Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் பண்டிகை.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களாகிய நாம் அன்று தொடக்கம் கொண்டாடிய சில பண்டிகைகள் ஏதோ பல காரணங்களினால் இன்று புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. கொண்டாடப்பட்ட பண்டிகைகள் எமக்குரியவை அல்ல.. என விவாதிக்கப்படுகின்றது.

உண்மையில் தமிழர்கள் கொண்டாடக்கூடிய, உரிமையுள்ள பண்டிகைகள் எவை? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுமோவின் பதிலுக்கு காத்திருக்கவும்

[size=4]உங்கள் கேள்வி சிந்திக்க வைத்துள்ளது.[/size]

[size=1][size=4]அநேகமான எமது கொண்டாட்டங்கள் மதம் சார்ந்தவை, கோயில் கொடி ஏற்றங்களுடன் சம்பந்தப்பட்டவை. அவை தவிர்த்தால் : தை மாத பொங்கல் ; சித்திரை மாதப்பிறப்பு; ஆடிப்பிறப்பு ஆகியன மரபு சார்ந்தவை. [/size][/size]

[size=1][size=4]தீபாவளியை சித்திரை வருடப்பிறப்பை, ஆங்கில வருடத்தை தவிர்த்தால் பெரியளவில் எமக்கு என ஒரு பாரிய கொண்டாட்டமும் இல்லை போல தெரிகின்றது. [/size][/size]

[size=1][size=4]அதேவேளை மேற்குலகில் சகல கொண்டாட்டங்களும் விற்பனையை மையமாக கொண்டவை. தாயகத்தில் கூட அந்த நிலை இப்பொழுது. [/size][/size]

[size=4]மறுபக்கத்தில் புலம்பெயர் தேசங்களில் இயந்திர வாழ்க்கை, எனவே பண்டிகை தேவை. தாயகத்தில் ஏனோ ஒவ்வொரு நாளும் பண்டிகை போன்ற ஒரு உணர்வு :D[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கல், சித்திரை வருசப்பிறப்பு, ஆடிப்பிறப்பு போன்றவற்றை கொண்டாடலாம்.

எமக்கென்று நாடு கிடைத்தால்... தேசியத்தலைவரின் பிறந்தநாளையும்... முக்கிய திருப்பங்கள் ஏற்பட்ட போர்முனை மாற்றங்களையும் விடுமுறை அறிவித்து பண்டிகையாகக் கொண்டாடலாம். மாவீரர் தினத்தை... பண்டிகையாகக் கொண்டாடாமல் ஒரு நாள் அரச விடுமுறை விட்டு..., அந்த வாரம் முழுக்க தமிழீழத் தேசியக் கொடியை... அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு... மாவீரருக்கு அஞ்சலி செலுத்தலாம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தைப்பொங்கல், சித்திரை வருசப்பிறப்பு, ஆடிப்பிறப்பு போன்றவற்றை கொண்டாடலாம்.

எமக்கென்று நாடு கிடைத்தால்... தேசியத்தலைவரின் பிறந்தநாளையும்... முக்கிய திருப்பங்கள் ஏற்பட்ட போர்முனை மாற்றங்களையும் விடுமுறை அறிவித்து பண்டிகையாகக் கொண்டாடலாம். மாவீரர் தினத்தை... பண்டிகையாகக் கொண்டாடாமல் ஒரு நாள் அரச விடுமுறை விட்டு..., அந்த வாரம் முழுக்க தமிழீழத் தேசியக் கொடியை... அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு... மாவீரருக்கு அஞ்சலி செலுத்தலாம்.

இதுதான் என் கருத்தும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]உங்கள் கேள்வி சிந்திக்க வைத்துள்ளது.[/size]

[size=1][size=4]அநேகமான எமது கொண்டாட்டங்கள் மதம் சார்ந்தவை, கோயில் கொடி ஏற்றங்களுடன் சம்பந்தப்பட்டவை. அவை தவிர்த்தால் : தை மாத பொங்கல் ; சித்திரை மாதப்பிறப்பு; ஆடிப்பிறப்பு ஆகியன மரபு சார்ந்தவை. [/size][/size]

