாசைகளை அறிந்திருந்தார் என்றும், தனது குருவின் மொழி ஒப்பியல் ஆராச்சிகளை அவர் தொடர்ந்திருந்தார் என்றும் கேள்விபட்டிருக்கிறேன்.

உண்மையிலேயே தமிழை இவ்வளவுகாலம் நிலைக்கத்தக்க வழியில் ஆக்கிய திராவிடரை மொழித்திறைமையில் வென்ற இனங்கள் இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5] மல்லையூரான்,DNA யை வைத்து ஏன் ஆராய முடியாது? பொறுத்திருங்கள். கிருபன் நீங்கள் போட்டிருக்கும் புத்தகம் நான் வாசிக்கவில்லை. புத்தகத்தை எழுதியவர் தமிழரா. ஏனெனில் தமிழர் அல்லாத வேற்று மொழிபேசும் அறிவு ஜீவிகள் தான் தமிழரை சிந்திக்க விடாது செய்துள்ளனர்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறுவதுபோல் ஞானப்பிரகாசரின் தரவுகள் சரியாக இருக்கலாம். இந்தியாவில் உள்ள ராமநாதன் என்னும் ஒரு தமிழ் மொழி பற்றிய நூலாசிரியருடன் உரையாடும்போது கிடைத்த தகவல் தான் நான் எழுதியது. இப்போதுகூட டேவிட் என்னும் இந்தியப் பாதிரியார் பைபிளில் இருக்கும் சொற்களைத் தமிழில் இருந்து வந்ததாக ஒப்பீடு செய்துள்ளார். சுமேரியரின் பகுதி முடிந்தபின் அல்லது இடையிலோ அதைப் பற்றிக் கூறுகிறேன். உங்கள் தேடலுக்கும் செய்திகளுக்கும் நன்றி மல்லையூரான்.

  • கருத்துக்கள உறவுகள்

Thamilar_...pdf

Download(24.4 MB)

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரான், நீங்கள் கூறுவதுபோல, ஹரப்பா, முஹஞ்சிதாரோ, சிந்து வெளி, நாகரீகங்கள், வித்தியாசமானவை. இவர்கள், பெண்மையையும், தாய்மையையும், ஆண்மையையும் (எருது) போன்ற தெய்வங்களையும் தான் வழிபட்டுள்ளார்கள். இந்த வழிபாடுகளின், எச்சங்களே, இன்று நாம் வணங்கும், சிவலிங்கமும். துர்க்கையும், நந்தியும் ஆகும். அத்துடன், இவர்களின் வழிபாடு, இயற்கையுடன் இணைந்திருந்தது. இதே விதமான ;Dreaming' எனப்படும் இந்த வழிபாட்டு முறை, அவுஸ்திரேலிய அபோரிஜினல் மக்களிடம், இன்னும் வழக்கத்தில் இருந்து வருகின்றது. இவர்கள், திராவிடர்களின் எச்சங்கள், என நான் நம்புகிறேன். இருநூறு வருடங்களின் முன்பு, captain Cook, இங்கு வந்தபோது, இவர்கள் மிகவும், வலிமை, வாய்ந்தவர்களாக இருந்தார்கள். ஆனாலும், இவர்களது, இயற்கை தொடர்பான நம்பிக்கை, மிகவும் வித்தியாசமானது. மனிதன், இயற்கைக்குச் சொந்தமாணவனே அன்றி, இயற்கை மனிதனுக்குச் சொந்தமானதல்ல, என்பதே இவர்களது நம்பிக்கையாக இருந்தது! ஒரு அபோறிஜனனால், அவன் நினைத்தால், ஒரு இடத்தில் அமர்ந்து, ஐந்தே நிமிடத்தில் அவனது உயிரைத் துறந்து விட முடியும், அதனால் தான், இவர்களை, இன்றும் கூடத் தனிமைச் சிறைகளில் வைத்திருப்பதில்லை.அதனால் தான் இவர்கள், எவரது எல்லைகளுக்கும் போய் வருகிறார்கள், வேலி போடுவதில், இவர்களுக்கு நம்பிக்கை, இல்லை. இவர்கள், மற்றவர் வளவுக்குள், ஒரு மிருகத்தை வேட்டையாடும்போது, அதை அவர்கள் களவாக எண்ணுவதில்லை, இதனால் தான், வெள்ளைக்காரன் வந்து இவர்களது, நிலத்தைப் பிடித்தபோதும், இவர்களுக்கு, அதன் அடித்தளம் புரியவில்லை. இதையே தான், ஹரப்பா, சிந்துவெளியில் உள்ளவர்களும், ஆரியர்கள் வந்த போது செய்தார்கள். இதையே தான், ராஜராஜ சோழன் தமிழ் நாட்டிலும், செய்தான். இந்த 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ர திராவிட அடித்தளம் தான், இவ்வளவு அழிவுகளுக்கும் வழிகோலியது. ஒரு விதத்தில் அவர்களது நம்பிக்கை, சரியானது போலத் தான் உள்ளது. ஆனால், அது சுயநலம் மிக்க, முதலாளித்துவ சிந்தாந்ததுக்குப் பொருந்தி வாராது. ஆனாலும், பறவைகளும், மிருகங்களும், ஒரு இடத்தில் இருந்து, இன்னொரு இடத்திற்குப் போவதற்கு, 'விசா' தேவைபடுவதில்லைத் தானே!.

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் குறுக்கிடுவதற்கு, சுமோவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, 'மார்க்ஸ் முல்லர்' என்பவரைப் பற்றிக் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்! இந்தியாவுக்கு வந்த அங்கிலேயர், சமஸ்கிரிதத்தின் 'செழுமையை' எதிர்பார்த்திருக்கவில்லை. அத்துடன், வேதங்களின், மறைபொருளில், பொதிந்திருந்த உண்மைகளையும் அவர்களால், ஜீரணிக்க முடியவில்லை. இவை, திராவிடர்களிடமிருந்து, திருடப் பட்டவை, என்பது வேறு கதை.

