Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகம், முகமூடி பற்றிய ஒரு சிறு பதிவு.

Featured Replies

இன்னுமொருவன் நான் உங்களுக்கு இத்தனை வயதுக்குள் இருக்கும் என்று கணித்திருந்தேன் கிட்டதட்ட சரியாகத் தான் கணித்திருக்கிறேன் :lol:

ஏறத்தாள நான்கு பதிவுகளில் இதற்கு முன்னரே எந்தப் பத்துகளில் எனது வயதென்று நானே எழுதிருக்கிறேன். உங்கள் கணிப்பும் ஒத்துப்போவதால், ஓரளவிற்கு வயதிற்கேற்ற வகையில் நடந்துகொள்கிறேன் என்று எடுத்துக்கொள்கிறேன் :lol: .

தும்பளையானின் தலைப்தைபத் திசை திருப்பாது, சுருக்கமாக, உங்கள் பின்னூட்டத்தை ஒத்த ஒரு கருத்தைப் பதியலாம் என நினைக்கிறேன். யாழில் பல முகமூடிகள் தங்கள் சொந்தப் படங்களை அவதாரில் போட்டுள்ளார்கள். அந்தவகையில், எமது மனதில் அவர்களின் கருத்துக்கள் வாயிலாக அவர்கள் சார்ந்து இருந்த விம்பத்தோடு அவர்களின் நிஜ உருவத்தை ஒப்பிட்டுக்கொள்ளும் ஒரு வாய்ப்புக்கிடைத்துள்ளது. இது வரை நான் அவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரே ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும், அவர்களின் நிஜ உருவத்திற்கும் எனக்குள் அவர்கள் தொடர்பில் இருந்த விம்பத்திற்கும் எவ்வித ஒற்றுமையுமற்றே இருந்தார்கள். முகமூடி என்பது உண்மையில் ஒரு மிகச் சுவாரசியமான விடயம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏறத்தாள நான்கு பதிவுகளில் இதற்கு முன்னரே எந்தப் பத்துகளில் எனது வயதென்று நானே எழுதிருக்கிறேன். உங்கள் கணிப்பும் ஒத்துப்போவதால், ஓரளவிற்கு வயதிற்கேற்ற வகையில் நடந்துகொள்கிறேன் என்று எடுத்துக்கொள்கிறேன் :lol: .

தும்பளையானின் தலைப்தைபத் திசை திருப்பாது, சுருக்கமாக, உங்கள் பின்னூட்டத்தை ஒத்த ஒரு கருத்தைப் பதியலாம் என நினைக்கிறேன். யாழில் பல முகமூடிகள் தங்கள் சொந்தப் படங்களை அவதாரில் போட்டுள்ளார்கள். அந்தவகையில், எமது மனதில் அவர்களின் கருத்துக்கள் வாயிலாக அவர்கள் சார்ந்து இருந்த விம்பத்தோடு அவர்களின் நிஜ உருவத்தை ஒப்பிட்டுக்கொள்ளும் ஒரு வாய்ப்புக்கிடைத்துள்ளது. இது வரை நான் அவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரே ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும், அவர்களின் நிஜ உருவத்திற்கும் எனக்குள் அவர்கள் தொடர்பில் இருந்த விம்பத்திற்கும் எவ்வித ஒற்றுமையுமற்றே இருந்தார்கள். முகமூடி என்பது உண்மையில் ஒரு மிகச் சுவாரசியமான விடயம்.

அந்த ஒருவர் கிருபன் இல்லைத் தானே :unsure: [தலைப்பு திசை திரும்புது என்று தும்பளையான் கோவிக்க மாட்டார் சொல்லுங்கோ]

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஒருவர் கிருபன் இல்லைத் தானே :unsure: [தலைப்பு திசை திரும்புது என்று தும்பளையான் கோவிக்க மாட்டார் சொல்லுங்கோ]

தும்பளையான் மன்னிக்க.

[ரதியின்] தலை சுக்கு நூறாக வெடிக்கமுதல் இன்னுமொருவன் ஒரு தனித்திரியில் விம்பத்திற்கும் நிஜத்தோற்றத்திற்கும் இடையில் அவதானித்தவற்றை வைக்கவேண்டும். :)

தும்பளையான் மன்னிக்க.

[ரதியின்] தலை சுக்கு நூறாக வெடிக்கமுதல் இன்னுமொருவன் ஒரு தனித்திரியில் விம்பத்திற்கும் நிஜத்தோற்றத்திற்கும் இடையில் அவதானித்தவற்றை வைக்கவேண்டும். :)

ஆமோதிக்கின்றேன். முகத்தோற்றம் ஓர் விம்பமே. அது உண்மையில் நாங்கள் அல்ல. எனினும், ரதியிற்காக இல்லாவிட்டாலும் விம்பமும், நிஜமும் பற்றியபார்வையை அறிந்துகொள்வதில் எனக்கும் ஆர்வமே.

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் மன்னிக்க.

[ரதியின்] தலை சுக்கு நூறாக வெடிக்கமுதல் இன்னுமொருவன் ஒரு தனித்திரியில் விம்பத்திற்கும் நிஜத்தோற்றத்திற்கும் இடையில் அவதானித்தவற்றை வைக்கவேண்டும். :)

அப்படி ஒன்றும் மண்டை வெடிக்காது உங்கள் அவாட்டரில் உள்ள பட‌த்தைப் பற்றிய எனது கணிப்பும் இன்னுமொருவனின் கணிப்பும் ஒன்றா எனத் தெரிந்து கொள்ள ஆவல் அது தான் :lol:

அப்படி ஒன்றும் மண்டை வெடிக்காது உங்கள் அவாட்டரில் உள்ள பட‌த்தைப் பற்றிய எனது கணிப்பும் இன்னுமொருவனின் கணிப்பும் ஒன்றா எனத் தெரிந்து கொள்ள ஆவல் அது தான் :lol:

அதெல்லாம் இருக்கட்டும் ரதி.நீங்கள் அவாட்டரில் போட்டிருக்கும் பெண்ணிண் படத்தை மாதிரிதான் உங்களை நான் கற்பனை செய்துகொண்டிருக்கன்.அப்படி இருப்பீர்களா இல்லையா என்று சொல்லவும்.

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் சீமா (CIMA) செய்தனீரா அல்லது திரும்ப வர்த்தாகத்திற்கு மாறினீரா?

நன்றாக போகின்றது தொடருங்கள்..

