Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது

Featured Replies

இந்திய பெண் எழுத்தாளர் மீனா கந்தசாமி, காஸ்மீரில் இந்திய இராணுவம் பெண்களுக்கு செய்யும் கொடுமைகள் பற்றி ஒரு கட்டுரையை இந்த நேரத்தில் எழுதி விழிப்புணர்வை கொண்டுவர முயன்றுள்ளார்:

 

http://m.outlookindia.com/story.aspx?sid=4&aid=283463

 

ஈழப்பெண்கள் இன்றைய மற்றும் கடந்த கால அவலங்களை பற்றியும் நாம் முறையாக எடுத்து கூறவேண்டும்.

  • Replies 161
  • Views 10.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மருத்துவமனைக்குள் புகுந்து இந்திய அட்டூழியப்படை மருத்துவர்களையும், தாதிமார்களையும்கூட கொலை செய்தது. இது சந்தேகத்துக்கு இடமற்ற ஆவணமாக இருக்கிறது. அண்மையில்கூட நினைவேந்தலைச் செய்தார்கள் மருத்துவமனையில்.

 

கவலைப்பட்டார்களா வட இந்தியவாலாக்கள்?

ஏழை சொல் அம்பலம் ஏறாது திருடங்குவார்.

 

நம்ம சனத்திற்கு காற்றுள்ளபோ தூற்றவும் தெரியா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக மிகக்கொடுரமாக சித்ரவதை பட்டு இறந்த ஒரு மாணவியை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்
அதற்காக மிகக்கொடுரமாக சித்ரவதை பட்டு இறந்த ஒரு மாணவியை வைத்து ஆசியால் செய்வது ஏற்புடையது அல்ல

 

நிச்சயமாக இல்லை. ஆனால் அதைத்தான் அவர்கள் செய்தார்கள்.

இந்தியாவில், உலகத்தின் பெரிய ஜனநாயக ஆட்சியிலும், ஆப்கானிஸ்தானின் தலிபானின் ஆட்சியிலும்,  பெண்கள் பலவேறு கொடுமைக்கும் உள்ளாகின்றார்கள்.

 

எனவே ஆட்சி முறையில் தவறு இல்லை, ஆளுபவர்களைலேயே தவறு !

இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே இந்த நாடகம். ஆளும் கட்சிகளின் மாணவர்கள் இத கையில் எடுத்து  போராட்டம் என்ற பேரில் குப்பை கொட்டுகிறார்கள். இதுவரை இந்தியாவில் கற்பளிப்பே  நடக்கலையா?  சமீப காலத்தில் பழங்குடிப் பெண்களை இந்திய பாது காப்பு படைகள் கற்பளித்த போது இந்த மாணவர்கள் எங்கே போனார்கள்?

ஒரு நியாயமான நாடு என்றால் மன் மோகன் சிங்  பதவியை துறக்கவேண்டும். அது நடக்காது.

 

 பெண்கள் நியாயம் வேண்டும் என்றால், அவர்களே யாரையாவது வைத்து சோனியாவின் குடும்பத்தில் ஒருவர் மீது பாலியல் வன்புணர்வை செய்தால் உண்மையான மாற்றங்கள் நிகழலாம்  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாணவியை... பாலியல் வன்புணர்செய்து விட்டு, ஓடும் பேரூந்தில்... இருந்து தள்ளி விட்டதை... எந்த மனிதனும், செய்யத் துணியாத செயல். குற்ற வாளிகளின்... ஆணுறுப்பில், மன்மோகனையும், சோனியா குடும்பத்தினரையும் விட்டு....   யாழ்ப்பாண முறைப்படி தயாரித்த‌ மிளகாய்த்தூள் தடவுவிக்க‌ வேண்டும்.

1. India: Petition: Pl sign the petition and pl ask your friends and family to do same:

http://www.causes.com/causes/807089-stop-gangrape-jago-re-india/actions/1716592?query=india&rank=0&utm_campaign=search


2. Sri Lanka:

 

a. 4 children under 16 are raped daily, 24 June 2012,
http://www.sundaytimes.lk/120624/news/4-children-under-16-are-raped-daily-4170.html

 

b. Colombo high-end perverts worse than touts, beach boys — foreigners, 26 October 2012,
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=64661

 

c.Pl let me know if anybody finds the following news in English:
மண்டைத்தீவில் நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87050/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த  அப்பாவி பெண் பிள்ளைக்கு அஞ்சலிகள்.

