Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா கச்சேரி... கனடா தமிழ்ச் சங்கம் அறிக்கை!

Featured Replies

இளையராஜா ஒரு அறிக்கையும் விடவில்லை. அவர் சொன்னதாக சில ஊடகங்கள் எழுதியிருக்கிறன. அதுவும் காவல்துறை ஆணையாளரிடம் போராட்டக்காரர்களிடம் சொல்லும்படி சொன்னதாக செய்தி போடப்பட்டிருக்கிறது. மூன்றாவது தரப்பிடம் இருந்து செய்தி வந்திருக்கிறது.

ஆகவே செய்தியில் உள்ள வார்த்தைகளை ஆராய்வது சரியாக இருக்காது.

தற்போது கனடாவில் நடக்கின்ற நிகழ்விற்கும் மாவீரர் நாளிற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. உணர்வுக்கும் சம்பந்தம் இல்லை. தங்களிடம் அனுமதி பெறாமலும் பங்கும் தராமலும் சில இளைஞர்கள் புதிய முயற்சிகளோடு புறப்பட்டிருப்பதுதான் சிலருக்கு உறுத்தலாக இருக்கிறது.

அனைத்து ஏற்பாடும் முடிந்த பிற்பாடு ஒரு பிறந்த நாள் விழாவை தள்ளிப் போடுவது என்றாலே அது எவ்வளவு கடினமான காரியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

சிலர் தங்களின் அதிகாரத்தை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு பெரிய நிகழ்வை தள்ளிப் போட முடியாது.

  • Replies 248
  • Views 20k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா ஒரு அறிக்கையும் விடவில்லை. அவர் சொன்னதாக சில ஊடகங்கள் எழுதியிருக்கிறன. அதுவும் காவல்துறை ஆணையாளரிடம் போராட்டக்காரர்களிடம் சொல்லும்படி சொன்னதாக செய்தி போடப்பட்டிருக்கிறது. மூன்றாவது தரப்பிடம் இருந்து செய்தி வந்திருக்கிறது.

ஆகவே செய்தியில் உள்ள வார்த்தைகளை ஆராய்வது சரியாக இருக்காது.

தற்போது கனடாவில் நடக்கின்ற நிகழ்விற்கும் மாவீரர் நாளிற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. உணர்வுக்கும் சம்பந்தம் இல்லை. தங்களிடம் அனுமதி பெறாமலும் பங்கும் தராமலும் சில இளைஞர்கள் புதிய முயற்சிகளோடு புறப்பட்டிருப்பதுதான் சிலருக்கு உறுத்தலாக இருக்கிறது.

அனைத்து ஏற்பாடும் முடிந்த பிற்பாடு ஒரு பிறந்த நாள் விழாவை தள்ளிப் போடுவது என்றாலே அது எவ்வளவு கடினமான காரியம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியது இல்லை.

இந்தப் பதிலே போதும்.. உங்களின் நோக்கத்தைச் சொல்ல.

அடிப்படையில் இளையராஜா சொல்லாமல்.. ஊடகங்கள் அவர் சொன்னதாக அறிக்கை தர முடியாது. அதைக் கூட உங்கள் இஸ்டத்துக்கு மறுதலிக்கிறீர்கள். ஆனால் ஊடகச் செய்தி தெளிவாக உள்ளது. நக்கீரனில் மட்டுமல்ல பிற ஊடகங்களிலும் இதே வடிவில் அந்த அறிக்கை உள்ளது. இதில் இருந்து உங்கள் சுத்துமாத்து விளங்குது.

மேலும்.. இளைய சமூகத்தினர் மீது ஒரு பழியை தூக்கிப் போடுறீங்க. இன்றைய புலம்பெயர் மண்ணில் இளைய சமூகம் காட்டும் தாயகம் பற்றிய அக்கறையிலின்றும் அவர்களை திசைதிருப்ப.. இந்த நிகழ்வுக்கும் இளைய சமூகத்திற்கும் கெட்டித்தனமாக முடிச்சுப் போடுகிறீர்கள். இதைத்தான் சிங்களப் படைகள் தாயகத்தில் செய்கின்றன. அதே பணியை தான் தாங்கள் சிரமேற்கொண்டு செய்கிறீர்கள்.

