Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களுக்கு விடுப்பெண்டால் காணும். மூன்று பெண்கள் தான் மதுவுக்கு லண்டனில என்ன நடந்திருக்கு என்று எழுதும்படி கேட்டிருக்கினம். ஆண்களுக்கு அதுபற்றிக் கவலை இல்லை. சரி உங்களுக்காக அதையும் எழுதிறன் ரதி, அலை,நிலா காத்திருங்கள். :D :D

  • Replies 100
  • Views 9.2k
  • Created
  • Last Reply
பெண்களுக்கு விடுப்பெண்டால் காணும். மூன்று பெண்கள் தான் மதுவுக்கு லண்டனில என்ன நடந்திருக்கு என்று எழுதும்படி கேட்டிருக்கினம். ஆண்களுக்கு அதுபற்றிக் கவலை இல்லை. சரி உங்களுக்காக அதையும் எழுதிறன் ரதி, அலை,நிலா காத்திருங்கள். :D :D

கெதியாய் எழுதுங்கோ நண்பி! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லக்ஷ்மி எழுதின கதையள் மாதிரி எனக்கு வாசிக்கேக்கை இருந்திது . ஆம்பிளையும் சரி பொம்பிளையும்சரி , கலியாணம் கட்டினாப்பிறகு ஒழுக்கம் வேணும் . அது இல்லையெண்டால் அவை ஒண்டாய் இருக்கிறதிலை வேலை இல்லை ,சந்தோசமாய் பிறிஞ்சு இருக்கலாம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மைத்திரேயி உங்கள் கருத்துக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி.. நினைச்ச மாத்திரத்தில எப்பிடி லண்டனுக்கு விசா கிடைச்சது? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
அதெல்லாம் சரி.. நினைச்ச மாத்திரத்தில எப்பிடி லண்டனுக்கு விசா கிடைச்சது? :unsure:

 

பிரித்தானியா குடியுரிமை இருந்தால் வீசா தேவையில்லைத்தானே இசை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த கதைய எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணுட்ட சொல்லி திட்டு வாங்கினது தான் மிச்சம் செருப்பால அடிக்காத குறை சரி அங்க அவாக்கு என்ன நடந்தது எண்டதையும் சொல்லுங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதுவுக்கு கீத்துறோ விமான நிலையம் நெருங்க நெருங்க மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. இன்னும் ஐந்து நிமிடங்களில் விமானம் தரை இறங்கிவிடும். ஒரு பதினைந்து இருபது நிமிடத்தில் கரனைப் பார்க்கலாம். நான்கு மாதங்களின் முன்னர் கபிலனின் நண்பனின்  திருமணம் லண்டனில் நடைபெற்றதால் அதற்கு வருவதற்காக எடுத்த விசா இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கு. அல்லது விசா எடுக்க என்றே இரண்டு மூன்று வாரங்கள் சென்றிருக்கும். கபிலனுக்குச் சொல்லாது விசா எடுத்திருக்க ஏலாது. எதோ என்ர நல்ல காலம். லண்டன் போன பிறகு விசாவைப் புதுப்பிக்கலாம் என்று கரன் தெரியாமலோ சொல்கிறார் என மனதுள் எண்ணியபடி விமானம் தரை தட்டி மெதுவாக ஊர்ந்து செல்வதைப் பார்த்தபடி இருந்தாள்.

எல்லோருக்கும் பின்னால் அவளும் வரிசையில் நின்று தன் கடவுச் சீட்டைக் காட்டியபோது, எதற்காக வந்தனி இங்கு எனக் கேட்டபோது என்ன சொல்வது என்று தெரியாது தடுமாற்றம் ஏற்பட்டது. விசிற் விசிற் என இருமுறை கூறியதும் அதிகாரி இவளை விட்டுவிட்டார். நல்ல காலம் முதல் முறை வந்தபோது ஏன் எதுக்கு என கேள்விமேல் கேள்வி கேட்டு குடைந்தவர்கள். இம்முறை பெரிதாகக் கேட்கவில்லை. தட்டுத் தடுமாறி மற்றவர்களின் பின் வெளியே வந்து இவளது பெட்டிகளை எடுக்கும் இடத்திற்கு வருகிறாள். பெட்டிகள் வர அரை மணி நேரம் ஆகின்றன. கரன் என்னைத் தேடப் போகிறார் என எண்ணியபடி விமானத்தினுள் நிப்பாட்டி வைத்த கைத் தொலைபேசியை எடுக்கிறாள். அவனின் இலக்கத்தை அழுத்த தொடர்பு கிடைக்கவில்லை. வெளியே வந்து அவள் கண்கள் கரனைத் தேடி அங்கும் இங்கும் அலைகின்றன. தூரத்தில் நிற்பவனா கரன். படத்தில் நல்ல குளுகுளுவென்று பார்க்க அழகாக இருந்தானே. இப்ப பார்க்க மெலிந்த தோற்றத்துடன் ஐயோ என் நெஞ்சு ஏன் இப்படிப் படபடக்கிறது.

