Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் பாகம் 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிடிச்சிட்டன் சபேசன் அண்ணா தான் ரொம்ப ரொம்ப நல்லவர்

  • Replies 103
  • Views 10.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய குரு இசை அண்ணா கூறியது: யாரையும் முழுதாக நம்பக்கூடாது.. அதே சமயம் தாயக விடுதலை என்கிற கோட்பாட்டுடன் இயங்குபவர்களில் யாரையும் ஒதுக்கவும் கூடாது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலை போருக்கு எந்தவொரு பங்களிப்பையும் செய்யாது இணையத்தில் விமர்சனங்களும் வியாக்கியானங்களும் செய்து தம்மை விற்பனர்கள் என காட்ட முயல்பவர்கள் இப்படி ஆயிரம் புழுதிகளை பறக்க விடவே செய்வர் 

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல அனைத்துலக செயலகத்தைவெளியில் நின்று இயக்குபவர். மயூரன்(குட்டி அல்லது விடுதலை) இவர் கே.பி யின் மருமகன். அதாவது சகோதரியின்  மகன். இவரே ஜரோப்பா முழுவதும் பயணம் செய்து அனைத்துலக கிளைகளிற்கு ஆலோசனைகளை வழங்குபவர். 

சாத்திரி அண்ணா.. இந்த மயூரன் என்பவரை சாதாரண பொதுஜனம் எங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. ஆனால் அவர் கேபியின் மருமகனாக இருந்தாலும் அந்த ஒரு பிணைப்பிற்காக அவரை ஒதுக்குதல் சரியா?  :unsure:

அப்படிப் பார்த்தால் Gary ஆனந்தசங்கரி அவர்கள்?? :blink:

கே.பி யின் மருமகன் என்பது போதாதுதான்.ஆனால் கே.பியுடன் இன்னமும் தொடர்புகளை வைத்திருக்கிறார்.அவரை சந்தித்திருக்கிரார்.அவரின் திட்டங்களுக்கமையவே காய் நகர்த்துகிறார் என்பது தாராளமாக போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பி யின் மருமகன் என்பது போதாதுதான்.ஆனால் கே.பியுடன் இன்னமும் தொடர்புகளை வைத்திருக்கிறார்.அவரை சந்தித்திருக்கிரார்.அவரின் திட்டங்களுக்கமையவே காய் நகர்த்துகிறார் என்பது தாராளமாக போதும்.

இதை நீங்கள் சொல்லுறீங்கள். ஆதாரத்தையும் இணைத்துவிட்டால் நாங்களும் அறிவோம் அல்லவா?

இன்னொருவர் உங்களிற்கு இவரை பின்தொடர் என்று  சொல்வேண்டும்  நீங்கள் செந்தமா எதையுமே யேசிக்க மாட்டிங்கள் அப்பிடித்தானே

பலருக்கு சொந்தமாக யோசிக்க தெரிந்திருப்பதால் தான் உங்கள் கட்டுரையில் எழுதப்பட்டிருப்பதை பார்த்து முடிவெடுப்பதில்லை. :D

யாழிலுள்ள சில நபர்கள் உள்ளுக்குள் விசத்தை வைத்துக்கொண்டு எழுதுபவர்கள். அவர்களை பலர் கண்டுக்கிறதே இல்லை.

ஆனால் சாத்திரி அண்ணாவை அந்த அளவுக்கு யாரும் இன்னும் நினைக்கவில்லை. முக்கியமாக நான் இதுவரை நினைக்கவில்லை. வேறு யாரும் சாத்திரி அண்ணாவை பற்றி குறை சொன்னாலும் சாத்திரி அண்ணாவுக்கு சார்பாக தான் நான் கதைத்திருக்கிறேன். ஏனென்றால் நல்ல எழுத்தாற்றல் உள்ள ஒருவர் தமிழீழம் கிடைப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் தமிழர்களின் ஒற்றுமை பற்றியும், பொது எதிரியான சிங்களத்தின் தமிழின அழிப்பு பற்றியும் பிரயோசனமான சில கட்டுரைகள் எழுதினால் நிச்சயம் மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதால் தான்.

ஆனால் தனது பெயருக்காக தமிழீழத்தின் அழிவுக்கு துணைபோகும் கட்டுரைகளை தொடர்ந்து எழுதினால் இப்பொழுது ஆர்வமாக வாசிக்கும் பலமக்கள் எதிர்காலத்தில் அவரை ஒதுக்கி வைக்கும் நிலையே வரும். எழுத்தாற்றலால் எவ்வளவு காலம் தான் மக்களை கட்டிப்போடுவது? :D

அன்று பொம்பிளை பிரச்சனையில் குண்டப்பாவுக்கு தண்டனை வழங்காமல் பொதுமன்னிப்பு வழங்கியதில் தலைவர் தவறு செய்துவிட்டார்.
 