தாயகத்தில் மாவீரர் தினமே அனுஷ்டிக்க அவசியமில்லை என்று சொன்ன தமிழ்தேசியக் கூட்டமைப்பினரும் உளர். அதனால் மக்களுக்குப் பிரச்சனை என்றவர்கள் உளர். அதே வழியில் புலம்பெயர் மக்களையும் கொண்டு வர நீங்கள் போடும் மறைமுக செயற்பாடுகளாகவே எனக்கு இது தெரிகிறது.

எதிரிகளைக் காட்டிலும் எமக்குள் ஒளிந்திருக்கும் பச்சோந்திகள் ஆபத்தானவை.

மீண்டும் கேட்கிறேன்.. இந்த நிகழ்வை தீய சக்திகள்.. தள்ளிப் போடச் சொல்வதால்.. அந்த தீய சக்திகள் அடையப் போகும் நன்மை என்ன. ஆதாரத்தோடு பட்டியலிடுங்கள். வேறு எதுவும் அவசியமில்லை..! கேட்டதற்கு நேரிடையாகப் பதில் சொல்லாமல்.. எதற்கு பரப்புரை பிரச்சாரம் போல.. உங்கள் சொந்த திணிப்பை எழுதுறீங்க..???! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

1) கொடுக்கல் வாங்கல்

2) பகை

3) இவர்கள் என்ன கொம்பர்களா

4) என்னைவிட இவர்களுக்கு என்ன தெரியும்

5) தலைவர் இல்லை என்று நான் சொன்னால் மறுக்க இவர்கள் யார்

6) பெரிய தடி (இளையராசா)ஒன்று கிடைத்துள்ளது . அதை வைத்தே இவர்களை விழுத்தணும்

7) என்னால் ஒரு மாதம் எல்லாம் விரதமிருக்க முடியாது

8) எல்லாம் முடிந்தது. இவர்களுக்கு விசர்

9) .............??

10)..............??

11)........??????????????????ஈ

திரு விசுகுஅண்ணா அவர்கள் பதிவிட்டிருக்கும் இவ்வளவு தகுதியும் எனக்கு இருப்பதால் நான் இந்த இசை நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளேன். :lol::rolleyes:

தீய சக்திகளின் நோக்கங்கள்

- மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குதல்

- பொதுவான தமிழ்நாட்டு மக்களிடம் ஈழத் தமிழர் பற்றிய கசப்புணர்வை ஏற்படுத்தல்

- தமிழ் நிறுவனங்களுக்கு நட்டத்தினை ஏற்படுத்தல்

- தமிழர்களால் நடத்தப்படுகின்ற நிறுவனங்கள் தமிழ் சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துவதை ஆரம்பத்திலேயே தடுத்தல்

- ஆயிரக் கணக்கான தமிழர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதல்

- பொருளாதாரரீதியில் புலம்பெயர் தமிழர்கள் தொடுக்க உள்ள போரை அழித்தல்

இப்படி நிறைய நோக்கங்கள் இந்த தீயசக்திகளிடம் உள்ளன. இதற்காகவே இந்தக் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக சில சுயநல தமிழ் சக்திகளும் இதற்கு துணை போகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

திரு விசுகுஅண்ணா அவர்கள் பதிவிட்டிருக்கும் இவ்வளவு தகுதியும் எனக்கு இருப்பதால் நான் இந்த இசை நிகழ்ச்சிக்கு செல்ல உள்ளேன். :lol::rolleyes:

இவ்வளவு தகுதியில் ஒன்றும் எனக்கில்லை.

நானும் கனடாவில் இருந்தால் போயிருப்பேன்.

ஆனால் இதை நிறுத்தமுடியுமா என்பவர்களது உணர்வை நான் மதிப்பேன். என்னால் முடியாது என்பதற்காக அவர்களை பரிகசிக்கமாட்டேன்.

