Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா கசாப்பினைத் துாக்கிலிட்டுள்ளது

Featured Replies

  • Replies 68
  • Views 4.1k
  • Created
  • Last Reply

[size=4]இந்திய முன்னாள் அமைச்சரும் இந்தாள் சனாதிபதியுமான பிரணாப் முகரிஜியின் முதலாவது மரண தண்டனை m?[/size]

[size=4]இது நிறைவேற்றப்படும் பொழுது மன்மோகனும் நாட்டில் இல்லை. [/size]

[size=4]அடுத்து இராஜீவ் காந்தி வழக்கில் உள்ளவர்களா :([/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ் அழிப்பில் குற்றம்சாட்டப்பவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் பெரும்பாலும் இப்போது இருக்காது என நினைக்கின்றேன். ஆனாலும் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் எனில் இந்தியா இப்படியான விடயங்களில் அவதானமாக இருக்கும். அதனால் தான் அரசியல்வாதிகள் பெரும்பாலும் இந்திய சட்டங்களால் தண்டிக்கப்படுவதில்லை...

[size=4]தொடர்புபட்ட இணைப்பு : மரண தண்டனை - காட்டுமிராண்டித்தனமா?[/size]

[size=5]http://www.yarl.com/forum3/index.php?showtopic=107283[/size]

புதுடெல்லி: மும்பை: மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டான். இதனை மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

முன்னதாக, அஜ்மல் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். இதில் உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி அஜ்மல் கசாப்புக்கு மும்பை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அஜ்மல் கசாப் சார்பில், கசாப் அடைக்கப்பட்டுள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறை மூலமாக, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கருணை மனு சமீபத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அஜ்மல் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் கசாப்பின் தூக்குதண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

vikatan news

[size=4]கடந்த வாரம் மன்மோகன் சிங்கின் உயிருக்கும் சோனியாவின் உயிருக்கும் "தீவிரவாதிகளா[/size]ல் ஆபத்து" எனசெய்தி வந்திருந்தது. அந்த நிலையில் இந்த மரணதண்டனை மேலும் அதற்கான சாத்தியங்களை அதிகரிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தூக்குத் தண்டனையை, நிறைவேற்றியதன் மூலம், இந்தியா ஒரு நூற்றாண்டாவது, பின்னோக்கி நகர்ந்துள்ளதுடன், கசாப்பைச் சாகா வரம் பெற்றுள்ளவனாகவும் மாற்றியுள்ளது! :o

கிந்தியா தனது கோர முகத்தை உலகிற்கு காட்டியுள்ளது. அவனை ஆயுள்தண்டனை கைதியாகவே வைத்திருந்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப் தூக்கிலிடப்பட்டார் - மும்பை மக்கள் மகிழ்ச்சி கொண்டாட்டம்!

[Wednesday, 2012-11-21 12:01:27]

இன்று காலை 7.30 மணிக்கு ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது.கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டல் உள்பட பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 166 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதல்களை நடத்திய 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதில் அஜ்மல் கசாப் மட்டும் தான் உயிருடன் சிக்கினான்.பாகிஸ்தான் தீவிரவாதியான கசாபுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அவனது கருணை மனுவை நிராகரித்ததையடுத்து அவன் இன்று காலை 7.30 மணிக்கு ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிட கடந்த 8ம் தேதியே முடிவு செய்யப்பட்ட போதிலும் அந்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு ஏர்வாடா சிறையிலேயே கசாபின் உடல் புதைக்கப்பட்டதாக மகாரஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார். மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்த கசாப் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் ஏர்வாடா சிறைக்கு மாற்றப்பட்டான் என்று அவர் மேலும் தெரிவித்தார்.கசாபின் உடலை வாங்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்ட செய்தியை கேட்ட மும்பை மக்கள் அதை பட்டாசு வெடித்து கொண்டாடினர். மும்பையில் பிரபலமான டப்பாவாலாக்கள் கசாப் மரணச் செய்தி கேட்டு அவனது புகைப்படத்தை எரித்து தங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தினர். இந்தியாவின் நம்பர் 1 எதிரி தூக்கிலிடப்பட்டான் என்று கூறி பெஸ்ட் பஸ்கள் மற்றும் உள்ளூர் ரயில்களில் அலுவலகத்திற்கு செல்பவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

http://seithy.com/breifNews.php?newsID=70556&category=IndianNews&language=tamil

அது சரி 150000 லும் அதிகமான தமிழ் மக்களின் கொலைக்கு காரணமான இந்திய மற்றும் சிங்களத்தை