 

மற்றும்படி

இசையின் கருத்தே  எனதும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லி: டில்லியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மருத்துவ மாணவி உயிரிழந்த பிறகு அவரை பற்றி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, மாணவியை சந்தித்த அவரது பெற்றோர், சகோதரனிடம், தான் வாழ விரும்புவதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தர விரும்புவதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்னரா என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போது, தனது பெற்றோருடன் சைகை மூலம் பேசி கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. டில்லியில் மாஜீஸ்திரேட்டிடம் இரண்டு முறை வாக்குமூலம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த டாக்டர்கள், அந்த பெண்ணை தைரியசாலி என பாராட்டியுள்ளனர்.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த இந்த மாணவியின், பெயரால்....
ஈழத்தில்... ராஜீவின் அமைதிப்படை செய்த குற்றங்களுக்கும், முள்ளிவாய்க்கால் போரின் போதும், அதற்குப் பின்... நேற்றும், இன்றும்... இந்திய ஆசீர்வாத்தத்தால்... தொடர்ந்து கொண்டிருக்கும்... ஈழ உறவுகளுக்கும், விடிவு கிடைக்கும் முகமாக...
மன்மோகன் சிங், சோனியா காங்கிரஸ் ஆட்சியை.. டெல்லிப் போராட்டங்கள் வெட்கம் கொள்ள வைத்து, புற முதுகிட்டு ஓட வைக்க வேண்டும்.
"அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும்." இப் பழமொழி, ஈழத் தமிழன் வாழ்வில் நிஜமாக நடக்க வேண்டும். இதை... என் கண்ணால்... காணவேண்டும்.

1. India: Petition: Pl sign the petition and pl ask your friends and family to do same:

http://www.causes.com/causes/807089-stop-gangrape-jago-re-india/actions/1716592?query=india&rank=0&utm_campaign=search

 

அதற்குள் 19, 093 பேர் கையொப்பமிட்டுள்ளார்கள். இதுவே தமிழகத்திலுள்ள மாணவிக்கு நடைபெற்றிருந்தால் அல்லது ஈழத்து மக்களுக்கான கையொப்ப வேட்டையாக இருந்திருந்தால் இவ்வளவு நேரத்துக்கும் ஒரு 1000 தாண்டியிருக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்களே தயவு செய்து இதை அரசியல் ஆக்காமல் இதை வைத்து அரசியல் செய்யாமல் இது ஒரு சக சகோதரிக்கு ஒரு பெண்ணிற்கு நடந்ததாக எடுத்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்க படுகின்றீர்கள் எமக்கு அரசியல் செய்ய பல விடையங்கள் இருக்கும் போது மனிதாபினம் அற்று நடந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கின்றேன்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழந்த அனுதாபங்கள்.இது எங்கு யாரால் நடத்தப்பட்டாலும் மிக உயர்ந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.தயவு செய்து இதுக்குள்ள அரசியலை கலக்க வேண்டாம்.

மக்களே தயவு செய்து இதை அரசியல் ஆக்காமல் இதை வைத்து அரசியல் செய்யாமல் இது ஒரு சக சகோதரிக்கு ஒரு பெண்ணிற்கு நடந்ததாக எடுத்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்க படுகின்றீர்கள் எமக்கு அரசியல் செய்ய பல விடையங்கள் இருக்கும் போது மனிதாபினம் அற்று நடந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கின்றேன்

நன்றி

 

இதை வைத்து நான் அரசியல் செய்யவில்லை. நானும் மனிதாபிமான ரீதியில் கையொப்பமிட்ட பின்னர் தான் இதை எழுதினேன்.

தமிழனாக இருந்தால் யாரும் கண்டுகொள்கிறார்கள் இல்லை. அதை நீங்கள் மறுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் கிந்தியாவில் ஜகஜம் .. இந்த விடயம் இது ஏதோ கொஞ்சம்   மேல் தட்டு வர்க்கம்..இல்லையென்றால் இஞ்சி மரபா விக்கறவன் கூட போராட வரமாட்டான்.. இதெல்லாம் தினசரி நடந்திட்டுதான் இருக்கு

டிஸ்கி:

வீட்டில் புரோட்டா சாப்ப்பிட்டு தூங்குங்கப்பா..

