Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசிய செயற்பாட்டாளர் மீது பாரிசில் தேசவிரோதிகள் துப்பாக்கிச்சூடு!

Featured Replies

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழீழ தேசிய செயற்பாட்டாளர் ஒருவர் தேசவிரோதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

இன்று மாலை பாரிசில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகம் முன்பாக இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

1996 ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாளன்று பாரிஸ் லாச்சப்பலில் இடம்பெற்ற லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலையின் பாணியில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருப்பதாக சங்கதி-24 இணையத்திற்கு தெரிய வருகின்றது.

இது தொடர்பான முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேயிடத்தில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் பருதி அவர்கள் தேசவிரோதிகளின் வாள்வீச்சுக்கு இலக்காகியமை சுட்டிக் காட்டத்தக்கது.

www.sankathi24.com

  • Replies 240
  • Views 17.7k
  • Created
  • Last Reply

நவ 9, 2012

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழீழ தேசிய செயற்பாட்டாளர் ஒருவர் தேசவிரோதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

KP%20-%20Vinayagam%20New.jpg

இன்று மாலை பாரிசில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலகம் முன்பாக இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

1996 ஒக்ரோபர் மாதம் 26ஆம் நாளன்று பாரிஸ் லாச்சப்பலில் இடம்பெற்ற லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலையின் பாணியில் இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருப்பதாக சங்கதி-24 இணையத்திற்கு தெரிய வருகின்றது.

இதன் பின்னணியில் கே.பி அவர்களால் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் கும்பல் இருப்பதாக தேசிய செயற்பாட்டாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதேயிடத்தில் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கிய உறுப்பினர் பருதி அவர்கள் தேசவிரோதிகளின் வாள்வீச்சுக்கு இலக்காகியமை சுட்டிக் காட்டத்தக்கது.

http://www.sankathi24.com/news/24287/64//d,fullart.aspx

  • தொடங்கியவர்

அதைத்தான் கோ நானும் போட்டன் ஆனால் செய்தியையே துக்கிடுவாங்க எண்டு கொஞ்சம் வெட்டி போட்டன்

நன்றி முழு இணைப்புக்கும்

தொடர்கதைதான் .

Edited by arjun

  • தொடங்கியவர்

[size=2]தளபதி பரிதி பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவு[/size]

[size=2][ வியாழக்கிழமை, 08 நவம்பர் 2012, 09:29.23 PM GMT ][/size]

[size=2]canada1.jpg[size=3]தளபதி பரிதி இன்று பிரான்ஸில் இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.[/size][/size]

[size=3]தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான பரிதி அவர்கள் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரின் நயவஞ்சக துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வீரச்சாவடைந்துள்ளார்.

கடந்த வருடமும் இதே காலப்பகுதியிலேயே பரிதி பிரான்சில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் கத்திக் குத்துக்குள்ளானார்.

இரவுவேளை இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்வருடமும் சூட்டுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என்பதனால் இவரை இலக்கு வைத்து தாக்கியவர்கள் ஒரு குழுக்கள் தான் என அறியமுடிகின்றது.

மாவீரர் நாள் நெருங்கிவரும் இவ்வேளையில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் வீரச்சாவடைந்தமை ஈழத் தமிழர் மத்தியில் பேரிழப்பு ஆகும்.[/size]

canada1.jpg

மூலம்: http://www.canadamirror.com/international/968.html

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

எதிர் பார்த்ததுதான் . இப்பிடி ஏதாவது நடந்து கடைசியிலை பிரான்சிலை மா வீரர் தினமும் நடக்க விடாமல் பிரெஞ்சு அரசு தடை கொண்டு வரும் நிலை வரும். அதனாலை இந்த சொத்து சண்டை பிரிக்கிறது மாவீரர் நாள் கொண்டாடுறதை யார் பெரிதெண்டு சண்டை பிடிக்காமல் சேந்து செய்யுங்கோ வருகிற வருமானத்திலை பாதியை பாதிக்க பட்டவைக்கு அனுப்புங்கோ எண்டு கடந்த வருடம் நேரை இருத்தி வைத்து கதைச்சு களைச்சு போய் விட்டிட்டம். இனி ஆளையாள் போட்டிட்டு இலங்கையரசு .. கே.பி எண்டு கதை விடலாம். நண்பன் றேகனிற்கு அஞ்சலிகள். :(

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளபதி பரிதிக்கு வீரணக்கம்.