எப்ப தூக்கில் இடுவது . கம்முனாட்டிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மரணதண்டனைக்குப் ஏற்படப் படப் போகும்... பாரதூரமான‌ பின்விளைவுவுகளைச் சந்திக்கவும், இந்தியா தயாராக இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

21-kasab-55-300.jpg

கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலி: தூக்கு கண்துடைப்பா?

புனே: தீவிரவாதி கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அவனை தூக்கிலிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு என்றும் தகவல் கள் வெளியாகி வருகின்றன.

26/11 தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடும் செய்தி பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை கசாப் தூக்கு செய்தி கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இந்நிலையில் கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அதை மறைத்து அவனை தூக்கிலிட்டுவிட்டதாக தெரிவிப்பது வெறும் கண்துடைப்பே என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் உண்மை என்பது போல கசாபை தூக்கிலிட்ட கையோடு சிறைக்குள்ளேயே அவனது உடலை புதைத்துவிட்டனர்.

இது குறித்து மக்கள் டுவிட்டரில் கூறியிருப்பதைப் பார்ப்போம்,

1. கசாபுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகியது. உடல் நலம் பாதிக்கப்பட்டவரை தூக்கிலிட இந்திய சட்டம் அனுமதிக்கிறதா?

2. கசாப் டெங்குவால் இறந்தானா? அரசின் அதிவேக நடவடிக்கை அதை மறைக்கத் தானா?

3. கசாப் டெங்குவால் இறந்திருக்கக்கூடும். ஆனால் அரசோ அவனைத் தூக்கிலிட்டதாகக் கூறுகிறது.

4. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கசாபுக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. கசாப் டெங்குவால் இறந்தானா அல்லது அரசு தூக்கிலிட்டதா?

கசாப் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவதாக அண்மையில் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் அவனுக்கு சாதாரண காய்ச்சல் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே கசாப் தூக்கிலிடப்பட்டிருந்தால் அவனது உடலை புகைப்படம் எடுத்து ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானில் தூக்கு தண்டனை பெற்ற சில இந்திய கைதிகளும் தங்களுக்கு கருணை காட்டு மாறு பாகிஸ்தானிய ஜனாதிபதியிடம் மனு கொடுத்து இருக்கின்றார்கள் ஏட்டிக்கு போட்டியா பாகிஸ்தானும் நடவடிக்கையில் இறங்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் காந்தி............

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை: தூக்கிலிடப்படுவதற்கு முன்னர் கசாப் மிகவும் படபடப்புடனும், அதே சமயம் அமைதியாகவும் காணப்பட்டதாக சிறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கசாப்பின் கருணை மனு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் நிராகரிக்கப்பட்டது எப்போது என்பது குறித்து முரண்பாடான தகவல் வெளியாகும் நிலையில்,இம்மாதம் 5 ம் தேதி அம்மனு நிராகரிக்கப்பட்டதாகவும்,இதனையடுத்து தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட இருப்பது குறித்து கசாப்பிடம் 12 ம் தேதியனறு தெரிவிக்கப்பட்டதாகவும் மகாராஷ்ட்ரா அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து கடந்த 19 ம் தேதியன்று கசாப்பிடம் மரணத்தண்டனை நிறைவேற்றுவதற்கான வாரண்டில் கையெழுத்து பெறப்பட்டது.அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே கசாப் புனே ஏரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.