கையைஆட்டிச் சிரித்துக் கொண்டு வருகிறான். அவன்தான். இவளும் அவனைப் பார்த்து சிரிக்கிறாள். அவன் இவளுக்குக் கிட்ட வந்தவுடன் இவளை அணைக்கிறான். இவளுக்கு பயத்தில் எவ்வித உணர்வும் தோன்றவில்லை. ஆக்கள் என்று சொல்லிக் கொண்டு தன்னை விடுவிக்கிறாள். அவனும் அதன்பின் ஒன்றும் செய்யவில்லை. இவளை தொடருந்து  நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறான். அதிலிருந்து இறங்கி பேருந்தில் ஒரு இருபது நிமிடம் போய் இறங்கி வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகிறான். கதவைத் திறந்ததுமே சரியான புளிச்சல் மணம். இவளுக்கு அருவருப்பாய் இருக்கிறது. இங்கதான் இருக்கிறியளோ என்கிறாள். ஓம் என்றபடி படிகளில் இவளின் பிரயாணப்  பெட்டிகளை இழுத்துக் கொண்டு ஏற இவளும் பின்னால் ஏறுகிறாள். காற்றோட்டம் இல்லை, வெளிச்சம் இல்லை. அவளுக்கு மூச்சு முட்டுவது போல் இருக்கிறது.

அறையைத் திறந்ததும் அதற்குள் சென்றால் ஒரு சிறிய அறை. இவளின் பெட்டிகளே அரைவாசி இடத்தைப் பிடிக்கின்றன. பெட்டிகளை வைத்தவுடன் இவளருகில் வந்து இவளை இறுக்கி அணைக்கிறான். இவளும் அணைத்தாலும் எதோ ஒன்று முழுதும் ஈடுபட விடாது தடுக்கின்றது. இவளின் நிலை அவனுக்கு விளங்கியிருக்க வேண்டும். அவளை விட்டுவிட்டு என்ன பிடிக்கவில்லையோ என்கிறான். இப்பதானே வந்தனான் கொஞ்சம் பொறுங்கோ என்றதும் அவனும் ஒன்றும் கூறவில்லை. என்ன குடிக்கிறீர் தேநீரா குளிர் பானமா என தேநீரே தாங்கோ என்றுவிட்டு கட்டிலில் அமர்கிறாள்.

கரன் கீழே இறங்கிப் போக இவள் மனம் பலத்தையும் நினைத்துக் குழம்புகிறது. இவனை நம்பித்தானே வந்தனான். ஆனால் எதோ என்னைத் தடுப்பதுபோல் இருக்கிறதே என மனச் சஞ்சலத்தோடு இருக்க தேநீருடன் வருகிறான் கரன். எப்பிடி அங்க ஒரு பிரச்சனையும் இல்லையே எனக் கேட்ட இல்லை என்று இவள் தலையை மட்டும் ஆட்டுகிறாள். என்ன கதைக்கவே பஞ்சிப்படுகிறீர் என்றபடி இவளுடன் நெருங்கி அமர்ந்து இவளை அணைக்க இவளும் நெகிழ்ந்து போகிறாள்.

பின்னர் வந்த சில நாட்கள் இருவருக்கும் கரும்பாக இனிக்க எல்லாவற்றையும் மறந்து அவனுடன் ஒன்றிவிட்டாள் மது. கொஞ்சம் பித்தம் தெளிந்த பின்னர்தான் அவளையும் அவனையும் தவிர ஒருவரையும் அந்த வீட்டில் காணவில்லை என்பது அவளுக்கு உறைக்கிறது. ஆனால் பக்கத்து அறை பூட்டியே இருக்கிறது ஏன் என அவனைக் கேட்க நான் இந்த அறையில் வாடகைக்கு இருக்கிறன். வீட்டுக் காரர் விடுமுறைக்குப் போட்டினம் வாற மாதம் தான் வருவினம் என்கிறான். அப்ப உங்களுக்கு சொந்த வீடு இருக்கு என்று சொன்னியள் என்று அவனைப் பார்க்க, முந்தி இருந்தது. ஒரு பிரச்சனை இப்ப வித்துப் போட்டன் என்று கூறிவிட்டுத் திரும்பிக் கொள்கிறான். எத்தினை கிழமை லீவு போட்டனியள் என அவள் கேட்க ஒருமாதம் லீவு இருக்கு என்றுவிட்டு இண்டைக்கு எங்காவது வெளியில போவமோ என அவள்  கேட்டதுக்கு இண்டைக்கு நண்பன் ஒருவனை சந்திக்கிறன் என்று சொன்னனான். நாளைக்குப் பாப்பம் என்றுவிட்டு தன் அலுவலைப் பார்க்க மதுவுக்கு கொஞ்சம் கோபம் எட்டிப் பர்த்தது. வந்து ஒரு வாரமாகிறது.வெளியே போகாமல் அந்த அறை அதைவிட்டால் குசினி, வரவேற்பறை என்று மாறிமாறி அதற்குள்ளேயே சுற்றி அலுத்துவிட்டது.

