Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிரியைவிட விஷமுடைய போலி தமிழுணர்ச்சியாளர்கள்

Featured Replies

ராசா வேஷம் கலைச்சு போச்சு டும் டும் டும் டும்.....

"களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களைப் புணரும் எதிரியின் வக்கிரத்தைவிடக் கேவலமானது மண்ணின் பெயரால் மக்களிடம் வசூலித்த பணங்களை களவெடுத்து தமது சந்ததிக்கு சொத்துச் சேர்க்கும் நபர்களுடையது என்பதையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது"

வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறதாம்.

எந்த வரலாறு...? யாரால் யாருக்கு?, எப்போ எங்கே தீர்மானிக்கப்பட்ட, இடித்துரைக்கப்பட்ட வரலாறு...?

ஆமாம் வரலாறு தனது அவிழ்த்துப்போட்ட கூந்தலோடு, நடுத்தெருவில் நட்டமேனிக்கு நின்று எல்லோரையும் எலாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

வங்கிகளிலும் வைப்பிட முடியாமல், சரிபங்கு பிரிக்கவும் முடியாமல் பூட்டிய இரகசிய நிலஅறைக்குள் சக்குப் பிடித்து யூரோக்களாகக் கிடக்கும் மக்களின் இரத்தமும் வியர்வையுமான உழைப்பையும் வரலாறு கவனித்துக்கொண்டேதான் இருக்கிறது.

மண்மீட்புப் போராட்டத்துக்கென மக்களிடம் சேகரிக்கப்பட்ட நிதியில் பினாமி பெயர்களில் தொடங்கப்பட்ட வர்த்தக ஸ்தாபனங்களை யார் யார் பங்கு பிரித்துக் கொள்வதென நடக்கும் பங்காளிச் சண்டைகளையும், வரி கட்டாத ஸ்தபனமென கூட இருந்தவனையே நோர்வேச் சட்டத்துக்குக் காட்டிக் கொடுத்து நடுத்தெருவுக்குக் கொண்டு வந்த நிகழ்வுகளையும் இதே வரலாறுதான் கவனித்துக் கொண்டே இருக்கின்றது.

2009இல் எதிரி புலிகளை வீழ்த்தியதற்குப் பின் வெளி நாடுகளிலிருந்து எதிரியின் வாசலுக்கு ஓடிச் சென்று உல்லாச விடுதிக்கும், சாராயக் கடைக்கும் சொகுசு பேரூந்துக்கும், தேயிலைத் தோட்டத்துக்கும், கொழும்பு13இல் தொடர்மாடிக் கட்டிடங்கள் வாங்கவும் அனுமதிப் பத்திரத்துக்கு கியூ வரிசையில் யார் யார், புலம்பெயர் எந்தெந்த புரட்சி முக்கியஸ்தர்கள் நின்றார்கள் என்பதையும் வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.

இப்படி ஏகப்பட்டதை வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது, எதிரியால் கொல்லப்பட்ட தலைவனுக்கே இன்னமும் அஞ்சலி செலுத்த முடியாத தந்திர அரசியலையும்கூட இதே வரலாறுதான் கவனித்துக்கொண்டிருக்கிறது.

"வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது" என்று சொல்வதிலுள்ள (காசு தராதவர்களை நோக்கி "நாட்டுக்கு வருவியள்தானே...?" என்பது போன்ற மிரட்டலில் ஏகாதிகாரத் தொனி பொதிந்து கிடப்பதையும் இதே வரலாறுதான் கவனித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு சமூகத்தையோ, அல்லதொரு அமைப்பையோ, அல்லது ஒரு குழுவையோ...., ஏன், ஒரு தனி மனிதனையோ "நீ இன்னதுதான் செய்யவேண்டும், இன்னது செய்யக்கூடாது" என்று சொல்வதற்கும், கட்டளையிடுவதற்கும், மிரட்டுவதற்கும், சண்டித்தனம் பண்ணுவதற்கும் எந்தக் கொம்பாதி கொம்பனுக்கும் அதிகாரம் கிடையாது என்பதைத் தைரியமாகச் சொல்ல முடியாத புலம்பெயர் தமிழனத்தையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தேச விடுதலையின் பெயரால் நடக்கும் போராட்டத்தின் பெயரால் செய்யப்படும் அநியாயங்கள், மக்கள் விரோதச் செயல்கள்கூட இங்கே புனிதப் படுத்தப் படுகின்றன. அவற்றை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்படி சனங்கள் வலு கட்டாயமாக வலியுறுத்தப் படுகிறார்கள். மாவீரர்களின் பெயரால் நடக்கும் நிகழ்வுகளிலும், விளையாட்டுக்களிலும் கொத்துரொட்டிக்கடை போட்டு வியாபாரம் செய்வதுகூட மண்ணின் பெயரால் புனிதமாக்கப் படுகின்றது. இவற்றையும் இந்த வரலாறு கவனித்துக் கொண்டேதான் இருக்கிறது.

