Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி! – ஒரு பெண் போராளியின் உண்மைக் கதை

Featured Replies

[size=5]

vithyarani_padaiyani-150x150.jpg[/size]

[size=5]கூட்டாகக் பாலியல் வல்லுறவு செய்யும் போதே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெற்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர[/size]

[size=5]வித்யா ராணி… 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ‘ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன ‘சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி,

வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி… கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.

உங்களிடம் கருணை தேடியோ, பரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை… ‘இதுதானடா தமிழா… இலங்கையில் இப்போதைய நிலைமை!’ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.

எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம்பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம்.

ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி ‘புக்காரா’ விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், ‘அவர்கள் தமிழர்கள்’ எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர்.

என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது.

சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோது, தம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன்.

நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்? அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்?

தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பது? எமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.

பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?

1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி.பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார்.ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடு தலைக்காகவும் போராடியவர்.ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால், பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!

அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில், பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?

இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!

இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா?

ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால், பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!

என்ன நடந்தது?

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் இரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர்.அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும், நான் மனம் தளராமல் போராடினேன்.எமது போராட்டத்தில் தோற்றுப் போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும், நாங்கள் தோற்று விட்டோம். எமது போராட்டம் தோற்றுப் போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை.முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தபோது, இராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன்எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியாவில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் இராணுவத்தினரால் கூட்டாகக் . பாலியல் வல்லுறவு செய்;யப்பட்டேன் காலை, மாலை, இரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது பாலியல் வல்லுறவு செய்;யப்பட்டேன் எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தைகளின் எ திர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.

அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் -சில போராளிகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். சிங்கள இனவாத அமைச்சர்களாலும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர்.

vithyarani_padaiyani-150x150.jpg

சோதியா படையணியில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் பாலியல் வல்லுறவு செய்தனர் காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் பாலியல் வல்லுறவு செய்யவில்லை. ‘தமிழ்ப் பெண்களைக் பாலியல் வல்லுறவு செய்கிறோம் என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது.

கூட்டாகக் பாலியல் வல்லுறவு செய்யும் போதே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர். குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெற்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கை கொட்டி ரசித்தனர்.

அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றி, அவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்தி, அவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர்.

பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர்.

எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்தவண்ணம் இருந்தேன்!

விசாரணை சித்திரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்?

சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறி, முல்லைத்தீவுக் காடுகளுக்குள் கொண்டுவிட்டனர்.

அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள், பாம்பு, பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது.

பின், ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!

நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?

பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்ற முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம்என அஞ்சினர்.நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்து விடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது.பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு ‘பால்… பால்’ என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!

ஏன், நீங்கள் வேலை தேடவில்லையா?

எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்ன? நான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர்.

பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்… எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை.யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது, அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன்.அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார்.அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான், எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!

யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்?

பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்ரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால், நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.

தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?

அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.

இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர்களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?

(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது)

இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை.

’ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.அதனால்தான் இன்றும் ‘இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்’ என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப் போடுகின்றனர்.எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு விட்டது.எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, ‘எப்போது உங்கள் அடுத்த போராட்டம்?’ என்று கேட்டால், விளக்குமாறால் அடிப்பேன்.(சட்டென ஆற்றாமை பொங்க, குரல் உடைந்து அழுகிறார்.)

இந்தியத் தலைவர்களே… உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்… எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள்.

எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமா? எமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.

ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே… உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமா? போர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா?

கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல்களைக் கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப்பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா?

கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்து, தாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா?

கண்டிருந்தால், நீங்கள் ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!

உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை ‘விபச்சாரி’ என விமர்சித்…’

(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்…) ‘நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!

