Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலதும்,பத்தும்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குத்தரிசி சோறு எனக்கும் பிடிக்கிறேல்ல...இசையும்,நானும் சேம் பிளட் :lol:

  • Replies 584
  • Views 41.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இரு சிறிலங்காவிற்கு சென்றிருந்தபோதும் ஊருக்குப் போகவில்லை. அங்கு போனால் மரக்கறி சாப்பாடுதான் சாப்பிடுவேன். மச்சம் எல்லாம் முன்னர் அங்கு இருந்தபோது சாப்பிடவில்லை என்பதாலும், இறைச்சி மென்மையாக இல்லாததாலும் (ஓடித் திரியும் கோழிகளில் எங்கே தசை இருக்கின்றது, எல்லாமே எலும்புதானே!), தேங்காய்ப்பால் விட்ட மச்சக்கறிகள் பிடிக்காததாலும் மரக்கறிதான்!

குத்தரிசியையும் கண்ணில் காட்டக்கூடாது.. ஆனால் ஊரில் இருக்கும்போது தகரத்தில் புழுக்கிய அரிசியை சுறங்கை சுறங்கையாக சாப்பிட்டிருக்கின்றேன். அதுதானே அப்போது நொறுக்குத் தீனி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த கடவுள் பாட்டுக்களில் லிங்க புராணம் முதன்மையானது...வட மொழி எதிர்ப்பாளார்களும்,கடவுள் எதிர்ப்பாளர்களும் மன்னிக்க;

ப்ரம்ம முராரி ஸூ(சு)ரார்சித லிங்கம்

நிர்மல பாஹித சோபித லிங்கம்

ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவ முனி ப்ரவார்சித லிங்கம்

காமதகம் கருணாகர‌ லிங்கம்

ராவணதர்ப விநாச‌ன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸர்வ ஸீ(சு)கந்தி ஸீ(சு)லேபித லிங்கம்

புத்து விவர்த்தன கார‌ண லிங்கம்

ஸீ(சி)த்த ஸீ(சு)ர‌ஸீ(சு)ர‌ வந்தித லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஜித லிங்கம்

பணிபதி வேஸ்டித சோபித லிங்கம்

தகூஸ யஜ்ஞ விநாச‌ன லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம்

பங்கஜ ஹார‌ ஸீ(சு)சோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாச‌ன லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

தேவ கணார்சித ஸேவித லிங்கம்

பாவையர் பக்தி பிரேவச‌ லிங்கம்

தினகர‌ கோடி ப்ர‌பாகர‌ லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

அஸ்ட‌ தலோபரி வேஸ்டித லிங்கம்

ஸர்வ ஸமுத் பவ கார‌ண லிங்கம்

அஸ்ட‌ தரித்ர‌ விநாச‌க லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

ஸீ(சு)ர‌ குரு ஸீ(சு)ர‌வர‌ பூஜித லிங்கம்

ஸீ(சு)ர‌வன புஸ்ப ஸதார்ச்சித லிங்கம்

பர‌மபதம் பர‌மாத்மக லிங்கம்

தத் ப்ர‌ணமாமி ஸதாசிவ லிங்கம்

லிங்காஸ்ட‌கம் மிதம் புண்யம்

யஹ்படேத் சிவ ஸந்திதேள!

சிவலோக மவாப் நோதி

சிவேந ஸஹ மோததே!!

[இந்தப் பாட்டின் அர்த்தம் எனக்குப் பெரிதாய் புரியவில்லை ஆனால் இனம் புரியாத ஒன்று இந்தப் பாட்டில் இருக்குது என்பது தான் எனது கருத்து]

பாட்டை எதாவது பிழையாக எழுதி இருந்தால் மன்னிக்கவும்

வெகு நாட்களாக

நிரப்பப்படாமலிருக்கிறது பிரியத்தால் வேயப்பட்ட

என் எதிர் இருக்கை

பருகப்படாமல் வீணாகிறது

உன் வருகையை எதிர்பார்த்து

பகிர்ந்து வைக்கப்படும்

ஒரு கோப்பை தேனீர்

ஒரு கோப்பை மது

[நஞ்சு எப்போதும் பகிந்தளிக்க முடியாததாகவே இருக்கிறது]

நீண்ட‌ என் அழைப்புகள்

ஒரு காத்திருப்பை முன்னிருத்தி

விசும்பலாகி

மெல்லக் கரைகின்றன.