மரணம் தன்னை நெருங்குவதை உணர்ந்துகொண்ட கசாப்,தான் தூக்கிலிடப்பட்ட பின்னர் அது குறித்த தகவலை பாகிஸ்தானில் உள்ள தனது தாயாரிடம் தெரிவிக்குமாறு சிறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

[size="2"] [/size]

இந்நிலையில் இன்று காலை தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக கசாப் மிகவும் படபடப்புடனும்,அதே சமயம் அமைதியாகவும் காணப்பட்டதாக சிறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் தூக்கிலிடப்படுவதற்கு முன்னதாக கசாப், தனது தொழுகையை செய்துள்ளார்.

தூக்குக்கு முன்னதாக, கசாப்பிடம் உனது கடைசி ஆசை என்ன? என்று ஏரவாடா சிறை அதிகாரி கேட்டபோது,"அந்தமாதிரி ஆசை எதுவும் இல்லை” என்று பதிலளித்து விட்டாராம்.

அதே சமயம,"அல்லா மீது ஆணையாக இதுபோன்ற (மும்பை தாக்குதல்) தவறை இனி ஒருபோதும் செய்யமாட்டேன்!” என்று கசாப் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப் தூக்கிலிடப்பட்டார்.இரண்டு மணி நேரம் கழித்து சிறை வளாகத்திலேயே கசாப்பின் உடல் புதைக்கப்பட்டது.

முன்னதாக தூக்கிலிடப்பட்ட பின்னர் கசாப்பின் உடலை, அல் காய்தா பயங்கரவாத இயக்கத் தலைவர் ஒஸாமா பின்லேடன் உடலை கடலில் புதைத்தது போன்று கசாப்பின் உடலையும் கடலில் புதைக்கலாமா? என அரசு தரப்பில் பரிசீலிக்கப்பட்டதாகவும்,ஆனால் 'ரிஸ்க்' வேண்டாம் என அந்த எண்ணத்தை அரசு கைவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://news.vikatan.com/?nid=11317#cmt241

கசாப் தூக்கில் போடப்பட்டது கண்டிக்கத்தக்கது: பழநெடுமாறன்

Posted Date : 14:45 (21/11/2012)Last updated : 14:45 (21/11/2012)

nedumaran%2820%29.jpg

சென்னை: மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும்,கசாப்பை சிறையில் வைத்து சீர்திருத்தியிருக்க வேண்டும் என்றும் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,"ஐ.நா. தனது உறுப்பு நாடுகளுக்கு மரண தண்டனை கூடாது என்று தீர்மானம் கொண்டு வர உள்ள இந்த நேரத்தில், கசாப்புக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உயிரை பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது.அவசர அவசரமாக கசாப்பை தூக்கில் போட்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது மனித நேயத்துக்கு எதிரான செயல்.

[size="2"] [/size] காந்தி பிறந்த நம் நாட்டில் மரண தண்டனையை இன்னும் வைத்திருப்பது அவமான செயல். மும்பை குண்டு வெடிப்பு மிக கொடூரமானது.நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட இந்த செயலை கண்டிக்கிறேன்.அதில் தொடர்புடைய குற்றவாளியை சிறையில் வைத்து சீர்திருத்த வேண்டுமே தவிர மரண தண்டனை விதிக்க கூடாது.

மரண தண்டனை உலகம் முழுவதும் ஒழிக்கப்பட உள்ளது.இந்தியா பிற நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.மரண தண்டனையை மனித நேயம் உள்ளவர்கள் யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்” என்றார்.

602538_386386954774772_613818577_n.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]கசாப்பை தூக்கில் போட்ட சிறை முன்பு பட்டாசு வெடித்த சிவசேனை தொண்டர்கள்[/size]

[size=4]அஜ்மல் கசாப் தூக்கில் போடப்பட்ட செய்தி பரவியதும் மும்பை, அகமதாபாத், கோரப்பூர், புனே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினார்கள். புனே ஏர்வாடா சிறைச்சாலை முன் சிவசேனை கட்சி தொண்டர்கள் ஒன்றுகூடி, வந்தே மாதரம் என முழக்கமிட்டனர்.[/size]

[size=5]கசாப் பொதுஇடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்: அன்னா ஹசாரே கருத்து[/size]

[size=4]கசாபுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரே,

கசாப்புக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றியிருப்பதன் மூலம் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது.