நன்றி அண்ணா. CIMA செய்திருக்கிறேன் ஆனால் இங்க வந்ததால் முடிக்கவில்லை. இங்கு அதன் கிராக்கி குறைவு. ஊரிலே பொய் இருக்கும் விருப்பம் இருக்கு. CIMA இருந்தால் நல்ல சம்பளத்துடன் கொழும்பிலே செட்டில் ஆகலாம். FCMA இருந்தால் CPA கையில தூக்கி தருவாங்கள். இப்ப CPA செய்கிறேன். ஒரு MBA செய்யவும் விருப்பம் தான் :unsure: .

ஏறத்தாள நான்கு பதிவுகளில் இதற்கு முன்னரே எந்தப் பத்துகளில் எனது வயதென்று நானே எழுதிருக்கிறேன். உங்கள் கணிப்பும் ஒத்துப்போவதால், ஓரளவிற்கு வயதிற்கேற்ற வகையில் நடந்துகொள்கிறேன் என்று எடுத்துக்கொள்கிறேன் :lol: .

தும்பளையானின் தலைப்தைபத் திசை திருப்பாது, சுருக்கமாக, உங்கள் பின்னூட்டத்தை ஒத்த ஒரு கருத்தைப் பதியலாம் என நினைக்கிறேன். யாழில் பல முகமூடிகள் தங்கள் சொந்தப் படங்களை அவதாரில் போட்டுள்ளார்கள். அந்தவகையில், எமது மனதில் அவர்களின் கருத்துக்கள் வாயிலாக அவர்கள் சார்ந்து இருந்த விம்பத்தோடு அவர்களின் நிஜ உருவத்தை ஒப்பிட்டுக்கொள்ளும் ஒரு வாய்ப்புக்கிடைத்துள்ளது. இது வரை நான் அவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்ததில் ஒரே ஒருவரைத் தவிர மற்றைய அனைவரும், அவர்களின் நிஜ உருவத்திற்கும் எனக்குள் அவர்கள் தொடர்பில் இருந்த விம்பத்திற்கும் எவ்வித ஒற்றுமையுமற்றே இருந்தார்கள். முகமூடி என்பது உண்மையில் ஒரு மிகச் சுவாரசியமான விடயம்.

உண்மைதான் இன்னுமொருவன். நானும் மனதிலே பலர் பற்றிய விம்பங்களை வைத்திருக்கிறேன். உதாரணத்துக்கு கிருபன் அண்ணா, முரளி அண்ணா கேட்டதால் சொல்லுகிறேன்.

கிருபன் அண்ணா - முகம் கிளீன் சேவ், பொன்டிங் தாடி அவளவு எதிர்பார்க்கவில்லை. தலை கொஞ்சம் மயிர் குறைவாக. மேற்கத்தேய நடை உடைத் தெரிவு. பீர் வண்டி (முழுப் படம் போடுங்கப்பா :icon_mrgreen: ) எதிர் பார்த்தது. கொஞ்சம் உடம்பாகவும் இருப்பீர்கள் என நினைத்தேன் :lol: .

முரளி அண்ணா - மீசை, எதிர்பார்த்தது. அன்னப் பிளவு இருப்பதால் வளர்த்து இருப்பீங்கள் என யோசித்தேன். ஆனால் சத்திர சிகிச்சைகளுக்காக வளித்திருபீர்கள் போல. உடை உடுத்தும் பாணி எதிர் பார்த்தது போலவே இருக்கு. அன்னப்பிளவு எதிர் பார்த்தேன் அனால் உங்கள் முகம் எதுவித அடையாளமும் இல்லாமல் கிளீனா இருக்கு :) . தலைமயிர் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இருக்கு.

இன்னுமொருவன் நீஎங்கள் படம் போடாட்டிலும் எனது மனதில் உங்கள் படம்

இன்னுமொருவன் - உங்களுக்கு ஒரு 40 - 45 வயசு வரும். குறுந்தாடி எதிர்பாக்கிறேன் (பெரிய தத்துவமேதைகளில் அநேகமானவர்கள் தாடி வச்சிருக்கினம் :rolleyes: ) தலைமயிர் அடர்த்தி குறைவு/முன்/பின் வழுக்கை. உயரமானவர். நடுத்தர வயது தொந்தி இருக்கும். கழுத்திலே எப்போதும் ஒரு பை. அதனுள் ரெண்டு புத்தகம், உங்கள் கிண்டில், ipad/மடிக்கணணி :icon_idea: . கண்ணாடி பாவிப்பீர்கள். BB பாவிப்பவராக இருப்பீர்கள். மேற்கத்தேய உடை உடுத்தும் பாணி.

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் கிருபன் விடயத்தில் என்ட கருத்தோடு ஒத்துப் போகிறார் :lol:

  • தொடங்கியவர்

அண்மையில் தும்பளையானின் பதிவில் நிகழ்ந்த ஒரு உதிரி உரையாடலின் தொடர்ச்சியாக, ரதி கிருபன் மற்றும் கலைஞனின் கருத்துக்கள் சார்ந்து இந்தப் பதிவு.

முதலில் ஒரு குட்டிப் பின்னணியினைச் சுருக்கமாக எழுதி விட்டுப் பின் யாழ்களம் பற்றிப் பாhக்கலாம்.

சுருக்கமான பின்னணி

ஒரு மனிதன் தனது சக மனிதன் ஒருவனைக் காணும் முதற்சில நொடிப்பொழுதுகளில், இருவரும் பரஸ்பரம் மற்றையவரின் முகங்களை நிச்சயம் பார்த்துக்கொள்வர். மனிதர்கள், இவ்வாறு சக மனிதர்களின் முகங்களை எடைபோடும் வளக்கம் எப்போது மனிதனின் கூர்ப்பியல் அச்சில் நிகழ்ந்தது என்பது திட்டவட்டமாகக் கூறப்படமுடியாதது என்றபோதும், மனிதன் குகைகளில் வாழ்ந்த காலத்தில் தான் இது ஆரம்பிக்கப்பட்டதாக ஒரு பரவலான கருத்து இருக்கிறது. குகைக்குள் மனிதன் வாழத்தொடங்கிய ஆரம்பக்காலம் மொழி வளர்ச்சிக்கு முந்தியது. குகைக்குள் இருக்கும் தன்னைப்போன்ற விலங்கால் தனக்கு ஆபத்து ஏதும் வருமா என்பதை எடைபோட்டுக்கொள்வதற்கான மிகச்சிறந்த சுட்டியாக முகம் அவர்களால் அடையாளங் காணப்பட்டிருந்தாக நம்பப்படுகிறது. இதனால், குகைக்குள் அவர்கள் மிக அருகருகாக இருந்து மற்றையவரின் முகங்களை எடைபோட்டதாக நம்பப்படுகிறது.