அடுத்தநாள் இவளை கூட்டிக் கொண்டு கடைத் தெருவெல்லாம் சுற்றிய கரன் ஒரு இந்தியன் உணவகத்துக்கு அழைத்துக் கொண்டு செல்கிறான். யேர்மனி போலன்றி இங்கு பல உணவகங்களும், ஆடை விற்பனை நிலையங்களும் பார்க்க அவளுக்கு மகிழ்வாக இருந்தது. இவள் தனக்கு பூரி வேண்டுமென்று கூற, அவன் தனக்கு பரோட்டா சொல்லிவிட்டு குளிர்பானம் அருந்துகின்றனர். பார்த்துக்கொண்டிருக்க வாசல்பக்கம் நான்கு பேர் வருவது தெரிகிறது. பார்த்தால் ரவுடிகள் போல் தோற்றம். இவள் உடனே தலையைக் குனிந்துகொள்கிறாள். ஆனால் அவர்கள் இவர்கள் இருக்கும் இடம் நோக்கி வர இவளுக்கு கலவரம் உண்டாகிறது. லண்டன் இல் ரவுடிகள் அதிகம் என்று கேள்விப்பட்டிருக்கிறாள். அவர்கள் இவர்களின் மேசைக்கு அருகில் வந்து மச்சி நல்லாத்தான் பிடிச்சிருக்கிறாய் என்று கூறி கரனுடன்  கைகுலுக்குகிறார்கள். இவளுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அது முகத்திலும் தெரிய என்ன கரன் எங்களைப் பற்றி சிஸ்டருக்குச் சொல்லேல்லேயே மச்சி என்கிறான். இவை என்ர பிரெண்ட்ஸ் என்று கரன் அவளுக்கு அறிமுகப்படுத்துகிறான். அவள் ஒருமுறை தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் குனிந்து கொள்கிறாள்.

இருங்கோவன் என்று கரன் கூற நாளைக்கு சந்திப்பம் மச்சி. சிஸ்டர் பயப்பிர்றா வாரம் மச்சி என்றபடி அவர்கள் போகின்றனர். ஏன் அவங்களை இருக்கச் சொன்னீங்கள் என்று மது கோபமாகவே கேட்கிறாள். நீர் வந்து ஒரு கிழமைதான். அவங்கள் என்னோட அஞ்சு வரிசமாப் பழக்கம் என்றுவிட்டு கரன் உணவும் வர உண்ண ஆரம்பிக்க இவளும் பசியில் உண்ணத் தொடங்குகிறாள். ஆனால் மேற்கொண்டு அவனுடன் எதுவும் கதைக்கவில்லை. அவனும் உண்டு முடிய கிளம்புவமா என்று கூறியபடி எழுகின்றான். சமைக்க ஏதாவது வாங்குவமா என்று கேட்க மரக்கறிகள் இறைச்சி என்பவற்றை வாங்கிகொண்டு வீடு வருகின்றனர். மாலை இடியப்பம் அவித்து கறிகளும் காச்சி முடிய வடிவா எல்லாம் துடைத்துவிடும். பிறகு வீட்டுக்கார அக்கா பேசுவா என்று கரன் கூற நான் என்ன ஒண்டும் தெரியாதனானோ என இவள் சிரிக்கிறாள்.
மதுவுக்கு அப்பப்ப கபிலனின் நினைவும் மகனின் நினைவும் எட்டிப் பாக்கும். வலிந்து அவற்றை நினைக்காது தவிர்த்துவிடுவாள். அத்துடன் கரனும் எந்நேரமும் அவளுடனேயே நின்றதும், சில்மிசங்களால் அவளை சந்தோசப்படுத்தியதும், பார்வையாலேயே கிறங்கடித்து, முத்தத்தில் மூழ்கடித்து புதிய வாழ்வின் அத்தியாயங்களைக் காட்டியதும் எல்லாவற்றையும் மறக்கத்தான் செய்துவிட்டது. மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் நான் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க வேணும். யாராவது ஒரு லோயரைப் பாப்பமா என்று இவள் கேட்க என்ன அவசரம் பொறும் என்றுவிட்டு தொலைக்காட்சி பார்க்கும் அவனை இவளால் பார்த்துக் கொண்டு இருக்கத்தான் முடிகிறது.