அது மட்டுமல்ல தனக்கு கீழே வளரும் போராளிகள், அதே கட்டுகோப்புடன் எப்பவும் இருப்பார்கள் என்று மனக்கணக்கு போட்டு வாழ்ந்து விட்டார்.
 
இந்த நிலையில், அவருக்கு படையல் வைத்து சாப்பிடும் நபர்கள் இருக்கும் உலகில், குண்டப்பா போன்றவர்கள் தனியொரு மாவீரர் தினம் நடத்துவதில் நான் குறை ஒன்றும் காணவில்லை.  :icon_idea:
 
பிரான்சில், நாதன் கஜன் போன்றவர்களை சுடுவதற்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கிக்கு உரியவருக்கு லெப். கேணல் பதவி நிலை வழங்கும்போது, பரிதிக்கு கேணல் நிலை வழங்குவதில் என்ன பிழை ?? :blink:
  • கருத்துக்கள உறவுகள்

இரகசியங்களும், மர்மங்களும், சாகஸங்களும், வஞ்சகங்களும், வன்மங்களும் நிறைந்ததுதான் தேசிய விடுதலைப் போராட்டம். தற்போது ஆயுதப் போராட்டம் முடிந்து அரசியல் ரீதியாக செயற்பட வேண்டிய காலத்திலும் பழைய பாதையில் பயணித்தால் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமான கதைகளும், வெறும் வாய்களை மெல்லுபவர்களுக்கு நிறைய அவல்களும் கிடைக்கும்.

சாத்திரியார் இந்தக் கட்டுடைப்புக்கள் மூலம் சாதிக்க முயல்வது என்ன என்று ஒரு குறிப்புத் தந்தால் நல்லது.

யாழிலுள்ள சில நபர்கள் உள்ளுக்குள் விசத்தை வைத்துக்கொண்டு எழுதுபவர்கள். அவர்களை பலர் கண்டுக்கிறதே இல்லை.

ஆனால் சாத்திரி அண்ணாவை அந்த அளவுக்கு யாரும் இன்னும் நினைக்கவில்லை. முக்கியமாக நான் இதுவரை நினைக்கவில்லை. வேறு யாரும் சாத்திரி அண்ணாவை பற்றி குறை சொன்னாலும் சாத்திரி அண்ணாவுக்கு சார்பாக தான் நான் கதைத்திருக்கிறேன்.

புலிவேசம் கலைஞ்சிடிச்சு டும் டும் டும்.
வந்த நோக்கம் தெரிஞ்சிடுச்சு டும் டும் டும்
படையல் வைச்ச சாத்தானுக்கு கொடிபிடிப்பேன் டும் டும் டும்.
ஆறு கடலை போய்ச்சேரும் டும் டும் டும்.
அவிழ்த்த பொய்கள் கைகொட்டி சிரிக்கும் டும் டும் டும். :D
 
சாத்திரியார் இந்தக் கட்டுடைப்புக்கள் மூலம் சாதிக்க முயல்வது என்ன என்று ஒரு குறிப்புத் தந்தால் நல்லது.

பணம் பணம் பணம் தவிர வேறொன்றில்லை பராபரமே

புலம்பெயர் வாழ்மண் என்னும் இழிவு நிலைக்கு தள்ளப்பட்ட நாளிலிருந்து எனக்கு தெரிந்தது அனைத்துலக செயலகம் ..............இன்றுவரை எனது தாயக விடுதலை உணர்வுடன் சங்கமித்து பயணிக்கிறார்கள் ...........அதன் பின்னால் போவதால் அன்று கண்ட திருப்தி இன்றும் காணக்கூடியதாய் உள்ளது ...............என்னில் உண்மையை நான் இனம் கண்டு உண்மையாய் என் தாய்மண்ணை நேசிப்பதால் ....................நண்பரே தாங்கள் கண்ட குற்றம் ,அல்லது குறை அதாவது காசு பணம் என்ற அந்த கேவலமான சிந்தனைக்கப்பால் தமிழீழம் என்று ஜோசிப்பவன் நான் ...............அதனால் இப்ப முழைத்த காளான்களை விட அன்று பூத்த கார்த்திகை செடிக்கு பின்னால் போவதே என் கொள்கை ..............................நன்றி வணக்கம்