தீய சக்திகளின் நோக்கங்கள்

- மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குதல்

- பொதுவான தமிழ்நாட்டு மக்களிடம் ஈழத் தமிழர் பற்றிய கசப்புணர்வை ஏற்படுத்தல்

- தமிழ் நிறுவனங்களுக்கு நட்டத்தினை ஏற்படுத்தல்

- தமிழர்களால் நடத்தப்படுகின்ற நிறுவனங்கள் தமிழ் சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துவதை ஆரம்பத்திலேயே தடுத்தல்

- ஆயிரக் கணக்கான தமிழர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதல்

- பொருளாதாரரீதியில் புலம்பெயர் தமிழர்கள் தொடுக்க உள்ள போரை அழித்தல்

இப்படி நிறைய நோக்கங்கள் இந்த தீயசக்திகளிடம் உள்ளன. இதற்காகவே இந்தக் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக சில சுயநல தமிழ் சக்திகளும் இதற்கு துணை போகின்றன.

தீய சக்திகள் தீய சக்திகள் ,ஆணவம் பிடித்தோர் ,அகங்காரம் பிடித்தோர் என்று அடிக்கடி எழுதுகிறீர்கள் ...யாரவர்கள் உதாரணத்துடன் இனக்காட்டப்படுவதே அழகு .............சப்பையாக நீங்கள் கூறினால் எதையோ ஒன்றை சாதிக்க நினைக்கிறீர்கள் .முதலில் அந்த தீய சக்திகளை ஆதாரத்துடன் இனம் காட்டுங்கள்

இந்த நிகழ்வை தீய சக்திகள்.. தள்ளிப் போடச் சொல்வதால்.. அந்த தீய சக்திகள் அடையப் போகும் நன்மை என்ன.

ஒரே ஒன்றுதான் என்று நான் நினைக்கிறேன்.இளையராஜாவை எமக்கு எதிராக திருப்புவது.

  • கருத்துக்கள உறவுகள்

1) கொடுக்கல் வாங்கல்

2) பகை

3) இவர்கள் என்ன கொம்பர்களா

4) என்னைவிட இவர்களுக்கு என்ன தெரியும்

5) தலைவர் இல்லை என்று நான் சொன்னால் மறுக்க இவர்கள் யார்

6) பெரிய தடி (இளையராசா)ஒன்று கிடைத்துள்ளது . அதை வைத்தே இவர்களை விழுத்தணும்

7) என்னால் ஒரு மாதம் எல்லாம் விரதமிருக்க முடியாது

8) எல்லாம் முடிந்தது. இவர்களுக்கு விசர்

9) .............??

10)..............??

11)........??????????????????ஈ

இங்கு இந்த நிகழ்வுக்கு போகும் மக்கள் மீது பாயப்போகும் உங்கள் எண்ண வக்கிரங்கள் இதுவாகத்தான் இருக்கும். அப்படி அப்பட்டமாக எத்தனை மக்களை கொச்சைப்படுத்தப்போகிறீர்கள்? :unsure:

இங்கு இந்த நிகழ்வுக்கு போகும் மக்கள் மீது பாயப்போகும் உங்கள் எண்ண வக்கிரங்கள் இதுவாகத்தான் இருக்கும். அப்படி அப்பட்டமாக எத்தனை மக்களை கொச்சைப்படுத்தப்போகிறீர்கள்? :unsure:

நான் நினைப்பதைதான் மற்றவனும் செய்யணும் எண்டு மற்றவர்கள் மீது மாடு மேய்க்க நினைப்பது.அதனால் கடுப்பாகி இன்னும் இன்னும் சனம் போகும்.இது விசுகருக்கு மட்டும் உரியதல்ல,இவரப் போல எண்ணம் கொண்ட புலம்பெயர் அரசியலில் இருப்பவர்கள் எல்லாரையும் குறித்ததுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சில விசயங்கள் பிரியல..