குகைக்குள் இருந்த மனிதன் விவசாயம் வழியாக நாகரிகங்களை வளர்த்து வழர்ந்தபோதும் 'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது போன்ற நம்பிக்கைகள் மனிதரோடு கூடியே வந்துகொண்டிருக்கிறது. விஞ்ஞானபூர்வமற்ற நம்பிக்கைகள் வரிசையில், இல்லறம் செழித்து மனமொத்து மகிழ்ந்து வாழும் கணவன் மனைவியரின் முகங்கள் காலப்போக்கில் ஒத்த தன்மையுடையனவாக மருவும் என்ற அழவிற்கு இந்த முகம் சார்ந்த நம்பிக்கையின் ஆதிக்கம் மனிதனில் இருக்கிறது. அத்தோடு, தனது அகத்தை மற்றையவனிற்குக் காட்டிக்கொடுக்கும் உறுப்பு முகம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் முகத்தை உணர்ச்சியற்றதாய் சலனமற்றதாய் வைத்திருக்கப் பழகுதல் என்பது ஒரு ஆதிக்கம் நோக்கிய உத்தியாகக் கூடப் பலரால் கைக்கொள்ளப்படுகிறது. போக்கர் என்ற விளையாட்டில் தன்னை எதிர்த்துப் போட்டியிடுபவனின் கையிருப்பினை முகத்தை வைத்தே போட்டியாளர்கள் தீர்மானிக்க முனைவார்கள் என்ற ரீதியில், முகத்தை உணர்ச்சியற்றுச் சடம்போல வைத்திருக்க முயல்வது அனைத்துப் போக்கர் விழையாட்டுக்காரரும் செய்வது என்ற அடிப்படையில் இருந்து தான் 'Poker Face' என்ற பதம் பாவனையில் வந்தது.

ஆக, முகத்திற்கு அகத்தைக் காட்டும் தன்மை உள்ளதா இல்லையா என்பதற்கப்பால், அது அப்படித்தான் என்று குகைக்காலம் தொட்டு நம்பப்படுவதால் அது அப்படியே ஆகிப்போயுள்ளது.

சரி முகம் அகத்தைக் காட்டும் என்று தான் வைத்துக்கொள்ளினும் கூட அந்த அகம் என்பது என்ன என்பது அடுத்த ஒரு பெரு முனை. அகம் என்றால் என்ன என்பதை எமது காலத்தில் சிக்மண்ட் ப்றொயிட்டின் பெயரினைக் குறிப்பிடாது பேசமுடியாது. ப்றொயிட், அகத்தினை இட், ஈகோ, சுப்பர்ஈகோ என்ற மூன்று சக்திகளின் பொருதுகளமாக வரைவிலக்கணப்படுத்தியுள்ளார். இட் என்பது குழந்தை பிறந்த நாள் முதல் இருப்பது. விலங்கியல் உந்துதல்கள், இச்சைகள், தேவைகள், ஆசைகள் சார்ந்த உந்துதல்களிற்கான எதிர்வினையின் விளைவானது இட். பசித்தால் சாப்பிடணும், தண்ணி விடாய்த்தால் குடிக்கணும் என்பது இட் உடைய பிரிவு. ஆனால், சமூகமாக வாழ்கின்ற மனிதன், தனக்குத் தேவையானதை இன்னொருவனிடம் கண்டதும், தனது தேவையின் உந்துதலால் அதைத் தட்டிப் பறிக்க விளைவானேயாயின் சமூகமாக வாழ்வது சரிப்படாது. இந்நிலையில், 'இட்'டின் தேவைகளை சமூகத்திற்கு ஏற்புடைய வகையில் அடைய முனைவதில் இருந்து ஈகோ என்ற அடுத்தது ஆரம்பிக்கிறது. சமூகம் அமைத்த பாத்திரங்களிற்கு அமைய வாழ்வது. அப்பா என்றால் இப்படி, காதலன் என்றால் இப்படி, படித்தவன் என்றால் இப்டி என்பது போன்ற ஏகப்பட்ட சமூகக்கட்டமைப்புக்களிற்கு ஏற்ப வாழ முனைவது அல்லது வாழ்வதாகக் காட்டிக்கொள்வதை ஈகோ எனலாம். அடுத்தபடியாக சுப்பர்ஈகோ என்பது மற்றயைவர் தன்னை எவ்வாறு பார்க்கவேண்டும் என்று தானாக உருவாக்கிக் கொள்ளும் ஒரு விம்பம். சமூகம் அமைத்த விதிகளிற்கேற்ப நல்லபிள்ளை என்று பெயரெடுக்க ஆசைப்படும் ஈகோவிற்கு அப்பால் தன்னை தனது பெறுமதிகளின் அதியுச்ச ஒளியில் காட்டிக்கொள்வது சுப்பர் ஈகோ. அதாவது மற்றையவர் தன்னை இவ்வாறு தான் பார்க்கவேண்டும் என்று தன்னைச் சார்ந்து தானாக உருவாக்கிக் கொள்ளும் கற்பிதம்.

சுப்பர்ஈகோ கற்பிதம் செய்யும் அந்தத் 'தான்' என்பதை எங்கிருந்து ஒருவன் பெறுகிறான் என்றால் அது பெற்றோர் சமூகம் என்று ஒரு பீட்பாக்லூப்பாகத் (அதாவது உள்ளீடு வெளியீட்டில் தாக்கம் செலுத்துகின்ற அதேநேரம் வெளியீடு மீண்டும் உள்ளீட்டிலும் அதைத் தொடர்ந்த வெளியீட்டிலும் தாக்கம் செலுத்துவதாக சுழற்சி தொடரும்) தான் இருக்கும். இருப்பினும் இந்த சமூகம் கவர்ச்சியான அல்லது பெருமைக்குரிய விடயங்காளாகக் கருதுகின்ற பெறுமதிகளில் எதற்கெல்லாம் தான் தான் உதாரணபுருசன் என்று காட்டிக்கொள்ளலாம் என்ற ஒரு மனிதனின் சிந்தனையினை சுப்பர் ஈகோ எனலாம்.

ஒரு மனிதனின் அகம் என்பது ஆரம்பத்திற்கு மேற்படி மூன்று சக்திகளினதும் பொருதல்களமாகவே வெளிப்படும் என்பது ப்றொயிட்டின் அடிப்டை. இது ஒரு மிகமிகக் குட்டிச் சுருக்கம்.

