Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமேரியரின் வழித்தோன்றல்களா தமிழர் ?????? - கருத்துக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரன், புத்தம் முற்றாக, வட இந்தியாவிலும், சீனாவில் அழியும் நிலைக்கு, வந்த பின்பு, இலங்கையில் மட்டுமே, புத்த சமைய நூல்கள், மிஞ்சியிருந்தன! நாலந்தா, பல்கலைக்கழகம், ஜெங்கிஸ் கானின், படையெடுப்பால், அழிந்து போக, மிகுதி ஆரியர்களால், எரியூட்டப் பட்டது. ஆயினும், தாயின் வேண்டுகோளை, மதித்து, ஜெங்கிஸ் கான் புத்த பிக்குகளிக் கொல்லவில்லை. அப்போது தான்,திரிபிடகம் போன்ற புத்த சமைய நூல்கள், சீனாவுக்கு இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப் பட்டன.சோழர்களினது, படையெடுப்புக்களின் போது,ஜூடோ போன்ற தற்பாதுகாப்புக் கலைகள், இலங்கைக்குக் கொண்டு வரப் பட்ருக்கலாம். புத்த பிக்குகள், ஆயுதங்களின்றிக் காடுகளினூடாகப் பயணம் செய்வதால், இவர்கள் தற்காப்புக் கலைகள் பயின்றிருக்க வேண்டியது, அந்தக் காலத்தில் அவசியமாகி இருந்தது. கல்கியும், பொன்னியின் செல்வனில், இதைத் தொட்டுச் செல்கிறார்.'இயன் பதூதா' என்ற யாத்திரிகர் இவற்றைக் குறிப்பிடுகின்றார்.

பெயரை, ஒரு முறை, சரிபாருங்கள். நான் எனது, நினைவில் இருந்தே இரை மீட்கிறேன்!

  • Replies 130
  • Views 20.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆர்வத்துக்கு பாராட்டுக்கள் மல்லையூரான் பொறுத்திருந்து பாருங்கள் .

[size=4]வாசிப்பதுக்கு ஆர்வத்தை தூண்டும் தொடர். எழுதுங்கள் ஆர்வமாக உள்ளேன்.[/size]

http://en.wikipedia.org/wiki/Kumari_Kandam

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக போகின்றது, தொடருங்கள்

இறுதியாகப் பன்னீராயிரம் வருடங்களுக்கு முன்னர்தான் பனிக்காலம் முடிவடைந்ததாக விஞ்ஞானிகள் அறுதியிட்டுக் கூறுகின்றனர்.

இது சரியாக படுகிறது.

இறுதிப் பனி உருக்கு காலத்தின் பின் தோன்றிய மாந்த இனம் கோமோ சப்பியன்ஸ் என அழைக்கப்பட்டது.