ஒன்று

கனடா உங்களுக்கு சொந்த நாடு கிடையாது... நீங்க எதிலிகளாக போய் செட்டிலாகி போய்விட்டீர்கள்.. ஓக்கே.. அங்கிட்டு தமிழ்நாட்டு தமிழன் யாரும் கிடையாதா..? அவருதான் சொல்லுகிறாரு யாராவது ஒருத்தன் வந்தா போதும் என்று..?

உங்களுக்கு என்ன சிக்கலு..?

சரி மாவீரர் மாதம் என்றால் இங்கிட்டு எல்லா தமிழ்நாட்டு தமிழனும் விளக்கேத்தெயா கும்பிட்டு இருக்கான்.. ந்வம்பர் மாதம் 13 தேதி.. தீபாவளி.. எவனும் கொண்டாடம இருக்கானா..?

டிஸ்கிக்கு டிஸ்கி:

ஒரு தமிழன் புரோகிராம் செய்கிறான் என்பதால் தான் இவ்வளவு டிஸ்கி சரி விடுவம் .. ஒரு அவனும் தமிழன் என்ற உணர்வு .. இதே ஜக்கிஜான் புரோகிராம் பண்ணினான் என்றால் தடை செய்ய போகிறீர்களா..??

கலந்துக்கிறவுங்க கலந்துக்குங்க .. இல்லை என்றால் வீட்டில் இருங்க... எதற்கு கலைஞ்சனை அவமானபடுத்திறீங்க..?

ஒரு வேளை யாருமே வரலண்ணா என்ன பிழை என்று அவரே தெரிஞ்சுக்குவாரு...

பிளீஸ் குளோஸ் திஸ் ரொப்புக்கு

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையைச் சொன்னால் இங்கு இசைநிகழ்ச்சியைப்புறக்கணிக்கும்படி வெளிவந்த தூரநோக்கற்ற இரண்டும்கெட்டான் அறிக்கைகளால்தான் இந்நிகழ்வு மிகப் பிரபலம் அடைந்து மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறது என்பதை ஏன் இங்கு எதிர்வாதம் வைப்பவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் இந்த நிகழ்வுகளுக்கு தொடர்பே இல்லாத வாதங்களை அதற்குள் புகுத்தி குழப்பிக் குழப்பி எழுதுவதால் இவர்கள் சாதிக்க நினைப்பதென்ன?

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்த நிகழ்வுக்கு போகும் மக்கள் மீது பாயப்போகும் உங்கள் எண்ண வக்கிரங்கள் இதுவாகத்தான் இருக்கும். அப்படி அப்பட்டமாக எத்தனை மக்களை கொச்சைப்படுத்தப்போகிறீர்கள்? :unsure:

இதற்குள் மக்களை இழுக்காதீர்கள்

நான் இங்கு கருத்து எழுதியவர்களுக்கு மட்டுமே எழுதினேன்

என்னைப்பொறுத்தவரைழூ

இங்கு கருத்து எழுதுபவர்களுளுக்கு அவர்களோடு ஏதாவது ஒரு வகையில் முரண்பாடு உள்ளது. அதை தீர்க்க நேரே அணுகாமல் இங்கு வந்து அழுகிறார்கள். அவ்வளவுதான்.

பிரான்சிலிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்தால் நேரே போய் சொல்லிவிட்டு வந்திருப்பேன். இதைத்தான் நான் மற்றவர்களிடமும் எதிர்பார்க்கின்றேன்

நீங்கள் யாருக்கு எழுதுகிறீர்கள் என்பதை விளக்கமாக எழுதியிருக்கவேண்டும் மொட்டையாக எழுதினால் அது எல்லோரையும் சென்றடையும்

[size=4]"சான்டி"யால் விற்பனையில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைப்பதைதான் மற்றவனும் செய்யணும் எண்டு மற்றவர்கள் மீது மாடு மேய்க்க நினைப்பது.அதனால் கடுப்பாகி இன்னும் இன்னும் சனம் போகும்.இது விசுகருக்கு மட்டும் உரியதல்ல,இவரப் போல எண்ணம் கொண்ட புலம்பெயர் அரசியலில் இருப்பவர்கள் எல்லாரையும் குறித்ததுதான்.