இயற்கையாய் பூத்த காத்திகை மலர்கள்  நல்லவைதான்.  ஆனால் நீங்கள் பிளாஸ்ரிக் காத்திகைப் பூக்களை உண்மைப் பூக்களாய் நம்பிவிட்டீர்கள் போலும்;. முதலில் எது அசல்? எது நகல்? என்று கண்டுபிடிக்க வேண்டும். தூரத்தில் நின்று  பார்க்காதீர்கள் அருகில் சென்று பாருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரகசியங்களும், மர்மங்களும், சாகஸங்களும், வஞ்சகங்களும், வன்மங்களும் நிறைந்ததுதான் தேசிய விடுதலைப் போராட்டம். தற்போது ஆயுதப் போராட்டம் முடிந்து அரசியல் ரீதியாக செயற்பட வேண்டிய காலத்திலும் பழைய பாதையில் பயணித்தால் வாசிப்பவர்களுக்கு சுவாரஸ்யமான கதைகளும், வெறும் வாய்களை மெல்லுபவர்களுக்கு நிறைய அவல்களும் கிடைக்கும்.

சாத்திரியார் இந்தக் கட்டுடைப்புக்கள் மூலம் சாதிக்க முயல்வது என்ன என்று ஒரு குறிப்புத் தந்தால் நல்லது.

இரகசியங்களும்  மர்மங்களும்  சாகசங்களும்  வஞ்சகங்களும்  வன்மங்களும் அற்றதொரு  அடுத்த கட்ட நகர்வை  சாகசங்களும்  சுவாரசியங்களும்  வெறும் வாய் மெல்பவர்களிற்கு கொடுக்கமல்  அனைவரும் இணைந்து பகிரங்கமாக  நகர்த்தவேண்டும். அதற்கான தொடர் முயற்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது பார்க்கலாம் :)

முயற்ச்சிகள் செய்பவர் இப்படியெல்லாம் எழுதாமாட்டார்கள். அந்த முயற்ச்சியும் அடுத்த கட்டுரைக்கான முயற்ச்சியே, ஓழிய நல்ல எண்ணத்தின் செய்ற்பாடாக தெரியவில்லை.

நியானி: பல் வரிகள் தணிக்கை.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இரகசியங்களும்  மர்மங்களும்  சாகசங்களும்  வஞ்சகங்களும்  வன்மங்களும் அற்றதொரு  அடுத்த கட்ட நகர்வை  சாகசங்களும்  சுவாரசியங்களும்  வெறும் வாய் மெல்பவர்களிற்கு கொடுக்கமல்  அனைவரும் இணைந்து பகிரங்கமாக  நகர்த்தவேண்டும். அதற்கான தொடர் முயற்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றது பார்க்கலாம் :)

யானையும் சிங்கமும் கூடி குலவும்

புலியும் மானும் ஒன்றாக நீரருந்தும்

மயிலும் பாம்பும் சேர்ந்து விருந்துண்ணும்

இந்த அதிசயத் திருநாள் வரும் நாளில்

நான் கிழடுதட்டாமல் பிணிகள் இன்றி

சுயத்துடன் இருக்கவேண்டும்.

வெளிப்படையாக அனைத்து விடயங்களும் செய்யவேண்டியதன் அவசியதை இப்போ பெரும்பாலானோர் உணர்ந்துள்ளார்கள் .

எமது அரசியல் ஆரம்பத்தில் இருந்தே ஒரு குறிக்கப்பட்டவர்களின் கைகளில் தங்கி சின்னாபின்னமாகிவிட்டது.எதுவித உரிமைகளையும் பெறாமல் தமிழன் இன்றும் நடுத்தெருவில் தான் .வெளிப்படை தன்மை இல்லாத ஒரே காரணத்தால் தான் அனைத்து விடயங்களிலும் சுயநலவாதிகளால் சுத்து மாத்து செய்ய கூடியதாகிவிட்டது .

தொடர்ந்து எழுதுங்கள் சாத்திரி.நல்லது கேட்டது அனைவருக்கும் தெரியவேண்டும் .மடியில் கனம் இருப்பவர்கள் பயப்படத்தான் செய்வார்கள் .

உலகின் அதிசிறந்த மக்களாட்சி நடைபெறும் நாடான அமெரிக்காவிலேயே அதன் தேசியம் சார்ந்த செய்கைகள் பகிரங்கப்படுத்தப்படுவது இல்லை.
விக்கிலீக்ஸ் அமைப்பிற்கு கொடுத்தவரும் அதன் உரிமையாளரும் அமெரிக்காவின் அழுங்குப்பிடியில்..