விடுதலைப் போராளிகளாயிருந்து இன்று அங்கவீனர்களாக்கப்பட்டும் வாழ வழியேதுமற்றும், சமூகத்தாலும் புறக்கணிக்கப் பட்டு நடுத்தெருக்களில் அநாதரவாக்கப்பட்ட முன்னைநாள் போராளிகளின் எதிர்காலத்துக்கு நீங்கள் பதுக்கி வைத்திருக்கும் புலிச் சொத்தில் ஒரு சிறங்கை கிள்ளிப் போட்டாலே அவர்களின் எதிர்காலம் பிரகாசிக்குமே என்ற ஏக்கத்தோடும், ஆத்திரத்தோடும் இந்த வரலாறு உங்களைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

2009ம் ஆண்டு புலிகளின் அழித்தொழிப்புக்குப்பின் புலம்பெயர் புலிகள் (அதிலும் விசேடமாக நோர்வேப் புலிகள்) யார் யார் எதிரியின் பின் கதவைத் தட்டி நிலவொளியில் விருந்துண்டார்கள் என்ற கதைகளையும் இந்த வரலாறு முச்சந்தியில் கொண்டுவந்து வைக்கத்தான் போகிறது.

தேசவிடுதலைப் போராட்டத்துக்காக புலம்பெயர் மக்களிடம் சேகரித்த பணத்தில் எந்தெந்த நோர்வேப் புலிகள் கோடம்பாக்கத்திற்குப் போய் சினிமா எடுக்கிறார்கள் என்பதையும், அதையே இங்கு மீண்டும் மண்ணின் பெயராலும், மக்களின் இரத்தத்தின், சிதறிப்போன சதைகளின் பெயராலும் விளம்பரம் செய்து காசு பார்க்கிறார்கள் என்பதையும் இந்த மொக்கு வரலாறு மவுனமாகக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

புலம்பெயர் நாடுகளில் 80களிலிருந்து இயங்கிவந்த தமிழ்ச் சங்கங்கள், தமிழ்மொழிக் கல்வி நிலையங்கள், கோயில்கள், சிறு பத்திரிகைகள் என தனித்துவத்தோடு எதையும் இயங்க விடாமல் அதற்குள்ளும் வருவாய் காணும்பொருட்டு மிரட்டிக் கையகப் படுத்தியதையும் இந்த வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது.

வெளி நாடுகளில் வாழும் மக்களிடம் மண்விடுதலையின் பெயரால், புலிகளின் பிரதிநிதிகளாய் சென்று கதவைத் தட்டிக் காசு வாங்கியவர்கள் தங்களது சுய வருமானம் என்ன என்பதையும், அவர்களிடம் இப்போ இருக்கும் சொத்து விபரங்களையும் பொதுவெளியில் முன்வைக்க துணிவு உண்டா என்பதையும் இதே வரலாறுதான் கேட்டு நிற்கிறது. (இவர்கள் இப்படியே தொடர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்ட முடியாது, அம்பலத்துக்கு மிக மிக விரைவில் வரத்தான் போகிறார்கள் என்பது வேறு விடையம். ஏனென்றால் இங்கு உங்கள் வருட வருமானம் என்ன என்பதையும், உங்களுக்கு எங்கெங்கே சொத்துக்கள் இருக்கின்றன என்பதையும் சும்மா சாதாரண மனிதராலேயே சட்டரீதியாகவே விபரங்கள் திரட்ட முடியும்)

களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களைப் புணரும் எதிரியின் வக்கிரத்தைவிடக் கேவலமானது மண்ணின் பெயரால் மக்களிடம் வசூலித்த பணங்களை தம் கையகப்படுத்தும் நபர்களுடையது என்பதையும் இந்த கையாலாகா வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஸ்ரீ லங்கா இனவாத, ஏகாதிபத்திய அரசின் அடாவடித் தனங்களையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடவும், இல்லாதொழிக்கவும், அனைத்து இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை ஒன்றைக் கண்டடையவும் இன்று முதல் முக்கியமாக உள்ள பணி இலங்கைவாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையேயான புரிந்துணர்வும், ஒற்றுமையும். இந்த இனங்களுக்கிடையிலான பிரிவினைகளை ஸ்ரீ லங்கா அரசு காலகாலமாக எப்படித் தந்திரமாகக் கையாள்கிறதோ அதே வழியைத்தான் தங்களைத் தமிழ் உணர்ச்சியாளர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் இந்த சந்தர்ப்பவாத அரசியல் விபச்சாரர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த நாசமாய்ப்போன வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. ..............

இன்னும் இருக்கு..... இன்னும் வரும்....