கசாப் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். இந்தியாவை அழிக்க நினைத்தவன் கொல்லப்பட்டிருப்பதை கண்டு மகிழ்கிறேன்.

மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றிருக்க வேண்டும். பொது மக்கள் முன்னிலையில் தண்டனை நிறைவேற்றுவதால், நமது நாட்டில் உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்கு பாடமாக இருந்திருக்கும் என கூறினார்.[/size]

[size=2]http://www.nakkheeran.in/[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தூக்கில் போடுவது எல்லாம் அந்த அந்த நாட்டின் சட்ட திட்டம்.. ஆனால் பொது இடத்தில் செய்யவேண்டும் என்று சொல்வது ஹசாரேயின் அறளை பெயர்ந்த தன்மையைக் காட்டுகிறது. :D

இலங்கையில் பல பாலியல் வல்லுறவுகள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களை கொலை செய்த இந்திய பயங்கரவாத இராணுவம் பாகிஸ்தானில் பல குண்டு வெடிப்புகளை செய்து பலரை கொலை செய்த இந்திய பயங்கரவாத உளவுப் பிரிவு . காஸ்மீர் பஞ்சாப் மிசெராம் போன்ற சொந்த மாநிலங்களிலே பல பாலியல் வல்லுறவு செய்த இந்திய பயங்கரவாத காடுமிராண்டிப் படைகளுக்கு யாரு தூக்கு கொடுப்பா?இவ்வளவு அட்டூளி யங்களையும் செய்த சோனி குடும்பம் அந்த காந்தியின் பெயரையும் களவெடுத்து தங்களுடன் ஓட்ட வைத்துள்ளதே

Edited by நிழலி
பாலியல் வல்லுறவு என்றசொல்லை பயன்படுத்த

  • கருத்துக்கள உறவுகள்

என்ற உங்களுடைய கேள்விகளுக்கு அப்பால் தூக்கு தண்டனை வழங்குவதை கடுமையாக எதிர்ப்பவன் என்பதற்கு அப்பால் கசாப் ஒன்றும் நல்லவன் கிடையாதே துப்பாக்கியுடன் அவன் போட்ட வெறியாட்டத்தில் எத்தனை அப்பாவிகள் கொல்லப்பட்டனர் எனினும் தூக்குத்தண்டனைக்கு பதில் ஆயுள்த்தண்டனையை இந்திய பேரரசு வழங்கி இருக்கலாம் என்பது என்னுடைய கருத்தாக இருதாளும் கூட விடுதலைப்புலிகள் கூட தவிர்க்க முடியாத சில இடங்களில் சில குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி இருந்ததையும் நாங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்

[size=4]#1 : கடைநேரம் வரை சில சிங்கள சிப்பாய்கள் உயிருடன் பாதுகாக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர் [/size]

[size=1]

[size=4]#2 : புலிகள் ஒரு அரசு இல்லை. எனவே அவர்களின் செயல்பாட்டை ஒரு அரசுடன் ஒப்பிட முடியாது, அப்படித்தான் கைதிகள் விடயத்தில் ஒப்பிடாலும் அவர்கள் இஸ்லாமிய அமைப்புக்களை விட (உதாரணம் தலிபான்) எவ்வளவோ மேல். [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே தமிழ் ஈழத்தனி அரசு ஓன்று இயங்கி கொண்டுதான் இருந்தது போலீஸ் போக்குவரத்து வருமான வரி பொருண்மிய மேன்பாடு நிதி நீதி என்று பல துறைகள் நீதிமன்றத்தால் மரணதண்டனை வளங்கப்பட்டோரும் உண்டு