கிழக்கிலிருந்து புறப்பட்டு

மேற்கில் சென்று ஒடுங்குகின்றன

பகல்கள்

ஒரு வயோதிபனைப் போல,

அனேக இர‌வுகளில்

பெரும் புயலென

உருக்கொள்கிறது

தனித்து விட‌ப்பட்டதன்

துக்கம்.

பிர‌ளயத்திற்கு

பிறகான ஓர் அந்தியில்

நீ வந்து அமர்கிறாய்

வசிய பூங்கொத்துட‌ன்

இனி எப்போதுமே

நிர‌ப்பமுடியாதபடிக்கு

காலியாகிவிட்ட

என் இருக்கையை உணராது.

(பிரியத்திற்கு...)

நல்லதொரு கவிதை, பகிர்வுக்கு நன்றி ரதி...

இனி எப்போதுமே

நிர‌ப்பமுடியாதபடிக்கு

காலியாகிவிட்ட

என் இருக்கையை உணராது.

காலியாகிப் போன பின்பும் கூட நிரப்ப முடியாததுதான் தனித்து விடப்பட்டதால் வரும் மனநிலையும் அதனூடான வாழ்வும். மிகவும் அருமையான வரிகள்.

என்னுடைய சந்தேகம் என்ன என்டால் வந்து 20 வருட‌த்திற்கு மேற்பட்டவர்களது உட‌ம்பு இங்கத்தைய நாடுகளுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்திடுமோ?...எது எப்படி இருந்தாலும் எமது மண்,எமது தண்ணீருக்கு என ஒரு சுவை இருக்குது அல்லவா அது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை :unsure:

எனக்கு ஊர்ச் சாப்பாடுதான் பிடித்துக் கொண்டது. நல்ல சுவை.

இங்கு சுப்பர் மார்கெட்டில் மலிவு விலையில் கிடைக்கும் இரசாயனங்கள் ஊட்டப்பட்டு வளர்ந்த கால்நடைகளின் (battery chickens...) இறைச்சி / மரக்கறி ஐ நீண்ட காலம் சாப்பிட்டவர்களுக்கு, அங்குள்ள இயற்கை உணவுகளை உண்ண சுவை தெரியாது. விலை அதிகம் காரணமாக இங்குள்ளவர்கள் அதிகம் இயற்கையாக வளர்க்கப்பட்ட உணவுகளை (Organic food ) உண்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பொது இடத்தில் இருந்து கொண்டு கொஞ்ச பொம்பிளையள் நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்கள் ஊரில் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி கதைத்துக் கொண்டு இருந்தார்கள்.தாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் விசேடமாக என்ன எல்லாம் சாப்பிட்டோம்,எப்படி எல்லாம் சாப்பிட்டோம் என்டெல்லாம் பழைய நினைவுகளில் மூழ்கி கதைத்தார்கள் :)...அதற்கு பிறகு திடிரென ஒரு அன்ரி சொன்னார் தான் அண்மையில் ஊருக்குப் போய் வந்ததாகவும் அங்கே போய் தன்னால அங்கத்தைய சாப்பாட்டை சாப்பிட‌ முடியவில்லை என்றும்,சாப்பாடு சுவையே இல்லை என்றும்,ஒன்றுமே தன்னால் பழங்கள் கூட‌ சாப்பிட‌ சுவையாக இல்லை என்றும் சொன்னார் :(.அதை அங்கிருந்த மற்ற பெண்கள் ஆமோதித்தார்கள்.அங்க இறைச்சி எல்லாம் கடி படாமல் காட‌க[hard] இருக்குமாம்.இங்கத்தைய சாப்பாடு பழகின பிறகு அங்கத்தைய சாப்பாடு எதுவுமே சுவையில்லாமல் இருக்குதாம் என தங்களுக்குள் கதைத்தார்கள்...நான் இர‌ண்டு வருட‌த்திற்கு முந்தி அம்மாவின் செத்த வீட்டுக்கு போய் வந்தனான் எனக்கு அங்க தனிய பருப்பும் சோறும் தந்தாலே சாப்பிடுவேன் அவ்வளவு சுவையாக இருக்கும் :D