இடுகையிட்டது பானுபாரதி நேரம் 10:44 am

http://www.piraththiyaal.com/2012/11/blog-post_17.html#more

  • Replies 83
  • Views 6.6k
  • Created
  • Last Reply

[size=4]இந்தப்பதிவை எழுதியவருக்கும் இன்று வந்த வதந்[/size][size=4]திகளுக்கும் தொடர்பு உள்ளது போல உள்ளது :D[/size]

வெளி நாடுகளில் வாழும் மக்களிடம் மண்விடுதலையின் பெயரால், புலிகளின் பிரதிநிதிகளாய் சென்று கதவைத் தட்டிக் காசு வாங்கியவர்கள் தங்களது சுய வருமானம் என்ன என்பதையும், அவர்களிடம் இப்போ இருக்கும் சொத்து விபரங்களையும் பொதுவெளியில் முன்வைக்க துணிவு உண்டா என்பதையும் இதே வரலாறுதான் கேட்டு நிற்கிறது. (இவர்கள் இப்படியே தொடர்ந்து கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்ட முடியாது, அம்பலத்துக்கு மிக மிக விரைவில் வரத்தான் போகிறார்கள் என்பது வேறு விடையம். ஏனென்றால் இங்கு உங்கள் வருட வருமானம் என்ன என்பதையும், உங்களுக்கு எங்கெங்கே சொத்துக்கள் இருக்கின்றன என்பதையும் சும்மா சாதாரண மனிதராலேயே சட்டரீதியாகவே விபரங்கள் திரட்ட முடியும்)

களத்தில் கொல்லப்பட்ட பெண் போராளிகளின் உயிரற்ற உடல்களைப் புணரும் எதிரியின் வக்கிரத்தைவிடக் கேவலமானது மண்ணின் பெயரால் மக்களிடம் வசூலித்த பணங்களை தம் கையகப்படுத்தும் நபர்களுடையது என்பதையும் இந்த கையாலாகா வரலாறு கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஸ்ரீ லங்கா இனவாத, ஏகாதிபத்திய அரசின் அடாவடித் தனங்களையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடவும், இல்லாதொழிக்கவும், அனைத்து இலங்கை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை ஒன்றைக் கண்டடையவும் இன்று முதல் முக்கியமாக உள்ள பணி இலங்கைவாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையேயான புரிந்துணர்வும், ஒற்றுமையும். இந்த இனங்களுக்கிடையிலான பிரிவினைகளை ஸ்ரீ லங்கா அரசு காலகாலமாக எப்படித் தந்திரமாகக் கையாள்கிறதோ அதே வழியைத்தான் தங்களைத் தமிழ் உணர்ச்சியாளர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் இந்த சந்தர்ப்பவாத அரசியல் விபச்சாரர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த நாசமாய்ப்போன வரலாறு கவனித்துக்கொண்டுதான் இருக்கிறது. ..............

சேர்த்த காசில் நகரங்கள் தோறும் கடைகள் வைத்தார்கள். பின் மூடினார்கள். சேவை செய்கிறறேன் என்று சம்பளம் வேண்டினார்கள். இவற்றையும் இணைத்துக் கொள்ளவும்.

ஆழத்தோண்டி உண்மையை மூடினாலும் ஒருகாலம் அது வெளியே வந்துதான் தீரும்.

[size=1]அருமையான பதிவு .பதிவிட்ட கோமகனுக்கு கோடி நன்றிகள் .[/size]

[size=2]

Posted 03 November 2012 - 06:23 PM[/size][size=4]

[size=5]இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு எதிராக கொதித்து [/size]

[size=1][size=5]ஆர்பாட்டம் செய்பவர்கள் ,போராட்டத்திற்கு சேர்த்த [/size][/size]

[size=1][size=5]பணத்தை வைத்திருபவர்களுகெதிராக போராடி ,பணத்தை [/size][/size]

[size=1][size=5]மீட்டெடுத்து போராளிகளுக்கும் ,மாவீரர் குடும்பங்களுக்கும் கொடுத்தால்[/size][/size]

[size=1][size=5]பலவற்றிற்கு தீர்வு கிடைக்கும் .[/size][/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

அதி உன்னத, ஈழப் போராட்டத்துக்கு, காசு கொடுத்தவனே.... கணக்குக் கேட்கவில்லை.

காட்டிக் கொடுத்தவன், கணக்குக் கேட்கிறான்... :D

  • தொடங்கியவர்

அதி உன்னத, ஈழப் போராட்டத்துக்கு, காசு கொடுத்தவனே.... கணக்குக் கேட்கவில்லை.