(பின்குறிப்பு : பேட்டி அளித்தவரின் நலன் கருதி, அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது.)[/size]

[size=5]மேற்படி கட்டுரை விகடனில் எழுதப்பட்டது.[/size]

[size=5]http://www.vikatan.com/article.php?mid=1&sid=756&aid=25940#cmt241[/size]

Edited by nunavilan

  • Replies 76
  • Views 11.3k
  • Created
  • Last Reply

[size=4]எமக்கான ஒரு அரசியல் தீர்வு மூலம் மட்டுமே தீர்வுகளை காணலாம்.[/size]

Edited by akootha

நெஞ்சை பிழியும் யதார்த்தம் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு அடுத்த வேலையை கவனிக்க என்னால் முடியவில்லை. இன்றைய நாளை எப்படி இனி கழிக்க போகிறேன் என்று கூட எனக்கு தெரியவில்லை. மித மிஞ்சிய வேலை பளுவிலும் இந்த கட்டுரை என்னை எதுவுமே செய்ய விடுகிறது இல்லை. என்ன செய்ய போகிறோம். :(

விரக்தியும் ஆற்றாமையும் மட்டும் மிஞ்சி நின்றாலும் அடுத்தபடியை விரைவாக வைக்கவேண்டிய தேவையை மீண்டும் உணர்கிறோம்.

எங்கள் பெண் போராளிகளின் தற்போதைய நிலையை உலகத்துக்கு கொண்டுவந்த ஜூனியர் விகடனுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தான் இப்படி இந்த பெண்களை பாழ்படுத்தினான் என்டால் ஊரில் உள்ள கேடு கெட்ட கிழடுகளும் இதைத் தானே செய்யுதுகள்...எமக்காக போராடினது என்ட‌ ஒரு நன்றி இருக்க வேண்டாம் ஒரு தமிழ்பெண்,தன்ட‌ மகள் மாதிரி,சகோதரி மாதிரி என நினைத்திருந்தால் இப்படிக் கிழடுகள் காசைக் கொடுத்து படுக்க கூப்பிடுவார்களா? இந்த நிலைக்கு யார் கார‌ணம்?

சிங்களவன் தான் இப்படி இந்த பெண்களை பாழ்படுத்தினான் என்டால் ஊரில் உள்ள கேடு கெட்ட கிழடுகளும் இதைத் தானே செய்யுதுகள்...எமக்காக போராடினது என்ட‌ ஒரு நன்றி இருக்க வேண்டாம் ஒரு தமிழ்பெண்,தன்ட‌ மகள் மாதிரி,சகோதரி மாதிரி என நினைத்திருந்தால் இப்படிக் கிழடுகள் காசைக் கொடுத்து படுக்க கூப்பிடுவார்களா? இந்த நிலைக்கு யார் கார‌ணம்?

[size=4]முதலில் நான் காரணம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]முதலில் நான் காரணம்.[/size]

நானும் தான் ஒத்துக் கொள்கிறேன்

புலம் பெயர்ந்த சிலர் இப்போ நாட்டிற்கு திரும்பி மிக வசதியாக வாழ்ந்து கொண்டு ஒவ்வொரு இரவிற்கும் ஒருவருடன் கழிப்பதாக அங்கிருக்கும் நண்பன் சொன்னான் .

எந்த ஒரு சமூகத்திலும் இப்படிப்பட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் .எமது மக்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தி கொடுத்துவிட்ட பின் எந்த நாயும் எதையும் செய்யட்டும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மானத்தை வாங்கிகொண்டு உணவு கொடுத்தவனை விட, பிச்சை கேட்டும் பிச்சை போடாதவன், வேலை கேட்டும் வேலை கொடுக்க பயந்தவன், உதவுகிற நிலை இருந்தும் உதவாமல் இருக்கிற நானும் இழிவானவர்களே, இப்படி பட்ட நிலையில்தான். பயந்துகொண்டுதான் என் சமூகம் வாழ்ந்து ஆகா வேண்டும் என்றால் அதற்க்கு காரணமான நான் அழிந்து போக கடவது.....

Edited by kanneer

  • கருத்துக்கள உறவுகள்

முகத்தில் அறைகின்றன உண்மைகள்

இப்பிடி நிறைய.

இதுக்குத்தான் போராட்டத்துக்குச் சேர்த்த காசை நலிவுற்று வாழும் போராளிகளுக்கு கொடுங்க எண்டது. அது மாத்திரம் தந்திரமாக மறைக்கப்படும்.

நமக்காகப் போராடப் போன சீதேவிகளுக்கே இந்த நிலை.