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 202 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. ஆனால் இந்த அனைத்து சம்பவங்களும் ஊடகங்களின் கவனத்தையோ அரசியல்வாதிகளின் கரிசனையையோ பெறுவது கிடையாது.
அப்படியே ஊடகங்களின் கவனம் கிடைத்தாலும் கூட அவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைத்துவிடும் வாய்ப்புகளும் மிகக்குறைவு.
BBC .

- from fb -
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த பெண்ணினுடைய தந்தை ஒரு கூலித்தொழிலாளி அப்பிடி இருந்தும் அவர் தனது மகளை படிக்க வைத்து மருத்துவ பீடத்திற்கு அனுப்பி இருகின்றார் ஆக மேல்வர்க்கம் என்கின்ற வாதம் இங்கு எடுபட்டு போகின்றது

கண்டிப்பாக இந்தியாவில் அதுவும் டெல்லியில் இது ஒரு தொடர்கதை இதுக்கொரு முற்றுப்புள்ளி வைக்கத்தான் போராட்டங்கள் நடைபெறுகின்றது ஆகவே அந்த போராட்டங்களுக்கு அதரவு கொடுக்க வேண்டியது எமது கடமை

  • கருத்துக்கள உறவுகள்

அவரின்ட நண்பர்  ஸ்டெடஸ் ..?  இருவரும் நண்பர்கள் .. அர்த்த ராத்திரியிலும் எங்கிட்டாவது சுத்திட்டு திரியட்டும் அது நமக்கு கவலை இல்லை.. அதை பற்றி அவர்கள் கவலை பட்டு இருக்கணும் ..  டில்லி அரசாங்கம் கவலை பட்டு இருக்கணும்  இவுங்களுக்காக நீங்க மாய்ந்து மாய்ந்து குரல் கொடுத்தாலும் ..  ஒட்டுறதுதான் ஒட்டும் (இனம்)

டிஸ்கி:

மறுபடியும் இந்திகாரங்களிடம் "டமில் இலம்" என்று ஆரம்பியுங்களேன்..  ஆக்கியுளி ...கெமிக்களி.. சைக்காலிஜிக்களி... மெண்டலி....  "ராஜிவி காந்திஜீ" ஈஸ் என்று

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கு குட்டைப் பாவாடை அணிந்து செல்வதால் பாலியல் தொந்தரவுகள் அதிகரிக்கிறது: பாஜக எம்.எல்.ஏ.


டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 

குறிப்பாக சிறுமிகளை பலாத்காரம் சமூகச் சீர்கேடுகள் பெருகி வருகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கிறது.

 

அதேசமயம், இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது.

 

அந்த வகையில், பள்ளிகளில் மாணவிகள் குட்டைப் பாவாடையை சீருடையாக அணிந்து வருவது, பாலியல் தொந்தரவு வழக்குகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பன்வாரி லால் சிங்கால் கருத்து தெரிவித்திருக்கிறார்.

 

இதுதொடர்பாக அவர் மாநில தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், ‘ஆழ்வார் நகரில் உள்ள பல இடங்களில் மாணவிகள் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர் அல்லது பள்ளி பேருந்துகளுக்காக காத்திருக்கின்றனர். அப்போது குறும்பு மற்றும் கேலிப்பேச்சுக்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

இந்த நகரின் பல தனியார் பள்ளிகளில் குட்டைப் பாவாடைகளே சீருடையாக உள்ளன. பெண்களுக்கு எதிரான சமூக குற்றங்கள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, இத்தகைய சீருடைகள் தடை செய்யப்பட வேண்டும். அதற்குப் பதிலாக மாணவிகளுக்கு சல்வார் கமிஸ், பேண்ட்-சட்டைகளை சீருடையாக வழங்க வேண்டும். இது தீவிர சீதோஷ்ண நிலையில் இருந்தும்மாணவிகளை பாதுகாக்கும்’ என்று கூறியுள்ளார்.

 

நன்றி நக்கீரன்.