இன்றைய மனித குலம் குறந்தது 50,000 ஆண்டுகள் சரித்திரம் உடையது என்றுதானே எல்லொரும் சொல்கிறார்கள். மேலும் (பனி பாதைகள் உருக முன்னர்) அமெரிக்க போக 12,000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் ரூசியாவின் வடகிழக்கு பகுதியில் வாழத்தொடங்கியியும் இருந்திருப்பார்கள். ஆபிரிக்காவில் இருந்து அந்த பனித்தொங்கள் போக 10,000 வருடம் தேவை பட்டிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லும்போது எதையும் சொல்லலாம்.எழுதும் போதும் எதையும் எழுதலாம்.அதில் உண்மையும் இருக்கும். கற்பனையும் கலந்திருக்கும். வரலாற்று நூல்களை எழுதும் பலர் கற்பனை கலந்து,உண்மையும் கொஞ்சம் கலந்து எழுதுவது வழக்கம்.வரலாறு ,புவியியல் தொடர்பான விடயங்களை எழுதவும் முடியாது,தாம் எழுதியவை சரியென வாதிட்டு நிரூபிக்கவும் முடியாது.அதுபோல் விஞ்ஞானிகளும் தொல்லியலாளரும் சொல்வதையும் உண்மை என்றோ பொய் என்றோ நாமும் நிறுவ முடியாது.ஆனால் கணக்கு என்பது கூட்டினாலும் கழித்தாலும் பெருக்கினாலும் பிரித்தாலும் விடை சரியாகவே வரும்.விடை கானா வினாக்களுடன் முட்டிமோதுவதைவிட விடைகாணக்கூடிய பயன்தரக்கூடிய விடயங்களை வேட்கையுடன் தேடினால் விடை கிடைத்துவிடும்.ஐம் பூதங்களுமே தம்முள் எத்தனையோ விடைகாண முடியா விடயங்களை தம்முள் அடக்கியிருக்கின்றன. கேம்பிரிச், பென்சில்வேனியா போன்ற பல்கலைக்கழகங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பல ஆய்வுகளைச் செய்து வருகின்றன.அவர்களின் ஒருமித்த, மறுக்கப்படாத கணக்காக இந்தப் பன்னீராயிரம் வருடங்களும் அடங்குகின்றன. எம் கண்முன்னே ஐம்பது ஆண்டுகளில் எவ்வளவோ மாற்றங்கள், முன்னேற்றங்கள் உலகில் ஏற்பட்டுள்ளன.ஐம்பதாயிரம் வருடங்கள் மனிதன் வாழ்ந்திருந்தால் இன்னும் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நன்றாகவும் ,வாசிப்பதற்கு ஆர்வமாகவும் இருக்கின்றது...............மனித வரலாற்றையும்,எம் வரலாற்றையும் அறிய ஆவலாய் உள்ளேன்

இடைவெளியை குறைத்து தொடருங்கள்

ஒரு வரலாறை அல்லது மற்றயவர்கள் தொடுவதற்கு பஞ்சிப்படும் பதிவுகளை தொடமுயலும் பொழுது ஒருவித மனச்சோர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாததே . எனக்கும் இது பல பதிவுகளில் நடந்துள்ளது . ஆனால் எடுத்த காலை பின்வைக்காது மனத்திடம் இருந்தால் இத்தகைய பதிவுகள் இலகுவானதே . ஏனெனில் பொங்கதமிழ் பகுதி , தமிழும் நயமும் பகுதி ஒருகாலத்தில் வெறிச்சோடிப் போயிருந்ததைக் கண்டிருக்கின்றேன் . அவற்றிற்கு உயிர் கொடுத்த ஒரு சிலரில் நீங்களும் அடங்குவதையிட்டு மிகவும் மகிழ்சி அடைகின்றேன் . கருத்துக்களை கணக்கில் எடுத்தாலும் , ஒருபதிவு வெளிவாரிப் பார்வையாளர்களைச் சென்றடைவது மிகவும் முக்கியம் என்பதை நினைவில் வைத்து இந்த வரலாற்று தொடரை முன்னெடுங்கள் :) :) :) .

Edited by கோமகன்

உங்க வரலாற்று தொடர் படிச்சேங்க . ஏனோ தெரியல இந்திய வரலாற்று துறை திராவிடர்களோட வரலாற்று ஆய்வுங்களுக்கு முக்கியத்துவம் குடுக்கமாட்டேங்கிறாங்க . எனக்கு என்ன வருத்தம்னா தமிழ் அறிஞரகள் எல்லாருமே ஒண்ணு சேர்ந்து புது ஆய்வுங்களை செய்து விக்கிபீடியா யாழ் இணையம்ன்னு ஆவணப்படுத்த மாட்டேங்கிறாங்க . முதல்ல அதை செய்யணுங்க . உங்க தொடர் அத நோக்கி பயணிக்கணும்னு லைக் பண்றேங்க . எனக்கு நேரம் கிடைக்கிறப்போ எனக்கு தெரிஞ்சதை உங்ககூட எழுதிறேங்க :) :) . ஓக்கேயா .