அடுத்தநாள் காலை தொலை பேசி ஒன்று வர இப்பவே வாறன் என்றுவிட்டு வெளியில போட்டு வாறன் என்று மட்டும் கூறிவிட்டு கரன் அவசரமாக இறங்கிச் செல்கிறான். இவள் மேற்கொண்டு ஏதும் கேட்கக் கூட முடியவில்லை. மதியம் கரன் வரவில்லை. தொலைபேசியும் நிப்பாட்டி இருந்தது.அரை மணிக்கு ஒருமுறை இவள் அழைத்தும் அவன் எடுக்கவில்லை. இவளுக்கு என்ன செய்வது என்று தெரியாது மாலைவரை தவித்துக் கொண்டிருந்தபோது வந்து சேர்ந்தான். என்ன எத்தினை தரம் போன் அடிச்சனான். எடுத்திருக்கலாம் தானே என அழுகையை அடக்கிக் கொண்டு கேட்டாள். எண்ர பிரச்சனை தெரியாமல் கதைக்காதையும். என்னை கொஞ்சநேரம் தனிய விடும் என்று அவன் கூற ஒன்றும் சொல்லாமல் வெளியே வந்து தொலைக்காட்சி பார்க்க ஆரம்பித்தாலும் மனம் அதில் ஒன்றவில்லை. கரனை நம்பி வந்திருக்கிறேன். விடியப் போய் இப்பதான் வந்திருக்கிறான். என்ன என்று கேட்டாலும் சொல்கிறானில்லை. என்னவாக இருக்கும் என்று எவ்வளவு யோசித்தும் பலனில்லை.

இரவு உணவும் கரன் வேண்டாம் என்றதால் இவளும் உண்ணவில்லை. காலையில் எழுந்து எதுவும் நடவாததுபோல் கோக் ஒன்றை உடைத்து அவன் குடிக்க விடிய வெள்ளன ஆராவது  கோக் குடிக்கிறதே என இவள் வினவ, ஏன் குடிக்கக் கூடாது என்று ஏதும் சட்டம் இருக்கே என கரன் கேட்க இவளுக்குச் சிரிப்பு வருகிறது. இண்டைக்கு வீட்டுக்கார அக்காக்கள் வருவினம் என்கிறான். எத்தினை மணிக்கு என இவள் பரபரக்கிறாள். மத்தியானம் வருவினம் அவைக்கும் சேர்த்துச் சமைச்சு விடும்.நான் வெளியில போட்டு வாறன் என அவன் முடிக்கமுதல் நேற்றும் பொய் பின்னேரம் தன வந்தனீங்கள். வீட்டுக்காற ஆக்கள் வரேக்கையாவது என்னோட நில்லுங்கோவன் என்று இவள் கெஞ்சுவதுபோல் கேட்கிறாள். அவன் கொஞ்சமும் இரங்காமல், நீர் உம்மட பாட்டில இரும் அவை தங்கட பாட்டில வருவினம் என்கிறான். நீங்கள் இல்லாமல் நான் யார் என்று கேட்டால் என்ன சொல்லுறது. என்ர கேர்ள் பிரெண்ட் எண்டு சொல்லும். நான் வருமட்டும் நீர் அறைக்குள்ளையே இரும். நான் வந்த பிறகு சொல்லலாம். என்றுவிட்டு வெளியே  போக எத்தணிக்க மீண்டும் இவள் நானும் உங்களோட வரட்டோ என்று கேட்ட நான் நண்பர்களிட்டைப் போறான் நீர் வந்து அங்க என்ன செய்யப் போறீர்,போட்டு வாறன் என்றபடி கதவைத் திறந்துகொண்டு போய் விட்டான். மதுவுக்கு அழுகை வந்தது. என்ன இவன் என்னை ஒரு பொருட்டாக எண்ணாது போய்விட்டானே. இவனை நம்பி நான் வந்திருக்கிறன் என்று எண்ணும்போதே நினைவில் கபிலன் வருகிறான், மகன் வருகிறான். நான் அவசரப்பட்டு விட்டேனோ என மனம் முதல் முறையாக அங்கலாய்க்கிறது.