என்னுடைய சந்தேகம் என்ன என்டால் வந்து 20 வருட‌த்திற்கு மேற்பட்டவர்களது உட‌ம்பு இங்கத்தைய நாடுகளுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்திடுமோ?...எது எப்படி இருந்தாலும் எமது மண்,எமது தண்ணீருக்கு என ஒரு சுவை இருக்குது அல்லவா அது ஏன் இவர்களுக்கு தெரியவில்லை :unsure:

வெண்டிக்காய், கத்தரிக்காய், பாகற்காய், முருங்கைக் காய், போன்றவை, அன்று போல இன்றும் நல்லாத்தான் இருக்கின்றன! இஞ்சத்தையான்கள் கிட்டவும் நிக்கேலாது!

மீன், கோழி, ஆடு எல்லாம் அங்கு நல்லாத் தானே இருக்குது!

பல்லு, ஆடத் துவங்கின, பொம்பிளையலா, இருக்கும், ரதி!

கருவாட்டுக் குழம்பும், அரிசிமாப் புட்டும்,......சொர்க்கம்! :D

.

அன்றும் இன்றும் என்றும் நமக்குப் பிடிச்சது சிவத்தப் புட்டும் முறுங்கக்காய் குழம்பும் தான். முறுங்கக்காய்க் குழம்பு நல்ல திக்காக இருக்க வேண்டும்.

என்னுடைய சின்னம்மா சமைச்சால்.. சிவத்தப் புட்டும் வெந்தயக் குழம்பும். என்ன கைவண்ணமோ..

*****************************************************************

பலதும் பத்தும்..

ஸோ தி இஸ் ரதி ஸ்பெஷல் சாங்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் மருத்துவ குணம் கொண்ட‌ மகத்தான பழம். மனம் கவலையோடும்,உட‌ல் சோர்வோடும் இருந்தால் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் உட‌ம்பும்,மனசும் அடுத்த 2 நிமிட‌த்தில் புத்துணர்ச்சி பெறும். ஒரு அளவான வாழைப்பழத்தில் 14 கிராம் சர்க்கரையும் 105 கலோரிகளும் இருக்கும்.வாழைப்பழம் ர‌த்தத்தில் சர்க்கரையின் அளவை சிறிது மட்டுமே அதிகரிக்கின்றது.மேலும் உட‌ம்பின் ஒரு நாளுக்கான விற்றமின் 6 தேவையில் 30% அளிக்கிறது.இது மூளையில் செர‌டோனின் என்ற ஹர்மோனை சுர‌க்க செய்கிறது. நமது மனதை செர‌டோனின் ஹர்மோன் அமைதிப்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்க உதவி செய்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு போயிருக்கிறேன்.. ஊருக்கு இடையில் போனதில்லை.. :blink:

குத்தரிசி சோறு எனக்கு இப்ப பிடிக்கிறேல்ல.. மற்றபடி மீதி எல்லாம் நல்லாத்தான் இருந்தது.. :rolleyes:

குத்தரிசி சோறு எனக்கும் பிடிக்கிறேல்ல...இசையும்,நானும் சேம் பிளட் :lol:

இரு சிறிலங்காவிற்கு சென்றிருந்தபோதும் ஊருக்குப் போகவில்லை. அங்கு போனால் மரக்கறி சாப்பாடுதான் சாப்பிடுவேன். மச்சம் எல்லாம் முன்னர் அங்கு இருந்தபோது சாப்பிடவில்லை என்பதாலும், இறைச்சி மென்மையாக இல்லாததாலும் (ஓடித் திரியும் கோழிகளில் எங்கே தசை இருக்கின்றது, எல்லாமே எலும்புதானே!), தேங்காய்ப்பால் விட்ட மச்சக்கறிகள் பிடிக்காததாலும் மரக்கறிதான்!

குத்தரிசியையும் கண்ணில் காட்டக்கூடாது.. ஆனால் ஊரில் இருக்கும்போது தகரத்தில் புழுக்கிய அரிசியை சுறங்கை சுறங்கையாக சாப்பிட்டிருக்கின்றேன். அதுதானே அப்போது நொறுக்குத் தீனி!