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நன்றி சொப்னா உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்.[/size][size=2]எனக்கு எழுத ஆர்வமூட்டும் உடையார், தமிழ்ச்சூரியன், கோமகன் ஆகியோருக்கு நன்றி. எந்த இடைவெளியைக் குறைக்கச் சொல்கிறீர்கள் தமிழ். நேரத்தையா அல்லது பந்தியையா?[/size][size=2][size=2]தொடர்ந்து[/size] உங்கள் விமர்சனங்களை எழுதுங்கள். நீங்கள் சொல்ல்வதுபோல் மனச்சோர்வு ஏற்ப்படுவதை தடுக்கத்தான் முடியவில்லை.[/size]

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆர்வம் ஊட்டுறன்.. :unsure:

http://www.yarl.com/...57

190283_368753333212106_1597655537_n.jpg

இது ரமணன் இன்னொரு திரியில் போட்டிருக்கும் பதிவு.

நாம் தமிழ் சொற்கள் இன்னொரு பாசையில் இருப்பதை வைத்து அந்த பாசை தமிழில் இருந்து தோன்றியது என்று சொல்ல விழைகிறோம்.

இதனால் ஏன் தமிழ் சொற்கள் தமிழகத்திற்கு வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு திசைகளில் உள்ள மொழிகள் எல்லாவற்றிலும் காணப்படுகின்றதென்ற வினோதத்தில் நாம் கவனம் செலுத்த மறந்து விடுகிறோம்.

தமிழர் பல நாடுகளை ஆண்டார்களா?, ஆரியர் மாதிரி நாடோடிகளாகவும் வாழ்ந்தார்கள்? இல்லை அசோகன் மாதிரி மத அறிஞ்ஞர்களை நாடுகளுக்கு அனுப்பும் பழக்கம் தமிழர்களிடம் தொன்றுதொட்டு இருந்து வந்ததா?................................

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுத்து எழுத முடியாது.மொழி பற்றிய விரிவானது பின்னர் வரும் .உங்களுக்குக் கிடைக்கும் தகவல்களைப் போடுங்கள் மல்லை.

அன்புடையீர் !!!! படங்கள் போடும்பொழுது அது எங்கிருந்து பெறப்பட்டது என்ற இணைப்பையும் வழங்கினால் வருங்காலத்தில் புகைப்படக் காப்புரிமை என்ற சட்டச்சிகலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும் . அம்புட்டுதேன் :lol: :lol: :D :D :icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

அதுவேறு இருக்கா எனக்குத் தெரியாதே.

சுமே!!!!!!!!!!! படங்கள் எல்லாமே ஆவணப்படுத்தவேண்டியதொன்று . நிர்வாகம் இதை கவனத்தில் எடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்கின்றேன் . ஆனாலும் ஒரு சின்னக் குறை :o , உள்ளுடன் குறைந்து படங்கள் கூடவாக இருக்கின்றது :lol: :lol: . கலவை சரிசமனாக இருந்தால்த் தான் ஏத்தும் :lol::D ( வரலாற்றுத்தொடர்) :icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

Jun

18

நாக ராணி: சிந்துவெளி முதல் சபரிமலை வரை

snake_goddess.jpg

மினோவன் தெய்வம் கி.மு.1600

சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரையில் ஒரு கடவுளுக்கு இரு புறமும் இரண்டு நாகங்கள் படம் எடுத்த நிலையில் இருக்கின்றன. வேதங்களில் நாக ராணியைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இப்போது நடை பெறும் வேத ஆராய்ச்சிகள் பல புதிய உண்மைகளைத் தெரிவிக்கின்றன.