எமது சமுதாயத்தில் எதை எழுதுவது எழுதக்கூடாது என்பதற்கு சமுதாய பற்று தேவை.
எமக்குள் உள்ள சிக்கல்களை வலையில் எழுதித்தான் தீர்க்க முடியும் என்பது சிறுபிள்ளைத்தனமான கூற்று.

எதையோ ஒழிக்கணும் எண்டு சொல்லுறியள் , பக்கம் சாரா நிலைக்கு வாருங்கள்  

எதையோ ஒழிக்கணும் எண்டு சொல்லுறியள் , பக்கம் சாரா நிலைக்கு வாருங்கள்  

எந்த ஒரு விடுதலை இயக்கத்தையும் சேர்ந்தவர், அதற்காக உறுதிமொழி எடுத்தவர் அந்த இரகசியங்களை மீறுவது என்பதில் ஒரே ஒரு கருத்துத்தான் உண்டு, துரோகம். எமது இயக்க இரகசியங்கள் வெளியில் போகக்கூடாது என்பதற்காக தம்மை தாமே அழித்தவர்களும் உண்டு. இன்று அந்த விடுதலை இயக்கம் அழிக்கப்பட்ட நிலையில் இன்றும் உள்ளவர்கள் பற்றி, அந்த அமைப்பில் இருந்தவர்கள் வலையில் எழுதுவது மூலம் நாம் பக்க சார்பற்ற நிலையையும் சாதிக்க முடியும் என எண்ணுவது மேலும் எம்மை பலவீனமாக்கும் செயல். இவ்வாறு வெற்றிகரமாக நடந்த வரலாறும் இல்லை.

எமது இன்றைய அரசியல் செயல்பாடுகளில் கூட ஜனநாயாக அடிப்படியில் எடுக்கப்படும் முன்னெடுப்புக்கள் மீது எதிரி பலமான தனது கரத்தால் சிதைப்பது இலகு. அதுவே  நாடுகடந்த அரசின் பலவீனமகாவும் உலகத்தமிழர் பேரவையின் பலமாகவும் பார்க்கலாம்.

எனவே ஒரு விடுதலை போராட்ட அமைப்பின் முன்னைய இரகசியங்களை, இன்றைய எதிரிகளின் ஊடுருவல் நிறைந்த சிக்கல்களை மின்வலைகளில் எழுதுவது தனிப்பட்ட போலிப்புகழை தரலாம், சிலருக்கு பண இலாபத்தை தரலாம், ஆனால் தாயாக மக்களுக்கு எந்த உதவியைசெய்யும் என தெரியவில்லை.

இயற்கையாய் பூத்த காத்திகை மலர்கள்  நல்லவைதான்.  ஆனால் நீங்கள் பிளாஸ்ரிக் காத்திகைப் பூக்களை உண்மைப் பூக்களாய் நம்பிவிட்டீர்கள் போலும்;. முதலில் எது அசல்? எது நகல்? என்று கண்டுபிடிக்க வேண்டும். தூரத்தில் நின்று  பார்க்காதீர்கள் அருகில் சென்று பாருங்கள்

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக ......................சென்றுவாருங்கள் ....................சர்வச்ய்ரனுக்கு நன்றி :lol:  :D 

தமிழ்சூரியன்

ஆண்டவர் உங்களோடு இருப்பாராக ......................சென்றுவாருங்கள் ....................சர்வச்ய்ரனுக்கு நன்றி :lol:  :D

ஆண்டவர் உங்களோடும் இருப்பாராக ......................சென்றுவாருங்கள் ....................சர்வச்ய்ரனுக்கு நன்றி :lol:  :D

நாதன், கஜன் படுகொலை   செய்யப்பட்ட்து யார் என  அப்போது  அமைப்புகுள்  பல கேள்விகள் போராளிகள் மட்டத்திலும் கேக்க பட்டது.  செய்யப்பட்டது புலிகள் தான் என  நேரடியாக கூறாமல் சொல்லப்பட்ட காரணம்.

நாதன் , கஜன்  தவறுதலாகவ சில தகவல்களை இலங்கை அரசுக்கு கசியவிட்டதாகவும் ( பிரான்ஸ் அரசுக்கும் புலிகளுக்கும் உள்ள நட்பு ?) அதானால் அவர்களை அப்புறபட்டுத்த வேண்டும் என்ற நிலை தோன்றியதாகவும்...................

ஆனால்  சாத்திரி எழுதியது தான் உண்மையாக இருக்கு. அதற்க்கு தான் சந்தர்ப்பமும் கூட.