[size=4]பிரான்ஸ் நாட்டு காவல்துறை இது பற்றி என்ன செய்கிறது? என்ன சொல்லுகின்றது? [/size]

[size=4]லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரின் படுகொலையை செய்தவர்கள் இனம் காணப்பட்டனரா ?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

என்னய்யா சொல்லுறியள்

  • தொடங்கியவர்

தேசத்தை நினைத்து தேசத்திற்காக உயிர் நீர்த்த பருதி அண்ணாவிற்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மக்களை நோக்கி சிங்கள அரசு நீட்டிய நேசக்கரத்தின் பிரதிபலிப்பு.

கண்ணீரஞ்சலிகளும் வீரவணக்கமும்.

குற்றவாளிகளை இனங்கண்டு தண்டிக்க வேண்டிய பொறுப்பு பிரான்ஸ் அரசுக்குண்டு.

Edited by nedukkalapoovan

தேசத்தை நினைத்து தேசத்திற்காக உயிர் நீர்த்த பருதி அண்ணாவிற்கு வீர வணக்கங்கள்

ஆனால் நாங்கள் மாவீரர் தினத்தை வாரமாக்கி வாரத்தை மாதமாக்கி கணணியிலை கொண்டாடுவம் :( :( . பருதி அண்ணைக்கு வீரவணக்கங்கள் :( :( .

[size=4]செயற்பாட்டாளருக்கு வீர வணக்கங்கள் ![/size]

[size=4]கோத்தா உட்பட்ட சிங்களம் புலம்பெயர் மக்களை அழிக்க உறுதிபூண்டு நிற்கிறது என்பதை இந்தப்படுகொலை காட்டி நிற்கின்றது. [/size]

[size=4]நாம் ஒற்றுமையாக அவதானமாக செயல்பட வேண்டிய காலங்கள் இவை. [/size]

மிகவும் வேதனையான செய்தி..இப்படியான செயல்கள் இன்னும் இன்னும் மக்கள் போராட்டங்களில் இருந்து தம்மை அந்நியப்படுத்தத்தான் உதவும்.

இதன் பின்னணியில் கே.பி அவர்களால் உருவாக்கப்பட்ட தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் கும்பல் இருப்பதாக தேசிய செயற்பாட்டாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எந்தவொரு விசாரணையும் இன்றி சம்பவம் நடந்து சில மணி நேத்துக்குள் எடுத்த எடுப்பில் எவ்வாறு இவர்கள் இப்படி குற்றம் சுமத்துகின்றனர்?

எந்தவொரு விசாரணையும் இன்றி சம்பவம் நடந்து சில மணி நேத்துக்குள் எடுத்த எடுப்பில் எவ்வாறு இவர்கள் இப்படி குற்றம் சுமத்துகின்றனர்?

ம்ம்.அதுதான் ஈனத் தமிழன். ஒரு மனிதனி மரணச்செய்தியிலும் அரசியலை புகுத்துவார்கள்.

எந்தவொரு விசாரணையும் இன்றி சம்பவம் நடந்து சில மணி நேத்துக்குள் எடுத்த எடுப்பில் எவ்வாறு இவர்கள் இப்படி குற்றம் சுமத்துகின்றனர்?

[size=4]செய்தியை எழுதியவர்களுக்கு சில உண்மைகள் தெரிந்திருக்கவேண்டும். யார் அழைத்தார்கள்? ஏன் அழைத்தார்கள்? [/size]மற்றும் முன்னைய கத்திக்குத்து சம்பவம் என பலத்தையும் தெரிந்தவர்கள் இந்த குற்றத்தை முன் வைத்திருக்கலாம்.

[size=1]

[size=4]சிங்களம் தவிர்ந்த வேறு யாரும் கொல்லும் அளவிற்கு செல்ல மாட்டார்கள் என நம்புகிறேன். [/size][/size]

[size=1]

[size=4]இந்த விடயத்தில் பிரான்ஸ் அரசும் ஏனோ தானோ என்று இருப்பதாகவே தெரிகின்றது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ரீகன் 90 களில் தீவுப்பகுதி பொறுப்பாக இருந்தவர் . ரீகன் அண்ணா விற்கு வீர வணக்கங்கள்

சிங்களம் தவிர்ந்த வேறு யாரும் கொல்லும் அளவிற்கு செல்ல மாட்டார்கள் என நம்புகிறேன்.

இந்த விடயத்தில் பிரான்ஸ் அரசும் ஏனோ தானோ என்று இருப்பதாகவே தெரிகின்றது.