ஆனால் மேலே குறிப்பிடப்பட்டதைப் போல ஒரு மனிதனின் அகம் என்பது ஒரு பீட்பாக்லூப் போன்றது என்ற நிலையிலும், மனிதன் பிறருடன் வாழ்கிறான் என்கையிலும் அவனது அகம் மாறிக்கொண்டு தான் இருக்கும். எனவே ஒரு முகம் ஒரு அகத்தைக் காட்டினும் கூட அது அதிகபட்சம் அந்தநொடிக்கான ஒரு புகைப்படம்போலத்தான் இருக்க முடியும்.

அதற்கும் மேலால், முகம் என்பது ஒரு மனிதனை நமக்குத் தெரியாதிருக்கும் வரை தான் ஆதிக்கம் செலுத்தும். இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் விழித்துப் பார்க்கும் அந்த நொடியில் முகம் என்பது உண்மையில் மறைந்தே போகும். அதன் பின் அது மலடாகிப்போகும்.

ஆனால், எமது சமூகம் சந்தைச் சமூகமாக, லாபம் ஒன்றே குறியான சமூகமாக, நேரமற்ற சமூகமாக வாழ்கின்ற நிலையில், பிற மனிதரைப் பழகிப் பார்த்துத் தெரிந்து கொள்ள எவரிற்கும் நேரமோ ஆர்வமோ இல்லை. நாவல்கள் அருகி ருவிற்றர் எழுவதைப்போல், ஒருவர் சில வார்த்தைகளில் சில நொடிக்குள் தன்னுடன் பழகுவது மற்றையவரிற்கு ஆதாயமானது என்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்தால் மட்டுமே இன்றைய உலகில் பழகிக்கொள்ளுதல்கள் சாத்தியமாகிறது. இவ்வகையில் முகம் ஒரு விளம்பரம், அல்லது றெசுமி போன்று அவசர மனிதர்கள் மத்தியில் செயற்படுவதால் தான் அதன் ஆதிக்கம் இன்னமும் இருக்கின்றது. உலகத்தில் அசிங்கமான குழந்தை என்று எதையும் எவரும் குறிப்பிடாமைக்குக் காரணம் குழந்தையிடம் எவரும் எதையும் எதிர்பார்ப்பதில்லை. துரதிஸ்ரவசமாக, நாம் பெரியவர்கள் ஆனதும் எதிர்பார்ப்பின்றி எதுவுமே நடப்பதில்லை. முகத்தின் ஆதிக்கம் இந்த எதிர்பார்ப்பில் தான் தங்கியிருக்கிறது.

நான் அவதானித்துப் பாhத்தவரை, ஆந்த உறக்கத்தில் இருக்கும் எந்த மனிதரும் அசிங்கமாகத் தெரிவதில்லை. நான் நினைக்கிறேன் இதற்கான அடிப்படையாக, ஆழ்ந்து தூங்குபவன் எதையும் அடைந்துகொள்வதற்காக முனையாமல் இருப்பதே காரணமாக இருக்கவேண்டும். மேலும் அவன் எதையேனும் அடைய முனையாதவரை, எனக்கு அந்த மனிதன் போட்டியும் இல்லை ஆபத்தும் இல்லை, இதனால் தான் தூங்கும் மனிதன் அசிங்கமாகத் தெரிவதில்லை--குழந்தை நிலை--என்று எனக்குத் தோன்றுகின்றது.

முகமூடிகள் மற்றும் யாழ் களம்.

யாழ்களத்தில் முகமூடிகள் என்று பார்க்கையில், எனது பார்வையில், அது ஒரு மனிதனின் அகத்தில் இருந்து 'இட்' மற்றும் 'ஈகோ'வினைப் பாரிய அளவில் நீக்கிவிட்டு சுப்பர்ஈகோவினை மட்டும் கோதாவில் இறக்கிவிடும் ஒரு பரிசோதனை. அதாவது தனது தேவைகள்,ஆசைகள், உந்துதல்கள் என்பனவற்றையும், அவை சார்ந்து தான் எவ்வாறு சமூகத்திற்கு அச்சாப்பிள்ளையாக நடந்து சமூகத்தின் அங்கீகாரம் பெற்று அவற்றைப் போராடி அடைந்துகொள்கிறேன் என்பதையும் எல்லாம் மூட்டை கட்டிப் பரணில் போட்டுவிட்டு, தன்னை உலகு எவ்வாறு பார்ப்பது தனது அதி உச்ச ஆசையோ அதுவாக மட்டும் முகமூடிக்குள்ளால் தன்னைக் காட்டிக்கொள்ளுவதே முகமூடிக் களம்.

யாரிற்கெல்லாம் திரைப்படம் பார்க்கப் பிடிக்கிறதோ, இலக்கியம் பிடிக்கிறதோ, கலையில் ஆர்வம் இருக்கிறதோ அவர்களிற்கெல்லாம் நிச்சயம் முகமூடிக்களம் பிடித்தே தீரும். ஏனெனில் அத்தனை முகமூடிகளும் பாத்திரங்களைப் படைத்து வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாத்திரப்படைப்பினையும் அதன் நகர்த்தலையும் எவ்வளவிற்கெவ்வளவு ஒருவர் கச்சிதமாகச் செய்கிறாரோ, அவ்வளவிற்கவ்வளவு அந்தப் பாத்திரமே அவர்சார்ந்த விம்பமாக எமது மனதில் வளரத்தொடங்கும்.

ஆனால் இதில் ஒரு சுவாரசியமான சிக்கல் இருக்கிறது. உதாரணமாக, நிஜத்தில் ஐந்தடி உயரம் கூட இல்லாத ஒருவன், அவனது சுப்பர்ஈகோ சார்ந்து தன்னை ஆறடி ஐந்தங்குலம் உயரம் உடைய, உடற்பயிற்சித் தேகம் கொண்ட, இதர உடலியல் சிறப்புக்களும் உடைய ஒருவனாகச் சித்தரிக்க விரும்பி முகமூடியாகக் களத்தில் புகுந்து விளையாடுகிறான் என்று வைத்துக்கொள்வோம். ஆறடிக்கு மேற்பட்ட உயரம் முதற்கொண்டு உடலியல் சிறப்புக்களாக அவன் கருதுகின்ற அனைத்துமே இந்த சமூகத்தால் அவனிற்குள் போடப்பட்டவை தான். அந்தச் சிறப்புக்கள் ஏன் சிறப்பென்று சமூகத்தின் சொல்லிற்கப்பால் அவனிற்கு நேரடியாகத் தெரியாது. அத்தோடு மேற்படி சிறப்புக்களோடு அவன் என்றும் வாழ்ந்ததில்லை என்பதால் அவை தொடர்பில் அவனிற்கு நேரடி அனுபவம் இல்லை. இந்நிலையில், சமூகம் சொல்லிக்கொடுத்த விடயங்களிற்கேற்ப தன்னை ஒரு கற்பனைப் பாத்திரமாக அவன் சித்தரிக்க முயலுகிறான். ஆனால், அவன் சித்தரிக்க விளைகின்ற விடயங்களை உண்மையில் கொண்டிருக்கும் ஒரு உறவு களத்தில் இருக்கலாம். அவரிற்கு மேற்படி கற்பனைச் சித்தரிப்பில் ஓட்டைகள் தெரியலாம். அப்போது அங்கு விவாதம் மட்டுமன்றி, நக்கல்கள், சீண்டல்கள், அவமதிப்புக்கள், சண்டைகள் என்று விரியும். உடல் சார்ந்த விடயங்கள் இங்கு ஒரு உதாரணம் மட்டுமே. படிப்பு, சான்றிதழ்கள், பணம், தொழில் என்று அனைத்து முனைகளிற்கும் இது ஏற்புடையது என்பதோடு முகமூடிக்களத்தின் சுவராரசியங்களில் இதுவும் ஒன்று.