புலிவேசம் கலைஞ்சிடிச்சு டும் டும் டும்.
வந்த நோக்கம் தெரிஞ்சிடுச்சு டும் டும் டும்
படையல் வைச்ச சாத்தானுக்கு கொடிபிடிப்பேன் டும் டும் டும்.
ஆறு கடலை போய்ச்சேரும் டும் டும் டும்.
அவிழ்த்த பொய்கள் கைகொட்டி சிரிக்கும் டும் டும் டும். :D
 
உங்களுக்கு தேவையானதை மட்டும் கத்தரித்து போடாமல் அதற்கு முன் எழுதியதையும் பின்னர் எழுதியதையும் முழுமையாக போட வேணும். :D

யாழிலுள்ள சில நபர்கள் உள்ளுக்குள் விசத்தை வைத்துக்கொண்டு எழுதுபவர்கள். அவர்களை பலர் கண்டுக்கிறதே இல்லை.

ஆனால் சாத்திரி அண்ணாவை அந்த அளவுக்கு யாரும் இன்னும் நினைக்கவில்லை. முக்கியமாக நான் இதுவரை நினைக்கவில்லை. வேறு யாரும் சாத்திரி அண்ணாவை பற்றி குறை சொன்னாலும் சாத்திரி அண்ணாவுக்கு சார்பாக தான் நான் கதைத்திருக்கிறேன். ஏனென்றால் நல்ல எழுத்தாற்றல் உள்ள ஒருவர் தமிழீழம் கிடைப்பதற்கான வழிமுறைகள் பற்றியும் தமிழர்களின் ஒற்றுமை பற்றியும், பொது எதிரியான சிங்களத்தின் தமிழின அழிப்பு பற்றியும் பிரயோசனமான சில கட்டுரைகள் எழுதினால் நிச்சயம் மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதால் தான்.

சாத்திரி அண்ணா நினைத்தால் அவரால் சில நன்மைகளை ஏற்படுத்த முடியும் என்ற நிலையில் அவரை இதுவரை நான் புறக்கணிக்கவில்லை. ஆனால் அவர் தன பெயர் தான் முக்கியம் என்று நினைத்தால் நானும் அவரை புறக்கணிப்பேன். பலரும் அவரை புறக்கணிக்கும் தன்மை உள்ளது என்பதையே கூறினேன்.

தமிழீழ ஆதரவாளர்கள் எல்லோரும் மற்றவர்களை எதிராளியாக நினைக்க வேண்டும், இல்லாவிட்டால் புலிவேசம் போட்டார்கள் என்பது போல் உள்ளது உங்கள் கருத்து. அர்ஜுன் அண்ணா ஒரு புலி எதிர்ப்பாளர். ஆனால் அர்ஜுன் அண்ணாவை எனக்கு பிடிக்கும். அதற்காக புலிவேசம் கலைஞ்சிடுச்சு டும் டும் டும் என்று எழுதப்போகிறீர்களா? தாராளமாக எழுதுங்கள். :D

அது சரி நான் எப்ப என்னை புலி என்று சொன்னனான்.... :unsure:  நான் சாதாரண மக்களில் ஒருவர். :)

Edited by துளசி

இந்த ஆக்கத்தை எழுதுபவர் ஒன்றை உறுதியாக நம்புகின்றார்: 'தேசியத்தலைவர் உயிருடன் இல்லை'.
கடந்த மாவீரர் தினமன்றும் மீண்டும் ஒரு படத்தை இணைத்து இருந்தார்.

அந்த சூரியன் மறைந்து விட்டது எனவே நான் இன்று யார்?  இந்த உலகில் எனக்கு என்ன இடம்? என்னை நான் எப்படி தக்க வைப்பது?
 
இந்தக்கேள்வி நாட்டிற்காக உழைத்தவர்கள் பலர் முன் உள்ளது.

#1: சிலர் வேறு வழிகள் மூலம் மக்களுக்கு இல்லை மக்கள் விடுதலைக்கு தொடர்ந்தும் உதவுகின்றனர்
#2: வேறு சிலர் ஒதுங்கி உள்ளனர்
#3: ஒரு சிறு பகுதியினர் காட்டிக்கொடுப்பு வேலைகளை செய்கின்றனர்

நாளை மீண்டும் தமிழ் தேசியம் தலை தூக்கும்போழுது #1, #2 சார்ந்தவர்களை மீண்டும் சமூகம் ஏற்கும்.
#3 பகுதியினரை எதிரியும் ஏற்கமாட்டான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.