அகூதா, இதில் சிங்களத்தைப் நோக்கி சுட்டு விரலை நீட்டியதை விட உடனடியாக கேபி, தலைமைச் செயலகம் போன்றவற்றை இழுத்து எழுதியமையால் தான் கேட்டேன்.

அகூதா, இதில் சிங்களத்தைப் நோக்கி சுட்டு விரலை நீட்டியதை விட உடனடியாக கேபி, தலைமைச் செயலகம் போன்றவற்றை இழுத்து எழுதியமையால் தான் கேட்டேன்.

கே.பி இப்போதும் தமிழ் தானா?

Edited by எல்லாள மகாராஜா

பிரான்ஸ் நாட்டில் படுகொலை செய்யப்பட்ட தளபதி பரிதி/ரீகன்அவர்களுக்கு வீரவணக்கங்கள்.

கொலை செய்தது சிங்கள இனவாதிகளா அல்லது அவர்கள் பெயரில் தமிழ் ஈனப்பிறப்புக்களா?

Edited by இசை ஆர்வலன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=3]தமிழ் தேசிய விடுதலைப் போரில் வீர சாவினை அணைத்திட்ட ஆயிரமாயிரம் வீரர்களின் வரிசையில் பருதி அண்ணாவும் இணைந்து விட்டார். வீர வணக்கம் [/size]

Edited by Vily

[size=4]Un des dirigeants du Comité de coordination tamoul en [/size]France[size=4] a été tué par balles jeudi soir, rue des Pyrénées, dans le XXe arrondissement de [/size]Paris[size=4], ont informé des sources policières. Une[/size]enquête[size=4] a été ouverte afin de déterminer les circonstances de ce drame.[/size]

[size=4]Jeudi soir, alors qu'il sortait des locaux d'une association culturelle et socio-éducative tamoule, situés au 341 rue des Pyrénées, l'homme, âgé d'une cinquantaine d'années, connu dans la communauté tamoule sous le nom de Parithi, a été tué par balles. [/size]

[size=4]Les meurtriers présumés, deux individus cagoulés, avaient fait irruption à moto à l'angle de la rue de l'Ermitage avant de tirer à trois reprises sur leur victime. Selon les policiers, qui n'ont pas indiqué si les suspects avaient été interpellés, ce meurtre serait lié à un différend entre des gens de la communauté tamoule.[/size]

[size=4]L'homme aurait déjà été victime d'une agression sur l'espace public, au sabre, l'an dernier, ont précisé des sources policières. Il avait été sérieusement blessé.[/size]

[size=4]Le Comité de coordination tamoul en France avait été dissout en février 2012 par la cour d'appel de Paris. Il était soupçonné de servir de vitrine légitime aux Tigres tamouls (LTTE), une organisation considérée comme terroriste par l'Union Européenne depuis 2006.[/size]

http://www.leparisie...012-2304415.php

Un homme tué par arme à feu à Paris

Un ressortissant sri-lankais a été tué par arme à feu dans le XXe arrondissement de Paris jeudi soir.

[size=4]avatar_45x45.png

Cécile Ollivier | Florian Rivais | AFP

Le 08/11/2012 à 22:01[/size]

[size=4][size=4]-+[/size]

[size=4]Imprimer

cet article[/size]

[size=4]réagir[/size][/size]

[size=4]326862.jpg[/size]

[size=4]Rue des Pyrénées jeudi soir à Paris, sur le lieu de la fusillade (BFMTV)[/size]

[size=4]1 / 1[/size]

[size=4]

[size=4]

Un Sri-lankais a été tué par balles par un motard cagoulé, jeudi soir, rue des Pyrénées dans le 20e arrondissement de Paris, a appris BFMTV.

De nombreuses douilles ont été retrouvées sur place.

La victime serait un représentant de la communauté tamoule, selon nos informations.

L'hypothèse d'un règlement de comptes dans la communauté sri-lankaise a été évoquée, mais toutes les pistes restent ouvertes en l'état des investigations.

[/size]

[size=4] [/size]

"Connu des services de police et de justice"

[size=4]

Vers 21h30, cet homme, un quinquagénaire connu des services de police et de justice, a été visé rue des Pyrénées dans le XXème arrondissement de coups de feu. Il est décédé peu après, a ajouté la source sans plus de détail.

L'auteur des coups de feu a pris la fuite.

L'enquête a été confiée à la brigade criminelle de la police judiciaire parisienne. [/size] [/size]

http://www.bfmtv.com/societe/paris-un-tireur-a-moto-tire-un-homme-378360.html

பரிதிக்கு எனது வீர வணக்கங்கள்

Edited by navam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.