வீடுக்கார அக்கா வந்து இவளின் அறைக் கதவைத் தட்ட இவள் கண்விழிக்கிறாள். எழும்புங்கோ தங்கச்சி தேத்தண்ணியையும் குளிசையையும் குடிச்சிட்டுப் படுங்கோ என்று சொல்ல வேண்டாம் அக்கா என்று இவள் முனகுகிறாள். கதவை அவவே தள்ளித் திறந்துகொண்டு வந்து இவளை எழுப்பி தேநீரை மருந்துடன் குடிக்கப் பண்ணி, குடித்து முடிந்ததும் மூண்டு நாளா படுத்தே இருக்கிறீர். இன்னும் எத்தினை நாளைக்கு இப்பிடியே இருக்கப் போறீர். பாக்கவேண்டிய அலுவலைப் பாக்க வேணும் . நான் ஒரு பொம்பிளைப் பிள்ளையை எத்தினை நாள் தான் வச்சிருக்க ஏலும். மற்ற ஆட்கள் எண்டால் உம்மைப் பிடிச்சு வெளியில விட்டிருப்பினம். நான்  பொம்பிளைப் பிள்ளையளைப் பெத்ததால உம்மை இத்தனை நாள் வச்சிருக்கிறன் என்று கூற இவள் அழவும் சக்தியற்றுக் அக்கா கூறுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள்.

தங்கச்சி எதோ நடந்தது நடந்து போச்சு நீர் திரும்ப ஜேர்மனிக்குப் போறதுதான் நல்லது. முகம் கழுவிச் சாப்பிட்டிட்டு ஒருக்கா அங்க போன் செய்து பாரும் என்றுவிட்டுப் போய் விடுகிறார். ஒரு கிழமைக்கு முன் நடந்தது மனதில் நிழலாட கசப்பு மருந்தை விழுங்கியதுபோல் வாயும் மனமும் கசக்கிறது. உடலும் மனமும் தீப்பிடித்தது போல் தன்னையே தகிக்க எனக்குச் சரியான தண்டனையை கடவுள் குடுத்திட்டார். என்ர  சின்னப் பிள்ளையைத் தவிக்க விட்டு வந்த எனக்கு, என்ர கட்டின மனிசனுக்குத் துரோகம் செய்துபோட்டு வந்த என்னை கடவுள் இவ்வளவு கெதியா தண்டிச்சிட்டார். இப்ப தெய்வம் அன்றே கொல்லுது போல என எண்ணியவளுக்கு தன்னை நினைத்தே சிரிப்பு வருகிறது. எத்தனை பெரிய வாக்கையை இழந்துவிட்டு இந்த நரகத்தில் வந்து விழுந்தேன்.எனக்கு வேணும்தான்.

இனி எப்பிடி நான் திரும்பிப் போவன். எப்பிடி கபிலன்ர முகத்தில முழிப்பன். கபிலன் திரும்ப என்னை மன்னிப்பாரே. மன்னிச்சாக் கூட என்னை மற்ற ஆக்கள் எப்பிடிப் பாப்பினம் என எண்ணி எண்ணி குமைந்ததுதான் மிச்சம். தற்கொலை செய்வமோ என்று எண்ணினாலே அழுகைதான் வந்தது. கேடு கேட்ட எனக்கு சாகக் கூடத் துணிவில்லையே என பலதும் எண்ணி மருகியவள் என்ன நடந்தாலும் பரவாயில்லை கபிலனோட கதைப்பம் என எண்ணியபடி தொலைபேசியை  எடுக்கிறாள்.