காட்டிக் கொடுத்தவன், கணக்குக் கேட்கிறான்... :D

காசு கொடுத்தவன் கணக்கு கேட்கவில்லை என்று நீங்கள் சொன்னால் மட்டும் அது உண்மையாகிவிடாது.... உண்மையை யாராலும் மறைத்துவிடவும் முடியாது....... போராட்டத்துக்காக கொடுக்கப்பட்ட மக்களின் பணம் போராட்டத்துக்கு போனபோது யாரும் கேள்விகேட்கவில்லை....... பொய்யர்களும் திருடர்களும் புனிதப் பணிக்காக கொடுத்த பணத்தை சுருட்டியபோதுதான் மக்கள் கேள்விகேட்கிறார்கள்...... இந்த எல்லோருக்கும் தெரிந்த உண்மையை கூட என்மேல் உள்ள காழ்ப்பில் அநீயாயங்களைகூட நியாயங்களாக்க பதில் எழுதும் உங்களையும் அதற்கு லைக் பண்ணுபவர்களையும் என் சொல்ல..........? இதுதான் தமிழன் ஒற்றுமைப்படமுடியாமல் இருக்கும் மனநிலைக்குரிய அடிப்படை......... தமிழன் இன்னொரு தமிழனைதான் எதிரியாக நினைப்பான்....... தட்டிவிழுத்த நினைப்பான்......அதற்காக எந்த தப்புகளையும் நியாயப்படுத்துவான்....... எந்த துரோகியுடன் கூட கூட்டுவைப்பான் . தன் சொந்த தமிழனை தட்டி விழுத்த.........கருணா,டக்லஸ் எனும் உதாரணங்களின் வரிசைகளில் உங்கள் மனநிலைகளும்.......... விதியே விதியே தமிழனை ஏன் இப்படி படைத்தாய்.......வஞ்சகம் நிறைந்த நெஞ்சுகளுடன்.......... :( :( :( .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அடியுங்கோடா நாங்களும் பின்னாலே நிற்கிறோம் என்ற விசிலடித்தான் கூட்டங்களையும் தெரியும். அதே நேரம் தனது வேலை நேரத்தை தவிர குடும்பங்களிஅயும் பாராது வீடுவீடாக பணம் சேகரிக்க சென்ற போது வீட்டை பூட்டி விட்டு இருந்த தமிழர்கள் எத்தனை பேர்."இந்த அநியாயப்படுவான்களால் மனிசர் இருக்க முடியவில்லை" என்று புறுபுறுத்த தமிழர்கள் எத்தனை வீதம்(பேரல்ல).

"அது பெடியள் பார்த்துக்கொள்வார்கள்" என்று விட்டு பின்னேரம் நண்பர்களை கூப்பிட்டு குடித்து கும்மாளம் அடித்தவர்கள் எத்தனை பேர்?? . கட்டுநாயக்கா விமான நிலையம் அடித்த போது எமது சகோதரர்கள் விமான நிலையத்தை தாக்கிய பின் விழுப்புண் அடைந்தும் நேரடியாக குண்டடிபட்டும் இறந்து கிடந்ததை பார்த்து கண்ணீர் வடித்தவர்கள் ஒரு புறமிருக்க தாக்குதல் பற்றி பேசுவதற்கு போத்தல் வாங்கி பாட்டி வைத்தவர்கள் எத்தனை எத்தனை பேர்??

ஒரு சிறு இரகசியம் கிடைத்தால் போதும்(புலிகள் பற்றி) அதனை யாரென்று பாராமல் பரவ விட்டதில் எமக்கு நிகர் நாம் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அதி உன்னத, ஈழப் போராட்டத்துக்கு, காசு கொடுத்தவனே.... கணக்குக் கேட்கவில்லை.

காட்டிக் கொடுத்தவன், கணக்குக் கேட்கிறான்... :D

இந்த திரியின் தலைப்பை பார்த்தால்

ஏதோ தமிழ் மக்கள் மீது பற்றுக்கொண்டு மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சாடுவது பொலிருக்கிறது.

ஆனால் அதன் பகுதிகளை வாசித்தால் தமிழ் மக்களுக்கு உதவியோர்

அவர்களுக்காக வேல செய்தோர்

மற்றும் புலிகள் அனைவரையும் ஒரே குட்டைக்குள் போட்டு ஊறிட வைக்கும் முயற்சி என்பது புரியும்

ஒருவருடைய எழுத்தை அல்லது பதிவை வைத்தே

அவர் போராட்ட காலத்தில்

அல்லது தற்பொழுதும் எவ்வளவு கிலோமீற்றருக்கு அப்பால் நின்றார் என்பதை மக்களால் புரிந்து கொள்ளமுடியும்

இங்கேயும் அதுவே.

காசு கொடுத்தவன் கணக்கு கேட்டதில்லை.

அதற்கு நானே சாட்சி.

ஒருவன் செய்த தப்புக்காக

ஒன்பது பேரை நான் ஒதுக்குவதில்லை.

மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை.

எதிரிக்கு கண் போகணும் என்பது தான் கட்டுரையின் நோக்கம்.

நடக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மே 2009 பின்னரான காலப்பகுதியில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து அதில் சுகபோகம் காணுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை சிலர் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றாhர்கள். ஆனால் ஒருவரும் யார் யாரிடம் அந்தப் பணம் இருக்கின்றது என்று சொல்வதில்லை. ஏனெனில் அவர்களது முழு நோக்கமே தற்போது சிங்கள அரசிற்கெதிராக செயற்படும் கட்டமைப்புக்களைச் உடைத்து மக்களது நம்பிக்கைகளைச் சிதைத்து விடுதலைப் போராட்டத்தை நலிவடையச் செய்வதே.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

காசு கேட்டவர்கள் யார்? எமது புலிச் சகோதரர்கள்..