எனவே சமஸ்கிரித்தில் எழுதப் பட்டிருந்தவை, நாகரீகத்தின் தொட்டிலான ஐரோப்பாவில் இருந்து, கொண்டு வரப்பட்டவை. என்று கூறித் தங்களது, கலாச்சாரமே தொன்மையானது, என்று காட்டுவதற்காக, மார்க்ஸ் முல்லர், ஒப்பந்த அடிப்படையில், எழுத அமர்த்தப் பட்டார். அவருக்குக் கொடுக்கப் பட்ட பணியை, அவர் செவ்வனே நிறைவேற்றினாரே தவிர, அவர் ஒரு சுயாதீனமான ஆய்வாளர் அல்லர் !

நல்லதொரு பதிவு.

நீண்ட காலமாக திராவிட ஆரிய குடிப்பரம்பல்களின் வரலாற்றை அறிய ஆசை இருந்தது. விடயம் அறிந்தவர்களின் வரலாற்றுப் பகிர்வுகளும் விவாதங்களும் இந்தத் திரியை மேலும் செழுமைப்படுத்தும்.

வாசிக்க ஆவலாயுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நானே எழுதிப்போட்டு நானே வாசிக்க வேண்டியதுதான்.

நானே எழுதிப்போட்டு நானே வாசிக்க வேண்டியதுதான்.

இது வரையில் 950 பேர் படித்துவிட்டதாக யாழ் கணக்கு போடுகிறதே

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லயூறான்.எங்கே போய்ப் பார்ப்பது.

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ??????

[size=2][size=2]in[/size] பொங்கு தமிழ் [/size]

[size=2]Started by மெசொபொத்தேமியா சுமேரியர், 10 Oct 2012[/size]

  • 40 replies

  • 1,059 views

photo-thumb-9496.jpg?_r=1345018941

  • மெசொபொத்தேமியா சுமேரியர்

  • Today, 04:10 PM

நன்றி மல்லயூறான்.எங்கே போய்ப் பார்ப்பது.

http://www.yarl.com/forum3/index.php?showforum=2 இதை சொடுக்கினீர்களாயின் பொங்குதமிழ் திரிகள் எல்லாம் தெரியும். உங்கள் திரி காணப்படும் அதே வரியில் 1075 views என்றும் 40 replies என்றும் காட்டபட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மல்லை

நானே எழுதிப்போட்டு நானே வாசிக்க வேண்டியதுதான்.

அதுக்காக எழுதுவதை நிறுத்தி விட வேண்டாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் இல்லையெனினும் நான் படிக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]உங்களுக்காக[/size]
[size=5]இன்னும்[/size]
[size=5]சில[/size]
[size=5]தரவுகள்[/size]

[size=5] [/size][size=5]பகுதி[/size][size=5] 3[/size]

[size=5]•[/size]
[size=5]tuyhw;Wf;F Kw;gl;l fhyk; - tuyhW vOj Muk;gpf;fg;gLtjw;f;F Ke;ija fhyk;. [/size]

[size=5]•[/size]
[size=5]tuyhw;Wf;fhyk; - tuyhW vOj Muk;gpj;j fhyk;.[/size]

[size=5]•[/size]
[size=5]gioa fw;fhyk; - NgypNahypjpf; - 30000 Mz;Lfs; tiu.[/size]

[size=5]•[/size]
[size=5]kj;jpa fw;fhyk; - kPNrhypjpf; - 30000-12000 Mz;Lfs; tiu.[/size]

[size=5]•[/size]
[size=5]Gjpa fw;fhyk; - epNahypjpf; - 12000-fp.K4000tiu.[/size]

[size=5]•[/size]
[size=5]nrg;Gf;fhyk; - fp.K 4000- 1500 tiu.[/size]

[size=5]•[/size]
[size=5],Uk;Gf; fhyk; - fp.K 1500 ,ypUe;J.[/size]

[size=5] [/size]

[size=5] tuyhW vd;why; vd;d?[/size]

[size=5] [/size]

[size=5]•[/size]
[size=5]eilngw;W Kbe;j epfo;Tfis Mjhuq;fSld; vOJtJ.[/size]

[size=5]•[/size]
[size=5]Nfl;ltw;iw itj;Jf;nfhz;L fw;gid fye;J vOJtJ.[/size]

[size=5]•[/size]
[size=5]kw;wtu;fs; vOJtij thrpj;J jk; mwpitg; gad;gLj;jp Muha;e;J vOJtJ.[/size]

[size=5]•[/size]
[size=5]njhy;ypaw; rhd;WfspDhlhf Ma;Tnra;J vOJtJ. [/size]

[size=5] [/size]

[size=5] vijg;gw;wp vOJtJ tuyhW?[/size]

[size=5]xU ehL> ,dk;> nkhop> gz;ghL> jdpkdpjd;> jyk;> nghUs;> Nghu; vdg; gy ,Ue;jhYk;> Kf;fpakhfg; ghu;f;fg;gLtJ cyfpy; kdpj,dk; Njhd;wpg; gutp> ngUfp> mope;J> jw;NghJ tho;e;J nfhz;bUf;Fk; khe;j ,dq;fspd; gioikahd tuyhW.[/size]

[size=5] [/size]

[size=5]tuyhw;iw Mjhuq;fSld; vOjg; gad;gLgit vit?[/size]

[size=5]· [/size]
[size=5]mfo;tha;Tfs;[/size]

[size=5]· [/size]
[size=5]kz;gilr;rupjtpay;[/size]