கபிலன் அவளை மீண்டும் வரும்படி கூறியதும் அவளுக்கு இருண்ட அறையுள் இருந்த சாளரத்தை அகலத் திறந்தது போல் இருந்தது. மனதில் இருந்த இறுக்கம் கூட கொஞ்சம் தளர்ந்ததுபோல் இருந்ததால் ஒரு வாரத்தின் முன் நடந்தவற்றை மீளவும் மனம் அசைபோட்டது. வீட்டுக் காரக் குடும்பம் திரும்பி வந்த அன்று இவள் கன நேரம் அறைக்குள்ளேயே இருந்தாள். மாலை ஏழு ஆகியும் கரனைக் காணவில்லை.  இவள் தொலைபேசியில் அழைத்தும் அவன்  அழைப்பில் வரவில்லை. நான்கு ஐந்து மணிநேரமாக சிறுநீரை அடக்கி வைத்திருந்ததும் கடுத்தது. இனியும் அடக்க முடியாது எனும் நிலையில் கட்டிலை விட்டு இறங்கி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து பக்கத்தில் இருந்த மலசல கூடத்துக்குச் சென்றபின்தான் சிறிது நின்மதி பிறந்தது. கதவைத் திறந்துகொண்டு வெளியே வர படிகளில் ஏறி மேலே வந்துகொண்டிருந்த வீட்டுக்காரரின் பிள்ளை, அம்மா கள்ளன் எனக் கத்திக்கொண்டு கீழே ஓட இவள் கலவரப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்க நிக்க, வீட்டுக்கார அக்காவும் கணவரும் கையில் பிள்ளையளையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே ஓடுவதற்கு கதவை அவசரமாகத் திறக்க, அக்கா அக்கா நான் கள்ளன் இல்லை என இவள் கத்த, வெளியே ஓட வெளிக்கிட்ட அக்காவும் கணவரும் திரும்பி வந்து நீ என்ன இங்க செய்யிறாய் என அதட்ட இவளும் நான் கரனின் கேர்ள் ப்ரெண்ட் என கூறிவிட்டு அவர்கள் தன்னைப் பார்த்து நட்புடன் சிரிப்பார்கள் என எதிர் பார்த்தவளுக்கு அவர்கள் பார்த்த பார்வை புரியவில்லை. சரி கீழ வாரும் தங்கச்சி கதைப்பம் என்றுவிட்டு அக்கா வரவேற்பறைக்குப் போக கீழே இறங்கி வந்தவள் எதோ தனக்கு எல்லாம் தெரியும் உங்களை என்று காட்ட நீங்கள் இண்டைக்கு வருகிறீர்கள் எண்டு கரன் சொன்னவர் என்றுவிட்டு அவர்கள் இருவரையும் பார்த்தாள். அவர்கள்  முகத்தில் ஈயாடவில்லை.

நீர் எப்ப தொடக்கம் இங்க இருக்கிறீர் என்று அக்கா கேட்க மூண்டு கிழமையா என்கிறாள் மது. இங்க அப்பா நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டு மேல போங்கோ நான் இவாவோட கதைச்சுப் போட்டு வாறன் என்று அக்கா கூற கணவரும் இங்கிதத்துடன் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு  மேலே செல்கிறார். எப்ப தொடக்கம் உமக்கு கரனைத் தெரியும் என்று அக்கா கேட்க ஆறு மாதமாக என்று கூறிவிட்டு தலையைக் குனிகிறாள். கரன் இங்க இருக்கிறேல்லை. இங்க இருக்கிறது என்ர அக்காவின்ர மகன். அவன் இப்ப ஆஸ்பத்திரியில இருக்கிறான். அவன் கரன்ர நண்பன். அனால் அவர்கள் ஒருவரும் ஒழுங்கானவர்கள் இல்லை. கரனுக்கு கன பெண்களுடன் தொடர்பு இருக்கு என்று சொல்ல, பொய் சொல்லாதைங்கோ என்று மது கத்துகிறாள்.தலையில் பெரிய கல் விழுந்ததுபோல் இருக்கிறது. கண்ணுக்கு முன்னால் ஏதேதோ பறப்பதுபோல் முன்னால்  இருந்த எதுவுமே தெரியவில்லை அவளுக்கு. நான் ஏன் உமக்குப் பொய் சொல்ல வேணும். அவங்கள் எத்தினை தரம் சிறைக்குப் போனவங்கள் எண்டு தெரியுமே உமக்கு. என்ன நம்பிக்கையில் அவனை நம்பி வந்தனீர் என்று கூறிமுடிக்க முதலே மது ஓ என்று பெரிதாக அழுகிறாள். சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு அவன் இனி உம்மட்ட வர மாட்டான்.
இப்ப கொஞ்சம் முந்தித்தான் போன் வந்தது. நேற்று இவங்கள் ஒரு பெடியனை வெட்டிப் போட்டாங்களாம். இண்டைக்கு பொலிஸ் உவங்கள் எல்லாரையும் பிடிச்சுப் போட்டுது. மேற்கொண்டு அக்கா கதைப்பது எதுவுமே விளங்கிக் கொள்ள முடியாமல் கதிரையில் சரிகிறாள் மது.

  • கருத்துக்கள உறவுகள்

பெண்புத்தி stock-photo-3381020-safety-pin.jpgபுத்தி..!