 

பா.ஜ.க  ஆக்களையும்.. இந்திய ஆண்களையும் பிறப்பு முதலே குட்டைப் பாவாடைகள் நிறைந்த பெண் பொம்மைகள் மத்தியில் வளர்த்தெடுத்து வந்தால்.. இந்தப் பிரச்சனை வராது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம்.. ஆண் - பெண் என்ற ஆழமான பால் பிரிவினையும்.... பெண் உடற்கூற்றியலில் பலவீனமானவள்.. கவர்ச்சியானவள் என்ற கருத்தியலை விதைக்கும் சினிமாவும்.. அரசியல்வாதிகளும்.. புராணங்களும்....இந்தியாவின் பிற்போக்கான கலாசாரப் பின்னணியுமே ஆகும். அத்தோடு சட்டத்தை சரியான வகையில் அமுலாக்காத நீதி நிர்வாகத்துறைகளும்.. பாலியல் அறிவு குறைந்த மாணவர் சமூகமும்..!

 

 

293970_10152384974795198_1989367738_n.jp

 

தமிழகத்தில் அண்மையில் பாலியல் வல்லுறவின் பின் கொல்லப்பட்ட இந்த தமிழ் மாணவி.. குட்டைப் பாவாடை.. அல்லது ஆண்களின் காமக் கிளர்ச்சியை தூண்டும்.. உடை என்பதன்  காரணமாகவா கொல்லப்பட்டார்...???!

 

இந்தியாவிலும் இலங்கையிலும் அடிப்படை சமூக அறிவியல் அறிவற்ற அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் எடுக்கும் கருத்தியல் நிலைப்பாடுகளே பெண்களின் இந்த நிலைக்குக் காரணம். இந்த இரண்டு கூட்டத்திற்கும் சரியான மூளைப் புனருத்தாரனம் வழங்க வேண்டும். அத்தோடு சமூகவியலாளர்கள் சமூக ஆராய்ச்சிகள் மூலம் சமூகத்தை அறிவூட்டி வளர்க்க வேண்டும். மாறாக.. இப்படியான போலி அல்லது ஊகக் கருத்தியல்களை விதைக்க சந்தர்ப்பமளிப்பதை தடுக்க வேண்டும். இவையே பெண்கள் மீது தவறான பார்வைகளைத் தூண்ட வகை செய்கின்றன.

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் பாலுறவுக்காக தன் துணைப் பாலை கொல்லும் அளவிற்கு துன்புறுத்துவதில்லை. ஆனால் 6 அறிவு கொண்ட மனிதனில்.. மட்டுமே இந்த வக்கிரம் தலையெடுத்துள்ளது. அதற்குக் காரணம்.. மனித சமூகக் கட்டமைப்புக்களும் சிறு வயது முதல் பல்வேறு வடிவங்களில்..விதைக்கப்படும்  பாலியல் மற்றும் ஆண்.. பெண் பற்றிய தவறான.. மிகைப்படுத்திய.. அதீத பாலுணர்வைத் தூண்டக் கூடிய.. கருத்தியல் சித்தாந்தங்களுமே..!

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா எங்களுக்கு 1000 செய்திருக்கட்டும் தலைவர் சொன்னது போல இந்திய எங்களினுடைய தந்தை நாடு அதை நாங்கள் இன்றும் என்றும் ஆழமாக நேசிப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த டெல்லி மாணவியின் உயிரிழப்பு மிகத் துயர் மிக்கதே. அது கடும் தொனியில் கண்டிக்கப்படத்தக்கது மட்டுமன்றி தடுக்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் இதே காரணங்களோடு ஈழத்தில் சிங்கள இனவெறி அரசாலும்.. இந்திய அமைதிப்படையாலும்.. தமிழ் பெண்கள் திட்டமிட்டு பாலியல் ஆயுதம் கொண்டு.. அதுவும் கோத்தபாய போன்றவர்களின் பகிரங்க முழக்கத்துடன்.. அழிக்கப்பட்ட போது.. ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை..???!