[size=5]· [/size]
[size=5]fy;ntl;Lf;fs;[/size]

[size=5]· [/size]
[size=5]kl;ghz;lr; rupjtpay;[/size]

[size=5]· [/size]
[size=5]NwbNah fhu;gd; 14 [/size]

[size=5]· [/size]
[size=5]kuGapupaw; Nrhjid [/size]

[size=5]· [/size]
[size=5]fy;yiwfs; [/size]

[size=5]· [/size]
[size=5]<kj; jhopfs;[/size]

[size=5]&middot; [/size]
[size=5]ehzaq;fs;[/size]

[size=5] [/size]

[size=5] kz;gilr; rupjtpay;[/size]

[size=5]- kz;iz mfo;e;J kz;zpd; gbkhd epiyapypUe;J fhyj;ijf; fzf;fply;. [/size]

[size=5]-Xt;nthU njhFjp gbkKk; 100 Mz;Lfisf; Fwpf;Fk;.[/size]

[size=5] [/size]

[size=5] [/size]

[size=5] fy;ntl;Lf;fs;[/size]

[size=5]nghwpf;fg;gl;bUf;Fk; vOj;JfspDhlhf fhyj;ijAk; tuyhw;iwAk; mwpjy;.[/size]

[size=5]

kl;ghz;lr; rupjtpay; - Ntg;Ngw;Wtpay;

1. mfo;tha;tpy; fz;nlLf;fg;gl;l kl;ghz;lq;fspy; cs;s rpj;jpuq;fisNah md;wp vOj;Jf;fisNah thrpj;Jf; fhyj;ijf; fzpg;gJ.

2. mtw;wpy; xl;bapUf;Fk; NwbNah ghl;bf;fypd; mlu;j;jpiaf; nfhz;L mg;nghUisr; R+lhf;Ftjd; %yk; mjd; fhyj;ij mwpjy;.

NwbNah fhu;gd; 14[/size]

[size=5]xU capupdj;jpYs;s fhu;gd; 12 mt;Tapupdk; mope;jhYk; khwhJ. Mdhy; fhu;gd; 14 fhyk; nry;yr; nry;yf; Fiwe;Jnfhz;L nry;Yk;.[/size]

[size=5]5000 Mz;Lfspy; miuthrpahff; Fiwe;JtpLk;.[/size]

[size=5] [/size]

[size=5] kuGapuZr; Nrhjid (DNA)[/size]

[size=5]capUld; ,Uf;Fk; kdpju;> tpyq;F Nghd;wtw;wpYk; ,we;JNghd capupdq;fspYk;> fpl;lj;jl;l 4000 Mz;Lfs;tiu ghJfhg;ghf ,Ue;j clyq;fs;> vYk;Gfs; Nghd;wtw;wpYk; nra;ag;gLtJ.[/size]

[size=5]Mz;fspd; Y FNuhNkhNrhk;fspDlhfNt ,yFthf epWtg;gLfpd;wd.

FNuhNkhNrhk; - Genetic Markers[/size]

[size=5]•[/size][size=5] Kjd;Kjy; ,lk;ngau;e;j khe;j ,dk; ePf;Nuha;l; - m 130[/size]

[size=5] [/size]

[size=5]•[/size]
[size=5]
X];Nuhnyhapl; -
m
130
[/size]

[size=5]•[/size]
[size=5]
,yq;if Ntlu; -
m
130
[/size]

[size=5]•[/size]
[size=5]
njd;dpe;jpaj; jkpou;fs; -
m
20
[/size]

[size=5]•[/size]
[size=5]
,yk; jpuhtplu;fs; -
m
172
[/size]

[size=5]•[/size]
[size=5]
<oj;jkpou; -
m
20
[/size]

[size=5]•[/size]
[size=5]
rpq;fstu; -
m
20
[/size]

[size=5]•[/size]
[size=5]
,e;Njh Mupau; -
m
17
[/size]

[size=5]•[/size]
[size=5] [/size]
[size=4]தெலுங்கர்[/size]
[size=4] [/size]
[size=4]மலையாளிகள்[/size]
[size=4] [/size]
[size=4]கன்னடர்[/size]
[size=5]–[/size]
[size=5]
M
20[/size]

[size=5] RNkupau; ???????[/size]

[size=5] [/size]

[size=5]• [/size][size=5],g;NghJ tho;e;Jnfhz;bUf;Fk; kdpj ,dk; NfhNkh rg;gpad;];.[/size]

[size=5] [/size]

[size=5]•[/size][size=5]kdpj ,dk; Mgpupf;fhtpy; Njhd;wpg; gutpaJ.[/size]

[size=5]•[/size][size=5]ciwgdp fhyj;jpYk; khe;j,dk; tho;e;jJ.[/size]

[size=5]•[/size][size=5]fpl;lj;jl;l 50>000 tUlq;fSf;F Kd;du; ,lg;ngau;T Muk;gpj;jJ.[/size]

[size=5]•[/size][size=5],lk;ngau;e;Njhu; jq;fpa ,lq;fspd; fhyepiyfSf;Nfw;g mtu;fspd; epwKk; cUtq;fSk; khw;wk; ngw;wd. [/size]

[size=5]•[/size][size=5]Xupdk; 1000 Mz;LfSf;F Nkyhf xNu ,lj;jpy; ,Ue;jhy; mtu;fspd; cUtk;> epwk; vd;gd khw;wkilAk;. [/size]

[size=5] [/size]

[size=5]தொடரும்[/size] ...

நானும் வாசிக்கிறான் தொடர்ந்து உற்சாகமாக எழுதுங்க பட் இத தான் வாசிக்க முடியல்ல :(

  • கருத்துக்கள உறவுகள்

ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்

[நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!]