[size=1][size=4]தீபாவளியை சித்திரை வருடப்பிறப்பை, ஆங்கில வருடத்தை தவிர்த்தால் பெரியளவில் எமக்கு என ஒரு பாரிய கொண்டாட்டமும் இல்லை போல தெரிகின்றது. [/size][/size]

[size=1][size=4]அதேவேளை மேற்குலகில் சகல கொண்டாட்டங்களும் விற்பனையை மையமாக கொண்டவை. தாயகத்தில் கூட அந்த நிலை இப்பொழுது. [/size][/size]

[size=4]மறுபக்கத்தில் புலம்பெயர் தேசங்களில் இயந்திர வாழ்க்கை, எனவே பண்டிகை தேவை. தாயகத்தில் ஏனோ ஒவ்வொரு நாளும் பண்டிகை போன்ற ஒரு உணர்வு :D[/size]

இவ்விரு கொண்டாட்டங்களும் அதாவது சித்திரை வருடப்பிறப்பும், தீபாவளியும் தமிழர்களுக்குரியதல்ல என பலர் பேசிக்கொள்கிறார்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகை விளக்கீடு என்பது, தமிழர்களின் விழாவாகக் கொண்டாடப் பட்டதற்குப் பல சான்றுகள் உள்ளன!

இதை ஊரில் இருக்கும்போது, எங்களில் பலர் கொண்டாடியிருக்கின்றோம்!

இந்தத் தனித்துவமான தமிழர் பண்டிகை தான், திவாலியால் ஊடுருவப் பட்டு, இப்போது தீபாவளியாகி நிற்கின்றது என்பதே எனது அவதானமாகும்!

தமிழனது, தனித்துவமான பண்டிகைகள் பல, தமிழனின் தனித்துவம் அழிக்கப் படவேண்டும் என்பதற்காகவே, பல புனைகதைகள் மூலம் திசை மாற்றப்பட்டிருக்கலாம்!

விக்கியில் உள்ள இணைப்பிலிருந்து எடுத்தது!

சங்கநூல்களில் கார்த்திகை

கார்த்திகை மாலை-விளக்கு வீரை என்னும் ஊரிலிருந்துகொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் வெளியன். அவன் மகள் தித்தன். அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது. பனி பொழிந்தது. (இந்தக் காலத்தில் போருக்குச் சென்ற தன் தலைவன் மீள்வான் எனத் தலைவி நம்புகிறாள்.) இது சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக்காட்டுகிறது. [2][size=3]

கார்த்திகை பற்றிச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.[/size][size=3]

கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது.[3][/size][size=3]

அழல் என்பது கார்த்திகை-நாளைக் குறிக்கும். ஆடு என்னும் மாதத்தில் வரும் அழல்-நாள் என்பது, மேடம் என்னும் சித்திரை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளைக் குறிக்கும். [4][/size][size=3]

ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம்.[5][/size][size=3]

ஆரல் என்னும் பெயரிலும் சங்கப்பாடல்களில் குறிப்புகள் உள்ளன.[/size][size=3]

எரி என்பது கார்த்திகை மாதம். சையம் என்னும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மழை பொழிந்து வையை ஆற்றில் வெள்ளம் வரும் காலம். [6][/size]

[size=3][தொகு][/size]சூடாமணி நிகண்டு

கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்கள் தெறுகால், தேள், விருச்சிகம் கார்த்திகை நாளைக் குறிக்கும் சொற்கள் அங்கி அளக்கர் அளகு அறுவாய் ஆரல் இறால் எரிநாள் நாவிதன்

[size=3][தொகு][/size]மேலும் பார்க்க

[size=3][தொகு][/size]அடிக்குறிப்புகள்

  • சொக்கப்பானை: சுவர்க்கப் பாவனை என்பதன் திரிபு
  • வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக் கையற வந்த பொழுது – நற்றிணை 58
  • கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் சீர்த்து விளங்கித் திருப்பூத்தல் – பரிபாடல் திரட்டு 10
  • ஆடு இயல் அழல் குட்டத்து – புறநானூறு 229 பாடலுக்குத் தரப்பட்டுள்ள பழைய உரையும், டாக்டர்.உ.வே.சா. குறிப்புரையும்
  • அகலிரு விசும்பின் ஆஅல் போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை – மலைபடுகடாம் – 10