:D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அடங்க கொக்கா மக்கா போயி வார கணக்கா இருந்து குடும்பம் நடத்திட்டு மறுபடியும் வெக்கம் இல்லாம வந்து இருக்காளே இதுக்குள்ள இன்னொரு பிள்ள வேறயாம் முடியல்ல

சோ அவன் ஏமாத்தி இருக்காட்டி இவ அங்கயே இருந்திருப்பா......வேற இடம் போறத்திக்கு வழி இல்லை உடன முத புருஷன் கிட்டயே போய்ட்டா..... இவளுங்களுக்கு எல்லாம் இந்த வெக்கம் மானம் எதுவுமே இலையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தை எழுதிய இசை,சுண்டல் ஆகியோருக்கு நன்றி. தம்பி சுண்டு நீர் எனக்குத் திட்டி என்ன பயன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க தானே அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணுரிங்க :D

  • கருத்துக்கள உறவுகள்

மதுவைப் போல ஏமாளிப் பெண்கள் நமது சமூகத்தில் மிகவும் குறைவாக இருக்கின்றார்கள் என்றுதான் நினைக்கின்றேன்.

 

லண்டனில் இருக்கின்ற தமிழ்க் காங் பொடியளை  மோசமானவர்கள் என்று கதையில் சொல்லப்பட்டிருக்கு. இந்தக் குறிப்பிட்ட கதை உண்மையாக இருந்தாலும், இப்படித்தான் எல்லாக் கதைகளும் முடியவேண்டும் என்றும் அவசியமில்லை.

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லோருக்குமாக, அடுத்த எனது கதையை கற்பனைக் கதையாக எழுதி உங்கள் விருப்பப்படியே முடிக்கிறன். நன்றி கிருபன். :D

  • கருத்துக்கள உறவுகள்

மேசொவின் தையில் புரிந்தது  அவ அங்கு "பாடம் " படித்து தான் வந்திருகிரா .........விட்டில் பூச்சியை விளக்கு என நம்பி .

.......பாவம் அப்பாவிக் கணவன். இர க்கம் உள்ளவன் என்பதால்.  சேர்த்து இருக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
உங்கள் எல்லோருக்குமாக, அடுத்த எனது கதையை கற்பனைக் கதையாக எழுதி உங்கள் விருப்பப்படியே முடிக்கிறன். நன்றி கிருபன். :D

 

படைப்பாளி தனக்காகத்தான் ஒரு ஆக்கத்தைப் படைக்கவேண்டும். பிறருக்காக எழுத ஆரம்பித்தால் எழுத்து வியாபாரம்தான் உருவாகும்! ஆனால் யாழ் களத்தில் பச்சைப் புள்ளிகள்தான் நாணயமாக உள்ளதால் ஒரு பல்லிமிட்டாய் கூட வாங்கமுடியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் எழுத்திலேயே உங்களுக்கு விளங்கியிருக்க வேண்டும் கிருபன். நான் யாருக்காகவும் எதையும் செய்வதில்லை. நான் பகிடிக்காகத் தான் அப்படி எழுதினேன். என் மனம் எதைச் சொல்கிறதோ அதுதான் என் எழுத்து. :)

இவ பெத்த பிள்ளைய தூக்கி எறிஞ்சிட்டு வந்தாவாம். அவனின் வீடு சுத்தமில்லையாம். சுற்றாடல் சரியில்லையாம். அது நரகமாம்.

அங்கேயும் ஒரு கணணியும் முகப்புத்தகமும் இருந்த்திருந்தால் மதுவிற்கு கரனின் வீடு சொர்க்கமாக இருந்திருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமெரியர் உங்கள் கதை ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் இருக்கிறது. உணர்வு பூர்வமாக இந்தக் கதையில் எவர் மீதும் ஈர்ப்பு ஏற்படவில்லை. கதையை நகர்த்தும் விதம் நன்றாக இருக்கிறது. வாசிக்கத்தூண்டுகிறது. இன்னும் முடியவில்லை முடியும்போது என்னுடைய முழுமையான கருத்தை பதிவிடுகின்றேன்.

சுமெரியர் உங்கள் கதை ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் இருக்கிறது. உணர்வு பூர்வமாக இந்தக் கதையில் எவர் மீதும் ஈர்ப்பு ஏற்படவில்லை. கதையை நகர்த்தும் விதம் நன்றாக இருக்கிறது. வாசிக்கத்தூண்டுகிறது. இன்னும் முடியவில்லை :rolleyes: முடியும்போது என்னுடைய முழுமையான கருத்தை பதிவிடுகின்றேன்.

 

  என்ன முடியவில்லையா?

 

 அசிங்கமான ஒரு கதை. ஊரில் உள்ள எல்லோரும் உங்களிடமா வந்தா கதை சொல்கின்றவர்கள்?  அல்லது ஊர் விடுப்புகள் கதைக்க என்றே ஒரு கூட்டமிருக்கா உங்களிடம்?

 

லண்டன் மாமிகள் சங்கம்?