பண்டைய தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு

anu-enki-enlil.jpg

(ஆறாம் பாகம்)

சிங்கப்பூர் என்ற நாட்டின் பெயர், ஒரு தமிழ்ச் சொல்லில் இருந்து பிறந்தது என்று பெருமை கொள்கின்றோம். (உண்மையில் அது ஒரு சமஸ்கிருதப் பெயர்) ஆனால், ஈராக், ஒரு சுத்த தமிழ்ச் சொல்லைக் கொண்ட நாட்டின் பெயர் என்பது, எத்தனை பேருக்கு தெரியும்? ஹரப்பா போன்று, சம காலத்திய மெசப்பத்தோமிய நாகரீகம் தோன்றிய இடத்தின் பெயர் "ஊர்"! ஊர் என்பது பின்னாளில் உருக், எரேக் என்று மருவி, அதுவே இன்று ஈராக் என்று அழைக்கப் படுகின்றது. அப்படியானால், ஈராக்கில் தமிழர்களின் முன்னோர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் இருக்க வேண்டுமல்லவா? தமிழர்களின் ஈராக்கிய மைத்துனர்கள் பிற்காலத்தில் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட ஒரே காரணத்திற்காக, பண்டைத் தமிழர்களின் வரலாற்றை புறக்கணித்து விட முடியுமா? ஈராக்கியர்கள் இஸ்லாமியராக மாறுவதற்கு முன்னர், கிறிஸ்தவர்களாகவும், யூதர்களாகவும் இருந்துள்ளனர். அதற்கும் முன்னர்? இந்து மதத் தெய்வங்களை ஒத்த, திராவிட தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். அவை பற்றி நாம் மேலும் ஆராய்வது அவசியமானது. அப்போது தான், "குமரி கண்ட நாகரீகம்" என்ற கற்பனைக் கதையாடலுக்கு முரணான, நிஜமான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

"ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையினத்தவர்கள், திராவிடர்கள் எல்லோரும் கறுப்பினத்தவர்கள்" என்ற கூற்று எவ்வளவு தூரம் சரியானது? முதலில் வெள்ளை-கருப்பு பாகுபாடு எப்போது தோன்றியது?

நிச்சயமாக, 16 ம் நூற்றாண்டில், காலனிய கால வரலாற்றுடன் தான் ஆரம்பமாகியது. அதற்கு முன்னர், எந்தவொரு இனத்தையும் வெள்ளை என்றோ அல்லது கருப்பு என்றோ பார்க்கும் வழக்கம் இருக்கவில்லை. ஆகவே, ஆரியர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் என்று கருதுவதும் தவறானது. வெள்ளையின மேலாதிக்க கொள்கைக்கு வலுச் சேர்ப்பதற்காகவே அது போன்ற கருத்தியல்கள் பரப்பப் படுகின்றன. தமிழகத் திராவிட இயக்கத்தினரும், தமிழ் தேசியவாதிகளும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளமை ஆச்சரியத்திற்குரியது. மானிடவியல் ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சி முடிவுகளும் வெள்ளையின அறிஞர்களாலேயே தொகுக்கப் பட்டு வந்தன. ஒரு வெள்ளையன் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று, நாங்களும் அவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டோம்.

இந்திய உப கண்டத்திற்கு மட்டுமே சிறப்பம்சமான சாதியமைப்பு, இந்து மதம் போன்றன, வெள்ளையினத்தவர் வாழும் பிற நாடுகளில் காணப்படவில்லை. ஆதலால், வர்ணாச்சிரம சாதியமைப்பும், இந்து மதமும் வெள்ளையின ஆரியர்களினால் இறக்குமதி செய்யப்பட்டவை என்று வாதிடுவது தவறானது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த திராவிடர்கள், தாம் தங்கி வாழ்ந்த இடங்களில் எல்லாம் ஒரே மாதிரியான சமுதாய அமைப்பை கொண்டிருந்தனர். ஒரே மாதிரியான தெய்வங்களை வழிபட்டனர். இதற்கு முந்திய அத்தியாயங்களில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப்பட்ட தமிழரின் (திராவிடரின்) கலாச்சார விழுமியங்களை பார்த்தோம். இனி வரும் அத்தியாயங்களில், ஆப்பிரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட பகுதி மீது கவனத்தை செலுத்துவோம்.

ஆபிரிக்க கண்டத்திற்கும், இந்திய உப கண்டத்திற்கும் நடுவில் எந்தெந்த நாடுகள் இருக்கின்றன? அரேபியா, சிரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகள் உங்கள் மனக்கண்ணில் தோன்றும். தமிழர்களின் முன்னோர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தது உண்மையானால், மேற்குறிப்பிட்ட நாடுகளிலும் சில கலாச்சார ஒற்றுமைகள் காணப் படுமல்லவா? அது குறித்து ஆராய்வதே, இனி இந்தக் கட்டுரைத் தொடரின் நோக்கமாக இருக்கும். அரேபியருக்கும், தமிழருக்கும் இன அடிப்படையில் ஒற்றுமைகள் உள்ளன. அரேபிய தீபகற்பத்தின் நாகரீகம் காலத்தால் பிந்தியது என்பதால், அதற்கு முந்திய மத்திய கிழக்கு நாகரீகத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். இன்றைய ஈராக்கில் இருந்த பாபிலோனிய நாகரீகம் பற்றி பலர் அறிந்திருக்கிறார்கள். விவிலிய நூலில் அது பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளதால், அது பிரபலமாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