காசு வாங்கியவர்கள் யார்? புலம்பெயர் சமூகத்தில் எம் தமிழ்ச் சகோதரர்கள்.

குறைந்தபட்சம் ஏதோ ஒரு விதத்தில் எமது பணம் தமிழனுக்கே பிரியோசனமாக உள்ளது. :rolleyes:

காசு கொடுக்கும்போது அது எங்கே போகிறது என்னவாகிறது என்கிற கவலை எமக்கு என்றும் இருந்ததில்லை. இப்போது சுருட்டிவிட்டார்கள் என்று ஒரு கவலையை முன்வைக்கிறார்கள்.. :huh:

வாங்கிய காசை ஏதாவது ஒரு வழியில் தாயகத்தில் செலவிடுவது நல்ல திட்டமே.. ஆனால் இந்தக் காசை செலவிடலாம் என்று சொல்லக்கூடிய உரிமை யாரிடம் உள்ளது? :rolleyes: ஆக, அவர்கள்தான் வந்து சொல்ல வேண்டும்.. :mellow:

அதுசரி.. புலிகள் உள்ளார்களா.. இல்லையா? நான் அறிந்தவரை ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று சொன்னமாதிரித்தான் இருந்தது. :huh:

சூப்பர் இசை அண்ணா, பச்சை இல்லை. பிறகு வந்து போடுறன். :)

  • கருத்துக்கள உறவுகள்

சரி நானும் பிறகு வந்து பச்சை போடுறன் என்ன :D

காசு கொடுத்தவன் கணக்கு கேட்கவில்லை என்று நீங்கள் சொன்னால் மட்டும் அது உண்மையாகிவிடாது.... உண்மையை யாராலும் மறைத்துவிடவும் முடியாது....... போராட்டத்துக்காக கொடுக்கப்பட்ட மக்களின் பணம் போராட்டத்துக்கு போனபோது யாரும் கேள்விகேட்கவில்லை....... பொய்யர்களும் திருடர்களும் புனிதப் பணிக்காக கொடுத்த பணத்தை சுருட்டியபோதுதான் மக்கள் கேள்விகேட்கிறார்கள்...... இந்த எல்லோருக்கும் தெரிந்த உண்மையை கூட என்மேல் உள்ள காழ்ப்பில் அநீயாயங்களைகூட நியாயங்களாக்க பதில் எழுதும் உங்களையும் அதற்கு லைக் பண்ணுபவர்களையும் என் சொல்ல..........?

இதுதான் தமிழன் ஒற்றுமைப்படமுடியாமல் இருக்கும் மனநிலைக்குரிய அடிப்படை......... தமிழன் இன்னொரு தமிழனைதான் எதிரியாக நினைப்பான்....... தட்டிவிழுத்த நினைப்பான்......அதற்காக எந்த தப்புகளையும் நியாயப்படுத்துவான்....... எந்த துரோகியுடன் கூட கூட்டுவைப்பான் . தன் சொந்த தமிழனை தட்டி விழுத்த.........கருணா,டக்லஸ் எனும் உதாரணங்களின் வரிசைகளில் உங்கள் மனநிலைகளும்.......... விதியே விதியே தமிழனை ஏன் இப்படி படைத்தாய்.......வஞ்சகம் நிறைந்த நெஞ்சுகளுடன்.......... :( :( :( .

எனக்கு சரியாக படும் கருத்துக்கு நான் லைக் போடுறன். அதை பற்றிய உங்கள் கவலையை விடுங்கள்.

நீங்கள் விடுதலைப்போராட்டத்தின் போது யாருக்கும் காசு கொடுத்தீர்களா? அவர்கள் உங்கள் காசை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்களா? ஆம் என்றால் அவர்கள் யார் என்று பெயர், விபரங்களுடன் இங்கு கூறுங்கள்.

சிவப்பு நிறத்தில் சுட்டிக்காட்டியுள்ள உங்கள் கருத்தை மீண்டும் வாசியுங்கள். மற்றவர்களுக்கு கூற முன்னர் அக்கருத்து உங்களுக்கு எவ்வளவு பொருந்துகிறது என்பதையும் யோசியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதை நிறுத்த ஒரே ஒருவழிதான் இருக்கு.

அதற்கு நானே ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன்.

பிரான்சில் அதிலும் பரிசிலும் அதனைச்சுற்றியுள்ள பகுதியிலும் பணம் கொடுத்தவர்களது விபரங்களை நிர்வாகம் அனுமதி தந்தால் என்னால் இங்கு பிரசுரிக்கமுடியும் என்று நினைக்கின்றேன். (சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு)

இதைப்போல் வேறு நாடுகளிலும் செய்யும்போது இதனது உண்மை எல்லோருக்கும் தெரியவரும். தூற்றுதல்களும் நிற்கும். பலரது முகங்கள் வெளியில் வரும்.

ஆனால் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பெயர்களும் கொடுத்த தொகையும் வெளியில் வந்துவிட்டது என்று அதற்கும் உணர்வாளர்களை நோக்கி கைதூக்கக்கூடாது.