காலம் செய்தகோலம் எல்லாம் :( ....பசுமதி கொம்பனிக்கு மாறீட்டாங்கள். :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இல்லாதவர்களின் அளவற்ற கனவு[/size]

அவர்கள் பெருங்கனவுட‌னே

மர‌ணத்தை முத்தமிட்டனர்.

கடைசியில்

அவர்களின் ஞாபகம் நிர‌ப்பிவிட‌ப்பட்ட

கல்லறைகளும் இல்லை.

தாய்மார்கள் தீப்பந்தங்களையும்

தமது பிள்ளைகளுட‌ன் இழந்து விட்டனர்.

மனைவிமார்கள் தங்கள் புன்னகையுட‌ன்

கல்லறைமீதான

தமது சொற்களையும் இழந்து விட்டனர்.

அளவற்ற ஞாபகத்தில் வானம் முட்டிக்கிட‌க்கிறது.

இம்முறை எந்த பூக்களும் இல்லை.

இலைகளில் குருதி ஒழுக

பூமர‌ங்களின் வேர்கள் அறுக்கப்பட்டிருக்கின்றன.

தலைகளை மின் கம்பத்தில் மோதி

இல்லாதவர்களைக் கூப்பிடுகிறது நம்பிக்கையற்ற மனம்.

அவர்களை என்றோ அழித்து விட்டனர்.

கனவை உறிஞ்சி

அவர்களை தின்று முடித்துவிட்டது காலம்.

அவர்கள் மீதெழுதப்பட்ட மர‌ணப்பாட‌ல்

நெருப்பில் கிட‌ந்து பொசுங்குகிறது.

அப்பாவுக்காகத் தீப்பந்தம் ஏந்தி வருகிற குழந்தை

மண்ணைக் கிண்டி

கல்லறையைத் தேடிக் கொண்டிருக்கிறது.

ஞாபகத்தின் கடைசி சொத்தையும் அழித்தனர்.

அழுகையின் இருந்த

உரிமையையும் பறித்து எடுத்தனர்.

மனங்களில் கல்லறைகள் எழும்பிக் கொண்டிருக்கின்றன.

எங்கோ ஒரு மூலையில் கனவு எரிந்து

கொண்டிருக்கிறது

யாருமற்ற தனித்த நிலத்தில்

வர‌லாற்றின் துயர‌ம் நிர‌ம்பிய எலும்புக்கூடுகள்

எழும்பிச் செல்லுகின்றன.

மண்ணைப் பிர‌ட்டி

சுவர்களை ஆழத்தில் புதைக்கிறார்கள்.

கல்லறைகளின் போர் நட‌ந்து முடிந்துவிட்டது.

சனங்களுட‌ன் அவர்கள்

கல்லறைகளைத் துடைத்தெறிந்து விட்டார்கள்.

நம்பிக்கையின் உறைவிட‌த்தில்

சனங்களை இணைத்து வைத்திருந்த மண்ணில்

இப்பொழுதுதான் இனம் படுகொலை செய்யப்பட்ட

சுட‌லையின் வாச‌னை பெருமெடுப்பில் வீசுகிறது

இந்த கவிதையை யார் எழுதியவர் என்று வாசித்தவர்கள் சொல்லுங்கள் பார்ப்போம்.வாசிக்காதவர்கள் ஊகியூங்கள் பார்ப்போம்

யார் எழுதினார்களோ தெரியாது. கண்ணீர்க் கவிதை

இல்லாதவர்களின் அளவற்ற கனவு

இதனை எழுதியவர் தீபச்செல்வன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதனை எழுதியவர் தீபச்செல்வன்.

ஆம் தீபச்செல்வனால் 22/6/2009 எழுதப்பட்டது...முள்ளி வாய்க்கால் ஞாபகார்த்தமாக எழுதியிருப்பார் என நினைக்கிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனசே வெறுமையாய் இருக்கிறது.என்னை நினைத்தால் எனக்கே பிடிக்கவில்லை அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?...எனது நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை,கூடப் பிறந்த சகோதரங்களுக்குப் பிடிக்கவில்லை,உற்ற உறவினருக்குப் பிடிக்கவில்லை,இந்த யாழில் ஒருத்தருக்குமே என்னைப் பிடிக்கவில்லை எல்லாவற்றையும் விட என்னைப் படைத்த ஆண்டவனுக்கே என்னைப் பிடிக்கவில்லை :o ...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்டால் எப்படியும் வாழலாமா அல்லது இப்படித் தான் வாழ வேண்டுமா?