உலகத்தில் பாம்புகளைப் போற்றாத பழைய நாகரீகங்களே இல்லை. வேத காலம், சிந்து சமவெளி, கிரேக்க, எகிப்திய, சுமேரிய ,பாபிலோனிய, மாயா பண்பாடுகள் அனைத்திலும் நாக உருவில் தெய்வங்கள் உண்டு. ஆயினும் இந்துக்களுக்கு இதில் மிகவும் சிறப்பான இடம் இருக்கிறது. வேத காலத்தில் போற்றப்பட்ட நாகங்களுக்கு இன்றுவரை கோவில்கள் இருப்பதைப் பார்க்கிறோம். உலகில் வேறு எங்கும் காணாத புதுமை என்னவென்றால் உயிருள்ள பாம்புகளுக்கே நாக பஞ்சமி அன்று பூஜையும் செய்கிறோம். எல்லா இந்து தெய்வங்களும் பாம்புடன் சம்பந்தப்பட்டவை.

ஆர்தர் ஈவான்ஸ் என்ற தொல்பொருள் துறை நிபுணர் கிரீட் தீவில் நாசோஸ் என்னும் நகரில் பெரிய மினோவன் நாகரீக அரண்மனையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்தார். அதில் ஒரு பெண் இரு கைகளிலும் பாம்புடன் நிற்கிறார். அவர் தெய்வமா பூசாரினியா என்று தெரியவில்லை. அந்தச் சிலை மேலை உலகில் மிகவும் பிரசித்தி பெற்றுவிட்டது.

மானசா தேவி, நாகராஜன், நாக யக்ஷி முதலிய பல வடிவங்களில் சபரிமலை முதல் சிந்து சமவெளி வரை கோவில்கள் அல்லது பாம்பு ராணி சிலைகள் இருக்கின்றன. அன்று போல் இன்றும் நாகங்களைத் தெய்வமாக வழிபடும் தொடர்ச்சியையும் காண்கிறோம்.

harappan+snake+seal+big.jpg

சிந்து சமவெளி நாகராஜன்

அயர்லாந்தில் ஹெகடெ (சக்தி என்ற சொல்லின் மருவு) என்ற நாகராணியை வணங்கினர். சுமேரியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன் கபஜா என்னும் இடத்தில் இரண்டு கைகளில் இரண்டு பாம்புகள் உடைய தெய்வத்தைக் காணலாம். இதே தெய்வம் நாக யட்சி என்ற பெயரில் கர்நாடகம் கேரளம் முழுதும் உள்ளன. ஒரிசா, வங்காளம் ஆகியவற்றில் மானசா தேவி இதே உருவத்தில் வழிபடப்படுகிறாள்.

அதிசயச் செய்தி: சுமேரியாவில் தமிழ்?

ரிகவேதத்தில் 27 பெண் கவிஞர்களின் பெயர்களைக் காணலாம். அவர்களில் ஒருவர் பெயர் சர்ப்பராக்ஞி (பாம்பு ராணி). சர்ப்பராக்ஞீ என்ற தெய்வமும் பலவித தைத்ரீயம் முதலிய பிராமண நூல்களில் வருகிறது. தைமத என்ற பாம்புத் தெய்வத்தின் பெயரும் இருக்கிறது. இதை டியாமத் என்ற பாம்புத் தெய்வமாக பாபிலோனியர்கள் வணங்கினர். ஆக வேத கால தெய்வங்கள் 5000 ஆண்டு பழமை உடையவை என்பது நிரூபணம ஆகிவிட்டது.