  • கருத்துக்கள உறவுகள்
சுமெரியர் உங்கள் கதை ஒரு திரைப்படம் பார்ப்பதுபோல் இருக்கிறது. உணர்வு பூர்வமாக இந்தக் கதையில் எவர் மீதும் ஈர்ப்பு ஏற்படவில்லை. கதையை நகர்த்தும் விதம் நன்றாக இருக்கிறது. வாசிக்கத்தூண்டுகிறது. இன்னும் முடியவில்லை முடியும்போது என்னுடைய முழுமையான கருத்தை பதிவிடுகின்றேன்.

 

சனம் எல்லாம் எழும்பி போட்டுது.இப்ப கூட்டி களுவ வேனும்.நீங்கள் போய் உங்கள் தொடரை எழுதுங்கோ :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

.கருத்திட்ட தப்பிலி, சகாரா, வந்தி, சயீவன் ஆகியோருக்கு நன்றி. நான் முற்றும் என்று போடாதது என் தவறுதான். கதையை இனி தொடர்வது கற்பனையாகத்தான் இருக்கும். அதனால் தொடர மனமில்லைச் சகாரா.

வந்தி உங்கள் கோபம் எனக்கு விளங்கவில்லை. இது ஒன்றுதான் நான் எழுதிய ஊரார் வீட்டுக் கதை. நான் முன்பு மற்றவர்களுக்கு எழுதியதையும் வாசித்திருந்தீர்கள் என்றால் எனது கதை பற்றி விளங்கிக்  கொண்டிருப்பீர்கள். எனக்கு இதுபோல் எத்தனையோ கதைகள் தெரியும். சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் எல்லோரையும் எளிதில் சென்றடையும். ஊராரின் கதையை எழுதினால் உங்களுக்கேன் கோபம் வருகிறது வந்தியத் தேவரே. :rolleyes: :rolleyes:

.கருத்திட்ட தப்பிலி, சகாரா, வந்தி, சயீவன் ஆகியோருக்கு நன்றி. நான் முற்றும் என்று போடாதது என் தவறுதான். கதையை இனி தொடர்வது கற்பனையாகத்தான் இருக்கும். அதனால் தொடர மனமில்லைச் சகாரா.

வந்தி உங்கள் கோபம் எனக்கு விளங்கவில்லை. இது ஒன்றுதான் நான் எழுதிய ஊரார் வீட்டுக் கதை. நான் முன்பு மற்றவர்களுக்கு எழுதியதையும் வாசித்திருந்தீர்கள் என்றால் எனது கதை பற்றி விளங்கிக்  கொண்டிருப்பீர்கள். எனக்கு இதுபோல் எத்தனையோ கதைகள் தெரியும். சமூகத்தில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் எல்லோரையும் எளிதில் சென்றடையும். ஊராரின் கதையை எழுதினால் உங்களுக்கேன் கோபம் வருகிறது வந்தியத் தேவரே. :rolleyes: :rolleyes:

 

 கோபமிலை ஒரு ஆதங்கம்தான். நல்ல பல கதை கருக்கள் இருக்கும் போது இப்படிப்பட்ட கதைகள் தேவைதானா, இப்படி சம்பவங்கள் எத்தனை நடத்திருக்கும் 1/100?

  • கருத்துக்கள உறவுகள்

கரன் சவுத்தோல் காங்கோ :unsure: ...என்ன மோகத்திலே புருசனை விட கரன் பெரிதென மது ஓடி வந்தாவோ தெரியாது :unsure: ...கபிலனிலும் பிழை இருந்த படியால் தான் திரும்பி மதுவை ஏற்றுக் கொண்டு குடும்பம் நடத்தி இன்னொரு பிள்ளையும் அவர்களுக்கு பிறந்திருக்குது...இப்படிப்பட்ட கதைகள் ஜேர்மனியில் தான் அதிகம் நடக்குதாம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் பார்த்தேன்

 

தொடர்ந்து எழுதுங்கள்

புலம் பெயர் அவலங்கள் இப்படி பல............

 

இவை  அதிகரித்த வண்ணமே  உள்ளன.

ஒருவர் பாதிப்படைவார் என்பதற்காக நாம்  இவற்றை  பேச மறந்தால்

பலர் பாதிக்கப்படக்கூடும்

இப்படி பலர் தற்பொழுது தொடர்புகளில் இருக்கிறார்கள்.

அவர்களில் ஒருவரையாவது உங்களது பதிவு தடுத்து நிறுத்தினால் அதுவே  வெற்றி.

 

கபிலன் போற்றுதற்கு உரியவர்.

எமது மானம் காத்து ஒரு தவறான சமூதாயம்உருவாகாமல் காத்தவர்.

இந்த பெண் இனித்தான் கபிலனை ஆழமாக நேசிப்பார்.

தண்டனை  வேண்டாமே.

உலகம் விரியணும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.