எந்த நேரத்திலும் இந்த அறிக்கையை நான் வரவேற்கவில்லை.

ஆனால் அதை வைத்தே தமது சுய லாபநட்டங்களை மறைமுகமாக செய்வதையும் வரவேற்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]"சான்டி"யால் விற்பனையில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். [/size]

சான்டியின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இசைஞானிக்கு மாவீரர்களின் ஆசீர்வாதம் இருந்தால் அவருடைய நிகழ்வு நன்றே நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சான்டியின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இசைஞானிக்கு மாவீரர்களின் ஆசீர்வாதம் இருந்தால் அவருடைய நிகழ்வு நன்றே நடக்கும்.

:o :o :o

நீங்கள் யாருக்கு எழுதுகிறீர்கள் என்பதை விளக்கமாக எழுதியிருக்கவேண்டும் மொட்டையாக எழுதினால் அது எல்லோரையும் சென்றடையும்

நான் சபேசனுக்கு எழுதிக்கொண்டிருந்தேன்

இடையில் புகுந்து அதை திசை திருப்பும்முன் நீங்கள் தான் அதை அறிந்திருக்கணும் :( :( :(

விழா நடக்கின்ற நாளில் காலநிலை சீராக இருக்கும் என்று அறிகிறேன்.

விழா நடக்கின்ற நாளில் காலநிலை சீராக இருக்கும் என்று அறிகிறேன்.

பன்முக ஆற்றல் படைத்தவர் .........அட காலநிலையை கூட கணிக்கிறார் ............பெய்க்காய்தான் ............. :D

விழா நடக்கின்ற நாளில் காலநிலை சீராக இருக்கும் என்று அறிகிறேன்.

நன்றி தகவலுக்கு.எனவே மக்கள் எந்தவித தயக்கமுமில்லாமல் டிக்கட் வாங்கி நிகழ்ச்சிக்கு செல்லலாம்.காலநிலைதான் மிக முக்கியம்ம்.அதுவே சீராக இருக்கும் போது பிறகென்ன.

சான்டியின் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இசைஞானிக்கு மாவீரர்களின் ஆசீர்வாதம் இருந்தால் அவருடைய நிகழ்வு நன்றே நடக்கும்.

ரொரன்டோவில் சான்டியின் பாதிப்பு புதன் கிழமையுடன் முடிவுக்கு வந்து விடும் என்கின்றனர். பிள்ளைகள் கூட ஹலவீனுக்கு புதன்கிழமை போகக் கூடிய காலநிலமை தான் இருக்கும். இன்றைய எதிர்வு கூறலின் படி நவம்பர் 3 மழை அறவே இல்லை என்றே போட்டு இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

தீய சக்திகளின் நோக்கங்கள்

- மக்கள் மத்தியில் பிளவுகளை உருவாக்குதல்

- பொதுவான தமிழ்நாட்டு மக்களிடம் ஈழத் தமிழர் பற்றிய கசப்புணர்வை ஏற்படுத்தல்

- தமிழ் நிறுவனங்களுக்கு நட்டத்தினை ஏற்படுத்தல்

- தமிழர்களால் நடத்தப்படுகின்ற நிறுவனங்கள் தமிழ் சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துவதை ஆரம்பத்திலேயே தடுத்தல்

- ஆயிரக் கணக்கான தமிழர்களுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துதல்

- பொருளாதாரரீதியில் புலம்பெயர் தமிழர்கள் தொடுக்க உள்ள போரை அழித்தல்

இப்படி நிறைய நோக்கங்கள் இந்த தீயசக்திகளிடம் உள்ளன. இதற்காகவே இந்தக் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். தமது அதிகாரத்தை தக்க வைப்பதற்காக சில சுயநல தமிழ் சக்திகளும் இதற்கு துணை போகின்றன.

இதுதான் உங்களின் நோக்கமே தவிர... தீய சக்திகளினதா தெரியல்ல.

அவர்கள் சொல்வது.. கொஞ்சம் பின்னால போடச் சொல்லியே தவிர நிறுத்தச் சொல்லேல்ல.