ஆனால், அதே ஈராக்கிய பிரதேசத்தில், பாபிலோனியாவுக்கு முன்பிருந்த சுமேரிய சாம்ராஜ்யம் பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. அனேகமாக, காலத்தால் பிந்திய பாபிலோனிய சாம்ராஜ்யத்தில், கறுப்பின மக்களும், வெள்ளையின மக்களும் கலந்து வாழ்ந்திருக்க வேண்டும். அதே நேரம், காலத்தால் முந்திய சுமேரிய சாம்ராஜ்யத்தின் குடி மக்கள் கறுப்பினத்தவராக இருந்திருக்க வேண்டும். ஆப்பிரிக்கர்கள், திராவிடர்களாக இனம் மாறிய காலகட்டமும் அதுவாக இருக்கலாம். அரேபிய தீபகற்பத்திலும் அந்த இனம் (ஆப்பிரிக்க-திராவிடர்கள்) பரவி வாழ்ந்திருக்கின்றது. அங்கிருந்து மீண்டும் ஆப்பிரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றது. இதற்கு ஆதாரமாக, அந்த மக்கள் பேசும் ஒரே மாதிரியான மொழிகளைக் குறிப்பிடலாம். ஹீபுரு, அரபு ஆகியன செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள். அதே மாதிரி, சோமாலி, அம்ஹாரி, திக்ரிஞா (எத்தியோப்பியா) ஆகிய மொழிகளும் செமிட்டிக் குடும்பத்தை சேர்ந்தவை தான். (Semitic Languages, http://en.wikipedia.org/wiki/Semitic_languages)

நாங்கள் இப்பொழுது, உலகில் நாகரிக சமூகங்கள் தோன்றிய காலகட்டம் பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அந்தக் காலகட்டம், மூவாயிரம் அல்லது ஐந்தாயிரம் வருடங்களுக்கு முந்தியது. (விவிலிய நூல் அதனை மனித இனம் தோன்றிய காலகட்டம் என்று கூறுகின்றது.) குறைந்தது எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னராவது, மனித இனம், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவிச் சென்று, குடியேறி வாழ்ந்து வந்தது. மனித இனம், வெள்ளையினம், கருப்பினம், சீன இனம், திராவிட இனம் என்றெல்லாம் வேறுபட்ட உடல் தோற்றங்களைப் பெறுவதற்கு பல்லாயிரம் வருட கால பரிணாம வளர்ச்சி காரணமாக இருந்திருக்கலாம். அந்த பரிணாம மாற்றம் நடைபெற்ற காலப்பகுதியில், மிருகங்களைப் போன்று வேட்டையாடியும், கனிகளைப் பறித்துண்டும் வாழ்ந்த மனித இனம், பல்லாயிரம் வருடங்களுக்குப் பின்னரே

நாகரிக சமுதாயங்களை உருவாக்கி இருப்பார்கள். ஆகவே, பிற்காலத்தில் "நாகரீகமடைந்த சமுதாயங்கள்" பெரும் படை திரட்டிப் போரிட்டு, ஒன்றை மற்றது அழித்த காலத்தில் மனித நேயம் காணாமல் போய் விட்டது. அதற்கு முன்னர், "காட்டுமிராண்டிகளாக" வாழ்ந்த மக்கள், பெரும்பாலும் மிருகங்களை மட்டுமே வேட்டையாடிக் கொன்றார்கள். கறுப்பினத்தவராயினும், வெள்ளயினத்தவராயினும் ஒருவரை மற்றவர் அழிக்கும் யுத்தங்கள், இன்றைக்கும் தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. "இனப்பற்று, இன ஒற்றுமை, இன ஐக்கியம்..." இன்னோரன்ன வார்த்தைகள், உலகில் ஒரு காலத்திலும் இருந்ததில்லை. இன்றைக்கும் அது போன்ற கருத்தியல்கள் ஆக்கிரமிப்புப் போர்களை கருத்தில் கொண்டே உருவாக்கப் படுகின்றன.

சுமேரியர் நாகரீகம் பற்றிய தகவல்களும், சுமேரிய சாம்ராஜ்யத்தில் இருந்தே கிடைக்கின்றன. அதாவது, சுமேரியர் போன்ற இன மக்கள் இன்றைய ஈராக்கில் மட்டுமல்லாது, வட ஆப்பிரிக்கா, அரேபியா, மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலும் குடியேற்றங்களை அமைத்துள்ளனர். குறிப்பாக, அரேபிய தீபகற்பம் "மூதாதையரின் பூமி" என்பதான தகவல்கள், சுமேரியரின் புராணக் கதைகளிலேயே எழுதப் பட்டுள்ளன. அதற்குமப்பால், இன்றைய சோமாலியாவின் வட முனைப் பகுதியிலும் சுமேரியரின் மூதாதையர் வாழ்ந்திருக்கலாம். சுமேரியரின் நாகரீகம் தோன்றிய எரிடு நகர மக்கள், வேறொரு நாட்டில் இருந்து கப்பலில் வந்ததாக கர்ணபரம்பரைக் கதை ஒன்று நிலவியது. எரிடு என்றால் கடற்கரை என்று அர்த்தம். அனேகமாக, அங்கிருந்து சோமாலியா வரை கப்பற் போக்குவரத்து இடம்பெற்றிருக்கலாம். சுமேரிய கோயில்களில், தெய்வச் சிலைகளுக்கு சாம்பிராணி புகை காட்டி வழிபடப் பட்டது. இந்த சாம்பிராணி மரம், வட சோமாலியா, யேமன், ஓமான் போன்ற நாடுகளில் மட்டுமே வளர்கின்றது. (உலகில் வேறெங்கும் சாம்பிராணி மரம் முளைப்பதில்லை.)இன்றைக்கும் இந்திய உபகண்டத்தை சேர்ந்த இந்துக்கள், சாம்பிராணி தூபம் காட்டி வழிபடுவது வழக்கம். ஆகவே, இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே, சோமாலியா, யேமனில் விளைந்த சாம்பிராணி இந்தியா வரை ஏற்றுமதி செய்யப் பட்டு வந்தது. பிற்காலத்தில் தோன்றிய யூத மதம், சாம்பிராணி காட்டி வழிபடுவதை தடை செய்தது.