You are sadly mistaken! :D

ட்ரிங்ஸ் எடுக்கிறதற்கு முத்தாய்ப்பு மாதிரி இருக்கு. :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=qLSICRYOJyo&feature=related

தோழா தோழா கனவுத் தோழா(2)

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கனும்

உன்னை நான் புரிஞ்சிக்கனும்

ஒன் ஒன்டாய் தெரிஞ்சிக்கனும்

ஆணும்,பெண்ணும் பழகி கிட்டால் அது காதலாகுமா?

அது ஆயுள் முழுக்க தொடர்ந்தாலும் நட்பு மாறுமா?

நட்புக்குள் பொய்கள் கிடையாது

நட்புக்குள் தவறுகள் நட‌க்காது

நட்புக்குள் தன்னலம் இருக்காது

நட்புக்கு ஆண்,பெண் தெரியாது

நட்பு என்னும் நூல் எடுத்து பூமியைக் கட்டி நீ இருத்து

நட்பு நட்பு தான்,காதல் காதல் தான்

காதல் மாறலாம் நட்பு மாறுமா?

காதல் ஒன்றும் தவறே இல்லை

காதலின்றி மனிதனும் இல்லை

நண்பர்களும் காதலராக மாறிய பின் சொல்லியதில்லை

நீயும்,நானும் பழகுறமே காதலாகுமா?

இது ஆயுள் முழுக்க தொட‌ர்ந்தாலும் நட்பு மாறுமா?

தோழா தோழா கனவுத் தோழா(2)

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நீயும்,நானும் வெகு நேர‌ம் மனம் விட்டு பேசிச் சிரித்தாலும்

பிரியும் பொழுது சில நொடிகள் மெளனம் கொள்வது ஏன் தோழி?

புரிதலில் காதல் இல்லையடி,பிரிதலில் காதலை சொல்லி முடி

காதல் காதல் தான்...நட்பு நட்பு தான்

நட்பின் வழியிலே காதல் வளருமே

பிரிந்து போன நட்பினை கேட்டால் பசுமையான கதையினை சொல்லும்

பிரியமான காதல் கூட‌ பிரிந்த பின் கணமாய் கொல்லும்

ஆணும்,பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுக்க களங்கப் படாமல் பார்த்துக்கலாம்

தோழா தோழா கனவுத் தோழா

தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கனும்

நட்பைப் பற்றி நாமும் பேசித் தீர்த்துக்கனும்

உன்னை நான் புரிஞ்சிக்கனும்

ஒன் ஒன்டாய் தெரிஞ்சிக்கனும்

ஆணும்,பெண்ணும் காதல் இல்லாமல் பழகிக்கலாம்

அது ஆயுள் முழுக்க களங்கப் படாமல் பார்த்துக்கலாம்

உண்மையிலேயே ஆணும்,பெண்ணும் வயசு வித்தியாச‌ம் இல்லாமல் ஆயுள் பூரா நட்பாக இருக்கலாமா?...அந்த நட்பு அவர்கள்,அவர்களது திருமணத்திற்கு முன் உருவானதாக இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் வெவ்வேறு இட‌த்தில் திருமணம் முடித்தாலும் அந்த நட்புத் தொட‌ர‌ வேண்டும் இது சாத்தியமா?

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்காக வாழப் பழகிவிட்டவர்கள் நாங்கள்.. :rolleyes: அதனால் நட்பைத் தொடர வேண்டுமானால் தூரத்தையும் தக்கவைக்க வேண்டும்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனசே வெறுமையாய் இருக்கிறது.என்னை நினைத்தால் எனக்கே பிடிக்கவில்லை அப்படி இருக்கும் போது மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும்?...எனது நண்பர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை,கூடப் பிறந்த சகோதரங்களுக்குப் பிடிக்கவில்லை,உற்ற உறவினருக்குப் பிடிக்கவில்லை,இந்த யாழில் ஒருத்தருக்குமே என்னைப் பிடிக்கவில்லை எல்லாவற்றையும் விட என்னைப் படைத்த ஆண்டவனுக்கே என்னைப் பிடிக்கவில்லை :o ...வாழ்க்கை என்பது வாழ்வதற்கே என்டால் எப்படியும் வாழலாமா அல்லது இப்படித் தான் வாழ வேண்டுமா?