நாசமாப் போவார்.

  • கருத்துக்கள உறவுகள்

2009 இற்குப் பின்னான நாட்களில் பட்ட வேதனைகள் போராளிகளுக்கு மட்டுமானதல்ல.. 2010 இல் நான் நேரடியாகவே அங்கு சிலரைச் சந்தித்து பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இன்றுவரைக்கும் பலரின் அனுபவங்களைக் கதைகதையாக கேட்கவேண்டிய நிலையில்தான் நான் இருக்கிறேன். அவர்களின் துன்பத்தை கேட்பதற்கு எவரும் இல்லை. புலம்பெயர்ந்த தேசங்களில் இருக்கும் எந்தக்குழுமங்களாலும் அவர்களுக்கான எத்தீர்வையும் உருவாக்கமுடியவில்லை. ஆக வெளியே இருந்து கொடி பிடிப்பதிலும், எவரையும் எதனையும் செய்ய முடியாதபடி முட்டுக்கட்டை போடுவதிலேயுமே காலம் ஓடுகிறது. புலம் பெயர்ந்த மக்களுக்குள் பகுத்தறிவுடன் செயலாற்றக்கூடிய இளையவர்கள் தம்மை வெளிப்படையாக இணைத்து சில விடயங்களை முன்னெடுத்தாலன்றி வேறு வகையில் மீட்சி கிடைக்காது.

2009 இற்குப் பின்னான நாட்களில் பட்ட வேதனைகள் போராளிகளுக்கு மட்டுமானதல்ல.. 2010 இல் நான் நேரடியாகவே அங்கு சிலரைச் சந்தித்து பேசும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இன்றுவரைக்கும் பலரின் அனுபவங்களைக் கதைகதையாக கேட்கவேண்டிய நிலையில்தான் நான் இருக்கிறேன். அவர்களின் துன்பத்தை கேட்பதற்கு எவரும் இல்லை. புலம்பெயர்ந்த தேசங்களில் இருக்கும் எந்தக்குழுமங்களாலும் அவர்களுக்கான எத்தீர்வையும் உருவாக்கமுடியவில்லை. ஆக வெளியே இருந்து கொடி பிடிப்பதிலும், எவரையும் எதனையும் செய்ய முடியாதபடி முட்டுக்கட்டை போடுவதிலேயுமே காலம் ஓடுகிறது. புலம் பெயர்ந்த மக்களுக்குள் பகுத்தறிவுடன் செயலாற்றக்கூடிய இளையவர்கள் தம்மை வெளிப்படையாக இணைத்து சில விடயங்களை முன்னெடுத்தாலன்றி வேறு வகையில் மீட்சி கிடைக்காது.

சகாரா

பழைய தலைமுறை அடித்த பணத்திற்கே வழியைக் காணோமாம். இனி புதிய தலைமுறை தோன்றி ..? அங்குள்ள மக்களின் கண்ணுக்கு முன்னால் கரட்டைக் கட்டுவதா?

[size=4]தப்பிலி,[/size]

[size=4]உங்கள் பார்வையில் நாம் என்ன செய்யலாம்? என எண்ணுகிறீர்கள். [/size]

[size=4]நன்றிகள். [/size]

அகூதா

முன்பே தெரிவித்தபடி போராட்டத்திற்கு என்று சேர்த்த பணத்தைக் கொண்டு அவர்களுக்கு மீள்வாழ்வு அளிப்பது. இது நிச்சயமாக முடியும், முடிந்திருக்கும். கூடியளவில் இது தவிர்க்கப்பட்டது. இனி மறக்கப்பட்டு விடும் என்ற நிலைமை.

அரசியல் / இராஜதந்திரப் போராட்டங்களில் வெற்றியடைந்தால்தான் இதனை நிறைவேற்றலாம் என்றில்லை.

[size=4]நன்றி உங்கள் கருத்திற்கு.[/size]

[size=4]என்னால் பணம் இருந்தால் உதவலாம் என்பதை இன்றைய நிலையில் சாத்தியமாகாத ஒன்றாகவே தெரிகின்றது. காரணம் இராணுவ ஆட்சி.[/size]

[size=4]நீண்ட கால தீர்வாக அரசியல் தீர்வே தேவை என்பது எனது எண்ணம்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களிடம் சமூக அக்கறை குறைவு என்பதும், இலட்சியத்தை அடைய எதையும் பலியாக்கலாம் என்பதும், தேசியத்தை வியாபாரமாக்கியதும் இத்தகைய அவலங்களுக்குக் காரணங்கள்.