முகமூடிக்களத்தை ஒருவரியில் சொல்வதானால், ஒரு நாவலைப் பலநூறு எழுத்தாளர்கள் சமநேரத்தில் எழுதுவதாகக் கூறலாம். ஏனெனில் இந்த நாவலிற்குள் எத்தனை பாத்திரங்கள் எப்பெப்போ எவ்வாறு வரும் என்பதோ, அப்பாத்திரங்கள் எவ்வாறு வளரும் என்பதோ, பாத்திரங்களிற்கிடையே எப்போ என்ன பரிமாற்றங்கள் நிகழும் என்பதோ எவரிற்கும் தெரியாது. பாத்திரங்கள் பல கதைகளையும் கவிதைகளையும் சொல்லுகின்ற அதே நேரம் கதைசொல்லும் பாத்திரங்களே கதைகளாக விரிவது முகமூடிக்களத்தின் சுவாரசியம்.

முகமூடிக்களத்தின் சுவாரசியம் அத்தோடு நின்றுவிடுவதில்லை. சில முகமூடிகளிற்குத் தெரிந்தோ தெரியாமலோ நிஜ உலகில் சக முகமூடிகளை நேரடியாகத் தெரிந்து கொள்ள நேர்கிறது. இப்போ நாவல், ஒன்றிற்கு மேற்பட்ட தளங்களில் பயணிக்கத் தொடங்குகிறது. அதாவது, ஒருவரை ஓருவர் நேரில் சந்தித்துக்கொண்ட முகமூடிகள், ஒரு புறத்தில் , தம்மை ேரடியாகத் தெரியாத கள உறவுகளிற்குத் தம்மைத் தமது சுப்பர்ஈகோவாக தொடர்ந்தும் காட்டவிரும்புகின்ற அதே நேரம், தம்மை நேரடியாகத் தெரிந்தவர்கள் இப்போது களத்தில் இருக்கிறார்களே என்ற அடிப்டையில் அவர்களின் அங்கீகாரம் வேண்டி சற்று அடக்கித்தான் வாசிக்கவேண்டும் என்றும் புதிதாக உணர்கிறார்கள். எப்போது ஒரு முகமூடி அவ்வாறு சிந்திக்கத்தொடங்குகின்றதோ அந்த நேரத்தில் இருந்து அந்த முகமூடியின் பாத்திரம் அதற்கே தெரியாத வகையில் மாறத் தொடங்கும். அந்தப் பாத்திரம் எப்படி மாறுகிறது என்பதை அவதானிப்பதும் சுவாரசியமானது.

இறுதியாக, சிலர் எப்போதும் ஒருவாறாகத் தான் இருப்பார்கள். அவர்களது ஈகோவில் இட்டும், சுப்பர் ஈகோவில் ஈகோவும் என்று அவர்களின் அகம் அத்தனையினையும் எப்போதும் காவி நிற்கும். இது நல்லதா கெட்டதா என்பதற்கப்பால், இது இப்படித்தான். இவர்களறிற்கு முகமூடி பெரிதாக உதவாது. ஏனெனில் முகமூடியினைப் போடுகிறார்களா முகத்தைக் காட்டுகின்றார்களா என்பதற்கப்பால் இவர்களின் கதைகளில் ஒரு மாறாத பாத்திரம் தெரியும். இவ்வாறானவர்கள் சார்ந்து எமது மனங்களில் முகமூடிக்களத்தில் உருவாகும் விம்பம் அனேகமாக அவர்களது நிஜ முகத்தோடு அதிகம் ஒத்துப்போவதாகவே இருக்கும். அப்படிப் பார்க்கையில் முகத்திற்கு அகத்தைக் காட்டும் தன்மை இருக்கத்தான் செய்கிறது என்றே எண்ணத் தோன்றுகின்றது.

முடிவாக, ரதியின் கேள்விக்கான பதிலுடன் பதிவை முடித்துக்கொள்கிறேன். ரதி, நீங்கள் கிருபனா என்று நேரடியாகக் கேட்ட படியால் அதற்கான பதில் இல்லை என்று மட்டும் கூறிக்கொள்கிறேன். மற்றம்படி, நான் கூறிய அந்த ஒருவர் யாரென்பதைக் கூறாதது சஸ்பென்;ை பில்ட்அப் பண்ணுவதற்காகவோ அல்லது பப்ளிசிட்டிக்காகவோ இல்லை. ஒரே ஒருவரை தனித்து எதைக் கூறினும் அது தப்பாகவே விளங்கப்படும் என்பதால் அது யாரென்பதை விட்டுவீடுங்கள்.

முகத்தை மறைத்து கருத்தாடல் செய்வதை யாழ் இணையம் விடயத்தில் தனித்துவமாக அணுகவேண்டும். காரணம்: உள்ளூர், வெளியூர் அரசியல் சூழ்நிலைகளினால் பலர் பயம், பீதி காரணமாகவே தமது முகங்களை மறைத்து கருத்தாடல் செய்யவேண்டியதேவை யாழ் கருத்துக்களத்தில் காணப்படலாம்.

யாழ் இணையத்தில் தமது முகங்களை மறைத்து கருத்தாடலில் ஈடுபடும் அதேநபர்கள் முகநூலில் அல்லது வேறு கருத்தாடல் தளங்களில் முகந்திறந்து உறவாடுவதை எந்தவகையில் அணுகமுடியும் என்பதையும் சிந்தித்துப்பார்க்கவேண்டும். யாழில் முகத்திரையைக்கிழிப்பதற்கு எந்தக்காரணிகள் தடையாக உள்ளன என்பதையும் சிந்தித்துப்பார்க்கவேண்டும். அதேவேளை, வேறு மொழிகளில், வேறு நாடுகளில் புழக்கத்திலுள்ள கருத்துக்களங்களில் யாழ் கருத்துக்களம் போலவே பெரும்பான்மையோர் முகமூடிகளின் பின்னாலேயே ஒளிந்துள்ளார்களா என்றும் ஆய்ந்து பார்க்கவேண்டும்.