தனிப்பட்ட ரீதியில் மரண தண்டனையை ஆதரிக்கின்றேன். பொதுவான குற்றம் செய்கின்றவர்களுக்கு சிறைத் தண்டனை என்பது சீர்திருந்த உதவலாம் (சிறை அமைப்பும், அரசுகளின் பொறுப்பணர்வையும் பொறுத்தது. இலங்கைச் சிறையில் இருந்து வெளிவரும் குற்றவாளி முன்னை விட மோசமான குற்றவாளியாகவே வெளிவருவது பொதுவான அம்சம்). ஆனால் திட்டமிட்டு பயங்கர குற்றம் செய்பவர்களுக்கு முதலில் சில வருட கடூழியச் சிறையும் பின் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டனையும் தான் மிகச் சிறந்த தண்டனை.

குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்கின்ற மிருகங்களுக்கு, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்ற மற்றும் உற்பத்தி செய்கின்றவர்களுக்கு, மக்களின் பணத்தை / வரிப்பணத்தை சுருட்டி வைத்து இருப்பவர்களுக்கு கடூழியச் சிறையும், கொடுமையான மரண தண்டனையும் தான் குறைந்த பட்ச தண்டனைகளாக அறிவிக்க வேண்டும். Period.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் இதனை குற்றவாளிக்கு எதிரான மரண தண்டனையாகப் பார்க்கவில்லை. மாறாக ஒரு பாகிஸ்தானியனை முஸ்லீமை தண்டித்த திருப்தி தான் அவர்களின் கருத்துக்களில் தொனிக்கிறது.

கசாப் சரணடைந்த கைதி. சரணடைந்தவர் மட்டுமன்றி அவர் தான் திருந்தி வாழ சந்தர்ப்பமும் கோரியவர். மன்னிப்புக் கோரியவர். அவரிடம் போய் மரண தண்டனையை திணிப்பது சராசரி மனிதத் தன்மை கூட அற்ற விடயம்..! கசாப் தூக்கிலிடப்படும் போது எந்த வகையில் மனித சமூகத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்..???????!

இன்று.. இந்த முடிவை முன் வைத்து காங்கிரஸ் வெறியர்கள்.. ராஜீவ் (ராஜீவே ஈழத்தில் மிகப்பெரிய மனித படுகொலையைச் செய்த ஒருவர்) கொலைக் குற்றவாளிகளையும் தூக்கில் போடு என்று கூப்பாடு போடுகின்றனர். அந்த அப்பாவிகளைப் போலவே கசாப்பும்.. ஒருவனாக ஏன் இருந்திருக்க முடியாது..????! இவற்றை எல்லாம் யார் நீதியோடு விசாரிப்பது..???! :icon_idea::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பாகிஸ்தானிய கொலைஞரை தூக்கிலிட்டு இந்தியர்களை இந்தியா குதூகலிக்கிறது. பாகிஸ்தானும் பதிலுக்கு இப்படி ஏதாவது செய்யும்.

இப்படியான மரண தண்டனைய நிறைவேற்றியதன் மூலம் இந்தியாவின் கனவு தகர்க்கப்படுமா என்பது ஒரு கேள்வி.

வி.புலிகள் நிழல் அரசை நிகழ்த்தி பல சமூக விரோதிகளை திருத்துவதற்கான இடம் (பள்ளி) அவர்களால் நடாத்தப்பட்டுள்ளது. தேசதுரோகிகள் (அரசுக்கு காட்டிக்கொடுத்தோர்) மரண தண்டனைக்கு உள்ளானார்கள்.திருந்துவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டும் திருந்தாதவர்கள் சமூகத்துக்குள் திருப்பி அனுப்பப்பட முடியாது.

உலகின் சனநாயக நாடாக மதிக்கப்படும் அமெரிக்காவின் ரெக்சஸில் வருடத்துக்கு கொல்லப்படும் கைதிகளின் எண்ணிக்கை கீழே

http://www.deathpenaltyinfo.org/number-executions-state-and-region-1976

ஏன் இவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால் சமூகத்துக்குள் திருப்பி விடப்பட்டால் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவர்கள் என்பதால் ஆகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.