என்ன அக்காச்சி இப்படிச்சொல்லிப்போட்டியள்.

நீங்கள் தான் யாருடனும் கதைப்பதில்லையே.. :(

எங்களுடைய காதல் கதையே சுவாரசியமானது, பிரியா யாழில் அறிமுகமான போது பிரியா என்ற பேரில் எனக்கு யாரும் நண்பி இல்லை என்று சொல்லி அறிமுகமாகி பேசி நட்பாகி,காதலாகி,இப்போது என் மனைவி. :)

பழகுங்கள் நல்ல நட்புக்கள் கிடைக்கலாம். :):icon_idea:

ரூட்டுப் போட்டுக் குடுக்கிரியல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரூட்டுப் போட்டுக் குடுக்கிரியல்

ஏதோ என்னாலை முடிஞ்சது நந்து அங்கிள்.. :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ என்னாலை முடிஞ்சது நந்து அங்கிள்.. :D:lol::icon_mrgreen:

u mean maamaa

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன செய்தாலும் இறுதியில் என்னை மட்டும் குற்றவாளி ஆக்கிப் போட்டு தாங்கள் தப்பித்து கொள்கிறார்கள்...இதற்கு என்ன கார‌ணம் நான் ஏமாளியா?...உலகம் என்னை புரிந்து கொள்ளவில்லை என்பதை விட‌ உலகத்தை நான் இன்னும் புரிந்து கொள்ளவில்லையாக்கும் :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]மூன்றெழுத்தில் வாழ்க்கை[/size]

உலகில் உள்ள உயிர் மூன்றெழுத்து

உயிரை இயக்கும் சக்தி மூன்றெழுத்து

சக்தியின் வடிவம் அன்னை மூன்றெழுத்து

அன்னை காட்டும் அன்பு மூன்றெழுத்து

அறிவை வளர்க்கும் பள்ளி மூன்றெழுத்து

பள்ளியிற் கற்கும் கல்வி மூன்றெழுத்து

கல்வியால் கிடைக்கும் பதவி மூன்றெழுத்து

பதவியை சிறப்பிக்கும் இளமை மூன்றெழுத்து

இளமை தரும் மணம் மூன்றெழுத்து

மணத்தால் இணையும் மனைவி மூன்றெழுத்து

மனைவியால் உறவாகும் மழலை மூன்றெழுத்து

மழலைக்கு செலவாகும் பணம் மூன்றெழுத்து

பணத்தினை தேடும் உட‌ல் மூன்றெழுத்து

உட‌ல் சோரும் முதுமை மூன்றெழுத்து

முதுமையின் பின் முடிவு மூன்றெழுத்து

முடிவின் பின் தேவைப்படும் பெட்டி மூன்றெழுத்து

பெட்டியில் அட‌ங்கும் பிணம் மூன்றெழுத்து

பிணம் எடுத்துச் செல்லும் ஊர்தி மூன்றெழுத்து

ஊர்தி செல்லும் இட‌ம் சுட‌லை மூன்றெழுத்து

சுட‌லையில் வைக்கும் கொள்ளி மூன்றெழுத்து

கொள்ளியில் எரித்த அஸ்தி மூன்றெழுத்து

அஸ்தி கரையும் கட‌ல் மூன்றெழுத்து

மூன்றெழுத்தில் வாழ்க்கை

உடல்கள் கலக்கும் கலவி மூன்றெழுத்து

அதனை தூண்டும் காமம் மூன்றெழுத்து

இவற்றை உருவாக்கும் காதல் மூன்றெழுத்து

உயிரைக் காவும் விந்து மூன்றெழுத்து

அதை தாங்கும் பெண்மை மூன்றெழுத்து

இன்னும் எழுதலாம் ஆனால் ரதியிடம் அடிவாங்கத் தயார் இல்லை.... :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.