இதை நிறுத்த ஒரே ஒருவழிதான் இருக்கு.

அதற்கு நானே ஆரம்பிக்கலாம் என நினைக்கின்றேன்.

பிரான்சில் அதிலும் பரிசிலும் அதனைச்சுற்றியுள்ள பகுதியிலும் பணம் கொடுத்தவர்களது விபரங்களை நிர்வாகம் அனுமதி தந்தால் என்னால் இங்கு பிரசுரிக்கமுடியும் என்று நினைக்கின்றேன். (சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு)

புலிகள் மீதான தடை இருக்கும் வரைக்கும் இவ் விபரங்களை வெளிவிடுவதற்கு உங்களுக்கும், கொடுத்தவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் யாழுக்கும் ஆபத்தினை பலவிதங்களில் தரும். புலிகள் மீதான தடை தான் பலரை உண்மை தெரிந்தும் மெளனமாக்கி வைத்துள்ளது. அது தான் புலிகளை சொல்லி பெரும் கோடிகளை சுருட்டியவர்களுக்கும் வசதியாக இருக்கின்றது.

உதாரணத்துக்கு, நான் காசு கொடுத்து அதனை ஒருவர் சுருட்டி வைத்து இருக்கின்றார் என்று வைத்துக் கொண்டால், என்னால் புலிகளின் மீது தடை இருப்பதால் போய் பொலிசில் புகார் கொடுக்க முடியாது. இதனை நான் எவ்வவு புரிந்து வைத்து இருக்கின்றேனோ அதனை விட பணத்தைச் சுருட்டி வைத்துள்ளவர் இன்னும் தெளிவாக புரிந்து வைத்து இருக்கின்றார்.

புலிகள் மீதான தடை என்பது தமிழர் விடுதலை போராட்டம் மீதான தடை தான். இதனை முதலில் அகற்ற பாடுபட்டாலே ஒழிய வேற எதனைச் செய்தாலும் அது தெளிவான பலனைத் தராது.

நன்றி

அதே போல் போராட்டத்துக்கு எதிரானவர்கள், பணம் கொடுக்காதவர்கள் கூட அடுத்தவர் சொல்லும் வதந்தியை இன்னும் இன்னும் பரப்பி விட்டு இறுதியில் பெயர் விபரங்களை கேட்கும் போது இவ்வாறானதொரு கருத்தை கூறி தப்பி விடலாம் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். (உங்களை சொல்லுறன் என்று நினைச்சு சண்டை பிடிச்சிடாதையுங்கோ :D)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மணித்தியாலம் குளிருக்குள்ளேயும்,பனிக்குள்ளேயும் கால் கடுக்க நின்று கஸ்டப்பட்டு உழைத்தவனுக்குத் தான் பணத்தின் அருமை தெரியும்.அப்படி கஸ்டப்பட்டு உழைத்துக் கொடுத்த ஆட்கள் தான் எங்களில் பெரும்பான்மை...இ.கலைஞன் மாதிரி ஒபிஸ் வேலைக்கு போறவர்களுக்கோ அல்லது விசுகுண்ணா மாதிரி வியாபாரம் செய்கின்ற பணக்காரருக்கோ இந்தப் பணம் தூசி மாதிரித் தான் இருக்கும்...கஸ்ட‌ப்பட்டு பணம் கொடுத்தது எங்கட‌ நாட்டுக்குப் பயன்பட‌ட்டும் என்று தானே தவிர‌ இந்த மாதிரி ஒருதரும் அமுக்குவதற்கு இல்லை...நாடு கிடைக்கத் தான் இந்தப் பணம் பயன்பட‌வில்லை அட்லீஸ்ட் ஊரில் இருக்கும் பாதிக்கப் பட்ட உறவுகளுக்குகாவது இந்த பணம் பயன் பட்டிருந்தால் பணம் கொடுத்தவனுக்கு நிம்மதியாக இருந்திருக்கும்...பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை திருப்பி தா என போர்க் கொடி தூக்க மாட்டார்கள் அது தான் ஒன்றும் வேணாம் என்று பேசாமல் ஒதுங்கிட்டார்களே.

பண சுருட்டல்,காசு கணக்கு என்றவுடன் சிலர் கொந்தளித்துவிடுகின்றார்கள் .

ஒன்றில் இவர்களுக்கும் அதில் பங்கிருக்கு அல்லது மிக சுய நலகும்பல் .தானும் தனது குடும்பமும் என்றிருந்து இணையத்தில் வந்து தேசியம் பேசுபவர்கள் .சமூகத்தை பற்றி எதுவித அக்கறையுமில்லாதவர்கள்.

நியாயத்தை யார் வேண்டுமானாலும் கேட்கலாம் .

காசு கொடுத்தவன் மூன்று வேலை இன்னமும் செய்கின்றான் இவர்கள் பென்ஸ் ,பீமரில் திரிகின்றார்கள்.நல்லாயிருக்கு சிலர் நியாயம் .