 

இன்று இந்த மாணவிக்கு இரங்கும் கருணாநிதி.. பிரணாப் முகர்ஜி.. மன்மோகன் சிங்.. சோனியா காந்தி போன்றவர்கள்.... அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் தமிழ் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட..(கோத்தாவின் வெளிப்படையான முழக்கமான தமிழ் பெண்கள் எமது படையினருக்கு (சிங்களப் படையினருக்கு).. தமிழ் ஆண்கள்.. நந்திக் கடலுக்கு என்று சொல்லிச் சொல்லி) முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்னரும் இன்று வரையும் தொடரும்.. மிகக் கொடூர பாலியல் வன்புணர்வுக் கொலைகளையும்.. ஏனைய தமிழினப் படுகொலைகளையும்.. அன்று மட்டுமன்றி..இன்று வரை கண்டிக்காத நிலையைக் காண்கிறோம். இந்த அரசியல் பச்சோந்திகளின் அரசியல் நீலிக்கண்ணீருக்கு.. ஆதாயத்திற்கு ஒரு அப்பாவி மாணவியின் உயிரும் அவலச் சாவும் தானா கிடைத்தது..???!

 

இதே போல் இன்னொரு ஆதங்கம்... நியாயமான ஆதங்கமும் கூட... முக நூலில் இருந்து....

 

டெல்லி மாணவிக்கு தலைவர்கள் இரங்கல். தமிழ் பெண்களை பற்றி கவலையில்லை !

பாலியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டு பின்பு கொடூராமாக தாக்கப்பட்ட டெல்லி மாணவி இன்று இறந்த செய்தி இந்தியாவையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. உலுக்கி உள்ளது .

இந்திய ஊடகங்களில் இது குறித்து விவாதம் நடந்த வண்ணம் உள்ளது . இந்தியா மட்டுமல்ல சர்வதேச ஊடகங்களில் கூட இந்த செய்தி தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துள்ளது. டெல்லி மாணவியின் இறந்த செய்தி கேட்டதும் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். அமைதிப் பேரணியும் நடத்துகின்றனர். டெல்லி நகரின் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்று கருதி டெல்லி அரசு 144 தடை சட்டம் போட்டுள்ளது. இதனால் பத்திற்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிலையங்கள் மூடப்பட்டன. இந்தியா நுழைவாயில் என்று சொல்லக் கூடிய இந்தியா கேட் பகுதியில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டங்களை தவிர்க்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய பிரமதரும் ஜனாதிபதியும் இறந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஜனாதிபதி ஒரு படி மேலே போய் இறந்த பெண்ணுக்கு வீர வணக்கம் செலுத்தி உள்ளார். வீர மங்கை என்று போற்றி உள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . திமுக தலைவர் கருணாநிதி இந்த பெண்ணுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டில் உள்ள மேல்தட்டு குடும்பங்கள் இன்று அந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவிக்க கடற்கரையில் ஒன்று கூடுகிறார்கள்.

இப்படி ஒரு நிலை இருக்க, டெல்லி நிகழ்விற்கு பிறகு தமிழகத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட பெண்கள், பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தூத்துக்குடி அருகே புனிதா என்னும் ஏழாம் வகுப்பு மாணவி வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டாள். சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள சம்பந்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தியா (வயது 20) என்ற பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்ததோடு கடுமையாக தாக்கி சம்பவம் நடந்த 3-வது மாடியில் இருந்து வீசி இருக்கிறார்கள். இதனால் சந்தியாவுக்கு தலையில் பலத்த படுகாயத்ததால் இரத்தப்போக்கு அதிகரித்து ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் வாக்குமூலத்தில், 'தன்னை 3 பேர் பலாத்தராத்திற்கு உட்படுத்தி மாடியில் இருந்து வீசியெறிந்தாக கூறி இருக்கிறார்.' அதற்கு பின் சில மணி நேரத்தில் இறந்திருக்கிறார். ஆனால் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தன.

அடுத்ததாக காரைக்கால் பகுதியை சேர்ந்த வினோதினி என்ற பெண் மீது அமிலம் வீசி ஒரு கொடூரன் தாக்குதல் நடத்தினான். அதனால் வினோதினி தனது இரு கண்களையும் இழந்து ஒட்டு மொத்த முகமும் சிதைகப்பட்டு உள்ளது. முகம் முழுவதும் அறுவை சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் அவரும் உயிருக்கு போராடி வருகிறார். இவர் மருத்துவ செலவிற்கு நிதி உதவி கேட்டும் எந்த பெண்கள் அமைப்பும், சமூக அமைப்பும், ஆட்சியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் உதவி செய்ய முன்வரவில்லை.