நீண்டகால அரசியல் தீர்வு வந்தால் எல்லாம் மறையும் என்பது உண்மைதான். அப்போது இப்படியான அவலங்களில் தற்போது இருப்போரும் "மறைந்து" விடுவார்கள்.

[size=4]

பிச்சைகாரரின் நாடாகும் தமிழீழம்:

[Thursday, 2012-11-01 23:01:17]

யாழ்ப்பாணத்தில் பல நூற்றுக்கணக்கான யுவதிகள் இளவயதில் கர்ப்பம் தரித்து கையில் குழந்தையுடன் பிச்சை எடுக்கின்றனர். இதற்கு காரணம் எம் தமிழீழத்தில் இடம் பெறும் கலாச்சார சீர்கேடாகும். இதற்கு துணை போவது யார்? இலங்கை அரசுடன் சேர்த்து இயங்கும் அரசியல் கட்சிகளும், ஒட்டுக்குழுக்களுமே ஆகும்,

எனினும் ஒரு வேதனைக்குரிய விடயம் என்னவெனில் பிச்சை எடுப்பவர்களின் தூரத்து உறவுகள் புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் சுகபோகங்களுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பதாகும். புலம் பெயர்ந்த தமிழர்களே நீங்கள் ஒருகணம் சிந்தியுங்கள் உங்கள் உறவுகளுடன் உங்களுக்கு என்ன கோபம் இருக்கலாம். ஆனால் உதவிக்கரம் நீட்டுங்கள் நீங்கள் நீரடியாகவோ அல்லது வேறு ஒருவர் மூலமாகவோ உதவுங்கள். ஏனெனில் எம் உறவுகள் வன்னியில் பட்டதுயரம்போல் இந்த உலகத்தில் எவரும் அனுபவிக்கவில்லை. என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

வன்னியில் பல இளைஞர்கள் இன்று பிச்சை எடுத்து திரிகின்றனர் என்றால் பாருங்கோ எம் தமிழீழம் எங்கு போய்க்கொண்டு இருக்கிறது என்று? எமது அண்ணன் பிரபாகரன் எம்முடன் வெளியாகவே இருந்திருந்தால் எமக்கு இந்த நிலை வருமா? என்று இன்று பல தமிழ் மக்கள் தம்மிடையேயும் தமது நண்பர்களிடேயே புலம்புகின்ற தன்மையினை காணாக்கூடியதாக உள்ளது.

-தமிழீழத்தில் இருந்து என்றும் உங்கள் வேந்தன்-

http://seithy.com/br...&language=tamil

[/size]
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் நானும் சொல்கிறேன் தலைவர் இருந்த்திருந்தால் புலம் பெயர் தேசியவாதிகள் இந்த்த ஆட்டம் ஆடமுடியுமா ????????????

[size=4]நன்றி உங்கள் கருத்திற்கு.[/size]

[size=4]என்னால் பணம் இருந்தால் உதவலாம் என்பதை இன்றைய நிலையில் சாத்தியமாகாத ஒன்றாகவே தெரிகின்றது. காரணம் இராணுவ ஆட்சி.[/size]

[size=4]நீண்ட கால தீர்வாக அரசியல் தீர்வே தேவை என்பது எனது எண்ணம்.[/size]

அரசியல் தீர்வுதான் வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்தில்லை. அது வரும் மட்டும் அவர்கள் விலை போக வேண்டுமா?

எனக்கும் இருக்கும் மட்டும்தான் உதவக் கூடியதாக இருந்தது. தனிப்பட்டவர்கள் முடிந்த மட்டும்தான் உதவலாம்.

போராட்டத்திற்குச் சேர்த்த பணம் உரியவர்களுக்குப் போய்ச் சேர்ந்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இராணுவ ஆட்சி தாண்டியும் செய்திருக்கிறார்கள்.