கால, சூழ்நிலைகள், தனித்துவமான பின்னணிகள் இங்கு முகமூடிச்சிக்கலில் பெரும்பங்கு வகிக்கின்றன. இன்னுமொருவன் தனது நோக்கில் குறிப்பிட்டுள்ள விடயங்களும் வேறுவகையான அணுகுமுறையில் பொருத்தமானதாகவே தோன்றுகின்றன.

நாங்கள் முகமூடிகளாகவோ, முகங்களாகவோ இருப்பதாலோ அல்லது மற்றவர்கள் முகமூடிகளாகவோ, முகங்களாகவோ இருப்பதாலோ எம்மையே நாம் ஏமாற்றாமலோ அல்லது மற்றவர்கள் மூலம் நாம் ஏமாறாமலோ பார்த்துக்கொண்டால் சரி.

Edited by கலைஞன்

[உங்கள் எண்ணவோட்டங்களுக்கு நன்றி தும்பளையான். ஆயிரத்தெட்டு வகைகளில் எனது கோலங்கள் உள்ளன. அதிலொன்று நீங்கள் பார்க்கும்படம். எனது அம்மா உட்பட பலர் மீசையின் அவசியம் பற்றிக்கூறினார்கள். மீசையுடன் பார்க்கும்போது பயங்கரவாதி - Terrorist என்று பிடித்து உள்ளே தள்ளிவிடுவார்கள் எனும் பயத்தினாலோ என்னவோ அல்லது சுகாதார காரணங்களுக்காகவோ அல்லது ஒரு Decentஆன Look தேவை என்பதாலோ மீசைக்கும் எனக்கும் ஒத்துவரவில்லை. 2010இல் செய்யப்பட்ட சத்திரசிகிச்சையுடன் மேலுதட்டுப்பகுதியிலுள்ள அடையாளம் குறிப்பிடத்தக்களவு மறைக்கப்பட்டுவிட்டது. நான் பெரும்பாலும் சவரத்திற்கு Trimmerதான் பாவிப்பது. shaving razorபாவிப்பது குறைவு/தேவை ஏற்படும்போது மட்டுமே.]

சரி, இடையில்விட்ட கதையைத்தொடருங்கள்...

சிந்தனைகளை கிளறிவிடும் உங்கள் வழமையான பாணியல் ஒரு பதிவு. நன்றிகள்

நான் அவதானித்துப் பாhத்தவரை, ஆந்த உறக்கத்தில் இருக்கும் எந்த மனிதரும் அசிங்கமாகத் தெரிவதில்லை. நான் நினைக்கிறேன் இதற்கான அடிப்படையாக, ஆழ்ந்து தூங்குபவன் எதையும் அடைந்துகொள்வதற்காக முனையாமல் இருப்பதே காரணமாக இருக்கவேண்டும். மேலும் அவன் எதையேனும் அடைய முனையாதவரை, எனக்கு அந்த மனிதன் போட்டியும் இல்லை ஆபத்தும் இல்லை, இதனால் தான் தூங்கும் மனிதன் அசிங்கமாகத் தெரிவதில்லை--குழந்தை நிலை--என்று எனக்குத் தோன்றுகின்றது.

எனது அனுபவத்தில் சில சந்தரப்பங்களில் சிலருடன் சில காரணங்களுக்காக ஆத்திரப்பட்டிருக்கின்றேன். செய்த தப்புகளை கடந்து அவர்கள் உறங்கும்போது பார்த்தால் மனம் வேதனையடையும். குழந்தைகள் குழப்படி செய்யும்போது அடித்த தாய் தந்தைகள் அவர்கள் உறங்கும்போது அடித்ததுக்கு மிக வேதனைப்படுவதை பார்த்திருக்கின்றேன். உறங்கும் போது ஆன்மா விழித்திருக்கின்றதோ என்று எண்ணத்தோன்றும் ஆன்மா குறித்து நம்பிக்கை இல்லை ஆனால் அது எதுவுமற்றது என்ற கருத்தினூடாக இப்படி கேட்கத்தோன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை வாசிக்க எனக்கே ஆர்வமாக இருக்கு.சரிஎன்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னோட அம்மம்மா. மாதிரி இருப்பிங்க அப்பிடின்னு கற்பனை பண்ணி வைச்சிருக்கன் இத நீங்க வாய்விட்டு கேட்டதால தான் சொல்லுறன் இல்லை ஏன்டா சொல்லி இருக்கா மாட்டன் :(

என்னோட அம்மம்மா. மாதிரி இருப்பிங்க அப்பிடின்னு கற்பனை பண்ணி வைச்சிருக்கன் இத நீங்க வாய்விட்டு கேட்டதால தான் சொல்லுறன் இல்லை ஏன்டா சொல்லி இருக்கா மாட்டன் :(

ஜயோ..கிகிகி.இதை வசிச்சு உருண்டு பிரண்டு தவண்டு நான் விழுந்து விழுந்து சிரிக்கிறன்.சத்தியமாய்.முடியலை. :lol: :lol: :lol:

இதை வாசிக்க எனக்கே ஆர்வமாக இருக்கு.சரிஎன்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா பார்ப்போம்.

நான் நினைக்கிரன்.உங்கடவீட்டை கொம்பியூட்டர் ஸ்கிறீனை தலை கீழாய் வச்சிட்டு ஏன் எழுத்தெல்லம் தலைகீழாய் தெரியுதெண்டு வீட்டுக்கரனோட சன்டை பிடிக்கிற சுண்டல் சொன்ன அம்மம்மா மாதிரிதான் நானும் கற்பனை பண்னி வச்சிருக்கன்.இத நீங்க வாய்விட்டு கேட்டதால தான் சொல்லுறன் இல்லை ஏன்டா சொல்லி இருக்கா மாட்டன் :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டலும் வண்டும் சரியான கில்லாடியள் தான் .என்ன நான் போடுற மூக்குக் கண்ணாடியும் பிடிச்சுக்கொண்டு நடக்கிற தடியையும் நல்ல காலம் அவை காணேல்லை. எனக்காக இப்பிடி டக்கு டக்கு எண்டு டைப் அடிக்கிறதும் எண்ட பல்லில்லாத மனிசன்தான் மோனை. பச்சை தருவமோ.......... வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இன்னுமொருவன் :)

என்னைப் பொறுத்த வரைக்கும் கிருபனுக்கும் அவர‌து கருத்திற்கு அவர‌து பட‌த்திற்கும் கொஞ்ச‌ம் கூட‌ப் பொறுத்தமில்லை...நான் கிருபன் இன்னும் கொஞ்ச‌ம் வயசானவராக,கொஞ்ச‌ம் கட்டையாக,தாடி வைத்துக் கொண்டு எதிர் பார்த்தேன்...அவர‌து கருத்துக்களில் இருக்கும் தைரியம் அவர‌து பட‌த்திற்கு இல்லை.