காசு கொடுத்தவன் கணக்கு கேட்கவில்லை என்று நீங்கள் சொன்னால் மட்டும் அது உண்மையாகிவிடாது.... உண்மையை யாராலும் மறைத்துவிடவும் முடியாது....... போராட்டத்துக்காக கொடுக்கப்பட்ட மக்களின் பணம் போராட்டத்துக்கு போனபோது யாரும் கேள்விகேட்கவில்லை....... பொய்யர்களும் திருடர்களும் புனிதப் பணிக்காக கொடுத்த பணத்தை சுருட்டியபோதுதான் மக்கள் கேள்விகேட்கிறார்கள்...... இந்த எல்லோருக்கும் தெரிந்த உண்மையை கூட என்மேல் உள்ள காழ்ப்பில் அநீயாயங்களைகூட நியாயங்களாக்க பதில் எழுதும் உங்களையும் அதற்கு லைக் பண்ணுபவர்களையும் என் சொல்ல..........? இதுதான் தமிழன் ஒற்றுமைப்படமுடியாமல் இருக்கும் மனநிலைக்குரிய அடிப்படை......... தமிழன் இன்னொரு தமிழனைதான் எதிரியாக நினைப்பான்....... தட்டிவிழுத்த நினைப்பான்......அதற்காக எந்த தப்புகளையும் நியாயப்படுத்துவான்....... எந்த துரோகியுடன் கூட கூட்டுவைப்பான் . தன் சொந்த தமிழனை தட்டி விழுத்த.........கருணா,டக்லஸ் எனும் உதாரணங்களின் வரிசைகளில் உங்கள் மனநிலைகளும்.......... விதியே விதியே தமிழனை ஏன் இப்படி படைத்தாய்.......வஞ்சகம் நிறைந்த நெஞ்சுகளுடன்.......... :( :( :( .

சூப்பர் கோமகன்.பச்சை இல்லை.பிறகு வந்து போடுறன். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மணித்தியாலம் குளிருக்குள்ளேயும்,பனிக்குள்ளேயும் கால் கடுக்க நின்று கஸ்டப்பட்டு உழைத்தவனுக்குத் தான் பணத்தின் அருமை தெரியும்.அப்படி கஸ்டப்பட்டு உழைத்துக் கொடுத்த ஆட்கள் தான் எங்களில் பெரும்பான்மை...இ.கலைஞன் மாதிரி ஒபிஸ் வேலைக்கு போறவர்களுக்கோ அல்லது விசுகுண்ணா மாதிரி வியாபாரம் செய்கின்ற பணக்காரருக்கோ இந்தப் பணம் தூசி மாதிரித் தான் இருக்கும்...கஸ்ட‌ப்பட்டு பணம் கொடுத்தது எங்கட‌ நாட்டுக்குப் பயன்பட‌ட்டும் என்று தானே தவிர‌ இந்த மாதிரி ஒருதரும் அமுக்குவதற்கு இல்லை...நாடு கிடைக்கத் தான் இந்தப் பணம் பயன்பட‌வில்லை அட்லீஸ்ட் ஊரில் இருக்கும் பாதிக்கப் பட்ட உறவுகளுக்குகாவது இந்த பணம் பயன் பட்டிருந்தால் பணம் கொடுத்தவனுக்கு நிம்மதியாக இருந்திருக்கும்...பாதிக்கப்பட்ட மக்கள் பணத்தை திருப்பி தா என போர்க் கொடி தூக்க மாட்டார்கள் அது தான் ஒன்றும் வேணாம் என்று பேசாமல் ஒதுங்கிட்டார்களே.

பாதிக்கப் பட்ட மக்களுக்கு பணத்தைக் கொடுப்பது என்பது இலகு.. ஆனால் கொடுக்கும்போதுதான் தெரியும் அதன் சிக்கல்.. ஏன் இங்கை குடுத்தாய்.. ஏன் அங்கை குடுத்தாய்.. அவன் அடிச்சிட்டான். இவன் அடிச்சிட்டான் எண்டு.. அதுவும் ஒரு வசையாக வரும்..

அப்படியே கொடுத்து முடிச்சாலும், இவையள் ஆர் நாங்கள் இயக்கத்துக்குக் குடுத்த காசை செலவளிக்க எண்டு இன்னொரு குழு வெளிக்கிடும்..

ஆகவே.. பொறுத்ததுதான் பொறுத்தோம்.. இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்க வேண்டும்..

இப்போதைய தேவைக்கு பணம் படைத்தவர்கள் இங்கே அதிகம் பேர் இருக்கவே செய்கிறார்கள்.. ஆனால் தரமாட்டார்கள்.. இப்படி ஆளுக்காள் காசுக்கு அடிபட்டால் எப்பிடி குடுப்பார்கள்..! முதலில் ஒற்றுமையாக தாயக மீளமைப்புக்கு என்று நிதி கேட்டுப் பாருங்கோ.. வசதி படைத்த பலர் இன்னும் நல்ல மனத்துடன் உதவக் காத்திருக்கிறார்கள்..! ஆனால் குழுச் சண்டையை முதலில் நிறுத்தவேண்டும்.