மேலும்.. தனது உயிரை இழந்தவனுக்கு முன்னால உங்களுக்கு வருமான இழப்பு.. பெரிசு..ம்ம்.

கொடுத்ததையே சுருட்டி வைச்ச ஆக்கள்.. இதில உழைச்சுத் தானாக்கும் கொடுக்கப் போகினம்..??!

ஆமாம் இளையராஜா இன்ரவியூ தானே நடத்தப் போறார்.. தன்ர.. தன்ர மகனின்ர கம்பனியில ஆயிரக்கணக்கான ஆக்களுக்கு வருமானம் வரச் செய்ய..!

வேற ஏதாவது ஜோர்க் இருந்தா எழுதுங்க.

இவை எல்லாம் எந்த ஒரு ஆதார அடிப்படையும் அற்ற உங்கள் கற்பனைகளே தவிர.. உண்மையல்ல...!

உங்களை நம்பிறதை விட.. சீமான்.. அமீரை.. ஆயிரம் மடங்கு அதிகம் நம்பலாம்..! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7) என்னால் ஒரு மாதம் எல்லாம் விரதமிருக்க முடியாது

இதை சொல்லுற விசுகு அண்ணை தானே கார்த்திகைமாதம் நட்டக்கவுள்ள புங்குடுதீவு ஒன்று கூடலுக்கும்,பிரான்சில் நடக்கவிருக்கும் ஊர்விழாக்களுக்கும் நவம்பர் ஒரு கிழமை தானே மாவீரர்வாரம் என்ற கேள்வி எழுப்பினீர்கள்? உங்களுக்கு ஒரு நியாயம்,மற்றவர்களுக்கு ஒரு நியாயமோ?

மற்றவர்கள் எல்லாம் என்ன பே******ளோ??????? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே ஒன்றுதான் என்று நான் நினைக்கிறேன்.இளையராஜாவை எமக்கு எதிராக திருப்புவது.

இதுவரைக்கும் நடந்ததில் எதனை இளையராஜா தடுத்து நிறுத்தி உங்களைக் காப்பாற்றி இருக்கிறார்..??????!

அவர் காசுக்கு போடுற இசையை காசு கொடுத்துக் கேட்டு உங்க குடும்பங்களை சீரழிச்சதைத் தவிர.. இளையராஜா.. தமிழக பாமர மக்களுக்கே எதுவும் செய்யேல்ல..! இதில ஈழத்தமிழங்களுக்கு வெட்டி விழுத்தப் போறாராக்கும்..!

அவர் தன்ர பிள்ளைகளுக்கு பிழைப்புக் காட்ட வாறார். அதுக்கு நீங்க.. ஆதரவு அளிச்சு உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகுதோ..???????!

சரியான சினிமா போதையில இருக்கீங்க... தெளிய காலம் எடுக்கும். :lol::icon_idea:

[size=4]தமிழ் சொந்தங்கள் செத்துவிழுந்தபோது உதவ முன்வரவில்லை இளையராஜா: சீமான்

2016 ல் புதிய அரசியல் வரலாறு படைப்போம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

பொது கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அவர், ’’முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்தில் நடேசன் வெள்ளைக் கொடியுடன் போன போது அவரை சுட்டு கொன்றார்கள். இதை பார்த்து சிங்களப் பெண் நடேசன் மனைவி சிங்களத்தில் அவர்களிடம் நியாயம் கேட்டார்.

அந்த பெண்ணையும் 20 சிங்கள ராணுவத்தினர் கற்பழித்து கொன்றார்கள். இத்தனை காலமும் வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தாத இசையமைப்பாளர் இளையராஜா இப்போது தமிழனின் விடுதலை நெருப்பை நீர்த்துப் போக செய்ய நடத்தப்படும் இசை நிகழ்ச்சிக்கு நவம்பர் 3 கனடா செல்கிறார்.

தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் இப்போது போவது வருத்தம் அளிக்கிறது’’ என்று பேசினார்.

http://www.nakkheera...ws.aspx?N=84477[/size]

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.