  • விரிகதிர் மதியமொடு வியல்விசும்பு புணர்ப்ப எரிசடை எழில் வேழம் தலை எனக் கீழிருந்து தெருவிடைப் படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கை – பரிபாடல் 11. இதற்கு டாகடர்.உ.வே.சா எழுதியுள்ள குறிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]இரண்டு திரிகளில் ஒரே விடயம் பேசப்படுவது சரியா என்று தெரியவில்லை. குமாரசாமி அண்ணா எழுதியதை நான் கவனிக்கவில்லை பரவாயில்லை. உண்மையில் தமிழர்களின் கொண்டாட்டங்களாக தைப்பொங்கலும் ஆடிப்பிறப்பும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்பட்ட மதிக்கான விழாவான கடலாடு விழாவுமே எனக்குத் தெரியும். தைப்பொங்கலை தமிழர் மூன்று நாட்கள் கொண்டாடியதாக வாசித்திருக்கிறேன். இதில் காளை அடக்குவது பெரிதாகக் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. தமிழர்கள் விதைக்கும் போது , அறுவடை முடிந்தபின் கூத்துக்களை நடத்தி கூடிக் களித்துள்ளனர். அப்பொழுதே ஆரியர் தமிழருள் புகுந்து அனைத்தையும் தம்வசப் படுத்தியதால் மன்னர்களே அவர்கள் சொற்படி கேட்டு ஆடும் பாவைகள் ஆனபின் எமக்கென எதை விட்டுவைத்திருக்கப் போகின்றனர். அவர்கள் வகுத்த விழாக்களையே தமிழன் தனதாகக் கொண்டாடப் பழகிக் கொண்டுவிட்டான். அது இன்றுவரை தொடர்கின்றது. தமிழர்கள் தமக்கென பின்னாளிலாவது விழாக்களை உண்டுபண்ணி இருக்கலாம். அப்படிச் செய்ததாகத் தெரியவில்லை.தமிழரைத் தமிழராய் இருக்கவைக்கத் தமிழர் ஒன்றையும் தமக்கெனச் செய்யாதது பெரும் தவறுதான். அதனால்த் தான் இன்றைய இளம் சமுதாயத்தையும் எம்பக்கம் திருப்ப முடியாதுள்ளது. எப்பொழுதும் ஆடல் பாடல் போன்றவை தான் அனைவரையும் கவரக் கூடியது. முன்னை நாளில் பெண்கள் தனியாகவும் ஆண்களுடன் சேர்ந்தும் ஆடல் பாடல்களில் ஈடுபட்டதாகவும், ஆரியரே பெண்களை அடக்கி அவற்றை எல்லாம் நிறுத்தி விட்டனர் மன்னர் காலத்திலேயே என வாசித்துள்ளேன். கோமகன் போற விடய ஞானம் உள்ளவர்கள் தான் இவை பற்றித் தெளிவாகக் கூற முடியும்.நான் அரை குறை.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை.. கார்த்திகை விளக்கீடு வேறு ஒரு நாளில்தானே வரும்? அதுதான் உண்மையான விளக்குகளின் வரிசை.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை.. கார்த்திகை விளக்கீடு வேறு ஒரு நாளில்தானே வரும்? அதுதான் உண்மையான விளக்குகளின் வரிசை.. :rolleyes:

உண்மை தான்!

விளக்கீட்டின் முக்கியத்துவத்தை, இல்லாமல் செய்வதற்காக, தீபாவளி தமிழ் நாட்டில் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கலாம்!

தீபாவளி, ஜைனர்களினதும், பிற்காலத்தில் சீக்கியர்களினதும் பண்டிகையாகும்!

378375_436984336381452_920797023_n.jpg

[size=5]தீபாவளி நிகழ்வை அமெரிக்காவில் ஒபாமாவும் மனைவியும் [/size]

[size=5]தீபம் ஏற்றி தொடக்கி வைத்தார்கள்[/size]

[size=4]நாமும் அரசியல் காரணமாக தீபாவளி கொண்டாட வேண்டிய தேவை உள்ளது? [/size]

  • கருத்துக்கள உறவுகள்

தீபாவளி கான்சலேஷன் இப்போதைக்கு இல்லை.. :D அமெரிக்காவில் தீபாவளி கொண்டாடக்கூடியதா இருக்கு.. ஈழத்தில் இல்லை என்பதே இப்போதைய செய்தி.. :rolleyes:

சித்திரை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது சமய நம்பிக்கை உள்ளவர்களின் வாதம். உழைப்பவர்கள் கொண்டாடும் தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என்பது தமிழறிஞர்களின் வாதம். அதற்கேற்ப தமிழக அரசு தை முதல் நாளையே தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருக்கிறது. ஆனால் இவ்விரண்டு வாதங்களையும் மறுத்து தைப்பூசம் தான் தமிழ்ப்புத்தாண்டு என்கிறார் ஆய்வாளர் தொ.பரமசிவன். தமிழர்களின் சமயங்கள், நம்பிக்கைகள், திருவிழாக்கள், தொன்மங்கள், வழிபாடுகள் எனப் பல அம்சங்கள் குறித்தும் ஆய்வுபூர்வமாக எழுதி வரும் தொ.பரமசிவத்தின் பொங்கல் குறித்த கருத்துக்கள் வியப்பின் விளிம்புக்கு அழைத்துச் செல்பவை.

“தமிழகத்தில் கொண்டாடப்படும் வேறெந்தப் பண்டிகைகளையும் விடவும் பொங்கலுக்குச் சிறப்பான தனித்துவம் உண்டு. இரண்டு அம்சங்களில் பொங்கல் மற்ற பண்டிகைகளில் இருந்து வேறுபடுகிறது. முதலாவதாக இது ஒரு தேசிய இனத் திருவிழா. சாதி, சமயங்களுக்குள் மற்ற பண்டிகைகள் சிறைப்பட்டுக் கிடக்க, பொங்கல் மட்டும் ஓர் இனத்திருவிழாவாகத் கொண்டாடப்படுகிறது. இரண்டாவதாக, பொங்கல் என்பது தீட்டு அணுகாத திருவிழா. பொங்கலுக்கு பிறப்பு, இறப்பு தீட்டுக்கள் கிடையாது. ஒரு வேளை பொங்கலன்று காலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலும், மிக விரைவாகச் சடங்குகளை முடித்துவிட்டு, வீட்டைப் பூசி மெழுகிப் பொங்கல் கொண்டாடும் பழக்கம் இன்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ளது.

சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு ஆகிய மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் உயர் சாதியினர் எனச் சொல்லப்படுபவர்களால் விலக்கப்பட்டவை. இன்றும் பெருங்கோயில்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவே பொங்கல் எளிய மக்களின் இனிய கொண்டாட்டம் என்பதற்குச் சாட்சி.

தைப்பொங்கலை அடுத்து தென்மாவட்டங்களில் கொண்டாடப்படும் திருவிழா சிறுவீட்டுப் பொங்கல். மார்கழி மாதம் முப்பது நாட்களும் அதிகாலையில் வாசல் தெளித்துக் கோலமிட்டு, சாணத்தில் பூ சொருகி வைக்கும் பழக்கம் பீர்க்கு, பூசணி, செம்பருத்தி ஆகிய பூக்களே சாணத்தில் செருகப்படும். மாலையில் வாடிவிடும் இந்த பூக்களைச் சாணத்துடன் சேர்த்துக் காயவைத்துவிடுவார்கள். பொங்கல் முடிந்து 8-15 நாட்கள் கழித்து சிறுவீட்டுப்பொங்கல் கொண்டாடப்படும். பெண் பிள்ளைகளுக்காகவே வீட்டுக்குள் களி மண்ணால் ஆன சிறு வீடு கட்டப்படும். பொங்கல் அன்று சிறு வீட்டு வாசலில் பொங்கலிடப்படும். பிறகு, பொங்கலையும் பூக்களால் ஆன எருத்தட்டுக்களையும் பெண்கள் ஆற்றில் விடுவர்.

‘மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர்’ என்னும் திருப்பாவைப் பாடல் பலரும் அறிந்த ஒன்று. ஆனால், சங்க இலக்கியங்களில் தை நீராடல் குறித்தும் குறிப்பிடப்படுகிறது. ‘தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதி’ என்கிறது பரிபாடல். இங்கே நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது, ஆண்டாள் தன் திருப்பாவையில் மார்கழி முதல் நாளைக் குறிப்பிடவில்லை. மதிநிறைந்த நன்னாள் என்றுதான் குறிப்பிடுகிறார். மதிநிறைந்த நன்னாள் என்பது பௌர்ணமி.