ஏன் இந்து மதத்தில் இத்தனை கடவுள்கள்? என்று பிற மதத்தினர் நையாண்டி செய்யும் பொழுது, இந்து மத நம்பிக்கையாளர்கள் பதில் கூறத் தெரியாமல் முழிப்பார்கள். "இவை ஒரே கடவுளின் அவதாரங்கள்" என்று,ஆன்மீக பண்டிதர்கள் விளக்கம் கொடுப்பார்கள். ஆனால், பலருக்கும் தெரியாத உண்மை, இந்த தெய்வங்கள் முன்பு வெவ்வேறு இனக்குழுக்களால் வெவ்வேறு பிரதேசங்களில் வழிபடப் பட்டு வந்தன. நகர்மயமாகிய சிறு தேசங்கள் ஒவ்வொன்றும் தமக்கென தனியான தெய்வங்களை கொண்டிருந்தன. சுமேரியாவிலும் முன்பு அப்படித் தான் இருந்துள்ளது. எரிடு, ஊர், உருக், நிப்பூர், லகாஷ், கிஷ் போன்ற பல சிறிய தேசங்களை, பிற்காலத்தில் தோன்றிய சுமேரிய சாம்ராஜ்யம் ஒன்று சேர்த்து, ஒரே நாடாக்கியது. அதனால், அந்தந்த பிராந்திய தெய்வங்களும் ஒன்று சேர்க்கப்பட்டனர். இவை எல்லாம், ஒரே கடவுளின் பல பெயர்கள் என்று கூறப்பட்டன. சாம்ராஜ்யங்களுக்கு இடையிலான ஆக்கிரமிப்புப் போர்கள், தெய்வங்களின் பரிணாம வளர்ச்சியை மேலும் சிக்கலாக்கின. பிற்காலத்தில் பலம் பொருந்திய வல்லரசுகாக தோன்றிய, அக்காடிய (வட ஈராக்),பாபிலோனிய (தென் ஈராக்), அசிரிய (இன்றைய சிரியா) சாம்ராஜ்யங்கள், சுமேரியரின் தெய்வங்களை உள்வாங்கிக் கொண்டன. அவற்றிற்கு தமது மொழியில் வேறு பெயர்களை சூட்டின.

ஒரே கடவுளை வேறு பெயரால் அழைக்கும் வழக்கம் தோன்றுவதற்கு, சாம்ராஜ்ய விஸ்தரிப்புகள் மட்டும் காரணமல்ல. ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வேறொரு இடத்தில் சென்று குடியேறினால், அங்கே புதிய மொழிகள் உருவாகின்றன. தாயகத்துடனான தொடர்பு அறுதல், தலைமுறை இடைவெளி போன்ற காரணங்களினால், மனிதர்களின் மொழி, பண்பாடு என்பன மாறுபடலாம். ஆனால், அவர்களின் மத நம்பிக்கைகள் பெருமளவு மாறுபடுவதில்லை. காலனிய காலத்தில், தென்னாபிரிக்காவுக்கும், தென் அமெரிக்காவுக்கும் கூலிகளாக சென்ற இந்தியர்களை அதற்கு உதாரணமாக காட்டலாம்.

பாபிலோனியர்கள் இஷ்தார் என்று அழைத்த பெண் தெய்வத்தின் சுமேரியப் பெயர் "இனானா". (

http://en.wikipedia.org/wiki/Inanna)சுமேரியரின் பல பெண் தெய்வங்கள், இனானாவின் அவதாராமாக கருதப்பட்டன. அதாவது, இந்து மதத்தில் ஆதிபராசக்தி போன்று, ஒரு தாய் தெய்வம். அதன் பூர்வீகப் பெயர் "நின் அனா", அதன் அர்த்தம் தமிழில் "அகிலாண்டேஸ்வரி!" நம்மூர் பராசக்தி போன்று, உயிர்களின் பிறப்புக்கும், பயிர்களின் செழிப்புக்கும், இல்லறத்திற்கும் நன்மை வேண்டி வழிபடப் பட வேண்டிய தெய்வம் இனானா. சுமேரியர்கள் அந்த தெய்வத்தை, "அம்மா இனானா" என்று அழைத்தார்கள். சுமேரிய மொழியில் அம்மா என்றாலும், தமிழ் மொழியில் அம்மா தான்! ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர், பாலஸ்தீனத்தில் தோன்றிய கிறிஸ்தவ மதம், இனானா என்ற பூமி மாதாவை, "மரியாள்" என்று பெயர் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் தாயாக்கி வழிபட வைத்தது.

அது மட்டுமல்ல, "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" என்ற பிரபலமான கிறிஸ்தவ மும்மூர்த்திகளின் தத்துவமும் சுமேரியர்களிடம் இருந்து கடன்வாங்கியது தான். பண்டைய சுமேரியாவில், மூன்று கடவுட் கோட்பாடு முக்கியமானது. இந்து மத தத்துவத்தில் கூறப்படுவதைப் போல, இந்த மூன்று கடவுளரும் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்கின்றனர். மீண்டும் இன்னொரு தமிழ்ச் சொல், சுமேரியாவில் முக்கிய இடம் பிடித்திருந்தது. "அணுவில் இருந்து அனைத்தும் தோன்றியது" அந்த அணு யார்? சுமேரியரின் படைத்தல் தெய்வம்! அண்டவெளி, ஆகாயம் அனைத்துக்கும் கடவுளான அணு தான் உயிர்களை படைப்பதாக சுமேரியர்கள் நம்பினார்கள். அதாவது, இந்து மதத்தில் பிரம்மாவின் தொழிலைச் செய்பவர். அடுத்ததாக, எயா அல்லது என்கி என்ற காக்கும் கடவுள். இந்து மதத்தில் விஷ்ணு போன்றவர். விஷ்ணுவின் முதலாவது அவதாரம் மச்சாவதாரம் என்று விஷ்ணுபுராணம் கூறுகின்றது. அதே போன்று, எயா ஆதி காலத்தில் கடலில் மீனாக அவதரித்ததாக சுமேரியரின் புராணக் கதை ஒன்றுண்டு. மூன்றாவதாக, அழித்தல் தொழிலைச் செய்யும் என்லில். இவர் சிவனோடு, அல்லது உருத்திரனோடு ஒப்பிடத் தக்கவர்.