south+india.jpg

படம்: நாக ராணி

அதர்வண வேதத்தில் வரும் அலிகி, விலிகி என்ற சொற்களுக்கு பொருள் விளங்காமல் இருந்தது. வேதங்களைப் பற்றி ஆராய்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் வேதங்கள் 6000 ஆண்டுப் பழமை உடையவை என்று நிரூபிக்கும் புத்தகத்தில் அலிகி, விலிகி ஆகியன சம்ஸ்கிருதம் அல்ல, அவை அக்கடியன் மொழிச் சொற்கள் என்று எழுதி இருந்தார். இதை இப்போது ஆராய்ந்த டாக்டர் பகவத்சரண் உபாத்யாயா, டாக்டர் நாவல் வியோகி முதலானோர் இந்தச் சொற்கள் கி.மு 3000இல் ஆட்சி செய்த ஆலால, வேலால (தமிழ் பெயர்களாகவும் இருக்கலாம்) என்ற இரண்டு அசீரிய மன்னர்கள் என்று கண்டுபிடித்தனர். இவைகள் உண்மை என்றால் அதர்வண வேதத்தின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன் என்றாகிவிடும். மொழி இயல் ரீதியில் இதற்கு மிகவும் முற்பட்டது ரிக் வேதம். உலகின் மிகப் பழைய மத நூல். ஆகவே அது 6000, 7000 ஆண்டுகளுக்கு முந்தியது என்று திலகர் எழுதியது சரி என்றாகிறது.

வேதத்தில் குறிப்பிடப்படும் சரஸ்வதி நதி மறைந்து 5000 ஆண்டுகள் ஆகியதை பாபா அணுசக்தி ஆய்வு மையமும் அமெரிக்க விண்வெளி நாஸா- வும் உறுதி செய்ததாலும் வேத காலத்தின் பழமை உறுதியாகிறது.

(இந்தக் கட்டுரை ஆங்கிலத்திலும் Serpent Queen: Indus Valley to Sabarimalai எழுதியுள்ளேன், பெயர்களின் சரியான ஸ்பெல்லிங் முதலியன தேவைப்பட்டால் ஆங்கிலக் கட்டுரையை வாசித்து கூகிள் செய்தால் மேலும் ஆழமான தகல்களைப் பெறலாம்).

சுமேரியாவின் வரலாற்றை எழுதிய பெரோருஸ் என்ற கிரேக்க ஆசிரியர் ஆதிகால மன்னர்களின் பெயர்களை அளிக்கிறார். ஊர்த்வரேதஸ் (ஒட்டரடெஸ்) மற்றும் துமுசி என்ற பெயரில் இரண்டு மன்னர்கள் சுமேரியாவை ஆண்டனர். ஒரு துமுசி இடையர், மற்றொரு துமுசி மீனவர். ராமன், கண்ணன் ஆகிய மன்னர்களை நாம் எப்படி தெய்வம் ஆக்கினோமோ அப்படி இவர்களை அவர்கள் தெய்வ நிலைக்கு உயர்த்திவிட்டார்கள். இவர்கள் தமிழர்களாக இருக்கலாம். ஏனெனில் துமுசி என்பதை தமிழி என்று வாசிக்கும்படி ஆங்கிலத்தில் எழுதபட்டிருக்கிறது. அதைப் பிற்காலத்தில் டம்முஸ் என்றும் சம்மட என்றும் பல வகையாக எழுதினர். டம்முஸ் என்பதும் தமிழன் என்பதை ஒட்டி வருகிறது.

இது தவிர சுமேரிய மொழிக்கு சிறிதும் தொடர்பில்லாத சுமுகன் என்ற தெய்வப் பெயரும் இருக்கிறது. இது விநாயகப் பெருமானைக் குறிக்கும் தூய சம்ஸ்கிருதச் சொல். பெரோரஸ் என்ற ஆசிரியரின் பெயரையும் வர ருசி என்றும் படிக்கலாம். அவர் சில மன்னர்களின் தலைநகரம் பத்தர்குரு என்று எழுதிவைத்தார். இந்த பத்தர்குரு புராணங்களில் மிகவும் போற்றப்படும் உத்தரகுரு ஆகவும் இருக்கக் கூடும்.