அதே போல் இடிந்தகரை அணுஉலைப் போராளி ரோசலின் என்பவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது நோய்வாய்ப் பட்டார். சிறையில் அரசு அவருக்கு மருத்துவம் சரிவர பார்க்கவில்லை. அதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் இறந்து விட்டார்.

இவ்வாறு தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் தாக்கப்பட்டும், வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டும் வருகிறார்கள். இது குறித்து எந்த பெண்கள் அமைப்பும் போராட முன் வரவில்லை. தமிழக முதல்வர் பெயருக்கு கூட இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவிக்க வில்லை. கருணாநிதி போன்றவர்கள் வாய்மூடி மௌனம் சாதித்தனர். தமிழக ஊடகங்கள் டெல்லி நிகழ்விற்கு காட்டிய அக்கறை தமிழக பெண்களின் அவல நிலைக்கும் காட்டி இருந்தால் ஓரளவிற்கு இப்பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கும்.

மெரீனா கடற்கரையில் கூடிய வடஇந்திய மாணவர்கள் மற்றும் திரைப் பட நடிகைகள் தமிழக பெண்களை பற்றி கவலை படவில்லை . இன்று இந்தியாவே கொதிக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் தமிழர்கள் தொலைக் காட்சியின் முன் அமர்ந்து நிகழ்சிகளை கண்டு ரசிக்கின்றனர். தமிழ் சமூக ஆர்வலர்கள் மட்டும் இந்திய நாட்டின் இந்த போராட்டத்தை கண்டு கொந்தளிக்கின்றனர். தமிழீழத்தில் இந்திய அரசின் துணையோடு தமிழ் பெண்கள் ஆயிரம் ஆயிரம் பேர்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொன்று குவிக்கப்பட்டனர். அதற்காக தமிழ் மாணவர்கள், அமைப்புகள் கட்சிகள் போராடினர். ஆனால் இந்திய ஊடகங்கள் தமிழீழத்தில் நடைப் பெற்ற கொலைகளை நியாயப்படுத்தியது. இந்திய பிரதமரோ , ஜனாதிபதியோ ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லை . தமிழகத்தின் அப்போதைய முதவ்வரோ , நடக்கின்ற போராட்டம் அனைத்தையும் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அதனால் முத்துக்குமார் போன்ற இன உணர்வாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

தற்போது தமிழ் சமூக ஆர்வலர்கள் வைக்கும் குற்றச் சாட்டு என்னவெனில் , தமிழ் பெண்களுக்கு இவ்வாறான அவல நிலை தொடரும் போது தமிழ் நாட்டில் உள்ள இந்தியர்களோ, இந்தியாவில் பிற பகுதியில் உள்ள இந்தியர்களோ ஏன் குரல் கொடுப்பதில்லை என்பது தான் . இந்திய ஆட்சியாளர்களும் தமிழ் நாட்டின் ஆட்சியாளர்களும் ஏன் தமிழ் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில்லை? தமிழகத்தை தமிழர்கள் ஆள வில்லை என்பதால் தமிழர்கள் போராட முன்வரவில்லையா அல்லது வடஇந்தியா மட்டும் தான் இந்தியாவா என்ற கேள்வி எழுப்பி உள்ளனர் தமிழ் சமூக ஆர்வலர்கள். இந்த கேள்விக்கு தமிழர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அவலத்திற்கு குரல் கொடுக்காமல் டெல்லியில் நடந்த அவலத்திற்கு தமிழக மக்கள் குரல் கொடுத்துக் கொண்டிருப்பது, தங்கள் வீட்டின் பிரச்னையை விட எங்கோ இருக்கும் வீட்டின் பிரச்சனைக்கு தான் தமிழர்கள் குரல் கொடுப்பார்கள் என்ற பழி தமிழ்நாட்டின் மக்களின் மேல் விழுந்துள்ளது . இந்த பழியை துடைக்க தமிழர்கள் ஒன்றாக வேண்டும் . தமிழ் இனத்திற்காக போராட முன் வரவேண்டும்.

- இராஜ்குமார் பழனிசாமி

 

 

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.