இந்து மதத்தில், பிற ஆண் தெய்வங்கள் எல்லாம், ஒன்றில் விஷ்ணுவின், அல்லது சிவனின் அவதாரங்களாக கருதப்படுகின்றன. சுமேரிய மதத்திலும், எயா, என்லில் ஆகிய கடவுளரின் மனித வடிவிலான அவதாரங்கள் பற்றிய பல்வேறு கதைகள் உலாவின. தமூஸ் என்ற தெய்வத்தின் கதை, சுமேரியர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. வேறெந்த தெய்வத்திற்கும் அந்தளவு மகிமை கிட்டவில்லை. சுமேரிய மொழியில் தமுசி, பாபிலோனிய மொழியில் தமுஸ், கிரேக்க மொழியில் அடோனிஸ். தமிழ் மொழியில் சிவன்? எந்த நாட்டில் எந்தப் பெயரில் அழைக்கப் பட்டாலும், அந்தப் புராணக் கதை மக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தது. ஒரு காலத்தில், கிரேக்கம் முதல் ஈரான் வரையில் வாழ்ந்த மக்களால் வழிபடப் பட்டு வந்த தெய்வத்தின் கதை, அத்தனை இலகுவாக மறக்கப் பட்டிருக்காது. அது இன்றைக்கும் ஏதாவது ஒரு வடிவத்தில் நிலைத்து நிற்கலாம். அதிசயப் படத் தக்கவாறு, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைக் கதைக்கும், தமுஸ் தெய்வத்தின் புராணக் கதைக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இயேசு பிறந்த பாலஸ்தீனம் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. பாபிலோனியாவில் நடந்ததை எல்லாம் விவிலிய நூலில் விலாவாரியாக எழுதத் தெரிந்த ஆண்டவருக்கு, மிகவும் பிரபலமான தமுஸ் தெய்வத்தின் கதை தெரியாதது ஆச்சரியத்திற்குரியது.

(தொடரும்)

http://kalaiy.blogspot.co.uk/2012/10/blog-post.html

  • கருத்துக்கள உறவுகள்

அட பாவியளே எத்தனைபேர் இப்பிடிக் கிளம்பியிருக்கிறீர்கள் என்று தெரியவில்லையே. தவிர்க்க முடியாத காரணத்தால் எழுதுவதைக் கொஞ்சம் தள்ளிப் போட்டால், விட்டால் என்னுடைய தொடரைச் சாத்திரியே எழுதி முடிச்சிடுவார் போல கிடக்கு.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

சாத்திரியார் தான் எழுத முயற்சிக்கவில்லை. ஒருவரை மேற்கோள் காட்டுவது போல பதிவிட்டிருக்கிறார்.

அந்த எழுத்தாளர் பலவற்றை மற்றவர்களிடம் இருந்து கொண்டு வருவதிலும் பார்க்க தனது அனுமானகளை அங்கும் இங்கும் ஒரு ஒழுங்கில்லாமல் போட்டிருக்கிறார். நான் படித்த மேலை நாட்டு புத்தகங்கள் செய்வது போல் ஒரு தலைப்பை தொட்டால் அதை முடிக்கும் இயல்பை தக்க வைக்கவில்லை. மேலும் அவர்கள் எதை எதை எங்கிருந்து பெறுகிறார்கள் என்று மேற்கோள்காட்டிகொண்டே தொடர்வார்கள். இதனால் பலவற்றை தொட்டு மட்டும் இருகேயன்றி அவற்யை நிறுவி முடிக்கவில்லை.

"ஊர்! ஊர் என்பது பின்னாளில் உருக், எரேக் என்று மருவி, அதுவே இன்று ஈராக்"

முன்னர், வடமொழி "புற" தமிழில் "புரம்" ஆனதென்பர்.

ஆனால் ஊர் தனியாக நில்லாத போது என்ன நடக்கின்றதென்பதை நாம் இலகுவில் பார்க்கலாம்.

நல்ல + ஊர் = நல்லூர் (இதில் ஊரின் இணைவு தெளிவாக இருக்கு)

ஆனால் பெரும்பாலும் இது பூராக மாற்றபட்டுவிட்டுகிறது. மைலாப்பூர், சிங்கபூர் என்னும் போது இது தெரிகிறது.

சிங்களவர்களுடன் பழகிய எங்களுக்கு தெரியும் இது சிங்கப்பூற மைலாப்பூற என்று மாறுவது எவ்வளவு எளிது என்று.

இதிலிருந்து நாம் ஊர், பூர், புற வாகி திரும்ப தமிழுக்கு புரமாகி வந்திருப்பதை காணலாம்.

ஆனால் ஈராக் ஒரு காலத்தில் ஊர் என்று மட்டும்அழைக்கபட்டதென்றும் இன்று மருவி ஈராக் என்று அழைக்கப்படுகின்றதென்பதும் நிறுபட்ட மேற்கோள் ஆக தென்படவில்லை.