5000 ஆண்டுகளுக்கு முன் இப்படி சுமேரியாவில் தமிழும் சம்ஸ்கிருதமும் இருப்பதை நோக்கும் போது இரண்டு மொழிகளும் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்ற பழைய கோட்பாடும் உயிர் பெறுகிறது. இத்துடன் இணைத்திருக்கும் படங்களைக் காண்போருக்கு, உண்மைகள் சொல்லாமலே விளங்கும்.

கீழ்கண்ட எனது கட்டுரைகளையும் படித்தால் முழு சித்திரம் கிடைக்கும்:

1. Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu

2. The Sugarcane Mystery: Ikshwaku Dynasty and Indus Valley

3. Mysterious link between Karnataka and Indus Valley

4. Vishnu in Indus valley seal

5. Indra on Airavata in Indus valley)

*******************

http://swamiindology...og-post_18.html

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]எனக்குப் படங்கள் தேடி எடுக்கவே நேரம் போய் விட்டது. கன படங்களை யாழில் பதிவுபண்ண முடியவில்லை.எனக்குக் கணினி பற்றி அதிகம் தெரியாததே காரணம்.அதனால்த்தான் உள்ளுடன் குறைந்துவிட்டது.அந்தத் தவறை இனிமேல் விடாமல்ப் பார்கிறேன். நன்றி கோமகன்.நுணாவிலான் சமஸ்கிருதம் தமிழிலிருந்து தோன்றிய ஒரு மொழியே அன்றி தமிழுடன் சரிநிகர் நிற்க அம்மொழிக்கு எத்தகுதியும் இல்லை. தமிழை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்ட ஆரியரின் வெள்ளைத் தோலிலும் மாய்மாலத்திலும் மயங்கிய மூடத் தமிழரால் தமிழ் இன்று இந்த இழிநிலைக்கே வந்தது. மொழிபற்றி விரிவாக எழுதுவேன் வாசியுங்கள்.உங்கள்மேல் எந்தக் கோபமும் இல்லை நுணாவிலான்.[/size]

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

ch2_earlyag.jpg

அருமை சுமே . உங்கள் தொடர் மூலம் பல சங்கதிகளை அறியக்கூடியதாக இருக்கின்றது . அம்மி குளவி விடையம் எல்லாம் தொட்டு நன்றாக தொடரைக்கொண்டு போகின்றீர்கள் . ஆர்வத்துடன் உங்கள் தொடரைத் தொடருகின்றேன் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் கன நாளின் பின் வாசிக்கிறியள் எண்டு தெரிய சந்தோசமாகவும் உற்சாகமாகவும் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5] மெசொபொத்தேமியா சுமேரியர் அக்கா, மகிவும் பயனுள்ள விடயத்தை பகிர்கிறீர்கள். உங்கள் சேவைகள் தொடர வேண்டும். வாழ்த்துக்கள் அக்கா.[/size]

Edited by shanthy

sumer73.jpg

அட கொம்பியூட்டரும் பாவிச்சிருக்கிறாங்களோ சுமேரியர் சுமே :o :o :o ?? சும்மா பகிடி விடாதையுங்கோ :lol::D :D .

identity-before-islam-egypt-13.jpg

இது சுமேரியருக்கு பின்னால் வந்த எகிப்திய நாகரீகமாகவும் இருக்கலாம்.

Uruk%20recumbent%20animal.jpg

இது கருங்கல்லால் ஆக்கபட்டிருக்கிறது. ஆக்கத்திலும் சில வித்தியாசங்கள் இருக்கிறது. இது செய்யும் முறை அல்லது இதுவே தமிழ் நாட்டிலிருந்தும் போய் இருக்காலாம். இது மாதிரியான கற்சிற்பங்கள் சிந்து வெளியிலும் இருக்கவில்லை

Edited by மல்லையூரான்

இதுதான் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்த குடி பற்றிய தேடல் என்பதோ...

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான் எல்லாளன்.நன்றி சாந்தி.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.