கலைஞன்- கலைஞனது முழு பட‌த்தை யாழில் முதலே பார்த்திருந்தேன் ஆனால் இப்ப கலைஞனைப் பார்க்கும் போது அவர‌து வயதிற்கு மீறிய மெச்சூரிட்டி தெரியுது...கலைஞனது பட‌த்திற்கும்,அவர‌து கருத்துக்களுக்கும் ஓர‌ளவு தொட‌ர்பு இருக்குது என்று நினைக்கிறேன்.

அர்ஜீன் அண்ணா-அவருக்கும்,அவர‌து கருத்துக்களுக்கும் ஒத்துப் போகின்றது...அவரை தாயகத்தை,இலக்கியத்தை நேசிக்கும் ஒரு மனிதராகவே பார்க்கிறேன்.

சாஸ்திரி- இவர‌து பட‌த்திற்கும்,இவர‌து கருத்துக்களுக்கும் அப்படியே ஒத்துப் போகிறது...அவர‌து பட‌த்தைப் பார்த்தாலே சொல்லலாம் அவர் பெண்களில் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்று :D இப்ப குடும்ப பொறுப்பு உள்ள அப்பாவாக இருப்பார் என எதிர் பார்க்கிறேன்.

சபேச‌ன்- இவருக்கும்,இவர‌து கருத்திற்கும் ,அவாட்டரில் உள்ள பட‌த்திற்கும் ஒத்துப் போகின்றது என்பது எனது கருத்து.

சயந்தன்- இலக்கியவாதிகள் இப்படித் தான் இருப்பார்கள் என்பதற்கு சயந்தன் எடுத்துக்காட்டு...சயந்தனின் பட‌ம் அவாட்டரில் இல்லா விட்டாலும் யாழில் போட்டதை வைத்து சொல்கிறேன்...ஆனால் எழுத்தாளார்களில் அதிக வெட்கப்படுபவராக சயந்தன் இருக்கிறார்...இவருக்கும்,இவர‌து எழுத்திற்கும் முர‌ண்பாடு உள்ளது.

கோமகன்-இவருக்கும்,இவர‌து எழுத்துக்கும் அதிக முர‌ண்பாடு இருக்குது என நினைக்கிறேன்...அவர் உண்மையில் மென்மையானவராக இருப்பார் என பட‌த்தை பார்த்து விட்டு நினைத்தேன் ஆனால் எழுத்தில் அப்படி இல்லை.

ஈச‌ன்- இவர் வந்து லவ்வபில்[lovable boy] :lol: போய் இவர‌து பட‌த்திற்கும்,எழுத்திற்கும் சம்மந்தம் இருக்கும் என நினைக்கிறேன்...மென்மையானவராக இருப்பார்

சகாறா அக்கா- இவருக்கும்,இவர‌து எழுத்திற்கும் முந்தி நெருங்கிய தொட‌ர்பு இருந்தது ஆனால் அந்த தைரியம்,கம்பீர‌ம் போன்றவற்றை இப்ப காண முடியவில்லை.

சாந்தி அக்கா இவருக்கும்,பட‌த்திற்கும்,எழுத்திற்கும் ஒற்றுமை இருந்தாலும் எழுத்தில் இருக்கும் ஆவேச‌ம் பட‌த்திலோ,அவரின்ட‌ பேட்டியிலோ தெரியவில்லை.

இவை எனது கருத்துக்களாகும் எதாவது பிழையாக எழுதி இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மன்னிக்கவும்.நன்றி

மழலை பட்டாளம் என்றொரு பாலசந்தரின்? படம் பார்த்த ஞாபகம் .விஷ்ணுவர்த்தன் சுமித்திரா நடித்தது .கதாநாயகன் ஒரு பெண்ணின் புனைபெயரில் கதை எழுதி (சுஜாதா போல் ) பெரும் விம்பத்தை ஏற்படுத்தி இருப்பார் .பின்னர் அவர் ஆணென்று தெரிவதால் கதாநாயகி நிலை ,இப்படித்தான் கதை போகின்றது .

இலங்கையில் தொடங்கிய வானொலி கேட்கும் பழக்கம் இன்று வரை தொடர்கின்றது .அறிவிப்பாளர்களையும் நேயர்களையும் உருவத்தில் இப்படித்தான் இருப்பார்கள் என்ற ஒரு என்று பிரமையை உருவாக்கித்தான் வானொலி கேட்டுக்கொண்டு இருப்பேன்.அவர்களில் சிலரை பின்னர் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்த போது பெரும்பாலும் எனது கணிப்பு பொய்த்தே போனது .அவர்கள் கருத்துக்களுக்கும் குரலுக்கும் உருவத்திற்கும் எதுவித ஒற்றுமையும் இல்லாமல் இருந்தது ,அதைவிட அதற்கு பின் அவர்கள் நிகழ்சிகளை கேட்கும் போது எனது முன்னர் இருந்த மனநிலையிலும் சிறிது மாற்றம் ஏற்பட்டிருந்தது .காரணம் நான் அவர்களில் வைத்திருந்த எனது விம்பம் மாறிப்போனதுதான் என நினைக்கிறேன் .

இதே போல சில எழுத்தாளர்களையும் சினிமாக்காரர்களையும் அறிவுரீதியாக(உருவம் தெரிந்தது தானே ) அவர்களில் வைத்திருந்த விம்பமும் சிலரில் கூடி சிலரில் குறைந்துவிட்டது .

யாழில் இருப்பர்களுக்கும் எனக்கென்று ஒரு விம்பம் வைத்திருக்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி- இவர‌து பட‌த்திற்கும்,இவர‌து கருத்துக்களுக்கும் அப்படியே ஒத்துப் போகிறது...அவர‌து பட‌த்தைப் பார்த்தாலே சொல்லலாம் அவர் பெண்களில் மிகுந்த ஈடுபாடு உடையவர் என்று :D இப்ப குடும்ப பொறுப்பு உள்ள அப்பாவாக இருப்பார் என எதிர் பார்க்கிறேன்.