நான் இங்கு குறிப்பிட்டது போராட்டத்திற்கு சேர்த்த பணத்தையும் அதனைக் கையாடிய மின்கம்பங்களில் துயில வேண்டியவர்கள் குறித்து.

இதைத்தான் நானும் சொல்கிறேன் தலைவர் இருந்த்திருந்தால் புலம் பெயர் தேசியவாதிகள் இந்த்த ஆட்டம் ஆடமுடியுமா ????????????

[size=4]தெரிந்தோ தெரியாமலோ இந்த 'தேசியவாதிகள்' என்ற வரையறுக்கப்படாத தேவயில்லாதா சொல்லால் நாம் பிளவு படுத்தப்படுகின்றோம்.[/size]

[size=4]இந்த சொல்லை பாவிப்பது கூட எமக்கு நாமே தலையில் மண் போடுவதற்கு சமன்.[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விகடன் சொல்லித்தான் எம்மவரின் நிலைகள் பலருக்கு தெரிகின்றது??????புலம்பெயர்ந்து புறம்போக்கான ஈழத்தமிழர்களே! இனியாவது சிந்தியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று விழுந்து கும்பிட்டோம் இன்று ?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தினசரி கடைகளில் பொருட்கள் வாங்கும் போது ஒருகணம் எமக்காக போராடியவர்களை சிந்தியுங்கள்.

அது ஆடம்பர பொருட்களாக இருந்தாலும் சரி ....அத்தியாவசிய பொருட்களாக இருந்தாலும் சரி........வாங்கிய பொருளுக்கு கட்டணம் செலுத்தும் போது எமக்காக போராடியவர்களை நினைவில் நிறுத்துவோம்.

ஒரு பிடி சோற்றுக்காக அல்லல்படுபவர்களுக்கு உதவுவோம்.

அரசியல்,அதிகார பேதங்களை மறந்து எமது மண்ணை வைரமாக்குவோம்.

அவர்கள் அலங்கோல வாழ்க்கை வாழ........நாம் அலங்கார வாழ்க்கை வாழ வேண்டுமா?

சிங்களவன் தான் இப்படி இந்த பெண்களை பாழ்படுத்தினான் என்டால் ஊரில் உள்ள கேடு கெட்ட கிழடுகளும் இதைத் தானே செய்யுதுகள்...எமக்காக போராடினது என்ட‌ ஒரு நன்றி இருக்க வேண்டாம் ஒரு தமிழ்பெண்,தன்ட‌ மகள் மாதிரி,சகோதரி மாதிரி என நினைத்திருந்தால் இப்படிக் கிழடுகள் காசைக் கொடுத்து படுக்க கூப்பிடுவார்களா? இந்த நிலைக்கு யார் கார‌ணம்?

யார் காரணம் என்ரால்?

ஜேர்மனி அணு உலையை கட்ட தொடங்க முன்னம் அதனால் வரும் பின்விளைவுகளை தன்னால் சமாளிக்க முடியுமா அதை தாங்க கூடிய சக்தி மக்களிடம் இருக்க என்ற ஆரட்சி எல்லாம் தொடங்கி விட்டு அணு உலையை கட்டினான்.

இங்கை மக்களுக்காக போராட போறம் மக்களை காக்கிறம் நாளைக்கு எங்களை மக்கள் காப்பற்றும் மனநிலைக்கு மக்கள் இருக்கிறார்களா அல்லது அதை தாங்கும் சக்தி இந்த சின்ன இனத்துக்கு இருக்க என்ற ஒரு தூரநோக்கு சிந்தனையுமில்லை( மந்தைகள் தானே என்ற நினைப்பு) அதனால் தான் இந்த நிலை.

Edited by I.V.Sasi

இப்போது கூட சில விடயங்களை செய்வதற்கு காலம் கடந்துவிடவில்லை ஆனால் அதே போலிகள், ஊடகங்களை ஆட்கொண்டு இன்னமும் மக்களை கனவில் மிதக்க வைக்கின்றார்கள் .

யாழில் வந்து கருத்துக்கள் எழுதும் பலரே இன்னும் அவர்களை நம்பி இருக்கும் போது விடிவு என்பது வெகுதொலைவில் தான் என்று படுகின்றது .

எங்களால் முடிந்தவற்றை செய்துவிட்டு இருக்க வேண்டியதுதான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.