காசு கேட்டவர்கள் யார்? எமது புலிச் சகோதரர்கள்..

காசு வாங்கியவர்கள் யார்? புலம்பெயர் சமூகத்தில் எம் தமிழ்ச் சகோதரர்கள்.

குறைந்தபட்சம் ஏதோ ஒரு விதத்தில் எமது பணம் தமிழனுக்கே பிரியோசனமாக உள்ளது. :rolleyes:

நல்லது.உங்கள் வீட்டில் புகுந்து ஒரு தமிழன் கொள்ளை அடித்தால் தமிழன் பணம் தமிழனுக்குதானே போகிறது என்று அமைதியாகிவிடுங்கள் இசைக்கலைஞன். :lol:

எனக்கு சரியாக படும் கருத்துக்கு நான் லைக் போடுறன். அதை பற்றிய உங்கள் கவலையை விடுங்கள்.

அவர் எங்கே கவலைப்பட்டார்.நீங்கள்தான் அவர்கவலைப்படுவதாக நினைத்து கவலைப்படுகிறீர்கள் துளசி அக்கா. :lol:

நீங்கள் விடுதலைப்போராட்டத்தின் போது யாருக்கும் காசு கொடுத்தீர்களா? அவர்கள் உங்கள் காசை சுருட்டிக்கொண்டு ஓடிவிட்டார்களா? ஆம் என்றால் அவர்கள் யார் என்று பெயர், விபரங்களுடன் இங்கு கூறுங்கள்.

மற்றவனைகேக்க முன்னம் நான் என்ன செய்தன் எண்டு யோசிச்சு பார்க்கணும் அக்கா.ஊரில் இருந்து முந்தநாள் ஓடிவந்த நீங்கள் என்னத்தை கொடுத்திருப்பீர்கள் என்று தெரியும்தான. :lol:

சிவப்பு நிறத்தில் சுட்டிக்காட்டியுள்ள உங்கள் கருத்தை மீண்டும் வாசியுங்கள். மற்றவர்களுக்கு கூற முன்னர் அக்கருத்து உங்களுக்கு எவ்வளவு பொருந்துகிறது என்பதையும் யோசியுங்கள்.

உங்களுக்கும்தான். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது.உங்கள் வீட்டில் புகுந்து ஒரு தமிழன் கொள்ளை அடித்தால் தமிழன் பணம் தமிழனுக்குதானே போகிறது என்று அமைதியாகிவிடுங்கள் இசைக்கலைஞன். :lol:

அவர்கள் உள்ளே வந்து கொள்ளையிட்டார்களா..? அல்லது நீங்களாக எடுத்துக் கொடுத்தீர்களா..?

ஆக, பணம் நற்காரியங்களுக்குப் போக வேண்டும் என்கிற அக்கறை தெரியவில்லை. ஏன்... அவனுக்கு மட்டும் போக வேண்டும் என்பதுபோல் தெரிகிறது. :D

Reason for Edit: எழுத்துப்பிழைகள் சரிசெய்யப்பட்டுள்ளன. :D

Edited by இசைக்கலைஞன்

அதி உன்னத, ஈழப் போராட்டத்துக்கு, காசு கொடுத்தவனே.... கணக்குக் கேட்கவில்லை.

காட்டிக் கொடுத்தவன், கணக்குக் கேட்கிறான்... :D

காட்டிகொடுத்தவன் என்று தமிழ்சிறி இங்கு யாரை சொல்கிறீர்கள்? இந்த பதிவை எழுதியவரியா அல்லது இதை இங்கு கொண்டுவந்து இணைத்த கோமகனையா?

அவர்கள் உள்ளே வந்து கொள்ளையிட்டார்களா.. அல்லது நீங்களாக ஏடுத்துக் கொடுத்தீர்களா..

ஆஅக, பணம் வற்காரியங்களுக்குப் போக வெண்டும் என்கிற் அக்கறை தெரியவில்லை. ஏஎன்... அவனுக்கு மட்டும் போக வேண்டும் என்பதுபோல் தெரிகிறது. :ட்

வந்தவர்கள் போராட்டத்தை சொல்லி அல்லவா வேண்டிக்கொண்டுபோனார்கள்.நாங்கள் ஏமாற்ற பட்டிருக்கம்.அந்த அடிப்படைகூட உங்களுக்கு புரியலை.விதண்டவாதம் பேசுகிறீர்கள்.அந்த அவனில் நீங்களும் ஒருவர்போல் கவலைப்படுகிறீர்கள்.பொய்யர்களுக்காக நேரம் ஒதுக்கி நியாயப்படுத்தும் நீங்கள் நானும் என்னைப் போன்றவர்களும் பொராட்டத்தின் பேரால் ஏமாற்றப்பட்டதற்கு சந்தோசப்படுகிறீர்கள்.

---------------

Edited by நிழலி
நீக்கப்பட்டுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.