90 வீதம் :)

கோமகன்-இவருக்கும்,இவர‌து எழுத்துக்கும் அதிக முர‌ண்பாடு இருக்குது என நினைக்கிறேன்...அவர் உண்மையில் மென்மையானவராக இருப்பார் என பட‌த்தை பார்த்து விட்டு நினைத்தேன் ஆனால் எழுத்தில் அப்படி இல்லை.

எனது இப்போதைய படம் பலவழிகளில் எனது கையை கட்டிப்போட்டிருக்கின்றது . இந்த விலங்கை நானே கடந்த ஏப்பிரல் மாதத்திற்கு பின்பு போட்டிருக்கின்றேன் . நான் மென்மையானவனா என்பது என்னுடன் நெருங்கிப் பழகும் கள உறவுகளுக்கு மட்டுமே தெரிந்த விடையம் . ஆனால் கருத்துக்களத்தில் எனக்கு நடிக்கத்தெரியாது என்பது உண்மை . உங்கள் அனுமானத்திற்கு நன்றிகள் ரதி அக்கை :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி எதுக்கு 90 வீதம் போட்டிருக்கிறார். பெண்களுக்கா ? குடும்பப் பொறுப்புக்கா ? :D :D

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் அண்ணா - முகம் கிளீன் சேவ், பொன்டிங் தாடி அவளவு எதிர்பார்க்கவில்லை. தலை கொஞ்சம் மயிர் குறைவாக. மேற்கத்தேய நடை உடைத் தெரிவு. பீர் வண்டி (முழுப் படம் போடுங்கப்பா :icon_mrgreen: ) எதிர் பார்த்தது. கொஞ்சம் உடம்பாகவும் இருப்பீர்கள் என நினைத்தேன் :lol: .

தற்கால நாகரிகத்திற்கு ஏற்ற மாதிரி நடையுடை பாவனைகள் இருந்தாலும், தமிழன் என்பதால் மீசையை வைத்திருக்கின்றேன். இடையில் மழித்தபோது மிடுக்குப் போதவில்லை என்று தோன்றிற்று! :icon_mrgreen:

ஆனாலும் தாடியைக் கன்னா பின்னாவென்று வளரவிடுவதில்லை.

தலை மயிர் தற்காலப் பெண்களின் குட்டைமுடியைவிட நீளம் :wub:

முழுப்படம் போட்டு எமது கட்டழகு மேனியைக் காட்டினால் யாழ் களத்தில் பெண்கள் வரவு அதிகமாகும் என்றாலும் அது களத்தின் நோக்கத்திற்குப் பாதிப்பை உண்டாக்கும் என்பதால் அப்படி எல்லாம் செய்யப் போவதில்லை. :icon_mrgreen::lol:

தும்பளையான் கிருபன் விடயத்தில் என்ட கருத்தோடு ஒத்துப் போகிறார் :lol:

எல்லாம் சரியாக இல்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரியாக இல்லையே!

நான்,தும்பளையான்,இன்னுமொருவன் மூவரும் சொல்ல வாறது இது தான் உங்கள் ஒரிஜினல் படத்திற்கும்,உங்கள் கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடக உள்ளது என்பதாகும்

  • கருத்துக்கள உறவுகள்

குகைக்குள் இருக்கும் தன்னைப்போன்ற விலங்கால் தனக்கு ஆபத்து ஏதும் வருமா என்பதை எடைபோட்டுக்கொள்வதற்கான மிகச்சிறந்த சுட்டியாக முகம் அவர்களால் அடையாளங் காணப்பட்டிருந்தாக நம்பப்படுகிறது. இதனால், குகைக்குள் அவர்கள் மிக அருகருகாக இருந்து மற்றையவரின் முகங்களை எடைபோட்டதாக நம்பப்படுகிறது.

மிகவும் ஆராய்ந்து அழகாக எழுதியமைக்கு நன்றி. Life of Pi படித்தேன். கண்களால் பார்க்கக்கூடிய உயிரினங்கள் முகத்தை வைத்துதான் மற்றையவற்றை அனுமானிக்கின்றன. எனவே இயற்கையாக நாங்களும் பிறருக்கு எங்களை ஒரு வகையில் கட்டமைக்கவே விரும்புவோம். என்னதான் நாங்கள் முயறாலும் id இலும் ego இலும் உள்ளதை superego ஆல் தவிர்க்கமுடியாது. எனினும் பலர் வெற்றி பெற்றிருக்கின்றனர், முக்கியமாக வேவுப்படைகளில் இருப்போர்!

சமூகவலைத்தளங்களில் உள்ள troll கள், சிறுவர் சிறுமியரை ஏமாற்ற முனையும் ஃபீடோக்கள் எல்லாம் அதிக நேரத்தைச் செலவழித்து ஒரு கற்பிதமான மனிதர்களை கஷ்டப்பட்டு உருவாக்குகின்றனர். இப்படியானவர்களின் உண்மையான சிந்தனைகளை அவர்களை நேரடியாகக் கண்டாலும் பிரித்துணரமுடியாது.

யாழ் களத்திற்கு வந்தால்..

சுதந்திரமாக முகத்தைக் காட்டி கருத்துக்களைப் பகிர்வதற்கு தற்போதைய அரசியல் சூழலில் தமிழர்களுக்கு இப்போதும் முடியாமலேயே உள்ளது. அதனால்தான் பலர் த்ங்கள் உண்மையான அரசியல் கருத்துக்களை முகமூடிக்குப் பின்னால் இருந்து சொல்கின்றனர். அதேவேளை போலியானவர்களும் முகமூடிகளுக்குப் பின்னால் இருந்து தமது நோக்கத்தை நிறைவேற்ற முயல்கின்றனர். எனவே முகமூடிகளால் சாதகங்களும் உண்டு, பாதகங்களும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முகம் மட்டும்தான் மூடி கிடையாது அது யாழ் களமாக இருந்தாலும் சரி வெளியே வேறு ஊடகங்களாக இருந்தாலும் என்னை அடையாளப் படுத்தித்தான் எழுதுகிறேன். அதனால் எனது எழுத்திற்கான அங்கீகாரத்தினை பெற்றிருக்கிற நேரம் அதிகமான எதிரிவினைகள் நேரடி தாக்குதல் களிற்கும் முகம் கொடுக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் வந்திருக்கின்றது. எழுத்திற்கான அங்கிகாரம் அவற்றிக்கான எதிர் வினைகள் இவை இரண்டும் சமமாக தேவையெனில் முக மூடியை கழற்றிவிட்டு தாராளமாக எழுதலாம். யாம் பெற்ற இன்பம் பெறுக இன்னுமொருவன்

Edited by sathiri

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.