தமிழ் சொல்லானா "அம்மா" மட்டும் எப்படி உலகனெங்கும் பரந்தது என்பதை நிறுவுவது கஸ்டம். ஆனால் அம்மா, ஆச்சி, அப்பா இவை வடமொழிக்கு தமிழிலிருந்துதான் சென்றன என்பது விளங்கி கொள்ள முடியும்.

அம்மாதான் "அ" விடுபட்டு "மாதா" வாகி "மாதுறு" வாகி "மதர்" என்று வந்திருக்கு

அப்பாதான் "அ" விடுபட்டு "பிதா" வாகி "பிதுறு" வாகி "ஃப்தர்" வந்தது

சுமேரியர் அக்கா, இப்பொழுது தான் பார்த்தேன். உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுகள்.

யார் பார்க்கிறார்களோ இல்லையோ வரலாறு என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். ஆர்வமுள்ளோர் நிச்சயம் வாசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
sumerian_building.jpg
  • கருத்துக்கள உறவுகள்

அட பாவியளே எத்தனைபேர் இப்பிடிக் கிளம்பியிருக்கிறீர்கள் என்று தெரியவில்லையே. தவிர்க்க முடியாத காரணத்தால் எழுதுவதைக் கொஞ்சம் தள்ளிப் போட்டால், விட்டால் என்னுடைய தொடரைச் சாத்திரியே எழுதி முடிச்சிடுவார் போல கிடக்கு.

இது இன்னொருவர் எழுதியது உங்களிற்கு உதவலாம் என நினைத்து இங்கு இணைத்தேன். கீழே அவரது வலைப் பக்க இணைப்பு உள்ளது

என்து பிரச்சனை இது: எப்படி தமிழ் சொற்கள் உலகின் எல்லா மொழிகளிலும் காணப்படுகிறது? அந்த மொழிகள் இந்தியாவுக்கு மேற்காக இருக்கலாம், கிழக்காக இருக்கலாம். ஆனால் எல்லாப்பசையிலும் பல தமிழ் சொற்கள் காண்ப்படுகின்றன. இந்த உறவு கிரேககத்திற்கு "அரிசி" போக முன் போய்ச்சேர்ந்தவையாக இருக்கு.

ஒரு காலத்தில் வடமொழியிலும், தமிழ் மொழியிலும் இருந்த சொற்களை பார்த்துவிட்டு தமிழ், வடமொழியில் இருந்து தோன்றிய மொழி என்றார்கள். இன்று நமக்கு தெரியும் அப்படி ஒரு கேவலக்கெட்ட பகிடி சேட்டை கதை சரித்திரத்தில் ஒரு இடத்திலும் ஒரு நாளும் எழுதப்படவில்லை என்பது.

நாங்கள் அவசரப்பட்டு சில ஒற்றுமைகளை வைத்து சுமேரியர் பேசியது ஆச்சியக் தமிழ் என்று சொன்னால் ஒரு நாளைக்கு நாமும் ஐரோப்பியர் விட்ட அதே பிழையை விட்டவராவோம்.

பல யப்பானியரும் பல கொரியரும் கொரொரியன் குடும்பசை தமிழிலில் இருந்து வந்ததென்று நிறுவ பலதடவைகள் முயற்சி செய்த்துவிடார்கள். அது மட்டுமல்ல யப்பனியர் மாட்டுப்பொங்களை அதே பெயருடன், அதே முறைகளுடன் பொங்குவதையும் கூட உதாரணம் காட்டுகிறார்கள். . அதில் அவர்கள் வேற்றி கானும் அன்று நான் சப்பட்டைகள் திராவிடர் என நிறுவி விடுவேன்.

1:சப்பட்டைகளின் பௌத்தம் பெரும்பாலும் தமிழ் நாட்டு பௌத்தம்.

2. சப்பட்டைகள் "அம்மா, அப்பா" கூப்பிடுவார்கள். நாங்களும் அப்படியே.

3.சப்படைகள் ஹரப்பா குறியீடுகளை முன்னேற்றி இன்றைய எழுத்து வடிவத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள் போலிருக்கு.

4.தமிழ் நாட்டில் மட்டும் ஒரு காலத்தில் இருந்த பாதுகாப்புகலைகள் சப்பட்டைகளுக்கு மட்டும்தான் தெரியும்.

5.தமிழ் நாட்டில் மட்டும் இருந்த அக்குபங்க்சர் சப்பட்டைகளுக்கு மட்டும் தான் தெரியும்.

6.சப்பட்டைகளின் பல ஊர்களில் இந்து கோவில்கள் காணப்படுகிறது

7. எல்லாவற்றுக்கும் மேலாக ஹரப்பாவில் காணப்படும் பிராமணர்களின் கண்கள் சரியாக சப்பட்டைகளின் கண்கள் மாதிரியே இருக்கு.

Priest-king.jpg

iஇதனால் சப்பட்டைகள் திராவிடர் என்றொ அல்லது திராவிட பிராமணர் என்று முடிவு கட்டுவது சரியாகாது.

இதுவரையில் "எலமோ" மொழி இலக்கணம் எவ்வளவுக்கு தமிழை ஒத்திருக்கு என்று ஒருவரும் சரியாக கூறவில்லை. அதுதான் ஒரு இனம் இருந்ததையும், அந்த இனத்தின் மொழி மாற்றமடைந்ததையும் சுட்டிக்காடும். ஆனால், சொற்கள் வர்த்தக காலாச்சார உறவுகளால் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இலகுவாக போய்விடும். (கொரிய, சீன பாசைகளுக்கும் தமிழுக்கும் உள்ள உறவு கலாச்சார வர்த்தக உறவு மட்டுமே). இது இன உறவை வெளிப்படுத்தாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.