எனவே, திருப்பாவை நோன்பு மார்கழிப் பௌர்ணமியில் தொடங்கி தை மாதம் பௌர்ணமியில் முடிகிறது. தைப்பூசம் என்பது தை பௌர்ணமி. தமிழ் மாதங்கள் அனைத்தும் பௌர்ணமியில் இருந்தே தொடங்குகின்றன. எனவே, தைப்பூசம் என்பதுதான் தமிழ்ப் புத்தாண்டு. மார்கழி நீராடலில் தொடங்கும் திருப்பாவை நோன்பு தை நீராடலில் முடிகிறது. இந்தக் காலகட்டம் தான் சிறுவீட்டுப் பொங்கல் கொண்டாடப்படும் காலகட்டம்.

தமிழ்ப்புத்தாண்டு பற்றிப் பேசுகிற இருதரப்பாரும் இந்த விஷயத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை. நமது பண்பாடு குறித்த புரிதலுடன்தான் நாம் தமிழ்ப்புத்தாண்டு குறித்த விஷயத்தை அணுக வேண்டும்.

உழைக்கும் மக்கள் மற்றும் வீட்டுப் பெண்களின் நம்பிக்கைகள் சார்ந்து கொண்டாடப்படும் இந்தத்திருவிழாக்கள் தமிழர்களின் நன்றி உணர்வை வலியுறுத்துபவை. வெப்ப மண்டல நாடுகளில் அறுவடைத் திருநாட்கள் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகின்றன. மற்ற பண்டிகைகளில் நாம் பிராத்தனைகளை முன்வைக்கிறோம். வேண்டுதல்களையும் கோரிக்கைகளையும் முன் வைக்கிறோம். ஆனால், அதற்கு மாறாக பொங்கலில் நமது வாழ்க்கைக்கு அடிப்படையான உழவர்களுக்கும், சூரியனுக்கும், மாடுகளுக்கும் நன்றி செலுத்துகிறோம். இப்படிப் பல்வேறு அம்சங்களில் மாறுபட்டு விளங்குகிற பொங்கலைக் கொண்டாட வேண்டியது ஒவ்வொரு தமிழரின் கடமை” என்கிறார் தொ. பரமசிவம்.

தமிழர் பண்பாடு குறித்து, பல நுட்பமான விஷயங்களைப் பேசும் தொ.பரமசிவம் போன்றவர்களின் அறிவுப் பொங்கலும் தமிழர்களுக்கும் அவசியமானதே!

http://maduraivaasagan.wordpress.com/2011/04/11/%E0%AE%A4%E0%AF%8A-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன். நானும் எத்தனையோ நூல்கள் வாசித்துள்ளேன். ஆனால் பல நூல்கள் வாசித்தவுடன் மறந்துவிடும்.எனக்கு மறதி அதிகம். இத்தனை விடயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்களே என பொறாமையாக இருக்கிறது எனக்கு.

நன்றி கோமகன். நானும் எத்தனையோ நூல்கள் வாசித்துள்ளேன். ஆனால் பல நூல்கள் வாசித்தவுடன் மறந்துவிடும்.எனக்கு மறதி அதிகம். இத்தனை விடயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறீர்களே என பொறாமையாக இருக்கிறது எனக்கு.

என்னில் எதுவும் இல்லை . உங்களைப்போன்ற அறிவிலும் , அனுபவத்திலும் , மூத்தோர்களது ஆசீர்வாதங்களே எனை வழிநடத்துகின்றன :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]என்னைக் கிழவியாக்கி விட்டீர்கள்.சரி போகட்டும்.அறிவும் அனுபவமும், ம் உங்களைவிட, சந்தர்பமே இல்லை கோ.[/size]

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வருடம் கார்த்திகை விளக்கீடும்,மாவீரர் தினமும் ஒரே நாளில் வருகுதுதாம்...ஊரிலும் அதே நாள் தானாம் கார்த்திகை விளக்கீடு...இப்ப என்ன செய்வீங்கள்,இப்ப என்ன செய்வீங்கள் என்று ஆமியைப் பார்த்து பாடுங்கோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.